New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: M Karunanidhi DMK Government Achievements


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: M Karunanidhi DMK Government Achievements
Permalink  
 


மேலமருதூர் நில மோசடிகள்

— கிருமி

இதுவரை தமிழகத்தில் நடந்த நில அபகரிப்பு மோசடிகளிலேயே மிகப்பெரியது, மேலமருதூர் நில மோசடிதான். தூத்துக்குடி அருகிலுள்ள மேலமருதூரில் கருணாநிதி குடும்பத்தினரின் பினாமிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஐந்தாயிரம் அல்லது ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோஸடல் எனர்ஜென் மின் நிறுவனத்தின் நில மோசடிகள் பற்றிய உண்மைகள் வெளியில் வரவே இல்லை. இரண்டாயிரத்து அறுநூறு ஏக்கருக்கும் மேல்  பரப்பளவுள்ள மாபெரும் நிலப்பரப்பை பத்துப் பன்னிரண்டடிக்கு மேல் உயரமுள்ள பிரம்மாண்டமான மதில் சுவர் கட்டி வளைத்துப் போட்டிருக்கிறது இந்த நிறுவனம்.

ஒரு (கீழக்கரை) முஸ்லீம் பெயரில் நிலங்களும், முக்கிய பங்குகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அரசல் புரசலாக இந்த மோசடிகள் குறித்து செய்திகள் வந்த போதிலும், பின்னணியில் உள்ள தயாநிதி மாறன் மற்றும் கருணாநிதி குடும்பத்தினரின் பங்களிப்பு பற்றி எதுவும் செய்திகள் வந்ததாகத் தெரியவில்லை. இவர்தான் இதில் முக்கிய பங்குதாரர் எனப்படுகிறது. இந்த நிறுவன விஷயத்தில், நிலங்கள் வாங்குவது போன்ற பூர்வாங்க வேலைகளையும், ரவுடித்தன அடக்குமுறையையும் குத்தகைக்கு எடுத்திருப்பவர் முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி.

மேலமருதூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களின் பல நூற்றுக்கணக்கான கிராம மக்களின் விவசாய விளை நிலங்கள் அப்படியே நிலத்தரகர்கள் மூலம் அடிமட்ட விலைக்கு வாங்கப்பட்டும், போலி பத்திர பதிவுகள் மூலமும் கோஸ்டல் எனர்ஜென் நிறுவனத்தின் கைக்கு போய் விட்டது. பலரது சம்மதம் இல்லாமலேயே நிலங்கள் மதில் சுவர் கட்டி வளைக்கப்பட்டு விட்டது. பலரும் நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கின்றனர். வழக்கு தொடுத்தவர்கள் மிரப்பட்டு வருகின்றனர். பலரும் உயிருக்கு பயந்து வாழுகின்றனர். சுற்றுப்புறத்தில் வசித்த மக்கள் வழக்கம் போல நிலங்களை ஏமாந்து போய் விற்று விட்டு, இப்போது அந்த நிறுவனத்திலேயே கூலி வேலை செய்து வருகின்றனர்.

நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கவிருக்கும் அந்த நிறுவனம் இயங்கத் தொடங்கும் போது அனேகமாக சுற்றுவட்டாரத்தில் எந்த விவசாய நிலமும் இருக்காது. அந்த நிறுவனம் மூலம் அந்த சுற்று வட்டாரத்தில் நிலத்தின் மதிப்பு எகிறிப்போனதால், பெரும்பாலான விவசாயிகள் பணத்துக்கு ஆசைப்பட்டு விளை நிலங்களை விற்று விட்டனர். அங்கு சுற்றி வரும் நிலத் தரகர்கள் ஒரு விவசாயியையும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. ‘நிலத்தை உடனே விற்று விடு, இல்லாவிடில் போர்ஜரி மூலம் நிலத்தை அபகரித்து விடுவார்கள் / விடுவோம்’ என்று பயமுறுத்தி, மிரட்டி நிலங்களை அபகரித்து விடுகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆட்களை வைத்து மிரட்டி பலரிடம் நிலத்தை அபகரித்துள்ளார். ஏக்கர் இரண்டு லட்சத்திற்கு பேசி விட்டு பத்திரப் பதிவின் போது கையெழுத்து போட்டுமுடிந்த பின் பணம் தருவதாகப் பேசி பத்தாயிரம் மட்டும் முன் பணம் தந்து விடுவர். பத்திரப்பதிவு முடிந்த உடன், அங்கேயே ஆட்களை வைத்து மிரட்டி, ‘உயிரோடு ஊர் போய்ச் சேர்’ என்று புத்திமதி சொல்லி (?) பத்திரமாக வழியனுப்பி வைத்து விடுவர்.

மேலமருதூருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் கிட்டத்தட்ட ஐம்பது அல்லது நூறு ஏக்கர் நிலத்தை இப்படி மிரட்டலுக்கு பயந்து ஐ.பெரியசாமியிடம் தாரை வார்த்து ஏமாந்திருக்கிறார், பாவம். பெரும்புள்ளியான அவருக்கே இந்தக்கதி என்றால், சாதாரண சம்சாரிகள் எப்படி ஏமாந்திருப்பார்கள்!

வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்ட எவரும் இதையெல்லாம் பற்றி மூச்சு கூட விடவில்லை, காரணம்?

ஸ்டாலின் ஒரு வருடம் முன்பே தூத்துக்குடி வந்த போது இரண்டு மூன்று தடவை இந்த நிறுவனத்தினுள் விசிட் அடித்து விட்டார். வேலை வெட்டி இல்லாமல் சும்மா சுற்றிப்பார்க்கவா போயிருப்பார்?

நக்கீரன், ஜூ.வி. குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற ஏதோ ஒரு பத்திரிகையில் மூன்றாண்டுகளுக்கு முன் இது பற்றி பரபரப்பாக சிறிது எழுதினார்கள். அப்புறம் அவர்களை ‘கவனித்த’ பின், அந்த சந்தடியும் அடங்கி விட்டது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின் அறிவித்த நில மோசடி தனிப்பிரிவில் கட்டுக்கட்டாக புகார்கள் குவிந்துள்ளன. காவல் நிலையங்களிலேயே நிலத்தை பறிகொடுத்தவர்களுக்கும் கோஸ்டல் எனர்ஜெனுக்கும் இடையில் காவல் அதிகாரிகளே கட்டைப் பஞ்சாயத்து அல்லது புரோக்கர் வேலை செய்கின்றனர். அவர்களுக்கும் அதில் கமிஷன், நாடு உருப்பட்ட மாதிரி தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_11_2011_013_016.jpg durai murugan



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

16_12_2011_003_019.jpg job scam



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

16_12_2011_001_065.jpg job exchange scam



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20111216a_004101012.jpg eb power



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

19_12_2011_152_018.jpg flood relef to lakes



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_12_2011_004_015.jpg desalination plant



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_12_2011_005_003.jpg daya cyber park



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_12_2011_004_016.jpg eb balances



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20111228c_018101007.jpg tambaram water scam



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_12_2011_002_008.jpg EB pOLI



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

01_01_2012_153_008.jpg TNHB Sondtha veedu



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

03_01_2012_010_030.jpg Madurai Engineers



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

03_01_2012_010_009.jpg Agri



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

03_01_2012_152_003.jpg Thiruvallur lake beds



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

04_01_2012_001_030.jpg ips tnhb



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

05_01_2012_012_018.jpg complain against mk stalin'



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

05_01_2012_004_006.jpg TNHB



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

20120105a_004101009.jpg   chennai



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

20120106c_013101013.jpg jobs scam



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

06_01_2012_006_013.jpg chennai road contractors



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

தகவல் அறிவது நமது உரிமை!மு.க.வுக்கும் நீதிமன்றம் குட்டு!

 
right+to+know.jpg
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி தினமணி நாளிதழில் வெளியாகி இருந்த இரண்டு தலையங்கங்களைத் தொட்டு எழுதியிருந்த பதிவுகள் இவை. ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றின்,உருப்படியான சாதனை என்று ஒன்றிரண்டைச் சொல்ல முடியுமானால்அதில் இந்தத்தகவல் அறியும் உரிமைச் சட்டமும் ஒன்று. ஆனால்,வெளிப்படையான நிர்வாகம்சரியான விவரங்கள் ஊழல் செய்யும் புள்ளிகளுக்கு இடைஞ்சலாகத் தான்இருக்கும் என்பது புரிய வந்ததுமேஇந்தச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளைக் காங்கிரஸ் செய்ய ஆரம்பித்துவிட்டது.
 
KANINTHA+NERAM.jpg
தமிழ்நாட்டில் அன்றைக்கு ஆட்சி செய்து கொண்டிருந்த கருணாநிதி சட்டத்தை வளைப்பதிலும்,தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதிலும் எப்படிப்பட்ட கில்லாடி என்பது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் வெளியாகி இருக்கிறது.ஜெயலலிதா தொடர்ந்து நீதிமன்றங்களில் குட்டு வாங்கிக் கொண்டிருப்பதைப் பறைசாற்ற ஆயிரம் ஊடகங்கள்பதிவுகள் இருக்கின்றன. தாத்தா செய்திருக்கும் சாதனையை அவை கண்டு கொள்வதில்லை என்பதில் எனக்குஏகத்துக்குமே வருத்தமுண்டு.எமெர்ஜென்சி காலத்தில் உச்சநீதிமன்றத்தில் எச் ஆர் கண்ணா ஒருவர் தவிரநீதிபதிகளாக இருந்தவர்களே பயந்துவளைந்து கொடுத்தார்கள் என்பது பதிவு செய்யப்பட்டிருப்பது போலதலீவர் கலைஞர் செய்தது பதிவு செய்யப்படவில்லை!
நேர்மையான நீதிபதி என்று வெகுஜன ஊடகங்களால் சித்தரிக்கப் பட்டவர்களுமே கூடகலைஞர்ஒதுக்கீடு செய்த வீட்டுமனைவீடுகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் (அதிக விவரங்கள் வேண்டுவோர் http://savukku.net  தளத்தில் போய்ப் பார்த்துக் கொள்ளலாம்)மாநிலத்தில் இருந்த நீதி மன்றங்கள் அந்த கால கட்டத்தில் அரசுக்கு எதிராக ஒரு சிறு முணுமுணுப்பைக் கூட  எழுப்ப முனையவில்லை என்பதும் வெளியே தெரிந்தாலும் அதிகம் கவனிக்கப்படாத அல்லது கண்டுகொள்ளப் படாமல் விடப்பட்ட விஷயம் தான்!

ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட நீதிபதி பி டி தினகரன்ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் தலைமை நீதிபதி கே ஜி பாலக்ருஷ்ணன்  முதலானோர் அன்றைய அரசின் கனிவான பார்வையைப் பெற்றவர்கள் என்பதும்இந்தநேரம் பார்த்து நினைவுக்கு வந்து தொலைக்கிறது. மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்க விவகாரத்தில் ஜெய லலிதா உச்ச நீதிமன்றத்தின் குட்டை நேற்றைக்கு வலுவில் வாங்கி இருக்கிறார். சென்னை நீதிமன்றம் தொடர்ந்து குட்டிக் கொண்டு தான் இருக்கிறது. இன்னமும் குட்டும்!அது தம்பட்டம் அடிக்கப் படுகிற அளவுக்குக் கருணாநிதி வாங்கிய குட்டுக்களையும் பார்க்க வேண்டாமோ?இப்போது கருணாநிதி அல்லது ஜெயலலிதா வாங்கிய குட்டு அல்ல விஷயம்!
இந்த தேசத்தில் ஊழல் செய்கிற அரசியல்வாதிகள்,அவர்களுக்குத் துணைபோகிற நிர்வாகம்நீதித்துறை,ஊடகங்கள் என்று ஜன நாயகத்தின் தூண்களாகச்சொல்லப் படுகிற ஒவ்வொன்றுமே எப்படி இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்காகவும்!
ஜூனியர் விகடனில் இன்றைக்கு வெளியாகி இருக்குமொரு  செய்திக் கட்டுரைஜூவிக்கு நன்றியுடன்!
  
தீர்ப்பில் தள்ளாடும் தகவல் ஆணையம்!

ஆணையத்தின் மீது அடுக்கடுக்காய் வழக்குகள்!
 
 
 
'தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட மூன்று தகவல் ஆணையர்கள் நியமனம் செல்லாது’ என்று அதிர்ச்சித் தீர்ப்பு அளித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். 
அரசு அலுவலங்களில் ஒளிவுமறைவு இல்லாத செயல்பாடும், லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகமும் நடக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
இந்தச் சட்டத்தின்படி தகவல்கள் கேட்டுக் கிடைக்காமல் போனால், தகவல் ஆணையங்களில் மேல்முறையீடு செய்ய லாம். இதற்காகவே இந்திய அளவில் மத்தியத் தகவல் ஆணையமும் மாநிலத் தகவல் ஆணையங்களும் செயல்பட்டு வருகின்றன.
தகவல் தரவில்லை என்றால் அதிகபட்சமாக Rs25,000 அபராதம் விதிக்கப்படும். இத்தகைய அதிகாரம் கொண்டது தகவல் ஆணையங்கள்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் தகவல் ஆணையத்துக்கு, ஏ.ராமையா, சி.மனோகரன், ஏ.ஆறுமுக நயினார் ஆகிய மூவர் நியமிக்கப்பட்டனர். சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு வந்த அன்றுதான் இதற்கான உத்தரவு வெளியானது. இந்த நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர் எஸ்.விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'இந்த நியமனம் செல்லாது’ என்றது.
''தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த நாளில், இந்த நியமனம் நடந்துள்ளது. மாநில முதல்வர், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் முதல்வரால் நியமிக்கப்பட்ட அமைச்சர் ஒருவர்அடங்கிய குழுதான், மாநிலத் தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்யும். இந்த நியமனத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் கருத்தைக் கேட்காமலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளைப் பின்பற்றாமலும் நியமனம் செய்யப்பட்டுள்ளது'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தகவல் அறியும் உரிமை ஆர்வலரான கோபால கிருஷ்ணனிடம் பேசினோம். ''தகவல் ஆணையங்கள், தேர்தல் கமிஷனைப் போலவே தன்னாட்சி அதிகாரம்கொண்ட ஓர் அமைப்பு. அறிவியல், சட்டம், இதழியல், சமூக சேவை, நிர்வாகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களைத்தான் தகவல் ஆணையர்களாக நியமிக்க வேண்டும். ஆனால், இங்கே அரசியல் புகுந்து விளை யாடுகிறது.வெளிப்படையான ஊழல் அற்ற அமைப்பு உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் தகவல் அறியும் சட்டமே கொண்டுவரப் பட்டது. ஆனால், இதன் ஆணையர்கள் நியமனம்கூட வெளிப்படையாக நடைபெறவில்லை. ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள்தான் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். 
கருணாநிதியின் செயலாளராக இருந்த டி.ஆர்.ராமசாமி, தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த ஸ்ரீபதி போன்றவர்கள் தகவல் ஆணையர்களாக இருக்கிறார்கள். 
2008-ல் தகவல் ஆணையர்களாக சாரதா நம்பி ஆரூரான், டி.சீனிவாசன், டி.ஆர்.ராமசாமி மற்றும் பெருமாள்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்துக்கான கூட்டம் 11.4.2008-ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டம் நடப்பதற்கு 10 நாட்களுக்குள்தான் டி.ஆர்.ராமசாமியும் பெருமாள்சாமியும் விண்ணப்பிக்கிறார்கள். டி.சீனிவாசன், சாரதாநம்பி ஆரூரான் ஆகியோர் முதல் நாள்தான் விண்ணப்பித்தார்கள். அவர்களுக்குப் பதவி தர வேண்டும் என்பதற்காகவே, அவசர அவசரமாக விண்ணப்பங்களை அரசு வாங்கியது. ஒரு வழக்கு தொடர்பாக சீனிவாசன் என்னிடம் பேசிய போது, 'தகவல் ஆணையர் பதவிக்காக நான் விண்ணப்பிக்கவே இல்லை. டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிக்குத்தான் விண்ணப்பித்தேன். அந்த பயோ-டேட்டாவை வைத்து என்னைத் தேர்வு செய்துவிட்டார்கள். பெருமாள் சாமியும், சாரதாநம்பி ஆரூரானும் வேறு பதவிகளுக்குத்தான் விண்ணப்பம் கொடுத்தார்கள்’ என்றும் சொன்னார்.
இப்படிப்பட்டவர்களை தகவல் ஆணையத்தில் நியமித்தால், அங்கே வரும் மேல்முறையீட்டு மனுக்களை எப்படி விசாரிப்பார்கள். இனி மேலாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அறிந்தவர்களையும், சமூக ஆர்வலர்களையும் நியமிக்க வேண்டும்'' என்றார்.  
இந்த வழக்கை, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். 'தகவல் ஆணையர் தேர்வு நடவடிக்கைகள் தொடர்பான கோப்பு ஒரு நாளிலேயே பிரிவு அலுவலர் தொடங்கி முதல்வர் வரை சென்றிருக்கிறது. ஆணையர்கள் தேர்வுக்கான கூட்டம் 1.3.11 அன்று நடந்தது. எதிர்க் கட்சித் தலைவரின் (ஜெயலலிதா) ஆலோசனையைப் பெறவில்லை. கூட்டத்தை வேறு தேதிக்குத் தள்ளிவைக்கும்படி எதிர்க் கட்சித் தலைவர் கருத்துத் தெரிவித்து இருந்தார். ஆனாலும் ஆணையர்கள் நியமனம் செய்து அன்றே அதற்கான ஆணையை வெளியிட்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைக் கருத்தில்கொள்ளாமல் அன்றே கவர்னரின் ஒப்புதலையும் பெற்றுள்ளனர். இந்தப் பதவிக்கு விண்ணப்பம் செய்யும்போது, ராமையா அரசுப் பதவியில் இருந்தார் என்றும் தேர்வுக் கூட்டம் நடந்த அன்றுதான் அவருக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது என்றும் மனுதாரர் கூறினார். இப்படி நடந்திருப்பது சட்டப்படி குற்றம். இதனை எல்லாம் பார்க்கும்போது, மூன்று பேர் நியமனத்திலும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை எனவே, மூன்று பேரின் நியமன உத்தரவு சட்ட விரோதமாகவும், நடைமுறைக்கு முரணாகவும் உள்ளது’ என்று தீர்ப்பு வழங்கினார்கள்.
''தகவல் அறியும் சட்டத்தில் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உள்ள விதி முறைகள்தான் இந்த மூன்று பேர் நியமனத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது. நியமனத்தை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, மாறிவிட்ட அரசுகளின் நிலைப்பாட்டைப் பார்க்கக் கூடாது'' என்கிறார்கள் இந்த மூன்று பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்.
தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் தகவல்களைப் பெறுவதைவிட... நல்ல ஆணையர்களைப் பெறுவது கஷ்டமாகி விட்டது!
எம்.பரக்கத் அலி
ஸ்ரீபதிக்கு சிக்கல் இல்லை!
தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையராக கடந்த 2010-ல் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'அவருடைய நியமனம் செல்லும்’ என்றது சென்னை உயர் நீதிமன்றம். மேலும், 'ஸ்ரீபதி தேர்வுக்காக நடந்த கூட்டத்திற்கு எதிர்க் கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களைக் கூறி அவர் கலந்துகொள்ளவில்லை. எனவே, அவர் இல்லாமல் எடுத்த முடிவை சட்ட விரோதம் என்று குற்றம் சாட்ட முடியாது’ என்றும் சொன்னது.

சரி, முகவுக்கு எங்கே நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது? 
குறைந்தபட்சம், முக பெயராவது இந்தத் தீர்ப்பில் இருக்கிறதா என்று கேட்டாவது பின்னூட்டம் வரும் என்று காத்திருந்தேன்! எவரும் அந்தக் கேள்வியை எழுப்பிக் கொண்டதாகத் தெரியவில்லை! போகட்டும், இந்தக் கேள்விக்கு விடை வழக்கைத் தாக்கல் செய்த வழக்கறிஞர் எஸ் விஜயலட்சுமியின் மனுவில் இருக்கிறது. மனுவின் முழுவிவரம் இந்த செய்திக் கட்டுரையில் சொல்லப்படாவிட்டாலும், அதன் சாராம்சத்தைRTI activist கோபாலக்ருஷ்ணன் விளக்கியிருக்கும் பகுதியிலேயே இருக்கிறது. 

இதே மாதிரித்தான், TNPSC குழுத்தலைவர் உறுப்பினர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள், அவர்கள் செய்த முறைகேடுகளை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் நடத்தப்பட்ட சோதனைகளும் காட்டின. ஆனால்,அது வழக்கு நடந்து தீர்ப்பு வரும் வரை, தீர்மானமான முடிவாகச் சொல்ல முடியாது என்பது தான் வித்தியாசம்.

பதிவிடுகிறவர் தான் சொல்ல வந்ததைத் தெளிவாக சொல்லியிருக்கிறாரா என்பதும்,சொன்ன விஷயம் சரிதானா என்பதும் ஒரு ஆரோக்கியமான உரையாடலில் மட்டுமே சாத்தியம்!ஆரோக்கியமான விவாதங்களை வரவேற்கிறேன்.பின்னூட்டப்பெட்டி மேல் இருப்பதையும் படித்து விட்டு அதன் பிறகு பின்னூட்டங்களில் உங்கள் மனதில் படுவதை சொல்லுங்கள்!


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

மானாட மயிலாட மகளுக்கு வரவேற்பு! தளபதீக்கு........?

 
thalaba+thee.jpg
ரைமிங் இருந்தாப் போதாதே! டைமிங் கொஞ்சம் சரியா இல்லையே!
 
"எனது மகன் உதயநிதி ஸ்டாலின் சினிமா கம்பெனிக்காக வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் அந்த வீட்டை எடுத்துள்ளார். அந்த வீட்டில் எனது மகளும், மருமகனும் குடியிருக்கிறார்கள். இதுதவிர வேறு எதுவும் இல்லை. இதுதான் உண்மை. ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு மிரட்டியோ, அச்சுறுத்தியோ காவல்துறையை பயன்படுத்தி தவறான புகாரை பெற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார்கள். எப்.ஐ.ஆர். பதிவு செய்தால் கைது செய்ய வேண்டாமா? ஆனால் இதுவரை கைது செய்யவில்லை. என்னை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்பதற்காகத்தான் வந்தேன். அதை கேட்டதும் கூடுதல் டி.ஜி.பி.யால் பதில் சொல்ல முடியவில்லை""

என்னதான் கூட்டத்தோடு இருப்பதால் இப்படி தைரியமாகப் பதில் சொல்வது போல இருந்தாலும் "தளபதீ" ஸ்டாலினுக்குக் கவலைகள் நிறையவே உள்ளூர இருக்கத்தான் செய்கிறதென்பது வெளிப்படை யாகவே தெரிந்தது.மதுரையில் ஆட்டம் போட்ட அஞ்சா நெஞ்சை வெறும் கோழிக் குஞ்சாக ஒரே அமுக்காக அமுக்கி வைத்திருப்பது போலத் தானும் ஆகிவிடுவோமோ, இத்தனை காலமாக அரசியலில் இருந்தும் தந்தைக்கு அப்புறம் அரசியலில் வாரிசாக ஆக முடியாமலேயே போய்விடுமோ என்று ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்பது என்னமோ உண்மை.

மானாட மயிலாட மகளுக்கு வரவேற்பு! தளபதீக்கு........?
 
பக்கத்து வீடு... பாய்ந்த வழக்கு!

 
நில மோசடி வழக்குகளில் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பலர் ஜாமீனில்  வீடு திரும்பி விட்டனர். இந்த நிலையில், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது ஒரு அபகரிப்புப் புகார் கிளம்பி இருக்கவே, டென்ஷனில் துடிக்கிறது தி.மு.க.
 கடந்த 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு  ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த 65வயதான சேஷாத்திரி குமார் என்பவர் வந்து ஒரு புகார் கொடுத்தார்.

ந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இதுதான்.''ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள எங்களது குடும்ப இடத்தில் எனது பங்குக்குக் கிடைத்த இரண்டரை கிரவுண்டில் நான் வீடு கட்டி வசித்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு, 8-ஏ, சித்தரஞ்சன் சாலை, ஆழ்வார்பேட்டை என்ற முகவரியில் உள்ள அந்த வீட்டை தேவி பழனிச்சாமி என்பவருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் என்று பேசி மாத வாடகைக்கு விட்டேன். இது தவிர மீதி உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான ஆறு கிரவுண்ட் இடத்தை மு.க.ஸ்டாலின் வாங்கி இருந்தார். அந்த இடத்தில் வீடு கட்டி ஸ்டாலின் குடிவந்ததில் இருந்து, எனது வீட்டையும் வாங்கி தனது வீட்டை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டார். 
அதற்காக என் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவரை மிரட்டி, காலி செய்ய வைத்தனர். சுப்பா ரெட்டி, ராஜாசங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் அடியாட்களுடன் வந்து, ஐதராபாத்தைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டி என்பவருக்கு, 5.5 கோடி ரூபாய்க்கு என் வீட்டை நான் விற்றதாக, பத்திரப் பதிவு செய்து கொண்டனர். அந்தத் தொகையை டி.டி-யாகக் கொடுத்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு என் வீட்டுக்கு வந்த ஸ்ரீனிவாசன், ஒரு கோடியே 15 லட்சம் பணம் கொடுத்தார். அந்தப் பணமும் கணக்கில் வராத பணம் என்றும், இதை வெளியில் சொன்னால் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் மூலமாக வருமான வரி சோதனை நடத்துவோம் என்றும் மிரட்டினார். அதோடு, எட்டு லட்சம் ரூபாயை தனக்கான கமிஷன் என்றும், அவரே எடுத்துக் கொண்டார். இப்போது அந்த வீடு, மாத வாடகை 20,000 ரூபாய் என்று ஸ்டாலின் மகன் உதயநிதி பெயருக்கு ஒப்பந்தம் செய்யப்​பட்டு, அதில் ஸ்டாலின் மகள் செந்தாமரை குடி இருக்கிறார்.

து தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சிலரிடம் பேசினேன். அந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டதும், என் வீட்டுக்கு வருமான வரி அதிகாரிகளை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் என்​னிடம் வாக்குமூலம் எழுதி வாங்கி உள்ளனர். என் வீட்டை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி தனது பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன், என் வீட்டுக்கு வந்து கறுப்புப் பணத்தை வலுக்கட்டாயமாக கொடுத்து வருமான வரிச் சோதனை செய்ய வைத்து, எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் வேணுகோபால் ரெட்டி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜா சங்கர், சுப்பா ரெட்டி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, என் வீட்டை மீட்டுத் தருமாறும், எனக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பு தரும்படியும் மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்''  என்று விளக்கி இருக்கிறார் சேஷாத்திரி குமார். 
ந்தப் புகார் குறித்து, மத்தியக் குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் இந்தப் புகாரில் உண்மை இருக்கிறதா? என்று விசாரிக்க உளவுத்துறையில் உள்ள நம்பிக்கையானஅதிகாரி ஒருவருக்கு தோட்டத்தில் இருந்து உத்தரவு வந்ததாம். புகார் கொடுத்து இருந்த சேஷாத்திரி குமாரை தனது அலுவலத்துக்கு வரவழைத்த அந்த உளவு அதிகாரி, குமாரிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரித்து இருக்கிறார். அவர் வைத்து இருந்த ஆவணங்களைத் தீவிரமாக ஆராய்ந்து இருக்கிறார். அதன்பிறகுதான்,  1-ம் தேதி காலையில் புகார்தாரர் குமாரை விசாரணைக்கு அழைத்து இருக்கிறது, 
சென்னை மத்தியக் குற்றப் பிரிவு. அன்று காலை 10 மணியில் இருந்து மதியம் மணி வரை குமாரிடம் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். இதனால், எந்த நேரத்திலும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸ் அதிகாரிகள் ஒன்றுக்கு பல முறை, குமார் கொடுத்து இருந்த ஆவணங்களை ஆராய்ந்தனர். அதன் பிறகு, அன்று இரவு 8 மணிக்கு ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, வேணுகோபால் ரெட்டி, சுப்பா ரெட்டி, ராஜா சங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
 
இப்படிப்போகிறது, இன்றைய ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரை! 

இந்த நில அபகரிப்பு விஷயமாக ஸ்டாலின் மீது நடவடிக்கை வரலாம் என்று தகவல்கள் ஏற்கெனெவே வெளிவந்ததுதான்! என்ன, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது மட்டும் தான் தாமதம்.அம்மா போலீஸ் இதை எப்படி கையாளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
அரசு இயந்திரத்தின் ஒரு கணிசமான பகுதி அம்மாவின் கட்டுப் பாட்டில் இல்லை என்பதை தா.கிருஷ்ணன் கொலைவழக்கிலேயே பார்க்க முடிந்தது. அதே போல, அ' னாவின் ஆட்கள் குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் உள்ளே போன வேகத்திலேயே வெளியே வந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், ஸ்டாலின் ஏடிஜிபி ராஜேந்திரனிடம் வீராவேசமாக வசனம் பேசிவிட்டு வந்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லைதான்!
 
தளபதீ கவலைப்பட இதை விட வேறு முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன!  
kani.jpg
தயாநிதி மாறன் திறந்தவாய் மூடாமல் அப்படி என்னத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்?
kani1.jpg

கட் அவுட், தாரை தப்பட்டை, வரவேற்பு  எல்லாம் போட்டியில் நானும் இருக்கிறேன் என்று சொல்வதற்காகத்தான்!
kani+at+cit+nagar+residence.jpg
இன்னிக்கு, இந்த நிமிடத்தில் மட்டும் மகளே நான் உன்னோடு! என்னால முடிஞ்சது அவ்வளவுதான்!


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............

 
உண்மை, உண்மை, உண்மை, 
 
கடந்த 2010 டிசம்பர் 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

images?q=tbn:ANd9GcTZrcmQAOPIqlHcB5qILwwoyC-xZHxdiQdI60ahTm6OU3rzvg53அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால்
அதைவிட முக்கியமானது உணவுஉடைஉறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவாகுறிப்பாகவிவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

images?q=tbn:ANd9GcQozXfbqoiwPTEq6RBk1QP3Ng71giiarF9pDrvMwD78q-dKrw_4rAதுறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம்.

இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம்,கல்விமும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

images?q=tbn:ANd9GcQni9YfurKFM27KO8XdWJLKNaWZgdfarL8Fco442OKtlveEoZx2vgவிலைவாசி உயர்வுஎரிபொருள் விலை உயர்வுகுடிநீர் பற்றாக்குறைலஞ்சம்,ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்?எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும்மரியாதையும்அன்பும் உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும் என்று நீண்டது  அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு

images?q=tbn:ANd9GcTRAhzJ8puMVT-AXObToiIItIApZsgClXgxcbaaSzMDoXbTDH-Yv1qQvDYMநான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலைநாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

images?q=tbn:ANd9GcQsyOjwxLtsm6GELfbObBXKgyAsesb3c_2rKlOQw-iqSSgItk8F_wசாராயத்தை குடிச்சுட்டுஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.

images?q=tbn:ANd9GcTgypxvQbMfupdfK-UYVxIKYc8x5zpQTte9ae7LVsN-ZcMRGItStd5VGyEYUQகனத்த இதயத்தோடும்வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து  வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு  முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.



அந்தக் கடிதத்தில் கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை.. 
இலவச கலர் டிவியை முதல்வருக்கே திருப்பிக் கொடுத்து அவருக்கு கொடுத்த முதல் அடி இது ......................


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

20120108c_015101012.jpg evp

2233875.JPG evp world



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

22640953.JPG veerapandiar 20 c



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Pc0021000.jpg mk stalin05_01_2012_012_018.jpg complain against mk stalin'

20120108a_010101004.jpg mk stalin



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

மாற்றுப் பாதையில் சேது திட்டம் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஆணை

Friday  06  January  2012  11:04:25 AM 

 

சேது கால்வாய் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது தொடர்பாக, சுற்றுச்சூழல் நிபுணர் ராஜேந்திர பச்செüரி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வறிக்கையை இரண்டு மாதங்களில் தாக்கல் செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 ராமர் பாலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தனுஷ்கோடி வழியாக அல்லது மாற்றுப் பாதையில் இந்தத் திட்டத்தை ஆராய, சுற்றுச்சூழல் நிபுணர் ராஜேந்திர பச்செüரி தலைமையில் ஆறு பேரைக் கொண்ட குழுவைப் பிரதமர் மன்மோகன் சிங் 2010-ம் ஆண்டு அமைத்தார்.

 அந்தக் குழு ஒராண்டு காலமாக அப்பகுதியில் பருவ நிலை மாற்றத்துக்கு ஏற்ப ஆய்வு செய்து அறிக்கையை தயாரித்துள்ளது. 2011 டிசம்பர் மாதம் மத்திய அரசிடம் அந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 இந்நிலையில் சேது கால்வாய் குறித்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் எச்.எல். தத், சி.கே. பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு வியாழக்கிழமை வந்தது. ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய அரசு சார்பில் அப்போது அவகாசம் கேட்கப்பட்டது.

 அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், எட்டு வாரங்களில் பச்செüரியின் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 23-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

 2005-ல் தொடங்கப்பட்ட திட்டம்: பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் 2005-ம் ஆண்டு மதுரையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் "தமிழர்களின் கனவு திட்டம்' என்று கூறி சேது கால்வாய் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

 கடலுக்கு அடியில் உள்ள மணலை அப்புறப்படுத்தி, பாக் நீரிணையையும் மன்னார் வளைகுடாவையும் இணைப்பதன் மூலம் கப்பல் போக்குவரத்தை எளிதாக்க இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ரூ. 2,214 கோடியை ஒதுக்கியது.

 இந்தத் திட்டத்தினால் "ராமர் பாலம்' பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று பாஜகவினர், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

 இத்திட்டத்தினால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வழக்கு தொடர்ந்தனர்.

 இந்த திட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்பட்ட வழக்குகளையும் சேர்த்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

 "ராமர் பாலம் வெறும் மணல் திட்டு என்றும் இது மனிதரால் உருவாக்கப்பட்டதற்கு ஆதாரமில்லை' என்று இந்திய தொல்லியல் துறை 2007-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதற்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அந்த மனுவை மத்திய அரசு அப்போது வாபஸ் பெற்றது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

11_01_2012_011_004.jpg kalaignar tv



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

11_01_2012_010_022.jpg killed



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

12_01_2012_005_047.jpg 100 slums without power



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

14 Jan 2012 10:38:32 AM IST‘MK’s daughter, 3 others cheated me’

CHENNAI: Former Assembly Speaker K Kalimuthu’s brother lodged a complaint with the Police Commissioner on Friday, alleging that four persons, including DMK chief M K Karunanidhi’s daughter Selvi and her relative Uma Maheshwari, cheated him of Rs 69 lakh after promising to make him a member of the Tamil Nadu Public Service Commission (TNPSC).

 

In his complaint,  K Nallathambi, a former additional public prosecutor from Madurai, alleged that he approached Velachery area secretary Ravi and Selvi’s assistant Ramesh, after he got word that there were five vacancies for the post of TNPSC member. As one of the vacancies came under Selvi’s quota, Nallathambi was asked to shell out Rs 1 crore for it.

 

Nallathambi then gave Rs 69 lakh to Uma Maheshwari, the sister of Selvi’s son-in-law, in few instalments. However, five others were appointed as TNPSC members in 2010.

 

“When I asked them to return my money, they said they would give me a chance to contest in the Assembly elections or a plum post in the party,” the complainant alleged.  When Nallathambi subsequently approached Ravi, he threatened him. On Friday, he lodged a complaint with the city police commissioner.  Soon after, Uma Maheshwari lodged a counter complaint against Nallathambi.  “I filed a counter complaint against Nallathambi,” Uma confirmed, while adding, “The allegations levelled against me are false.”



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

கருணாநிதி மகள் செல்வி மீது ரூ 69 லட்சம் மோசடி புகார்!

 
Saturday, January 14, 2012
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவி வாங்கித்தருவதாக தன்னிடம் ரூ.69 லட்சம் பணம் மோசடி செய்ததாக கருணாநிதி மகள் செல்வி மீது போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் பரபரப்பு புகார் மனு கொடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி வக்கீல் நல்லதம்பி இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார்.

மதுரை வண்டியூர் மெயின்ரோடு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் நல்லதம்பி. வக்கீலான இவர், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி ஆவார்.

