போலி ஆவணம் தயாரித்ததாக புகார்;
பிஷப் உட்பட இருவர் மீது வழக்கு
http://saveamericancollege.blogspot.com/2009/02/18.html
மதுரை, பிப். 18: போலி ஆவணம் தயாரித்ததாக தமிழாசிரியர் கொடுத்த புகாரின் பேரில் சி.எஸ்.ஐ.பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் உட்பட 2 பேர் மீது போலீசார்வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை பழங்கானத்தத்தை சேர்ந்த தமிழாசிரியர் தேவராஜ் அதிசயராஜ். இவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை பசுமலை மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்த போது, பசுமலை சி.எஸ்.ஐ. சபை நிர்வாகக் குழு தேர்தல் முறை கேட்டிற்கு எதிராக குரல் கொடுத்தேன். இதனால் சி.எஸ்.ஐ. பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் என் மீது விரோதம் கொண்டார். என்னை ராமநாதபுரன் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்தார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகரனை தூண்டி விட்டு, பிஷப் எனக்கு தொல்லை கொடுத்தார்.
எனக்கு 22 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. சேமநல நிதியிலிருந்து மருத்துவ தேவைக்காக பணம் எடுக்க விடவில்லை. 6-வது ஊதியக் குழு பாக்கி தொகையும் வட்டிப் பணமும் கிடைக்க விடாமல் செய்து விட்டனர். ஆசிரியர் வருகை பதிவேட்டில் என் கையெழுத்தை அழித்தும், திருத்தியும் மோசடியாக போலி ஆவணம் தயாரித்து நஷ்டம் ஏற்படுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர், பிஷப் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் புகார் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கீழ் கோர்ட்டை அணுகி பரிகாரம் தேடிக்கொள்ள உத்தரவிட்டனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் நீதி மன்றத்தில் தேவராஜ் அதிசயராஜ் மனுத்தாக்கல் செய்தார்.
தேவராஜின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி தலைமை ஆசிரியர் ஞானசேகரன், பிஷப் கிறீஸ்டோபர் ஆசீர் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்துள்ளார்.
தொடரும் பிஷப்பின் மகாத்மியம்
* இன்றைய (மார்ச் 19, 2009) தினகரன் செய்தித்தாளில் வந்த செய்தி ஒன்று:
*
ஆசிரியர் அனுப்பிய மனுவை விசாரிக்க தமிழக தலைமைச் செயலருக்கு உத்தரவு
மதுரை, மார்ச் 19.
மத்திய கண்கானிப்பு ஆணையத்திற்கு பள்ளி ஆசிரியர் அனுப்பி வைத்த மனுவை விசாரிக்க தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்தவர் தேவராஜ் அதிசயராஜ். இவர் டில்லியில் உள்ள மத்திய அரசின் கண்காணிப்பு ஆணையத்திற்கு (சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன்) அனுப்பிய மனுவில், ‘ராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணி செய்தேன். பள்ளி மதவழிபாடு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என எனக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. என் மத சுதந்திரத்தில் தலையிடும் இந்த நோட்டீஸை ரத்து செய்ய மாநில மனித உரிமை ஆணையத்திற்கு மனு செய்தேன். இதன்படி என் புகார் மீது விசாரிக்க ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் பள்ளி நிர்வாகம் என்னை பணி நீக்கம் செய்தது. மாவட்ட கல்வி அலுவலரும் முறையான விசாரணை நடத்தவில்லை. எனவே மீண்டும் இது குறித்து மனித உரிமை ஆணைத்திற்கு தெரிவித்தேன். மேல் நடவடிக்கை காலதாமதமானதால் என் மத சுதந்திரத்தில் தலையிட்டு மனித உரிமை மீறல் செய்த பள்ளி தலைமையாசிரியர் ஞான சேகரன், இதற்கு காரணமான கிறிஸ்டோபர் ஆசீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இம்மனுவை பரிசீலித்த மத்திய கண்காணிப்பு ஆணையம், ஆசிரியர் தேவராஜ் அதிசயராஜ் மனு மீது தமிழக தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.