New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முன்னுரை


Guru

Status: Offline
Posts: 24811
Date:
முன்னுரை
Permalink  
 


 முன்னுரை

திருக்குறள் தலைசிறந்த நூல்; திருவள்ளுவர் ஒப்பற்ற புலவர்; இது தமிழர் கருத்து மட்டும் அன்று; திருக்குறளைப் படித்த அனைவரும் இவ்வாறு கூறுகின்றனர்; ஒப்புக்கொள்கின்றனர்; பாராட்டுகின்றனர்.

இதற்குக் காரணம் ஒன்றேதான். திருக்குறளிலே கூறப்பட்டிருக்கும் அறங்களிலே சிலவற்றைத் தவிர மற்றவைகள் எல்லாம் அனைவர்க்கும் பொதுவானவை.

எல்லாச் சமயத்தினர்க்கும், இனத்தவர்க்கும், மொழி யினருக்கும் பொதுவான கொள்கைகள் பல திருக்குறளிலே அடங்கியிருக்கின்றன.

திருக்குறள் இன்ன சமயத்தினருக்கு உரியது; இன்ன இனத்தினர்க்கு உரியது; என்று கூற முடியாது. வள்ளுவர்க்கும், அவர் குறளுக்கும் தனி நாகரிகம் கற்பிப்பது, தனி இனம் கற்பிப்பது, தனிச்சமயம் கற்பிப்பது முறையன்று; இது உண்மைக்கு மாறானது.

வள்ளுவர் குறள்தான் தமிழர் நாகரிகத்தைக் கூறுகின்றது; அதுவே தமிழர் சமயநூல் என்போர் உண்டு; இக்கருத்து வரவேற்கத் தக்கது; போற்றத் தக்கது. இவர்கள் கூற்று உண்மையானால் இந்நாட்டில் ஆரியர் தமிழர் என்ற வேற்றுமைக்கே இடமில்லை.

ஆரியர்கள் என்று யாரை நினைக்கிறோமோ அவர்கள் வள்ளுவர் கருத்தை மறுப்பதில்லை. அப்படியே ஒப்புக் கொள்ளுகின்றனர். ஆதலால் வள்ளுவர் குறளைக்கொண்டு நாகரிக வேற்றுமை--பண்பாடு வேற்றுமை கற்பிக்க இடம் இல்லை.

வள்ளுவர் கருத்துக்கும் வடநூல்களின் கருத்துக்களுக்கும் வேற்றுமையில்லை. வள்ளுவர் கருத்தை வடமொழிப் புலவர் களும் போற்றுகின்றனர். அவருடைய கருத்துக்கள் வடநூல் களிலும் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆதலால் வள்ளுவரைக்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard