அந்தணர் காலை மாலை ஆகிய ஸந்திகளில் கார்ஹபத்யம் ஆஹவநீயம் தக்ஷிணாக்னி என்ற முத்தீக்களில் தேவர் கடனைத் தீர்க்க அக்னிஹோத்ரஞ் செய்தனர் என்பது புறநானூறு , பட்டினப்பாலை , கலித்தொகை , குறிஞ்சிப்பாட்டு முதலிய நூல்களிற் கூறப்பட்டது .
வேள்வித்தூணில் துணி கயிறுபோல் திரிக்கப்பட்டு முழுதும் கட்டப் பட்டிருப்பினும் , உத்காதாவின் இடுப்பு அத்தூணைத் தொடுவதற்காக ஆங்குச் சிறிது அது நீக்கப்பட்டிருத்தல் நோக்கத்தக்கது .. தூணைத் தொட்டுக்கொண்டு உத்காதா ஸாம
கானம் செய்ய வேண்டும் என்பது சுருதிவாக்யமாகையாலும் , முற்றிலும் துணி சுற்றப்படவேண்டும் என்பது ஸ்மிருதிவாக்கிய மாகையாலும் , முற்றிலும் துணி சுற்றப்படவேண்டும் நியதி இல்லை என்பது பிற்காலத்தாரது கொள்கை . பூர்வமீமாம்ஸையில் ஸ்மிருத்ய திகரணத்திற் காணலாம் . ஆமை வேள்விக் குண்டத்தின் கீழே குழியில் வைக்கப்படுகின்றதை அகநானூற்று 361 - ஆம் செய்யுளிற் கூறினர் எயினந்தை மகனார் இளங்கீரனார் :
வேள்வித்தீயை மின்னலிற்கு உவமானமாகக் கார்நாற் பதிற் கூறினர் மதுரைக்கண்ணங்கூத்தனார் . என இதனைப் பொச்சாப் பிலாத புகழ்வேள்வித் தீபோல எச்சாரு மின்னு மழை . ( 7 )
சோழநாட்டிற் பூஞ்சாற்றூரில் இருந்த பார்ப்பான் கௌணியன் விண்ணந் தாயனைப்பற்றி ஆவூர் மூலங்கிழாரும் , பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியைப்பற்றி நெட்டிமையாரும் , சோழவரசர்களுள் கரிகாற்பெருவளத்தானைப் பற்றிக் கருங்குழலாதனாரும் , இராஜசூயம் வேட்ட பெருநற் கிள்ளியைப்பற்றி ஒளவையாரும் , நலங்கிள்ளியைப்பற்றிக் கோவூர் கிழாரும் , சேரன் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பற்றிக் கபிலரும் , அவரவர் இயற்றிய வேள்விகளைப்பற்றிச் சிறப்பித்துக் கூறியிருத்தல் கவனித்தற்கு உரியது.
கௌணியன் : சிவபிரானிடம் தோன்றித் தருமத்தை அறிவித்ததும் நான்கு பகுதியையும் ஆறு அங்கங்களையும் உடையதும் ஆன வேதத்தைக் கற்று , அவைதிகசமயங்களைக் கண்டித்து , ஏழு பாகயஞ்ஞங்களையும் ஏழு ஹவிர்யஞ்ஞங்களையும்
ஸோ மஸம்ஸ்தையையும் குறைவின்றிச் செய்து விளங்கிய குலத்திற் கௌணியன் பிறந்தனன் . தானும் மனமொத்த மனைவி யுடன் வேள்விகளில் நீர் நாணுமாறு நெய்யை வழங்கி , எண்ணிக்கையற்ற வேள்விகளைச் செய்து விருந்தினரை உபசரித்தான் . ச்செய்தி புறநானூற்றில் 166 - ஆவது செய்யுளில் உள்ளது .
பாகயஞ்ஞங்கள் , ஹவிர்யஞ்ஞங்கள் , ஸோமஸம்ஸ்தைகள் இவற்றைப்பற்றி விரிவாய் , கௌதமதர் மஸூத்ரம் முதலிய நூல்கள் கூறும் .
முதுகுடுமிப்பெருவழுதி : நாலு வேதங்களிலும் தர்மசாஸ்திரங்களிலும் கூறியவாறுச் சிறப்பாக அவிப்பொருள்களைச் சேகரித்து , அவற்றை மிகுந்த நெய்யுடன் கலந்து தேவதைகட்கு அளிக்குமாறு பல வேள்விகளை முதுகுடுமிப்பெருவழுதி இயற்றினன் . தனது புகழைப் பரப்பிப் பல்லிடங்களில் வெற்றித் தூண்களை நாட்டினன் . இச்செய்தி புறநானூற்றில் 15 - ஆம் செய்யுளிற் கூறப்பட்டது. ஆங்கு வேள்விகளை முடித்தபின்னர் யூபம் நட்டான் எனக் கூறப்பட்டிருத்தலான் , யூபம் என்பது வெற்றித் தூணைக் குறிக்குமே அன்றி வேள்வித்தூணைக் குறிக்காது .
அச்சொல்லை அப்பொருளில் காளிதாஸன் ரகுவம்சத்தில் ஆறாம் ஸர்க்கத்தில் கார்த்தவீரியார்ஜுனனைப்பற்றி வர்ணிக்குமிடத்து , அஷ்டாதசத்வீபநிவாதயூப்: என்ற தொடரில் வழங்கியுள்ளார் .
மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியிற் கூறும்பல்சாலை முதுகுடுமியின் நல்வேள்வித் துறைபோகிய தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின் ( 759-863 ) என்ற அடிகளை நோக்கின் பெருவழுதி வேள்வியனைத்தையும் நிஷ்காமமாகச் செய்து ஆத்மோபதேசம் பெறுவதற்கு இன்றி யமையாததான சித்தசுத்தியைப் பெற்றான் எனக் கூறின் மிகையாகாது . அவர் இறுதியிற் பிறப்பிறப்பின்றி சேவடியை அடைகின்றனர் என்பதைப் பகவத்கீதை ,
கர்மஜம் புத்தியுக்தா ஹி வலம் த்யக்த்வா மநீஷிண : ஜந்மவந்யவிநிர்முக்தா: படிம் மச் மந்த்யநாமயம் | ( 2,51 ) என்றவிடத்துக் கூறும் கரிகாற்பெருவளத்தான் : தர்மத்தை ஐயமற உணர்ந்த அந்தணரைக்கொண்ட ஸபையில் வேள்விமுறைகளை நன்கு அறிந்த ருத்விக்குக்கள் செய்ய வேண்டியவற்றை நன்கு செய்து காட்ட , கற்புடை மனைவியருடன் வேள்விச்சாலையில் இருந்து கருடசயனம் செய்து புகழைப் பெற்றான் பெருவளத்தான் . இச்செய்தி புறநானூற்றில் 224 ஆம் செய்யுளில் உள்ளது .
பெருநற்கிள்ளி இராஜஸுயயாகம் செய்தான் என்பதும் , நலங்கிள்ளி பல வேள்விகளைச் செய்தான் என்பதும் புறநானூற்றில் 363 , 400 - ஆம் செய்யுட்களிலிருந்து அறியப்படுகின்றன .
செல்வக்கடுங்கோவாழியாதன் : வேதங்களை நன்கு கற்ற அந்தணர்களைக் கொண்டு வேள்வியில் கடவுளையும் தேவர்களையும் இன்புறச்செய்து , அந்தணர்கட்கு ஏராளமாய் அருங்கலங்களை இவ்வரசன் வழங்கினன் எனப் பதிற்றுப்பத்து 64 , 70 செய்யுட்கள் கூறும் .