இவர் நேற்று காலை 11 மணியளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து அவர் அளித்த புகார் மனுவில், "2006-ல் விருதுநகர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தி.மு.க.வில் இணைந்தேன். சென்னை வேளச்சேரி தி.மு.க. பகுதிச்செயலாளர் ரவி, எனக்கு நன்கு அறிமுகமானவர். அவர், என்னிடம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 5 உறுப்பினர்களின் பதவி காலியாக உள்ளது என்றும், அதில் ஒரு உறுப்பினர் பதவியை வாங்கித்தருவதாகவும், அதற்கு ரூ.1 கோடி பணம் தரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

செல்வியைச் சந்தித்தேன்

2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு நான் சென்றேன். அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி இருந்தார். அவரிடம், என்னை வேளச்சேரி ரவி அறிமுகம் செய்துவைத்தார். செல்வியின் மருமகன் டாக்டர் ஜோதிமணியின் அக்காள் உமாமகேஸ்வரியும் அப்போது அங்கு இருந்தார்.

எனது கல்வித்தகுதி பற்றி கேட்டறிந்தனர். முன்பணமாக ரூ.25 லட்சம் வேண்டும் என்றார்கள். நான் அடுத்த 2 நாட்களில் எனது மனைவியின் நகைகளை அடகு வைத்து ரூ.10 லட்சம் பணத்தை அதே ஓட்டலில் உமாமகேஸ்வரியிடம் கொடுத்தேன். 2010-ம் ஆண்டு ஜுன் மாதம் 23, 24 தேதிகளில் செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக ரூ.50 லட்சமும், மாநாட்டுக்கு பின்பு ரூ.19 லட்சமும், ஆக மொத்தம் ரூ.69 லட்சம் உமாமகேஸ்வரியிடம் வேளச்சேரி ரவி முன்னிலையில் அதே நட்சத்திர ஓட்டலில் கொடுத்தேன்.

பதவி கிடைக்கவில்லை

ஆனால், அவர்கள் பேசியபடி தேர்வாணைய உறுப்பினர் பதவி எனக்கு கிடைக்கவில்லை. வேறு 5 பேரை உறுப்பினர்களாக நியமித்தார்கள். உடனே நான் பணத்தை திருப்பி கேட்டேன். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக சொன்னார்கள். அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டால், கட்சியின் பெரிய பதவி பெற்றுத்தருவதாக கூறினார்கள். நான் கட்சியை விட்டு ஒதுங்கிவிட்டேன். எனக்கு பணம் கிடைத்தால் போதும் என்று தெரிவித்தேன். வேளச்சேரி ரவி பணத்தை திருப்பித்தருவதாக சொல்லி ஏமாற்றினார்.

கடந்த 12-ந் தேதி வேளச்சேரி ரவியை சந்தித்து எனது பணத்தை கொடுக்காவிட்டால், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுப்பேன் என்று தெரிவித்தேன். அதற்கு அவர், 'உன்னை யார் என்றே தெரியாது என சொல்லிவிடுவேன்' என்று பதில் அளித்தார். பின்னர் என்னை மிரட்டினார். அப்போது எனது நண்பர் அழகேசன் மற்றும் முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

என்னை ஏமாற்றி மோசடி செய்து தற்போது மிரட்டி வரும் வேளச்சேரி ரவி, உமாமகேஸ்வரி மற்றும் செல்வி ஆகியோர் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்", என்று கூறியுள்ளார்.

இந்தப் பணத்தை அவர் ரொக்கமாகவே பல தவணைகளில் கொடுத்தேன்.ஆனால் இதற்கு எழுத்துப்பூர்வமான ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை, என்று அவர் நிருபர்களிடம் கூறினார்.

உமா மகேஸ்வரி மறுப்பு

இந்த நிலையில், வக்கீல் நல்லதம்பி கொடுத்துள்ள புகார் மனுவில் இடம்பெற்றுள்ள உமாமகேஸ்வரி நேற்று மாலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கூறுகையில், "நான் கோபாலபுரத்தில் வசிக்கிறேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். எனது கணவர் சென்னை துறைமுகத்தில் வேலைபார்க்கிறார். என்மீது புகார் கொடுத்துள்ள நல்லதம்பி என்பவரை ஒரேயொரு முறை மட்டும் நட்சத்திர ஓட்டலில் வைத்து பார்த்துள்ளேன். வேளச்சேரி ரவிதான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இவர்தான் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பி என்று அறிமுகப்படுத்தினார். அவ்வளவுதான் எனக்கு தெரியும். அதன்பிறகு நல்லதம்பியை நான் பார்த்ததே இல்லை.

அவர் என்மீது கொடுத்துள்ள புகார் அனைத்தும் அப்பட்டமான பொய் ஆகும். வேளச்சேரி ரவிக்கும், அவருக்கும் உள்ள தொடர்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்த பிரச்சினையில் வேண்டுமென்றே என்னை சிக்க வைத்து, எனது பெயருக்கு களங்கம் உண்டாக்கியுள்ளனர்.

கடந்த வாரம் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் நல்லதம்பியின் பிரச்சினை குறித்து என்னிடம் தெரிவித்தார். நான் அப்போதே இந்த பிரச்சினையில் எனக்கு தொடர்பில்லை என்றும், மிரட்டி பணம் பறிப்பதற்காக என்னையும் இந்த பிரச்சினையில் சிக்கவைக்கிறார்கள் என்றும் கூறிவிட்டேன்.

செல்வியை சந்திக்கவில்லை

மேலும் நட்சத்திர ஓட்டலில் செல்வியை சந்தித்ததாகவும் நல்லதம்பி கூறியுள்ளார். அதுவும் தவறான தகவல் ஆகும். நல்லதம்பி எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டபோது செல்வி அங்கு இல்லை. என்மீது கொடுத்துள்ள புகாரை சட்டப்பூர்வமாக சந்திப்பேன்," என்றார்.

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகள் குறித்த விசாரணை, அதிரடி ரெய்டுகள் என பரபரப்பாக உள்ள சூழலில் இந்தப் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

17_01_2012_002_006.jpg windmilla



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

20_01_2012_004_017.jpg mADURAI Bustsnad



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

20_01_2012_006_020.jpg tnhb



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

19_01_2012_007_019.jpg Pongalur Palanisamy



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

20_01_2012_017_021.jpg Library fund fraud



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

21229359.JPG 10000 Crores BALANCE



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

20120121a_004101015.jpg Mayilai Kapali arrears



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

28_01_2012_006_002.jpg Kottur River view Road Maa.Su



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

28_01_2012_002_006.jpg tn family planning



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

28_01_2012_001_003.jpg Arivalayam says home of orphans

22633687.JPG Arivalayam osr



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

27_01_2012_004_042.jpg desalinations



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

26_01_2012_104_009.jpg subway roads



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

25_01_2012_010_006.jpg Sripathy



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 


அனாதை இல்லத்திற்காக வாங்கிய இடத்தில் அறிவாலயமா? மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை.

Saturday  28  January  2012  07:43:23 AM 

ஆதரவற்றோர் இல்லம் கட்டுவதாகக் கூறி, சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய இடத்திற்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர். விதிப்படி ஆதரவற்றோர் இல்லம் அமைக்காததால், சிறப்பு அனுமதியை ரத்து செய்து, திறந்த வெளி இடத்தை மாநகராட்சியிடமே ஒப்படைக்கும் வகையில், அரசு ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று, சென்னை மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

இதனால், அறிவாலயஇடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கூட்டம், மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும் கேள்வி நேரம் நடந்தது. கவுன்சிலர் ஆறுமுகம் (எ) சின்னையன், ""அறிவாலயத்தில் திறந்த வெளி நிலங்களுக்கு சி.எம்.டி.ஏ., மூலம் தான பத்திரம் வழங்கி, பத்திரப்பதிவு செய்திருக்கின்றனரா, பொதுமக்கள் அங்குள்ள பூங்காவை பயன்படுத்த அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா?'' என கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்து சைதை துரைசாமி பேசியதாவது: கடந்த 1980ல் எம்.ஜி.ஆர்., ஆட்சி கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சியின் போது, தி.மு.க., அறக்கட்டளை ஒரு கோரிக்கை வைத்தது. அறிவாலய இடத்தில் பல மாடி கட்டடம் கட்ட, அரசாணை வெளியிடப்பட்டது. இதில், 10 சதவீத திறந்தவெளி நிலத்தை, அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

ஆறு ஆண்டுகளுக்குப் பின், தி.மு.க., அறக்கட்டளை சார்பில், சில சலுகைகள் கேட்டு அரசாணையில் திருத்தம் வேண்டி மேல்முறையீடு செய்தனர். அது நிலுவையிலேயே இருந்தது. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், கவர்னர் ஆட்சியின் போது, "அனாதை இல்லம்' கட்டுவதாகக் கூறி, அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றனர். கடந்த 2004ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது, அறக்கட்டளைக்கு அனுமதி அளித்ததை ஏன் ரத்து செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அடுத்து தி.மு.க., ஆட்சிவந்ததும், 2007ம் ஆண்டில்,தி.மு.க., அறக்கட்டளை எழுதிய விளக்க கடிதத்தை ஏற்று, மேல் நடவடிக்கை தேவையில்லை என கோப்பு முடிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்றோர் இல்லம் கட்ட சிறப்பு அனுமதி பெற்று, இதுவரை அதை செயல்படுத்தாமல் இருப்பதால், தி.மு.க., அறக்கட்டளை திறந்தவெளி நிலத்தை பதிவு செய்யாமல் பெற்ற சிறப்பு ஆணையை ரத்து செய்யவும், நிலத்தை மாநகராட்சிக்கு வழங்க அரசு ஆணை பிறப்பிக்கக் கோரி, அரசுக்கு பரிந்துரைத்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சைதை துரைசாமி தெரிவித்தார்.

இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அவர்களை பேச விடாமல் சத்தம் போட்டனர். இதனால், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. "அந்த இடத்தில் பூங்கா உள்ளது; பொது நூலகம் உள்ளது. மன்றத்தில் தவறான தகவல்களை மேயர் தருகிறார்' எனக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர்போஸ் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் போஸ் கூறும்போது, ""தி.மு.க.,வினர் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதிக்கப்படுவதில்லை. வீடியோகிராபர்களை உள்ளே அனுப்ப மறுக்கின்றனர். மன்றம் மன்றமாக நடக்கவில்லை. மேயர் சர்வ அதிகாரம் படைத்தவர் போல் செயல்படுகிறார். எனவே,வேறு வழியின்றி தான் வெளிநடப்பு செய்தோம்,'' என்றார். கவுன்சிலர் மீது தாக்குதல்: தி.மு.க., கவுன்சிலர் வாசு, "விரிவாக்கப் பகுதிகளில் ஏற்கனவே கட்டிய கட்டடங்களின் மேல், கட்டடம் கட்டப்படுகிறது. இதில் விதிமீறல் இருந்தால் என்ன செய்வது' என, கேள்வி எழுப்பினார். பதிலளித்த மேயர், "எவ்வித கட்டடமாக இருந்தாலும், விதிமுறைப்படி தான் கட்ட வேண்டும்.

புதிதாக கட்டுமானப் பணி துவங்கும்போதே, விதிமுறை மீறல் உள்ளதா என கண்காணிக்கப்படுகிறது' என்றார். வாசு மேலும் கேள்விகள் கேட்க முயன்றபோது, "ஒரு துணை கேள்வி தான்; அதற்கு மேல் அனுமதிக்க முடியாது,'' என்று மேயர் அனுமதி மறுத்தார். அப்போது வாசு, மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மன்றத்தில் தி.மு.க., கவுன்சிலர்களுக்கு பேச்சுரிமை மறுக்கப்படுவதாகக் கூறி, தி.மு.க., கவுன்சிலர்கள் மீண்டும் வெளிநடப்பு செய்தனர்.

வெளியேறிய வாசுவை, பெண் கவுன்சிலர்கள், கையில் இருந்த தீர்மான நோட்டு மற்றும் கைகளைக் கொண்டு தாக்கினர். ஆத்திரமடைந்த கவுன்சிலர் சத்தம் போட்டுக் கொண்டே மேயர் இருக்கை நோக்கிச் சென்றார். அவரது சத்தம் கேட்டு, தி.மு.க., கவுன்சிலர்களும் வந்தனர். மேயர் இருக்கை அருகே சென்று தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்துவிட்டு மீண்டும் வெளியேறினர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

23935968.JPG lands 850 c



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

01_02_2012_005_006.jpg Sonda veedu



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

21116406.JPG nvn someu



__________________
« First  <  Page 27  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard