முதன் முதலாக மலையின் உச்சியில் சுடரேற்றிய (தீபம்) வழக்கம் எங்கிருந்து குறிப்பாக எந்த மலையிலிருந்துத் தொடங்கப்பட்டது என்ற கேள்வியைக் கேட்டாக வேண்டிய காலம் இப்போது.
ஆக, (திருப்) பரங்குன்றிலா அல்லது (திரு)அண்ணாமலையிலா? என்ற குழப்பம் எழும். இதற்குச் சிவனை வணங்குவோர் அண்ணமலையில்தான் என்றும் முருகனை வணங்குவோர் பரங்குன்றில் தானென்றும் அல்லது சிவனை முருகனின் தந்தையாக மாற்றிச் சமாதானம் செய்தது தெரியாமல் முருக பற்றியராகவும் அவ்வாறே சிவனை முழுமுதற்கடவுளாகவும் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஏன் அவர்களும் கூட அண்ணாமலைதான் அழற்குட்ட சுடரின் அதாவது கார்த்திகை தீபத்தின் தொடக்கம் என ஒத்துக்கொண்டாலும் வியப்பதற்கில்லை.
1.கார்த்திகை மாதத்தில் திருப்பரங்குன்றத்துத் தெருக்களில் வரிசையாய்த் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் பற்றித் தம் 5 ஆம் அடி தொடங்கி 11 ஆம் அடிவரை பதிவு செய்துள்ளது அக நானூற்றின் 141 ஆம் பாடல். இப் பாடலைப் பாடியவர் மதுரையின் நக்கீரர். ஆக, மதுரைக்காரரென்பதால் அவர் தெளிவாக அதனைக் கார்த்திகை மாதத்தில் அதுவும் தெருக்களில் ஏற்றப்படும் தீபம் என்றே குழப்பமின்றிக் குறிப்பிடுகிறார். இவ் வழக்கம் இன்றளவும் தொடர்ச்சியாய் நிகழ்வதை நான் 10 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ச்சியாக நேரில் கண்டவன்.
2. அகநானூற்றின் 185 ஆம் பாடல்:
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்
பெருவிழா விளக்கம் போல - எனக் கார்த்திகை விளக்கு விழாவை அதாவது தீப விழாவினைக் கூறுகிறது. எவ்வாறெனின், அருவிகள் ஏதுமற்றதும் உயர்ந்த சிகரத்தையுடயதுமான மலையில் ஏற்றப்படும் விளக்கு என அப் பாடலின் தரவு. என்றால், அருவிகளற்றதும் உயரமானதுமான மலை அதுவும் அதில் கார்த்திகை விளக்கு ஏற்றப்படுகிறது என்றால் அது பரங்குன்றா? அல்லது அண்ணாமலையா?
என்றால்,
அண்ணாமலையில் அருவிகள் ஏதும் பெரிதாக இல்லையென்றாலும் கந்தாசிரமத்தின் பின்புறமாக ஒரு சிறிய அருவி உண்டு.
ஆக, ஒரு குன்றில் தீபம் ஏற்றப்படுகிறது என்றால் அது எட்டுத்திக்கிற்கும் தெரியவேண்டும் அல்லவா? எனின், குறிப்பிட்ட மலையின் சிகர உச்சியில்தான் அது ஏற்றப்படவேண்டும். எனின், அருவியேதுமின்றி சுனைகளை மட்டுமே உடைய பரங்குன்றே பாடலில் சொல்லப்பட்டுள்ளது என்பதாம்.
எனினும், தற்போது பரங்குன்றில் உச்சிப்பிள்ளையார் கோயிலின் மீது ஏற்றப்படுகிற தீபம் எட்டுத்திசைக்கானதல்ல. அது, வெறும் வடதிசையிலிருந்து பார்க்க முடிகிற சாத்தியம் கொண்டதே. ஆக, ஒரு பெரும் தொல் வழக்கம் குன்றி நலிந்து அதன் ஏரணமும் காரணமும் திரிபடைந்த நிலையில் இன்று ஏற்றப்படுகிற பரங்குன்றின் தற்போதைய தீபம் ஒரு திசையில் மட்டுமே தெரிகிற கார்த்திகை விளக்கமாக! (தீபமாக).
எனின், சங்க காலத்தின் போது; எல்லைக்கல் என இப்போது சொல்லப்படுகிற அக் குறிப்பிட்ட இடத்தில்தான் முன்பு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டிருக்கவேண்டும்.
இன்று வேண்டுமானால் ஆங்கே எல்லைக்கல் நடப்பட்டிருக்கலாம். அல்லது அந்தத் தூணையே எல்லைத்தூணாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
தீபம் ஏற்றுவது ஆங்கே கைவிடப்பட்டதின் பின்னணியில் மலை உச்சியில் இருந்த சங்ககால முருகன் கோயில் சிதிலமடைந்து பின் இல்லாது போனதாகலாம். மட்டுமின்றி, அதனைப் புணரமைக்கக் களப்பிரர் காலம் இசையாமல் (சமண மலையாக அது இருந்துவிட்டுப்போகட்டும் என்கிற நிலைப்பாட்டில்) போனதாலுமாகலாம். பின்னரே நெடுஞ்சடையன் பராந்தக பாண்டியனால் அன்றைய விமரிசையாக சென்றுகொண்டிருந்த குடைவரை மரபின்படி மலை உச்சியின் அதே இடத்தில் கட்டுமான கோயிலை மீண்டும் அமைக்காமல் ஆனால், குடைவரையாகக் குடைந்து அமைக்கப்பட்டதே இன்று நாம் வணங்குகிற முருகரின் குடைவரைக்கோயில்.
எனினும் இக் குடைவரை,
மலையின் வடபுற முகப்பில் அமைந்துபோனதால் வடக்குத் திசையே முதன்மையாகிப்போன நிலை. ஆம்! கிழக்கில் சரவணப்பொய்கை இருப்பதால்தான் வடபுறத்தில் குடைவரை வெட்டப்பட்டது. எனவேதான், நாயக்கர் கால விளக்குத்தூணும் பழைய உச்சியிலிருந்து இடம் பெயர்ந்து சற்றே கீழிறங்கி முன்புறமாகவே அமைத்துவைக்கப்பட்டிருந்தது. அதுவும் கூட பின்னர் வழக்கறுந்து போன நிலையில் தற்போது பிள்ளையார் கோயிலின் உச்சியில் ஏற்றப்படுகிற தீபத்தைக் காணத்தான் மலையின் எல்லாத் திசைகளிலும் வாழ்வோரும் கூட கோயில் எதிரே வடக்கில் நீளும் தெருவில் (சன்னதி தெரு) வந்து குழுமியோராய்க் காணும் வழக்கம் நாளதுவரை.
ஆயினும், தற்போது உயரம் குறைவான இடத்தில் ஏற்றப்படுவதால் அது தீபமாகத் தெரியாமல் ஏதோ ஒரு பொருள் தீப்பற்றி எரிவது போன்றே இடரச்செய்கிறது. நான் அந் நெருடலை உணர்ந்தவன். ஆனால், திருவண்ணாமலையின் உயரம் 2668 அடி என்பதால் அதன் சிகர உச்சியில் ஏற்றப்பட்ட தீபம் அதன் தொலைவு மற்றும் உயரத்தின் காரணமாய் குவிந்து அகல் விளக்கின் தீபம் போன்று காட்சியளிப்பதால் காண்போரிடையே ஈர்ப்பும் பற்றும் வணக்கமும் இயல்பாக ஏற்படுகிற நிலை. ஏன் தியானமும் கூட!
தெளிவாக ஒன்று தெரியவேண்டி தரப்பட்ட முந்தைய உவமை
அல்லது எடுத்துக்காட்டு என்பது
"குன்றிலிட்ட தீபம் போல" என்பதாகத்தான் இருந்தது.
தற்போதைய உச்சிப்பிள்ளையார் கோயில் மீது ஏற்றப்படுகிற பரங்குன்றின் தீபத்தை அவ்வாறான எடுத்துக்காட்டாகவோ உவமையாகவோ பயன்படுத்தமுடியுமா?
கிட்டத்தட்ட சொக்கப்பனை கொளுத்துவதைப்போன்றுதான் பரங்குன்றின் தற்போதைய தீபம். அதாவது கொள்ளிக்கட்டை எரிவதைப்போன்று. அதுவும் ஒருதிசையின் கண் குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்தால் மட்டுமே தெரிகிற நிலை. பெரும்பான்மையர் இத்தகைய தீபத்தைக் காண ஆர்வமில்லாதோராகவும் ஆகிப்போனதும் உண்மை.
என்றால், 'குன்றிலிட்ட தீபம்'
என்ற சொல் வழக்கு மலையின் நடு உச்சியில் ஏற்றப்பட்டதால் புழங்கியது தானே?
திருவண்ணாமலை அதனை உறுதியாக மாற்றாமல் செய்கிறது. இன்னபிற சமயங்களின் ஆக்கிரமிப்புகளும் அங்கு இல்லை.
என்றால், எல்லை அளவைக்கல் எனச் சொல்லப்படுகிற பரங்குன்றின் உச்சியின் நடுவில் உள்ள தூண் விளக்குத்தூணாக இருந்திருக்க மிக வாய்ப்புண்டு. அதன் மேல் முனையில் இருக்கும் குழிவு அதனுள் அகன்ற பெரிய அகல் அல்லது கொப்பறையைப் பொருத்தி அதில் திரியிட்டு விளக்கேற்றும் முறையின்படியாகலாம். ஆனால், அந்தக்குழியில் எண்ணெய் ஊற்றி ஏற்ற முடியுமா என்றெல்லாம் கேள்வி கேட்பது பாமரத்தனத்தின் படியானதே. (The top pit of the pillar acctually a socket to hold the vessel that contain considerable quantity of Oil)
என்றால், முன்பு விளக்குத் தூணாக இருந்த அதையே பின்னர் பிரிட்டிஷார் அளவைக் கல்லாகப் பயன்படுத்தியிருக்கவேண்டும். அதற்கான குறியீடுகளும் அதில் பொறித்திருக்கலாம். சாத்தியம் இருக்கிறது.
ஆக, அளவைக் கல்லாகச் சொல்லப்படுகிற பரங்குன்றின் சிகர உச்சியின் விளக்குத்தூணைப் போன்றே அதன் அருகே உள்ள கீழக்குயில்குடி மலையின் உச்சியிலும் விளக்குத்தூண் ஒன்று எண்ணெய் ஒழுகிய வடுவுடன் காணப்படுகிறது. ஆம், நான் நேரில் பார்த்திருக்கிறேன். (பார்க்க முதலாம் இரண்டாம் படம்).
எனின்...
சங்கம் மருவிய காலத்தின் உடனடி இலக்கியமான சீவக சிந்தாமணி;
'குன்றத்து உச்சிச் சுடர்' (262) என்கிறது.
குன்றம் என்றாலே பிற மலைகளும்தான் எனக் கொம்பு சுற்றத் தேவையில்லை. அது பரங்குன்றே.
குன்றென்றால் முருகனே.
இது தமிழ் மரபு.
மலையென்றால் சிவன் என்பது வட உளவியல்தானெனினும் நெடு நாளாக நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒன்று.
மேலும், இன்னமும் தெளிவாக
'குன்றின் கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ் குவளை பைந்தார்' என்கிறது அதே நூல்.
ஆக, குன்றம் / கார்த்திகை
என்றாலே திருப்பரங்குன்றம் தான். திருப்பரங்குன்றத்தைப் பொறுத்தவரை அதுவும் கார்த்திகை தீபத்தைப் பொறுத்தவரை திருவண்ணாமலையும் இரண்டாம் நிலையை உடையதே.
மேலும்,
கார் நாற்பது பாடிய
பொய்கையாரும்
'கார்த்திகைச் சாற்றிற் கழி விளக்கைப் போல' என்கிறார்.
ஆக, பின்னரே
கோவில்களிளும் தூண் அமைத்து அதில் விளக்குச் சுடர் ஏற்றும் வழக்கம் பரவியது.
இதனை ஞான சம்பந்தர்:
வளைக்கை மட நல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கு இல் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகை நாள்
தளத்து ஏந்து இள முலையார் தையலார்
கொண்டாடும் விளக்கீடு காணாதே
போதியோ பூம்பாவாய் (2: 47:3)
எனும் பாடலால் பதிவு செய்திருக்கிறார்.
ஆக, குன்றின் உச்சியில் ஏற்றப்படும் விளக்குச் சுடர் பின்னர் கோயில்களிலும் ஏற்றப்படலாயிற்று என்பதாகும். என்றால், பொ.ஆ. 7ஆம் நூற்றாண்டின் போது மயிலை கபாலீசுவரர் கோயிலிலும் கார்த்திகை விளக்கு ஏற்றப்பட்டிருந்தது என அறியலாம்.
வைணவப்பிரிவில் பெருமாள் ஒருவர் விளக்கொளி பெருமாள் எனக் காஞ்சிபுரத்தில் அறியப்படுகிறார்.
சரி! இப்போது இருதரப்பின் உளவியலுக்கு வருவோம்.
ஒட்டு மொத்த மலையும் முருகனுக்கானதாக சங்க காலம் வரையில் இருந்துள்ள நிலையில் பின்னர் சமணம் அதன் ஒரு பகுதியை ஆட்கொண்டது. இடைக்காலத்தின் போது தென் பரங்குன்றின் சமணக் குடைவரையை மாற்றிச் சிவனுக்கான குடைவரையாக மாற்றப்பட்ட நிலையில் அம் மலையைச் சைவ நெறியினரும் உரிமை கொண்டாடும் வழக்கம் தொடங்கியது. வெகு பிந்தைய காலத்தில்தான் இசுலாமியர் அம் மலையின் தொல் வரலாற்றை அறிந்தோ அல்லது அறியாமலோ அதனைச் சிக்கந்தருக்காக அதுவும் மலையின் உச்சிப் பகுதியை ஆக்கிரமித்து பள்ளிவாசல் கட்டி வைத்துள்ளனர்.
அதன் அருகில் மச்சமுனிக்கான பள்ளிப்படைக்கோயிலும் அமைந்திருந்த நிலையில், அதனைத் தற்போது வருமானம் வேண்டி காசி விசுவநாதர் கோயிலாக மாற்றி வைத்திருப்பதும் என இப்படி சில கிளை வரலாறுகளுடன் மலை சிக்கலாகிக் கிடக்கிறது.
இவையன்றி,
நாயக்கர் காலத்தில் மலையின் மேற்கின் அடிவாரத்தில் சமண சிற்பங்களை மறைத்தார்போல முருகனுக்காக பழனி ஆண்டவர் கோயில் ஒன்று கட்டப்பட்டிருப்பதும் என இம் மாமலை மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கிறது.
சரி!
தொன்று தொட்டு முருகனின் வழிபாட்டு மலையாக இருந்த அதனில் இசுலாமியர் பள்ளி வாசல் கட்டியது சரிதானா? என்றால் முழுக்க முழுக்க அது தவறே!
ஆனால், எல்லாம் மறந்து போய் இன்று நாமோ அல்லது இசுலாமியரோ நட்புடனும் இணக்கமும் பேணி உறவாடலாம். அது வேறு கதை. ஆனால், மலையை ஆக்கிரமித்தபோது இருந்த அன்றைய (பெர்ஸிய) இசுலாமியரின் உளவியல் வன்மத்துடனானதே.
சரி!
இதனை இப்போது மதவாத அமைப்புகள் கையிலெடுத்திருக்கிறதே அது சரிதானா? என்றால், கலவர நோக்கில் அவ்வாறு செயல்படுவதானால் அது முற்றிலும் தவறு. தற்போதைய ஒட்டு மொத்த இந்தியாவில் தமிழகம் தனித்த இயல்புடையதே. ஆக, திருப்பரங்குன்றத்தில் ஜெய் ஸ்ரீராமுக்கு வேலையில்லை.
அதாவது, தமிழகத்தில் இராமர் ஆட்சி தேவை என்போர் முருகன் ஆட்சி மொக்கையாகிவிட்டதா? என்பதற்கு பதில் சொல்லியாகவேண்டும்.
சொல்லப்போனால்
தொல் தமிழ் வேந்தர்களின் வீரத்தையும் அழகையும் எடுத்துக்கூற எந்த இராமனையோ, சிவனையோ அல்லது விஷ்ணுவையோ உவமை கூறியதாக சங்க இலக்கியங்களில் காணவியலாது. மாறாக, அவை முருகனையே உவமை கூறி வைத்துள்ளன. வட இந்திய பெரும்பேரசனான இந்திரனே வெல்ல முடியாது போகத் தன் மகள் தேவயானியைக் கொடுத்துச் சமரசம் செய்தவனாக முருகன் ஒப்பற்ற பெருவேந்தனாகக் திகழ்ந்திருந்தவன். முருகன் தொல் வேந்தன். ஆனால் அவனைக் கடவுளாகப் பாவித்ததற்கான விளைவுகளை இப்போது அனுபவிக்கிறோம்.
என்றால், நமது ஆன்மீகப் பற்றுதலும் சமய நம்பிக்ககைளும் அல்லது எதிர்க்கச் செய்தவாறு பகுத்தறிவு பேசுவதும் கூட நம் புரிதலில் பெருங்குழப்பம் நிலவுகிறது என்பதையே காட்டும்.
ஆக, பரங்குன்றின் உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் எனின் இதனை முடிவு செய்ய வேண்டியோர் சார்பற்ற எண்ணத்துடனான மதுரை மக்களும் ஏன் ஒட்டுமொத்த தமிழக மக்களுமே ஆவர். என்றால், கோயில் நிர்வாகமோ, அரசோ, அல்லது இன்னபிற வன்முறை மதவாத சக்திகளோ உள் நுழையக்கூடாது. ஆள்வோர்கள் எல்லாம் எல்லாவற்றையும் புரிந்து விரல் நுனியில் வைத்திருக்கும் அறிஞர்களா என்ன?
நிற்க!
இது நடக்காதுதான் எனினும்
ஒரு கற்பனை மட்டுமே!
ஆக, கிறித்துவர்களுக்கும் பரங்குன்றின் மீது ஒரு கண் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர்களும் ஒருவேளை எதிர்காலத்தில் ஏதோ ஒரு டுபாக்கூர் ஆட்சி தமிழகத்தில் நடக்கின்ற நிலையில் அவர்கள் காசை வாங்கிக்கொண்டு அனுமதி தர வாய்ப்பிருக்கலாம் அல்லவா? என்றால், ஒரு சிலுவையை நட்டுவைத்த பின்னர் ஒரு நூறு ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களுடன் நாமும் மாமன் மச்சான் போல, தொப்புள் கொடி உறவு, மத நல்லிணக்கம் என அதையும் ஏற்றுக்கொண்டோராய் சப்பைக்கட்டு கட்டுவோமா என்ன?
ஆக,
தமிழர்க்கு எல்லா மதங்களும் தேவையில்லாத ஆணிகளே. பரங்குன்று 1000 விழுக்காட்டளவில் தமிழ் வேந்தனான முருகன் பின்னர் கடவுளாக வழிபடப்பட்ட நிலையில் அவனுக்கான மலையாக அது.
என்றால், அதனை சிவன் மலையாக ஆக்கிரமித்ததும் தவறுதான்.
ஞான சம்பந்தர், சமணரைக் குண்டர்கள் என ஏளனம் செய்து ஆனால் அம் முருக மலையை சிவனை முன்னிட்டுப் பாடி அப்போதே கலகம் செய்ததாகப் படித்த ஞாபகம்.
என்றால், நம் வேந்தர் வழிபாட்டை வழி மறித்து ஆக்கிரமித்ததே சிவ வழிபாடு. இது வெகுன்முன்பே நடந்ததால் நமக்கே தெரியாத நிலை. மூத்த வேந்தன் (கடவுள்) முருகனை சிவனின் மகனாக்கி மாய்மாலம் செய்ததெல்லாம் மறக்கடிக்கப்பட்டுவிட்டது.
முன்பு முருகன் ஆரியத்தை சிறையில் அடைத்ததைத்தான் பின்னர் பிரம்மனைச் சிறையில் பூட்டியதான ஓரளவுக்கு உண்மையத் தக்கவைத்திருக்கும் கதையின் உலா.
வெகு முன்பிருந்தே
நாம் அறியாமலேயே உடன்பாடாகியிருக்கிறோம். அதனால்தான், நம் ஆட்களே வக்காலத்து வாங்குகிற நிலை.
ஆனால், என்ன ஆயிற்று? மூத்த கடவுள் முருகனை இப்போது சிவன் கோவிலில் பரிவார தேவதையாக இரண்டாம் தரத்தில் வைத்துக் கேள்வி கேட்க இயாலத அளவில் ஆகம விதி செய்துள்ளனர்.
என்றால், சமணமோ, சைவமோ, இசுலாமியமோ, பரங்குன்றிற்கு அந்நியங்களே.
வெளியின் (பிரபஞ்சம்) மூலக்கூறு என்பது சுடரொளி(லி)யே. அணு, ஆட்டுக்குட்டி எல்லாம் அப்புறம் தான்.
அச் சுடர் ஒளியைத்தான் எவ்வொருவரும் தியானத்தின் போது வாய்ப்பிருப்பின் நுதல் நடுவே காணுகின்றனர். இவ் ஒளியை நானும் நெற்றி நடுவிலும் வெளியிலும் கண்டிருக்கிறேன். ஆக, இதனைச் சிவம் என்றாலோ அல்லது சில்க் ஸ்மிதா என்றாலோ பொருள் படவே செய்யாது. அது ஒளி அவ்வளவே. அது நாம் வைக்கப்படும் சமயம் சார்ந்த பெயர் சார்ந்ததல்ல.
வள்ளலார் இறுதியில் கண்ட மெய்ப்பொருள் ஒளிச்சுடரே. முன்பு திரு மூலர் இதை உணர்ந்திருந்தாலும் பின்னர் திரிபடைந்தவரே.
குன்றின்மீது தீபம் ஏற்ற வேண்டும் என்கிற எண்ணம் உண்மையாக இருந்தால் அம் மலைகளை உடைப்பதை நிறுத்தவேண்டும்.
அல்லது அதன் மீது இனி எந்தச் சமயங்களின் கோயில்கள் கட்டுவதும் தடை செய்யப்படவேண்டும். ஆம்! மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்.
தீபம் உச்சியில் மட்டுமே!
இடையிலோ அல்லது நிலத்திலோ என்றால் அது அடுப்படி நெருப்பே!
பொருளீட்டும் நோக்கத்துடன் எம்மை பிரிந்து சென்ற என் தலைவன் என்னைக் காண எப்போது வருவான்.?
சொல்வாயாக என் அருமைத் தோழியே..
தோழி கூறும் மறுமொழி இது.
உழவர்கள் உழவுத் தொழில் முடித்து தங்கள் கலப்பைக்கு ஓய்வு கொடுத்த நாள். மழை பெய்து ஓய்ந்த நாள். முழு நிலவு நிறைந்த நன்னாளில் இருளை அகற்றும் விளக்குகளை வீதிகள் தோறும் ஏற்றி வீடுகள் தோறும் மாலைகள் தொங்கும் நாளான கார்த்திகை தினத்தன்று பலர் தொழும் விழாவான கார்த்திகை நாள் கொண்டாடும் பழவிறல் மூதூராகிய நம் ஊருக்கு நம் தலைவன் வருவார் அம்மா.
/ "உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாக விசும்பின் குறுமுயல் மறுநிறம் கிளர மதி நிறைந்து அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் மறுகு விளக்கு உறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுஉடன் அயர.வருகதில் அம்ம../
கார்த்திகை நாளின் விளக்கீடு காட்சியை அப்படியே வர்ணனை செய்கிறது இப்பாடல்.
முருகன் கோவிலுக்குச் சென்று ஜெய்ஸ்ரீராம், பாரத் மாதாகி ஜே என்று கோசமிடுபவர்கள் யாரும் முருக பக்தர்கள் அல்ல. தமிழர்கள் அல்ல. இந்துக்களும் அல்ல. இவர்கள் நோக்கம் வழிபாடும் அல்ல என்பது தெளிவாகிறது.
இந்திய தேசிய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட ஒரு உயர்வான சொல்
" பாரத் மாதகி ஜே " .
ஒட்டுமொத்த இந்தியர்களும் அந்நியர் ஆதிக்கத்திற்கு எதிராக முழக்மிட்ட சொல் " பாரத் மாதாகி ஜே " .
ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஒற்றிணைத்த சொல் இது. இந்த ஒட்டு மொத்த இந்தியர்களில் இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் அடக்கம்.
ஒற்றுமைக்காக உருவான இந்த சொல் இன்று பிரிவினைக்காக கொண்டு வரப்பட்டது, இத்தேசத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரும் அநீதியாகும்.
திருப்பரங்குன்றம் நிகழ்வு என்பது மதுரைக் காரர்களின் பிரச்சனை. அவர்கள் பேசி முடிவு காணட்டுமே. அவர்கள் தர்காவிற்கும் சென்று வழிபாடுவார்கள். முருகனையும் வழிபாடுவார்கள். கார்த்திகை தீபம் எங்கு ஏற்றப்படவேண்டும் என்பதை அம்மக்கள்தானே தீர்மானிக்கவேண்டும். இவ்விவகாரத்தில் மதுரை மக்கள், திருப்பரங்குன்றம் மக்கள் கருத்து கேட்கபட்டதா ...?
மதுரை மக்களைப் பொறுத்தவரை இஸ்லாமியர் என்போர் தன் தாய்மொழி தமிழ் பேசும் பக்கத்து வீட்டுக்காரர். இவர்கள் அரேபியாவிலிருந்து வந்தவர்கள் அல்ல என்பதுதான் மக்கள் நிலைப்பாடு.
வடமொழி பேசும் ஒரு உ.பி, குஜராதி,பீகாரி இந்துவைவிட தனக்கு அருகில் இருக்கும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களே மதுரை மக்களுக்கு நெருக்கமானவர்கள். ஒருவரை ஒருவர் சாந்துதான் அவர்கள் சமூகச் சூழலும் வாழ்வாதாரமும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டமைப்பை உடைக்கும் விதமாகத்தான் திருப்பரங்குன்றம் நிகழ்வு அரங்கேற்றப்பட்டதோ என்ற ஆதங்கம் எனக்கு.
ஒருவேளை நீதிமன்ற உத்திரவை ஏற்று அவ்விடத்தில் தீபம் ஏற்பட்டிருந்தால் - ஒரு கலவரம் உருவாகியிருக்கவும் வாய்ப்புண்டு. அதைத் தடுத்த தமிழகரசின் செயல்பாடு பாரட்டுக்குரியது என்பது எனது கருத்து. இதற்காக என்மீது உ.பி. முத்திரை குத்தினாலும் கவலையில்லை.
சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு விளக்கேற்ற இம்மாம்பெரிய போராட்டம் நடத்துபவர்கள், சமூகம் சார்ந்த பிரச்சனை ஏதாவது ஒன்றுக்கு போராட்டம் நடத்தி சிறை சென்றுள்ளார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
இங்கே இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போது அதோ அங்கே இதே மதுரையில் முருகனுக்கே உரிய தனித்தக் குடவரை லாடன் கோவிலில் ஒரு விளக்கேற்ற ஆளில்லாமல் இருண்டு கிடந்ததைப் பார்த்து மனம் வலிக்கிறது. நிச்சயமாக நான் மதுரையில் இருந்திருந்தால் நண்பர்களுடன் முருகன் குடவரைக் கோவிலுக்குச் சென்று 100 விளக்காவது ஏற்றியிருப்பேன்.
இறுதியாக நான் கூற விரும்புவது -
நான் ஒரு இந்து. கலவரத்தை விரும்பாத மனித நேயத்தைப் போற்றும் ஒரு இந்து. மதப்பற்றைவிட மனித உயிர்கள் மேலானது என்னும் கொள்கையுடைய இந்து.
" ஈஸ்வர்-அல்லா தெரே நாம் " என்னும் மகாத்மாவின் சொல்படி வாழும் சராசரி ஒரு மனிதன் நான்.
திரும்பவும் சொல்கிறேன்..
திருப்பரங்குன்றம் பிரச்சனைக்குத் தீர்வு நீதிமன்றத்தில் இல்லை.
செபித்திட காலம் செப்புவேன் மக்களே குவித்தெழுந்தையும் கூறும் பஞ்சாட்சரம் அவித்திடும் இரவி அனலும் மேலும் தவித்திடும் சிந்தை தளராது திண்ணமே
4.7 / 5 Rating
3.5M+ Downloads
Audio Magazines
Instant News Summary
Free 500+ Audio Books
Low Data Usage
INSTALL APP & GET 30 DAYS FREE TRIAL
INSTALL APP
-மச்சமுனி (யோகம் ஞானம் வைத்தியம்)
பொருள்: ஜபம் செய்ய ஏற்ற காலம் பற்றி சொல்கிறேன் மக்களே! காலையில் எழுந்ததும் திருவைந்தெழுத்தாகிய பஞ்சாட்சர மந்திரத்தை (நமசிவாய) ஓதவும். காலையில் இதை ஜபித்திட சூரியக் கதிர்கள் உடலில் பரவும். இதனால் மனம் உறுதியடையும்.
நாம் திருப்பரங்குன்றத்தை அடையும் போது பின்மதியம் மூன்று மணி. மார்கழி மாதத்தின் இளஞ்சூடான வெய்யில் குளிருக்கு இதமாக இருந்தது. திருப்பரங்குன்றம் மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள சரவணப் பொய்கைக்குச் செல்லும் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினோம். அடிவாரத்தின் வலப்பக்கம் உள்ள குளத்தில் துணிகளை வெளுத்துக்கொண்டிருந்தனர். படிக்கட்டுகளில் ஏறியபடி கீழ்நோக்கிப் பார்க்கும்போது வயல்வெளியின் பச்சைப் போர்வையும் பனைமரங்களும் ஓர் அழகிய நீர்வண்ண ஓவியம் போல் காட்சியளித்தது. குடும்பம் குடும்பமாக குரங்குகள் எங்களைக் கடந்தும், எதிர்கொண்டும் படிகளில் பயணித்துக் கொண்டிருந்தன... சித்தர் மச்சமுனியை தரிசிக்க நாங்கள் தொடர்ந்து படியேறிக்கொண்டிருந்தோம்...
மதுரைக்குத் தென்மேற்கே ஒன்பது கி. மீ தொலைவில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் கோயில் பல்வேறு புராண - வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது.
'பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறுநோயே'
என திருஞானசம்பந்தர் பாடிய சிறப்புமிகு சிவத்தலம் திருப்பரங்குன்றம். ஞான சம்பந்தரோடு சுந்தரரும், வள்ளலாரும், அருணகிரிநாதரும், கச்சியப்ப சிவாச்சாரியாரும் இந்த ஆலயத்தைப் பாடி சிறப்புச் செய்திருக்கின்றனர். வானிலிருந்து பார்க்கும் கோணத்தில் இந்த மலை லிங்க வடிவில் தெரியும் என்பதால், பரம்பொருளே இங்கு வந்து மலையாக வடிவுகொண்டார் எனும் பொருளில் இது திருப்பரங்குன்றம் ஆனது. இறைவனின் திருப்பெயர் பரங்கிரிநாதர். புலவர் நக்கீரர் முருகனைப் போற்றிப் படைத்த 'திருமுருகாற்றுப் படை'யில்தான் 'ஆறு படை வீடு' என்னும் முருகன் வழிபாடு தொடங்குகிறது. ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடு இந்தத் திருப்பரங்குன்றமே! தேவயானை என்னும் தெய்வானையை முருகன் மணந்த இடமும் இதுவே! மச்சமுனி, மச்சேந்திர நாதர், மச்சேந்திரா என்னும் பெயர்களால் அழைக்கப்படும் மச்சமுனி சித்தர் ஜீவ சமாதி அடைந்தது திருப்பரங்குன்றம் மலையில்தான்!
(மச்சமுனியின் பெருமைகளைக் கூறும் வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும் ..)
மலைமீது இருக்கும் காசிவிஸ்வநாதர் கோயிலில்தான் மச்சமுனியின் ஜீவசமாதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்பக்கம் இருக்கும் சுனை நீரில் மச்சேந்திரர் மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம். இவர் மகிமை பொருந்திய தலங்களாக நாகை வடக்குப் பொய்கை நல்லூர், இமயமலை, ஹரித்வார், ருத்ரப்பிராயகை, சதுரகிரி மற்றும் கொல்லிமலை ஆகிய இடங்களும் குறிக்கப்படுகின்றன. மேலும், நேபாளத்தின் காட்மண்டுவில் 'பாக்மதி' என்ற இடத்தில் அமைந்துள்ள மச்சேந்திரநாதர் கோயிலில் இவர் ஜீவ சமாதி கொண்டுள்ளார் என்ற கருத்தும் உண்டு.
மச்சேந்திரநாதர் என்ற பெயரில் உள்ள 'நாதர்' என்ற பெயரைக் கொண்டு, இவர் நவநாதச் சித்தர்கள் எனும் நாதச் சித்தர் மரபைச் சேர்ந்தவர் என அறிய முடிகிறது. இவர் அகத்தியர் காலத்தவர் எனவும், அவரிடம் உபதேசம் பெற்றவர் எனவும், வாத நிகண்டு, மச்சமுனி வைப்பு ஆகிய நூல்களை இயற்றியவர் எனவும் 'புலவர் சரித்திர தீபகம்' தெரிவிக்கிறது. 'அபிதான சிந்தாமணி'யோ இவரை போகரின் மாணவர் எனக் குறிக்கின்றது.
'மச்சம்' என்றால் மீன். மீனின் பெயரைக் கொண்ட இந்தச் சித்தரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான புராணக்கதை உண்டு. கோடியக்கரை கடற்கரைப் பகுதியில் ஒரு சமயம், சிவபெருமான் உமையவளுக்கு காலஞான உபதேசம் செய்துகொண்டிருந்தார். அப்போது ஏற்படும் களைப்பின் காரணமாக உமாதேவி தூங்கி விடுகிறார். அங்கு நீந்திக் கொண்டிருக்கும் ஒரு மீனின் வயிற்றில் உள்ள மனிதக் கரு ஒன்று, அந்த உபதேசத்தைக் கேட்டபின் சட்டென மனித உருவத்துடன் வெளிவருகிறது. சிவபெருமான் அக்குழந்தைக்கு 'மச்சேந்திரன்' எனப் பெயர் சூட்டுகிறார். "நான் உபதேசித்த கால ஞான தத்துவத்தை கருவிலேயே கேட்ட நீ, கருவிலேயே திருவுற்றவன். பல ஞானங்களை விரைவாகக் கற்றுணர்ந்து, மக்களுக்குப் பயன் தரும் செயல்களை ஆற்றி பல்லாண்டு காலம் நாத சித்தனாக இந்த பூமியிலே வலம் வருவாய்! என் குமரன் கோயில் கொண்டுள்ள குன்றம் ஒன்றில் சித்தி ஆவாய்!" என வாழ்த்தி அனுப்புகிறார். (சித்தர் மச்சமுனி தன் சீடன் கோரக்கரை குப்பை மேட்டிலிருந்து உயிர்ப்பித்த கதையை இத்தொடரின் 5-ஆம் அத்தியாயத்தில் வாசிக்கலாம்.)
ஒரு மணி நேரப் படிக்கட்டு நடைப்பயணத்துக்குப் பின் மலைமேலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலை அடைந்தோம். ஒரு பாறையில் குடைவரைக் கோயிலாக அமைந்திருக்கிறது விஸ்வநாதர் கோயில்.
வாசலிலேயே வழிமறித்து வலுக்கட்டாயமாக ''சுனை மீன்களுக்குப் பொரி போடுங்கள்" எனக் கூறி நாற்பது ரூபாயை அபகரித்துக்கொண்டனர் கோயில் வியாபாரிகள். ஒவ்வொரு கோயிலிலும் இத்தகைய செயற்கையான வியாபாரங்கள் பரிகாரங்கள் என்ற பெயரில் அதிகரித்து வருகின்றன. தீபமேற்ற கலப்படமில்லாத நல்லெண்ணையோ, நெய்யோ எந்த ஆலயத்திலும் கிடைப்பதில்லை. காசி விஸ்வநாதர் ஆலயத்துக்குள் சென்று கண்மூடி வழிபடும்போதே பொரிப் பாக்கெட்டை சட்டென பிடுங்கிச் சென்றது குரங்கு. சரி குரங்குக்கு உணவாக ஆனதே அந்தப் பொரி என்ற எண்ணத்துடன் கோயிலுக்குப் பின்பக்கம் உள்ள சுனையை அடைந்தோம். சிறிய மலைப்பாறைக்கிடையே அமைந்திருந்த, அந்தச் சிறு நீர் நிலையில் சிறுசிறு மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. மீன்களே அங்கு சித்தர் மச்சேந்திரராக நீந்துவதாக ஒரு நம்பிக்கை.
சித்தரின் ஜீவசமாதி இருக்கும் இடம் அந்தச் சுனையோ அல்லது விஸ்வநாதர் சந்நிதியோ என நம்மால் அறியமுடியவில்லை. எனினும் ஜீவசமாதி பீடங்கள் அமைந்துள்ள இடங்களில் தவழும் இறை அதிர்வுகளை அங்கு நம்மால் உணர முடிந்தது. கோயிலை விட்டு கீழிறங்கத் தொடங்கும் போது, கோயிலுக்கு வந்தவர்களிடம் எந்த பயமும் இன்றி உணவுப்பொருள்களை அருகில் வந்து வாங்கி உண்ணும் குரங்குக் குட்டிகளைக் காண பரிதாபமாக இருந்தது. காட்டில் அவற்றுக்கு உணவு கிடைக்கவில்லையா? பக்தர்கள் தரும் உணவை உண்டு பழகிவிட்டனவா? காசிவிஸ்வநாதரும் மச்சேந்திரரும் மட்டுமே அறிவர்.
மச்சமுனி (Machamuni) காகபுசுண்டரின் சீடராவார். சிவபெருமான் ”கௌலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி விட்டாராம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவும் அதுவே மச்ச முனி என்கிற வரலாறு கூறப்படுகிறது.[1] இவரின் குருபூஜை [2](பிறந்த திருநாள்) புரட்டாசி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி அன்று, அதாவது பிள்ளையார் சதுர்த்திக்கு மறுநாள் ஆகும்.[3]
மச்சமுனி, மச்சேந்திர நாதர், மச்சேந்திரா என்னும் பெயர்களால் அழைக்கப்படும் மச்சமுனி சித்தர் ஜீவ சமாதி அடைந்தது திருப்பரங்குன்றம் மலையில்தான். இவர் சமாதி குறித்து முரணான கருத்துக்கள் சொல்லப் படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் சாமாதியடைந்ததாக ஒரு குறிப்பும், மற்றயது திருவானைக்காவில் சமாதியடைந்ததாகவும் கூறப் படுகின்றது.