இந்துமதம் பற்றி பாஸ்டரின் அவதூறு பேச்சு, போலீஸாரிடம் இந்து அமைப்பினர் புகார், பாஸ்டரின் மன்னிப்பு வீடியோ!
16-06-2024 சிஎஸ்ஐ இமானுவேல் சர்ச் பாதிரி பேச்சு: சிஎஸ்ஐ சர்ச்-காரர்களுக்கு உகார், போலீச், வழக்கு,கைது, நீதிமன்றம் முதலியவற்றைப் பற்றிக் கவலைப் படுவது கிடையாது போலும். பிஷப் முதல் பாஸ்டர் வரை ஏதாவது ஒரு பிரச்சினை, குற்றம் செய்து கொண்டே இருப்பர் போலும். கோவையில் வெறுப்புப் பேச்சு, காஞ்சிபுரத்தில் பாலியல் வன்மம் என்று இரு செய்திகள் வந்துள்லன. கோவை உப்பிலிபாளையம் பகுதியில் சிஎஸ்ஐ இமானுவேல் ஆலயம் செயல்பட்டு வருகிறது[1]. தேவாலயத்தில் நடத்தப்படும் பிரார்த்தனை கூட்டங்கள் அனைத்தும் தேவாலயத்தின் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்படுவது வழக்கம்[2]. இந்த நிலையில், கடந்த ஜூன் 16ஆம் தேதி ஆலயத்தில் ஒரு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பிரின்ஸ் கால்வின் பேசியுள்ளார்[3]. அதில், இந்து மற்றும் கிறிஸ்துவ சமூகங்களிடையே பகைமையை ஊக்குவிக்கும் விதமாக பிரின்ஸ் கால்வின் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது[4]. இந்த வீடியோ காட்சிகள் பேஸ்புக் மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது[5]. இதையடுத்து, பாதிரியார் பிரின்ஸ் கால்வின் பேசியதற்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[6].
இந்து அமைப்பினர் போலீஸாரிடம் புகார்: இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் ரேஸ்கோர்ஸ் போலீஸில் புகார் அளித்துள்ளார்[7]. அதன் பேரில் போலீசார், பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது சாதி, மத, இனங்களிடையே விரோத உணர்ச்சியை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்[8]. இதைத்தொடர்ந்து இந்து மதம் குறித்து இழிவாக பேசி மத மோதல்களை உருவாக்க காரணமாக செயல்படும் பாதிரியார் பிரின்ஸ் கால்வினை உடனடியாக கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் எனவும் அவரை கைது செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் எனவும் இந்து முன்னணி தெரிவித்தது. கோவை சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச்சில், பாதிரியார் பிரின்ஸ் கால்வின் இந்து மதத்தை தரம் தாழ்த்தி விமர்சித்து பிரசாரம் செய்ததாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் இந்து முன்னணியினர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர்[9]. புகாரின் பேரில் பாதிரியார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் என்றே தினமலர் செய்தி வெளியிட்டது[10]. பாஸ்டர் பேசிய விவரங்களை ஊடகங்கள் வெளியிடவில்லை…
03-07-2024 – இம்மானுவேல் சர்ச் உறுப்பினர்களே, அந்த மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு: இச்சூழலில், சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச் உறுப்பினர்களே, அந்த மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் 03-07-2024 அன்று புகார் மனு அளித்தார்[11]. சர்ச் உறுப்பினர் ஜோஸ்வா டேனியல் என்பவர் அளித்த புகார் மனுவில், ‘பிரின்ஸ் கால்வின் பேசியது, ஹிந்து மத நம்பிக்கைக்கு அவதுாறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எங்கள் சர்ச் பலிபீடத்தை தன் சுயலாபத்துக்கு பயன்படுத்தியதால் நாங்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்[12]. மற்ற குற்றங்கள் நடந்த பொழுது, இவ்வாறு புகார் அளித்தார்களா என்று தெரியவில்லை. அந்த காஞ்சிபுரம் பாஸ்டர் விசயத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை போலும்..முந்தைய சட்டமீறல்களுக்கு, இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்றும் புரியவில்லை. அவையெல்லாம்,” சர்ச் பலிபீடத்தை தன் சுயலாபத்துக்கு பயன்படுத்தியதாகத்” தெரியவில்லை போலும்..
மன்னிப்பு வீடியோ வெளியிடல்: இந்நிலையில், சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தான் பேசிய கருத்து இந்து சகோதரர்கள் மனதை புண்படுத்தியுள்ளது. இதனால் ஒரு சிலர் அந்த கருத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். என்னுடைய நோக்கம் எவரையும் புண்படுத்துவது இல்லை. கலாச்சார சீரழிவு மற்றும் சாதி ஏற்றத்தாழ்வு குறித்து நான் பேசினேன். என்னுடைய பேச்சால் புண்பட்ட இந்து சகோதர, சகோதரிகளிடம் நான் முழு மனதளவில் என்னுடைய வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று வீடியோ பதிவில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் தெரிவித்துள்ளார்[13]. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் பிரின்ஸ் கால்வினை கைது செய்ய வேண்டும் என இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தனது தரப்பில் இருந்து மன்னிப்பு கேட்டு பாதிரியார் பிரின்ஸ் கால்வின் வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[14]. ஆக இப்படியே அவதூறு-தூஷணம் பேசுவது, மன்னிப்பு கேட்பது என்று வழக்குகளை முடித்து விடுவர் போலும்.
உரையாடல் திட்டத்தில் இந்த முறையும் சேருமா?: கிறிஸ்தவர்களைப் பொறுத்த வரையில், பாஸ்டர் போன்றவர்களுக்கு நன்றாக பயிற்சி அளிக்கப் பட்டு தான் வேலைக்கு வருகின்றனர். போதாகுறைக்கு அவர்கள் தெய்வயியலில் பல பட்டங்களைப் பெற்றும் ஊழியம் செய்கிறேன் என்று வருகிறார்கள். அதில் ஒன்றும் மற்ற மதங்கள் உயர்ந்தவை என்று போதிப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக இந்துமதத்தை தூஷிப்பது, இழித்துப் பேசுவது, வர்ணிப்பது என்றுதான் அவர்கள் எழுத்துகள், புத்தகங்கள், போதனைகள் உள்ளன. ஆகவே, ஒன்றும் தெரியாமல் வந்துவிடுவதில்லை. மேலும், சட்டப் படி காத்துக் கொள்ள உதவிக்கும் அவர்களிடம் தனித்துறை, வழக்கறிஞர் உள்ளர். ஆனால், இதில் மட்டும் மன்னிப்புக் கேட்டு முடித்து விடலாம் என்று தீர்மானித்துள்ளது கவனிக்கத் தக்கது. போதா குறைக்கு, அவர்களே புகாரும் கொடுத்துள்ளார்கள். ஆக, இது புதிய முறையாகத் தெரிகிறது. இதுவும் உரையாடல் திட்டத்தில் வருமா என்று தெரியவில்லை. வெற்றி பெற்றால், அதையும் திட்டத்தில் சேர்த்து விடுவர் போலும்.
© வேதபிரகாஷ்
08-07-2024
[1] இ.டிவி.பாரத், “இந்து சகோதரர்களை புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை” – மன்னிப்பு கோரிய பாதிரியார் பிரின்ஸ் கால்வின்! – kovai Pastor , By ETV Bharat Tamil Nadu Team, Published : Jul 4, 2024, 9:25 PM IST.
[2] https://www.etvbharat.com/ta/!state/pastor-prince-calvin-released-a-video-for-apologizing-controversy-about-hinduism-tns24070407054
[3] தமிழ்.ஏபிபி.லைவ், இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு, By : பிரசாந்த் | Updated at : 03 Jul 2024 10:38 AM (IST),
PUBLISHED AT : 03 JUL 2024 10:38 AM (IST).
[4] https://tamil.abplive.com/news/coimbatore/a-case-has-been-filed-against-the-priest-in-4-sections-for-talking-about-controversy-about-hinduism-190995
[5] தினத்தந்தி, கோவை பாதிரியார் சர்ச்சை பேச்சு | Kovai | Pastor By தந்தி டிவி 3 ஜூலை 2024 10:13 AM.
[6] https://www.thanthitv.com/News/TamilNadu/kovai-pastorthanthitv-273698?infinitescroll=1
[7] தினமணி, ஹிந்து மதம் குறித்து சா்ச்சை பேச்சு: பாதிரியார் மீது வழக்குப்பதிவு, Din Updated on: 04 ஜூலை 2024, 4:34 am
[8] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2024/Jul/03/controversy-on-hinduism-case-filed-against-priest
[9] தினமலர்,பாதிரியார் சர்ச்சை பேச்சு; இந்து முன்னணி போலீசில் புகார்,, ADDED : ஜூலை 02, 2024 09:57 PM.
[10] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-priest-controversy-speech-complaint-to-hindu-front-police–/3662874
[11] தினமலர், மத போதகர் கால்வின் மீது சர்ச் உறுப்பினர் புகார், ADDED : ஜூலை 04, 2024 11:16 PM.
[12] https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-coimbatore/-church-member-complaint-against-pastor-calvin–/3664891
[13] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து சகோதர, சகோதரிகளை புண்படுத்துவது நோக்கம் இல்லை.. மன்னிப்பு கேட்டு கோவை பாதிரியார் வீடியோ, By Velmurugan P, Updated: Friday, July 5, 2024, 7:10 [IST]
[14] https://tamil.oneindia.com/news/coimbatore/a-coimbatore-priest-has-released-a-video-apologizing-to-hindus-619277.html