அரசியல் செய்வதில் திமுக எப்போதும் மாஸ்டர் என்பதை அனைவருமே ஒப்புக்கொள்வார்கள். எந்த பிரச்சினை கிடைத்தாலும் அதை வைத்து அரசியல் செய்வது ஒருவகை. ஆனால் பிரச்சினைகளை உருவாக்கி அதை வைத்து அரசியல் செய்வது என்பது திமுக ரூட். திமுக அதில் எப்போதும் வித்தகர்கள்.
பாஜகவுக்கு எதிரான நேரேட்டிவ் செட்டிங் செய்ய ஓவர்டைம் வேலை பார்க்கிறது திமுக. அதற்காக பிரச்சினைகளை உருவாக்குவதில் முனைப்பு காட்டுகிறது. முக்கியமாக மத்திய அரசு நிதி தருவதில்லை என்பது திமுக செட் செய்த நேரேட்டிவ். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக ஜி எஸ் டி வரிப்பகிர்வு விவகாரத்தில் சில நேரங்களில் தவணை தொகை வருவது தாமதமாகும். அந்த தாமதத்தை வைத்து கூட அரசியல் செய்து விடும் திமுக. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தாமதத்திற்கு இரண்டு பக்கமும் காரணம் இருக்கும்.
ஜி எஸ் டி வரிப்பகிர்வை பெற மாநில அரசு utilization certificate கொடுக்க வேண்டும். அதன் பிறகு தான் மத்திய அரசு நிதியை விடுவிக்கும். இது எல்லா மாநில அரசுகளுக்கும் பொருந்தும். இந்த சர்டிபிகேட் கொடுப்பது தாமதமானால் நிதி வருவதும் தாமதமாகும். மாநில அரசு செய்த தாமதத்தை திமுக வெளியே சொல்லாது. ஆனால் ஜி எஸ் டி பணம் வரவில்லை, மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று பிரச்சாரம் ஆரம்பித்து, முதல்வர் அறிக்கை விட்டு, பாராளுமன்றத்தில் எம்பிக்கள் பேசி. ஒரு ரவுண்ட் அரசியல் செய்து விடுவார்கள்.
அதே பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்டிபிகேட் கொடுக்க லேட் பண்றதே திமுக தான், என்று பதில் சொல்லியும் இருக்கிறார். ஆனால் நம்மூரில் தான் அந்த செய்தி வந்து சேராதே. அது தான் திமுகவின் சாமர்த்தியம். ஜி எஸ் டி வரிப்பகிர்வு பொறுத்தவரை பல விதமான பகிர்வுகள் இருக்கிறது. ஜி எஸ் டி மாநில பங்கு (50%) - இது உடனடியாக வந்து விடும், ஜி எஸ் டி இழப்பீடு, ஜி எஸ் டி மத்திய பங்கிலிருந்து மாநிலங்களுக்கான பகிர்வு. ஆனால் ஒட்டுமொத்தமாக ஜி எஸ் டி என்று மட்டுமே திமுக சொல்லும். சில உண்மைகளை மறைத்து மக்களை ஏமாற்றுவது.
கோவை, மதுரை மெட்ரோவுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை, தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று போராட்டமே நடத்தினார்களே , நினைவிருக்கிறதா?
கோவை மெட்ரோ 2014 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. கோவையுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட கொச்சின் மெட்ரோ செயல்பாட்டுக்கும் வந்தே 8 வருடம் ஆகி விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள். இந்த மெட்ரோ திட்டங்களுக்கு திட்ட மதிப்பீடு அனுப்ப வேண்டியது மாநில அரசின் வேலை. இந்த திட்ட மதிப்பீடு எப்போது அனுப்பப்பட்டது தெரியுமா? டிசம்பர் 2024. பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட். டிசம்பர் இறுதியில் திட்ட மதிப்பீட்டை அனுப்பி விட்டு, பிப்ரவரி பட்ஜெட்டில் ஏன் நிதி ஒதுக்கவில்லை என்று கேட்டு அரசியல் செய்து ஸ்கொர் செய்து விட்டது திமுக. 10 வருடமாக திட்ட அறிக்கை கூட தயாரிக்காத ஒரு அரசு, பழியை தூக்கி மத்திய அரசு மேல் போட்டுவிட்டது. வழக்கம் போல் இதற்கும் நிதியமைச்சர் பதில் சொல்லியிருக்கிறார்.
அடுத்ததாக திமுக இன்னொரு வழியை கண்டுபிடித்தது. அதாவது மத்திய மாநில அரசுகளின் கூட்டு நிதியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். அது போன்ற திட்டங்களின் தாமதத்தை தடுக்க மாநில அரசு தனது நிதியில் திட்டத்தை முடித்து விடும், அதன் பிறகு மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்றுக் கொள்ளவும். இது சர்வசாதாரணமான நடைமுறை. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து நிதி ஒதுக்கீடு செய்யும் என்பதால் தாமதம் எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம். ஏதேனும் ஒரு மாநில அரசு தாமதம் செய்தால் கூட இது நடக்கும். பல சமயங்களில் முன்கூட்டியே நிதி ஒதுக்கியதும் நடந்திருக்கிறது. இதையும் நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.
மத்திய அரசு ஒதுக்கும் நிதி தாமதமாகும் போது அதை வைத்தும் அரசியல் செய்தது திமுக.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்று சில மாதங்களுக்கு முன்பு அரசியல் செய்தார்களே நினைவிருக்கிறதா? மத்திய அரசு நிதி வரவில்லை என்பதற்காக பயனாளிகளுக்கு சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைத்தது திமுக அரசு. சம்பளம் கிடைக்காததால் பயனாளிகள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக சன் டிவியை வைத்து, அவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பினார்கள். அதை வைத்து பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இத்தனைக்கும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இந்தியாவிலேயே அதிகமாக பயன்பெறுவது தமிழகம் தான். உத்தரப்பிரதேசத்தை விடவும் அதிக நிதி தமிழகத்திற்கு தான் ஒதுக்கப்படுகிறது. ஆனால் பாஜக தமிழகத்தை வஞ்சிக்கிறது.
அடுத்ததாக திமுக கையில் எடுத்து அனைவருக்கும் கல்வி திட்டம். Right to Education திட்டத்தின் கீழ் மத்திய அரசு 40% நிதி தர வேண்டும். இந்த ஆண்டு மத்திய அரசு நிதி தாமதமானதை காட்டி தமிழத்தில் RTE திட்டத்தில் மாணவர் சேர்க்கையே நடைபெறவில்லை. இந்த நிதியை ஒதுக்கவில்லை என்று அரசியல் செய்து அதற்காக வழக்கு போட்டு, அதை வைத்து பிரச்சாரம் செய்து.... திமுகவின் நோக்கம் எல்லாம் பாஜகவுக்கு எதிராக எப்படி அரசியல் செய்யலாம் என்பதில் மட்டுமே இருக்கிறது. இத்தனைக்கும் RTE திட்டத்தில் மாநில அரசு 60% மத்திய அரசு 40%. அந்த 40% நிதி வரவில்லை என்பதற்காக ஒட்டுமொத்தமாக திட்டத்தையே நிறுத்தியிருக்கிறது திமுக.
தற்போது மத்திய அரசு நிதியை விடுவித்து விட்டது. காலாண்டு தேர்வு முடிந்த நிலையில் தற்போது தான் RTE அட்மிஷனுக்கு வழிகாட்டுதல்களை அறிவித்திருக்கிறது தமிழக அரசு. அதிலும் பல்வேறு குளறுபடிகள். நம்மை படிக்க விடாமல் செய்கிறார்கள் என்று மேடைக்கு மேடை பொய்களை சொல்லும் முதல்வர் செய்யும் காரியமா இது.
நான் முன்னமே சொன்னது போல் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் நிதி ஒதுக்குவதால் தாமதங்கள் ஏற்படும். மத்திய அரசு நிதி வந்தால் தான் அதுவும், அந்த திட்டத்திற்கான நிதி வந்தால் மட்டுமே திட்டங்களை செயல்படுத்துவேன் என்று திமுக வேண்டுமென்றே அரசியல் செய்கிறது. நியாயமாக பார்த்தல் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், RTE போன்றவற்றிற்கு தமிழக அரசு செலவு செய்து விட்டு, மத்திய அரசு நிதி வந்து உடன் வரவில் வைத்தால் முடிந்தது. எளிமையான விஷயம். ஆனால் அப்படி செய்தால் பாஜகவுக்கு எதிராக எப்படி கெட்ட பெயர் ஏற்படுத்துவது? அதுவும் இந்த நிதியெல்லாம் தமிழக அரசுக்கு ஒன்றுமே இல்லை.
மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது தான் மனசாட்சி உள்ள அரசு செய்யும். திமுக நினைத்திருந்தால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், RTE திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி மக்கள் பாதிக்கப்படாமல் தடுத்திருக்கலாம். ஆனால் அதில் திமுகவுக்கு என்ன நன்மை? என்ன பலன்? இப்படிப்பட்ட சுயநல அரசு இந்தியாவிலேயே இல்லை. மற்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கூட இப்படியெல்லாம் அரசியல் செய்வதில்லை.
திமுகவின் இந்த கேடுகெட்ட அரசியலுக்கு இன்னொரு லேட்டஸ்ட் உதாரணம். தமிழகத்தில் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சென்னை உயர்நீதிமன்றம் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பும் வழங்கியது. ஆனாலும் அதை ம னாவுக்கு கூட மதிக்கவில்லை திமுக அரசு. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது திமுக அரசு.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக வாதாட நிதி திரட்ட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது செவிலியர்கள் சங்கம் என்பது தனி சோகக்கதை.
உச்சநீதிமன்றம் சென்ற தமிழக அங்கெ என்ன சொன்னது தெரியுமா? மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய உரிய பணம் வராததால் செவிலியர்களின் ஊதியம் நிலுவையில் இருக்கிறது என்று வாதாடியது. எப்படி? மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய அந்த உரிய தொகை எவ்வளவு தெரியுமா? 470 கோடி.
இந்த வாதத்தை ஏற்க மறுத்து தலையில் குட்டி அனுப்பியது உச்சநீதிமன்றம். இலவசங்களுக்கு பணம் இருக்கிறது, ஊதியம் கொடுக்க பணமில்லையா என்று கேட்டிருக்கிறது சுப்ரீம் கோர்ட். அந்த செய்தியெல்லாம் இங்கே வரவே வராது.
அப்போதும் அடங்காத தமிழக அரசு இந்த வழக்கில் மத்திய அரசையும் சேர்க்க வேண்டும் என்று வாதாடி, உச்சநீதீமன்றம் தற்போது மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
1100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், RTE போல இதற்கும் மத்திய அரசு நிதி வந்து விடும். ஆனால் செவிலியர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், வழக்கு செல்வது, ஊதியம் வழக்கை ஏற்படும் தாமதம் இதெற்கெல்லாம் யார் பொறுப்பு. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சம்பளம் வராமல் ஏழை மக்கள் அவதிப்பட்டால் பரவாயில்லை. அந்த அவதியை படம் பிடித்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்யலாம். அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்தாமல் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை. அந்த பாதிப்புக்கு பாஜக தான் காரணம் என்று பிரச்சாரம் செய்யலாம். தமிழக அரசு நினைத்தால் சாதாரண பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படாமல் பாதுகாக்கலாம். மற்ற மாநில அரசுகள் அதைத்தான் செய்து வருகிறது. ஆனால் திமுக மக்கள் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளானாலும் அதை பற்றி கவலையே இல்லை, பாஜக எதிர்ப்பு தான் முக்கியம் என்று தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது.
பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை ஆயுதம் மட்டும் தான் இன்று திமுகவிடம் இருக்கிறது. அதற்காக தான் இவ்வளவும்.
திமுகவின் இந்த அரசியல் எல்லாம் பாஜகவுக்கு தெரியுமா என்று கேட்கிறீர்களா?