தேவஇரக்கம் கிறிஸ்துவ பாதிரி இரக்கமே இல்லாமல், 14-வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்தது!
செக்யூலரிஸம் செக்ஸ், கற்பழிப்பு, பாலியல் வன்புணர்ச்சி, முதலியவற்றிலும் பாரபட்சம் காட்டும் போலிருக்கிறது: மறுபடியும் இன்னொரு கிறிஸ்துவ பாதிரி, சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தான் என்ற செய்தி வந்தாலும், பி.டி.ஐ பாணியில் போட்டிப் போட்டுக் கொண்டு, அதே விசயத்தை பல ஊடகங்கள் தலைப்பை மட்டும் மாற்றிக் கொண்டு, அதே செய்தியை வெளியிட்டுள்ளன. ஏதோ பெரிய புலன் விசாரணை, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு செய்வது போல மற்ற விவகாரங்களில் காட்டிக் கொண்டாலும், இதில் அந்த வேகம் இல்லை. நித்தியானந்தா, சிவசங்கர் பாபா, கலாக்ஷேத்திர விவகாரங்களில் அப்படி ஊளையிட்ட ஊடகங்களில், இப்பொழுது அமைதி காக்கும்போக்கு விசித்திரமாக உள்ளது. அரசியல் தலைவர்களும் அதை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கவில்லை. செக்யூலரிஸம் செக்ஸ், கற்பழிப்பு, பாலியல் வன்புணர்ச்சி, முதலியவற்றிலும் பாரபட்சம் காட்டும் போலிருக்கிறது. இனி, குற்றங்களில் கூட செக்லரிஸ குற்றம் என்று கவனிப்பார்கள் போலும். இப்பொழுது தான், குற்ற தண்டனை சட்டங்கள் புதியதாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன சென்ற செய்தியும் வெளிவந்துள்ளது. அது செக்யூலரிஸத் தனமாக உள்ளதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ததாகத் தெரியவில்லை.
இரக்கமே இல்லாத தேவ–இரக்கம் கற்பழிப்பில் ஈடுபட்டது: காஞ்சிபுரத்தை இராஜாஜி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, சி.எஸ்.ஐ., சர்ச் உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பயில்கிறார்[1]. இவருடைய அம்மா இறந்த நிலையில் அக்கா மற்றும் அப்பாவுடன் வசித்து வருகிறார். தந்தை, ரயில்வே சாலையில் உள்ள சர்ச்சில், தோட்ட வேலை பார்த்து வந்தார்[2]. ஆக ஏழ்மையின் காரணத்தால், இவ்வாறு, இளம்பெண் சர்ச் வேலையில் ஈடுபட நேர்ந்தது. கடந்த ஜனவரி மாதம், சி.எஸ்.ஐ., சர்ச் பாதிரியார் தேவஇரக்கம், 54, என்பவரது வீட்டில் சிறுமி தங்க வேண்டியிருந்தது[3]. அன்றிரவு சிறுமிக்கு, பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்[4]. ஆக, இவன் முன்னரே நோட்டமிட்டுக் கொண்டு, திட்டம் போட்டிருந்தான் போலிருக்கிறது. 2024ம் ஆண்டு முதல் தேதி, 01-01-2024 தேதி, இரவு நேரத்தில் சிறுமி படுத்திருந்த நேரத்தில் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார்[5]. ஆண்டு முதல் நாள் என்று ஒரு ஊடகம் குறிப்பிட்டது திகைப்பாக இருக்கிறது[6]. ஒருவேளை, அந்நாளை, இந்த பாதிரி உபயோகப் படுத்திக் கொண்டான் போலிருக்கிறது[7]. எது எப்படியானாலும், ஊடகங்கள் சென்சார் செய்து கொடுக்கும் விவரங்களைத் தான் வாசகர்கள் படிக்க வேண்டியுள்ளது.
முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப் பட்ட புகார்: குறிப்பிட்ட நாளில், பாதிரி வன்புணர்ச்சியில் ஈடுபட்டதால், பாதிக்கப்பட்ட சிறுமி கத்தியபடியே அங்கிருந்து வீட்டிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது[8]. இதனால், மற்றவர்களும் பார்த்திருக்கக் கூடும். வீட்டில் சிறுமி உண்மையைச் சொல்லியிருக்கிறாள்[9]. இதனால் அந்த சிறுமியின் அக்கம் பக்கத்து வீட்டினருக்கு பாதிரியார் பாலியல் துன்புறுத்திய விஷயம் தெரியவந்தது[10]. இந்த விவகாரம், சிறுமி வசிக்கும் பகுதியினருக்கும் தெரியவந்தது[11]. அதனால் தான் புகார் அளிக்கப் பட்டது போலும்[12]. அதையடுத்து, முதல்வர் தனிப்பிரிவுக்கு, அப்பகுதியினர் – வேங்கடேச பாளையம் கிராம மக்கள் மனு அளித்தனர்[13]. முதல்வர் தனிப்பிரிவுக்கு ஏன் புகாரை அனுப்பினர் என்று தெரியவில்லை. ஒருவேளை உள்ளூர் போலீஸில் புகார் கொடுத்தால். நடவடிக்கை எடுப்பார்களா மாட்டார்களா என்ற சந்தேகம் எழுந்தது போலும். அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் குழந்தைகள் பாதுகாப்புக் குழு விசாரணை நடத்தினர்[14]. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்திகாவ்யா, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாதிரியார் மீது புகார் அளித்தார்[15]. ஆக முறைப்படி படிப்படியாக விசாரணை நடந்தது[16].
விசாரணைக்குப் பிறகு தேவஇரக்கம் கைது: புகாரை விசாரிக்க ஆணையிட்டதும், போலீசார் விசாரித்துள்ளனர்[17]. சிறுமி சோதனைக்கு உட்படுத்தப் பட்டாளா போன்ற விவரங்களையும் ஊடகங்கள் கொடுக்கவில்லை[18]. இதன்பேரில் விசாரித்து உண்மை அறிந்த பிறகு புகார் அடிப்படையில் பாதிரியார் தேவஇரக்கம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்[19]. வழக்கு விவரங்களை செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்[20]. தொடர்ந்து, ‘போக்சோ’ சட்டத்தின்கீழ், பாதிரியார் தேவஇரக்கத்தை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்[21]. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[22]. மற்றபடி, ஏன் அத்தகைய பரபரப்பு ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதில் என்ன பக்தி எல்லாம் தெவையிருக்கிறது என்று தெரியவில்லை[23]. பக்தியை வைத்து அவ்வாறு செய்தால்[24], அது எந்த அளவுக்கு குரூரமானது-கொடுமையானது என்பதை அறிந்து கொள்ளலாம். தொடர்ந்து கிறிஸ்துவர் இவ்வாறு செய்யும்குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈவு-இரக்கம் இல்லாத பாதிரி கற்பழித்திருக்கிறான், அதற்கான தன்டனையை அவன் பெற்றே ஆகவேண்டும்.
விழிப்புணர்வு வருமா–வரதா?: இவ்வாறு வழக்கம் போல செய்தியை முடித்துக் கொண்டன ஊடகங்கள். தொடர்ந்து இத்தகைய பாலியல் குற்றங்களில் கிருத்துவர்கள் ஈடுபட்டு வந்தாலும், அவற்றை சீரியசாக எடுத்துக் கொண்டதாகத் தெரியைல்லை. பெண்ணிய அமைப்புகள் கண்டுகொள்வதே இல்லை எனலாம். இவ்வாறு புகார்-கைது என்று செய்தி வந்தாலும், ஒருசில நாட்களில் இவ்விசயம், ஏன் விவகாரம் மறக்கப் படும். குற்றம் புரிந்தவனும் பெயிலில் வெளி வந்து உலாவிக் கொண்டிருப்பான். வழக்கு எப்பொழுது நீதிமன்றத்தில் வரும், தீர்ப்பளிக்கப் படும் என்பதெல்லாமும் தெரியாது. யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. இதைப் பற்றி தொடர்ந்து பல பதிவுகள் செய்தாகி விட்டது. விவரங்களை வைத்து ஆராய்ச்சி செய்து, பிஎச்டி கூட வாங்கலாம். பணம் இருந்தால் புத்தகம் கூட போடலாம் போலிருக்கிறது.
© வேதபிரகாஷ்
06-07-2024
[1] தினமலர், சிறுமிக்கு பாலியல் தொல்லை ‘போக்சோ‘வில் பாதிரியார் கைது, ADDED : ஜூலை 05, 2024 12:18 AM.
[2] https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-chennai/-priest-arrested-for-sexually-harassing-girl-in-poxo–/3664995
[3] ஐ.பி.சி.தமிழ்நாடு, இரக்கமின்றி பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை – தேவாலயத்தில் பாதிரியார் செய்த கொடூரம்!, Kanchipuram Sexual harassment Crime By Swetha, 05-07-2024.
[4] https://ibctamilnadu.com/article/church-father-who-abused-a-school-girl-is-arrested-1720179159
[5] மீடியான்.காம், பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : பாதிரியாருக்கு போக்ஸோ!,Arul Kumar, 05-07-2024
[6]https://mediyaan.com/sexual-harassment-of-a-school-girl-pocso-for-the-priest/
[7] தமிழ்.லேட்டஸ்ட், Church Priest Arrested: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தேவாலய பாதிரியார் போக்சோவில் கைது..!, Rabin Kumar | Jul 04, 2024 05:51 PM IST.
[8] https://tamil.latestly.com/tamil-nadu/a-church-priest-was-arrested-for-sexually-harassing-a-14-year-old-girl-in-kanchipuram-19609.html
[9] ஏபிபி.லைவ், பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!, By : கிஷோர் | Updated at : 05 Jul 2024 06:35 AM; PUBLISHED AT : 05 JUL 2024 06:35 AM (IST).
[10] https://tamil.abplive.com/crime/kanchipuram-news-police-have-arrested-a-priest-under-the-pocso-act-for-sexually-harassing-a-14-year-old-girl-in-kanchipuram-tnn-191249
[11] அப்.டேட்.நியூஸ்.360, பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!, By : கிஷோர் | Updated at : 05 Jul 2024 06:35 AM; PUBLISHED AT : 05 JUL 2024 06:35 AM (IST).
[12] https://www.updatenews360.com/tamilnadu/sexual-abuse-of-a-14-year-old-girl-who-stayed-in-the-csi-church-the-priests-frenzy-040724/
[13] தினகரன், சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பாதிரியார் கைது, July 5, 2024, 4:50 am
[14] https://www.dinakaran.com/girl_sex_harassment_pocso_arrest/
[15] தினமலர், இரக்கமேஇல்லாமல் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாதிரியார் தேவஇரக்கம் கைது, UPDATED : ஜூலை 04, 2024 05:58 PMADDED : ஜூலை 04, 2024 05:47 PM
[16] https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-chennai/sexual-harassment-of-girl-priest-arrested/3664755
[17] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், காஞ்சிபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சர்ச் பாதிரியார் கைது, WebDesk, 04 Jul 2024 15:59 IST
[18] https://tamil.indianexpress.com/tamilnadu/kanchipuram-minor-girl-abused-church-father-held-4794249
[19] தேவாலயத்தில் சிறுமியிடம் இரக்கமின்றி அத்துமீறிய பாதிரியார் இரக்கம்; முதல்வரின் தனிபிரிவுக்கு பறந்த புகார்,Velmurugan s, First Published Jul 4, 2024, 2:41 PM IST,Last Updated Jul 4, 2024, 2:41 PM IST.
[20] https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/church-father-arrested-under-pocso-act-who-sexually-abuse-minor-girl-in-kanchipuram-vel-sg3djc
[21] ஜீ.டிவி, காஞ்சிபுரத்தில் பாதிரியார் மீது பாலியல் வழக்கு! கைது செய்த போலீஸ்!,
Zee Media BureauJul 4, 2024, 06:04 PM IST.
[22] https://zeenews.india.com/tamil/videos/sex-case-against-the-priest-in-kachipuram-police-arrested-514554
[23] தமிழ்.ஒன்.இந்தியா, பாவம் அம்மா இல்லாத சிறுமி.. பக்தியோடு போனவரிடம்.. பாதிரியார் செய்த அட்டூழியம்.. பாய்ந்தது போக்சோ, By Mani Singh S, Updated: Thursday, July 4, 2024, 18:28 [IST].
[24] https://tamil.oneindia.com/news/chennai/priest-arrested-for-sexually-harassing-14-year-old-girl-in-kanchipuram-619229.html