New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முன்னோர் மொழி போற்றுதல்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
முன்னோர் மொழி போற்றுதல்
Permalink  
 


 திருக்குறள் அமைப்பும் முறையும்-இரண்டாம் பகுதி

நுவலும் முறை
1. முன்னோர் மொழி போற்றுதல்

எல்லாப் பொருளும் . இதன்பால்உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் ( திருவள்ளுவமாலை , 29
என்று வள்ளுவர் தந்த திருமறையைப் போற்றுகிறார் மதுரைத் தமிழ் நாகனார் . " பலவகை நூல்களாலும் சொல்லப்பட்ட எல்லாப் பொருளும் இந் நூலகத்து அடங்கியிருக்கின்றன . இதனிடத்தில் இல்லாத யாதொரு பொருளும் எந் நூலகத்தும் இல்லை " என்பது இப் போற்றுரையின் கருத்து . இதனால் வள்ளுவரின் பொதுமறையுள் முன்னோர் செய்த நூல்களில் உள்ள சாரங்கள் எல்லாம் பொதிந்துள்ளன என்பது தெளிவாம் . அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள் பயக்கும் நூல்களையும் நன்கு ஓதித் தம் உலகியல் அறிவோடு ஒட்டித் தெளிந்து எல்லார்க்கும் ஏற்ற பொது நல்லறங்களை மட்டும் சிறப்பாக எடுத்துக் கூறுதலே இவர்தம் நூலின் தனிச்சிறப்பு .

( குறிப்பிட்ட ஒரு சமயத்தாருக்கு மட்டும் உரிய தனியறங்களை வள்ளுவர் தம் நூலுள் எடுத்து ஓதவில்லை . எல்லார்க்கும் உரிய பொதுக் கடமைகளையே எங்கும் வகுத்துரைக்கின்றார் .

சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப் பொருள் இது என்ற
வள்ளுவன் ( கல்லாடம் , 14 ) என்று கல்லாடர் இவர்தம் உலகியல் உலகியல் பொது நோக்கினைப் பாராட்டுகின்றார் . )

உரைகாரர் பரிமேலழகரோ வள்ளுவப் பெருந்தகை வடநூற் கடலையும் நிலைகண்டு உணர்ந்து , அம்மொழி நூல்களில் கண்ட சாரங்களையும் தம் நூலுள் பயன்படுத்தியுள்ளார்

என்னும் கருத்துகளை ஒரு சில இடங்களில் சுட்டியுள்ளார் .!
வடநூற் கருத்துகளுக்கும் இவர்தம் வாய்மொழிக்கும் உள்ள ஒப்புமை கருதி இவ்வகை முடிவிற்கு இவர் வருகின்றார் . இதில் ஓரளவு உண்மையிருப்பது போல் தோன்றினாலும் முற்றும் அவ் வடநூல் வழிகளையே மேற்கொண்டார் என்று கூறுவதற்கு இல்லை . தமிழிலும் எத்தனையோ துறைகளில் அருமையான பல நூல்கள் முன்னர் வழங்கிப் பின்னாளில் போற்றுவாரின்றிக் காலவெள்ளத்தில் மாய்ந்து போன குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன . ஆதலால் , இவர் வடநூலாரை நோக்கியே உரைத்தார் என்று ஒருதலையாகத் துணிய இடமில்லை ..

வள்ளுவர் தமது நூலுள் சிற்சில இடங்களில் , நூல் உரைக்கும் , ( 743 ) , பனுவல் துணிவு ( 21 ) , நூலோர் ( 322 ; 533 ) என்று பொதுப்படக் கூறுகின்றாரேயின்றி இன்ன நூல் என்று சுட்டிப் பேச வில்லை . இங்ஙனமாக , முந்திய நூலோர் கருத்து இது என்றும், நூலோர் இவ்வாறு சொல்லுவர் என்றும் கூறிய இடங்கள் சில வற்றைத் திருக்குறளில் காணலாம் . என்றாலும் , இவர் எவ் வகைப் பொருளைச் சுட்டி , எப்பகுதியில் கூறுகின்றாரோ அதைக் கொண்டு அக் கருத்துகள் அவ்வத்துறை பற்றிய நூல்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம் .

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு ( குறள் 21 )
என்னும் இக் குறளில் நூல்கள் என்னும் பொருளில் பனுவல் என்று கூறியுள்ளார் . உரைகாரர் பரிமேலழகர் , " பனுவல் எனப் பொதுப்படக் கூறியவதனான் , ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லா வற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றும் என்று விளக்கவுரை தருதலும் நோக்கத்தக்கது . இது கொண்டு நூல் அல்லது நூலோர் என வள்ளுவர் ஆளுமிடங்கள் வெவ்வேறு கொள்கையுடையார் கூறும் நூல்களை எல்லாம் குறிக்கும் என்று கொள்வது பொருத்தமாகும் . மேலும் , இக் குறட்பாப் பாயிரப் பகுதியைச் சார்ந்ததாதலின் எல்லா நூல்களையும் குறித்துப் பொதுப் படக் கூறினார் என்றும் கொள்ளலாம் . அன்றியும் , இஃது அறத்துப் பாலின் பகுதியாதலின் அறநூல்களைக் குறித்துக் கூறினார் என்றும் கருதலாம் .

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும் .( குறள் 183 )
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை . ( குறள் 322 )
இவ்விரண்டும் அற நூல்களைச் சுட்டி உரைத்தனவே . அறம்
கூறும் என்பதற்கு அற நூல்கள் சொல்லும் என்றும் , நூலோர் என்பதற்கு அற நூலுடையார் என்றும் பரிமேலழகர் உரை வரைதலும் இக் கருத்தினை அரண்செய்வதாக உள்ளது .

பிறன் பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல் ( குறள் 141 )
எனவரும் இக் குறளில் அறம் பொருள் கண்டார் என்பது அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்தார் என்று கருதப்படும் .
இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இ
தீயொழுக்கத்தையும் ‘ பரகீயம் என்று கூறுவாராகலின் , அறம் பொருள் கண்டார்கண் இல் என்றார்

எனப் பரிமேலழகர் இக் குறளுக்கு எழுதியுள்ள விளக்கவுரையானும் இது தெளிவுறும் .

இங்ஙனமே வள்ளுவர் பொருட்பாலுள் நூல் குறித்து எடுத்துக் காட்டும் கருத்துகள் எல்லாம் பெரும்பாலும் அரசுமுறை நூல்களிலிருந்து ஆசிரியர் கண்டு கூறியவை என்று கொள்ளலாம் .

ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்
தெற்றென்க மன்னவன் கண் . ( குறள் 581 )
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாஉள முன் நிற் பவை . ( குறள் 636 )
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு : ( குறள் 683 )
உயர்வகலம் திண்மை அருமை இந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல் .
( இவ்வாறு அறம் , பொருள் முதலியவை உரைக்கும் நூல்களின் கொள்கைகளைக் காட்டித் தாம் கூறும் பொருள்கள் முன்னோர் மொழி பொருள்களே உறுதிப்படுத்தி உரைப்பதும் வள்ளுவர் பொருளுணர்த்தும் முறையில் ஒரு திறனாகும் . ) பின்வரும் பாடல்கள் பல துறை நூல்களையும் சுட்டிக் கூறுவனவாக அமைந்துள்ளன :

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும் .( குறள் 373 )
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல் .( குறள் 401 )
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர் .( குறள் 410 )
பொச்சாப் பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு .( குறள் 533 )
28என
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு .( குறள் 726 )
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல் .( குறள் 727 )
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு .( குறள் 783 )
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று .( குறள் 941 )
மேலே சுட்டியது போன்ற நுண்ணிய பொருள் உரைக்கும் இலங்கு நூல்கள் பலவற்றையும் வள்ளுவர் ஐயம் திரிபு அற நன்கு உணர்ந்து தெளிந்தவர் . ஆகவே , விழுமிய நூலோர் பலர் தத்தம் நூல்களில் உரைத்த கருத்துகளுள் சிலவற்றை அந் நூலோர் கூற்றாகவே கொண்டு உரைக்கின்றார் . என்ப , என்பர் என்று வள்ளுவர் தம் பாடல்களில் கூறும் பொருளுரைகள் எல்லாம் முன்னூலாரும் அறிஞர் பெருமக்களும் உரைத்தனவாம் .. இவ்வகையில் வள்ளுவர் உரைத்த குறட்பாக்கள் பின்வருவன :

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு .( குறள் 60 )
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும் .( குறள் 63 )
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு .( குறள் 73 )
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு .( குறள் 75 )
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல் .( குறள் 203 )
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின் .( குறள் 238 )
மன்னுயிர் ஓம்பி அருளாள் வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை . ( குறள் 244 )
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர் .( குறள் 330 )
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவா அப் பிறப்பீனும் வித்து .( குறள் 361 )
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
"கண்ணென்ப வாழும் உயிர்க்கு ,( குறள் 392 )
மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள் . ( குறள் 617 ) |
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார் .( குறள் 729 )
கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை .( குறள் 736 )
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து .( குறள் 738 )
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு,( குறள் 739 )
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு .( குறள் 773 )
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய் .( குறள் 851 )
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.( குறள் 918 )
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு .( குறள் 953 )
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு .( குறள் 981.)
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு .( குறள் 991 )
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார் .( குறள் 246 )
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் .( குறள் 662 )
இங்கு எடுத்துக்காட்டிய குறள்களில் வரும் என்ப , என்பர் என்பன அறிவுடைய நல்லாரையும் சிறந்த நூல்களை ஆக்கிய நூலாசிரியர்களையும் குறிப்பனவாம் என்பது அவ்வப் பாடல்களைப் படித்தவுடனேயே விளங்கும் . இவைதவிர ஏனைய பாடல்களில் வரும் கருத்துகளுள் பலவும் ஆசிரியர் தம் நுண்ணுணர்வால் அனுபவ வாயிலாக அறிந்து கூறியதோடு பிற பேரறிஞர்களுடைய கருத்துகளையும் , அவர்தம் நூலுரைகளையும் தழுவியனவாகவும் இருத்தல் இயல்பே என்பதை ஊகித்து அறியலாம் . என்றாலும் , திட்டவட்டமாக ஆசிரியர் பிறர் கருத்துகள் என எடுத்தாண்டவை

இப் பகுதியில் காட்டிய குறட்பாக்களில் வருவனவே . இங்ஙனமாக முன்னோர் மொழி பொருள்களை வள்ளுவர் தம் நூலுள் கொண்டு கூறுதலும் பொருளுணர்த்தும் முறையில் ஒரு சீரிய முறையே யாகும் .


குறிப்புகள்
இவர் பொருட் பாகுபாட்டினை அறம் பொருள் இன்பம் என வடநூல் வழக்குப்பற்றி ஓதுதலான் . " ( காமத்துப்பால் முகவுரை )

அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம் . ” ( உரைப்பாயிரம் )
தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ
வெள்ளிகள் துணிபு தொகுத்துப்பின் நீதி நூலுடையார் கூறியவாறு
கூறுகின்றமையின் . ” ( குறள் 662 உரை )
" ஈண்டுப் பிரிவினை வடநூல் மதம் பற்றிச் செலவு , ஆற்றாமை ,
விதுப்பு , புலவி என நால்வகைத்தாக்கிக் கூறினார் . ( குற 1330 உரை )
உ . இவ் வட நூற் பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதிய
அறியாது பிறரெல்லாம் இதனை உயிரெச்சம் எனப் பாடந்திரி
தமக்குத் தோன்றியவாறே உரைத்தார் . ” ( குறள் 501 உரை )
2. என்ப என்பதற்குப் பரிமேலழகர் தரும் உரைக் குறிப்பும் இக் கருத்தினை நன்கு விளக்குகின்றது
என்ப - என்று சொல்லுவர் ( 729 )
என்ப - என்று சொல்லுவர் அறிந்தோர்
( 60 , 63 , 73 , 75,244 , 330 , 392,617 )
‘ என்ப -- என்று சொல்லுவர் நல்லோர் ( 203 , 238 )
என்ப - என்று சொல்லுவர் நூலோர் ( 361 , 736 , 738 , 739 , 773 , 851 , 918 , 953 , 981 , 991 )

2. உலகின்மேலிட்டு உரைத்தல்
உலகு அல்லது உலகம் என்பது இடத்தைக் குறிக்கும் பெயராய்ப் பொதுவகையால் மண்ணுலகம் , விண்ணுலகம் முதலிய எல்லா உலகங்களையும் உணர்த்தும் ஒரு சொல் . என்றாலும் , சிறப்பு வகையால் இச்சொல் நில உலகத்தையும் அதன்கண் வாழும் உயிர்த் தொகுதிகளையும் , குறிப்பாக நன்மக்களையும் , உலகியல் நடைமுறை களையும் தெரிவிக்கப் பயன்படும் . இவ்வகைப் பொருள்களில் நிலம் , ஞாலம் , எவயகம் என்னும் சொற்களும் வருவது உண்டு . எனினும் , உலகு எனக் குறிப்பிட்டு , உலக வழக்கம் இது என எடுத்துக் ஈட்டுதலே பெருவழக்கு .

திருவள்ளுவரின் திருக்குறள் பாடல்களிலும் நிலம் , ஞாலம் , வையம் , உலகம் என்பன அங்கங்கே எடுத்தாளப்பட்ட போதிலும் உலகம் என்பதே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருத்தல் காணலாம் .

ஆதிபகவன் முதற்றே உலகு ( குறள் 1 )
வானின் றுலகம் வழங்கி வருதலான் ( குறள் 11 )
மாரிமாட்டு என்னாற்றும் கொல்லோ உலகு ( குறள் 211 )
என்றாற்போல பல இடங்களில் உலகு என்பது உலகத்து வாழும் உயிர்த்தொகுதிகளைப் பொதுவகையாகச் சுட்டும் முறையில் வந்துள்ளது .

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு . ( குறள் 425 )
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு . ( குறள் 426
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்தது விடின் .( குறள் 280
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு . ( குறள் 117 )
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு .( குறள் 470 )
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு .( குறள் 670 )
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு .( குறள் 809 )
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு .( குறள் 841 )
இப் பாடல்களில் உலகம் , உலகு என வள்ளுவர் காட்டும் சொற்பொருள் ஊன்றிக் கவனிக்கத்தகும் . இங்கெல்லாம் உலகில் வாழும் உயர்ந்தாராகிய சான்றோர் கருத்து இதுவாகும் என்றும் , அவர்கள் வழிநின்று ஒழுகுதலே அறிவுடைமையாகும் என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன . உரைகாரர்களும் ஆசிரியர் கருத்தறிந்து ,,
உலகம் என்பது உயர்ந்தோரை ( 117 , 280 , 425 உரை )
உயர்ந்தோராகிய நல்லினத்தார் ( 470 , காளிங் . உரை ) என்று சுட்டிக்காட்டி விளக்கம் தருகின்றனர் . உலகத்து உயர்ந்தோராகிய சான்றோரால் மதிக்கப்படும் நல்லறங்களே ஒருவன் போற்றிச் செய்யத் தக்கது என்பதும் , அறவழியிலிருந்து தவறி நடப்போரை ஆன்றோர் பழிப்பர் என்பதும் எடுத்துச் சொல்லி நல்வழி நடக்க அறிவுறுத்துகிறார் ஆசிரியர் திருவள்ளுவர் . ஒழுக்கத்தின் மேன்மையை வற்புறுத்தி உரைத்த வள்ளுவர் முடிந்த முடிபாக ,

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் .( குறள் 140 )
என்று ஒழுக்கமுடைமை அதிகாரத்தின் இறுதிக் இறுதிக் குறளில் எடுத்துக் காட்டுகின்றார். எவ்வளவு கற்றவரானாலும் உலகத்தோடு பொருந்தி நடக்கத் தெரியாதவர் கல்லாதவரே என்பது கருத்தாம். இக் குறளின் உரையில் பரிமேலழகர் ,
“ உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது உயர்ந்தோர் பலரும் ஒழுகியவாற்றான் ஒழுகுதல் . அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதனவொழிந்து சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையுமடங்க உலகத்தோடு ஒட்ட என்றும் , கல்விக்குப் பயன் அறிவும் ஒழுக்கமும் ஆதலின் அவ்வொழுகுதலைக் கல்லார் பலகற்றும் அறிவிலாதார் என்றும் கூறினார் "

என்று தரும் விளக்கப் பகுதியும் படித்து இன்புறத்தக்கது . உயர்ந்தோர் பலரும் ஒழுகும் ஒழுக்கமே ‘ உலகியல் என்றும் ‘உலகநடை என்றும் போற்றும் பெருமைக்குரியதாகும் .

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும் .( குறள் 214 )
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு .( குறள் 215 )
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை .( குறள் 572 )
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு :( குறள் 874 )
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அஃதின்றேல்
மண்புக்கு மாய்வது மன் .( குறள் 996 )
செய்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல் .( குறள் 637 )
இக் குறள்களில் வள்ளுவர் உலகநடை பண்புடைய ஆன்றோர் வழிப்பட்டது என்றும் அவ்வுலக நடையினை மேற்கொண்டு ஒழுகுதலே பேரறம் என்றும் எடுத்துக்காட்டுதல் காணலாம் .

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் .( குறள் 294 )
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் .( குறள் 850 )
இங்கெல்லாம் வள்ளுவர் உலகத்தார் என்று கூறுவது உயர்ந்தோர்களையே குறிப்பதாகும் .
உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்
வழக்கு வழிப்படுதல் செய்யுட்குக் கடனே . ( தொல் . பொருள் . பொருளி. 21 )
வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான . ( தொல் . பொருள் . மரபு 94 )
இத் தொல்காப்பியச் சூத்திரங்கள் உயர்ந்தோர் கூற்றே கொள்ளத் தக்கது என்று அறிவுறுத்துகின்றன . இப் பழமையான கருத்தினை விளக்குவது போல ,

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே ( திவா. மக்கட்பெயர் )
என்னும் திவாகர சூத்திரம் அமைந்துள்ளது . மேலும் , உலகம் என்னும் சொல்லிற்கு இத்திவாகர நிகண்டு தரும் பொருளும் நாம் இங்குக் கருதத் தகும் . அறிவுடையோர் பெயர்களுள் ஒன்றாக உலகம் என்பதனையும் இந் நிகண்டு குறிப்பிடுகிறது .

சான்றோர் மிக்கோர் நல்லவர் மேலவர்
ஆய்ந்தோர் உயர்ந்தோர் ஆரியர் உலகு என
வாய்ந்த ஆன்றோர் அறிவுடையோரே . ( திவா . மக்கட் பெயர் )
இதில் தரப்பட்டுள்ள ஒன்பது பெயர்களும் அறிவுடை மாந்தராம் உலகத்து உயர்ந்த பண்பாளரைக் குறிக்க வழங்கப்படுவன வாகும் .
ஆகவே , வள்ளுவர் அறிவுடையார் , அறிவுடையார் , காட்சியவர் , காட்சியார் , சான்றோர் முதலிய பெயர்களால் எடுத்துக் கூறுவனவும் உலகின் மேலிட்டுக் கூறிய கருத்துகளாகவே கொள்ளத்தகும் . காட்சியவர் , காட்சியார் என்றால் அறிவுடையவர் என்பது பொருளாம் .

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர் . ( குறள் 218 )
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன் .( குறள் 258 )
கொளப்பட்டோம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர் .( குறள் 699 )
இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர் .( குறள் 654 )
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர் .( குறள் 174 )
பொருள் தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள் தீர்ந்த
மாசறு காட்சி யவர் .( குறள் 199 )
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு .( குறள் . 352 )
இப் பாடல்களில் அறிவுடையாரைக் குறிப்பிடும் காட்சியவர் என்பதற்கு வரும் அடைமொழித் தொடர்களால் அவர் உலகிற்கு வழிகாட்டியாய் விளங்கும் தகுதியையும் பான்மையையும் மேன்மையையும் உணரலாகும் . கடனறி காட்சி யவர் ( 218 ) என்பது அவர் உலகிற்கு ஆற்றி வரும் தொண்டுக் கடப்பாட்டைக் குறிப்பதாகும் . துளக்கற்ற காட்சியவர் ( 699 ) , நடுக்கற்ற காட்சியவர்(654 ) என்பன அவர் அச்சம் இன்றிக் கருத்துரைக்கும் பான்மையையும் , செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் -தலைப்பிரிந்த காட்சியார் ( 258 ) என்பது அவரிடம் விருப்பு வெறுப்பு இன்றி அமைந்த நடுவு நிலைமைப் பண்பையும் உணர்த்துவனவாம் . இத்தகையாரிடம் திரிபுணர்ச்சிகளோ , புலனாசைக்கு அடிமையாகும் இழி செயல்களோ , எதுவும் அணுகுவதே இல்லை . ஆதலால் இவர் ‘ புலம் வென்ற புன்மையில் காட்சியவர் (174 ) என்று புகழப்படுகின்றனர் . தவிரவும் இத்தகையாரை மாசறு காட்சியவர் ( 199 , 352 ) எனப் போற்றியும் வள்ளுவப் பெருந்தகை புகழ்ந்துரைக்கின்றார் .

அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னிலாத சொல் .( குறள் 798 )
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் .( குறள் 580 )
என்பனவும் உலகிடை அறிவால் மிக்க சான்றோரின் சீர்மைகளை எடுத்துரைக்கின்றன .
எல்லாவற்றிற்கும் மேலாக வள்ளுவர் சான்றோர் என்னும் பெயரைச் சுட்டி உரைத்த பொருள்களும் உலகின் மேலிட்டுக் கூறிய பொருள்களாகவே கொள்ளத்தக்கன . ஆன்றோர்க்குக் கூறிய அறநெறி உலகினர் அனைவர்க்கும் உரியனவாம் அன்றோ ?

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி .( குறள் 115 )
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி( குறள் 118 )
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு( குறள் 148 )
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று( குறள் 197 )
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு .( குறள் 299 )
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை . ( குறள் 328 )
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து .( குறள் 458 )
பழிமலைந் தெய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை .( குறள் 657 )
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன் .( குறள் 802 )
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று( குறள் 982 )
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை .( குறள் 985 )
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை .( குறள் 1014 )
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் .( குறள் 1078 ) களால்

இக் குறள்களில் சான்றோரை முன்னிட்டுக் கூறியனவெல்லாம் உலகம் எனப்படும் உயர்ந்தாரை முன்னிட்டுக் கூறியனவாம் . இத்தகு சான்றோர் போற்றும் பண்புகளைக் கடைப்பிடித்து அவர் பழிக்கப்பட்டன விலக்கப்பட்டன எல்லாவற்றையும் தவிர்த்தல் வேண்டும் .
ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை( குறள் 656 )
என்னும் குறட்பா குற்றம் கடிந்து குணம் பயப்பனவற்றைச் செய்தலே முறைமையாம் என அறிவுறுத்துகின்றது .

இவ்வாறாக உலகத்து உயர்ந்த சான்றோரை முன்னிட்டு அறப்பொருளைக் காட்டும் மரபும் குறளகத்துப் பலவாக உள்ளமை தெரிய வரும் . சான்றோர் அருளிய கொள்கைகளையும் நூல் துணிபுகளையும் எடுத்துக் கூறும் பகுதிகளும் பகுதிகளும் இதனோடு சார்த்தி உணரத்தகுவனவாம் .



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard