
டயானா மரியம் குரியன் என்ற நயன்தாராவை கிறிஸ்தவ மதத்திலிருந்து கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ள பிரபு தேவா குடும்பத்தினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது கிறிஸ்தவ அமைப்பு.
சினிமாவில் நடிப்பதற்காக நயன்தாரா என்ற பெயருடன் வந்தவர் டயானா மரியத்துக்கும், ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் மனைவியுடன் வசித்து வந்த இந்துவான பிரபுதேவாவுக்கும் காதல் ஏற்பட்டது.
நயன்தாராவுக்காக முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவகாரத்து செய்துள்ளார்.
பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரியசமாஜம் கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் முன்னிலையில் ஹோமம் வளர்த்து வேதமந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார். அவருக்கு இந்துவாக மாறியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
நயன்தாரா மதம் மாறிய தகவல் சொந்த ஊர் கிறிஸ்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உள்ளூர் கிறிஸ்தவ கோவிலில் விமர்சனங்கள் கிளம்பின. இதனால் நயன்தாரா பெற்றோரை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாராவை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பதாக கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும், ஆராதனை கிறிஸ்தவ பொறுப்பாளருமான இனியன் ஜான் கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் என்ற செய்தியை கேட்டபோது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் அடுத்தவரின் எந்த பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்பது வேதாமகத்தின் ஆழ்ந்த கருத்து.
அப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் அவற்றை அபகரிக்க நினைப்பதும் சாபத்தை விளைவிக்கக் கூடியது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது.
ஏற்கனவே ரம்லத் என்கிற இஸ்லாமிய சகோதரி பிரபுதேவாவை நம்பி மதம் மாறி திருமணம் செய்து கொண்டு தற்போது அவர் படுகிற வேதனைகளை நாட்டு மக்கள் நன்கறிவர்.
உபாகமம் 28-ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.
பைபிளின் சாபம், ரம்லத்தின் வேதனை, ஒட்டு மொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருக்கிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவாவும் குடும்பத்தினரும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றச்செயல் ஆகும்," என்று தெரிவித்துள்ளார்.





















ஆஸ்திரேலிய சிட்னி நகரில் டுடே எப்.எம். ரேடியோ செயல்படுகிறது. இதன் பொறுப்பாளர் கைலே சேண்டிலேண்ட்ஸ், இந்தியாவை பற்றியும் கங்கை நதியை பற்றியும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்று ஒலிபரப்பினார். அதில், குப்பை கூளம் கங்கை நதி என்று விமர்சனம் செய்யப்பட்டது. இந்தியர்கள் புனிதமாக கருதும் கங்கை நதியை தரக்குறைவாக விமர்சனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, நிகழ்ச்சி தயாரிப்பாளர் கைலே பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரான்சின் நிதியமைச்சராக இருந்த கிறிஸ்டியானே லாகர்டே(55) தற்போது சர்வதேச நிதியத்தின் தலைவராக உள்ளார்.




சோம்பேறித் தனம், பொறுப்பற்ற தன்மை, சுயநலம் ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ள பிரிட்டன் இளைய சமுதாயத்தை மீட்கவும், ஒழுக்கம் உள்ள சமுதாயமாக ஆக்கவும் இன்னும் சில வாரங்களில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும்' என பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.



அப்போது சீருடையில் இல்லாத போலீசாருக்கும், போதையில் இருந்த மாணவர்களுக்கு தள்ளு, முள்ளு ஏற்பட்டு சிலர் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார், வெளிநாட்டு மாணவர்களை விரட்டியடித்தனர். மாணவ, மாணவிகள் தாங்கள் வந்த வாகனங்களில் வெளியேறினர். 






































