24-ந் தேதி காலை நேரம். சேலம் மாவட்ட டாஸ் மாக் மேலாளர் அலுவலகம் பலத்த பரபரப்பில் இருந்தது. எங்கும் போலீஸ் தலைகள் தென்பட, டாஸ்மாக் பார் ஏல வைபவம் உள்ளே நடந்துகொண்டி ருந்தது.
ஏற்கனவே பாரை நடத்திவரும் லோக்கல் புள்ளிகளான சீனிவாசனும் மகாலிங்கமும் டெண்டரில் கலந்துகொள்ள, அந்த அலுவலகத்திற்குள் நுழைய முயல் கிறார்கள். அவர்களை வழிமறித்த காக்கி களோ "மந்திரி எடப்பாடி பழனிச் சாமிக்கிட்ட டோக்கன் வாங்கியவங் களுக்கு மட்டும்தான் பார் உரிமம். மத்தவங்களை உள்ளே அனுமதிக்க முடியாது' என கறாராகச் சொல்லி திருப்பியனுப்பி விட்டனர். பிறகு?
இவர்களின் வழக்கறிஞரான சேலம் செல்வ ராஜே விவரிக்கிறார் ""டாஸ் மாக் ஏலம் என்பது பகிரங்கமாக நடத்தப்பட வேண்டிய ஒன்று. ஆனால் வேண்டியவர் களை மட்டும் அனுமதித்து டெண்டரை இஷ்டமானவர்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது முறைகேடானது. சட்டவிரோதமானது. எனவே பாதிக்கப்பட்ட சீனிவாசன், மகாலிங்கம் ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு, பார் ஏலத்திற்கு இடைக்காலத் தடை கோரியிருக்கிறோம்'' என்றார் உற்சாகமாக.
தற்போதைய அரசு நடத்திவரும் பார் ஏலம் குறித்து தமிழகம் முழுக்க இதே பாணியில் புகார்களும் பிரச்சினைகளும் பரவலாக வெடித்துக்கொண்டிருக்க... டாஸ்மாக் எப்படி போய்க்கொண்டிருக்கிறது? பார் ஏலத்தில் என்னதான் நடக்கிறது? என்றெல்லாம் துருவ ஆரம்பித்தோம். ஏகத்துக்கும் அதிரடித் தகவல்கள் நிறையவே கிடைத்தன.
ஏலம் :
பார்களை ஏலம் எடுப்பது யார்? என்பதில் ஆளும் அ.தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையில் பலத்த முட்டல் மோதல்கள் பரவலாக வெடித்து பல இடங்களில் குழப்பமான குழப்பம் நிலவிக் கொண்டிருக்கிறது தமிழகத்தில் மொத்தம் 6,600 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கடைகளில் மதுப்புட்டிகளை வாங்கும் குடிமகன்கள் வேறு பொது இடங்களில் மதுவருந்தத் தடை விதிக்கப்பட்டி ருப்பதால் டாஸ்மாக் பார்கள் குடி மகன்களுக்குப் பிரதான வாசஸ்தலமாக திகழ்கிறது. இந்த டாஸ்மாக் பார்களை நடத்தும் உரிமத்தைப் பெற நடத்தப்படும் ஏலத்தில்தான் இப்போது இத்தனை சர்ச்சைகள்.
டெண்டருக்கு டோக்கன் :
பார்களை ஏலம் எடுக்க டோக்கன் சிஸ் டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது அ.தி.மு.க. தலைமை. இதற்காக சிவப்பு கலர் டோக்கன் கள் மாவட்டம் தோறும் இருக்கும் அ.தி.மு.க. மா.செ.க்களுக்கு கட்சித் தலைமையால் அனுப்பிவைக்கப்பட்டது. இதை பாருக்குத் தகுந்தபடி 1 லட்ச ரூபாயில் இருந்து 10 லட்ச ரூபாய்வரை ர.ர.க்கள் விலை கொடுத்து வாங்கவேண்டும். இப்படி வசூலாகும் தொகை கட்சிநிதிக்காக என்கிறார்கள் மா.செ.க் கள். இது தவிர கார்டனில் இருந்து சின்ன மேடம் தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட டோக் கன் என்று மாவட்டத்துக்கு 35 பச்சைக் கலர் டோக்கன்கள் வீதமும் ஸ்பெஷலாக விநியோகிக் கப்பட, அதன் மூலமும் பலத்த வசூல் நடத்தப் பட்டிருக்கிறது. பார் டெண்டரின் போது இந்த டோக்கன்களைக் கொடுப்பவர்களுக்குத்தான் பார்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இது இலைத்தரப்பினரையே புலம்பவைத்திருக்கிறது.
ர.ர.க்களின் புலம்பல் :
ஏலத்தில் கலந்துகொண்ட ர.ர.க்கள் பலரும் ‘"பார் டெண்டரை எடுக்கவேண்டுமென் றால் எந்தக் கடையை ஒட்டி பாரை வைக்கி றோமோ அந்த டாஸ்மாக் கடையின் மாதாந்திர சேல்சில் 25 சதவீதத்தை முன்பணமாகக் கட்டவேண்டும். இரண்டரை சதத்தை, பார் வாடகைக் கட்டணமாகக் கட்டவேண்டும். இதுதவிர... மாமுல் வசூலும் அதிகமா இருக்கு. எங்க ஆட்சியில் எங்கக்கிட்டயே பயங்கரமா சுரண்டறாங்க. ஒரு பக்கம் டோக்கனை லட்சக்கணக்கான ரூபாய்கொடுத்து நாங்கள் வாங்கணும். இதன் பின் எங்க கட்சியின் பகுதிச் செயலாளருக்கு ஒரு லட்ச ரூபாய், வட்டச்செயலாளருக்கு 50 ஆயிரம் ரூபாய், டாஸ்மாக்கின் மாவட்ட மேலாளருக்கு 50 ஆயிரம் ரூபாய்னு அள்ளி இறைக்க வேண்டியிருக்கு. இப்படி அள்ளி இறைக்கும் பணத்தை எப்படி நாங்க முறையா சம்பாதிக்க முடியும்? போன ஆட்சியில் தி.மு.க.காரங்க பார்ல நல்லா சம்பாதிச்சி கார், பங்களான்னு சொகுசா வாழ றாங்க. இதை நாங்க அனு பவிக்கவேண்டாமா?' என பகி ரங்கமாகவே புலம்பினார்கள்.
ஏல மோதல் :
"தமிழகம் முழுக்க இருக் கும் பார்களில் 40 சத பார்களை எங்கள் கட்சியினருக்கு ஒதுக்க வேண்டும் என எங்கள் தே.மு. தி.க. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட, கார்டனோ 5 சத பார்களை ஒதுக்க சம்மதித்தது. இந்த நிலையில் மதுரையில் இருக் கும் 350 பார்களில் 5 சத பார்கள் எங்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற் றம்தான் மிச்சம்' என விரக்தியாகச் சொல்கிறார்கள் மதுரை தே.மு.தி.க. நிர்வாகிகள். உபரியாக பார்களை ஒதுக்கும்படி கேட்டும் இதை மறுத்துவிட்ட மாவட்ட அமைச்ச ரான செல்லூர் ராஜு, "மதுரை யைப் பொறுத்தவரை உங்களுக்கு மொத்தமே 5 பார்களுக்கான டோக்கன்தான் ஒதுக்கி யிருக்கிறோம்' என்றபடி, அதை அக்கட்சியின் மா.செ. வான அரவிந்தனிடம் ஒப்படைத்துவிட்டார். இதில் தே.மு.தி.க.தரப்பு பலத்த அப்செட். இதேபோல் சேலம், விழுப்புரம் போன்ற 10-க்கும் மேற்பட்ட மாவட் டங்களில் இலைத் தரப்பினரும் முரசுத்தரப்பினரும் பார் விவகாரத்தில் ஒருவரைப் பார்த்து ஒருவர் பல்லைக் கடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கைகலப்பு :
மதுரையில் வெறும் 5 டோக்கன்களை மட்டும் வாங்கிய தே.மு.தி.க. மா.செ. அரவிந்தன், இந்த டோக் கன்களை யாருக்குத் தருவது என்று முடிவெடுக்க மதுரை தே.மு.தி.க. அலுவலகத்தில் கூட்டத்தைக் கூட்டினார். அப்போது மாவட்ட நிர்வாகி களான ஜெயமணி தரப்பிற்கும் ஜெயபால் தரப்பிற்கும் பலத்த கைகலப்பே அரங்கேற, இதில் திகைத்துப்போன மா.செ. அரவிந்தன், "யாரும் பாருக்காக அடித்துக்கொள்ள வேண்டாம். கேப்டனிடம் இது குறித்து கேட்டு, அவர் சொல்கிற நபர் களுக்கே டோக் கன்கள் ஒதுக்கப் படும்' என்றபடி கூட்டத்தைப் பாதி யிலேயே முடித்து, அலுவலகத்தைப் பூட்டிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
அமைச்சர் மீது புகார் :
மதுரையில் பார் டோக்கன்களை கட்சிக்காரர்களுக்குத் தானே விநியோகித் தார் அமைச்சர் செல்லூர் ராஜு. ஆனால் அமைச்சர் தனது ஆளான மாரிச்சாமி போன்றவர்களுக்கே பல்க்காக பார் டோக்கன்களைக் கொடுத் திருக்கிறார் என அமைச்சர் மீதே கார்டன்வரை புகார் போய்க்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் அமைச்சர் செல் லூராரை சங்கடப்படுத்திக் கொண்டிருக்க... இன்னொரு பக்கம் பார் டோக்கன்களை வாங்கிய ர.ர.க்களால் தற்போது நடந்துகொண்டிருக்கும் பார் களைக் கைப்பற்ற முடியாத சூழலும் ஒரு பக்கம் உண்டாகியிருக்கிறது. அமைச்சரிடமிருந்து 11 பார்களை நடத்துவதற்கான டோக்கனை வாங்கிய மாரிச்சாமியால் 3 பார்களை மட்டுமே மீட்க முடிந்தது. மற்ற பார்களை தி.மு.க.புள்ளிகள் தங்கள் சொந்த இடத்திலேயே நடத்திவருவதால் அவற்றை அவரால் மீட்க முடியவில்லை.
முறையற்ற பார்களும் வசூல் வேட்டையும்:
இப்படி பார் ஏலப்போட்டியில் பல இடங்களில் பிரச்சினை ஒரு பக்கம் இருந்துவரும் நிலையில்... முறையற்ற பார்கள் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய்களுக்கு மேல் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். இது எப்படி? எல்லா டாஸ்மாக் கடைகளுக்கும் பார்கள் அமைப்பது அவசியம் என்றபோதிலும் மொத்தமுள்ள 6600 கடைகளில் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளுக்கு மேல் பார்களுக்கான உரிமம் வழங்கப்படவில்லை. எனவே இத்தகைய உரிமம் பெறாத டாஸ்மாக் கடைகளில் உரிமம் இல்லாமலே பார்களை நடத்துமாறு தனியார்களை அனுமதித்தும் 24 மணி நேரமும் அதை நடத்தச் சொல்லியும் இதன்மூலம் தனிப்பட்ட முறையில்... மாதா மாதம் கரன்ஸிகளை வசூலித்து ஏகக் கொள்ளையடித்து வருகிறது ஒரு கூட்டம். "டாஸ்மாக் கடைகளுக்குப் போகவேண்டிய சரக்குகள், இத்தகைய இல்லீகல் பார்களுக்கு நேரடியாகப் போகிறது. இதைவிட கொடுமை என்னவென்றால் பாண்டி, ஆந்திரா போன்ற மாநிலங்களின் சரக்குகளும் போலி மதுபானங்களும் கூட தாராளமாகவே விற்கப்படு கிறது. எனவே கேரளா பாணியில் மதுக்கடைகளில் பாரே தேவையில்லை என்பது எங்கள் கருத்து. விரும்பியவர்கள் தங்களை அனுமதிக்கும் ஓட்டல்களில் சாப்பிடட்டுமே' என்கிறார் டாஸ்மாக் சி.ஐ.டி.யு. சங்கத் தொழிற்சங்கத் தலைவர் திருச்செல்வம்.
கொள்ளையடிக்கிறவர்கள் யார்?
மாவட்டம் தோறும் இருக்கும் பார்களை கண்காணிப்பவர்கள், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள்தான். டாஸ்மாக் கடைகள் ஆரம்பித்த புதிதில் இந்த டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் பொறுப்பில் எம்.பி.ஏ. பட்டதாரிகள் நியமிக்கப் பட்டனர். பின்னர் சூப்பர்வைஸர்களாக வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இந்த பொறுப்பில் வந்து உட்கார்ந்த பிறகே வருமானம் பார்க்கும் காரியங்கள் தொடங்கின. வெறும் இரண்டுவருடம் மட்டுமே ஆயுள் உள்ள இந்தப் பதவிக்கு வர 20 லட்சம்வரை கொடுக்க பலர் தயாராக இருக்கிறார்கள்.
காரணம், இல்லீகல் பார்களின் வருமானம் அப்படி. மாவட்டம் தோறும் இப்படி நடக்கும் லீகல் மற்றும் 3 ஆயிரம் இல்லீகல் பார்கள் மூலம் ஆண்டுக்கு 500 கோடிவரை கொள்ளையடிக்கிறது இந்தக் கூட்டம் என்கிறார்கள் டாஸ்மாக் பணியாளர்களே.
ஆட்சி மாறும்போது மாறும் சரக்குகள் :
தி.மு.க. ஆட்சி வந்தால் தி.மு.க. ஆதரவு புள்ளிகள் தயாரிக்கும் சரக்கு வகைகளும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சசியின் கோல்டன் மிடாஸ் கம்பெனி தயாரிக்கும் சரக்குகளும் டாஸ்மாக் கடைகளுக்கு வந்துவிடு கின்றன. இதன் காரண கர்த்தாவாக இருப்பவர் பாலசுப்பிரமணியன் என்கிற பவர்ஃபுல் மனிதர். இவர் டாஸ்மாக் தொடங்கிய திலிருந்து இந்த நிமிடம் வரை டாஸ்மாக்கின் ஃபினான்ஸ் ஜென்ரல் மேனேஜர் மற்றும் கம்பெனி செயலாளர் என்ற பொறுப்பில் இருக்கிறார். டாஸ்மாக்கின் மூளையாக இவர் இருந்ததால் இவரையே இந்தப் பதவியில் தொடர்ந்து வைத்திருக்கின்றன அரசுகள். இவர்தான் ஆட்சி மாற்றத்துக்குத் தகுந்தபடி சரக்குகளையும் டாஸ்மாக்கிற்காகக் கொள்முதல் செய்துவருகிறவர். கூடவே சட்டவிரோத பார்களையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டிருப்பவர்.
டாஸ்மாக்கின் மேனேஜிங் டைரக்டர்களாக வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை எல்லாம் இவர் கைபொம்மையாக ஆட்டிவைப்பார் என்கிறது டாஸ்மாக் தரப்பே.
-இப்படி ஆட்சி மாறிய நிலையிலும் டாஸ் மாக்கில் அடி முதல் நுனிவரை ஊழலும் முறை கேடும் வீடுகட்டி விளையாடிக்கொண்டிருக்கிறது. இதை யார் தடுத்து நிறுத்துவது?
நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்றாலே, பணம் கொட்டோ... கொட்டென்று கொட்டும். ஆனால், நாலு மடங்கு விலைக்கு விற்றாலும் யாரும் கேள்வி கேட்பது இல்லை என்பதால், டாஸ்மாக் கடைகளில் பார் நடத்தும் உரிமம் பெறுவதற்குக் கடும் போட்டி. கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.மு.க-வினரிடம் இருந்த மதுக்கடை பார்கள், இப்போது அ.தி.மு.க-வினர் கைகளுக்கு அதிரடியாக மாற்றப்பட்டு வருகிறது. டெண்டர் விண்ணப்பம் தர இழுத்தடிப்பதில் தொடங்கி, பார் ஒதுக்கீடு வரை பல கேலிக் கூத்துகளை அ.தி.மு.க. அரங்கேற்றி இருக்கிறது.
திருப்பூர் மாவட்ட மதுபானத் தின்பண்ட உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் கார்த்திகேயேனிடம் பேசினோம். ''எந்த மாதத்தில் மது விற்பனை அதிகமாக இருக்கிறதோ, அந்தத் தொகையில் இரண்டரை சதவிகிதத் தொகை, பார் நடத்துவதற்கான மாத வாடகையாக நிர்ணயம் செய்யப்படும். நிர்ணயம் செய்துள்ள தொகையைவிட அதிகமாக யார் கேட்கிறார்களோ, அவர்களுக்கு பார் நடத்தும் உரிமம் வழங்கப்படும். ஆனால், இப்போது டெண்டர் விண்ணப்பமே வாங்க முடியாத அளவுக்கு அ.தி.மு.க-வினர் கெடுபிடி செய்துவிட்டனர்.
திருப்பூரில் நான் பார் நடத்தி வந்த கடைக்கு மீண்டும் விண்ணப்பிக்க, விண்ணப்பம் கேட்டேன். தரவில்லை. எனது வழக்கறிஞரை அனுப்பினேன். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக, என் மீதும், வழக்கறிஞர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருப்பூரில் இருக்கும் 250 கடைகளில் 209 கடைகளுக்கு பார் ஒதுக்கீடு முடிந்துவிட்டது. 209 கடைகளுக்கும் வந்த விண்ணப்பங்கள் 620. கடந்த தி.மு.க. ஆட்சியில் 2,039 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஒரு கடைக்கு மூன்று விண்ணப்பங்கள் மட்டுமே வரும் வகையில் விண்ணப்பங்களை அ.தி.மு.க-வினருக்குக் கொடுத்து இருக்கின்றனர். எல்லோரையும் டெண்டரில் பங்கெடுக்கச் செய்திருந்தால், ஒவ்வொரு கடைக்கும் மாதத்துக்கு 30,000 வரை கூடுதலாக அரசுக்குக் கிடைத்து இருக்கும். விண்ணப்பக் கட்டணம் மூலமும் லட்சக்கணக்கில் வருவாய் வந்திருக்கும். இதே கணக்கை தமிழகம் முழுவதும் உள்ள 6,000 கடைகளுக்குப் போட்டுப் பார்த்தால், கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும்!'' என்றார் ஆதங்கத்தோடு.
பார் நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்து இருந்த பழனிச்சாமியிடம் பேசினோம். ''நீதிமன்றத்தில் முறையிட்டு வாங்கிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பெட்டியில் போடப் போனேன். அலுவலகக் கதவை பூட்டி போலீஸை நிறுத்தி இருந்தனர். எவ்வளவோ போராடியும் விண்ணப்பத்தை பெட்டியில் போட விடவில்லை. அ.தி.மு.க-வினருக்கு சாதகமாக அதிகாரிகள் நடக்கிறார்கள். கடந்த முறை டெண்டர் போன தொகையில், 100 மட்டுமே அதிகமாக்கி, பார்களை அ.தி.மு.க-வினர் கபளீகரம் செய்து உள்ளனர்...'' என்றார் ஆவேசமாக.
தமிழகம் முழுவதும் மதுக்கடை பாருக்கான டெண்டர் விண்ணப்பங்களை, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களும் அமைச்சர்களுமே விநியோகம் செய்து இருக்கின்றனர். சில மாவட்டங்களில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பார்களை, ஏற்கெனவே நடத்தும் உடன்பிறப்புகளுக்கே கைமாற்றிவிட்ட ரத்தத்தின் ரத்தங்கள், சில லகரங்களை வாங்கிக்கொண்டு அமைதியாகிவிட்டனர்.
இன்னும் சில மாவட்டங்களில், வியாபாரம் மந்தமாக இருக்கும் கடைகளை தங்களுக்கு தள்ளிவிட்டுவிட்டதாக தே.மு.தி.க-வினரும் கொந்தளிக்கிறார்கள்.
இதற்கிடையே, மதுரையில் உள்ள 11 பார்களுக்கு அ.தி.மு.க-வினர் எடுத்த டெண்டரை நிறுத்திவைத்து இருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம். இதில், இரண்டு பார்கள் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவரின் சம்பந்தியின் கட்டுப்பாட்டில் இருப்பவை. இன்னும் இரண்டு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு சொந்தமானது. இன்னொன்று, மதுரை மாநகராட்சியில் கோலோச்சும் தி.மு.க. முக்கியப் புள்ளியின் கட்டுப்பாட்டில் இருப்பது. இந்த பார்களுக்கு விடப்பட்ட டெண்டர்களை எல்லாம் நிறுத்திவிட்டு, ஏற்கெனவே பார் நடத்துபவர்களுக்கே அதிகாரப்பூர்வமாக உரிமம் கொடுக்க டாஸ்மாக் அதிகாரிகள் திட்டம் இடுகிறார்களாம்.
மதுக் கடைகளை நடத்தும் அரசே, இனி பாரையும் ஏற்று நடத்தும் நிலை வந்தாலும் ஆச்சர்யம் இல்லை!
‘அடி உதவுற மாதிரி அண்ணன், தம்பிகூட உதவ மாட்டான்’ என்ற பழமொழிதான் ஜெயலலிதாவின் இன்றைய புது வழி!
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க-வை – இன்றும் மத்தியில் ஆளும் கட்சியின் கூட்டணி மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள தி.மு.க-வை – ‘லப்டப்… லப்டப்…’ என்று திகைக்கவைக்க லத்தியே போதும் என்று முடிவெடுத்துவிட்டார் முதல்வர்.
‘இன்னும் 30 நாட்களில் போலீஸ் ராஜ்யம்’ ஆரம்பமாகப் போகிறது என்று ரெட் சிக்னல் காட்டுகிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். இதற்கென இட்டுக்கட்டியோ… பொய்யாகப் புனைந்தோ, வழக்குகளை அவர் பாய்ச்சப்போவது இல்லை.
தி.மு.க-வினர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, யார் யாரை எல்லாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சீண்டி னார்களோ… அந்த நபர்களைவைத்தே திருப்பி அடிக்கவிடுவதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.
சன் டி.வி. முதல் நில மோசடி வரையிலான ஜெ… மு.க… ரிலே ரேஸ் இதோ!
சன் நோக்கி ‘கன்’!
‘சன் டி.வி-க்கும் தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று கருணாநிதி சொன்னால்கூட, அதை ஜெயலலிதா ஏற்கத் தயாராக இல்லை. கருணாநிதிக்கான ஆக்சிஜனாக சன் டி.வி-யைத்தான் ஜெ. நினைக் கிறார். ஆட்சிக்கு வந்ததுமே அவர் அசைத்துப் பார்க்க நினைத்தது இவர்களைத்தான்.
”போன தடவை, கருணாநிதி கைதைத் தமிழகம் முழுக்கப் பரப்பி, அனுதாபம் தேடவைத்தது இவர்கள்தான். எனவே, இந்தத் தடவை என்ன நடந்தாலும் தங்கள் மீடியா பலத்தால் இதையே செய்வார்கள். எனவே, அவர்களை முதலில் தட்டிவைக்க அம்மா நினைக்கிறார்” என்கிறார் அமைச்சர்களில் ஒருவர். அதனால்தான், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனைப் புதுப்பிக்கப் பேசினார். டி.வி. தொழிலுக்கு கேபிள் உயிர் என்பது ஜெ. கணக்கு!
அடுத்து ‘சன் இன் லா’ குடும்பத்தின் பக்கமும் ஜெ. முகம் திரும்பியது. சினிமாக்காரர்கள் மொத்தப் பேரையும் சினம்கொள்ளவைத்ததாக சன் பிக்சர்ஸ் மீது புகார் கொடுக்கப் புற்றீசல் மாதிரி எத்த னையோ தயாரிப்பாளர்கள் புறப்பட்டார் கள். சேலம் கந்தன் ஃபிலிம்ஸ் செல்வராஜ் முதல் ‘மாப்பிள்ளை’ ஹித்தேஷ் ஜபக் வரையில் சன் பிக்சர்ஸ் ரிலீஸ் செய்த பல படங்களுக்கு எஃப்.ஐ.ஆர். போடுகிறார்கள். இன்றைய தின நிலவரப்படி… சக்சேனா சிறையில் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை. இது கலாநிதி மாறனையும் குறிவைக்கும் சுழலாகவே சுற்ற ஆரம்பித்து உள்ளது. கடந்த 13-ம் தேதி ‘கலைஞர் கருணாநிதி நகர்’ காவல் நிலையத்துக்கு அவர் வந்திருக்க வேண்டும். 26-ம் தேதி வரை அவருடைய வக்கீல்கள் அவகாசம் கேட்டு உள்ளார்கள். ’26-ம் தேதி வரை பார்ப்போம்’ என்கிறார் அந்தப் பகுதி டெபுடி கமிஷனர். அதற்குப் பிறகு?
மதுர… குலுங்கக் குலுங்க!
‘அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த அரை நாளில் அழகிரியிடம் இருந்து மதுரை மீட்கப்படும்’ என்று மதுரையில் நின்று சபதம் போட்ட ஜெயலலிதா, அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை டெல்லியில் இருந்து தொடங்கினார். அழகிரி மீதான 59 வழக்குகளுக்கான ஆவணங்கள், தமிழக அரசிடம் இருந்து டெல்லி மேலிடத்துக்குத் தரப்பட்டு உள்ளன. அதில் 17 வழக்குகள் அழகிரி நேரடியாகச் சம்பந்தப்பட்டவை என்கிறார்கள். மற்ற வழக்குகள் அழகிரியின் பெயரைச் சொல்லிக்கொண்டு, அடியாட் கள் நடத்திய அராஜகங்கள். அழகிரி முதலமைச்சர் என்றால், ‘பொட்டு’ சுரேஷ் துணை முதல்வர் என்பதில் தொடங்கி, ‘அட்டாக்’ பாண்டி வரை அத்தனை பேர் பெயரையும் ஜெயலலிதா மேடையில் வாசித்தார். இந்த நபர்களை வளைக்க கமிஷனர் கண்ணப்பன் தலைமையில் சிறப்புப் படை போடப்பட்டு உள்ளது. முதல் வழக்கில் ‘அட்டாக்’ பாண்டி கைதாகிவிட்டார். மதுரை தினகரன் நாளிதழ் தாக்குதல் தொடங்கி… வெளிச்சத்துக்கு வராத காரியங்கள் வரை எல்லாமே ரத்த சரித்திரம். ‘மொத்தத்தையும் மதுரையில் ஸ்பெஷல் கோர்ட் போட்டு விசாரிக் கலாமா?’ என்ற யோசனை யில் இருக்கிறார் ஜெ..
கொலை கொலையாய்…
இன்னும் மர்மமாக இருக் கும் சில மரணங்கள், தி.மு.க. அமைச்சர்கள் சம்பந்தப் பட்டதாகவே இருக்கின்றன. அதில் முக்கியமானது திருச்சி இரட்டைக் கொலை. ரியல் எஸ்டேட் புரோக்கர் சகோ தரர்களில் ஒருவர் விஷம் குடித்தும் இன்னொருவர் உயிரோடு எரிக்கப்பட்டும் கொல்லப்பட்ட விவகாரத் தில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவருடைய தம்பி ராம ஜெயம் இருவர் பெயரும் பரவிக்கிடக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவராகச் சொல்லப்படும் திருச்சி மாவட்டத் தி.மு.க. துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்… கஞ்சா வழக்கில் கைதாகி உள்ளார். இன்னும் பல தி.மு.க-வினரையே சுற்றிச் சுற்றி விசாரிக்கிறது போலீஸ். திருச்சி எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், தனது சொந்தத் தொகுதி என்பதால், இந்தக் கொலையை சீரியஸாகப் பார்க்கிறார் ஜெ.
சேலம் குப்புராஜ் குடும்பத்தில் ஆறு பேர் கொலையானதில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் பாரப்பட்டி சுரேஷ் கைதானார். அவரை ஜெயிலுக்குச் சென்று சந்தித்து, சர்ச்சையில் சிக்கினார் ஆறுமுகம். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இப்போது துரித விசாரணையில் இறங்கி இருக்கும் நிலையில், ஆறு பேர் கொல்லப்பட்ட வீடு மர்மமான முறையில் எரிக்கப்பட்டுள்ளது எதிர்பாராத திருப்பம். தடயங்களை மறைக்க நடந்ததாகவே இதை சி.பி.சி.ஐ.டி. பார்க்கிறது.
முன்னாள் அமைச்சர் ஈரோடு என்.கே.கே.பி.ராஜா, சிவபாலன் என்பவரைத் தாக்கிய வழக்கில் கீழ் நீதிமன்றம் விடுதலை செய்தாலும், மேலே கொண்டுசெல்ல இன்றைய அரசு முயற்சிக்கிறது. தஞ்சைப் பகுதி தி.மு.க. மாவட்டச் செயலாளர் கொலையிலும் மர்மம் இன்னும் விடுபட வில்லை. இப்படிப் பல முடிச்சுகளை அவிழ்க்க அவசர உத்தரவுகள் போட்டு இருக்கிறார் ஜெ!
மந்திரி… தந்திரிகள்!
வருமானத்துக்கு அதிக மாக சொத்துச் சேர்த்த வழக்கு, முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. அமைச்சர்கள் கே.என். நேரு, துரைமுருகன், பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள் ளிட்ட பலர் மீது போடப்பட்டது. அடுத்து, ஆட்சி மாறியது. விசாரணைகள் முடிந்து தீர்ப்பும் வந்து சிலர் விடுதலை ஆனார் கள். இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டப்போகின்றன. மேலும், 2006-11 ஆண்டு கால ஆட்சியிலும் இதுபோல் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்தவர்கள் பட்டியலைத் தயாரிக்கச் சொல்லி இருக்கிறார் முதல்வர்.
மெகா கல்லூரிகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சாராய ஆலைகள், மணல் குவாரிகள், தொழிற்சாலைகள் எனப் பட்டவர்த்தனமாக உருவாக்கிக்கொண்ட 9 அமைச்சர்கள் மீது முதல் வரிசையில் வழக்குகள் போடப்பட உள்ளன. அதற்கான ரெய்டு நாட்கள் குறிக்கப்பட உள்ளன.
பினாமிகள் ஜாதகம்…
கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் பினாமிகள் பெயர்கொண்ட முதல் பட்டியல் தயாராகி உள்ளது. 100 கோடிக்கு மேல் சம்பாதித்தவர்கள் என்ற அடிப்படையில் தயாராகும் இந்தப் பட்டியலில், சென்னை, மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் பெயர்களும் அடக்கம்.
தி.மு.க. வேஷம் போட ஆரம்பித்த கான்ட்ராக்டர்கள் முதல் இவர்களிடம் பணம் வாங்கி வட்டிக்குவிட்ட கோடீஸ்வர மார்வாடிகள் சிலர் வரை இந்தப் பட்டிய லில் வருகிறார்கள். தேர்தலுக்கு முந்தைய மாதத்திலேயே இவர்களில் சிலர் வெளி நாடுகளுக்குச் சென்று செட்டில் ஆகி விட்டார்கள். அறிவாலயத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்த நபர் ஒருவரும் இந்தப் பட்டியலில் வருகிறார். விரக்தியில் இருக்கும் தி.மு.க. புள்ளிகள் மூலமாகவே இவர்கள் ஜாதகம் திரட்டப்பட்டு வருகிறது!
பணப் பாதை அடைப்பு!
எதிர்க் கட்சியாக இருக்கும்போதே ஜெயலலிதா கண்காணித்தது இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தைத்தான். கருணாநிதி முதல்முறை முதல்வராக இருந்த காலம் முதல் இன்று வரை அவருக்கும் இந்தக் குழுமத்துக்குமான தொடர்புகளை வெளிப்படையாக ஜெ. போட்டு உடைத்து வந்தார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத் தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியது முதல் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் மூலமாகச் செய்வது வரை அனைத்துமே இந்த குரூப்தான் செய்து வருகிறது. ”அரசுப் பணம் இந்த குரூப் மூலமாக வெளியே போய்… மீண்டும் கருணாநிதி குடும்பத்துக்கு வருகிறது. அதைவைத்துத்தான் இவர்கள் படம் எடுக்கிறார்கள்” என்றார் முதல்வர்.
எனவே ஜெ. செய்த முதல் காரியம், புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமானத்தை நிறுத்தி விசாரணை கமிஷன் போட்டார். இனி இ.டி.ஏ-வுக்குப் போட்ட பணமும் கிடைக்காது. வர வேண்டியதும் வராது. கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் நிறுத்தப்பட்டது. ஆண்டுக்கு 750 கோடி வரை இதுவரை தரப்பட்டு வந்த பிரிமியம் இனி கிடைக்காது. இந்த ஒரு திட்டத்துக்காகவே அந்த நிறுவனம் வேலைக்கு எடுத்த 1,200 பேரை ஜூலை 6-ம் தேதி வீட்டுக்கு அனுப்பிவிட்டது. இவர்களைப்போலவே ‘லம்ப்பாக’ லாபம் அடைந்த நிறுவனங்களைக் கண்டுபிடித்து பணப் பாதையை அடைக்க நினைக்கிறார் ஜெ.
லோக்கல் மனிதர்களுக்குக் கொக்கி!
மந்திரிகள் வி.ஐ.பி-க்களைத் தாண்டி குறிப்பிட்ட ஏரியாவில் செல்வாக்காக இருக்கும் தி.மு.க. பிரமுகர்களை அதிக ஆபத்தாக ஜெ. பார்க்கிறார். நிலபுலன்கள், கைவச கரன்சி மூலமாகக் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்த இரண்டாம் கட்ட மாவட்டப் பிரமுகர்கள்… அடுத்து வரும் ஆண்டுகளில் செல்வாக்குப் பெற்று, கட்சிப் பதவிகளைப் பிடிக்கப்போகிறார்கள். வரும் உள்ளாட்சித் தேர்தலில்கூட இவர்கள்தான் முக்கியப் பங்கு வகிப்பார்கள். இவர்கள் மீதான புகார்கள் தூசி தட்டப்படுகின்றன.
‘உங்கள் ஊர் லோக்கல் தி.மு.க. பொறுப்பாளர்கள் செய்யும் முறைகேடுகளை தலைமைக் கழகத்துக்கு எழுதுங்கள்’ என்று சில ஆண்டுகளுக்கு முன் ஜெ. சொல்லி… மலையளவு கடிதங்கள் குவிந்தன. இந்தக் கடிதங்களை ஆதாரமாக வைத்து இவர்களுக்குக் கொக்கி போடப் போகிறார்கள்.
குடும்ப டார்கெட்!
கடந்த முறை முதல்வராக வந்ததும்… ஒருநாள் நள்ளிரவில் கருணாநிதியைத் தூக்கியதுபோன்ற சம்பவம் இனி தேவை இல்லை என்று நினைக்கிறாராம் ஜெ.
ஆனால், அவருடைய குடும்பப் பிரமுகர்கள் 10 பேருக்கு நிச்சயம் தலைவலி காத்து இருக்கிறதாம். ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கலாநிதி மாறன், அழகிரியின் மருமகன்களான வெங்கடேசன், விவேக், ஸ்டாலின் மகன் உதயநிதி, அழகிரி மகன் துரை தயாநிதி… என்று பெயர்களும் சொல்லப்படுகின்றன. இதில் இடம் பெற்ற கனிமொழி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி, சிறையில் இருக்கிறார். தயாநிதியும் சர்ச்சைச் சுழலில் சிக்கிவிட்டார். மீதியுள்ள எட்டு பேருக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளனவாம்.
வளைக்கப்பட்ட மண்ணும் மனிதனும்…
தி.மு.க-வை முடக்க ஜெ. கண்டுபிடித்த அபார வழிதான், நில மோசடி வழக்குகள். போலீஸ், வருவாய் மற்றும் பத்திரப் பதிவு அதிகாரிகள், உள்ளூர் ரவுடிகள் மூவரையும் துணைக்கு வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் தட்டிப்பறிக்கப்பட்ட நிலங்கள் ஏராளம். அதிகாரத்தில் இருப்பதால் புகார் சொல்ல முடியாமல் தவித்தவர்கள், ஆளும் கட்சி மாறியதும் துணிச்சலாக வெளியில் வந்தார்கள். மே 13 முதல் ஜூலை 1-ம் தேதி வரை மட்டும் தமிழகம் முழுவதும் 1,449 புகார்கள் வந்தன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் தி.மு.க. பிரமுகர்கள். இந்த நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கவே சிறப்புப் பிரிவைப் போட்டுவிட்டார் ஜெ. ‘நிலம் அபகரித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நிலத்தை இழந்தவர்களுக்கு நிலம் கிடைக்கும்’ என்று கொடுத்த வாக்குறுதி, பலருக்கும் பால் வார்த்தது. தி.மு.க-வினருக்கோ வேர்த்தது. கோவை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ஆனந்தன், திருச்சி கோ.அபிஷேகபுரம் அறிவுடை நம்பி தொடங்கி, கொடைக்கானல் நகர சபைத் தலைவர் முகமது இப்ராஹிம் என கைதுப் பட்டியல் நீள்கிறது. தி.மு.க-வினர் கதறலை அதிகப்படுத்தி இருப்பதும் இது தான்.
வதந்திகளை நம்புங்கள்!
புதருக்குள் கல்லைப் போட்டால், உள்ளே இருக்கும் பூச்சிகள் எல்லாம் வெளியே வரும் என்பார்கள். அது மாதிரியே… இவரைக் கைது பண்ணப் போறோம்… அவரை அமுக்கப்போறோம்… என்பது மாதிரியான வதந்திகளைக் கிளப்பிவிட்டு, அதனால் வெளியே வரும் தகவல்களை ரிக்கார்டு செய்ய ஆரம்பித்து உள்ளது போலீஸ்.
தி.மு.க. புள்ளிகளைச் சுற்றி வந்த கரும்புள்ளிகள் அத்தனை பேரைப்பற்றியும் இப்படிப்பட்ட வதந்திகள் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன. இதனால் அவர்கள் திகிலடைந்து இருக்கிறார்கள்.
அறிவாலயத்துக்கும் கருணாநிதிக்கும் ‘கைது’ வதந்திகள்தான் அதிகமாக வருகின்றன. இதைக் கேள்விப்பட்டு சூடான கருணாநிதி, ’தி.மு.க. வக்கீல்கள் என்ன ஆனார்கள்?’ ‘வழக்கறிஞர் அணி என்ற ஒன்று இருக்கிறதா?’ என்று கொந்தளித்துள்ளார்.
ஆளும் கட்சியாக இருக்கும்போது கான்ட்ராக்டர்கள் அணியை மட்டும் நம்பினால், எதிர்க் கட்சியாக ஆகும்போது வக்கீல் அணியைத்தான் நாட வேண்டி இருக்கும்!
சென்னைக்கு தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை. கூடியவிரைவில் கிரேட்டர் மெட்ராஸ் சிட்டி வந்து அதுவும் நகரமாகிவிடும். மிக எளிதாக ஒரு வீட்டுக்கு சொந்தக்காரர்களாகிவிடலாம் என்ற கனவில் இருந்த சினிமா தொழிலாளர்களின் நினைப்பில் ஒரு டன் மண்ணையள்ளி போட்டு மூடிவிட்டார்கள்.
பையனூர் வீடு கட்டும் திட்டம் பணால் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்கள். வீடு கேட்டு பணம் கட்டியவர்களெல்லாம் பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று அனைத்து சங்கங்களிலும் கியூவில் நின்று மனு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இனி சினிமா தொழிலாளர்களுக்கு சொந்த வீட்டிற்கான கனவு கானல் நீர்தான்.. இனிமேற்கொண்டு எந்த அரசு வந்தாலும் விலைக்குக் கூட இடத்தை ஒதுக்கித் தர மாட்டார்கள் என்பது உறுதியாகிவிட்டது. காரணம், கருணாநிதிக்கு திரையுலகப் பிரம்மாக்களிடம் இத்தனை ஆதரவிருந்தும் வாக்களித்த மக்கள் மருந்துக்குக்கூட அதனையொரு பொருட்டாக கருதவில்லையே..?
பெரிய திரை, சின்னத்திரை என்று அனைத்துச் சங்கங்களிலும் நிர்வாகிகள் மட்டத்தில் ஏற்பட்ட பூசலும் இதற்கு ஒரு காரணம். பெப்ஸி தலைவராக இருந்த வி.சி.குகநாதன் எனக்கேன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்ள.. அ.தி.மு.க. கட்சிக்காரரான பெப்ஸியின் செயலாளர் சிவா, மேற்கொண்டு இதனை எந்தப் பக்கம் நகர்த்துவது என்பதே தெரியாமல் இருக்கிறார்.
இதில் அனைவரையும் முந்திக் கொண்டு நல்ல பெயர் எடுக்க நினைத்த நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி ஜெயல்லிதாவைச் சந்தித்தபோது, “அந்த இடம் உங்களுக்கு வேண்டாம். விட்ருங்க..” என்று மண்ணை வாரி இறைத்து மூடு விழா நடத்திவிட்டாராம்.
குத்தகை நிலமாகையால் வங்கிக் கடன்கள் கிடைக்காமல் இருந்த சூழலில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வங்கியான ஹட்கோவே 350 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்து அதுவும் கருணாநிதி முன்பாக கையெழுத்தாகியிருந்த்து. ஆனால் இப்போது சிக்கன நடவடிக்கையாக அதில் கை வைத்துவிட்டாராம் ஜெயல்லிதா.
பெப்ஸியில் இருந்தும், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்தும் கேட்டதற்கு “இன்னும் நிறைய பார்மாலிட்டீஸ் இருக்கே. எல்லாத்துலேயும் கையெழுத்து வாங்கிட்டு வாங்க. பார்ப்போம்..” என்று பட்டும், படாமலும் சொல்லி வருகிறார்கள் அதிகாரிகள்.
ஆனால் அதற்குள்ள 900 வீடுகள் கட்டுவதாகச் சொல்லியிருந்த சின்னத்திரை யூனியனில், வீடு கேட்டிருந்த சின்னத்திரை நடிகர் சங்கத்தினர் 270 பேரும் இப்போது “வீடு வேண்டாம். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுங்க..” என்று கேட்டு மனு கொடுத்துவிட.. சின்னத்திரை யூனியனும் குப்புறப்படுத்துவிட்டது..!
இந்த லட்சணத்தில் பையனூரில் கலைஞர் நகரத்தில் 2 கோடி ரூபாய் செலவில் கலைஞர் ஸ்டூடியோ என்ற பெயரில் ஒரு இரண்டு ப்ளோர்கள் கொண்ட ஸ்டூடியோவை கட்டி வைத்துவிட்டார்கள். அதனை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில்(சினிமா பாணியில்) ஒரு தனியார் நிறுவனம் கட்டிக் கொடுத்த்தாம். இப்போது அதற்கு யார் பணம் கொடுப்பது? பெப்ஸியா..? அல்லது அனைத்து சங்கங்களுமா..? அந்த இடத்திற்கு நிரந்தர பட்டா கிடைக்குமா..? என்றெல்லாம் பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டே விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் சங்கங்களின் தலைவர்கள்..!
Chennai: The anti-land grabbing cell of the state police is in overdrive,according to police sources.Nearly 210 cases had been registered of the 2,600 complaints received in the past 15days and 400 people arrested,they added. Property worth as much as.700 crore,either encroached or grabbed illegally,was recovered and handed over to rightful owners,the police said.Of the 400 arrested,only 20% were politicians and the majority were real estate brokers,land mafias or goondas-turned realtors.A few revenue officials were also arrested,the policesaid. We havent analysed the figuresbutitisestimatedthat.10,000 crore worth of property could be trapped in the hands of land-grabbers all over TN, a policeofficer said. In the first week of July,chief minister J Jayalalithaa announced the formation of special cells in all districts to lookintoland-grabbing cases. There are 31 cells,including seven special units in cities,in the state.Each team is headed by an additional superintendent of police and comprises one deputy superintendent of police,two inspectors,four sub-inspectors andeightothers.TNN
சென்னையை தூய்மைப் பகுதியாக்கும் வழிவகைகளை கண்டறிவதற்காக, நகரைச் சுற்றியுள்ள குப்பை கிடங்குகளை முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சுற்றுச்சூழலின் சமநிலையை நிலைநிறுத்தி நாம் சார்ந்திருக்கும் உயிர் சூழல் அமைப்புகளை முறையாக பாதுகாப்பதன் அவசியத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு நன்கு உணர்ந்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைத் திரட்டி சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதையும், அவற்றை முறையாக அகற்றுவதையும் ஒரு மாநிலம் தழுவிய மக்கள் இயக்கமாக மேற்கொள்ள 2011-12ம் ஆண்டுக்கான திருத்த வரவு-செலவு மதிப்பீட்டில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட திடக்கழிவுகளை அகற்றி, சென்னை மாநகரையே ஒரு தூய்மைப் பகுதியாக்கும் வழிவகைகளைக் கண்டறிவதற்காக, சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளையும், சென்னை மாநகரின் குப்பை சேகரிப்பு கிடங்குகளையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The government on Thursday announced a Rs 5,166 crore proposal to link Cauvery,Vaigai,Gundar and Manimuthar rivers in central and southern parts of Tamil Nadu.The governments resolve to interlink state rivers was earlier announced in the governors address to the assembly in June.Interlinking of rivers will provide multiple benefits like improved irrigation,flood control and scope for inland waterways for transport of passengers and cargo. The river linking works would be taken up in two phases (see gfx).The government has allocated Rs 60 crore in the budget for taking up preliminary works. As part of the overall water management initiative,the state is already implementing a World Bank funded dam rehabilitation and improvement project.The central government has given an in-principle approval for Rs 745 crore to repair 104 dams under this scheme over the next six years. With a view to securing Tamil Nadus rightful share of Cauvery water,the government has demanded immediate notification of the final award of the Cauvery Water Disputes Tribunal. For agriculture,the state government announced a slew of measures.Against last years agricultural production of 85.35 lakh metric tonnes of food grain,the state has set a target of 115 lakh metric tonnes for the current financial year.
RIVER GRID
Cauvery,Vaigai,Gundar and Manimuthar rivers in central and southern parts of Tamil Nadu will be interlinked In the first phase,Kattalai barrage,which is now under construction across Cauvery river at a cost of 189cr,will be linked to Agniyar,South Vellar and Manimuthar In the 2nd phase,Manimuthar will be linked to Vaigai & Gundar at a cost of 1,379cr
ரேஷன் கார்டுகளுக்குப் பதில் கைரேகைகளுடன் கூடிய மின்னணு குடும்ப அட்டைகள். சட்டசபையில் ஜெயலலிதா தகவல்.
"தற்போதுள்ள ரேஷன் கார்டுகளுக்குப் பதிலாக, 2012-13ம் ஆண்டில், மின்னணு ரேஷன் கார்டுகள் (ஸ்மார்ட் கார்டுகள்) வழங்கப்படும்'' என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
உணவு மற்றும் கூட்டுறவுத் துறைக்கான மானியத்தின் மீது, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்: கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் : ஒருபக்கம் போலி ரேஷன் கார்டுகள் உள்ளன. மற்றொரு பக்கம், ஏராளமானோர், கார்டுகள் கிடைக்காமல் உள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ரேஷன் கார்டுகள், சென்னையில் அச்சிட்டு வழங்கப்படுவதால், அவை கிடைக்க தாமதமாகிறது. இதற்குப் பதிலாக, அந்தந்த வட்டார அளவிலேயே ரேஷன் கார்டுகளை அச்சிட்டுக் கொடுக்க வேண்டும்.
அமைச்சர் புத்திசந்திரன் : அனைத்து வட்ட வழங்கல் அலுவலக அளவில், ரேஷன் கார்டுகள் அச்சிடப்படுகின்றன.
முதல்வர் ஜெயலலிதா : ரேஷன் கார்டுகள் பற்றி, உணவுத் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது நடப்பில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம், இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிகிறது. தற்போது குடும்ப அட்டைகள் வழங்கும் முறையில், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயரைப் பதிவு செய்தால், அதைக் கண்டுபிடிக்க வழிவகை இல்லை.
இதனால், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில், குடும்ப அட்டைகளில் ஒரே நபர் பெயர் இடம் பெறும் நிலையும், போலி குடும்ப அட்டைகள் வழங்கப்படும் நிலையும் உள்ளது. மேலும், நியாய விலைக் கடைகளுக்கு பொருள் பெற வராத குடும்ப அட்டைகளுக்கும், கடைப் பணியாளர்கள் போலி பட்டியலிடும் நிலை உள்ளது.
இப்பிரச்னையைக் களைய, தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, உடற்கூறு பதிவு முறையில், மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பு, மக்களின் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண் பாவையை பதிவு செய்து, பிரத்யேக அடையாள எண் வழங்கும் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன், அந்த தகவல் தொகுப்பைப் பயன்படுத்தி, மின்னணு குடும்ப அட்டை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தொகுப்பில், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும் முறை உள்ளதால், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளில் பதிவு செய்யும் நிலை மற்றும் போலி குடும்ப அட்டைகள் வழங்குதல் போன்றவை களையப்படும்.
மேலும், ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் பெற வரும் குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே பட்டியலிட முடியும். போலி பட்டியலிடுவது களையப்படும். எனவே, தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வரும் 2012-13ம் ஆண்டில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் கூடுதல் இணை கமிஷனர் தாமரைக்கண்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
போலீஸ் தீவிர நடவடிக்கையால் சென்னை மாநகரில் கடந்த 1 மாதமாக குற்றங்கள் குறைந்துள்ளன. ரூ.1 கோடி மதிப்புள்ள கொள்ளை பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 119 குற்ற வாளிகள் கைது செய்யப்பட்டனர். 580 பவுன் தங்க நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம், 23 செல்போன்கள், 10 லேப்-டாப், 2 கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வழிப்பறி தொடர்பாக 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 47 குற்றவாளிகள் கைதாகி உள்ளனர். கொள்ளை தொடர்பான 8 வழக்குகளில் 17 பேரும், வீடு புகுந்து திருடியதாக பதிவான 31 வழக்குகளில் 31 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாதத்தில் மட்டும் 89 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் நில அபகரிப்பு வழக்கில் கைதானவர்கள். குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக கூடுதலாக 2 ஆயிரத்து 200 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நில அபகரிப்பு தொடர்பாக ஏராளமான புகார்கள் வருகின்றன. மத்திய குற்றப்பிரிவு போலீசாருடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து இதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். மாணவர்கள் ராக்கிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கேயாவது ராக்கிங் நடந்தால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் செய்யலாம். அந்தந்த கல்லூரி முதல்வர்களிடமும் புகார் செய்யலாம்.
மாணவர்கள் பஸ் தினம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறார்கள். எனவே பஸ் தினம் கொண்டாட இனி அனுமதி கிடையாது. மாணவர்கள் பஸ்களில் தொங்கிகொண்டு கேலியும், கிண்டலும் செய்வதாக புகார்கள் வருகின்றன. இவர்களை பிடிக்க ஆண்-பெண் போலீசார் சாதாரண உடையில் கண்காணித்து சம்பவ இடத்திலேயே கைது செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கந்து வட்டி புகாரில் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். கந்து வட்டி நடைபெறும் மார்க்கெட் பகுதிகளில் நடவடிக்கை எடுக்க தனி போலீஸ் படை அமைக்கப்படும். கோயம்பேடு, அமைந்த கரை உள்ளிட்ட முக்கிய மார்க்கெட்களில் இந்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் பண்டிகைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தாமரைக்கண்ணன் கூறினார்.
இணை கமிஷனர்கள் சண்முகராஜேஷ்வரன், சங்கர், துணை கமிஷனர்கள் பிரமேமானந்த் சின்கா, பவானீஸ்வரி, அன்பு ஆகி யோர் உடன் இருந்தனர்.
''ஜெ-வுக்கு சிம்ம ராசி... மகம் நட்சத்திரம்... ஏழரைச் சனி முடிகிறது. சசிக்கு மீன ராசி... ரேவதி நட்சத்திரம்... அஷ்டமச்சனி துவங்குகிறது. சிம்மத்துக்காரர்களுக்கு இனி சனீஸ்வரன் பலம் கூட்டுவான் என்பதாக ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதே சமயம், அஷ்டமச் சனி கஷ்டத்தைத் தருமா என்று சசிகலாவும் கொஞ்ச நாளாக ஜோதிடம் பார்க்கத் தவறவில்லை. அவருக்கு மிகவும் பாந்தமான ஒரு ஜோதிடர், 'அஷ்டமத்துச் சனி கவிழ்ப்பது போல் கவிழ்த்து... உச்சத்துக்குத் தூக்கிவிடும்' என்றாராம். அது இப்படிக் கவிழ்க்கும் என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள்!''
''நியூஸ் மாஸ்டர் கழுகாரே... நீர் எப்போது ஜோதிடக் கிளி ஆனீர்?'' என்று டபாய்த்தோம்.
''செய்தி கொடுக்கும் நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ... செய்தி யாக உருவாகும் வி.வி.ஐ.பி-கள் முக்கால்வாசிப் பேர் ஜோதிடக் கட்டங்களை நம்பித்தான் காய் நகர்த்துகிறார்கள்'' என்று சிரித்த கழுகார், சட்டென்று சீரியஸ் ஆனார்.
''மன்னார்குடி மகுடிக்கு இப்படி ஓர் அடி விழுந்ததற்குப் பின்னால், குஜராத்தின் மோடி வித்தை இருக்கிறது என்று கோட்டை வட்டாரத்தில் பலமாகப் பேசுகிறார்கள். ஜெ-வின் உடல்நலத்தைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்து அவருக்கு 'டயட்' உள்ளிட்ட எல்லா அட்வைஸ்களையும் பக்கத்தில் இருந்தே அளிப்பதற்கு ஒரு புது நர்ஸ் வந்திருக்கிறார் என்று கடந்த வாரம் சொன்னேன் அல்லவா... குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் 'அப்படி ஒரு நர்ஸின் பராமரிப்பு அவசியம்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார் என்றும் சொன் னேன். இதற்கும் சில வாரங்கள் முன்பிருந்தே, நரேந்திர மோடியிடம் ஜெயலலிதா தொடர்ந்து ஆலோசனைகள் செய்து வருவதாக இப்போது சொல்கிறார்கள். 'ஊழலற்ற, இடையூறு அற்ற, வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக்கொண்ட ஓர் அரசை தமிழ்நாட்டில் தருவதற்கான புதுப் புது திட்டங்களை மோடியிடம் அம்மா பேச ஆரம்பித்திருக்கிறார். அந்த ஆலோசனைகளின் ஓர் அங்கம்தான் இப்போது சசிகலா அண்டு கோ மீதான குபீர் பாய்ச்சல்' என்கிறார் மிகமிக முக்கியமான ஓர் அதிகாரி.''
''அப்படியுமா இருக்கும்?''
''கேட்டதைச் சொல்கிறேன்... அதேபோல், பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு சசிகலா தனியே சென்றபோது, மன்னார்குடி மனிதர்கள் அங்கே கூடிப் பேசியதாக நான் கூறிய செய்தியையும் இங்கே நினைவூட்டுகிறேன். அந்தச் செய்தியை நாம் பகிர்ந்து கொண்டதற்குப் பிறகு, கடந்த வாரத்தில் மறுபடியும் கோர்ட்டுக்குப் போனார் சசிகலா. இந்த முறை, தமிழக உளவுப்பிரிவில் இருந்து கில்லாடியான இரண்டு அதிகாரிகள் குறிப்பான சில உத்தரவுகளுடன் நிழலாக பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் திரட்டிக் கொண்டு வந்த தகவல்கள்தான் அம்மாவை ரொம்பவே குழம்பவும் கொதிக்கவும் வைத்தது!''
''அதென்ன?''
''செவ்வாய்க் கிழமை கோர்ட்டில் சசிகலா ஆஜராக வேண்டும். முந்தைய நாள் பெங்களூரு உயர் நீதிமன்றத்தின் முக்கிய நீதிபதி ஒருவர் மாரடைப்பால் காலமாகி விட்டார். அதனால், மறுநாள் பெங்களூரு நகரத்தின் எந்த கோர்ட்டிலுமே நீதிபதிகள் 'சிட்டிங்' இருக்காது என்று முன்கூட்டியே சசிகலா தரப்புக்குச் செய்தி வந்துவிட்டதாம். இருந்தா லும் அவர் பயணத்தைத் தள்ளிப்போடவில்லை. திட்டமிட்டபடி பெங்களூரு போய்விட்டார். செவ்வாய் காலை, 'சின்னம்மா, நீங்க கோர்ட்டுக்கு வர வேண்டாம்... நாளை வந்தால் போதும். ரெஸ்ட் எடுங்க' என்று கூறப்பட்டதாம். இருந்தாலும், நீதிமன்றத்துக்கு சசிகலா சென்றார். அங்கே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்திருந்தார். அங்கு அவரைப் பார்க்க வந்தவர்களும், அவர்கள் பேசிய பேச்சுக்களும் என்னவென்று உளவு அதிகாரிகள் மூலம் தோட்டத் துக்கு ஒரு ரிப்போர்ட் போடப்பட்டதாம். 'என்னமோ நடக்கிறது... உங்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் நீங்கள் கூடுதல் கவனத்தோடு இருந்துகொள்வது நல்லது' என்று எச்சரிக்கையும் தரப்பட்டதாம்!''
''யப்போவ்!''
''வழக்கு தொடர்பான ஆவணங்கள் அத்தனையும் வரவழைத்து விறுவிறுவென்று ஒரு பார்வை பார்த்தாராம் ஜெயலலிதா. சட்ட நிபுணர்களை அழைத்து படுவேகமாக சில ஆலோசனைகளும் செய்தாராம். வழக்கின் சில ஆவணங்கள் தேவையே இல்லாமல் இடையிடையே போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே போய் வந்திருப்பதையும், அந்த ஆவணங்கள் எங்கோவைத்து ஜெராக்ஸ் எடுக்கப்பட்டதையும் அறிந்தாராம். அதன்பிறகு, அவர் கிடுகிடுப்பு பன்மடங்கு கூடிப்போனது என்கி றார்கள்!''
''இப்போது இன்னும் அல்லவா நிலைமை சிக்கலாகும்.... சசிகலாவையே அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்ட நிலையில்... சொத்துக் குவிப்பு வழக்கில் இடம் பெற்றிருக்கும் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் அந்த வழக்கில் எந்த அளவுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பார்கள்?''
''ஜெயலலிதாவுக்கு எதிராக மற்றவர்கள் ஒரேடி யாக 'யு டர்ன்' அடிக்கவும்கூட வாய்ப்பு இருக்கிறது. கட்சி நீக்க நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே, அதை யோசித்துப் பார்க்காமலா இருந்திருப்பார் ஜெயலலிதா? அப்படி ஒரு நெருப்பு வளையத்தைத் தாண்ட வேண்டிய நிலை வராதபடி, இப்போதே கவசங்கள் ரெடி பண்ண ஆரம்பித்து விட்டார் என்கிறார்கள். அதுவும் தவிர, அவருக்கு எதிராக மற்றவர்கள் ஒரு துரும்பைக்கூட அசைக்கத் துணியாதபடி, 'ஷாக் ட்ரீட்மென்ட்' கொடுக்கும் வேலைகளும் அடுத்தடுத்து நடக்குமாம். இந்த இதழ் கடைகளுக்கு வரும் நேரத்துக்குள் ரெய்டு உள்ளிட்ட எப்படிப்பட்ட 'ஷாக்'கும் சசி தரப்பினருக்குத் தரப்படலாம் என்று எதிர்பார்க்கிறது டாப் போலீஸ் வட்டாரம்!'' என்ற கழுகார்...
''இப்படி ஒரு குபீர் நடவடிக்கை பாயக்கூடும் என்பதற்கான சிக்னல் ஓரிரண்டு நாட்களுக்கு முன்பே சசி தரப்பினருக்குக் கிடைத்தது. அப்போதே அவர்கள் உஷாராகி இருக்கலாம்...'' என்றார்.
நாம் புதிராக அவரைப் பார்த்தோம்.
''இப்போது கட்சி நீக்கம் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இருக்கிறாரே ராவணன்... அவர் போயஸ் வனத்துக்கு திடீரென வரவழைத்து அரை நாளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டாராம். அரசாங்கத்தின் பெயரைச் சொல்லி அவர் நடத்திய சில பகீர் வசூல்கள் பற்றிய பட்டியல் அவர் முன் படிக்கப்பட்டதாம். முகம் வெளிறி ராவணன் திணற... 'கடுமையான' எச்சரிக்கை விடுக்கப்பட்டதாம். வெளியில் வரும்போது அவர் தளர்ந்து, தள்ளாடிப் போயிருந்தார் என்கிறார்கள். இதேபோல், கட்சி நீக்கப் பட்டியலில் இருக்கும் குலோத்துங்கன் என்பவரை கடந்த ஒரு வாரமாகவே ரகசிய போலீஸார் தேடி அலைந்தனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவல்துறை வட்டாரங்களில் புகுந்து அவர் நடத்திய மிரட்டல் பஞ்சாயத்துகள் இந்த முறையும் தொடங்கி விட்டதுதான் அவரைத் தேடக் காரணமாம். 'அவர் மட்டும் எங்கள் கையில் சிக்கி இருந்தால்...' என்று இப்போது சொல்கிறார் ஒரு கிரைம் பிராஞ்ச் அதிகாரி!''
''சரியாப்போச்சு!''
''மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் சிலரின் தலைகளும் இதில் எகிறுவது உறுதி என்கிறார்கள். அதிலும், பெசன்ட் நகர் பங்களா ஒன்றின் தலையாட்டலுக்கு ஏற்ப காரியங்கள் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு மந்திரிகள் பற்றி குறிப்பான கோபம் இருக்கிறதாம். இதைத் தவிர, வணிக வரித் துறைக்குப் பொறுப்பான அக்ரி கிருஷ்ணமூர்த்தியைப் பதவி நீக்குவதோடு, அவர் மீது மீது மிகமிக சீரியஸான நடவடிக்கையே எடுக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.''
''ஏன் இந்தக் கோபம்?''
''இதன் மையம் 'ஜெயா' டி.வி-யை மையமாக வைத்து நடந்த பலே வசூல் வேட்டை என்று சொல்லப்படுகிறது. அங்கே முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் வைகுண்டசாமியும், குழந்தைசாமியும் கடந்த சில காலமாக நடத்தி வரும் விளையாட்டுகள் பற்றி அம்மாவுக்கு தொடர்ந்து ரிப்போர்ட் போய்க் கொண்டே இருந்ததாம்.
இதன் கிளைமாக்ஸாகத்தான், வணிகவரித் துறை அதிகாரிகள் அரங்கேற்றிய வசூல் வேட்டை பற்றி கதறலாகச் சில புகார்கள் தோட்டத்துக்குப் போனதாம்...''
''புரியலையே...''
''விளக்கமாகவே சொல்கிறேன்... 'ஜெயா' டி.வி-க்கு விளம்பரம் கொடுக்கும்படி கேட்டு முக்கியமான வணிக நிறுவனங்களை சிலர் முதலில் அணுகுவார்கள். ஆளும் கட்சித் தொலைக்காட்சியில் இருந்து வந்து கேட்டால் மறுக்க முடியுமா? வேண்டாவெறுப்பாக அந்த வணிக நிறுவனங்களும் ஒப்புக்கொள்ளும். விளம்பரத்துக்கான கட்டணம் எவ்வளவு என்று கேட்டால்... மயக்கம் போடுகிற அளவுக்கு ஒரு தொகையைச் சொல்வார்களாம். 'விளம்பரம்னா விளம்பரத்துக்கு மட்டுமே கிடையாது. இனி அரசாங்கத்தின் அன்புப்பார்வை உங்க மேலே விழும். நீங்க நினைச்சதை சாதிக்கலாம்' என்று இந்த அநியாய வசூலுக்கு விளக்கம் தரப்படுமாம். வணிக நிறுவனங்கள் இதற்குப் படிந்து வராதபட்சத்தில், அடுத்த கட்டமாக வணிகவரித் துறையில் இருந்து அதிகாரிகள் வந்து இறங்குவார்களாம். 'அது சரியா இருக்கா? இந்த ரெக்கார்ட் எங்கே?' என்று குடைய ஆரம்பிப்பார்களாம். எல்லா ரெக்கார்டுகளும் பக்காவாக இருந்தா லும்கூட, 'ஜெயா' டி.வி. பேரைச் சொல்லி... 'அங்கே இருந்து வந்து அமவுன்ட் கேட்டாங்களாமே... கொடுக்க வேண்டியது தானேப்பா' என்று வேறு ரூட்டில் டார்ச்சர் கொடுக்க ஆரம்பிப்பார்களாம் அதிகாரிகள்!''
''பகல் கொள்ளை என்பது இதுதானா?''
''அந்தத் துறையின் உயர் பதவியில் இருக்கும் ஒரு டெபுடி பெண் அதிகாரியே நேரடியாக பழநியில் போய் இறங்கி இப்படி 'ஜெயா' பேரால் டார்ச்சர் கொடுத்த தகவலும் தோட்டத்துக்கு வந்து சேர்ந்து விட்டதாம். துறையின் அமைச்சருக்குத் தெரியாமலா இப்படி எல்லாம் நடக்கும் என்று விசாரிக்கும்படி உத்தரவானதாம். இந்த மிரட்டல் வளையத்தில் சிக்கிய மார்வாடி ஒருவர் அனுப்பி வைத்திருந்த புகாரை நம்பிக்கையான போலீஸ் அதிகாரியிடம் கொடுத்து விசாரிக்கச் சொன்னார்களாம். முன்கூட்டி அந்த அதிகாரி போய் மார்வாடியின் ஆபீஸில் மறைந்திருக்க... சொன்ன நேரத்துக்கு பணத்தை வாங்க வந்தாராம் வணிகவரித் துறை அதிகாரி ஒருவர். மார்வாடியிடம் அவர் நடத்திய பேரத்தைக் காதாரக் கேட்டுச் சென்று அப்படியே ஒப்புவித் தாராம் போலீஸ் அதிகாரி. இந்த நேரம் பார்த்து நிகழ்ந்ததுதான் இன்னொரு சூப்பர் கிளைமாக்ஸ்....'' என்றபடி கழுகார் மர்ம மௌனம் சாதிக்க,
''சஸ்பென்ஸ் நம்ம உடம்புக்கு ஆகாது,
மிஸ்டர்...'' என்று பரபரத்தோம்.
''அதாவது, வணிகவரித் துறை அதிகாரிகள் மிக நேர்மையாக ஆக்ஷன் எடுத்து வருவது போலவும்... வரி ஏய்ப்பு செய்யும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசே ரீலீஸ் செய்வதாக திடீரென்று ஓர் அறிக்கை வெளியானது. அது பற்றி முதல்வருக்குத் துளிகூட தெரியாதாம். 'அம்மா சொல்லித்தான் இத்தனையும் நடக்கிறது என்று ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கினால், முரண்டு பிடிக்கும் நிறுவனங்களும் ஓடிவந்து மூட்டையை நிரப்பும்' என்ற குயுக்தியான ஐடியாவில்தான் அப்படி ஓர் அறிக்கை ரிலீஸ் ஆனதாம். இதுவும் முதல்வர் காதுக்குப் போக... 'என்னவொரு துணிச்சல்' என்று கண்சிவந்து நின்றாராம். அதனால்தான் சொன்னேன் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி ஆட்டம் காண்கிறது என்று!''
சட்டென்று நினைவு வந்தவராக கழுகார், ''புகழ்மிக்க படவேடு அம்மன் கோயிலில் ஒரு மெகா யாகம் நடத்தினார் அக்ரி என்றொரு தகவலும் முதல்வர் காதுக்கு வந்தது. ஒரு காலத்தில் தோட்டத்து 'கவுளி'யாக இருந்து, பிறகு திடீரென ஒதுக்கப்பட்ட உன்னி கிருஷ்ணப் பணிக்கரை கேரளத்தில் இருந்து அழைத்து வந்து அந்த யாகம் நடந்ததாம். யாருக்காக நடந்த யாகம் இது என்ற கேள்வி ஒருபுறம் இருக்க... யாகத்தின் முடி வில் தட்சணையாக தரப்பட்ட தொகையும் அதிர்ச்சி உண்டாக்கியதாம்.''
''அதிகாரிகள் பதவியும் ஆடும் என்றீரே..?''
''யெஸ், யெஸ்! மன்னார்குடி குடும்பத்தினரின் கண் அசைவில் பதவி பெற்ற ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அத்தனை பேரின் பட்டியலையும் வாங்கிக் கையில் வைத்திருக்கிறது தோட்டம். இதில், மிக சென்சிடிவ்வான துறைகளில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும்... உளவுத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் முதலில் 'கவனிக்க'ப் போகிறார்களாம். இத்தனை வருட நட்புக்கு மதிப்பு கொடுத்து சசிகலா பொறுமையாக இருந்தாலும்கூட, அவருடைய உறவினர்கள் சிலர் இந்த ஆட்சிக்கு எதிராக எந்த நேரமும் திரி கொளுத்துவார்கள் என்பதால்... உஷாராக இருக்கிறாராம் முதல்வர்!''
கண் மூடி சில நொடிகள் தவம் இருந்த கழுகார்,
''சாம, தான, பேதம் முடிந்து... தண்ட படலம் இப்போது! கடுமையான சில வழக்குகள் எதிர்பாராத மனிதர்கள் மீது பாய்ச்சப்பட்டு, மின்னல் வேகக் கைதுகள் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது'' என்று சொல்லிப் பறந்தார்.
‘‘கோட்டை வட்டாரத்தில் சொல்லப்படும் தகவலைச் சொல்கிறேன்... கார்டனில் உள்ள பணியாளர் ஒருவர் அங்கிருந்த லேண்ட் லைன் போன் மூலம் அதிகார மட்டத்தில் கோலோச்சிக்கொண்டிருந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தாராம். முதல்வர் சொன்னதாகச் சொல்லி சில காரியங்களை முடித்துத் தரச் சொல்லிக்கொண்டிருந்தாராம்.’’
‘‘அடடா...’’
‘‘அந்த சமயம் பார்த்து இன்னொரு போனை முதல்வர் எடுத்திருக்கிறார். அதில் இந்த இருவரும் பேசுவது கேட்டிருக்கிறது! ஆதியோடு அந்தமாக இதைக் கேட்டு ரத்தம் கொதித்துப் போன முதல்வர், உடனடியாக அந்த ஊழியரை அழைத்து செம ‘டோஸ்’ விட்டாராம். தனக்குத் தெரியாமல் சில காரியங்கள் நடந்து வருவதை உணர்ந்து, விசாரணை நடத்தச் சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்துதான் இந்த அதிரடி நடவடிக்கைகள் என்கிறார்கள். அதோடு கார்டனில் உள்ள போன்கள் எல்லாவற்றையும் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கும்படியும் உத்தரவிட்டுள்ளாராம். கூடவே அந்த அறையில் ‘வெப் கேமரா’ வைக்கவும் ஆணையிட்டுள்ளாராம்.’’
‘‘நல்ல முயற்சி...’’
‘‘மூன்றாவது முறையாக முதல்வராகியிருக்கும் ஜெயலலிதா, இந்த முறை மிகச் சிறப்பான ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். கடந்த இரண்டு முறை நடந்த ஆட்சியில் ஏற்பட்ட தவறுகள் இந்த ஆட்சியில் நடந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார். ஆனால், அவரையும் மீறி சில அமைச்சர்கள், அதிகாரிகள் செய்யும் தவறுகள் தெரிந்தோ தெரியாமலோ முதல்வர் மீதே விழ ஆரம்பித்திருக்கிறது. அதை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்றுதான் இவ்வளவு வேகம் காட்டி வரு கிறார் முதல்வர்.
இலவச அரிசி வழங்கும் திட்டத்தை முதல்வர் கொண்டு வந்தார். அதை வழங்குவதில் ஏகப்பட்ட குளறுபடிகள். இது முதல்வருக்குத் தெரிந்ததும், அந்தத் துறையின் செயலாளரை மாற்றினார். இன்னமும் சில ரேஷன் கடைகளில் ‘அடுத்த மாதத்தில் இருந்து இலவச அரிசி வழங்கப்படாது’ என்று சிலர் சொல்லி வருகிறார்களாம். இதையெல்லாம் யார் கிளப்பி விடுகிறார்கள் என்றும் விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம்...’’
‘‘ரொம்ப வேகமாகத்தான் இருக்கிறார்...’’
‘‘அதுமட்டுமல்ல... மூத்த அமைச்சர்களான ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோரிடம், ‘ஜூனியர் அமைச்சர்களைக் கண்காணித்து அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்களால் என்னைத் தொடர்பு கொள்ள முடியாத போது, நீங்கள் அவர்களுடன் பேசி அவர்கள் பிரச்னைகள், சிக்கல்களைத் தீர்த்து வையுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் தயாராவதற்கு முன்பாக, கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் குறைந்த பட்சம் ஆரம்பிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவு போட்டுள்ளார்...’’