New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Justice Paul Dinakaran - Not for Supreme Court


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: Justice Paul Dinakaran - Not for Supreme Court
Permalink  
 


நீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம்
 
First Published : 30 Jul 2011 04:30:43 PM IST


 
சென்னை, ஜூலை 30: நீதிபதி தினகரன் ராஜினாமா செய்திருப்பது, தங்களின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பது...

 

சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது விவசாயிகள் சங்கத்தின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. நீதிபதியின் ராஜினாமாவை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.

 

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை மோசடியாக கைப்பற்றியது, நீர்நிலைகளை வளைத்து வேலி போட்டது, நிலமோசடி, சொத்து குவிப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர். இவரால் வளைக்கப்பட்டிருந்த அரசு நிலத்தை மீட்டு காவேரிராஜபுரம் கிராமத்தைச் சார்ந்த நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வற்புறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கமும் நிலமீட்சி போராட்டத்தை நடத்தியது. கடந்த இரண்டாண்டு காலமாக பலகட்ட போராட்டங்களை நடத்தியதன் விளைவாக அரசு புறம்போக்கு நிலம் நீதிபதியால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நீதிபதி மீதான புகார்கள் ஆதாரபூர்வமாக வெளிவந்த பிறகும் பதவி விலகுவதற்கு பதிலாக அட்டையைப் போல் பதவியில் தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருந்தார். இவர் மீதான விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கத்துடன், உச்சநீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்து விசாரணைக் குழுவின் நடவடிக்கைகளை முடக்கப் பார்த்தார். இந்த நடவடிக்கையை உச்சநீதிமன்றமே கண்டித்தது. தப்பிக்க வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான் தற்போது ராஜினாமா செய்துள்ளார். இவர், தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக சாதியை பயன்படுத்துவது மிகவும் இழிவான செயலாகும்.

 

தமிழக அரசு, நீதிபதி தினகரனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களையும், உச்சவரம்புக்கு மேல் சட்ட விரோதமாக குவித்து வைத்துள்ள நிலங்களையும் மீட்டு காவேரிராஜபுரம் கிராமத்திலுள்ள தாழத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருகிறோம்.

 

அத்துடன் தினகரன் மீதான புகார்கள் குறித்து தமிழக அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். பி.டி.தினகரன் மீதான புகார்களை விசாரிக்கும் விசாரணை குழு காலதாமதமில்லாமல் விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க முன்வரவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் ... என்று அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நீதிபதி தினகரன் ராஜினாமா... 'தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த என்னை இழிவுபடுத்துகிறார்கள்'

Justice Dinakaranடெல்லி: தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் இடம்பெற்ற சிக்கிம் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை தினகரன் ராஜினாமா செய்து விட்டார். 

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட என்னைப் போன்றவர்கள் உயர்ந்த பதவியில் இருப்பதை இந்த சமூகமும் அரசியல் அமைப்பும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை, விரும்புவதும் இல்லை. காலகாலமாக நடந்துவரும் இந்த அநீதிதான் எனக்கும் நேர்ந்துள்ளது, என தினகரன் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தினகரன் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம், நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தொடர்பாக நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த தினகரன், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தமிழகத்தில் ஏராளமான நிலங்களை சட்டவிரோதமாக சொந்தமாக்கிக் கொண்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக அவரும், அவர் குடும்பத்தினரும் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அவர், சிக்கிமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

முன்னதாக இது தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி.க்கள் பிரச்னை எழுப்பியதை அடுத்து, விசாரணைக்காக குழு அமைத்து குடியரசு துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

'தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த என்னை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார்கள். இதற்கு மேல் நீதிபதியாக தொடர விரும்பவில்லை. பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் என்னை தொடர்ந்து அவமானப்படுத்துகிறார்கள்,' என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு அனுப்பியுள்ள தனது ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்

தனது ராஜினாமா குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நானோ என் குடும்பத்தினரோ எந்த நிலத்தையும் யாரிடமிருந்தும் அபகரிக்கவில்லை. இந்த குற்றச்சாட்டே மோசடியான பொய்யானது. என் பெயரிலோ, உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பெயரிலோ எந்த நிலமும் இல்லை என இந்திய சர்வே துறையே தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளது. இதற்கு மேல் வேறு என்ன ஆதாரம் வேண்டும். ஆனால் வேண்டுமென்றே அந்தக் குற்றச்சாட்டை ஊதிப் பெரிதாக்கி என்னை அசிங்கப்படுத்துகின்றனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் உயர்ந்த இடத்திலிருப்பதை விரும்பாத சக்திகள் செய்யும் சதி இது. 

நான் இப்போது என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். ஒரு ப்ரீலான்சராக இப்போது பேசுகிறேன். சாதியை ஒரு சாக்காக காட்டி அனுதாபம் தேட நான் முயலவில்லை. நாட்டில் நிலவும் நடைமுறை எதார்த்தத்தைச் சொல்கிறேன். என்னைப் போன்றவர்கள் அதிகார பீடத்தில் இருப்பதை ஆதிக்க சக்திகள் விரும்புவதில்லை. 

நீதித்துறை மீது நம்பிக்கையில்லை

என் மீதான விசாரணைக் கமிட்டி மீதோ, நீதி விசாரணையிலோ எனக்கு நம்பிக்கை இல்லை. அடிப்படையே இல்லாமல் புனையப்பட்ட இந்த வழக்குக்கு இத்தனை முக்கியத்துவம் தருவதை நினைத்தால், நீதித் துறை மீதே நம்பிக்கை இன்மை தோன்றுகிறது," என்றார்.2011-07-30

 

 படித்த ஒருவர் நீதி பீடத்தின் தலைமையில் உட்காருவதற்கு தகுதியானவர் என்று ஒப்புக்கொள்ளப்பட்டவர் ========இப்பொழுது கேட்கப்படவேண்டிய முக்கியமான கேள்வி என்னவென்றால் தகுதியானவர் என்று யாரால் ஒப்புக்கொள்ளப்பட்டவர்?தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் தான் இவர் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.தயவு செய்து தேர்வு குழு அறிக்கையை பார்க்கவும். 

By நாரதர் 
7/30/2011 9:02:00 PM


-- Edited by devapriyaji on Monday 1st of August 2011 01:43:49 PM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 படித்த ஒருவர் நீதி பீடத்தின் தலைமையில் உட்காருவதற்கு தகுதியானவர் என்று ஒப்புக்கொள்ளப்பட்டவர் ஊழலில் இறங்கி அதில் சம்பந்தப்பட்ட வழக்கில் மாட்டிக்கொண்ட பிறகு பதவியில் இருந்து இறங்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்ததை விட மோசமான செயல் சாதியின் பெயரைச்சொல்லி தன்பக்க வாதத்தை எடுப்பது. இது மிகவும் அசிங்கமானதும், வருத்தத்துக்கு உரியதுமாகும். அரசியலுக்கும், நீதிமுறைக்கும் உள்ள வித்தியாசத்தை உணராதவர் இத்தனை ஆண்டுகள் நீதி வழங்கும் ஒரு புனிதமான தொழிலில் இருந்தார் என்று நம்ப முடியவில்லை. இந்த நாட்டை இனி ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். 

By Ramakrishnan 
7/30/2011 5:22:00 PM


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 இவர் தன்னை தாழ்த்தப்பட்டவன் என்பதால் குற்றம் சாட்டுகிறார்கள் என்று கருணாநிதி பாணியில் அறிக்கை வேறு விடுகிறார். அதிலும் தலைமை நீதிபதியாயிருந்து இக்குற்றத்தைச் செய்த இவருக்கு, இக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், தூக்கு தண்டனையே தரலாம். இவர் வழக்கை ஆதரித்து வாதாட முன்வரும் வழக்கறிஞரையும் மக்கள் ஒதுக்க வேண்டும் இதைச் செய்தால் வரும் காலத்தில் இத்தகு தவறுகள் குறையும் 

By spr 
7/30/2011 7:11:00 PM


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 இத்தனைக்கு பிறகு ராஜினாமா செய்துவிட்டு தற்போது சாதி பெயரை சொல்லி தப்பிக்கப்பார்க்கும் இது போன்ற பெரிய அதிகாரிகள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கொடுக்கவேண்டும் நில அபகரிப்பு வழக்கில் தற்போது கைது செய்யப்படுவாரா இவர்" 

By mohan 
7/31/2011 8:23:00 AM


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Dinakaran wants to take back resignation

Nagendar Sharma, Hindustan Times

Barely a few days after he resigned, the controversial former Sikkim high court chief justice, PD Dinakaran, has informed the President that he is willing to reconsider his decision in case he was assured of a fair hearing and if his grievances will be addressed. In a dramaticdevelopment, justice Dinakaran, in a two-page letter to President Pratibha Patil, written last week, has stated that the points raised by him in his resignation letter must be addressed, even in case his resignation is finally accepted.

 

The President has referred the matter to the law ministry for its opinion on the sensitive issue.

The ministry officials said the matter was "under consideration", though they pointed out that according to rules and precedents, the resignation once tendered by a judge cannot be withdrawn.

Justice Dinakaran, who had resigned on July 29, ahead of the inquiry panel appointed by the Rajya Sabha chairman, Hamid Ansari, was to resume its probe into the corruption allegations against him.

Seventy five Opposition MPs had served an impeachment notice against Dinakaran in December 2009.

Sources close to him said the decision to write to the President followed his meeting with a group of MPs after he resigned, who asked him not to give up his fight.

In his letter, Dinakaran has pointed out that he chose to resign since he did not expect a fair hearing from the three-member probe panel, which was "biased" against him.

"It is obvious that hearing before the inquiry committee was just an empty formality. Hence I have lost confidence of getting fair hearing and justice," he had written in his resignation letter.

Justice Dinakaran, who was chosen by a panel of country's top five judges (the Supreme Court collegium) for promotion to the Supreme Court in September 2009, before the controversy on corruption allegations against him became public, has blamed his belonging to a weaker section of the society for being targeted.

"I have a sneaking suspicion that my misfortune was because of my birth in the socially oppressed and underprivileged section of the society," he had written.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Justice Dinakaran bid to get back job rejected

Dhananjay Mahapatra, TNN Aug 12, 2011, 04.08am IST
 

NEW DELHI: Justice PD Dinakaran made a futile attempt to withdraw his resignation a week after submitting it to the President with the law ministry citing a 1978 constitution bench judgment of the Supreme Court to reject the former Sikkim High Court chief justice's request.

Justice Dinakaran had resigned on July 29, rendering infructuous a two-year-old motion in Rajya Sabha for his removal on charges of corruption. He had said that he had lost faith in the impartiality of the committee set up by the Rajya Sabha chairman to inquire into corruption charges against him.

On August 4, Justice Dinakaran had a change of heart and wrote to the law ministry seeking to withdraw his resignation. But the ministry declined to act on the fresh request citing the 1978 judgment.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_08_2011_007_026-dinakaran.jpg?w=535&h=368



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2011_005_059-dinakaran.jpg?w=358&h=689



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23222437-justice-dinakaran.jpg?w=640&h=3456



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

வீரமணி அவர்களே, பதில் சொல்லுங்கள்...

 

தினசரிகளில், நீதிபதி பி.டி.தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த செய்திகளை வாசிக்க நேர்ந்தது.

 "நீதிபதி பி.டி. தினகரன் மீது பதினாறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. மாநிலங்களவை நியமித்த நீதிபதிகள் குழு அவர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. மாநிலங்களவை நியமித்த குழுவில் உச்சநீதிமன்ற நீதிபதி அட்லப் ஆலம், கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ். கேகர், மூத்த வழக்கறிஞர் பி.பி. ராய் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். குற்றச்சாட்டுகளை நீதிபதி தினகரனுக்கு அனுப்பி, அதற்கு ஏப்ரல் 9-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
25-pd-dinakaran-200%255B4%255D.jpg
தினகரன் மீதான குற்றச்சாட்டுகளில் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்தது, பொதுச் சொத்துகளை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்தது, அதிலும் குறிப்பாக தலித் மற்றும் சமூகத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்தது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடமிருந்து ஐந்து வீட்டுமனைகளை தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கு வாங்கியது, பினாமி பெயரில் பரிவர்த்தனை நடத்தியது,

தமிழக அரசின் நில உச்ச வரம்பு சட்டத்திற்கும் அதிகமாக விவசாய நிலங்களைவாங்கியது, விற்பனை நடவடிக்கைகளின்போது சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது, முத்திரைத்தாள் குறைத்து வாங்கியது," இவை தவிர" , கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது நிர்வாக ரீதியில் நேர்மையற்ற வகையில் செயல்பட்டு நீதிபதிகளை சட்டவிரோதமாக மாறுதல் செய்தது, ஊழியர்களை நியமித்தது உள்ளிட்டவை தொடர்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்க ஒரு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ள தினகரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது"

.2009-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பி.டி. தினகரன் நியமிப்பது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது கூறப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவரது நியமனம் நிறுத்திவைக்கப்பட்டது. " நீதிபதி தினகரன் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் முன்னதாக அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமான பல்வேறு ஆதாரங்களை குழு திரட்டியுள்ளது. குறிப்பாக வருமான வரித்துறை சான்று, தமிழக அரசு ஆவணங்களையும் ஆதாரமாக திரட்டியுள்ளது."

வாசித்து கொண்டிருக்கும் போதே நீதியரசர் (அப்படி தான் அய்யா வீரமணி அவர்களால் அழைக்கப்பட்டார்) - நீதியரசர் பி.டி.தினகரன் மீது முதல் முதலாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட போது- மானமிகு கி.வீரமணி அய்யா வெளியிட்ட அறிக்கை ஞாபகத்திற்கு வந்தது. எப்படி, தற்சமயம் ஸ்பெக்ட்ரம் முறை கேட்டில் ஆ.ராசா மீது குற்றம் சாட்டிய போது - அதை ஆரிய, திராவிட போர் என்று வர்ணித்தார்களோ - அதே போல் தான் நீதியரசர் பி.டி.தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்ட போதும், அதையும் "ஆரிய திராவிட" போர் - ஆரிய சதி என்கிற ரீதியில் பேசினார்.

தலித் என்பதற்காகவே, குற்றம் சாட்டப்படுவதாக சொன்னார். வீரமணி அறிக்கையிலிருந்து சில பகுதிகள். "தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி என்றால் சேற்றை வாரி இறைத்து மகிழலாம் என்ற நினைப்பா? ‘‘லஞ்சம் வாங்கினார்; திறமையற்றவர்’’ என்று நீதியரசர் பி.டி. தினகரன் நிரூபிக்கப்பட்டாரா? திட்டமிட்டு அவமதிக்கும் பார்ப்பன சக்திகள், ஊடகங்கள்... தாழ்த்தப்பட்டோர், சமூகநீதிப் போராளிகள் வேடிக்கை பார்க்கக் கூடாது"

 " இப்படி ஒரு தாழ்த்தப்பட்ட(கிறித்துவர்)வர் நீதிபதியாக வருகிறாரே என்ற ஆத்திரத்தினாலோ, அல்லது வேறு தனிப்பட்ட காரணத்தினாலோ இதற்கு எதிராக ஒரு முயற்சிகளை மேற்கொண்டு, கூச்சல்களைப் போட்டு, தங்கள் இஷ்டம்போல் தவறான தகவல்களை ‘முறையாக’ தந்து "என்று அய்யா வீரமணி சொல்லிவிட்டு "இறுதியில் நீதி வெல்லுவது உறுதி! உறுதி!!" என்று முடிக்கிறார்.
01-1827-150x150.jpg
ஒரு நீதிபதியின் மீது - எந்த உண்மையும் இன்றி, இப்படி பொய்யாக குற்றச்சாட்டுகளை வைக்க முடியுமா. அப்படி செய்தால் சமூக நீதி காவலர்கள் சும்மா இருப்பார்களா. இதே வீரமணி அவர்கள் தான், உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து - இன்றொரு உச்சநீதிமன்ற நீதிபதி "லஞ்சம் வாங்குகிறார்கள்" என்று குற்றம் சாட்டிய போது "வேலியே பயிரை மேயலாமா" என்று கேட்டார். இப்போது அய்யா வீரமணி அவர்கள் - இந்த செய்திக்கு என்ன பதில் சொல்வார்.

"குற்றம் சாட்டப்பட்டதால் மட்டும் ஒருவர் குற்றவாளி ஆகி விட முடியாது" என்கிற அரிய உண்மையை கண்டுபிடித்து சொல்ல போகிறாரோ. எப்போதும் அநீதிகளை, குற்றங்களை தட்டி கேட்பதற்கு முன் - குற்றம் சாட்டப்படும் நபர்களின் சாதியை, குலம் கோத்ரங்களை மற்றும் சமயங்களை பார்த்து விட்டு தான், "லஞ்சத்திற்கு எதிராக" இருந்தாலும் சரி - "ஊழலுக்கு எதிராக" இருந்தாலும் சரி -"பாலியல் குற்றச்சாட்டாக " இருந்தாலும் சரி"மதவாதத்திற்கு"  எதிராக இருந்தாலும் சரி... குரல் கொடுப்பார்.

ஒரு வேளை இப்படி பகுத்தாராய்ந்து குரல் கொடுப்பதை தான் பகுத்தறிவு என்று நினைக்கிறாரோ. ஒரு வேளை குற்றம் நிருபிக்கப்பட்டால், அப்போதும் குற்றத்தை ஒப்புக்கொள்ள மனமின்றி, நீதித்துறையை சாட ஒரு காரணம் வைத்திருப்பார். அநீதியை கண்டும் காணாமல் போவதை விட ஆபத்தானது - அநீதி, குற்றம் என்று தெரிந்தும், அதற்கு வேறு வகையில் ​நியாயம் கற்பிப்பது.


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 


Corrupt judges must face the music 

A P Shah,Former Chief Justice Of Madras & Delhi High Courts,Minces No Words 

A Subramani TNN 

Chennai: Corruption exists in the Indian judiciary.A few judges are inappropriately influenced in their decision making.Saying this is A P Shah,former chief justice of the high courts of Madras and Delhi.
Shah lived up to his reputation for calling a spade a spade on Saturday,when he delivered a speech on judicial appointments and accountability at a function organized by the Nani Palkhivala Foundation and the Govindh Swaminadhan Trust at the Music Academy.
Corruption has spread its tentacles and does not seem to be limited to conventional forms of bribery, he said.Stating that judges guilty of misconduct should face prosecution,he said judicial independence should not protect a judge from investigation for a valid charge.
The country remembers Justice Shah for his orders in the Delhi high court decriminalizing gay sex under Section 377 of IPC and ruling that the office of the Chief Justice of India too was amenable to the RTI Act.But Chennai remembers the nononsense jurist for being instrumental in the removal of giant hoardings in the city.Sitting with Justice K Chandru,he quashed the political exemption granted to unauthorised buildings,and it was because of his orders that many public buildings today offer a barrier-free environment to disabled people.
I can say that a vast majority of judges with whom I have associated are hardworking,intelligent and honest.However,at the same time,it would not be incorrect to say that a few judges are inappropriately influenced in their decision making, he said.
Lamenting the democratic deficit in the way judges are chosen on the basis of undisclosed criteria and circumstances,Justice Shah said: The present system of judicial appointments in the constitutional courts exemplifies the misalignment between the core values of judicial independence and accountability. He discussed the US and the UK model of appointing judges,but said a hybrid model where a judicial appointment commission shortlisting the names,which could be rejected only on specific reasons,was the most suitable for India.
Slamming the Judicial Standards and Accountability Bill 2010,he said involving MPs in the procedure would undermine the judicial independence.If implemented in the present form,the Bill would mark the beginning of the end of the judiciary, he said.

Pc0031400.jpg 
TRAILBLAZER: Former chief justice of the Madras high court,A P Shah (right) was instrumental in the removal of giant hoardings in Chennai 
 


__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard