//சனாதன தர்மம் என்றால் என்னவென்று முதலில் விபரம் அறிந்தவர்கள் தெளிவாக அனைவருக்கும் விளக்கி சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் அதற்குப் பிறகு அதை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் கருத்து சொல்வது சரியாக இருக்கும். எல்லாவற்றிற்கும் திருக்குறளையும், திருவள்ளுவரையும் இவர்கள் இழுத்து தங்களுக்கு ஆதரவு தேடிக் கொள்கிறார்கள். ஆனால் சனாதன தர்மம் பற்றி ஒரு வார்த்தை கூட திருவள்ளுவர் குறிப்பிடவில்லை. அப்படி அவர் சனாதன தர்மத்தை வலியுறுத்தி இருந்தால் அவருக்கு இவ்வளவு பெயரும், புகழும் கிடைத்திருக்காது. திருக்குறளுக்கும், சனாதன தர்மத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது" என சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.//
ந. தெய்வ சுந்தரம்
---------------------------------------------
அதுதானே இங்குப் பிரச்சினை! எரிந்த கட்சி , எரியாத கட்சி இருதரப்புமே மோதிக்கொண்டிருக்கிறார்கள்! ஆனால் இரு தரப்புமே 'சனாதனம் தர்மம்' என்பதை வரையறுத்துக்கொள்ளவில்லை!
சனாதனத்தை அதரிப்பவர்கள் பெரும்பாலும் அதை ''இந்து மதத் தர்மம்'' என்று கூறி, ஆதரிக்கிறார்கள்! சனாதன எதிர்ப்பு என்பது இந்துமத எதிர்ப்பு என்று கூறுகிறார்கள்! அதைத் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காவும் பயன்படுத்த முனைகிறார்கள்!
மறுபுறம், சனாதனத்தை எதிர்ப்பவர்கள் . . . (1) அது கடவுள் ஏற்பா , (2) ஒரு மதத்தின் தர்மமா (3) இந்துமதமா (4) பார்ப்பனியமா (5) மூட நம்பிக்கைகளா, (6) பிற்போக்குப் பண்பாடா, (7) அது எல்லா மதத்தற்கு அப்பாற்பட்டு எல்லா மக்களிடமும் இருக்கிறதா, ( 8 ) அதை எவ்வாறு இல்லாமல் ஆக்குவது போன்ற வினாக்களுக்கு எந்தவிதத் தெளிவான விடையையும் அளிக்கவில்லை!
'யானைத் தடவிய மூடர்கள்'' கதைபோன்று'' ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் அளிக்கின்றனர். தமிழ் இலக்கியங்களை வேறு குறிப்பிடுகிறார்கள்!
சனாதன ஆதரவு, எதிர்ப்பு இரண்டையும் இங்குள்ள அரசியல் கட்சிகள் எவ்வாறு பார்க்கின்றன? இது ஒரு முக்கியமான பிரச்சினை என்பதால் அனைத்துக் கட்சிகளும் ''சனாதனம் தர்மம்'' என்றால் என்ன தங்கள் கண்ணோட்டத்தின்படி எது என்பதை விளக்கி, தங்கள் நிலைபாடுகளையும் கூறவேண்டும்!
'வாக்கு வங்கி' அரசியலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக . . . நழுவிப் போகக்கூடாது! தேர்தல் வெற்றி, தோல்வி என்பதைப் பார்க்காமல், இந்தப் பிரச்சனையில் தங்கள் நிலைபாடுகளைத் தங்கள் கட்சி அல்லது இயக்க அறிக்கைகளிலும் தேர்தல் அறிக்கைகளிலும் தெளிவுபடுத்த வேண்டும்.
ஒரு எடுத்துக்காட்டுக்காகக் கூறுகிறேன் . . . ஒரு மார்க்சியவாதி என்றால் ( அரசியல், பொருளாதாரம் தாண்டி) அவனுடைய தத்துவம், பண்பாடு ஆகியவற்றில் . . . (1) இயற்கையின் செயல்பாட்டுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி காரணம் என்பதை ஏற்காமல் இயற்கைக்குள்ளேயே காரணங்கள் இருக்கின்றன என்ற கொள்கை உடையவன் (2) இயற்கைப் பொருள்களோ நிகழ்வுகளோ அவற்றிக்குள்ளேயே உள்ள பண்பால் அல்லது விதிகளால் நீடிக்கின்றன. மாறாக, அவற்றைப்பற்றி ''மேலே உள்ள ஒருவரோ'' அல்லது உலகில் உள்ள ''தலைவர்களோ'' ''ஞானிகளோ'' ''சாமியார்களோ'' சிந்திப்பதால் அல்லது கட்டளறை இடுவதால் நிகழவில்லை என்று கருதுகிறவன் (3) இறை மறைப்பாளன் (2) எனவே எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளாதவன் (3) சாதிக்கோட்பாட்டை ஏற்காமல் சாதி எதிர்ப்பு உணர்வுடையவன் (3) பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற எந்தவித நிகழ்விலும் புரோகிதம்சார்ந்த ''சடங்குகளை'' ஏற்காதவன் (4) ஆண் ஆதிக்கம், பெண்ணடிமை, தீண்டாமை போன்றவற்றை எதிர்ப்பவன்
ஒரு எடுத்துக்காட்டுக்காகக் கூறுகிறேன் . . . ஒரு மார்க்சியவாதி என்றால் ( அரசியல், பொருளாதாரம் தாண்டி) அவனுடைய தத்துவம், பண்பாடு ஆகியவற்றில் . . .தன்னளவில் .... கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுபவன் ஆவான்!
(1) இயற்கையின் செயற்பாட்டுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி காரணம் என்பதை ஏற்காமல் இயற்கைக்குள்ளேயே காரணங்கள் இருக்கின்றன என்ற கொள்கை உடையவன்
(2) இயற்கைப் பொருள்களோ நிகழ்வுகளோ அவற்றிக்குள்ளேயே உள்ள பண்பால் அல்லது விதிகளால் நீடிக்கின்றன. மாறாக, அவற்றைப்பற்றி ''மேலே உள்ள ஒருவரோ'' அல்லது உலகில் உள்ள ''தலைவர்களோ'' ''ஞானிகளோ'' ''சாமியார்களோ'' சிந்திப்பதால் அல்லது கட்டளைகள் இடுவதால் நிகழவில்லை என்று கருதுகிறவன்
(3 ) இறை மறைப்பாளன்
(4) எனவே எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளாதவன்
(5) சாதிக்கோட்பாட்டை ஏற்காமல் சாதி எதிர்ப்பு உணர்வுடையவன்
(6) பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற எந்தவித நிகழ்விலும் புரோகிதம்சார்ந்த ''சடங்குகளை'' ஏற்காதவன்
(7) ஆண் ஆதிக்கம், பெண்ணடிமை, தீண்டாமை போன்றவற்றை எதிர்ப்பவன்
இவைபோன்று மேலும் சிலவற்றைப் பட்டியலிட்டுக் கூறலாம். இதுபோல எதையும் வரையறுத்துக்கூறினால் நன்றாக இருக்கும்.
அவர்களுடைய அரசியற் கொள்கைகள், பொருளாதாரக் கொள்கைகள் போன்றவை ஒருபுறம் இருக்கட்டும். . . குறைந்தது இந்த நேரத்திலாவது தங்களது தத்துவ நிலைபாட்டையாவது தெரிவிக்கலாம் அல்லவா?
மேற்கண்டவற்றை ஒரு அட்டவணையாகத் தயாரித்து, ''ஆமாம்'' ''இல்லை'' என்ற பதில்களை ஒவ்வொரு கட்சித் தலைமையிடமும் வாங்கினால் சிறப்பு.
பிராமணர்கள் உயர்தட்டு, இடைத்தட்டு சாதியினரைச் ''சூத்திரர்'' என்று கூறி , தள்ளிவைத்த அன்றைய நிலை இன்று மாறிவிட்டது! பெரிய வெற்றிதான்! மகிழ்ச்சி! ஆனால் . . .
அன்று ( பிராமணர்கள் பிறரைச் ''சூத்திரன்'' என்று ஒதுக்கிவைத்தது !) இதுதான் உண்மை. யாராலும் மறுக்கமுடியாது. இன்று நிலைமை மாறியிருக்கிறது.
ஆனாலும் சில சிற்றூர்களில் தலீத் அல்லாத உயர்த்தட்டு, இடைத்தட்டு சாதிகளைச் சேர்ந்தவர்கள் தெருக்களில் தலீத் விவசாயி செருப்பு போட்டு நடக்கத் தடை என்று கூறுகிறார்கள். தேனீர்க் கடைகளில் தனிக் கோப்பை என்று கூறுகிறார்கள். இந்த நிலையும் மாறவேண்டும்.
எனது சிறுவயதில் . . . கொற்கை என்ற ஊரில் . . . என் பாட்டியின் (பிராமணர் இல்லை . . . ஆனால் தலீத்தும் இல்லை!) ) நிலத்தில் வேளாண்மை செய்கிற உழவர் பாட்டியின் வீட்டில் வாசல் திண்ணையோடு நின்றுவிடவேண்டும். பாட்டியின் வீட்டார் . . . குழந்தைகள் . . . . அந்த உழவரைத் தொட்டுவிட்டால், உடனே அக்குழந்தைகள் தங்களுடைய ஆடைகளைக் களைந்துவிட்டுத்தான் வீட்டுக்குள் வந்து, வேறு ஆடைகளை அணியவேண்டும். சிறு குழந்தைகளைக் கூட அந்த உழவர் ''நயினா' என்றுதான் கூப்பிடவேண்டும். பெண்களை 'நாச்சியார் ' என்று கூப்பிடவேண்டும். இன்று அந்த ஊரில் எப்படி நிலைமை என்பது எனக்குத் தெரியவில்லை!
இன்று தமிழகத்தில் நடைபெறுகிற ''ஆணவக் கொலைகள்கூட'' பிராமணர் அல்லாத பிற உயர்த்தட்டு, இடைத்தட்டு சாதிகளைச் சேர்ந்தவர்களால்தான் நிகழ்த்தப்படுகின்றன. அப்படியென்றால் . . . பிராமணர்கள் பிற உயர்தட்டு, இடைத்தட்டு சாதிகளைச் சேர்ந்தவர்களை ''சூத்திரர்'' என்று ''தள்ளிவைத்த'' நிலை இன்று மாறிவிட்டது. உயர்தட்டு, இடைத்தட்டு சாதியினர் தங்களுக்கான ''உரிமையைப்'' பெற்றுவிட்டார்கள்! மகிழ்ச்சி.
ஆனால் அன்றும் இன்றும் தலீத் மக்களைப் பிராமண சாதியினரும் , பிற உயர்தட்டு, இடைத்தட்டுச் சாதியினரும் சேர்ந்து ''தள்ளிவைத்த'' தலீத் மக்களின் நிலை மாறவில்லையே! பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அலுவலகங்களிலும் தலீத் மனிதர்களை இன்னும் ''வேறுமாதிரிதானே'' பார்க்கிறார்கள்! இதற்கு அடிப்படை என்ன? அப்படியென்றால் ''பகுத்தறிவுப் புரட்சி'' யாருக்கு '' மரியாதை'' வாங்கிக் கொடுத்துள்ளது? இதையும் சேர்த்து நண்பர்கள் நினைத்தால் நல்லது!
பிராமணர்கள் தங்களைச் ''சூத்திரன்'' என்று சொன்னால் தப்பு! ஆனால் ''நாங்கள் தலீத் மக்களை'' தொடர்ந்து ஒதுக்கித்தான் வைப்போம் என்று கூறுகிற நிலை சரியா?
''சனாதனம்'' என்பதில் ''தீண்டாமையும்'' அடங்கும் என்றால், இது இன்று தமிழகத்தில் எந்தெந்த சாதியினரிடம் இது நீடிக்கிறது என்று பார்க்கவேண்டும். ''பிராமணர்கள்'' மட்டுமல்ல, பிற ''உயர்தட்டு, இடைத்தட்டு சாதியினரிடம்'' இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கெதிராகப் போராடவேண்டும் என்பதே எனது கருத்து.
தீண்டாமைக்கு எதிரான தலித் மக்கள் போராட்டங்களுக்குப் ''பிராமணர், பிற உயர்தட்டு, இடைத்தட்டு சாதிகளைச் சேர்ந்தவர்கள்'' தலைமை தாங்கவேண்டும்! அதுதான் உண்மையான, சரியான ''சனாதன எதிர்ப்புப் போராட்டம்'' ஆகும்!
''சனாதனத்தில்'' தீண்டாமை, பெண்ணடிமை, ஆண் ஆதிக்கம் இந்த மூன்றும் அடங்கும் என்றால் . . . இதில் முதலாவது சாதிகள் பற்றியது. எந்த சாதிகள் இன்று தலித் மக்களிடம் ''சனாதனத்தைப்'' பின்பற்றுகிறார்கள் என்பதைப் பார்த்து, அதைத் தீர்க்கவேண்டும்.
அடுத்து, பெண்ணடிமை, ஆண் ஆதிக்கம்! இந்த இரண்டும் சாதிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சமுதாய அவலம் ! வீட்டுக்குவீடு நீடிக்கின்ற ஒன்று! இவற்றையும் நீக்க என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டும்!
அடுத்து புரோகிதம், சடங்கு, சமஸ்கிருதம் . . . இவையும் பிராமணர் தாண்டி, பிற உயர்தட்டு, இடைத்தட்டு சாதியினரிடமும் பெரும்பான்மையாக நீடிக்கின்றன. இதற்கு எதிராகவும் போராடவேண்டும்! இவற்றையெல்லாம் செய்துமுடித்தால்தான் . . . ''சனாதன எதிர்ப்பு'' என்பதற்குப் பொருள் இருக்கும்!
''சனாதனத்தில்'' தீண்டாமை, பெண்ணடிமை, ஆண் ஆதிக்கம் இந்த மூன்றும் அடங்கும் என்றால் . . . இதில் முதலாவது சாதிகள் பற்றியது. எந்த சாதிகள் இன்று தலித் மக்களிடம் ''சனாதனத்தைப்'' பின்பற்றுகிறார்கள் என்பதைப் பார்த்து, அதைத் தீர்க்கவேண்டும்.
அடுத்து, பெண்ணடிமை, ஆண் ஆதிக்கம்! இந்த இரண்டும் சாதிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சமுதாய அவலம் ! வீட்டுக்குவீடு நீடிக்கின்ற ஒன்று! இவற்றையும் நீக்க என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டும்!
அடுத்து புரோகிதம், சடங்கு, சமஸ்கிருதம் . . . இவையும் பிராமணர் தாண்டி, பிற உயர்தட்டு, இடைத்தட்டு சாதியினரிடமும் பெரும்பான்மையாக நீடிக்கின்றன. இதற்கு எதிராகவும் போராடவேண்டும்! இவற்றையெல்லாம் செய்துமுடித்தால்தான் . . . ''சனாதன எதிர்ப்பு'' என்பதற்குப் பொருள் இருக்கும்!
நன்றி நண்பர் மணிவண்ணன் அவர்களே. மிக அருமையாகத் தொகுத்துக் கூறியுள்ளீர்கள். மேலும் இவற்றில் எவை எவை இன்று இல்லை , எவை எவை இன்றும் இருக்கின்றன என்பதையும் தெளிவாக முன்வைத்துள்ளீர்கள். (அவருடைய பதிவில் உள்ளது)
பல இன்று இல்லாமல் போனவற்றிற்குக் காரணம் என்ன? இவற்றை முன்னிலைப்படுத்திய மதங்கள் இவற்றைக் கைவிட்டுவிட்டனவா அல்லது அந்த மதங்கள் இல்லாமல் போய்விட்டதா? சமுதாய மாற்றம் குறிப்பாக, அரசியல் பொருளாதாரம் மாறியுள்ளதே காரணம் எனறு நான் கருதுகிறேன். தாங்கள் குறிப்பிடுகிற ''சாமியார்களைத் தவிர''!
மேலும் இந்தச் ''சாமியார்கள்'' இதை வலியுறுத்தினாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை. அவர்களது வாழ்க்கைப் பிரச்சினை இவற்றையெல்லாம் இல்லாமல் ஆக்கிவிட்டன. ''சாமியார்களின் குடும்பத்தினர் ( குடும்பம் அவர்களுக்கு இருந்தால்!) வேண்டுமென்றால் அவற்றைப் பின்பற்றலாம்!
இதுபோன்று இன்று நீடிக்கிற தீண்டாமைக்கும் இன்று பொருளாதார அடிப்படை இல்லை. இருப்பினும் பழைய சமுதாய அமைப்பின் அரைகுறை நீடிப்பு - குறிப்பாகச் சிந்தனைத் தளத்தில் - நீடிப்பதே காரணம்! ஆனால் இந்தத் '' தீண்டாமை'' குறிப்பிட்ட மதம் சார்ந்ததா என்பதைச் சமூகவியலாளர்கள் ஆய்ந்து கூறவேண்டும். அவ்வாறு இருந்தால் அந்தக் குறிப்பிட்ட மத்த்திற்கு எதிராகப் போராடவேண்டும். இதில் மாற்றுக்கருத்தே கூடாது! கிடையாது!
எனவே, தீண்டாமை ஒரு குறிப்பிட்ட மதத்தின் கொள்கையாக இருந்தால், அதை ஒழிக்க அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களைப் பொறுத்த -வரையில் தீண்டாமையை ஒழித்துக்கட்ட முன்வர -வேண்டும்.
தமிழகத்தில் தீண்டாமை இன்னும் பலவகைகளில் - குறிப்பாக, திருமணத்தில் - நீடிக்கிறது. உயர்சாதியினர் தெருக்களில் தலித் மக்கள் காலணி அணியக்கூடாது, தேநீர்க்கடைகளில் தனிக் கோப்பை, ''ஆணவக் கொலைகள்'' , கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தங்கள் கைகளில் சாதி அடையாளம் கட்டிக்கொண்டு செல்கிற பழக்கங்கள், சாதிய அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் நீடிக்கிற மாணவர் அமைப்புக்கள், சாதிய மோதல்கள் போன்றவற்றையெல்லாம் எதிர்த்துப்போராடவேண்டும்.
இவையெல்லாம் ''ஒரு குறிப்பிட்ட மதத்தின்'' கொள்கைகளாக இருந்தால், அந்த மதத்தையும் எதிர்த்துப் போராடவேண்டும். அதில் தயக்கம் காட்டக்கூடாது. ''இது இது மக்களுக்கு எதிரானவை; எனவே இவை உங்கள் கொள்கைகளாக இன்று நீடித்தால், ஒன்று நீங்கள் இதைக் கைவிடவேண்டும்; அல்லது நாங்கள் உங்கள் மதத்திற்கு எதிராகப் போராடுவோம்'' என்று வெளிப்படையாகக் கூறவேண்டும். இதில் தயக்கத்திற்கு இடமே அளிக்கக்கூடாது!
அதுபோன்று, வீடுகளில் ''புரோகிதம், சடங்குகள் (பிறப்பு, இறப்பு, திருமணம், கணபதி ஹோமம், , சமஸ்கிருத மந்திரங்கள்'' கூடாது என்று தமிழர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, பின்பற்றவேண்டும். தமிழகத்தில் ஆதினங்கள்கூட அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இறைவனுக்குப் பூஜைசெய்ய ''பிராமணர்களையே'' நியமித்துள்ளார்கள். அதை அவர்கள் நிறுத்தவேண்டும்.
இன்று நீடிக்கிற ''சனாதனச் செயல்களுக்கும்'' இன்றைய அரசியல் பொருளாதார அமைப்புக்கும் தொடர்பு இல்லை எனக் கருதுகிறேன். அதாவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கோ அல்லது தனிநபர்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைக்கோ தொடர்பு இல்லை என்க கருதுகிறேன். சிந்தனைத் தளத்தில் பழைய கருத்துக்ளும் நடைமுறைகளும் இன்னும் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. ஒரு ''பண்பாட்டுப் புரட்சியைத்'' தமிழர்கள் மேற்கொள்ளவேண்டும்!
எனவே, நீடிக்கிற 'சனாதன அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு'' எதிராக, தனிநபர், குடும்பம் , அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் ''இவற்றை நாங்கள் பின்பற்றமாட்டோம்'' என்று உறுதிமொழி எடுத்து, ஒவ்வொரு நபரும் குடும்பமும் வாழ்ந்துகாட்டவேண்டும்.
அரசியல் கட்சிகள் இனி ''சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம்; அமைச்சரவையில் இடம் ஒதுக்கமாட்டோம்'' என்று பிரகடனம் செய்யவேண்டும். இதுதான் உண்மையான ''சனாதனத்திற்கு எதிரான போராட்டமாக'' அமையும்!
நான் முக்கியமாகக் கருதுவது . . . (1) 'சனாதனம்' என்பதில் இன்று நீடிக்கின்றவற்றிற்கு ஒட்டுமொத்தச் சமுதாய அமைப்பு காரணமா அல்லது ஒரு குறிப்பிட்ட மதம் காரணமா? (2) அந்த ஆய்வின் அடிப்படையில் அவை இல்லாமல் போவதற்கு என்ன தேவை? ஒட்டுமொத்தச் சமுதாய மாற்றமா அல்லது எந்தவொரு தனிப்பட்ட மதமா? சாதியா? இவற்றை முடிவுசெய்து போராட்டவழிகளை முன்வைக்கலாம்! எத்தனையோ ''கமிஷன், ஆணையம் (!!) '' அமைக்கிறோம்! இதற்கும் இதுபோன்ற ஒன்றை அமைத்து, செயல்படலாமே!
//அதில் ஐயமில்லை. தேர்தல் அரசியலில் இருக்கும் எந்த அரசியல் கட்சியும் நீங்கள் சொல்வதை வலியுறுத்தாது. உண்மையில் சனாதன ஒழிப்பைத் தேசியப் பேசுபொருளாக்கிய திரு உதயநிலை இசுத்தாலினின் பேச்சை நான் எதிர்பார்க்கவில்லை. தீண்டாமை ஒழியும் வரைக்கும் சனாதனம் நிலைத்திருக்கும். சனாதனத்தை ஒழிப்பேன் என்பவர்கள் தீண்டாமையையும் சாதீயத்தையும் ஒழிக்க முன்வரவேண்டும். சாதீயத்தைப் போற்றும் குருபூசைகளைப் புறக்கணிக்க வேண்டும். சாதீய மாநாடுகளைப் புறக்கணிக்க வேண்டும். தேர்தல் அரசியல் கட்சிகள் இவற்றைச் செய்யத் தயங்கும். ஆனால், இந்தப் பட்டியலில் உள்ளவற்றில் பெரும்பாலானவற்றை ஒழித்தது எந்தத் தேர்தல் அரசியல் கட்சியும் இல்லை. சனாதனம் எங்கள் உயிர்மூச்சு என்பவர்களிடம் இந்தப் பட்டியலில் உள்ளவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டும். உண்மையான சனாதனம் இவைதாம். காசியில் உள்ள வேதியப் பூசாரி முதல் சங்கர மடங்கள் வரைக்கும் இவற்றைத்தான் வலியுறுத்துகின்றன. இவைதாம் உங்கள் உயிர்மூச்சா என்ற கேள்வியை இந்தியாவெங்கும் எழுப்ப வேண்டும்.//