New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மூன்று அறிஞர்கள் -பி.ஏ.கிருஷ்ணன்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
மூன்று அறிஞர்கள் -பி.ஏ.கிருஷ்ணன்
Permalink  
 


மூன்று அறிஞர்கள் -பி.ஏ.கிருஷ்ணன் நவம்பர் 10, 2024   தமிழகத்தில் ஒரு சில ஆண்டுகளாக மூன்று பிரித்தானிய அறிஞர்கள் – மெக்காலே, கால்ட்வெல் மற்றும் மார்ஷல் – தூக்கிப் பிடிக்கப்படுகிறார்கள். இவர்களில் கால்ட்வெல்லைத் தவிர மற்றைய இருவரும் தமிழ் மொழியோடோ தமிழகத்தோடோ அதிகத் தொடர்பு இல்லாதவர்கள். இருந்தாலும் இவர்கள் சொன்னவை ஏசு கிறிஸ்துவின் மலைச் சொற்பொழிவுக்கு நிகராக திராவிட இயக்கத்தினரால் போற்றப்படுகின்றன. கால்ட்வெல்லும் மெக்காலேயும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் பணியாற்றியவர்கள். மார்ஷல் இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் அகழ்வராய்ச்சி செய்தவர். இவர்கள் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியோ இவர்கள் விட்டுச்சென்றவற்றைப் பற்றியோ தமிழகத்தில் திராவிட இயக்கத்தினரில் மிகப் பெரும்பாலானவர்களுக்கு முழுப் புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இவர்கள் சொன்னவற்றில் ஒன்றிரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு இவர்களால் தமிழர்களின் வாழ்வே மாறி விட்டது என்று சொல்லப்படுகிறது. இதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, இந்துத்துவத் தரப்பிலிருந்து வரலாறு மாற்றி எழுதப் படுவதால் அதற்கு எதிர்வினையாக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல். இரண்டு இவர்களைத் தூக்கிப் பிடிப்பதால் குறுங்குழு இனவாதம் வலுப் பெறும் என்ற மயக்கம்.

எனக்கு இவர்கள் மூவர் மீதிலும் மதிப்பும் மரியாதையும் உண்டு. மூவரும் அவர்கள் காலகட்டத்தைய இந்தியாவை (கால்ட்வெல்லைப் பொறுத்தவரை தமிழ்நாட்டை) புரிந்து கொள்ள முயன்றவர்கள். இவர்களின் புரிதல் முற்றிலும் தவறானது என்பதால் இவர்களை அவதூறு செய்வது முட்டாள்தனமானது. மூவரும் அன்றைய ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள். அதே சமயத்தில் தாங்கள் எடுத்துக் கொண்ட பணிகளை மிகச் சிறப்பாகச் செய்ய முயன்று அவற்றில் ஓரளவு வெற்றியும் கண்டவர்கள். உதாரணமாக மெக்காலே கொண்டு வந்த இந்தியக் குற்றவியல் சட்டங்களில் 90 சதவீதம் வரையில் சென்ற வருடம் கொண்டுவரப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்தில் இடம் பெறுகிறது என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். இதே போல கால்ட்வெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் மொழியியல் துறையில் மிக முக்கியமான புத்தகமாகக் கருதப்படுகிறது. புகழ் பெற்ற மொழியியல் அறிஞரான பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி கூறுவது இது:

With inadequate sources and with the comparative method and reconstruction of the proto-language still in their infancy, Caldwell could not have done better. He succeeded in showing family likeness among the Dravidian languages in phonology and morphology and in disproving the Sanskrit origin of the Dravidian languages, a view strongly advocated by many Oriental as well as Western scholars both before and after him.

கால்ட்வெல்லின் இந்த முயற்சியே இந்துத்துவவாதிகளுக்கு அவர் பெயரைச் சொன்னாலேயே கோபத்தை வரவழைக்கிறது. இதே போல ஜான் மார்ஷல் தக்ஷசீலா, நாலந்தா, சாஞ்சி, சாரநாத் போன்ற புத்தத்தலங்களைக் பற்றி எழுதியிருக்கும் புத்தகங்கள் அவருடைய மேதைமையை அடையாளம் காட்டுகிறது. உதாரணமாக அவர் சாஞ்சி பற்றி எழுதியிருக்கும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்:

Apart from their artistic, religious and iconographic interest, the early sculptures
of Safichi are an almost inexhaustible mine of information in regard to contemporary Indian civilization. To attempt even a provisional discussion of them in all their aspects would require many more chapters than this work contains and would call for special theses on a multiplicity of subjects : on the racial types, for example, of which the sculptures afford so many instructive examples; on popular beliefs and superstitions; on arms and accoutrements; on dress and personal ornaments; on musical instruments; and on a score of other subjects for which they furnish invaluable materials. However great the temptation to follow up such studies, it seemed to us that the first thing we had to do was to describe the monuments, explain as far as possible their meaning, and analyze the character of their art. With the ground thus cleared, we felt that the further study of these sculptures could be left to other investigators. 

இது அவருடைய அறிவு சார்ந்த அணுகுமுறைக்கு ஓர் உதாரணம். கீழடியில் மலையைப் பிரட்டி விட்டோம் என்றும் மேலும் கீழும் குதிக்கும் அரைகுறை அறிஞர்கள் ஜான் மார்ஷலை படித்தால் நன்றாக இருக்கும்.

என்னுடைய கட்டுரை இவர்கள் மூவரும் என்ன சொன்னார்கள் என்பதைச் சுருக்கமாகச் சொல்ல முயல்கிறது. 

 

ராபர்ட் கால்ட்வெல் (1814-91)

கால்ட்வெல் தன்னுடைய திராவிட மொழிகளின் ஒப்பிலணக்கத்தின் முன்னுரையில் பொது யுகம் பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னால் தமிழில் எந்த இலக்கியமும் இல்லை என்கிறார். திருக்குறளில் காலம் இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதே என்கிறார். அதுவே மிகப் பழையது என்று சொல்லலாம்: மற்றைய இலக்கியங்கள் அதற்குப் பின்னால் தோன்றின என்கிறார். வடமொழி இலக்கியத்தோடு ஒப்பிடும் போது தமிழ் ( நீதி நூல்களைத் தவிர) இலக்கியம் உயரியதாகத் தோன்றவில்லை என்கிறார்;

amil literature, as a whole, will not bear a comparison with Sanskrit literature, as a whole it is the only vernacular literature in India which has not been contented with imitating Sanskrit, but has honourably attempted to emulate and outshine it. 

அதாவது சமஸ்கிருதத்தை மாதிரியாகக் கொண்டு அதோடு சமமாக ஆகவும் அதை விட முன்னேறவும் முயன்றிருக்கிறது என்கிறார்.

கால்ட்வெல் சொல்கிறார்:

This civilisation was probably indigenous in its origin, but it seems to have been indebted for its rapid development at so early a period to the influence of a succession of small colonies of Aryans, chiefly Brahmans, from Upper India, who were probably attracted to the South by the report of the fertility of the rich alluvial plains watered by the Kaveri, the Tamraparni, and other peninsular rivers ; ….The leader of the first or most influential Brahmanical colony is traditionally said to have been Agastya, a personage who is celebrated in Northern India as one of the authors of the Vedic hymns, then as the holiest of hermits, performing sacrifices and austerities in the remotest forests, and evermore penetrating farther and farther into the hitherto unknown South. In the South he is venerated as the earliest teacher of science and literature to the primitive Dravidian tribes.

தமிழ் நாகரிகம் தன்னுடைய விரைவான வளர்ச்சிக்கு ஆரியர்களுக்கு, குறிப்பாக பிராமணர்களுக்கு, நன்றி சொல்ல வேண்டும் என்று கால்ட்வெல். அகஸ்தியர் அவர்களுடைய தலைவர் என்று சொல்லப்படுகிரார். அவர்தான் நாகரீகமடையாத திராவிடப் பழங்குடியினருக்கு அறிவியலையும் இலக்கியத்தையும் முதல் முதலாகச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் என்று போற்றப்படுகிறார் என்றும் கூறுகிறார்.

கால்ட்வெல் முக்கியமாக இன்னொன்றும் சொல்கிறார்:

(I)n many things they were centuries behind the Brahmans whom they revered as instructors, and obeyed as overseers : but if they had been left altogether to themselves, it is open to dispute whether they would not now be in a better condition, at least in point of morals and intellectual freedom, than they are. The mental culture and the higher civilisation which they derived from the Brahmans, have, I fear, been more than counterbalanced by the fossilising caste rules, the unpractical, pantheistic philosophy, and the cumbersome routine of inane ceremonies, which were introduced amongst them by the guides of their new social state.

