தொகுதி மாறியகேப்டன்: ‘குஷி’வந்தியம் ஆகுமா ரிஷிவந்தியம்?
-கடந்த 02.12.2010 தேதியிட்ட ‘தமிழக அரசியல்’ இதழில், ‘உங்க எம்.எல்.ஏ. பாஸா பெயிலா?’ பகுதியில் விஜயகாந்தின் விருத்தாசலம் தொகுதியை ஆய்வு செய்தோம். நமது விசாரணையின் முடிவில்தான் மேற்கண்டவாறு எழுதியிருந்தோம்.
அதன்படியே இந்த முறை விருத்தாசலத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் தொகுதிக்கு மாறியிருக்கிறார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த், ‘‘சாதாரண ஸ்கூட்டரில் போய்க்-கொண்டி-ருந்த பொன்முடி, இன்று பல கோடி ரூபாய்க்கு அதிபதியாகி குறுநிலமன்னர் போல செயல்-பட்டது எப்படி? வர இருக்கும் தேர்தலில் நீங்கள் விரும்பினால் விழுப்புரத்தில் பொன்முடியை எதிர்த்துப் போட்டியிடத் தயார். ஏன் கலைஞரையே எதிர்த்துப் போட்டி-யிடவும் தயார்’’ என்றெல்லாம் சவால் விட்டார்.
இப்போது காங்கிரஸ் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதிக்கு மாறிவிட்டார். ஏன் இந்த மாற்றம்?
விருத்தாசலம் தொகுதியில் விசாரணையில் இறங்கினோம்.
‘‘விருதாசலம் தொகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளை முழுமையாக தீர்த்துவைக்கவில்லை என்ற மனக்குறை கேப்டனுக்கே இருக்கிறது. காரணம், பல நலத்திட்டங்களுக்கு ஆளும் தி.மு.க.வே தடை-போட்டதுதான். அப்படியிருந்தும் பல நலத்-திட்டங்களை செய்துள்ளார். தொகுதி பக்கமே போவதில்லை என்ற குறையைப் போக்க அண்ணியாரை அனுப்பி அந்தத் தொகுதியை கண்காணித்து வந்தார். மீண்டும் இந்தத் தொகுதியில் நின்றால் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கடினமாகவே உள்ளது என்று வந்த தகவல்களால் மட்டுமல்ல... கேப்டன் தொகுதி மாறியதற்கு வேறு கணக்குகளும் உள்ளன’’ என்கிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத தே.மு.தி.க. நிர்வாகிகள்.
கேப்டனின் கணக்கு என்ன? என்று அவர்களிடமே கேட்டோம்.
‘‘தே.மு.தி.க. கட்சி ஆரம்பித்து சந்தித்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளில்தான் அதிக சதவிகித ஓட்டுகள் கிடைத்துள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட கோவிந்தன் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்றார். அப்போது வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் 54 ஆயிரத்து 394 ஓட்டுகள் பெற்றார். அதே நேரம் அ.தி.மு.க. வேட்பாளர் 46 ஆயிரம் ஓட்டுகள் பெற்றார். ஆக, இப்போது அ.தி.மு.க. & தே.மு.தி.க. கூட்டணி பலமே சுமார் 70 ஆயிரம் ஓட்டுகளைப் பெற்றுத் தரும். மேலும் கேப்டனுக்கு உள்ள வி.ஐ.பி. இமேஜும் இந்த ஓட்டு எண்ணிக்கையை அதிகப்படுத்தும்.
நாடாளுமன்றத் தேர்தல் கணக்குப்படிப் பார்த்தாலும்... ரிஷிவந்தியம் தொகுதியை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட எல்.கே.சுதீஷ் 24 ஆயிரத்து 500 ஓட்டுகள் வாங்கினார். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆதிசங்கர் 59 ஆயிரம் ஓட்டுகளும், அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் தன்ராஜ் 36 ஆயிரத்து 750 ஓட்டுகளும் பெற்றார்கள். இந்த ஓட்டு விவரங்களை வைத்துதான் ரிஷிவந்தியம் தொகுதியை கேப்டன் தேர்வு செய்துள்ளார்’’ என்று தெரிவித்தனர் தே.மு.தி.க.வினர்.
மேலும், ‘‘இப்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவராஜ் ஐந்துமுறை இங்கே தேர்ந்தெடுக்கப்பட்டும் பல பிரச்னைகளை தீர்க்காததால் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர் மக்கள். தவிர ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இருக்கும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கேப்டனின் மாமனார் வை.கண்ணையநாயுடு வேலைபார்த்து வந்தார். (நமது இதழில் பிரேமலதா விஜயகாந்த் எழுதிய தொடரிலும் மூங்கில்துறைப்பட்டு நினைவுகளை நிறையவே எழுதியிருந்தார்.) இதனால் அப்பகுதி விவசாயிகள், தொழிலாளர் களிடையே அவருக்கு நல்ல பெயர் உண்டு. இதுவும் தனக்கு உதவும் என்று நினைக்கிறார் கேப்டன்’’ என்றார்கள்.
இதையெல்லாம் விட விஜயகாந்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருப்பது காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவராஜுக்கும், கள்ளக்குறிச்சி எம்.பி., ஆதிசங்கருக்கும் இடையேயான மோதல்தான்.
சில ஆண்டுகளுக்கு முன் சிவராஜ் மீது ஒரு பெண் பாலியல் புகார் அளித்தார். அதற்கு காரணம் ஆதிசங்கர்தான் என்று எம்.எல்.ஏ. தரப்பு கருதுகிறது. இதனால், ஆதிசங்கரை கள்ளக்குறிச்சி நாடாளு-மன்றத் தொகுதி வேட்பாளராக தி.மு.க. அறிவித்ததும் சிவராஜ் போர்க்கொடி தூக்கினார் ஆதிசங்கருக்கு எதிராக வேலை செய்வோம் என்று காங்கிரசார் அறிவித்து அதன்படியே ஆதிசங்கருக்கு எதிரான நிலையில் வேலை செய்தனர்.
அந்த கோபத்தில் இருக்கும் ஆதிசங்கர், இப்போது மீண்டும் சிவராஜ் நிற்கும் பட்சத்தில் அல்லது காங்கிரஸ் சார்பாக யார் நிறுத்தப்பட்டாலும் காங்கிரஸுக்கு கடுமையாக உள்ளடி வேலை பார்க்கத் தயாராகிவிட்டார். இந்தத் தகவல்தான் விஜயகாந்துக்கு மேலும் தெம்பைக் கூட்டியுள்ளது.
ஆதிசங்கரிடமே இதுபற்றிப் பேசினோம்.
‘‘தி.மு.க. கூட்டணியில் இருந்து-கொண்டே நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸார் எப்படி பணியாற்றி-னார்களோ, அதே வேலையை இப்போதும் தி.மு.க. சார்பில் தொடருவோம்’’ என்று அர்த்தபுஷ்டியோடு சொல்லி சிரித்தார். விஜயகாந்துக்கு இதெல்லாம் வாய்ப்பாகி இருக்கிற நிலையில், தே.மு.தி.க. விழுப்புரம் மாவட்டச் செயலாளர் வெங்கடேஷிடம் பேசினோம். ‘‘2006&ம் ஆண்டு தேர்தலிலேயே ரிஷிவந்தியம் அல்லது சங்கராபுரம் தொகுதியில்தான் கேப்டன் நிற்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் கடைசியில் விருத்தாசலத்தில் நின்றார். தொகுதி மாறுவதில் ஒரு வியப்பும் இல்லை.
ஜெயலலிதா, கருணாநிதி எல்லாம் தொகுதி மாறுகிறார்கள். கேப்டன் தொகுதி மாறக் கூடாதா என்ன? கேப்டனின் வெற்றி என்பது இங்கே ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டது’’ என்றார் வெங்கடேஷ்.
எந்த அரசாங்கத்திலும் ஆளுங்கட்சியின் மேல் மக்களுக்கு அதிருப்தி ஏற்படும் போதெல்லாம் எதிர்க்கட்சியை மாற்றாகத் தேர்ந்தெடுக்க முனைவது ஜனநாயகத்தின் தவிர்க்கப்பட முடியாத & எழுதப்படாத விதியாக இருக்கிறது.
இன்றைய தேதியில் மாநிலத் தேர்தலில் ஆளும் தி.மு.க. மெகா ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகித் தத்தளிப்பது, அ.தி.மு.க.விற்கு அலைவீசுவதை பெரிதும் சாத்தியமாக்கியது 2ஜி உட்பட காங்கிரஸ் & தி.மு.க. மேல் படிந்த ஊழல்கறைகள்தான். தமிழ்நாட்டு வாக்காளர்கள் ணீஸீtவீ - வீஸீநீuனீதீமீஸீநீஹ் ஓட்டளிப்பதில் எப்பொழுதுமே விருப்பப்படுபவர்கள் என்ற அடிப்படையில் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்புகளைக் கணிப்பவர்கள் பலர். காங்கிரஸ் & தி.மு.க. கூட்டணிப் பேச்சு, மிகமோசமான நிலைக்குச் சென்று சுனாமியாய் வீசினாலும் எப்படியோ சமாதானம் பேசி கூட்டணித் தேரை நிலைக்குக் கொண்டுவந்துவிட்டார் திருவாரூர்க்காரர். இதற்கப்புறம் அந்தக் கூட்டணியில் பெரிதாகக் குழப்பம் வர வாய்ப்பில்லை. அப்படியே வந்தாலும் அது தமிழ்நாடு காங்கிரஸுக்குள் வழக்கமாக நிலவும் குழுச் சண்டைகளும், குழாய்ச் சண்டைகளுமாகத்தான் இருக்கும் என்பதால் வழக்கத்தை மீறிய பாதிப்பு பிரதான கட்சியான தி.மு.க.விற்கு ஏற்பட வாய்ப்பில்லை. அதே சமயம், வெற்றி வாய்ப்பு பலமாக இருப்பதாகக் கருதப்படும் அ.தி.மு.க. கூட்டணியில் ஏகப்பட்ட குழப்பங்கள். தமிழ்நாட்டில் எந்தவொரு கொள்கையாய் இருந்தாலும், மக்கள் நலத்திட்டமாக இருந்தாலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் எதிரெதிர் நிலை எடுப்பதைக் கட்டாயமாக கொண்டிருப்பது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம்.
மக்களுக்கு உண்மையிலேயே நலம் பயக்கும் திட்டங்களை எந்த ஆட்சி கொண்டு வந்தாலும் கொள்கையளவிலாவது (மிஸீ ஜீக்ஷீவீஸீநீவீஜீறீமீ) அதை ஆதரிக்கும் சூழ்நிலை இரண்டு பக்கமும் இல்லை. அதற்குக் காரணம், கொள்கையளவில் இரு கட்சிகளுக்கும் பெரிய கருத்துவேறுபாடும் இல்லை & கத்தரிக்காயுமில்லை. இரு தலைவர்களுக்கிடையில் இருக்கும் தனி மனிதக் கசப்பும் வெறுப்பும் மட்டுமே. ஒருவரையொருவர் விமான நிலையம் போன்ற பொது இடங்களில் கூட சந்தித்து விடாமல் தவிர்க்குமளவுக்கு இந்த ‘உறவு’ தொடர்கதையாக இருக்கிறது. கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இப்படிப்பட்ட காழ்ப்புணர்வும் வெறுப்புறவும் பலகாலம் இருந்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து கட்சித் தலைமைக்கு வந்த ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்குமிடையிலும் இதே வெறுப்புறவு தொடர்ந்தது. இப்போது கருணாநிதி தன்னுடைய மேடைப்பேச்சுக்களில், தனக்கும் எம்.ஜி.ஆருக்குமிடையில் ‘என்றும் இருந்த அடிப்படை நட்பை’ பலமுறை சிலாகித்துப் பேசுகிறார்!
கொளத்தூர் தொகுதியில் சில எம்.ஜி.ஆர். தொண்டர்கள், ‘எம்.ஜி.ஆர். ரூபத்தில்’ ஸ்டாலினை ஆதரிக்க முன்வருவதாக ஒரு செய்திகூட வந்திருக்கிறது. செய்தி முழுக்க முழுக்க உண்மையோ இல்லையோ, மக்கள்கூட சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் மனம் மாறத் தயாராகிறார்கள். ஆனால், நம் தலைவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் & தமிழக மக்களின் நலம் கருதிக்கூடத் தங்கள் தனிமனித பிடிவாதங்களையும் விருப்பு வெறுப்புகளையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பது உறுதியாகிறது
. அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்பட்ட குழப்பங்கள் தவிர்த்திருக்கக்கூடியவை என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே சமயம் கூட்டணியில் உள்ள கட்சிகளும் (எந்தக் கூட்டணியிலிருந்தாலும்) தங்கள் பலமறிந்து யதார்த்தமான எதிர்பார்ப்புகளை முன்வைத்து முடிவு செய்தால் அவர்களுக்கும் லாபம், கூட்டணிக்கும் லாபம். சமத்துவ மக்கள் கட்சி & பெருந்தலைவர் மக்கள் கட்சி என்று ஆகி 24 மணி நேரத்தில் கலைந்து நின்றது. பொதுவாக நம் அரசியல் கட்சிகள் எவற்றிற்குமே எந்தக் கொள்கையும் இல்லை.பதவியாசையும், பணத்தாசையும் மட்டும்தான் இருக்கிறது. அதற்காக, அடிக்கடி அவர்களே கூக்குரலிட்டுக் கொள்ளும் ‘சுயமரியாதை’யை அவர்களே தியாகம் செய்துவிடுகிறார்கள். இது மக்களுக்கு அப்பட்டமாகப் புரிகிறது என்பதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
வைகோவை எடுத்துக்கொள்ளுங்கள். கருணாநிதி-யுடன் இவருக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டை வைத்தே தி.மு.க. விலிருந்து வெளியேறி ம.தி.மு.க.வை ஆரம்பித்தார். இதே வகை கருத்து வேறுபாட்டினால் வெளியே வந்து கட்சி ஆரம்பித்து வெற்றியும் பெற்ற எம்.ஜி.ஆரின் உதாரணம் இவருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆருக்கிருந்த அந்த கவர்ச்சி (ரீறீணீனீஷீuக்ஷீ) இவருக்கு எப்பொழுதும் இருந்ததில்லை. எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகியம்மாள் கட்சி நடத்த முடியாமல் போனதற்கும் இதே காரணம்தான். ஆனாலும் தன் மேடைப் பேச்சாலும் ஷிtக்ஷீணீவீரீலீt - யீஷீக்ஷீஷ்ணீக்ஷீபீ - என்ற இமேஜ் இருந்ததாலும் ம.தி.மு.க. ஆரம்பகாலத்தில் குறிப்பிட்ட அளவு வரவேற்பை பெற்றது.
ஆனால், தி.மு.க.வை தன்னிச்சையாக நடத்துகிறார் கருணாநிதி. இரண்டாம் கட்டத் தலைவர்களை சரியாக மதிப்பதில்லை என்று குற்றம் சாட்டிய வைகோவுக்கு எதிராக இதே குற்றச்சாட்டு வெகுசீக்கிரம் எழுந்தது. ஜெயலலிதாவுக் கெதிராகவும் இந்தக் குற்றச்சாட்டு இன்றளவும் உண்டு என்றாலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அவரவர் கட்சியைப் பெரும்பாலும் எப்படியோ கட்டுக்கோப்பில் வைத்திருக்-கின்றனர். இதில் கருணாநிதியின் ராஜதந்திரம் நிச்சயமாக பெரிய பிளஸ் பாயின்ட் என்பதால் அ.தி.மு.க.விலிருந்து இரண்டாம் & மூன்றாம் கட்டத் தலைவர்கள் தி.மு.க.விற்குச் சென்றதுபோல் தி.மு.க.விலிருந்து பெரிதாக அ.தி.மு.க.விற்கோ வேறு கட்சிக்கோ செல்லவில்லை.
சென்ற தேர்தலில் 35 சீட்டுகள் அ.தி.மு.க. அணியில் பெற்றும் கூட கூட்டணியின் பிரதான கட்சியான அ.தி.மு.க. பெற்ற அளவு விகித வெற்றியைப் (றிக்ஷீஷீஜீஷீக்ஷீtவீஷீஸீணீtமீ)
பெற முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலிலும் ம.தி.மு.க. கணிசமான வெற்றியைப் பெறவில்லை. 18 வருடங்களாகக் கட்சி நடத்தியும் வைகோவால் ம.தி.மு.க.வை தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய சக்தியாகக் கொண்டுவர முடியவில்லை என்பது வேதனையான உண்மை. அவரைச் சுற்றியிருந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் (அனைவரும் தி.மு.க.விலிருந்து பிரிந்தபோது அவருக்குத் தோள் கொடுத்தவர்கள்) ம.தி.மு.க.வை விட்டு விலகி மீண்டும் தி.மு.க.வில் இணைந்துவிட்டார்கள். வைகோ எதேச்சதிகாரமாகவும், சுயநலமாகவும் கட்சி நடத்துகிறார் & எங்களுக்கு உரிய மரியாதை இல்லை என்று சொல்லி விலகினார்கள்.
இத்தனை நடந்த பிறகும் அவருடைய விசுவாசத்திற்காக மட்டுமே அ.தி.மு.க. அவரைக் கூட்டணியில் வைத்திருக்கிறது என்பது அவருக்கும் தெரியும். இன்றைக்கிருக்கும் சூழலில் சுமுகமாகப் பேசி பத்தோ பதினைந்தோ தொகுதிகளை வாங்கிக்கொண்டு அதில் கணிசமான தொகுதிகளில் ஜெயித்து வந்து கட்சியை வளர்க்க நினைப்பதுதான் சாமர்த்தியம் & யதார்த்தம். அ.தி.மு.க. தலைமை அவர் விஷயத்தில் இன்னும் கொஞ்சம் தாராளம் காட்டியிருக்கலாம் என்ற வாதத்தில் நிச்சயமாக நியாயமிருக்கிறது. ஆனால், அந்த நியாயத்தை மீறி சூழ்நிலை யதார்த்தத்தைப் புரிந்து செயல்பட்டால் அடுத்த தேர்தல் வரை ம.தி.மு.க. ஆரோக்கியமாக இருக்க வாய்ப்புண்டு. தினம் ஒரு சாதிக்கட்சியாகத் தோன்றி, தமிழ்நாட்டு அரசியல் களத்தை இன்றும் களேபரமாக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் வைகோ போன்ற அரசியல் அனுபவம் பெற்றவர் அனுபவத்-திற்கேற்ற முதிர்ச்சியுடன் செயல்-பட்டிருக்கலாம்.
தனக்கு இனிமேல் பதவியோ, அதிகாரமோ, ஆட்சியில் பங்கோ தேவையில்லை என்ற முடிவுக்கு அவர் தனிப்பட்ட முறையில் வந்தாலும்; அவரை நம்பி 18 வருடகாலம் இன்னும் அவருடன் விசுவாசமாக இருக்கும் தொண்டர்-களுக்காகவாவது அவர் தன்னிலையிலிருந்து சிறிது இறங்கி வந்திருக்கலாம். ‘சுயமரியாதை’ என்ற வார்த்தையே தமிழ்நாட்டு அரசியலில் காமெடி டயலாக் ஆகிவிட்ட நிலையில் இவரும் அதையே சொல்லித் தேர்தலைப் புறக்கணிப்பதாகச் சொல்வது இவருக்கும் நன்மையளிக்காது. இவரை நம்பி இருப்பவர்களுக்கும் பயனளிக்காது. இன்றைய சூழ்நிலையில் இவர் சேர்ந்தால்தான் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றோ, சேராமலேயே வெற்றி பெற்றுவிடும் என்றோ சொல்வது வெறும் கணிப்புகள்தான். மக்களின் மனம் எந்த வழியில் செல்லும் என்பது தேர்தல் முடிந்தால்தான் அரசியல்வாதிகளுக்குப் புரியும் & மக்களுக்கே புரியும்.
இந்தக் கட்டுரை எழுதும் தருணத்தில் பல்வேறு காரணங்களினால் இரண்டு கூட்டணிகளும் சமபலத்துடன் இருக்கின்றன என்பது என் கணிப்பு. வைகோ எடுக்கும் முடிவு, அவர் தன் கட்சியை காப்-பாற்றிக்கொள்ள அவருக்குக் கொடுக்-கப்-பட்டிருக்கும் கடைசி சந்தர்ப்பம். தேர்தல் முடிவு மக்கள் கையில். ஆனால், அடுத்த தேர்தல் வரை ம.தி.மு.க. பிழைத்திருப்பது வைகோவின் கையில். அவரால் அவர் தொண்டர்களுக்குச் செய்யக்கூடிய பெரும் உதவி, புறக்கணிப்பு என்ற பெயரில் அரசியல் தற்கொலை செய்து-கொள்ளாமல் இருப்பதுதான். பார்க்கலாம், என்ன செய்கிறார் என்று!
வீடு தோறும் பெண்களுக்கு இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும்’’ என்பதில் ஆரம்பித்து, ‘‘ஏழைகளுக்கு ரேஷன் மூலமாக மாதம்தோறும் முப்பத்தைந்து கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்...’’ என்பது வரையில் இலவசங்களை சகட்டுமேனிக்கு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வாரித் தெளித்திருக்கிறது தி.மு.க. தலைமை.
வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த தேர்தல் அறிக்கை பற்றி, பொருளாதார வல்லுநர்கள் என்ன நினைக்கிறார்கள்?
சென்னையின் பிரபல ஆடிட்டரும் பொருளாதார வல்லுநருமான எம்.ஆர். வெங்கடேஷை சந்தித்து, தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் பற்றிக் கேட்டோம்.
‘‘முதலில் குஜராத் விஷயத்தைச் சொல்லிவிட்டு தமிழகத்துக்கு வருகிறேன்... 2007&ம் ஆண்டு குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது பி.ஜே.பி.யின் நரேந்திர மோடியை வீழ்த்துவதற்காக, வீடுதோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப் போவ-தாக அறிவித்தது காங்கிரஸ்.
இதுபற்றி நரேந்திர மோடியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நான் இலவசம் எல்லாம் தரமாட்டேன். அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை கட்டாதவர்களுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பப் போகிறேன்... வரி செலுத்தாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்துவேன்... இலவசத்தைக் கொடுத்து மக்களை கெடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வர மாட்டேன்...’ என்று சொன்னார்.
எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். ஒரு சிலர், ‘ஆணவத்தின் உச்சத்தில் இருந்து நரேந்திர மோடி பேசுகிறார்...’ என்று கூட விமர்சனம் செய்தார்கள். ஆனால், அது குறித்தெல்லாம் அவர் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்து செய்த சாதனைகளை மட்டும் சொல்லி, ஓட்டுக் கேட்டார். பெரும் வெற்றி அடைந்தார்.
அப்படிப்பட்ட குஜராத் எங்கே? ‘வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கியாச்சு... அடுத்து என்ன இலவசம்’ என்று காத்திருக்கும் தமிழகம் எங்கே?’’ என்று வருத்தப்பட்ட வெங்கடேஷ் தொடர்ந்தார். ‘‘ஏற்கனவே ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு நிர்வாகம், கடனுக்-கான வட்டியாக மட்டும் வருடத்துக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலுத்திக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால், தமிழகம் பொருளாதார ரீதியில் எவ்வளவு கீழான நிலைமைக்குச் சென்று கொண்டிருக்-கிறது என்பதைப் பாருங்கள்.
நாட்டின் கடன் என்றாலும், அது ஒவ்வொரு தனிமனிதனுக்குமான கடன்தான் என்பதை நாம் யாரும் இன்னும் உணரவில்லை. அப்படி உணர்ந்தால் இலவசங்களைத் தேடி ஓடமாட்டோம்.
அடுத்த தலைமுறைக்கு கடனை சுமத்தாமல் இருப்பதுதான் நல்ல பெற்றோரின் கடமை. ஆட்சியாளர்களுக்கும் இது பொருந்தும்தானே..? ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் பல தலைமுறைகளையும் சேர்த்து கடன்-காரர்களாக்கியிருக்கிறார்கள்’’ என்று பொதுவாக சொன்ன வெங்கடேஷ், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு வந்தார்.
‘‘தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நாட்டின் உற்பத்தியைப் பெருக்கி, வளமான வாழ்வுக்கு வழிகோலாமல், மிக்ஸியையும் கிரைண்டரையும் இலவசமாக வழங்கி, வாக்காளனை பிச்சைக்காரனாக வைத்திருக்கவே திட்டமிட்டிருக்கிறார்கள். ஏற்கனவே வழங்கப்பட்ட இலவச தொலைக்-காட்சிக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை செல-வழிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இந்த 5 ஆயிரம் கோடி ரூபாயை வைத்து காவிரி, தாமிரபரணி, சிறுவாணி போன்ற தமிழக நதிகளை இணைத்திருந்தால், தமிழ-கத்தின் பொருளாதாரம் மேம்பட்டிருக்கும். விவசாயம் காப்பாற்றப்பட்டு, நீண்டகால பொருளாதார மேம்பாடு கண்டிருக்கலாம். தமிழகத்தின் அறுபது சதவீத மக்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறையில் சென்னை பிரதான இடத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், அந்தத் துறையை தமிழகத்தின் பிற நகரங்களுக்கும் விரிவு-படுத்தும் எந்த திட்டமும் இல்லை.
உற்பத்திப் பெருக்கம், கட்டுமானம், கல்வி, தொழில், சாலை வசதி, போக்குவரத்து வசதி, உயர் கல்வி வசதி, தொழில் கல்வி, சுகாதார மேம்பாடு இப்படி எந்த விஷயத்திலும் அடிப்படை கட்டுமானங்களை ஏற்படுத்தி பலப்படுத்துவது குறித்தும், தொலை நோக்குப் பார்வையோடு யோசித்து அறிக்கை தயார் செய்யப்-படவில்லை.
மின்சாரம் தங்குதடையின்றி கிடைத்தால்தான் ஒரு மாநிலம் தொழில் வளர்ச்சியில் தன்னிறைவு பெற முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், நமது அரசியல்வாதிகளுக்கு மட்டும் அது தெரிவதில்லை. காரணம், மின் உற்பத்தியைப் பெருக்குவதால், அவர்களுக்கு லாபம் எதுவும் கிடைக்காது போல. இன்றைக்கு அரசியல்வாதிகள் அரசியலை வர்த்தகமாக்கி விட்டதன் விளைவுதான் இத்தனையும்.
எந்த வர்த்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் தலைபட ஆரம்பித்ததால், அந்நிய முதலீடும் உள்நாட்டு முதலீடும் தமிழகத்துக்கு வருவது குறைந்து விட்டது. எந்தத் தனியாரும் பயமில்லாமல் தொழில் செய்ய முடியவில்லை. கேட்டால், ‘ஹூண்டாய் கார் கம்பெனி இல்லையா?’ என்பார்கள். அதிகார மையத்தில் இருப்பவர்கள் கார் வர்த்தகத்தில் நுழையாத வரையில்தான் ஹூண்டாய் கார் தொழிற்சாலை பிரச்னையில்லாமல் இயங்கும். தமிழக மின் வாரியம் இன்றைக்கு கிட்டத்தட்ட செத்துவிட்டது. சுமார் 35,000 கோடி ரூபாய் வரையில் கடனில் இயங்குகிறதாம். அதை நிமிர்த்த ஒரு நடவடிக்கையும் இல்லை. அப்படி இருக்கும்போது மின் உற்பத்தி எப்படி நடக்கும்? இந்த லட்சணத்தில் இலவச மின்சாரத்தை தகுதியில்லாத பயனாளிகளுக்கெல்லாம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இலவசங்களை, தொடர்ந்து நாம் அனுமதிக்க... அனுமதிக்க... ஜனநாயகம் என்னும் அற்புதமான விஷயத்-தை நாம் இழந்து கொண்டே இருக்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டு, இலவசங்களை தவிர்த்தால் அவர்களுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது...’’ என்று முடித்தார் ஆடிட்டர் வெங்கடேஷ்.
‘‘இதுதான் தி.மு.க.வின் சாதனையா?’’ உறவுகளை இழந்த விஜயலட்சுமியின் சென்ட்டிமென்ட் பிரசாரம்
சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்போம் என தி.மு.க.வினர் புறப்பட்டிருக்கும் நிலையில்... ‘‘என் குடும்பத்தில் ஒருத்தர் கூட இல்லாமல் மொத்தபேரையும் குத்திக் குதறி கொன்று போட்டீர்களே..? இதுதான் உங்கள் சாதனையா?’’ என்று மேடை போட்டு பேசத் தயாராகிவிட்டார் விஜயலட்சுமி.
யார் இந்த விஜயலட்சுமி?
கடந்த வருடம் ஆகஸ்ட் 12&ம் தேதி சேலம் சீல்நாயக்கன்பட்டியில் 78 வயதான ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ், அவரது மனைவி சந்திரம்மாள், மகன் ரத்தினம், மருமகள் சந்தானலட்சுமி, பேரன் கௌதம், 12 வயதே ஆன பேத்தி விக்னேஸ்வரி ஆகியோர் சொத்துத் தகராறில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட குப்புராஜின் மகள்தான் இப்போது நியாயம் கேட்கப் புறப்பட்டிருக்கும் விஜயலட்சுமி.
சொத்துக்காக நடந்த இந்த கொலையில் தொடர்பிருப்பதாக அமைச்சர் வீரபாண்டியாரின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்ப்பட்டதும்... அவரை சிறைக்கே சென்று வீரபாண்டியார் பார்த்துவிட்டு வந்ததும் ஏற்கனவே சர்ச்சையைக் கிளப்பின.
இந்த நிலையில்... கொலை செய்யப்பட்ட குப்புராஜின் மகள் விஜயலட்சுமி, ஆரம்பம் முதலே ஆறு பேர் கொலை விஷயத்தில் தீவிர எதிர்ப்பு காட்டி வந்த பி.ஜே.பி. வக்கீல் மணிகண்டன் ஆகியோர் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
‘அடுத்தது அ.தி.மு.க-. ஆட்சிதான். உண்மையான குற்றவாளிகள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள்’ என்று ஜெயலலிதா தந்த நம்பிக்கையைத் தொடர்ந்து, ‘என் குடும்பத்துக்கு ஏற்பட்ட கொடூர சம்பவத்தின் பின்னணியை சேலத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சொல்வேன்’ என்று புறப்பட்டிருக்கிறார் விஜியலட்சுமி.
அவரிடம் பேசினோம்.
‘‘எங்கள் குடும்பத்து நபர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டதையும், அதில் சேலம் தி.மு.க. கட்சி ஆட்கள் தலையீடு இருப்பதையும் அம்மாவிடம் சொன்னபோது கலங்கிப் போனார். ‘உங்களுக்கு நியாயம் கிடைக்க என் ஆதரவு உறுதி’ என்று சொல்லி எங்களை ஆறுதல் படுத்தினார். இன்று நான் சொந்த, பந்தங்களை பலி கொடுத்துவிட்டு அநாதையாக நிற்பதற்கு தி.மு.க ஆட்சியும், அதன் ஆட்களும்தான் காரணம். அதற்காகத்தான் இத்தேர்தலில் தி.மு.க எதிர்ப்பு பிரசாரத்தை தொடங்கியுள்ளேன்.
அ.தி.மு.க. நிர்வாகிகள் என்னை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் சேலத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்வேன். அமைச்சர் வீரபாண்டியார் போட்டியிடும் சங்ககிரி தொகுதியில் என் குடும்பத்துக்கு நடந்த கொடுமையை அதிகமாக பரப்புரை செய்வேன். அம்மா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியிலும் தி.மு.க. ஆட்சியால் எனக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமை பற்றி பேசுவதற்கு தயாராக உள்ளேன். அம்மாவை சந்தித்துவிட்டு வந்ததையடுத்து எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு சேலம் மாவட்ட தி.மு.க.வினர்தான் காரணம்’’ என்றார் உருக்கமாக.
வக்கீல் மணிகண்டனிடம் பேசினோம்.
‘‘ எனக்கும் செல்போனில் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் அஞ்சப்போவதிலை. சேலத்தில் அமைச்சர் வீரபாண்டியார் பலப்பல கோடிக்கு மேல் சொத்து சேர்த்து உள்ளார். இதெல்லாம் நியாயமாக சேர்த்த சொத்தா? இல்லை. பல பேரை மிரட்டி சம்பாதித்த சொத்து. இதை அம்மா ஆணைப்படி தேர்தல் பிரசாரத்தில் மக்கள் மனதில் படும்படி சொல்வேன். சொத்துக்காக ஒரு குடும்பத்தையே கொலை செய்த தி.மு.க. நிர்வாகிகள் அட்டூழியத்தை எடுத்துச் சொல்வேன்.
ஆரம்பத்தில் சரியாக சென்றுகொண்டிருந்த கொலை வழக்கு, இன்று செயலிழந்துவிட்டது. சி.பி.சி.ஐ.டி. ஏதோ வழக்குத் தொடுத்து விட்டோமே என்ற நினைப்பில்தான் விசாரித்து வருகிறது. உண்மையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. சுருக்கமாகச் சொன்னால் அடாவடி, அராஜகம், ஏமாற்றுல், பித்தலாட்டம், ரவுடித்தனம் இதுதான் தி.மு.க. ஆட்சியில் சேலத்தில் நடந்தது. ஆறு பேர் கொலை வழக்கு பற்றிய அத்தனை கொடூரமான விஷயங்களையும் சேலம் தொகுதிக்குட்பட்ட மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்வேன். இதுதான் அம்மா எனக்களித்த வேலை.
தி.மு.க. கூட்டணி போட்டியிடும் அத்தனை தொகுதி-களிலும் படுதோல்வி அடைய எங்களது ‘ஆறு பேர் கொலை’ பிரசாரத்தை தீவிரப்படுத்தப் போகிறோம். அமைச்சர் வீரபாண்டியார் போட்டியிடும் சங்ககிரியில் இந்தக் கொடூரத்தைப் பற்றி வீட்டுக்கு வீடு எடுத்து சொல்லி அவரை தோல்வியடையச் செய்வோம்’’ என்றார் உறுதியாய்.
இதுபற்றி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வராஜிடம் பேசினோம். ‘‘ஏற்கனவே இந்த விஷயத்தில் நாங்கள் தெருவுக்குத் தெரு கூட்டம் போட்டு மக்களுக்கு சொல்லி வருகிறோம். இதைக்கண்டு பயந்துதான் அமைச்சர் வீரபாண்டியார் சங்ககிரிக்கு மாறிவிட்டார்’’ என்றார் உற்சாகமாய்.
அ.தி.மு.க. பிரசார வியூகத்தைப் பற்றி சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கத்திடம் பேசியபோது, ‘‘எதைப்பற்றியும் எங்களுக்கு கவலையில்லை. கலைஞரின் நல்லாட்சி திட்டங்கள் எங்களது வெற்றியை எப்பொழுதோ எளிதாக்கிவிட்டது’’ என்றார் போல்டாக.
ஆனாலும், ‘‘ஜாமீனில் வெளிவந்திருக்கும் பாரப்பட்டி சுரேஷை தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டங்களில் தலைகாட்ட வேண்டாம் என்று அமைச்சரே உத்தரவிட்டிருக்கிறார். பிரசாரத்தில் சுரேஷ் இருந்தால் அதை வைத்தே அ.தி.மு.க. எங்கள் பெயரை மேலும் டேமேஜ் ஆக்கிவிடும் என்பதால்தான் இந்த உத்தரவாம்’’ என்கிறார்கள் தி.மு.க.வினர்.
உடல்நிலையைக் கருதி சூறாவளி பிரசாரங்களை கலைஞர் குறைத்துவிட்ட நிலையில்... தி.மு.க.வுக்காக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் அதிரடி பிரசாரத்தில் இறங்குகிறார்.
இந்நிலையில்... ஸ்டாலினின் சூறாவளி பிரசாரத்தில் சேலம் மாவட்டம் விட்டுப்போனது இம்மாவட்ட தி.மு.க.வினரை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.
முரசொலியில் வெளியான துணை முதல்வரின் தேர்தல் பிரசார அட்டவணையின்படி... மார்ச் 24&ம் தேதி புதுக்கோட்டையில் தனது பிரசாரப் பயணத்தைத் துவக்கும் ஸ்டாலின், ஏப்ரல் 6&ம் தேதி நாமக்கல் வந்து சேலத்தைத் தொட்டுக் கூடப் பார்க்காமல் ஏப்ரல் 7&ம் தேதி தனது சொந்தத் தொகுதியான கொளத்தூருக்கு வந்துவிடுகிறார்.
இந்த அறிவிப்பைப் பார்த்த சேலம் தி.மு.க.வினர், ‘‘அமைச்சர் வீரபாண்டியாரோடு தளபதிக்கு ஏற்பட்டிருக்கும் தொடர் மோதல்களின் வெளிப்பாடுதான் இந்தப் புறக்கணிப்பு’’ என்கிறார்கள் விரிவாகவே விசாரித்தோம்.
‘‘மு.க.ஸ்டாலினை கட்சியில் முன்னிறுத்தும் போதெல்லாம் கலைஞரிடம் சீனியர் என்ற உரிமையோடு எதிர்ப்பு தெரிவித்தவர் வீரபாண்டியார். இதனால் ஆரம்பத்திலிருந்தே வீரபாண்டியாரை ஸ்டாலினுக்குப் பிடிக்காது.
இந்நிலையில் சேலம் மாவட்ட வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் விஷயத்தில் ஸ்டாலினை தவிர்த்துவிட்டு வீரபாண்டியாரே கலைஞரை நேரடியாக சந்தித்து விவாதித்திருக்கிறார். இது ஸ்டாலினுக்குப் பிடிக்காமல் போக அவரும் தனது கருத்துக்களை முதல்வரிடம் சொல்லிவிட்டார்.
இதற்கிடையில்... ஸ்டாலினுக்கு நெருங்கிய குணா சேலம் தெற்கு தொகுதியைக் கேட்டார். ஆனால், வேட்பாளர் பட்டியலில் குணாவுக்கு இடம் இல்லை. இதையடுத்து குணாவின் ஆதரவாளர்கள் தீக்குளிக்கும் போராட்டம் நடத்தும் அளவுக்குப் போய்விட்டனர்.
மேலும், வீரபாண்டியார் தனது ஆதரவாளரான சேலம் மேயர் ரேகா பிரியதர்ஷினிக்கு கெங்கவல்லி தொகுதியைக் கேட்டார். ஆனால் அவருக்கு கொடுக்கப்படாமல், சிட்டிங் எம்.எல்.ஏ. சின்னதுரைக்கே கொடுக்கப்பட்டுவிட்டது.
இப்படியாக வேட்பாளர்கள் தேர்வில் வீரபாண்டியார், மு.க. ஸ்டாலின் இருவருக்கும் மோதல்கள் வெடித்த நிலையில்தான்... தனது சுற்றுப் பயணத்தில் சேலத்தை தவிர்த்திருக்கிறார் ஸ்டாலின். கட்சியின் பொருளாளராக எல்லோருக்கும் பொதுவான தலைவராக இருக்கும் ஸ்டாலின், சேலம் மாவட்டத்தைப் புறக்கணிப்பது சரியானது அல்ல. இது தி.மு.க.வுக்கும் நல்லதல்ல. எனவே, துணை முதல்வர் தனது பிரசாரப் பயணத்திட்டத்தை மாற்றியமைப்பார் என நம்புகிறோம்’’ என்கின்றனர் தி.மு.க.வினர்.
நாமக்கல் வரை வரும் துணை முதல்வர் சேலத்துக்கு டாடா காட்டியது பற்றி பலரும் வருத்தப்பட.... பனமரத்துப்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்து தற்போது சேலம் மேற்கில் நிற்கும் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான வக்கீல் ராஜேந்திரன்தான் தீவிர புலம்பலில் இருக்கிறாராம்.
‘‘மு.க. ஸ்டாலினுக்காக வீரபாண்டியாரிடம் கூட மோதத் தயங்காதவர் பனமரத்துப் பட்டி ராஜேந்திரன். ஆனால் அவரையும் கைகழுவியதுதான் ஏன் என்று தெரியவில்லை’’ என்கிறார்கள் அவரது தரப்பினர்.
அழகிரி பெயரைச் சொல்லி ஆட்டம் போடும் அண்ணா! மிரள வைக்-கும் மதுரை ‘பி.ஆர்.ஓ.’
கட்சிக்காரர்கள் ஜெயலலிதாவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிடுவதை தி.மு.க.வினர் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், தி.மு.க. மத்திய அமைச்சரும் முதல்வரின் மகனுமாகிய மு.க.அழகிரியின் காலில்... அரசு ஊழியரான மதுரை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்
(பி.ஆர்.ஓ.) அண்ணா சாஷ்டாங்கமாக விழுந்து, அழகிரியின் காலைக் கட்டிப் பிடித்துப் புரளும் போட்டோ மதுரையில் புயலைக் கிளப்பி இருக்கிறது.
‘அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்து செயல்பட வேண்டிய பி.ஆர்.ஓ., தேர்தல் நேரத்தில் தென்மண்டல தி.மு.க.வின் தேர்தல் குழு தலைவரான அழகிரியின் காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கிடந்தால்... அவர் எப்படி தன் பணியை நேர்மையாக செய்வார்?’ என்று கடுமையான கண்டனங்களோடு கேள்வி எழுப்புகிறார்கள் பத்திரிகையாளர்களும், எதிர்க்கட்சிகளும்.
அழகிரியின் காலில் அண்ணா விழுந்து கிடக்கும் போட்டோவோடு செய்தி மக்கள் தொடர்-புத் துறைக்கும், தேர்தல் கமிஷனுக்கும் புகார்கள் பறக்கின்றன.
‘‘தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்
இரா. அண்ணா. கட்சிக்காரர்கள் மூலம் மு.க. அழகிரியிடம் அறிமுகமாகி, சீக்கிரத்தில் அவருடைய அன்பைப் பெற்றார் அண்ணா. இந்த அன்புக்குப் பரிசாக தேனி மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ.வாக சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாவை நியமிக்க சிபாரிசு செய்தார் அழகிரி. இதற்கு நன்றி தெரிவிப்பதற்காக மதுரையிலுள்ள அழகிரியின் வீட்டுக்கு சென்ற அண்ணா... தன்னுடைய விசுவாசத்தைக் காண்பிப்பதற்காகத்தான் அழகிரியின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கிடக்கிறார்...’’ என்று சொல்லி போட்டோவையும் கொடுத்து போட்டோவுக்கான குறிப்-பை-யும் கொடுத்தார்கள் பத்திரிகை நண்பர்கள் சிலர். அவர்களே தொடர்ந்து சொல்லும்போது,
‘‘தேனி மாவட்ட பி.ஆர்.ஓ.வாக இருந்த அண்ணா... அழகிரி செல்வாக்கில் விரைவிலேயே இந்து சமய அற-நிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனின் நேர்முக உதவியாளராக மாற்றப்பட்டார்.
அப்போது, ‘நான் மினிஸ்டர் பி.ஏ. பேசுறேன்...’ என்று சொல்லியே, துறையில் புகுந்து விளையாடுகிறார் என்று அண்ணா மீது அமைச்சரிடம் பல புகார்கள் சென்றன. உடனே, இதை மு.க. அழகியிரின் கவனத்துக்கு கொண்டு சென்றார் அமைச்சர் பெரியகருப்பன். தான் சிபாரிசு பண்ணிய ஆளாயிற்றே என யோசித்த அழகிரி, ‘அந்த ஆளை மதுரையில வச்சி என் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர்றேன்’ என்று சொல்லித்தான், ஐந்து மாதங்களுக்கு முன்பாக மதுரை மாவட்ட பி.ஆர்.ஓ. ஆக்கினார். ஆனால், அழகிரியின் நேரடி கண்காணிப்பில் இருந்த-போதும், அண்ணா மீதான குற்றச்சாட்டுக்கள் குறைய-வில்லை’’ என்று முடித்தார்கள்.
என்னென்ன புகார்கள் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் துருவினோம்.
‘‘அண்ணா இங்கு பி.ஆர்.ஓ.வாக வந்த உடனேயே வீட்டு வசதி வாரியத்தில் இவருக்கு நெருங்கிய ஒருத்தருக்கு வீடு ஒதுக்கீட்டிற்கு சிபாரிசு செய்ததில் பிரச்னை ஏற்பட்டது. தேவ நேய பாவாணர் நினைவு இல்லத்தை பராமரிக்க அவருடைய பேத்தி பரிபூரணத்திற்கு கலைஞர் கையால் பணி உத்தரவு ஆணை வழங்கப்பட்டது. ஆர்டர் வந்து ஐந்து மாதங்களாகியும் பரிபூரணத்துக்கு அதை வழங்கவே இல்லை, மதுரை பி.ஆர்.ஓ. அலுவலகத்தினர். நீண்ட நாள் நடையாக நடக்க விட்டு அவர்கள் கண்ணீர் மல்க கூக்குரலிட்ட பிறகுதான் அந்த ஆர்டரை கொடுத்தார்கள். பணம் இல்லாமல் இந்த அலுவலகத்தில் ஒரு வேலையும் நடக்காது.
அரசு வழங்கும் செய்தியாளர் அடையாள அடடை விஷயத்தில் அண்ணா பி.ஆர்.ஓ.வாக இல்லாமல், பக்கா தி.மு.க.காரராகத்தான் செயல்-பட்டிருக்கிறார். தனக்கு வேண்டிய ஆட்களுக்கு மட்டும் அதுவும் தேர்தல் செய்திகளை இவர் சொல்கிறபடி எழுதுபவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. அடையாள அட்டை கிடைக்காத சேட்டிலைட் டி.வி. நிருபர்கள், நேரடியாக செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனரிடம் செல்போனில் குமுறிவிட்டு... கலெக்டர் அலுவலகம் முன்பு பி.ஆர்.ஓ.வை கண்டித்து கோஷமிட்டார்கள். இதையடுத்து, கலெக்டரே பி.ஆர்.ஓ. அண்ணாவை அழைத்து, ‘இவர்களுக்கு ஏன் அடையாள அடடை வழங்கவில்லை? உடனே கொடுங்கள்’ என்று சொன்னார்.
ஆனால், அப்போதும் முடியாது என்று மறுத்துவிட்டார். கலெக்டர் கோபமாகி, ‘உடனே அடையாள அட்டை கொடுங்கள். இது என் உத்தரவு’ என்று கூறினார். கலெக்டர் உத்தரவையே உதறும் அளவுக்கு அண்ணா உதார் விடக் காரணம், தான் அழகிரிக்கு நெருக்கமானவன் என்று சொல்லித்தான். ‘நான் துப்பாக்கி லைசென்ஸ் வச்சிருக்குறவன். நான் நினைச்சா யாரையும் எங்கயும் மாத்துவேன்...’ என்று செய்தியாளர்களுக்கு முன்பாகவே வெயிட் காட்டுபவர்தான் அண்ணா’’ என்கின்றனர் சில அதிகாரிகள்.
மேலும் சில பத்திரிகையாளர்களோ, ‘‘மதுரை பி.ஆர்.ஓ. அலுவலம், தி.மு.க. கரை வேஷ்டி கட்டிய-வர்கள், வேறு துறையை சார்ந்த அதிகாரிகள், காண்ட்ராக்ட்காரர்கள் நடமாட்டம் என தி.மு.க. அமைச்சர் அலுவலகம் போல் செயல்படுகிறது. இந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் உள்ளே நுழைந்தால் முகம் கடுகடுக்க வெளியே அனுப்பி விடுகிறார். பத்திரிகையாளர் அறையில் இருந்த டி.வி., டெலிபோன் இவைகள் அனைத்தும் பி.ஆர்.ஓ. ரூமுக்கு போய் விட்டது. தேர்தல் நேரத்தில் தேர்தல் அலுவலர்கள், காவல் துறையினரை தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்-கிறோம்.
லேட்டஸ்ட்டாக மதுரை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடக்கும் அனைத்து சம்பவங்களையும், வாக்குசாவடிகளிலும் வீடியோ எடுக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதன்படி ஒரு நாளைக்கு ஒரு வீடியோவுக்கு 3,500 ரூபாய் நிர்ணயித்தது தேர்தல் கமிஷன். தனக்கு ரூபாய் 500 கமிஷன் என்ற அடிப்படையில் ஒட்டு மொத்த காண்ட்ராக்ட்டையும் தனக்கு வேண்டப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டார். இதையறிந்த மதுரை மாவட்ட வீடியோ கிராபர்கள் சங்கத்தினர், கலெக்டர் காமராஜை இதற்காக முற்றுகையிட்டனர். கலெக்டர்தான், விஷயம் பெரியதாகாமல் தடுக்க வீடியோ எடுக்கும் பொறுப்பை மாவட்ட வீடியோகிராபர்கள் சங்கத்தினருக்கு ஒப்படைத்தார். இதுபோல் இன்னும் பல சர்ச்சைகள் பி.ஆர்.ஓ., அண்ணாவைச் சுற்றிவருகின்றன...’’ என்கிறார்கள்.
இந்த சர்ச்சைகள் பற்றி அண்ணாவின் கருத்தை அறிய முயன்றோம். ‘அண்ணன் பிஸி’ என்றார்கள் அவரது அலுவலகத்தில்.
இது குறித்து செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் பாலுச்சாமியிடம் பேசினோம். ‘‘மதுரை பி.ஆர்.ஓ. அண்ணா மீது, அடையாள அட்டை வழங்-குவதில் பாரபட்சம் பார்க்கிறார் என்பன உள்ளிட்ட பல புகார்கள் வந்திருப்பதால் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேசியிருக்கிறேன். அது சம்பந்தமாக கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்...’’ என்றார் உறுதியோடு.
‘‘அண்ணன் பெயரைச் சொல்லி அண்ணா ஆடும் ஆட்டத்துக்கு அளவே இல்லாமப் போச்சு. இதனால அண்ணனுக்கே கெட்டபேரு ஏற்பட்டுடும் போல...’’ என்று தி.மு.க.வினரும் புலம்புவதுதான் ஹைலைட்!
Chennai: Scores of politicians contesting the assembly polls have concealed their links to trusts that control vast assets in educational institutions and land while filing their nomination papers. Going by the asset declarations of 2,773 candidates in the fray,electronics retail dealer H Vasanthakumar,the Congress candidate contesting in Nanguneri in Tirunelveli,is the richest with assets worth Rs 127 crore.But there are dozens of others who are worth a few hundred crores, said T Retna Pandian,a Right to Information activist. So,how did they manage to withhold such information in affidavits filed before the returning officers As per EC rules,a candidate needs to declare only personal assets (of candidate,spouse and dependents ) as described in the Income Tax Act, said retired civil servant MG Devasahayam,convener of Forum for Electoral Integrity. Under the Act,properties in the name of trusts are not considered assets owned by their promoters,said H Barman,director of investigation,income tax.This rule applies even if a candidate is the chairman of an educational trust,although it should be construed that the person enjoys financial gains by virtue of the post,said another IT official. Pandian said,Politicians form trusts to safeguard ill-gotten assets and evade paying income tax.Today,education is the biggest money spinner and politicians own most of the private educational institutions. Several ministers and leaders own engineering colleges in the state.Animal husbandry minister Pongalur N Palanisamy,contesting from Coimbatore,is the founder-chairman of Kalaignar Karunanidhi Institute of Technology in Coimbatore.His personal assets amount to Rs 15.66 crore as per the affidavit,but the trust owns other properties.The college building spans five lakh sq ft and is worth approximately Rs 50 crore. Food minister EV Velu,who has declared Rs 7.2 crore in assets,is the founder-chairman of Arunai Engineering College,whose building alone is worth more than Rs 90 crore.Apart from the college,Velus family runs a few other educational institutions.In the 2006 elections,Velu claimed his assets were worth Rs one lakh. IT minister Poongothai Aladi Aruna is the patron of Einstein College of Engineering in Tirunelveli district.Others have put close relatives in charge of their colleges. DMDK president Vijayakanth is founder of Sri Andal Alagar College of Engineering and his wife Premalatha is the chairperson.Though the college is worth a few hundred crores,his declared assets,including that of his wife,is only Rs 47 crore. TNCC president KV Thangkabalu,who is contesting from Mylapore,is the chairman of Thangavelu group of colleges which runs two engineering colleges and one management college.But he claims his and his wifes assets are worth about Rs 4 crore.His party colleague Peter Alphonse,also runs an engineering college and an arts and science college in Tirunelveli district.He is contesting from Kadayanallur segment. Activists say the EC needs to reconsider norms governing asset declaration.Politicians were the biggest beneficiaries of privatization of educational institutions.They also gained directly and indirectly from the real estate boom in the past decade.Henceforth,the EC should insist on all candidates declaring their direct and indirect holdings in all forms including trusts, noted Devasahayam.
RICH LESSONS
PONGALUR N PALANISAMY
Founder-chairman of Kalaignar Karunanidhi Institute of Technology,Coimbatore
EV VELU
Founder-chairman of Arunai Engineering College in Tiruvannamalai
POONGOTHAI ALADI ARUNA
Patron of Einstein College of Engineering
VIJAYAKANTH
Founder of Sri Andal Alagar College of Engineering,Chengelpet