
மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கும் அல்லது அரசுக்கு அளித்த உறுதி மொழிகளை காப்பாற்ற தவறும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இந்த மசோதாவுக்கு, விவசாய அமைச்சர் சரத்பவார் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா நிறைவேறினால், கல்வி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் வேறு எந்த வகையான முறைகேடுகளில் ஈடுபட்டாலும், கடும் தண்டனை கிடைக்கும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் சமர்ப்பித்த இந்த மசோதாவை, சிறு மாற்றங்களுடன் அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டது. இதன்பின் மத்திய அமைச்சரவை மற்றும் பார்லிமென்டின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். அமைச்சர்கள் குழுவில் பவார், கபில்சிபல் தவிர, ஏ.கே.அந்தோணி, சிதம்பரம், பிருதிவிராஜ் சவான், வீரப்ப மொய்லி, திட்ட கமிஷன் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்






எமில் ஜெபசிங்
ஏழைகளுக்காகவே காருண்யா கல்லூரியை ஆரம்பிக்க கடவுள் சொன்னார் என்று சகோ.தினகரன் அவர்கள் பொய் சொல்லி ஆண்டவரின் மனதையும் வேதனைப்படுத்திவிட்டார். ஆனால் கர்த்தரோ சகோ.எமில் மகளை கைவிடவில்லை. மகளுக்கு வெல்லூர் CMC மெடிக்கல் காலேஜில் MBBSபடிப்புக்கு இடம் கிடைக்கசெய்து இப்போது படிப்பை முடித்து மேல்படிப்பையும் முடிக்க கர்த்தர் கிருபை செய்தார் என்று கேள்விப்பட்டு தேவனைத் துதிக்கிறேன்.




‘மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) தங்களது பல்கலைக்கழகங்களை நேரில் ஆய்வுசெய்து அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், நேரில் ஆய்வுசெய்யாது சில நிமிடங்கள் தங்களிடம் எடுத்த பேட்டியின் மூலம் மட்டுமே டாண்டன் கமிட்டி அளித்துள்ள பரிந்துரை சரியாக இருக்குமா?’ என்ற கேள்வியை இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எழுப்பியுள்ளன.
1980களின் பிற்பகுதியில் மத்திய அரசு உயர்கல்வியை வழங்கும் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டதுதான், இத்தகைய தனியார் மோசடி நிறுவனங்கள¢ உருவாகக் காரணமாக அமைந்தது. ஆரம்ப கல்விக்கான செலவுகளை மட்டும் அரசு கவனித்துக் கொள்வதற்கும், உயர்கல்வியில் தனியார் புகுந்து கொள்ளையடிப்பதற்கும் இக்கொள்கை வழிவகுத்தது. 1990களில் இது மேலும் கடுமையானது. அதுவரை கல்வி நிறுவனங்கள் புனிதமானவையாகக் கருதப்பட்டன. அரசாலும், அறங்காவலர்களாலும் கல்வி நிர்வகிக்கப்பட்டது. அதுவரை பிரச்னையில்லை.
ராகிங் செய்யப்பட்டு நான்காவது மாடியிலிருந்து சீனியர் மாணவர்களால் கீழே தள்ளிவிடப்பட்ட மாணவன், மூன்று மாதங்கள் கோமாவில் இருந்து கண் விழித்து... வாய் திறந்தபிறகுதான் இந்த விவகாரமே வெளியே வந்திருக்கிறது.
போன அக்டோபர் மாதம் 19&ம் தேதி தீபாவளி லீவு முடிஞ்சு காலேஜுக்குப் போனேன். அன்னிக்கு காலேஜ் முடிஞ்சபிறகு ஹாஸ்டலுக்கு வந்தேன். தினமும் மாலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை குரூப் ஸ்டடி உண்டு. அதற்காக ரூமில் இருந்து கீழே வந்துக்கிட்டிருந்தேன். அப்போ மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் என்னை மறித்து, தீபாவளி ட்ரீட் கேட்டாங்க. ‘என்னிடம் பணம் இல்லை, வீட்டில் இருந்து பணம் வந்தவுடன் ட்ரீட் வைக்கிறேன்’ன்னு பதில் சொன்னேன். அதற்கு அவர்கள், ‘இருக்கிற பணத்துல இப்ப ட்ரீட் வைடா’ன்னு சொல்லிக்கிட்டே என் பாக்கெட்டுக்குள் கையைவிட்டனர். ஆனால், பணம் இல்லை. இதனால் கடுப்பாகி, அதில் இருந்த இரண்டு பேர் என்னை அடித்து விரட்டினாங்க. அழுதுக்கிட்டே நான் கீழே வந்தபோது, வார்டன் வந்துட்டாரு. அவர்கிட்ட நடந்ததை எல்லாம் சொன்னதும், ‘நாளைக்கு அவங்களை பிரின்சிபால் முன் அடையாளம் காட்டு. நடவடிக்கை எடுக்கலாம்’னு சொல்லிட்டுப் போனார்’’ என நிறுத்திய சோபன்பாபு கொஞ்சம் மூச்சுவிட்டபடி தொடர்ந்தார்.
நம்மிடம் பேசிய சோபன்பாபுவின் அம்மா செல்வி, ‘‘அக்டோபர் மாதம் 23&ம் தேதி எங்க ஊர்க்காரப் பையன் சரவணக்குமார், அவங்க வீட்டுக்கு போன் செய்து நடந்ததைச் சொல்லியிருக்கிறான். சரவணக்குமாரின் அப்பா என்னிடம் வந்து, ‘உங்க பையனுக்கு உடம்பு சரியில்லையாம், உடனே போய் என்னன்னு பார்த்துட்டு வாங்க’ன்னு சொன்னார். பதறியடிச்சுக்கிட்டு கோயம்புத்தூர் போய் பார்த்தா, என் புள்ளை குத்துயிருமா குலை உயிருமா சுய நினைவு இல்லாம இருந்தான். காலேஜுல விசாரிச்சப்ப தற்கொலை செய்றதுக்காக மாடியில இருந்து குதிச்சிட்டதாச் சொன்னாங்க. எங்களால நம்ப முடியலை. கோயம்புத்தூர் ஆஸ்பத்திரியிலேர்ந்து மதுரைக்குக் கொண்டு போயிடுங்கன்னு சொல்லிட்டாங்க. அதன் பின் மதுரை வடமலையான் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். சுயநினைவில்லாமல் இருந்ததால், தொண்டையில ஆபரேஷன் செய்து டியூப் வழியாத்தான் சாப்பாடு கொடுத்தாங்க. நூறு நாளுக்குப் பிறகு இப்பத் தான் கண்ணை தொறந்திருக்கான் என் புள்ளை. கோயம்புத்தூர்ல ஆஸ்பத்திரியில இருந்த வரைக்கும் காலேஜுல இருந்து ஒருத்தர்கூட வந்து பார்க்கல, அப்பதான் ஏதோ விபரீதம் நடந்திருக்குன்னு புரிஞ்சுக்கிட்டோம். 
இந்த ஆண்டு முதல் பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேரும், குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டது. இதனால், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பில் சேரமாணவர்கள் அதிக ஆர்வம் செலுத்தினர். இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்காக இரண்டு லட்சத்து இரண்டாயிரத்து 133 பேர் விண்ணப்பங்களை பெற்றனர். அதில், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 406 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். இவர்களில் 49 ஆயிரத்து 143 பேர் ஆண்கள், 28 ஆயிரத்து 943 பேர் பெண்கள் என, 78 ஆயிரத்து 86 பேர் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகள். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து வரும் பொறியியல் கவுன்சிலிங்கில், இதுவரை 75 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதில் 42 ஆயிரம் மாணவர்கள் (56 சதவீதம்) குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டதால், கவுன்சிலிங் கிற்கு வராதவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளது.








