ஜார்ஜ் பொன்னையாவின் வீடியோ பேச்சு – மத மாற்றமும் ஒரு வியாபாரம் தான் – அப்பாவு கிறிஸ்துவராக இருந்ததாலேயே, சபாநாயகர் பதவி கிடைத்தது!
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நாங்கள் தொடர்ந்து மதம் மாற்றிக் கொண்டுதான் இருக்கிறாம்: ‘அப்பாவு மணி அடிச்சிக்கிட்டு இருந்திருப்பார்’ என்ற தலைப்பில், தான் பேசியதாக வெளியிடப்பட்ட செய்தி, சமூக அமைதியை கெடுப்பதாகவும், தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது’ என, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைதாகி, ஜாமினில் வெளியே வந்தவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா. இவர் பேசியதாக வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியது. பதிவில், “நாங்கள் மதம் மாற்றுவதாக, ஆர்.எஸ்.எஸ்.,காரன் சொல்றான். நாங்கள் மதம் மாற்றிக்கொண்டு தான் இருக்கிறோம். எங்கள் கோவில் ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்.” அதாவது, சர்ச் ஆவணங்கள், பதிவு-புத்தகங்கள் மதம்மாறியவர்களின் விவரங்களை கொண்டுள்ளனவாம்.இதைப் பற்றியும் சர்ச்சைகள் உள்ளன. ஒவ்வொரு கிருத்துவக் குழுமமும் [denomination] பலநேரங்களில், குஈப்பிட்ட நபர்கள் மதம் மாறிய, விவரனங்கள் காணப்படுகின்றன.
மாங்காய், நல்ல மாங்காய் என்று கதை சொல்லி, வியாபாரத்தை விளக்கிய பொன்னையா?: ஜார்ஜ் பொன்னையா தொடர்ந்து சொன்னது, “நல்ல மதம் எதுவோ, அந்த மதத்தை தேடி சென்று, தன்னை மாற்றிக் கொள்கிறான்[1]. மத மாற்றமும் ஒரு வியாபாரம் தான். சந்தைக்கு சென்று மாங்காய் வாங்கப் போனால், ஒருவன் இந்த மாங்காய் நல்லது என்கிறான்; இன்னொருத்தன் இந்த மாங்காய் தான் நல்லது என்கிறான். எந்த மாங்காய் நல்லதோ, அந்த மாங்காயை தேடி வாங்குகின்றனர். அதேபோலத்தான் மத மாற்றமும்,” கவனிக்கத் தக்கது.[2]. ஆக கிருத்துவர்கள் தங்களது மதமாற்ற வேலைகளை எய்து கொண்டே இருப்போம் என்கிறார் போலும். பிறகு ஆர்.எஸ்.எஸ்- போன்றவர்களால் கூட ஏன் மதமாற்றத்தைத் தடுக்க முடியவில்லை என்று தெரியவில்லை. இதிலும், ஏதாவது உள்-நோக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
வீடியோ ஆதாரம் உண்மையா–பொய்யா?: ஜார்ஜ் பொன்னையா தொடர்ந்து சொன்னது, “எங்க மதத்துக்கு வாங்க; நல்லா படிக்கலாம்; பட்டதாரி ஆகலாம்; சபாநாயகர் ஆகலாம். அப்பாவு கிறிஸ்துவராக இருந்ததாலேயே, சபாநாயகர் பதவி கிடைத்தது. இல்லை என்றால், அவர் கோவிலில் மணி அடித்துக்கொண்டு தான் இருந்திருப்பார்,” என, அந்த வீடியோ பதிவில், அவர் பேசி இருந்தார். அவரது பேச்சு, பதிவில் உள்ளபடியே, நம் நாளிதழில் கடந்த 9ம் தேதி செய்தியாக வெளியானது. இதெல்லாம் கூட உள்-நோக்கம் கொண்டது எனலாம். ஏற்கெனவே செய்துள்ள குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இப்படியொரு திட்டம் போடுவது போலிருக்கிறது. இத்தகைய வீடியோ ஆதாரங்களை எந்த அளவிற்கு சாட்சி-ஆதாரங்களாக எடுத்துக் கொள்வது போன்ற பிரச்சினைகள், ஏற்கெனவே நீதி மன்றங்களில் அலசப் பட்டுள்ளன. ஆகவே, குற்றஞ்செய்து, பெயிலில் வெளியே வந்துள்ள இவர், இவ்வாறு வெள்ளோட்டம் விட்டு பார்க்கிறார் என்று தெர்கிறது.
oppo_0இந்நிலையில் செய்தி தொடர்பாக, ஜார்ஜ் பொன்னையா அளித்து உள்ள விளக்கம்[3]: ஜார்ஜ் பொன்னையா தொடர்ந்து சொன்னது, “தங்கள் நாளிதழில் என்னை பற்றிய போலியான செய்தி வெளியானது, கவனத்திற்கு வந்தது. தங்கள் யு டியூப் பக்கத்திலும், இதை பார்த்தேன். இத்தகைய உண்மைக்கு புறம்பான செய்தி, மக்கள் இடையே நிலவும் சமூக அமைதியை கெடுப்பதாக உள்ளது[4]. இது, என் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. இது ஆதாரமில்லாத செய்தி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.” ஆக, தன்னை தயார் படுத்திக் கொள்கிறார் போலும்..
மதம் மாறியவர் தொடர்ந்து சலுகைகளை அனுபவித்து வருவது: எஸ்.சி என்று சொல்லிக் கொண்டு,கிருத்துவராக மாறியவர், தொடர்ந்து, சர்டிபிகிகேட் / சான்றிதழ் வைத்துக் கொண்டு, மத்திய-மாநில அரசு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். உள்-ஒதுக்கீடு போர்வையில், முஸ்லீம்களும் அந்த சலுகைகளைப் பெற்று வருகின்றனர். இதனால், உண்மையில், இந்துக்களின் இடவொதிக்கீடு தான் பாதிக்கப் பட்டு வருகிறது. இதை புரிந்து கொள்ளாமல், இந்துத்துவவாதிகளும் ஏனோ-தானோ என்றிருப்பது, இவ்வாறு வேலை செய்வதும் திகைப்பாக இருக்கிறது. மதம் மாறிய எஸ்.சிக்களுக்கும் இடவொதிக்கீடு தொடர்ந்து செல்லுபடியாகும் என்ற கோரிக்கைக்கு, பிஜேபியும் ஆதரவு தெரிவிப்பதாகத் தெரிகிறது. எனவே, இதெல்லாம் அரசியல் நாடகம் என்றாகிறது. உண்மையில், இந்துமதம்-இந்துக்கள் பாதிக்கப் படுவதை, இவர்கள் கண்டுகொள்வதில்லை என்றாகிறது.
வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள கண்ட அறிக்கை: பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, வீடியோவில் சொன்னதைக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சில் இருப்பது முழுக்க முழுக்க இந்து மத வெறுப்புணர்வு மட்டுமே. அவர் இயேசு கிறிஸ்துவை நம்புவதை விட மதமாற்றத்தை தான் அதிகம் நம்புகிறார் என்று நினைக்கிறேன். அதனால்தான் மதமாற்றத்திலேயே குறியாக இருக்கிறார். மதமாற்றம் வியாபாரம் என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இதுபோன்று, இந்து மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை வெளிப்படுத்துவது இது முதல் முறை அல்ல. கடந்த 2021 ஜூலையில் கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “திமுக ஆட்சி என்பது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் போட்ட பிச்சை” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதே கூட்டத்தில் தான், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். பாரத மாதாவையும், நாகர்கோவில் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி அவர்களையும் இழிவுபடுத்தி பேசினார். இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அரசியல் ஆதரவு இருப்பதால் இவ்வாறு பேசுகிறார்: திமுக அரசு அவர் மீது மென்மையான போக்கை கடைபிடித்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்து மதத்தின் மீதான வெறுப்புணர்வை வெளிப்படுத்திய பிறகுதான், கடந்த 2022-ல் நடைப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் அவரை சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார். திமுக ஆட்சியும், ராகுல் காந்தியின் ஆதரவும் இருக்கும் தைரியத்தில் மீண்டும் இந்து மதத்தையும், இந்துக்களையும் இழிவுபடுத்தி பேசத் தொடங்கியுள்ளார். கிறிஸ்தவராக மாறி இருக்காவிட்டால் அப்பாவு சபாநாயகர் ஆகியிருக்க முடியாது என்று பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கூறியிருக்கிறார். இது உண்மைதானா? கிறிஸ்தவர் என்பதால் தான் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா? திமுக ஆட்சியில் சபாநாயகர், அமைச்சர்கள் போன்ற முக்கிய பதவிகள் மதத்தின் அடிப்படையில் தான் கொடுக்கப்படுகிறதா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்[5]. ராகுல் காந்திக்கும், ஆளும் திமுகவுக்கும் நெருக்கமான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின்பேச்சை எளிதாக கடந்து சென்று விட முடியாது[6].
பொன்னைய்யா மீது உகந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அவர் இந்துக்களை கிறிஸ்துவர்களாக மதம் மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுவது அப்பட்டமாகத் .தெரிகிறது அதற்காக அவர் எதையும் செய்ய துணிந்து இருக்கிறார் என்பதையே அவரது பேச்சுக்கள் காட்டுகிறது. எனவே பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது தமிழக அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இது போன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர், என்பதால் அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்[7]. அசோக் நகர் அரசு பள்ளியில் ஆன்மீகம் பற்றி பேசியதற்காக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க காட்டிய வேகத்தில் பத்தில் ஒரு பங்கு வேகத்தையாவது இரு வேறு மதங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது நடவடிக்கை எடுப்பதில் காட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்[8].
கடந்த 10 மற்றும் இப்பொழுதைய 10 ஆண்டு காலத்தில் பிஜேபி ஒன்றும் செய்யவில்லை: அவ்வப்பொழுது மதம் மாற்றத்தை எதிர்க்கிறோம் என்றெல்லாம் பிஜேபி பேசுவது, ஆனால் முன்னர் ஆண்ட காலத்திலும், இப்பொழுது பத்தாண்டுகள் கடந்து மறுபடியும் ஆட்சிக்கு வந்த நிலையிலும் மதமாற்றத் திட்டத்தை முழுமையாக கொண்டு வரவில்லை. மதமாற்றமும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது குறிப்பாக எஸ்.சிக்கலள் மதம் மாதிரி மத்திய அரசு சலுகைகளை பெற்று வருவதைத் தடுக்க முடியாத நிலையில் தான் இருக்கின்றது. எனவே பிஜேபி மற்றும் இந்துத்துவாதிகள் இந்த விஷயத்தில் உண்மையிலேயே சிரத்தையாக இருப்பார்களா, அரசியல் சட்டத்தின் படி நியாயமாக பணி செய்வார்களா இந்துக்களின் உரிமைகளை காப்பார்களா அல்லது அந்த பிரசிடெண்ட்சியல் ஆர்டர் (The Presidential Order, 1950) பிரிவினை நீர்த்துப் போக செய்வார்களா என்பதை எல்லாம் கவனித்துதான் பார்க்க வேண்டி உள்ளது .
© வேதபிரகாஷ்
30-09-2024
[1] ஒரே தேசம், மதம் மாற்றதான் செய்வோம்.. பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, சர்ச்சை பேச்சு .. திராவிட மாடல் நடவடிக்கை எடுக்குமா?, Oredesam BY OREDESAM September 9, 2024
[2] https://oredesam.in/lets-change-the-religion-priest-george-ponnaiya-controversy-speech/
[3] தினமலர், வீடியோ பதிவு ஆதாரமில்லாத செய்தி: பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கூறுகிறார், நமது நிருபர், ADDED : செப் 15, 2024 04:09 AM.
[4] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-pastor-george-ponnaiah-says-the-unsubstantiated-news-from-the-video-recording–/3731648
[5] அப்டேட்நியூஸ், கிறிஸ்தவர் என்பதால் தான் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா? பற்ற வைத்த பாதிரியார் : CMக்கு ஷாக் கொடுத்த வானதி சீனிவாசன்!, Author: Udayachandran RadhaKrishnan, 10 செப்டம்பர் 2024, 5:01 மணி
[6] https://www.updatenews360.com/top-news/vanathi-srinivasan-gave-a-shock-to-the-cm-100924/
[7] தமிழ்.ஒன்.இந்தியா, மகாவிஷ்ணுவுக்கு வந்தா ரத்தம்.. பாதிரியாருக்கு வந்தா தக்காளிச் சட்னியா.. வானதி சீனிவாசன் காட்டம், By Pavithra Mani Published: Tuesday, September 10, 2024, 17:09 [IST].
[8] https://tamil.oneindia.com/news/coimbatore/chief-minister-stalin-should-explain-the-speech-of-priest-george-ponnaiah-about-appavu-637385.html