5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்; விடுதி அறையில் கொடுமை., அடுத்தடுத்து நெஞ்சுவலி நாடகம்?
மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிக்கு மாணவிகளை அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர், குளிர்பானத்தில் மதுவை கலந்துகொடுத்து அவர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் உடன்குடியை அதிரவைத்துள்ளது.
நவம்பர் 12, திருச்செந்தூர் (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், உடன்குடி (Udangudi) பகுதியில் சல்மா தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (Salma Matriculation School) செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக (PET Teacher Sexually Harassed 5 Girl Students) பொன் சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த அக்.22, 2024 அன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிக்கு, பள்ளியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 5 மாணவிகளை அழைத்துக்கொண்டு பொன்சிங் தூத்துக்குடி சென்றுள்ளார். அங்கு விடுதியில் அறையெடுத்து அனைவரும் தங்கி இருந்தனர்.
மதுவை ஊற்றி அத்துமீறல்:
அப்போது, மாணவிகளுக்கு குளிர்பானம் வாங்கிக்கொடுத்த பொன்சிங், அதில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என மிரட்டி அவர் அனுப்பி வைத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் வீட்டிற்கு சென்று தங்களுக்கு நேர்ந்த கொடுமையை தெரிவிக்கவே, அவர்கள் பள்ளிக்குச் சென்று முறையிட்டுள்ளனர். பள்ளி நிர்வாகத்திடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை