தமிழ் மக்களின் பண்பாட்டு வேரை நாம் அறிய மிகவும் தொன்மையான ஆதாரங்கள் சங்க இலக்கியங்கள் பத்துப் பாட்டு எட்டுத்தொகை நூல்கள் ஆகும். இத்தோடு தமிழகத்தில் நடந்த தொல்லியல் அகழாய்வு சான்றுகள், பிறமொழி நூலில் உள்ள குறிப்புகள் எல்லாமே இணைக்கையில் - தரவுகள் அடிப்படையில் நாம் சரியான திறனாய்வு மூலம் பார்க்கவேண்டும். பாட்டுத்தொகை நூல்கள் சங்க இலக்கியங்கள் என்பவை பத்துப்பாட்டு & எட்டுத்தொகை எனும் பதினெண்மேல்கணக்கு 18 நூல்களாகும் . பத்துப்பாட்டு முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு ஆகும்
எட்டுத்தொகை எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா பின்வருவது: நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை 1.நற்றிணை; 2.குறுந்தொகை; 3.ஐங்குறுநூறு; 4. பதிற்றுப்பத்து 5. பரிபாடல் 6.கலித்தொகை; 7.அகநானூறு & 8.புறநானூறு அடங்கிய தொகுப்பே எட்டுத் தொகை ஆகும்