அதிமுக கட்சி அழிந்து விட்டது என்று சொல்பவர்கள் பொறுமையாக படியுங்கள்.
அதே போல் தென்மாவட்டங்கள் அதிமுக கட்சியை கைவிட்டுவிட்டது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தென்மாவட்டங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்பவர்களும் கீழே டேட்டாவை பாருங்கள்.கொங்கு பெல்டில் வாங்கிய வாக்குகளை விட அதிமுக கட்சி பல தென் மாவட்டங்களில் சிறப்பாகவே வாக்கு வங்கி வாங்கியுள்ளது.
அதிமுக கட்சி தோல்விக்கான முக்கியக் காரணம் தவெக விஜய் சுனாமி அலையால் பெண்கள் வாக்குகளும் இளைஞர்கள் வாக்குகளும் தவெக கட்சிக்கு சென்றது மற்றும் திமுக கட்சி ஆட்சி மீதான அதிருப்தியை குறைக்க 8000 ரூபாய் ஒவ்வொரு குடும்பததிற்கும் மற்றும் வாக்கிற்கு 1000 ரூபாய் ஆரம்பித்து தொகுதிக்கு மாறி அதிகரித்து பணம் அள்ளி வீசியும் தான் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தால் இரண்டாம் இடம் தக்கவைத்தது.
உண்மையாக சொல்லப்போனால் திமுக கட்சி தேர்தலுக்கு முன் அரசு பணத்தை 10000 கோடி மக்களுக்கு கொடுத்தும் வாக்கிற்கு 6000 கோடி வரை என 16000 கோடி செலவு செய்ததால் மட்டுமே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்றது.
இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 101 இடங்களில் வைப்புத்தொகை இழந்தது என்றும் 100 இடங்களில் மூன்றாம் என்றும் பொய்யை பரப்புகிறார்கள்.
உண்மையாகவே இந்தத் தேர்தலில் அதிமுக 16 இடங்களில் மட்டுமே வைப்புத்தொகையை ( டெபாசிட்) இழந்தது.
அதிமுக தான் போட்டியிட்ட 167 தொகுதிகளில்
47 இடங்கள் வெற்றி, 40 இடங்களில் இரண்டாமிடம், 40 இடங்களில் போட்டிக்கான முன்றாமிடம் என 127 தொகுதிகளில் அதிமுக போட்டிக்கு தேவையான சிறப்பான வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள தவெக 48 தொகுதிகளில் மூன்றாமிடம்.
தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக 37 இடங்களில் மூன்றாமிடம் பெற்றிருந்தும் அதிமுகவைப் பற்றி மட்டும் பலரும் பலவீனமான கதைகளை சோடிக்கிறார்கள்.
நட்சத்திர நடிகர் விஜய்யின் வருகையால் அதிமுகவின் பெரும்பான்மை வெற்றி தவெகவால் தடுக்கப்பட்டுள்ளது. மும்முனைப்போட்டி தவெகவிற்கு சாதமாக அமைந்துள்ளது என்பதே உண்மை.
வேகமாக திமுக கூட்டணி உடைந்தது, அதைப்பற்றி எந்த ஊடகமும் வாய் திறக்கவில்லை.. ஆனால் அதிமுக பற்றிய வதந்திகளை பரப்புவதின் மூலம் யார் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என தெரிகிறது.. திமுக மீள எந்த கூறுகளும் இல்லை.
இந்த 80 மூன்றாம் தொகுதிகளில் அதிமுக 20000 வாக்குகளுக்கு கீழ் வாங்கிய தொகுதிகள் 8 :-
1. கோவை -31,689 1. ஆத்தூர் - 33,477 1. அருப்புக்கோட்டை-37,190. 1. ஈரோடு ( கிழக்கு) -38,183. 2. மதுரை ( கிழக்கு)-31,016 3. மதுரை (மத்தி) -33,538. 3. மதுரை ( மேற்கு) -38,961 4. விருது நகர் -34,212. 5. விருகம்பாக்கம்-38,767 6. அண்ணா நகர் -34,382.
இது எந்தக் கட்சிக்கும் சாதகமான அல்லது பாதகமான பதிவெல்லாம் இல்லை, தேர்தல் முடிவைப் பற்றிய ஒரு அலசல் மட்டுமே!
தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது என்பது போலவும், மக்கள் செல்வாக்கை இழந்தது போலவும் கருத்துருவாக்கம் நடைப்பெற்று வருகின்றது.
மறுபுறம் இனி எல்லாமே விஜய் தான் என்பது போலவும் கருத்துருவாக்கம் நடைபெறுகிறது. இதுவரை பல்வேறு கட்சிகளில் பயணித்தவர்களும், பச்சோந்திகளை விட வேகமாக ஆனால் மறைமுகமாக கட்சி மாறிவிட்டனர்.
தேர்தல் முடிவைப் பொறுத்தவரை 105 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் 10000 க்கும் கீழ். 105 தொகுதிகள் என்பது ஏறக்குறைய ஆட்சி அமைக்கும் அளவிலான தொகுதிகள்.
இந்த 105 தொகுதிகளில் 47 தொகுதிகளை திமுக கூட்டணித்தான் வென்றுள்ளது. அதிமுக கூட்டணி 26 இடங்களிலும், தவெக 32 இடங்களிலும் வென்றுள்ளது.
திமுக+ வென்ற 73 இல் 47 தொகுதிகள் கடுமையான போட்டியில் தான் வென்றுள்ளது.
10000+ என உறுதியான வெற்றியை பெற்ற வகையில் தவெக 76 தொகுதிகளிலும், அதிமுக+ 27 இடங்களிலும், திமுக+ 26 இடங்களிலும் வென்றுள்ளது.
அதாவது மிக வலுவாக உள்ள தொகுதியில் திமுக+ விட அதிமுக+ 1 இடம் அதிகமாகவே உள்ளது. 20000+ இல் திமுக வென்றத் தொகுதிகளும் அதிமுகவிற்கு சரி பாதி தான் திமுக+.
தவெக வலுவாக உள்ள இடங்கள் 76 என்றாலும் இவை எல்லாமே நகர்ப்புற தொகுதிகளாக மட்டுமே உள்ளது.
சமூக ஊடகங்கள் முதன்மையாக இருக்கும் இடங்களில் தவெக தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கிறது.
மற்ற இடங்களில் எல்லாம் அதிமுக+, திமுக+ நிலையான வாக்கு வங்கி கொண்ட இடங்களில் தவெக அதிகளவில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.
தவெக 1.72 கோடி, திமுக+ 1.54 கோடி, அதிமுக 1.34 கோடி என்ற அளவில் வாக்குகளைப் பெற்றுள்ளனர். இது எதுவும் குறைந்த வாக்குகள் எல்லாம் இல்லை.
தவெக இவ்வளவு வாக்குகள் பெற்றதில் திமுக, அதிமுக இரண்டும் தங்களுக்குள் தான் போட்டி என்று நினைத்துக் கொண்டதும் ஒருக்காரணம்.
ஒருவேளை முன்கூட்டியே தவெக போட்டியில் இருப்பது தெரிய வந்திருந்தால் வைட்டமின் ப முதன்மையாக இல்லாமல், பிரச்சாரம் வேறு விதமாக இருந்திருக்கும்.
கட்டுப்பாடற்ற வைட்டமின் புழக்கம் மக்களை அதிகம் கோபமடையச் செய்திருக்கலாம். அதுவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தவெகவிற்கு எதிர்காலம் என்பது அவர்கள் நடத்தப் போகும் ஆட்சியைப் பொறுத்தது.
விஜய் விசில் இரண்டையும் தவிர்த்து வேறு எதையும் அறியாமல் வாக்களித்து இருக்கிறார்கள்.
வாக்களித்தவர்கள் ஒரே நாளில் உலக அதிசயம் நடக்கும், எல்லாவற்றிலும் நடைமுறை மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்தவர்கள்.
நடக்கவில்லை என்றால் அவர்களின் முடிவாக வேறு கட்சிதான் இருக்கும்.
இந்தத் தேர்தலில் மௌனப்புரட்சி போல எல்லாம் நடந்து முடிந்துவிட்டதால் எல்லோருடைய பலவீனங்களும் வெளிப்பட்டு இருக்கிறது.
ஒருவேளை முன்கூட்டியே வலுவான மும்முனைப்போட்டி என்று தெரிந்திருந்தால் மூன்று அணிகளுமே 70 - 100 க்குள் தான் இருந்திருக்கும்.
நகர்ப்புறம் இல்லாத தொகுதிகளில் திமுக, அதிமுக விழித்திருக்கும். தவெக நகர்ப்புறங்களை வென்றிருக்கும்.
இந்த நிலையில் எதற்காக ஒவ்வொரு கட்சியும் தங்களது எதிர்காலத்தை எண்ணி கவலைக் கொள்கிறது என்றுத் தெரியவில்லை.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் நடிகர் விஜயைப் பற்றி திமுக, அதிமுக இரண்டுமே பேசாததால் அக்கட்சிகளை பின்தொடர்பவர்களுக்கு விஜயைப் பற்றி எதுவுமே சமூக ஊடகங்களில் காட்டவில்லை. காட்டினாலும் அதனை அவர்கள் புறந்தள்ளியதால் தொடர்ந்து அவர்களுக்கு வரவில்லை.
ஆனால் கட்சிகளைச் சாராதவர்கள், இளந்தலைமுறையினர் என்று விஜய் வீடியோக்களை பார்த்தவர்கள், தொடர்ந்து பார்க்கும் படியே அல்கரிதம் அமைய அவர்கள் தெளிவாக மூளைச் சலவைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இப்படி ஒருக்கூட்டம் பெரும்பான்மையாக இருக்கு என்பதோ, அங்கு தவெக தொடர் பிரச்சாரத்தில் இருக்கு என்பதோ திமுக+, அதிமுக+ க்கு தெரியவே இல்லை என்பது தான் முக்கியமான விஷயம்.
குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்து பழக்கிய தலைமுறையே நடிகர் விஜய் ஆட்சி அமைக்க ஒரு காரணமாக வந்து நிற்கிறது.
மற்றொன்று ஆதவ் அர்ஜூனா ஐபேக்கை கொண்டு வந்து திமுகவை ஆட்சியில் அமர்த்தியவர். அங்கே திரட்டப்பட்ட தகவல் தொடர்புகளை தவெகவிற்கு அவர் பயன்படுத்தியிருக்கலாம்.
ஆக மொத்தம் பெரிதாக களப் பிரச்சாரம் இல்லாமல், களத்தில் பணம் கொடுக்காமல், செலவு செய்யாமல், தொழில்நுட்பத்திற்கு செலவு செய்தே ஆட்சியை பிடித்துவிட்டார்கள்.