கிறிஸ்துவ தொன்மத்தில் ஏசுவின் பிறந்த மற்றும் இறந்த ஆண்டுகள் தெரியாததால் CE (பொது சகாப்தம்) மற்றும் BCE (பொது சகாப்தத்திற்கு முன்) பயன்படுத்தப்படவில்லை.
CE மற்றும் BCE எவ்வாறு வந்தது?
CE (Common Era) மற்றும் BCE (Before Common Era) ஆகிய காலண்டர் முறைகள், முதலில் பயன்படுத்தப்பட்ட AD (Anno Domini) மற்றும் BC (Before Christ) ஆகியவற்றுக்கு மாற்றாக வந்தன.
AD மற்றும் BC ஆகிய சொற்கள், இயேசுவின் பிறப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. AD என்றால் "ஆண்டவரின் ஆண்டில்" எனப் பொருள்படும், அதாவது இயேசு பிறந்த ஆண்டிலிருந்து கணக்கிடப்படுகிறது. BC என்றால் "கிறிஸ்துவுக்கு முன்" எனப் பொருள்படும்.
காலப்போக்கில், பல மதங்களையும், கலாச்சாரங்களையும் உள்ளடக்கிய உலகளாவிய வரலாற்று ஆய்வுகளுக்கு இந்த முறைகள் மதச்சார்பற்றவை (Secular) இல்லை என அறிஞர்கள் கருதினர். கிறிஸ்துவ மதத்தை சாராத மக்களுக்கும் இது பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதற்காக, AD-க்கு மாற்றாக CE (பொது சகாப்தம்) என்றும், BC-க்கு மாற்றாக BCE (பொது சகாப்தத்திற்கு முன்) என்றும் மாற்றப்பட்டது.
இந்த மாற்றம், இயேசுவின் பிறப்பு மற்றும் இறப்பு ஆண்டுகள் தெரியாத காரணத்தால் செய்யப் படவில்லை, மாறாக, வரலாற்று ஆய்வுகளில் மதச்சார்பின்மையை நிலை நிறுத்துவதற்காகவே செய்யப்பட்டது. இயேசுவின் சரியான பிறந்த ஆண்டு குறித்து வரலாற்றாளர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அது இந்த காலண்டர் முறையின் மாற்றத்திற்கு முக்கிய காரணம் அல்ல.