பிராமணர்கள் தாம் தமிழர்களுக்கு நாகரிகம் சொல்லிக் கொடுத்தனர் என்றாலும் அது அவர்கள் அறத்தையும் அறிவுச் சுதந்திரத்தையும் முன்னை விட உயர்ந்ததாக ஆக்கியதா என்பது விவாதத்திற்கு உரியது. பிராமணர்களிடமிருந்து அடைந்தவற்றையெல்லாம் அவர்கள் கொண்டு வந்த உறைந்த சாதி விதிகளும் பல்கடவுள் வழிபாட்டு முறைகளும், மூடத்தனமான சடங்குகளும் ஒன்றும் இல்லாததாக ஆக்கி விட்டன என்பது கால்ட்வெல்லின் வாதம்.ஆனால் இன்னொரு இடத்தில் இதையும் சொல்கிறார்;

The application of the term S’udra ‘ to the ancient Dravidian chieftains, soldiers, and cultivators does not prove that they had ever been reduced by the Brahmans to a dependent position, or that they ever were slaves—as the northern S’udras appear to have been—to any class of Aryans. The Brahmans, who came in peaceably, and obtained the kingdom by flatteries,’ may probably have persuaded the Dravidians that in calling them S’udras they were conferring upon them a title of honour. If so, their policy was perfectly successful; for the title of ‘S’udra’ has never been resented by the” Dravidian castes ; and hence, whilst in Northern India the Sudra supposed to be a low-caste man, in Southern India he generally ranks next to the Brahman.

சூத்திரர் என்ற சொல்லுக்கு வடக்கே இருப்பது போல ஆரிய உயர்சாதியினருக்கு அடிபணிந்தவர்கள் என்று பொருள் தெற்கில் பொருந்தாது என்கிறார் கால்ட்வெல். இங்கு வந்த பிராமணர்கள் அதை ஓர் உயரிய பட்டம் என்று இங்குள்ள திராவிடக் குடிமக்களிடம் சொல்லி அவர்களைச் சம்மதிக்க வைத்தனர். இது ஒரு வெற்றி பெற்ற கொள்கை; ஏனென்றால் சூத்திரர் என்ற பட்டத்தை அவமரியாதையாக எந்தத் திராவிடச்சாதிகளும் கருதவில்லை. அது பிராமணருக்கு அடுத்த நிலையாகத்தான் கருதப்படுகிறது என்றும் அவர் சொல்கிறார்!தன்னுடைய திருநெல்வேலி சாணார்கள் நூலில் அவர் தன்னுடைய நிறவெறி நிலைப்பாட்டை தெளிவாக்குகிறார். நாடார் சமுதாயத்தைப் பற்றி அவர் கூறுவது இது:

 Persons who have had an opportunity of comparing Shanars with the emancipated slaves in the West India Islands think the Negroes superior to the Shanars in intellect, energy, and vivacity: and this opinion receives conformation from the well-known superiority of the Negroes to lower classes of the Hindus in every department of manual labour followed in the colonies, and the proportion generally found to exist between the physical energy of a race and its capacity for mental development. When compared with other Hindu tribes, the comparison is equally unfavourable to the Shanars.

கறுப்பினத்தவரோடு ஒப்பிடும் போது நாடார் சமுதாயத்தினர் அறிவிலும் உழைப்பிலும் பின்தங்கிவிடுகிறார்கள் என்கிறார் கால்ட்வெல். மற்றைய இந்து சமூகத்தினருடன் ஒப்பிட்டாலும் அவர்கள் பின்னால்தான் இருக்கிறார்கள் என்கிறார். 

புத்தகத்தில் அவர் சொல்லும் தீர்வு இது:

It is the custom for every caste and class to have prejudices and practices of its own. It is not the custom for any caste or class to imitate or borrow from its neighbours. Consequently, every caste, or at least every circle of castes, must be made the object of special Christian effort. The high castes in the towns cannot be reached but by the instrumentality of superior English schools. Consequently, those schools form a part, and an essential one, of the entire apparatus of Indian missions. The Shanars, and the agricultural classes generally, cannot be reached but by a parochial system of village congregations and village schools, such as has been established and is in operation in Tinnevelly. 

