New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அமரன் படத்திற்கு வந்த சிக்கல்.. தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!


Guru

Status: Offline
Posts: 24811
Date:
அமரன் படத்திற்கு வந்த சிக்கல்.. தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!
Permalink  
 


சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு வந்த சிக்கல்.. தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!

Sivakarthikeyan amaran | சிவகார்த்திகேயன் அமரன் பட டீசர் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், படத்துக்கு தடை கோரி போராட்டம் வெடித்து வருகிறது.

படிக்கவும் …

  • 1-MIN READNews18 TamilTamil Nadu
  • Last Updated : February 22, 2024, 10:51 am IST
  • சிவகார்த்திகேயன் நடிப்பில் கமலஹாசன் தயாரித்துள்ள அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

    ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி தற்போது அமரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள அந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இதற்கு மறைந்த மேஜர் முகுந்த் வாழ்க்கையை தழுவிக் கதை எழுதியுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் 1 நிமிடம் 35 நொடிகள் ஓடக்கூடிய கிளிம்ஸ் (Glimpse) காட்சியை வெளியிட்டனர்.

  • இந்த கிளிம்ஸ் காட்சியின் தொடக்கத்தில் இந்திய ராணுவ வீரரை பிடித்த இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவர், இஸ்லாம் சிறுவர்களிடம் நீங்கள் வருங்கால சுதந்திர போராளிகள், நமக்கு என்ன வேணும் என்று அவர்களிடம் கேட்க சுதந்திரம் வேண்டும் என்று கூறுகிறார்கள். இதற்கு தற்போது தமிழகத்தில் உள்ள இஸ்லாம் அமைப்புகளும் காட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

     

    இதில் வரும் வசனம் மற்றும் காட்சி இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் உள்ளதாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றுள்ளது மேலும் கமல்ஹாசன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் அத்துடன் கமல்ஹாசனின் புகைப்படங்களை எரித்தும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

  • ஏற்கனவே கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளும் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தின. அதன் காரணமாக தமிழக அரசு அந்த படத்தை தடைச் செய்து அளவிற்கு சென்றது. அதற்குப் பிறகு, பேச்சுவார்த்தையின் மூலம் விஸ்வரூபம் படம் வெளியானது. இந்த நிலையில் தற்போது கமலஹாசன் தயாரித்துள்ள அமரன் திரைப்படத்திற்கும் இஸ்லாம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளன.
  • இந்த திரைப்படத்தில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் சாதனைகள் மற்றும் அவர் சந்தித்த சவால்கள் உள்ளிட்டவற்றை படமாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படம் இன்னும் வெளியாகவில்லை. அத்துடன் டீசர், ட்ரெய்லர் வெளியிடப்படவில்லை.
  • இந்த நிலையில் ஒரு நிமிடம் 35 நொடிகள் ஓடக்கூடிய இந்த கிளிம்ஸ் காட்சியை மட்டும் பார்த்துவிட்டு கருத்து சொல்வது, எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. முழுப்படத்தையும் பார்த்தப்பிறகே அதில் என்ன சொல்லபடுகிறது என்பது தெரியவரும். அதுமட்டுமில்லாமல் இது போன்ற எதிர்ப்புகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவை என்று படைப்பாளிகளும், விமர்சகர்களும் கூறுகின்றனர். அமரன் திரைப்படத்திற்கு இன்னும் வெளியீட்டு தேதியே அறிவிக்காத நிலையில் தற்போது எதிர்ப்பு கிளம்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: அமரன் படத்திற்கு வந்த சிக்கல்.. தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!
Permalink  
 


இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதியா? அமரன் படத்திற்கு எதிராக சூடுபிடித்த போராட்டம்! சிக்கலில் கமல்ஹாசன் By Halley Karthik Updated: Thursday, February 22, 2024, 16:52 [IST]

திருச்சி: கமல்ஹாசன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த திரைப்படத்தை தடை செய்யக்கோரி இன்று திருச்சியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழ் திரையுலகத்தை பிடித்த மிகப்பெரிய சாபக்கேடு, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதுதான் என்று சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை உறுதி செய்யும் வகையில், ரோஜா தொடங்கி, அமரன் வரை இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்பதை போன்ற பிம்பம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அமரன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசனின் 'உன்னை போல் ஒருவன்', 'விஸ்வரூபம்' போன்ற திரைப்படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்திருப்பதாக கூறி இந்த படங்களுக்கு எதிராக இஸ்லாமியர்களும், ஜனநாயக அமைப்புகளும் போராட்டம் நடத்தியிருந்தன.

சமீபத்தில் வெளியாகியிருந்த கேரளா ஸ்டோரி மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. இப்படியாக தங்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் திரைப்படங்களை எதிர்த்து தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், அமரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று அவரது உருவபொம்மையை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற போராட்டத்தில் 30க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர். அவர்கள் திடீரென கமல்ஹாசன் மற்றும் அமரன் படத்தில் ஹீரோவாக நடத்திருந்த சிவகார்த்திகேயன் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து, "இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க கூடாது" என்று கண்டனங்களை முழங்கினர். இந்நிலையில், இதனை தொடர்ந்து இன்று தமிழ்நாடு முழுவதும் இந்த திரைப்படத்திற்கு எதிரான போராட்டத்தை தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே இன்று காலை சுமார் 50க்கும் மேற்பட்டோர் கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/trichirappalli/islamic-organizations-are-protesting-to-ban-the-film-amaran-claiming-that-it-portrays-them-as-terr-585163.html



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

‘அமரன்’ படம் தேசபக்தியின் பெயரால் வெறுப்பை விதைத்து கல்லாவை நிரப்பும் அரசியல் அஜெண்டா... வலுக்கும் எதிர்ப்புகள்!

 

 

  

அமரன் படத்தில் சாய் பல்லவி கிறிஸ்தவர் என்று காட்டுவதற்கு சிலுவையையும், யேசுவையும் பல காட்சிகளில் காட்சிப்படுத்தி இருந்த இயக்குநர், முகுந்த் பிராமணர் என்பதற்கோ, அவரது தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பதற்கோ ஏன் காட்சிகள் வைக்கவில்லை? என்று எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும் நிலையில், தற்போது தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்களும், அவர்களைத் திவிரவாதிகலாக சித்தரிக்கும் போக்கும் நிலவுகின்றன என்று எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. 

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படமானது, முஸ்லிம்களை தேச விரோதிகள், குறிப்பாக காஷ்மீர் மக்களை பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் என்கிற சங்பரிவார எண்ணத்தை வழிமொழியும், உண்மைகளை மறைக்கும் திரைப்படமாக உள்ளது.

தேசத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்கள் போற்றப்பட வேண்டியவர்கள், அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் தியாகமும் போற்றப்பட வேண்டியதாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒரு மரணத்தை உணர்வுப் பூர்வமாக சொல்கிறோம் என்கிற பெயரில், தொடர்ந்து ஓர் சமூகத்தையே குற்றப் பரம்பரையாக சித்தரிப்பது என்பது வேதனையியின் உச்சமாகும். 

திரைத்துறையில் தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய வெறுப்பை விதைக்கும் செயல் ஏற்புடையதல்ல, கண்டனத்திற்குரியது.இந்திய இராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் திரைப்படமாக அமரன் பேசப்பட்டாலும், இப்படம் வெறுப்பை விதைக்கும் சங்பரிவார ஆர்எஸ்எஸ்.சின் அரசியல் அஜெண்டாவை வழிமொழிந்துள்ளது என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.

 

தேச விடுதலைப் போராட்டத்தின் வீரமிக்க முழக்கமாகவும், ஜனநாயக போராட்டக் குரல்களின் மூச்சாகவும் இருந்த ஆஸாதி முழக்கத்தை பயங்கரவாத முழக்கமாகவும், சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் பஜ்ரங்தள் போன்ற மதவாத அமைப்புகளின் ஜெய் பஜ்ரங்பலி கோஷத்தை தேசப்பக்தி கோஷமாகவும் பொதுப்புத்தியில் கொண்டு சேர்க்க இப்படத்தின் இயக்குநர் மெனக்கெட்டுள்ளார் என்றே தெரிகிறது. பல தசாப்தங்களாக காஷ்மீரிகள் அன்றாடம் படும் அவலங்களை எல்லாம் மறைத்துவிட்டு, சங்பரிவாரின் எண்ணத்தையே காட்சிபடுத்தியுள்ளார் இயக்குநர்.

சிறப்பு ஆயுதப்படை அதிகாரச் சட்டத்தால் காஷ்மீர் மக்கள் எதிர்கொண்ட மனித உரிமை மீறல்கள், சொல்லொனா துன்பங்கள் ஏராளம் என்பதை மறுக்க முடியாது.  பாதுகாப்பு படைகளால் அழைத்துச் செல்லப்பட்ட கணவன் இறந்துவிட்டானா இல்லையா என்றுகூடத் தெரியாமல், அரை விதவைகளாக வாழும் காஷ்மீர் பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், காஷ்மீர் ஆண்கள் பயங்கரவாதிகளாக மாறி தங்களது மனைவிகளை விட்டுச் சென்றதால் தான் அங்குள்ள பெண்களில் அதிகமானோர் அரை விதவைகளாக இருப்பதாக திரைப்படம் காட்டியிருப்பது உண்மைக்கு புறம்பான செய்தி என்பதோடு, வடிகட்டிய பொய் பிரச்சாரமுமாகும்.

டெல்லி பாராளுமன்ற தாக்குதலில் குற்றம் சுமத்தப்பட்டு, நேரடி ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் கூட்டு மனசாட்சிக்காக தூக்கிலிடப்பட்டார் அப்சல் குரு என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாகும்.  ஆனால், இந்த அமரன்  திரைப்படத்தில், அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்குப் பிறகு, அதற்கு பழிதீர்க்க தொப்பி ஜிப்பா அணிந்த காஷ்மீர் சிறுவர்கள், வாள் மற்றும் துப்பாக்கிகளை கொண்டு பயிற்சி பெறுவது போல இயக்குநர் காட்டியுள்ளார். ஆனால், அதுமாதிரியான எந்த நிகழ்வுகளும் நடந்ததாக ஆவணங்களும், செய்திகளும் இல்லாதபோது சங்பரிவார ஆர்.எஸ்.எஸ்.-ஸின் அரசியல் அஜெண்டாவை வரலாறாக்க இயக்குநர் முயன்றுள்ளார்.

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியே இந்த அமரன் திரைப்படம். பொதுப்புத்தியில் தவறான எண்ணங்களை விதைத்த காஷ்மீர் ஃபைல்ஸ் அந்த அளவுக்கு எதிர்க்கப்பட வேண்டிய படமோ, அதே அளவுக்கு எதிர்க்கப்பட வேண்டிய படம் தான் இந்த அமரன் திரைப்படமும்.

ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால், தேசபக்தியின் பெயரால் வெறுப்பை விதைத்து கல்லாவை நிரப்பும் அரசியல் அஜெண்டாவே அமரன் திரைப்படமாகும். ஒருவரை ஹீரோவாக காட்ட, இத்திரைப்படம் ஒரு சமூகத்தையே பிரிவினைவாதிகளாக காட்சிப்படுத்தியுள்ளது. அதேபோல் சங்பரிவாரத்தின் எண்ணத்தை தேசபக்தி என்ற போர்வையில், முஸ்லீம்களை தேசவிரோதிகளாகவும் காட்டியுள்ளது. மொத்தத்தில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் முஸ்லிம் வெறுப்பு உச்சத்தின் எச்சமாக உள்ளது அமரன் திரைப்படம்.

சங்பரிவாரத்தின் வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எப்போதுமே தமிழகம் எதிரானது. அதேசமயம் இதுபோன்ற திரைப்படங்கள் வாயிலாக தமிழ் மண்ணிலும் நுணுக்கமாக வெறுப்பை பரப்பும் செயல் ஆபத்தானது. சிறந்த நடிப்பு என்பதை கடந்து, அந்த கதையும், நடிப்பும் உருவாக்கும் வெறுப்பு எனும் நுண்ணரசியலை கவனத்தில் கொள்ளாமல், காஷ்மீர் மக்களுடன் தமிழகம் எப்போதும் துணை நிற்பதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இந்த திரைப்படத்தை பார்த்ததோடு மட்டுமல்லாமல், மிகவும் சிலாகித்து பாராட்டியிருப்பது வருத்தமளிக்கிறது. முதல்வரின் பாராட்டு  இந்த திரைப்படத்தின்  விளம்பர தூதராக அவரை மாற்றியிருக்கிறது.

வெறுப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் அல்லது திணிக்கப்பட்டாலும் அதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய தமிழக முதல்வரின் இந்த பாராட்டு, கலை வடிவில் தமிழக மண்ணில் வெறுப்பை விதைக்கும் ஊக்கியாக மாறிவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பம் சார்ந்த நிறுவனம் ஒன்று இந்த திரைப்பட வர்த்தகத்தில் பங்கு கொண்டிருப்பதாலோ என்னவோ ஆரம்பத்திலேயே இந்த படத்தை பாராட்டி  ஜனநாயக சக்திகளின் எதிர்ப்புக் குரல்களை அவர் மௌனியாக்கி  விட்டார் என்றே தோன்றுகிறது. இது ஒரு தவறான முன்மாதிரியை உருவாக்கிவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அனைத்து ஜனநாயக சக்திகளும் இதுபோன்ற வெறுப்பை திணிக்கும் திரைப்படங்களுக்கு எதிராக தங்களது குரல்களை வலுவாக எழுப்ப வேண்டும்  என கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard