New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கணவனை இழந்த பிரின்சி, பாஸ்டர் டேனியலுடன் சேர்ந்து வாழ்ந்தது, அதிக செக்ஸ் சதாய்ப்பால், கொலை செய


Guru

Status: Offline
Posts: 24811
Date:
கணவனை இழந்த பிரின்சி, பாஸ்டர் டேனியலுடன் சேர்ந்து வாழ்ந்தது, அதிக செக்ஸ் சதாய்ப்பால், கொலை செய
Permalink  
 


கணவனை இழந்த பிரின்சி, பாஸ்டர் டேனியலுடன் சேர்ந்து வாழ்ந்தது, அதிக செக்ஸ் சதாய்ப்பால், கொலை செய்தது!

திசெம்பர் 12, 2023

கணவனை இழந்த பிரின்சிபாஸ்டர் டேனியலுடன் சேர்ந்து வாழ்ந்ததுஅதிக செக்ஸ் சதாய்ப்பால்கொலை செய்தது!

டேனியல்பிரின்சி கிறிஸ்தவ ஊழியம்வேலை: பாலியல் தொல்லை கொடுத்த மத போதகரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த வேலைக்கார பெண்ணை 07-12-2023 அன்று கைது செய்தனர்[1]. வழக்கம் போல, ஊடகங்கள் இச்செய்தியை பி.டி.ஐ பாணியில் வெளியிட்டுள்ள, ஆனால், நேரில் சென்றோ, விசாரித்தோ, ஆய்ந்தோ மேலும் விவ்ரங்கள் எதையும் வெளியிடவில்லை. இணைதள பதிப்புகள் தலைப்பு மட்டும் மாற்றி-மாற்றி, அரைத்த மாவையே அரைத்துள்ளது. கதிர் செய்தி, தினத்தந்தி-உபயம் என்றே வெளிப்படையாகப் போட்டுள்ளது. கடலூரை சேர்ந்தவர் வீராசாமி (எ) டேனியல் (62)[2]. வழக்கம் போல இவ்வாறு இரண்டு பெயர்களை வைத்துக் கொண்டு இரட்டை வேடம் போட்டு வரும் “மைனாரிட்டி” மற்றும் “இந்து” என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றும் கும்பலில் இவனும் ஒருவன் என்று தெரிகிறது. மதபோதகரான இவர், கடந்த சில ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்த மண்டையூரில் வாடகை வீட்டில் தங்கி சுற்றுவட்டார கிராமங்களில் மத போதனையில் ஈடுபட்டு வந்தார்[3]. சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு மாலை நேரங்களில் சென்று, கிறிஸ்தவ மதப் பாடல்களைப் பாடி, மத போதனைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்[4]

செக்ஸ் தொல்லை கொடுத்ததால் கொலைவெறி தாக்குதல்: இவரது வீட்டில் சமையல் வேலை செய்து வந்த மாத்தூர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி செல்வி (எ) பிரின்சி (46) என்பவருக்கு டேனியல் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது[5]. ஆக, பெண்களும் இப்படி இரண்டு பெயர்களை வைத்துக் கொண்டு இரட்டை வேடம் போட்டு வருகிறார்கள் என்றும் தெரிகிறது. அவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், செல்வியோடு டேனியலுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது[6]. இந்நிலையில் நேற்று முன்தினம் 06-12-2023 நள்ளிரவிலும் டேனியல், மீண்டும் பிரின்சிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது[7]. அதிகாலை 2 மணிக்கு பாலியல் உறவுக்கு டேனியல் அழைத்தான் என்கிறது தினமலர்[8]. அதாவது, இது தொடர்ந்து நடந்து வரும் விவகாரமாக இருக்கிறது போலும். இதில், ஆத்திரமடைந்த பிரின்சி, டூவீலரில் உள்ள இரும்பு கம்பியை எடுத்து / சைக்கிள் பல் சக்கரத்தால் டேனியலை சரமாரியாக தாக்கினார்[9]. இதில், பலத்த காயமடைந்த டேனியல் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்[10]. வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மேல் டேனியலின் வீட்டிலிருந்து சப்தம் கேட்டதாக அக்கம்பக்கத்து வீட்டார் மண்டையூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து வீட்டுக்கு போலீஸார் வந்து பார்த்தபோது, தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன் டேனியல் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பிரின்சியும் அங்கே இருந்துள்ளார்.

சேர்ந்து வாழ்ந்த பிரின்சியும், அதிக செக்ஸ் சதய்ப்பில் ஈடுபட்ட டேனியலும்: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டேனியல் வீட்டுக்கே சென்று தங்கிய செல்வி அங்கேயே தங்கியுள்ளார்[11]. சேர்ந்து வாழலாம் என்று உச்சநீதி மன்றமே தீர்ப்புக் கொடுத்துள்ளதால், பாஸ்டர் அமூல் படுத்தியுள்ளார் போலும். இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் டேனியல் வீட்டின் வாசலில் செல்வி அழுதுகொண்டு அமர்ந்திருந்திருக்கிறார். அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள், விசாரித்தபோது, மத போதகர் டேனியலை, தான் கொலை செய்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்[12]. அங்கே கொலை செய்யப்பட்டுக் கிடந்த டேனியல் உடலைப் பார்வையிட்டு, அங்கிருந்த செல்வியிடம் விசாரணை நடத்தினர்[13]. அவர்களின் விசாரணையில் செல்வி, “மத போதகர் டேனியல் எனக்கு தினமும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். அதேபோல நேற்று முன்தினம் இரவும் என்னிடம் அளவுக்கு அதிகமாக செக்ஸ் வைத்துக்கொண்டு, டார்ச்சர் செய்தார்[14]. அதனால், எனக்கு அவர்மீது கோபம் ஏற்பட்டு, அவரைக் கீழே தள்ளியதில் அவர் மயக்கமடைந்தார்[15]

பணம் கேட்டுக் கொடுக்காதலால் கொலை: இதுகுறித்து தகவல் அறிந்து நேற்று 07-12-2023 காலை அங்கு வந்த மண்டையூர் போலீசார் டேனியலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக / உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து பிரின்சியை கைது செய்தனர்[16]. இதுபற்றி போலீசார் கூறுகையில், “கடந்த ஒரு மாதமாக வேலைக்கார பெண் பிரின்சிக்குமதபோதகர் டேனியல் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்இதுதவிர மதபோதகரிடம்பிரின்சி பணம் கேட்டு கடந்த மூன்று தினங்களாக தகராறில் ஈடுபட்டுள்ளார்அதற்கு டேனியல்அடிக்கடி பணம் தரமுடியாதுகொடுக்கும் போது வாங்கி கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்இதனால் ஏற்பட்ட தகராறில் பிரின்சிஇரும்பு கம்பியால் டேனியலை தாக்கி கொன்றது தெரியவந்துள்ளதுபாலியல் தொந்தரவால் டேனியலை அடித்து கொன்று விட்டு பணத்துக்காக கொன்றதாக பிரின்சி நாடகமாடுகிறாரா என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது,” என்றனர்.

மண்டையூரில் ஊழியம் செய்யும் இவனது வேலை என்ன?: மண்டையூர் ஊராட்சி (Mandaiyur Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4283 ஆகும். இவர்களில் பெண்கள் 2178 பேரும் ஆண்கள் 2105 பேரும் உள்ளனர். இவ்வாறு 4,000 மக்கள் இருக்குமிடத்தில் வாடகை வீட்டில் தங்கி சுற்றுவட்டார கிராமங்களில் மத போதனையில் ஈடுபட்டு வந்தான் என்றால், அவ்வாறு அவனை ஊக்குவிப்பது யார், நிதியுதவி எப்படி கிடைக்கிறது போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. மேலும், பாலியல்-செக்ஸ், வன்முறை-கொலை என்பதெல்லாம் கிருத்துவர்களுக்கு சகஜமாகியுள்ளது, தொடர்ந்து வரும் செய்திகளும் வெளிப்படுத்துகின்றன.

ஒழுக்கத்தை மீறி, ஒழிங்கீனத்தில் ஈடுபட்டால் தண்டனை தான் கிடைக்கும்: பிரின்சி கணவனை இழந்தது, சமையல் வேலை செய்ய டேனியலிடம் சென்றது; டேனியல் (62) மற்றும் பிரின்சி (46) சேர்ந்து வாழ்ந்தது. சேர்ந்து வாழும் உறவு தொடர்ந்தது; திடீரென்று வெறுப்பு-கொலைவெறி உண்டானது; அந்த அளவுக்கு செக்ஸ்-டார்ச்சர் கொடுத்தது; கொலையில் முடிந்தது..ஆகவே, மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்று இருப்பவர்கள், வேலை செய்பவர்கள் அவ்வாறே புலன்களை அடக்கிக் கொண்டு சேவை செய்ய வேண்டும். இல்லையெனில், அத்தகைய கூடா ஒழுக்கம் முதலியன, ஒழிங்கினங்களில் தான் முடியும். கடவுள் தண்டனை கொடுப்பார், மன்னிக்க மாட்டார்.

கிறிஸ்துவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும்: கிறிஸ்துவத்தில் தொடர்ந்து எவ்வாறு பாஸ்டர்கள், பாதிரியார்கள், பிஷப்புகள் என்று பலர் அடிக்கடி இத்தகைய பாலியல் வன்மங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது பற்றி நிறையவே எழுதியாகிவிட்டது. அலசி-ஆய்ந்தும் செய்தாகிவிட்டது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில், அதிலும் குறிப்பாக தமிழகத்திலும், பாலியல் வன்மங்கள் தொடர்ந்து நடந்து வந்தாலும், கிறிஸ்துவ மேல் இடங்கள் ஏன் இப்பிரச்சனையைப் பற்றி முறையாக ஆய்வு செய்யவில்லை அல்லது இத்தகைய ஒழுங்கினங்களில் ஈடுபடும் பாஸ்டர்கள் பாதிரிகள் முதலியோரை கட்டுப்படுத்த அல்லது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது போன்றவற்றை செய்யாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது. ஏனெனில் இது அடிக்கடி நடக்கின்றன, ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. கற்பழிப்பு, பாலியல் சதாய்ப்பு, செக்ஸ்-வன்மம், ஏன் கொலைகளும் நடந்து கொண்டிருப்பதால், போலீஸ்காரர் நடவடிக்கைகளும், நீதிமன்ற தண்டனைகளும் நிறைவேறிக் கொண்டுதான் இருக்கின்றன, அபயா கொலை வழக்கு என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும் இவை தொடர்ந்து நடந்து வருவது என்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது அல்லது நடக்கிறது நடந்து விட்டு போய் போகட்டும் என்று தொடர்ந்து இவ்வாறு அமைதியாக இருந்து காலத்தை கழித்து விடுவார்களா என்றெல்லாம் புரியாமல் தான் இருக்கின்றன. இருப்பினும் இந்தியாவில்- தமிழகத்தில் பலர் இதனை உன்னிப்பாக பார்க்க கவனித்து கொண்டிருப்பதால், நிச்சயமாக அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களை திருத்தி கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

© வேதபிரகாஷ்

09-12-2023


[1] தினகரன், பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் அடித்து கொலைவேலைக்கார பெண் கைது, December 8, 2023, 12:31 am.

[2] https://www.dinakaran.com/priest_beaten_death_sexual_harassment_girl_arrested/ – google_vignette

[3] தினமலர், பாலியல் தொல்லை தந்த மத போதகர் கொலைவேலைக்கார பெண் கைது, பதிவு செய்த நாள்: டிச 08,2023 07:26.

[4] https://m.dinamalar.com/paytm/detail.php?id=3499019

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நேரம் காலம் பார்க்காமல் ஓயாமல் செக்ஸ் டார்ச்சர்.. 61 வயது மத போதகரை ஆத்திரத்தில் கொலை செய்த 46 வயது பெண்..!, First Published Dec 9, 2023, 1:41 PM IST.

[6] https://tamil.asianetnews.com/gallery/gallery/christian-father-murder-women-arrest-in-pudukottai-tvk-s5e43v

[7] தினமலர், மத போதகர் கொலை வேலைக்கார பெண் கைது, பதிவு செய்த நாள்: டிச 07,2023 23:28.

[8] https://m.dinamalar.com/detail.php?id=3498455

[9] கதிர்.நியூஸ், தகாத முறையில் தொல்லை கொடுத்த மத போதகர் அடித்துக் கொலை – பெண் பரபரப்பு வாக்குமூலம், By : Karthiga  |  SOURCE :DAILY THANTHI, 8 Dec 2023 12:15 PM.

[10] https://kathir.news/news/religious-preacher-beaten-to-death-for-harassing-her-inappropriately-woman-sensational-confession-1508412

[11] காமதேனு, தினமும் பாலியல் டார்ச்சர்… தாங்க முடியாமல் மத போதகரை கொலை செய்த பெண்!, Updated on : 09 Dec 2023, 9:38 am

[12] https://kamadenu.hindutamil.in/crime-corner/young-woman-arrested-for-murdering-religious-pastor

[13] தமிழ்.ஒன்.இந்தியா, “அது” விஷயமே வேற.. கடலூரை கலங்கடித்த செல்வி.. வீட்டில் நுழைந்து பார்த்தால்.. ஐய்யயோ சைக்கிள் செயினா?, By Hemavandhana, Updated: Saturday, December 9, 2023, 18:41 [IST].

[14] https://tamil.oneindia.com/news/cuddalore/cuddalore-young-woman-and-who-is-this-young-woman-what-did-she-confessed-to-the-pudukkottai-police-564449.html

[15] தினமணி, மதபோதகா் கொலைபெண் கைது, By DIN  |   Published On : 08th December 2023 12:23 AM  |   Last Updated : 08th December 2023 12:23 AM.

[16] https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2023/dec/08/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-4118750.html



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard