
பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கிய ஐரோப்பியர் வருகை இனவிகிதாசாரத்தை மேலும் பன்முகப்படுத்தியது எனலாம். இலங்கையை படை எடுத்து கைப்பற்றிய போர்த்துகேய கடற்படை வீரர்கள் ஆண்களாக இருந்ததால், உள்நாட்டு பெண்களை திருமணம் செய்து பறங்கியர் என்ற புதிய இனத்தை உருவாக்கினர். போர்த்துக்கேயர்கள் ஆப்பிரிக்க அடிமைகளை தமது அமெரிக்க காலனிகளுக்கு கொண்டு சென்று குடியேற்றியது போல, இலங்கைக்கும் கொண்டு வந்தனர்.
இலங்கையின் மேற்குக் கரையில் புத்தளம் பகுதியில், விடுதலை செய்யப்பட்ட ஆப்பிரிக்க அடிமைகளின்வம்சாவளியினர், இப்போதும் வாழ்ந்து வருகின்றனர். ஆங்கிலேயரால் "காபிர்" என்று பெயரிடப்பட்ட இந்த ஆப்பிரிக்க இன மக்கள், போர்த்துகேய, ஆப்பிரிக்க மொழிச் சொற்கள் கலந்த கிரயோல் மொழி பேசுகின்றனர். மேலும் "பைலா" என்ற ஆப்பிரிக்க வேர்களைக் கொண்ட இசை நடனமும் அவர்களது கலாச்சார தனித்துவத்திற்கு சாட்சி.
அண்மையில் தன்னார்வ குழு ஒன்றின் அனுசரணையின் பேரில், இலங்கையின் வளர்ந்து வரும் இளம் ஊடகவியலாளர்கள் சிலர், தமது நாட்டின் ஆப்பிரிக்க வம்சாவளி பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர். அந்த வீடியோவை இந்தப் பதிவில் இணைத்துள்ளேன். மேலதிக தகவல்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள உசாத்துணை தொடுப்புகளை பார்வையிடலாம்.
உசாத்துணை தொடுப்புகள்:
Sri Lanka Kaffir people
Kaffirs in Sri Lanka - Descendants of enslaved Africans
__________________________________










இது நமது தொன்மையின் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள உதவுகிறது என்றால்... இதைவிட இன்னொரு மகிழ்ச்சித் தகவல், இந்த ஆய்வை மேற்கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எட்டிய விஞ்ஞானிகள் குழுவில் மிக முக்கியமானவரான கே.தங்கராஜ், ஒரு தமிழர் என்பதுதான்.
பொதுவாக மனித இனம் இன்றைய ஆப்ரிக்கா கண்டப் பகுதிகளில்தான் முதலில் உருவானது என்பதே இன்றுவரை ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஆப்ரிக்கக் கண்டத்தில் உருவான மனித இனம், உலகம் முழுவதும் எப்படி நகர்ந்துவந்தது என்பதுதான் முக்கியக் கேள்வி. ஆப்ரிக்காவிலிருந்து கடல்வழியாக நகர்தல், நில வழியாக நகர்தல் ஆகிய இரு வழிகளில்தான் ஆதிமனிதர்கள் மற்ற கண்டங்களுக்கு வந்திருக்க முடியும் என இருவேறு கருத்து நிலவி வந்தது. இந்த நிலையில்தான் எங்களுடைய ஆராய்ச்சி... அந்தமானிய ஆதிவாசிகள்தான் முதன்முதலில் ஆப்ரிக்காவிலிருந்து சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெற்குக் கடற்கரை வழியே, வெளியேறிய முதல் மக்கள் குழு என்ற மகத்தான உண்மையை பறைசாற்றியது. இந்த அந்தமானிய ஆதிவாசிகளுக்கும் இந்தியத் துணைக் கண்டத்தில் வசிக்கும் மற்ற மக்கள் இனங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?, இந்திய மண்ணில் மட்டும் வேறு எங்கும் இல்லாத 4,635 மனிதக் குழுக்கள் எப்படி உருவாயிற்று? என்பதை ஆராயத்தான் தற்போது, வெவ்வேறு மனிதக் குழுக்களை பரிசோதனை செய்தோம்.