அதாவது உயர்சாதியினருக்கு ஆங்கிலக் கல்வியை அளிக்கும் நகரப்பள்ளிக்கூடங்கள். நாடர்களுக்கும் மற்றைய உழவுத் தொழில் செய்யும் சாதிகளுக்கும் கிராமப் பள்ளிக் கூடங்கள். 

கிறித்துவ மத நிறுவனங்கள் கல்வியை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்றார்கள் என்பது உண்மை. அதற்கு முக்கியமான காரணம் அவர்களை கிறித்துவத்திற்கு ஈர்ப்பது என்பதும் உண்மை. எனவே அன்றைய ஏகாதிபத்தியவாதிகளின் பிரதிநிதிகளாகச் செயல்பட்ட பிரித்தானியர் மக்களை சமத்துவம் சமூகநீதி போன்ற கொள்கைகளின் அடிப்படையில் அணுகினார்கள் என்று நிறுவ முயல்வது மூடத்தனம். வரலாற்றின் போக்கிற்கே அத்தகைய அணுகுமுறை புறம்பானது. இங்கு இன்னொன்றும் சொல்லியாக வேண்டும். கால்ட்வெல் நாடார் சமுதாயத்தை மேட்டிமைத்தன்மையோடு அணுகினார் என்றாலும் அவர் அச்சமுதாய மக்களுடன் நெருக்கமாகப் பழகினார் என்பதும் அவர்கள் முன்னேற்றத்திற்காக உழைத்தார் என்பது தெளிவு. அச்சமுதாயத்துடன் பழகுவதற்கே தயங்கியவர்கள் உயர்சாதி இந்துக்கள் என்பதையும் அன்றைய ஆவணங்கள் சொல்கின்றன. 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

தாமஸ் பாபிங்க்டன் மெக்காலே (1800-1859)

மெக்காலே இந்துத்துவர்களால் ஒரு வில்லனாகப் பார்க்கபடுகிறார். அதற்குக் காரணம் அவர் கொண்டுவந்த கல்விமுறை. இவர்களில் பலர் மெக்காலே என்ன சொன்னார் என்பதைப் படித்திருக்கிறார்களா என்பதே சந்தேகம். படித்திருந்தாலும் அவர் சொல்லியிருப்பவற்றில் பலவற்றை ஒதுக்கித் தள்ளி விட்டு தங்களுக்குச் சாதகமானதை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். மெக்காலேயைப் பழிக்கும் முன்னால் நம் பள்ளிகள் எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றி பத்தொன்பதாம் நூற்றாண்டின் முந்தைய ஆண்டுகளில் பணியாற்றிய பெல்லாரி ஆட்சியர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம். அவர் தெலுங்கும் கன்னடமும் எவ்வாறு கற்றுக் கொடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறார். புத்தகங்களில் இருக்கும் மொழியும் பேச்சு மொழியும் வெவ்வேறானவை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்:

“The alphabets of the two dialects are the same, and he who reads one, can read, but not understand the other also. The natives therefore read these (to them unintelligible) books, to acquire the power of reading letters in the common dialects of business, but the poetical
is quite different from the prose dialect which they speak and write, and though they read these books, it is to the pronunciation of syllables, not the meaning or construction of the words, that they attend. Indeed few teachers can explain, and still fewer scholars understand the purport of the numerous books they thus learn to repeat from memory.
Every schoolboy can repeat verbatim a vast number of verses of the meaning of which he knows no more than the parrot which has been taught to utter certain words.

அதாவது கிளிப்பிள்ளை போல பல பாடல்களை மாணவர்களால் ஒப்பிக்க முடியும் ஆனால் அவை என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி சிறிதளவேனும் புரிதல் கிடையாது என்கிறார். ஆசிரியர்களில் பலருக்கே அவை என்ன சொல்கின்றன என்பது தெரியாது என்கிறார். பெல்லாரி ஆட்சியரை தரம்பால் போன்றவர்கள் உயர்வாக மதித்தார்கள் என்பதையும் நான் இங்கு சொல்லியாக வேண்டும். 

இந்தப் பின்னணியில் மெக்காலேயின் குறிப்புகளை நோக்க வேண்டும். மெக்காலேயின் மொழி ஏகாதிபத்தியத்தின் மொழி என்பதும் அவருக்கு இந்திய இலக்கியத்தின் மீதும் அறிவு சார்ந்த நூல்களின் மீதும் ஏளனப்பார்வை இருந்தது என்பதும் உண்மை. ஆனால் பிரச்சினை என்ன? மெக்காலே சொல்கிறார்:

“All parties seem to be agreed on one point, that the dialects commonly spoken among the natives of this part of India contain neither literary nor scientific information, and are moreover so poor and rude that, until they are enriched from some other quarter, it will not be easy to translate any valuable work into them. It seems to be admitted on all sides, that
the intellectual improvement of those classes of the people who have the means of pursuing higher studies can at present be affected only by means of some language not vernacular amongst them. 

அன்றைய காலகட்டத்தில் பயிற்றுமொழிகளாக தாய்மொழிகள் இருக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. சமஸ்கிருதமா, அரேபிய மொழியா அல்லது ஆங்கிலமா என்பதுதான் பிரச்சினை. சமஸ்கிருதத்தையோ அரபிய மொழியையோ தேர்ந்தெடுத்திருந்தால் நாம் இன்னொரு நூற்றாண்டு பின்தங்கியிருப்போம் என்பது மட்டுமல்லாமல், நம் தாய்மொழிகள் வளர்ச்சி அடைந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. அரேபிய மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட மத்தியகிழக்கு நாடுகளில் கல்வியின் நிலைமை இன்று எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை நான் சொல்லி விளக்க வேண்டிய தேவையே இல்லை. 

மெக்காலே சொல்கிறார்:

There is yet another fact which is alone sufficient to prove that the feeling of the native public, when left to itself, is not such as the supporters of the old system represent it to be. The committee have thought fit to lay out above a lakh of rupees in printing Arabic and Sanscrit books. Those books find no purchasers. It is very rarely that a single copy is disposed of. Twenty-three thousand volumes, most of them folios and quartos, fill the libraries or rather the lumber-rooms of this body. The committee contrive to get rid of some portion of their vast stock of oriental literature by giving books away. But they cannot give so fast as they print. About twenty thousand rupees a year are spent in adding fresh masses of waste paper to a hoard which, one should think, is already sufficiently ample. During the last three years about sixty thousand rupees have been expended in this manner. The sale of Arabic and Sanscrit books during those three years has not yielded quite one thousand rupees. In the meantime, the School Book Society is selling seven or eight thousand English volumes every year, and not only pays the expenses of printing but realizes a profit of twenty per cent. on its outlay.

சமஸ்கிருதத்திலும் அரேபிய மொழியிலும் பெரும் செலவு செய்து அச்சிட்ட புத்தகங்கள் தூங்குகின்றன; மூன்று ஆண்டுகளில் ஆயிரம் ரூபாய்க்கு கூட புத்தகங்கள் விற்கவில்லை என்கிறார் மெக்காலே. மாறாக ஆங்கிலப் புத்தகங்கள் பெருமளவு விற்றிருக்கின்றன. 

மெக்காலே இன்னொன்றும் சொல்கிறார்:

We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern, –a class of persons Indian in blood and colour, but English in tastes, in opinions, in morals and in intellect. To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population.

நாம் நம்மைப் போலச் சிந்திப்பவர்களை உருவாக்குவோம். அவர்கள் நம் அறிவியல் செல்வங்களை அவர்களுடைய தாய்மொழிகளுக்குக் கொண்டு செல்வார்கள் என்று அவர் தெளிவாகச் சொல்கிறார். நாம் அவர் சொன்னதை இன்று வரை செய்யவில்லை. ஆனால் மெக்காலேயைக் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். 

அன்றைய சமுதாயத்தில் முன்னணியில் நின்றவர்கள் ஆங்கிலக் கல்வியையே விரும்பினார்கள் என்பதையும் வரலாறு நமக்குச் சொல்கிறது. குறிப்பாக சென்னை மாகாணத்தில் ஆங்கிலக் கல்விக்கு மிகப் பெரிய ஆதரவு இருந்தது. 1839ம் ஆண்டு கல்வி மனு ஒன்று சென்னையின் பெருந்தலைகளால் – கஸ்லு லக்ஷ்மிநரசுச்செட்டி, நாராயணசாமி நாயுடு, சீனிவாசப்பிள்ளை போன்ற பெருந்தலைகள் – அரசிற்கு அனுப்பப்பட்டது. அது ஆங்கிலக் கல்வி எந்தத் தாமதமும் இல்லாமல் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இம்மனுவில் எழுபதாயிரம் பேர்கள் கையெழுத்திட்டிருந்தார்கள். இவர்கள் உயர்கல்வியை விரும்பினார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட சாதிகள் உயர்கல்விக் கூடங்களின் அருகிலேயே வரக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள். இதைப் பற்றித் தனியாக விரிவாக நேரம் கிடைத்தால் எழுதுகிறேன். 

வேட்டையன் படத்தில் மெக்காலேதான் சமூகநீதி கொண்டு வந்தார் என்று ஒரு வசனம் வருகிறதாக அறிகிறேன். இது உண்மையாக இருக்குமானால், தமிழ்நாட்டில் அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொண்டு அலைபவர்களின் மூடத்தனத்திற்கு ஈடே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மெக்காலே கொண்டு வந்த கல்வி முறை சாதாரண மக்களுக்கு நன்மை செய்தது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதற்கும் சமூகநீதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. சமூகநீதி வந்தது மக்களுக்கு ஓட்டுரிமை கிடைத்த பின்னர். அதைக் கொண்டு வந்தது நம் விடுதலைப்போரை முன்னின்று நடத்திய காங்கிரஸ் இயக்கத்தினர். பெரியார் மக்களாட்சியே தேவையில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தவர் என்பதை நான் பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். மெக்காலேயும் அதைத்தான் சொல்கிறார்.

சார்ட்டிஸ்ம் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் தொழிலாளர்கள் இயக்கம் ஒன்று நடந்தது. அவர்கள் அரசிற்கு ஆறு முக்கியமான கோரிக்கைகளை வைத்தார்கள். அவற்றில் ஒன்று ஓட்டுரிமை. இதை வலுவாக எதிர்த்து மெக்காலே இங்கிலாந்து பார்லிமெண்டில் பேசினார்.

இது அவர் சொன்னது:

The essence of the Charter is universal suffrage. If you withhold that, it matters not very much what else you grant. If you grant that, it matters not at all what else you withhold. If you grant that, the country is lost.

அதாவது ஓட்டுரிமை கொடுத்தால் நாடே அழிந்து விடும் என்கிறார! அதே பேச்சில் இன்னொன்றும் சொல்கிறார்:

No more than a humane collector in India has to those poor peasants who in a season of scarcity crowd round the granaries and beg with tears and piteous gestures that the doors may be opened and the rice distributed. I would not give the draught of water, because I know that it would be poison. I would not give up the keys of granary, because I know that, by doing so, I should turn a scarcity into a famine. And in the same way, I would not yield to the importunity of multitudes who, exasperated by suffering and blinded by ignorance, demand with wild vehemence the liberty to destroy themselves.

அதாவது இந்திய விவசாயிகள் பசியில் உணவு சேகரித்து வைக்கப்படும் இடத்திற்கு வந்து கண்ணீரோடு புலம்பினாலும் தண்ணீர் கூடக் கொடுக்க மாட்டேன் என்று மிகத் தெளிவாகச் சொல்கிறார். அப்படிக் கொடுத்தால் பற்றாக்குறை பஞ்சம் ஆகி விடுமாம்.

இவரைச் சமூகநீதிச் செம்மல் என்று சொல்ல தமிழகத்தின் கோமாளிகளால் மட்டுமே முடியும்.

 

ஜான் மார்ஷல் (1876-1958)

ஜான் மார்ஷல் தன்னுடைய Mohenjo- Daro and the Indus Civilization என்ற புத்தகத்தில் சொல்கிறார்:

1. ஆரியர் வருகைக்கு முன்னாலேயே சிந்துச் சமவெளியில் ஓர் உயரிய நாகரிகம் இருந்தது.

2. இந்து மதம் அதன் பல அம்சங்களை – வேதங்களில் சொல்லப்படாத அம்சங்களை – தனதாக்கிக் கொண்டது.

3. உயர்ந்த தத்துவச் சிந்தனைகளும் கலாச்சாரமும் ஆரியர் வருகைக்கு முன்னால் இருந்த நாகரிகத்திற்கு இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

4. இன்றைய ஆதி வாசிகள் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் வாரிசுகள் என்று சொல்வது சரியாக இருக்காது. அவர்கள் அந்நாகரிகத்தின் சில பண்படாத அம்சங்களை கொண்டிருக்கலாம். ஆனால் சிந்து சமவெளி நாகரிகத்தின் மதம்/கலாச்சாரம் மிகவும் பண்பான பல அம்சங்களைக் கொண்டது. அவர்கள் கட்டிடங்களுக்கும் இவர்கள் குடிசைகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

அந்தக் காலமுறைப்படி மண்டையோடுகளை ஆராய்ந்த மார்ஷல் அந்நாகரிகத்தின் மக்கள் பல இனங்களைச் சார்ந்தவர்கள் என்கிறார். முக்கியமான ஒன்றையும் சொல்கிறார். “இப்போது இருக்கும் திராவிடர்கள் கருப்பானவர்கள் குட்டையானவர்கள், சுருட்டை முடி கொண்டவர்கள். இவர்கள் ஐயாயிரம் ஆண்டுகள் முன்னால் இருந்த சிந்து சமவெளி நாகரிகத்தின் பிரதிநிதிகள் என்று சொல்வது அபத்தமானது.” திராவிடர்கள் வெளியிலிருந்து வந்திருந்தால் அவர்கள் ப்ரோடோ ஆஸ்ட்ரலாயிட் மக்களோடு கலந்திருக்க வேண்டும். அவர்கள் இந்தியாவிலேயே இருந்திருந்தால், அவர்கள் மூதாதையர்கள் ப்ரோடோ ஆஸ்ட்ரலாயிட் மக்களாக இருந்திருக்க வேண்டும். வெளியிலிருந்து வந்தவர்களோடு கலந்திருக்க வேண்டும் என்கிறார்.

 

ஜான் மார்ஷல் இன்றைய “திராவிடர்”களைப் பற்றி்ச் சொன்னவை அப்பட்டமான இனவெறி மதிப்பீடு. மார்ஷல் அன்றைய ஆங்கிலேயரைப் போலப் பேசியிருக்கிறார். ஆனால் இவரைப் போலவே பெரியாரும் பேசினார் என்பதையும் நாம் மறைக்க் கூடாது அவர் தமிழர்கள் நாகரிமற்றவர்கள் என்பதை மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இது அவர் சொன்னது:

“கணவன் – மனைவி வாழ்க்கை என்பதே பார்ப்பான் வருவதற்கு முன் இங்கு கிடையாது. எந்தச் சரித்திரத்திலும், இலக்கியத்திலும் கிடையாது. எவராலும் இதில் இருக்கிறது என்று எடுத்துக் காட்டவும் முடியாது.”

“ஓர் ஆணும், ஒரு பெண்ணும் கூடி வாழ்ந்தார்களே தவிர, கணவன் – மனைவி என்ற முறையில் அல்ல! இதற்குச் சரியான சான்று கிடையாது! தமிழனுக்குச் சரித்திரமே கிடையாது! நமக்குள்ள இலக்கியங்களெல்லாம் பார்ப்பான் வந்ததற்குப் பிறகு 2,000, 3,000 ஆண்டுகளுக்கு முன் தான் தோன்றின. இவைகள் யாவும் பார்ப்பனர்களாலும், அவனது அடிமைகளாலுமே எழுதப்பட்டவயாகும்”

ஜான் மார்ஷலுக்கு சிலை வைப்பதாகத் திராவிட இயக்கத்தினர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பெரியார் திடலில் வைத்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

இக்கட்டுரை எழுத உதவிய நூல்கள்:

  1. Modern Education in South India, 1784-1854: Its Roots and Its Role as a Vehicle of Integration under Company Raj – Robert Eric Frykenberg, 2014
  2. The Dravidian Languages  – Badriraju Krishnamurti, 2003
  3. A comparitive Grammar of Dravidian or South Indian Family of Languages – Rev. Robert Caldwell, 1875
  4. A Political and General History of the District of Tinnevelly – Rev. Robert Caldwell, 1881
  5. The Tinnevelly Shanars – Rev. Robert Caldwell, 1849
  6. Minutes on Indian Education – Thomas Babington Macaulay, 1835.
  7. The Miscellaneous Writings and speeches of Lord Macaulay, – year of publication unknown
  8. Mohenjo- Daro and the Indus Civilization – John Marshall, 1931


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard