New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்திய இலக்கியப் பின்னணியில் வளளுவரின இனப்பதது பல-அ.பூலோகரம்பை


Guru

Status: Offline
Posts: 24603
Date:
இந்திய இலக்கியப் பின்னணியில் வளளுவரின இனப்பதது பல-அ.பூலோகரம்பை
Permalink  
 


இந்திய இலக்கியப் பின்னணியில் வளளுவரின இனப்பதது பல-அ.பூலோகரம்பை
காதல் இலக்க்கியம் : இல்லறத்தை இனிது நடத்துவதற்குரிய ஒருவனும்
ஒருத்தியும் திருமணத்திற்கு முன்பு கண்டு காதலித்து உணர்ச்சியுற்று. கூடி
மகிழ்வதையும் திருமணத்திற்குப் பின்னர் இருவரும் கருத்தொருமித்து
குடும்பத்திற்குள்ளேயும் வெளியேயும் நிகழும் நிகழ்ச்சிகளின் தொகுப்பையும் ‘களவு’,
‘கற்பு’ என்று வகுத்துக் கூறுவது காதல் இலக்கியத்தின் சிறப்பாகும். இவ்வனகக்
காதல் இலக்கியங்கள் இன்பச் சுவையை இனிது படம்பிடித்துக் காட்டும்
எழிலோவியமாக, கருத்துக்கு முதலிடம் தரப்படுவதோடு உள்ளத்து உணர்ச்சிகளுக்கும்
தேவையான அளவிற்குச் சிறப்பிடம் தரப்பட்டு கலையழகுடன் நீதிப் பெட்டகமாக
விளக்குகின்றன. மேலும் வாழ்க்கையில் உண்டாகும் நெருக்கடிகள், உணர்ச்சிக்
கொந்தளிப்புகள் மோதல்கள் ஆகியவற்றிலிருந்து விடுப்பட்டுத் தன்னை மறந்து
இன்பத்தில் திளைக்க விரும்புகின்ற இன்றைய மனிதனுக்கு இவ்வகையான காதல்
இலக்கியங்கள் இன்புறுத்தும் கருவியாகவும், வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து
சிறிதுநேரம் தப்பித்துக் கொள்ளுவதற்குரிய கருவியாகவும் தோன்றுகின்றன.
நோக்க்கம்:;:;: பழம்பெரும்நாடான இந்தியா, வரலாற்றின் ஒளிக்கதிர்கள் சென்று
ஒளிவீசமுடியாத தொல் பழங்காலத்திலேயே தனிப்பட்டதோர் நாகரீகச் சிறப்புடையதாய்
விளங்கியது. அந்நாகரீகத்தை உருவாக்கிய மக்கள் பல்வேறு இனத்தைச்
சேர்ந்தவர்கள் பல்வேறு மொழியைப் பேசி வருபவர்கள், பல்வகைப்பட்ட பண்புகளைக்
கொண்டவர்கள். இருந்தபோதிலும், வேற்றுமைக்கிடையே ஒற்றுமையைக் (ருnவைல in
னுiஎநசளவைல) காணும் பண்பு பன்னெடுங்காலமாக நின்று நிலவுகிறது. விந்தியத்திற்கு
வடக்கே பண்டைக் காலத்தில் சிந்து முதல் கங்கைவரை சிறப்புற்று விளங்கிய
உயர்தனிச் செம்மொழியாம் (ஊடயளளiஉயட டுயபெரயபந) சமஸ்கிருத்தைத் தமிழ் மக்கள்
வடமொழி என்ற பெயரால் அழைக்கின்றனர். பண்டைய இந்திய மொழிகளோடு
நெருங்கிய தொடர்புடையதாகவும் இலக்கிய வளமும் கலைச்சிறப்பும் சிந்தனைச்
செறிவுமுடைய சமஸ்கிருதத்திலும் காதல் இலக்கியங்கள் இருந்திருக்கின்றன. தமிழ்
மொழியின் இலக்கியப் பெட்டகமாம் திருக்குறளின் காமத்துப்பால் வடமொழிக் காதல்
இலக்கியங்களை விட எவ்வகையிலெல்லாம் மேம்பாட்டு விளங்குகிறது என்பதைப்பற்றி
ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வடமொழிக் காதல் இலக்க்கியங்க்கள்:;:;: பலவகையான யாப்பு முறையில் அறநெறிக்
கருத்துக்களை எடுத்துரைக்கும் நூல்களான நீதிநூல்கள் வடமொழியில் நூறு
பாடல்களைக் கொண்ட சதகங்களாக உள்ளன. (க.த.திருநாவுக்கரசு, நீதிநூல்
இலக்கியம் ப. 308). கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவரென்று
நம்பப்படும் பர்த்ருஹரி நீதி சதகம் வைராக்கிய சதகம், சிருங்கரை சதகம், என்ற
மூன்று நீதி நூல்களை இயற்றியுள்ளார். பர்த்ருஹரியின் வாழ்க்கையைப் பற்றிய
குறிபபு; கள ; எதுவும ; அறியமுடியவிலi; ல. நதீ pகளை விளககு; ம ; நூறு சுலோகஙக் ளைக ;
கொண்ட நீதிசதகம் பத்து அதிகாரங்களையும் அதிகாரத்திற்குப் பத்துப்
பாடல்களையும் கொண்டது. இதில் மூர்க்கரின் இயல்பு, புல்லறிவாளர் இயல்பு,
சான்றோர்களின் இயல்பு, புலமைச் சிறப்பு, பொருளின் சிறப்பு பற்றியும், ஊக்க
நெறிகளையும், ஊழின் ஆற்றலையும் , கன்மத்தினால் உண்டாகும் பயன்களைப்
பற்றியும் சிறந்த உவமைகளின் வாயிலாகப் புலப்படுத்துகிறார் ஆசிரியர் பர்த்ருஹரி.
வைராக்க்கிய சதகம்:; “பல்லாற்றானும் நில்லா உலகத்தின் இயல்பினை இளமை
நிலையாமை முதலிய யாக்கை நிலையாமை செல்வம் நிலையாமை
நிலையாமைகளால் மனிதனுக்கு உண்டாகும் துன்பத்தைச் சுட்டிக் காட்டுகிறது.
நிலையில்லாப் பொருள்களின் நிலையாமையை உணர்ந்து வாழ்க்கையில் பற்றற்று,
துறவு பூண்டு வீடுபேறு அடைய முயலும் வைராக்கியத்தை மேற்க்கொள்ள வேண்டும்
என்று உணர்த்துகிறது வைராக்கிய சதகம்.
சிருங்க்கார சதகம:; வைராக்கிய சதகத்திற்கு முற்றிலும் நேர்மாறான முறையில்
‘கணட் தே காடச் p கொணட் தே கோலம’; என்ற கொள்கையுடன் இன்பத்தைத்
துய்ப்பதற்கே மனிதன் பிறந்திருக்கிறான் என்ற கருத்துடன் அமைந்துள்ளது. இதில்
மனத்தின் உள்ளார்ந்த இயல்புகளை ஒளிவு மறைவின்றியும் பெண்கள் ஆண்களின்
உள்ளத்தைக் கவர்வதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளையும் உவகைச்
சுவையோடு பர்த்ருஹரி எடுத்துக்கூறி மகளிரை மெல்லியலார் என்றழைப்பது
பொருந்துமா? என்ற ஐயவினாவினை எழுப்பி இன்ப ஊற்றாய் விளங்கும் மகளிர்
செய்யும் கொடுஞ்செயல் எத்தகையது என்பதையும் சுட்டுகிறார். மகளிர் மனித
வாழ்க்கைக்கு இன்பம் பயப்பதைப் போன்றே துன்பம் தருபவர்களாகவும் உள்ளனர் என
எச்சரிக்கை விடுத்துள்ளார் பர்த்ருஹரி, இதை ளுரளாடை முரஅயச னுநு அவருடைய
புத்தகத்தில் ஜயுnஉநைவெ ஐனெயைn நுசழவiஉள யனெ நுசழவiஉ டுவைநசயவரசந P.13ஸ
ர்நnஉந னழவா ழநெ னசiமெ கசழஅ டipளஇ
யுனெ ளவசமைந யவ வாயவ hநயசவ றiவா களைவ!
என்கிறார், சமஸ்கிருத மொழியில் தன்னுணர்ச்சிப் பாடல்களைப் பாடிய கவிஞர்களுள்
பர்த்ருஹரி காதலோடு வாழ்வையும் இணைத்துப் பேசுகிறார். இவர் நடையில்
எளிமையும், இனிமையும், தெளிவும், ஒலிநயமும், இசைச்சிறப்பும் இணைந்துள்ளது.
சிருங்கார சதகத்தின் முதல் அறுபது பாடல்களில் மகளிரின் மாட்சிமையையும்
அவர்களது உடலழகையும் அவர்கள் அளிக்கும் இன்பத்தையும், அவர்களது
ஏற்றத்தையும் சிறப்பித்த பர்த்ருஹரி 60-80 வரை “ பெண்களை நம்பாதே மனமே!
பெண்களை நம்பாதே என்று இழித்துப் பேசி பேரின்ப வாழ்க்கைக்கு இடையூறாக
இருக்கும் பெண்களை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்கிறார். 81-100 வரையுள்ள
பாடல்களில் அறுவகைப் பருவ வருணனையை கற்பனை வளமும் இலக்கியச் சுவை
நயத்தோடும் சித்தரித்தள்ளார்.
பர்த்ருஹரியினுடைய சதகங்களின் முறையைப் பி;ன்பற்றி ஜகந்நாத பண்டிதர்
என்பவர் 600 ஆண்டுகளுக்கு முன்பு பாமினி விலாசம் என்ற நூலை இயற்றியுள்ளார்.
இவர் மொகலாயப் பேரரசன் ஷாஜகானின் அவைக்களப் புலவர், பாமினி விலாசம்
அந்யோத்தி, சிருங்காரம், கருணை, சாந்தம் என்ற நான்கு பகுதிகளைக் கொண்டது
அந்யோத்திப் பகுதியில் ஒரு கருத்து வெளிப்படையாகச் சொல்கின்ற போது
அதிலிருந்து நாம் குறிப்பாகப் பெறக்கூடிய வேறொரு பொருளைப் பற்றிய விளக்கம்
பெற்றிருக்கிறது. சிருங்காரம் என்ற தலைப்பில் காதலைப் பற்றிய கருத்துக்களும்
உணர்ச்சிகளும் மிகவும் நேர்த்தியுடன் வர்ணிக்கப்பட்டுள்ளன. கருணை என்ற
பகுதியில் அருளுணர்ச்சி, கழிவிரக்கம் ஆகிய உணர்ச்சிகளும் அவற்றிற்குரிய
மெய்ப்பாடுகளும் பேசப்படுகின்றன, சாந்தம் என்ற பகுதியில் மன அமைதிக்குரிய
வழிகள் சுட்டிக்காட்டப் பெறுகின்றன.
காதாபசப்த்தசதி: ‘ஆந்திர நாட்டு அகநானூறு’ என்று போற்றப்படும் காதா சப்த சதி
‘களவு’, ‘கற்பு’ ஆகிய இருநிலை வாழ்க்கையை பெரும்பான்மையாக உணர்த்துகிறது.
‘சப்த’ என்றால் ஏழு சதம் என்றால் நூறு ஆக 700 பாடல்களைக் கொண்ட இந்நூல்
ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ‘காதா’ என்னும் செய்யுள் வகையில்
அமைந்துள்ளது, காதா என்பது முதல் மூன்றாவது அடிகளில் 12 மாத்திரைகளும்
இரண்டாவது அடியில் 18 மாத்திரைகளும் நான்காம் அடிணில் 15 மாத்திரைகளும்
அமைந்த எதுகை மோனை நியமமில்லாதது. காதா என்னும் செய்யுள் வகை மிகவும்
இனிமையுடையதாக முன்னோர்கள் பாராட்டியுள்ளனர். காதா என்பது தமிழில் காதை
எனப்படும். இந்நூலின் மூலம் பிராகிருத மொழி சங்க இலக்கியப் பாடல்களைப்
போன்று பல பிராகிருதப் புலவர்களால் பாடப்பெற்று சாதவாஹன் மன்னருள் சிறந்த
ஹாலன் என்பவரால் 2000 ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்டது. ஒவ்வொரு நூறு
பாடல்களின் இறுதியலும் ஹாலன் தொகுத்த விவரமும் காதா சப்த சதியின்
பெருமைகளைக் கூறும் பாடல்களும் உள்ளன.
‘காதா சப்த சதி’ மக்கள் வாழ்வில் மலர்ந்த மாபெரும் இலக்கியம். சாதாரண
மக்களின் கிராம ஜீவிதத்தில், பிரத்தியட்ச வாழ்வின் அவலங்களையும்,
முறைகேடுகளையும், இன்பதுன்பங்களையும், உயர்வுதாழ்வுகளையும் எடுத்துக்காட்டும்
‘ரீயலிச’ இலக்கியம். செல்வச் செழிப்பை மட்டும் காட்டாமல் வறுமையில் வாடும்
மக்களையும் எடுத்துக்காட்டும் அகப்பொருள் சார்ந்த அற்புதமான கவிதைத் தொகுப்பு,
2000 ஆண்டுகட்கு முன்பு நமது மக்களின் வாழ்க்கை நிலைகளைத்
தௌ;ளத்தெளிவாக பிரத்தியட்ச நோக்குடன் காட்டும் வரலாற்றுப் பதிவாக விளங்கும்
நூல். ஒவ்வெரு பாடலும் ஒரு தனி நாடகம் தான். இயற்கையான எளிய இன்ப
வாழ்வின் படப்பிடிப்பு. கலைநயமிக்க சொற்சித்திரக் காட்சிகள், கிராம வாழ்க்கையின்
எழில்ததும்பும் சூழ்நிலையை இன்கவிதைக் கோலத்தில் காட்டும் இலக்கியம், தொனிப்
பொருள் அமையத் தூய கவியின்பம் நல்கும் நூல், தலைவன் தலைவியரின்
அகவாழ்வைச் சித்தரிக்கும் காதற்சுவை மிகுந்த நூல். மனிதமனத்தின் ஆழத்தைத்
துருவிக் கண்டெடுத்த ஆனிமுத்துக்களான கவிதைகளை உடையது. தலைவன்
தலைவியரின் ஆசாபாசங்கள், கோபதாபங்கள் பீறிட்டெழும் அடக்கப்பட்ட
உணர்ச்சிகள், இதய வேட்கைகள், சமுதாயச் சட்டதிட்டங்களை மீறி வெளிப்படும்
சுதந்திர உணர்வு, சமூகப் பழக்கவழக்கங்களால் நசுக்கப்பட்ட உள்மன உணர்வுகளின்
உந்துதல்கள் சபலமற்ற முரண்போக்குகள், சலனங்கள், இதயக்குமுறல்கள் எல்லாம்
காதா சப்த சதியில் வெளிப்படுகின்றன எனினும் ஆபாசம் இல்லை மிகைப்படு
கற்பனைகள், நம்ப முடியாத புராணப்புளுகுகள், வாழ்வியயோடு பொருந்தாத
கற்பனைகள் இந்நூலில் இல்லை நயமான பாங்கில் நாகரீகத்துடன் சிருங்கார ரசத்தை
வழங்குகிறது. காதா சப்த சதி பற்றி ளுரளடை முரஅயச னுநு “ஐவ ளை யn நஒpசநளளழைn ழக வாந
ளநவெiஅநவெ ழக டழஎந in வைள எயசலiபெ அழழனள யனெ phயளநள றiவா நஎநசல னநபசநந ழக சநகiநெஅநவெ ழச
ழவாநசறளைந யனெ ழநெ உயnழெவ அளைவயமந வாந ளiஅpடiஉவைலஇ ளinஉநசவைல யனெ கசநநனழஅ ழக அழளவ ழக
வாநளந ரவவநசயnஉநள”.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: இந்திய இலக்கியப் பின்னணியில் வளளுவரின இனப்பதது பல-அ.பூலோகரம்பை
Permalink  
 


அமர் சதகம் அல்ல்லது அமருகம் ஒரு காதல் சுவை மிகுநூல்@ அழகு மிகுந்த
நுட்பமான நூல். அமருகன் என்னும் கவிஞனால் படைக்கப்பட்டது. ஆதி சங்கராச்சரியர்
தான் காமநூல் நுணுக்கம் உணர்தற் பொருட்டுத் தன்னுடலை ஓரிடத்தில் மறைத்து
விட்டு அப்போதுதான் இறந்த அமருகன் என்னும் மன்னன் உடலில் கூடுவிட்டு கூடு
பாய்ந்தார். பினனர் அமருகான் மனைவியுடன் போகந்துய்த்துக் காமக்கலை நுட்பம்
தேர்ந்தாராம். அவரது சீடர்கள் பஜகோவிந்தப் பாடல்களைப் பாடி அறிவுணர்தினராம்.
அமருகனாக இருந்தபோது இயற்றிய நூலே அமருகம் என்று சங்கர விஜயம் கதை
கூறுகிறது. சிறந்த நூல்கள் ஆசிரியர் பெயர் தெரியாவிட்டால் முன்னைய
பெருங்கவிஞர்கள் படைத்ததாகக் கதை கட்டுவது நம் நாட்டுப் பழக்கம். அதுபோன்ற
ஒரு கதையே இது என்பதில் ஐயமில்லை. சங்கரர் கி.பி. 7ஆம் நூற்றாண்டினர் என்றும்
அமருகம் 10ஆம் நூற்றாண்டு நூல் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. (காதா, சப்த
சதி, பக்.16 மு.கு. ஜகந்நாதராஜா)
அமருகம் காமக்களியாட்டத்தைப் பச்சையாகப் பேசும் ஒரு நூல், அது
சமூகத்தில் வழங்குவதை நியாயப்படுத்துதல் பொருட்டு சங்கராச்சாரியாரை இணைத்து
கதை புனையப் பட்டுள்ளதாகக் கொள்ளலாம். ஆதலால் இந்தக் கதை
கொச்சையானது என்பதாகும். அமருகம் இசையோடு கூடிய யாப்புடன் இலக்கியச்
சுவையுடைய நூல் என்றும் அமிழ்தத்தைப் போன்றது என்று திறனாய்வாளர்
ஆனந்தவர்தன் போன்றோர் புகழ்ந்து உள்ளனர். இந்நூல் காதலை மட்டும் பேசி மற்ற
பொருள் கூறுகளைப் பற்றிப் பேசவில்லை. இந்நூலிலுள்ள காதல் பாடல்கள் சங்க
இலக்கிய அகப்பாடல்களுடனும் திருக்குறளுடனும் மிகவும் தொடர்புடையதாகவுள்ளது.
வுhந யரவாழரச ழக வாந டிழழம “யுnஉநைவெ ஐனெயைn நுசழவiஉ யனெ நுசழவiஉ டவைநசயவரசந” ளுரளாடை
முரஅயச னுநு pழiவெள ழரவ வாயவ “யுஅயசர’ள pழநஅள யசந pழநஅள யடிழரவ டழஎநஇ ழெவ in வைள
ளiஅpடiஉவைநைள டிரவ in வைள ழக ளரடிவடந அழஅநவெள. ஐவ ளை ழெவ யள in வாந ளுரிவய ளுயவi ழக ர்யவய வாந
piஉவரசந ழக ளiஅpடந டழஎநள ளநவ யஅழபெ ளiஅpடந ளஉநnஉந யனெ கழளவநசநன டில வாந ளநயளழளெ டிரவ
யுஅயசர னநளஉசiடிநள in வைள iniஅவையடிடந ளநசநைள ழக எநளநள வாந iகெinவைந அழழனள யனெ கயnஉநைள ழக டழஎந
வைள டiபாவ யனெ ளாயனநளஇ வைள எயபசநைள வைள ளவசயபெந வரசளெஇ ரநெஒpநஉவநன வாழரபாவள யனெ ரமெழெறn
iஅpரடளநள உசநயவiபெ எயசநைன உசைஉரஅளவயnஉநள. டுழஎந னழநள ழெவ ளவயனெ யடழநெ யள யn ளைழடயவநன
pயளளழைnஇ யள in வாந வசரந டழஎந-டலசiஉள டிரவ ளை iஅயபநன றiவா யடட வைள யவவநனெயவெ கயஉவள யனெ
ளவைரயவழைளெ றாiஉh நnhயnஉந வைள pடநயளரசந யனெ ளவiஅரடயவந வைள pயin. வுhந நெஉநளளவைல ழக
உழஅpசநளளiபெ ளலவொநவiஉயடடல ழநெ றாழடந னைநய ழச ளவைரயவழைn றiவாin வாந டiஅவைள ழக ய ளiபெடந
எநசளந ழெவ ழடெல பiஎநள ய pசநஉளைழைn யனெ நடநபயnஉந வழ வாந ளவலடந ரெவ யடளழ pசநளநவெள in நயஉh
எநசளந ய உழஅpடநவந piஉவரசந in ய கiநெடல கiniளாநன கசழஅ.
தமிழில் மிழில் காதல் இலக்க்கியங்க்கள்:;:;:;: மனிதனுக்கு வாழ்க்கை பயன்தரத்தக்க
ஒழுகலாறுகளைத் தேர்ந்த அறிவுடனும், தன்னுரிமை உணர்வுடனும் சிந்தித்த தமிழ்ச்
சான்றோர் மனித வாழ்க்கையின் பல்வேறு இயல்புகளையும் உலகப் பொருள்களையும்
நுட்பமாக ஆராய்ந்து ‘அகம்’ என்றும் ‘புறம்’ என்றும் பாகுபாடு செய்துள்ளனர். ‘அகம்’
என்பது ஒருவனும் ஒருத்தியும் தம் உள்ளத்தால் உணரக்கூடிய உணர்வும் அதன்
பயனாகிய இன்ப அனுபவம். ‘புறம்’ என்பது புறத்தார்க்குப் புலனாகக்கூடிய
அறஞ்செய்தலும் மறஞ்செய்தலும் அவற்றின் பயனுமாகும். இதன் அடிப்படையில்
அமைந்த பண்டைத்தமிழ் இலக்கியத்துள் தமிழுக்குக் கிடைத்துள்ள முதல்
அகப்பொருள் இலக்கியம் தொல்காப்பியம். இது அகம், புறம் என்னும் கோட்பாட்டுடன்
கலிப்பாவையும், பரிபாடலையும் அகப்பொருளுக்குரிய செய்யுளாகக் கொண்டு,
உத்திகளாக்க குறிப்புப் பொருண்மையில் உள்ளுறை, இறைச்சி ஆகிய இரண்டையும்
பெற்று வந்துள்ளது. இவ்வகையான அகப்பாடல்கள் முதல், கரு, உரி என்னும் மூன்று
பொருண்மைகளை உடையன. முதற்பொருள் நிலம், பொழுது, கருப்பொருள்கள்
தெய்வம், உணவு, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதி போன்றவை.
உரிப்பொருள் ஒழுக்கம் பற்றியதாக அமையும். அகமாந்தர்கள் மொழிவதான கிளத்தல்
முறைக்கூற்று அகப் பாடலகளின் சிறப்புக்களுள் ஒன்று. இவ்வகை அகப்பாடல்கள்
ஒருவரைச் சாராது பொதுப்பட வரும்.
குறுந்தொகை, நற்றினை, அகநானூறு (நெடுந்தொகை) ஐங்குநுறூறு
கலித்தொகை என்னும் ஐந்தும் சங்க இலக்கியங்களுள் அகப்பாடல்களானவை.
இவற்றில் ஐந்திணை ஒழுக்கம் பேசப்படுகிறது. இல்லதும் இனியதும்
நல்லதுமெனப்புலவரால் நாட்டப்பட்ட கற்பனை வாழ்வைச் சித்தரிப்பவை சங்க
இலக்கிய அகப்பொருள் நூல்கள்.
திருக்கு;குறள்:;:;: நீதிநூல்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் முடிமணியாகவும்
விளங்கும் திருக்குறள் உவமை நயமும் சுவையுணர்வும் மிக்கது. இவ்வுலக
மாந்தர்கள் செம்மாந்து வாழத் தேவையான பொதுவிதிகளைத் தொகுத்துரைப்பது.
திருக்குறள் கலைச்சிறப்பும், சிந்தனை உயர்வும் ஒன்றுக்கொன்று முரண்படாமல்
இரண்டறக் கலந்தியங்கும் பெரும் பெயர் பெற்றது, “இம்மண்ணுலக வாழ்க்கைக்கு
வள்ளுவர் கொடுக்கும் ஏற்புத் தத்துவத்தை வலியுறுத்தும் பேரறநூல் என்றும்
இதனையொத்த அன்பறம் பேசும் நூல் உலக இலக்கியத்தில் வேறொன்றுமில்லை”
யென்றும் பாராட்டுவர் (ளுஉhறநவைணநசஇ யுடடிநசவஇ 1957 “ஐனெயைn வுhழரபாவ யனெ ர்ளை
னநஎநடழிஅநவெ”). திருக்குறள் எழுத்தின் பயனாகிய, சொல்லின் பயனாகிய
பொருளுக்கு, வாழக்கைக்கு எழுத்தனைய அறத்தையும், சொல்லனைய பொருளையும்,
பொருளேயாகிய இன்பத்தையும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும்
முப்பாலில் வழங்குகிறது. அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப் பொருள்களை
வாழ்வியல் கோட்பாடுகளர்கு அறிவுறுத்துகிறது, அதிகாரத்திற்குப் பத்து குறள்களாக
133 அதிகாரங்களில் 1330 பாடல்களில் நுண்மாண் நுழைபுலம் கொண்டு விளக்குகிறது
திருக்குறள.; இது நீதிகூறும் ஆவணமாக, குறட்பா நடையில் இதைக்
இடைக்காடனாரும், ஒளவையாரும் கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத்
தளித்த குறள் என்றும் அனுவைத் துளைத் தேயு கடலைப் புகட்டிக் குறுக தளித்த
குறள் என்றும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் எழு சீரான் வந்த
இரண்டடிகளைக் கொண்டது. மறைப்பண்பு வாய்ந்த திருக்குறளில் பொருள் பற்றிய
சிந்தனைகள் மொழி, இனம், நாடு என்னும் உணர்வுகளிடையே பெரிதும் சிக்காமல்
பரந்த நோக்கில் குறிக்கோளைப் பற்றிப் படர்கின்றன. காலஓட்டத்தில் ஏற்பட்ட
சிந்தனை வளர்ச்சிகளும் ஒருங்கிணைந்துள்ளன. திருக்குறளின் பாடுபொருளும்
கட்டமைப்பும் இணையற்ற பெருமைக்குரியது.
திருக்குறளின் முதற்பகுதியாம் அறத்துப்பாலில் தனி மனித ஒழுக்க நெறிகளின்
பல திறப்பட்ட பகுதிகளையும் இயல்புகளையும் மிக நுட்பமாக எடுத்துரைத்து,
பொருட்பாலில் தனிமனிதன் பிறரோடு கூடி வாழும் போது கடைபிடிக்க வேண்டிய
ஒழுகலாற்றினையும், காமத்துப்பாலில் ஒத்தகாமமாகிய அன்பின் ஐந்திணை
ஒழுக்கத்தை நுட்பமான உள்ளத்துணர்வுடன் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில்
நாடகபாணியிலே விவரித்து தகையணங்குறுத்தல் முதலா ஊடல் உவகை ஈறாக 25
அதிகாரங்களில் தருகிறது. இவ்வொழுக்கம் களவாக மலர்ந்து கற்பாக வளர்ந்து
சிறக்கிறது. “சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருளிது
வென்றவர்” என்று கல்லாடம் கருதும் சிறப்பினுக்குரியது வள்ளும். வள்ளுவர்
வரலாறு வரையறைப் படுத்தி அறியக் கூடியதாக இல்லை.
நூறச்ச் pறபபு;பு; : மனித இனம் நலமாக வாழ வேண்டும் என்ற மனித நலக்
கோட்பாட்டினரான திருவள்ளுவர் கவித்திறன் மிக்க கவிஞர். சிறந்த சிந்தனையாளரும்
கூட வள்ளுவர் தாம் வழங்க முன் வந்த உறுதிப் பொருள்களை, சீரிய கருத்துக்களை
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலில் நயமாக எடுத்துரைத்துள்ளார்.
இம்முப்பாலும் புருஷாத்தம் என்னும் வீடுபேறு நிலையை அடைய உதவும்
வழிகாட்டிகளாக ஒரு சேர ஒரே நூலில் அமையப் பெற்று மூன்று நிலைகளையும்
வௌ;வேறு நூலாகக் காணலாம் தர்மசாஸ்த்திரம், அர்த்த சாஸ்த்திரம், காம
சாஸ்த்திரம இவற்றை இயற்றிய ஆசிரியர்களும் காலமும் வேறு வேறாக உள்ளன.
வடமொழிப்புலவர் பர்த்ருஹரியின் நீதி சதகம், வைராக்கிய சதகம், சிருங்கார
சதகமுமே இதற்கு சிறந்த சான்று, பர்த்ருஹரியின் வைராக்கிய சதகம் வாழ்க்கை
மறுப்புக் கோட்பாட்டை அறிவிப்பதாகக் காணப்படுகிறது. வள்ளுவரின் துறவறவியல்
மோட்சத்தை அடைய வழிகாட்டுவதாக அமைவதால் இதை நாற்பால் என்று
சுட்டுவாரும் உண்டு.
காதா சப்த சதி, அமர் சதகம், காம சாஸ்த்திரம் போன்றவை முழுக்க முழுக்க
மனிதனின் உடற்பயிற்சிப் புனைந்து உரைக்கின்றன. இவை காமத்தின் இயல்பையும்
வகைகளையும் மகளிர் ஆடவரை மயக்குவதற்குக் கையாளும் முறைகளையும் காம
உணர்வில் கருத்தழிந்து கெட்ட ஆடவர் நிலைகளையும் எடுத்துரைக்கின்றன.
பர்த்ருஹரியின் கிருங்கார சதகத்தில் பெண்கள் ஆண்களின் உள்ளத்தைக்
கவருவதற்குப் பயன்படுத்தும் கருவிகளைப் பின்வரும் பாட்டில் சுட்டிக் காட்டுகின்றார்.
கால்சிலம்பால் கைவளையால் காஞ்சியால் கல்லென்று
மேல்கிளம்பும் ஓசை வெருட்டியமான் - போல்கண்
கனடப் பார்வை யால்மாதர் கட்டிப் பிடிப்பர்
தனடப்படா(த) ஆடவரைத் தாம் (சீருங்.ச.8)
காளிதாசரின் காம சாஸ்திரம் முழுக்க பச்சையாகவும் கொச்சையாகவும்
அமைந்துள்ளது. இதைப் போலவே அமர்சதகமும் காம
நுணக்கத்தை புணர்ச்சியின்பதை பச்சையாக்க தெரிவிக்கின்றது.
இலக்க்கியச் சிறப்பு;பு:
கற்பனை, உணர்ச்சியைத் தூண்டுதல் ஆகிய இரண்டுடன் ஒன்றிய கருத்துக்கள்
திருக்குறளில் இடம் பெற்றுள்ளன. கலையழகு குன்றாத வகையில் கருத்துக்களை
உணர்த்தும் மாயவித்தையில் வள்ளுவர் வல்லவராக விளங்குகின்றார். இதனை
“மனிதனால் என்றும் வெளிப்படாத மிகவும் நுட்பமான கருத்துக்களைச் சுருக்கி இந்த
ஆசிரியர் ஏழே சீர்களில் அமைத்திருக்கிறார். இச்சிறிய இன்னிசைக் கருவியில் அவர்
சிறந்த இசைவல்லுநனைப் போல எத்துணை அழகாக இனிய கீதத்தை
எழுப்பியிருக்கிறார். சுடரொளியோடு நகைச்சுவை, வற்புறுத்திகூறுதல், கற்பனை,
முரண்பாட்டு நயம், வினாவுதல் ஓவியம் போன்ற உவமைகள் என்ற பல இலக்கியத்
திறன்களை அவர் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு கருவிலே திருவுடைய கலைஞன்
கையாளும் உத்திகள் பலவற்றுள் ஒன்றையும் அவர் இந்த முழுமையான
கலைப்படைப்பில் ஆளாமல் விட்டுவிடவில்லை” என்று வ.வே.சு.ஐயர்
தெளிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளுவரின் மென்மையான உள்ளத்து உணர்வும், கவின்மிகு கற்பனை
உள்ளமும், கருத்துக்களை எடுத்துரைக்கும் முறைகளிலே இயன்ற இடமெல்லாம்
முப்பால் இலக்கிய மணம் கமழும் படி செய்துள்ளமை விளக்குகிறது இதனால் நீதி
நூல்களாகிய இலக்கிய வானில் வள்ளுவரின் திருக்குறள் தன்னிகரற்ற தண்மதியாகத்
திகழ்கிறது. ‘மற்றொன்று விரித்தல’ வழக்காற்று ஒழுக்க நெறியை விளக்குகிறது
திருக்குறள், இதனால் கவிதைச் சுவை, கற்பனை வளம் அதில் குறிப்பிடத்தக்க
அளவிற்குக் காணப்படுகின்றன.
திருக்குறளின் இலக்கிய இயல்புகளை ஆலங்குடி வங்கனார் என்ற புலவர்
வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்குஞ்
தௌ;ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் (திரு.மா.53)
என்று திருக்குறள் நல்கும் இன்பத்தின் இயல்பை எடுத்தியம்புகிறார். பாநலன்கள
அனைத்தும் நிறைந்து விளங்குமாறு முப்பாலை வள்ளுவர் இயற்றியருளினார்
உணர்ச்ச்சியும ; கறப்ப் னையும:;:;
உணர்ச்சியோடு கருத்துக்களை எடுத்துரைக்கின்ற போது பலவிடங்களில் தம்
உள்ளத்து உணர்ச்சிகளை கற்பனை என்ற வண்ணத்தில் வள்ளுவர் குலைத்துத்
தந்துள்ளார் சான்றாக
கண்ணுள்ளார் காதல வராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து (குறள்:1137)
நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து (குறள்:1138)
எம் காதலர் எப்போதும் கண்ணுள் இருப்பதால் மை தீட்டினால் மறைவாரே என
எண்ணி கண்ணுக்கு மைகூடத் தீட்டமாட்டோம்@ எம் காதலர் எம் நெஞ்சில் இருப்பதால்
சூடான உணவை உண்டால் அவர் துன்புறுவாரே என எண்ணி உண்ண
அஞ்சுகின்றோம். இதில் தலைவியின் உள்ளத்து நுட்பமான உணர்ச்சியை
உணரமுடிகின்றது. அதோடு வள்ளுவரின் கற்பனைத் திறனும் வெளிப்படுகின்றது.
இதை வேறு பல குறட்பாக்களிலும் வள்ளுவர் வெளிப்படுத்தியுள்ளார். இதைப் போல
உணர்ச்சியும் கற்பனையும் சிருங்கார சதகத்திலும் அமர் சதகத்திலும் காதா சப்த
சதியிலும் காம சாஸ்திரத்திலும் இடம் பெற்றிருப்பினும் திருக்குறளின் நுட்பத்தன்மை
அதில் காணப்படவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 அணிநலன்:;:;: தாம் உணர்ந்த விரும்பும் கருத்துக்களை உவமை வாயிலாகவும், வேறு

பிற அணிகளின் உதவியாலும் கற்பவர் உள்ளத்தைக் கவரும் வகையில் வள்ளுவர்
அழகுபடுத்திக் கூறியுள்ளார். கருத்துக்களுக்கு கலைமெருகு கொடுக்கும்
இவ்விலக்கியத்திறன் வள்ளுவரின் திருக்குறளில் மிகுதியாகப் பயன்படுது;தப்பட்டுள்ளன.
உவமையின் பல்வேறு இயல்புகளையும் நுட்பமாக உணர்ந்து, அதைச் செம்மையாக
காமத்துப்பாலின் 250 குறட்பாக்களில் வள்ளுவர் பயன்படுத்தியுள்ளமை
பெருஞ்சிறப்பிற்குரியது. அவற்றுள் எடுத்துக் காட்டு உவமையும், பிறிது மொழிதலும்,
தற்குறிப்பேற்றமும் சிறப்புப் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக,
தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (குறள் : 1113)
தாம் காதலித்த காதலியரின் மெல்லிய தோள்களில் தூங்கும் இன்பத்தை விட
இன்பந்தரக் கூடியதோ தாமரைக் கண்ணான் உலகு. இதைப் போன்ற உவமைகள்
காதா சப்த சதியில் இடம் பெற்றிருப்பினும் அவை இந்த அளவுக்கு உள்ளத்தைத்
தொடுவதாக இல்லை. அன்றாட வாழ்க்கையில் இடம் பெறும் பொருள்களோடு மட்டுமே
உவமிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய அணிகளை மட்டுமல்லாது வேறுபல இலக்கியத் திறன்களையும்,
எண்வகைச் சுவைகளையும் ஏற்ற வகையில் இணைத்தும், இழைத்தும் காட்டுகிறார்
வள்ளுவர். உவகைச் சுவையைத் தலைவனும் தலைவியம் கூடி இன்புற்ற பின்னர்,
கூடுதலினால் உண்டான இன்பத்தை நினைத்துத் தலைவன் மகிழ்கின்றான். அவன்
அவ்வின்பத்தைக் சிறப்பித்துப் பேசுவதாக “புணர்ச்சி மகிழ்தல்” என்ற ஓர் தனி
அதிகாரத்தையே வள்ளுவர் காமத்துப்பாலில் அமைத்துள்ளார்.
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள (குறள்: 1101)
என்பதாகும். தலைவியைக் கூடி இன்பம் நுகர்ந்த தலைவன் அவள் ஐம்பொறிகளுக்கும்
ஒருங்கே அளித்த இன்பத்தினை எண்ணியெண்ணி வியக்கிறான். ஐம்புல இன்பமும்
அழகிய வளையலை அணிந்த பெண்ணிடம்தான் உள்ளன. ஐம்பொறிகளுக்கும் ஒரு
சேர இன்பத்தைக் கொடுக்கக் கூடியவளாக அவள் இருக்கிறாள். ஆகவே உலகிலுள்ள
எல்லாப் பொருள்களையும் விட இந்தப் பெண் மிக உயர்ந்தவள் என்று தலைவி
நல்கிய இன்பத்தின் சிறப்பைத் தலைவன் நினைத்து மகிழ்கின்றான். இந்த அளவு
சுவையை வடமொழி இலக்கியத்தில் பெறமுடிவதில்லை.
காமத்து;துப்ப்பால் சிறப்பு;பு: வள்ளுவரின் கலையுள்ளம் காமத்துப் பாலைக்
கலையழகு குன்றாத வகையில் படைத்து மகிழ்கிறது. திருக்குறளின் முதலிரு
பால்கள் கருத்தை எடுத்துரைக்கும் முறை ஒரு வகையாகும். அதிலிருந்து வேறுபட்ட
நிலையில் காமத்துப் பால் அமைந்து மண்ணுலகத்தில் காதலர் உள்ளம் அன்பினால்
இணைந்து மக்கள் முழுமை அடையும் விண்ணுலக வாழக்கை வாழ்வதற்கு வழி
காட்டுகிறது@ அறத்துப்பாலைப் போன்றோ, பொருட்பாலைப் போன்றோ காமத்துக்பால்
இயற்றப்பட்டிருந்தால் அது காமத்தின் இயல்பையும் வகையையும் மகளிர் ஆடவரை
மயக்குவதற்குக் கையாளும் முறைகளையும் காம உணர்வில் கருத்தழிந்து கெட்ட
ஆடவர் நிலையையும் ஆசிரியர் எடுத்து உரைத்து இருப்பார், அப்பொழுது அது
சிற்றுன்பத்திற்கு வழி காட்டும் கைபோடாகவே காட்சி தர நேர்ந்திருக்கும் அல்லது
காதல் இன்பத்தை வெறுத்து 7க்கும் நீதி நூலாக அமைந்திருக்கும் ஆனால் பண்டை
அகப்பொருள் மரபைப் போற்றிக் காக்க விரும்பிய வள்ளுவர் தூய்மையான உள்ளத்து
நுட்பமான உணர்ச்சிக்கே காமத்துப்பாலில் இடமளித்துள்ளார். கருத்தொருமித்த
காதலைப் படைத்தும் அவர்கள் வாழ்க்கையில் புதுமையான சிக்கல்களை
உண்டாக்கியும் நாடகப்பாணியிலே சிந்தைக்கிளிய சொல்லே வியங்களை அவர்
தட்டியுள்ளார். அவை பேசும் பொற்சித்திரங்களாக அமைந்துள்ன. காமத்துப்பாலில்
வள்ளுவர் நம் கருத்தைக் கவரும் கலைஞராக சான்றாண்மைப் பண்பால் ஊளிய
கலையுள்ளம் கொண்டவராகக் காட்சியளிக்கிறார். இதுவே அவர் அனைத்துலக
மனிதனுக்கு காமத்துப்பால் அமைக்க முதற்காரணம் காமத்துப்பாலை இயற்றிதன்
மூலம் ஒப்புயர்வற்ற கலைஞனுக்குரிய முத்திரையை வள்ளுவர் திருக்குறளில்
பொதித்துச் சென்றுள்ளார். தலைவன் தலைவியைப் பாராட்டும் நலம்
புனைந்துரைத்தல் ‘காதற்சிறப்புரைத்தல்’ என்ற அதிகாரங்களில் தலைவியின் புற
அழகைப் புனைந்துரைக்கும் பொழுது நயமிக்க பண்பாடு இழை போலச் செல்கிறது.
காமத்துப்பாலில் வரும் தலைவனும் தலைவியும் நல்ல பண்பாடு வாய்ந்த
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்@ ஒழுக்கத்தை உயிரெனப் போற்றுக்கின்ளவர்கள்,
வள்ளவரின் குடும்பத்தலைவி குல விளக்காக போற்றுகின்றவர்கள். வள்ளுவர்
பெண்ணின் பெருமையைப் பாடிய பாவலர். ஆனால் பர்த்ருஹரி பெண்களுக்கு
மதிப்புக்கொடுக்கத் தயங்குகிறார். மேலும், நெறி கெட்டு வாழும் ஆடவர்களைத்
திருத்தி நெறிப்படுத்துவதற்காக சிருங்கார சகத்தை அவர் இயற்றினாள் என்று நாம்
சொல்லலாம். தம்மையே அதற்கு உதாரணமாகக் காட்டுவதை பின் வரும் வரிகள்
புலப்படுது;தும்
“உலகின் மயக்கத்திலே சிக்கியலையால் நான் மங்கையர்
இன்பத்தை நாடி அவர்களிடத்திற்குத் திரும்பிச் சென்றேன்
இப்பொழுது புலனுகர் இன்பத்தின் முழுநிறையைப் பெற்று
விட்டமையால் நான் துறவுக்கோலம் பூணுகின்றேன்”
காதா சப்பத சதியில் பிறழ் மரபினராக காதலன், கணவனிருக்க பிற ஆடவரை
நாடுபர்களாகச் சித்தரிக்கப்பட்டு உள்ளனர். அமர் சதகத்தில் பெண் இன்பந்
துய்ப்பதற்கு மட்டும் என்றளவில் வருணிக்கப்பட்டுள்ளனர்.
கொடுப்போரும் அடுப்போரும் இன்றி ஒத்தார் இருவர் தாமே தனியடத்து இறைவன்
அருளால் எதிர்ப்பட்டு ஒன்று கூடி ஈருடலும் ஓருயிருமாய் இணைந்து கூடுங்கூட்டம்
களவு ஆகும். இது தகையணங்குறுத்தல், குறிப்புணர்தல், புணர்ச்சி மகிழ்தல் ஆகிய
மூன்று அதிகாரங்களில் அருமையிற் கூடலும் அதற்கு நிமித்தமும் நலம்
புனைந்துரைத்தல் முதல் புணர்ச்சி விதும்பல் வரையுள்ள 18 அதிகாரங்களில் பிரிந்து
கூடலும் அதற்கு நிமித்தமும் நெஞ்சோடு புலர்த்தல் முதல் ஊடல் உவகை
வரையுள்ள 4 அதிகாரங்களில் ஊடிக்கூடலும் அதற்கு நிமித்தமாக உள்ளது.
காமத்துப்பாலவது மைந்தர்க்கும் மகளிர்க்கும் கலவியாகிய இன்பப்பகுதி கூறுதலாகும்.
திருக்குறள் சங்க இலக்கியங்களைப் போல அகத்தினைக் கூறுகளைப்
பெற்றிருந்தாலும் திணை தலைமை பெற்றிருக்கவில்லை. மரபைத் தழுவுதலோடு
மறுமலர்ச்சியும் செய்கிறது.
வளளு;ளு;ளுவரின ; பிறவாயிலக்க் ளின் கூறறு;று; : ஒத்த தலைவனும் தலைவிக்குமிடையே
தோன்றும் இன்ப உணர்வு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. எனவே பிறவாயில்களின்
கூற்றுக்கள் திருக்குறளி;ல் இடம் பெறவில்லை ஆனால் காதா சப்த சதியில்
பிறவாயில்களின் கூற்றுக்களாக உள்ள பாடல்கள் அதிகம் இடம்பெற்று உள்ளன.
(கவிக் கூற்று 53, தோழி கூற்று 191, பேரிளம் பெண் கூற்று 195, முதியவன் கூற்று
202, பரத்தை கூற்ற 219, ஒருவன் கூற்று 293, இருவர் கூற்று 364, நற்றாற் கூற்று
392, பயணி கூற்று 429).
காட்ச்சி: களவு வாழ்க்கையின் முதல் நிலையான காட்சி தலைமகனும் தலைமகளும்
ஒருவரையொருவர் எதிர்ப்பட்டுக் காண்பது.
நோக்கினாள்,
நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்
கொண்(டு) அன்னது உடைத்து (குறள் : 1082)
என்ற குறள் இக்கருத்தை நுட்பாகப் புலப்படுத்துகின்றது. தலைவனுக்கும்
தலைவிக்கும் உள்ள காதலை உடம்புக்கும் உயிருக்குமுள்ள தொடர்போடு
ஒப்பிடுகிறார். இதனை
உடம்போடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு (குறள் : 1122)
குறள் காட்டும் தலைமகனிடம் ஐயம் சிறந்து முருகியல் உணர்வு மேம்பாட்டு
விளங்கிவதை அணங்குசொல் ஆய்மயில் கொல்லே கனங்குழை மாதர்கொல்
மாலுமென் நெஞ்சு (குறள் 1081) என்னும் குறள் வெளிப்படுத்துகின்றது,
ஐயப்பாட்டிலிருந்து தலைமகன் மெல்ல மெல்ல விடுபடுவதையும் மிக நுட்பமாக
இக்குறள் வெளிப்படுத்துகிறது. திருக்குறள் காட்டும் தலைமகள் தன் உள்ளத்தில்
வேட்கையெழும் போது அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் தன்
மெய்வழிக் குறிப்புக்களான் சிறப்பாகக் கண்வழிக் குறிப்புகளான் வெளிப்படுத்துகிறார்.
தலைமகன் தலைமகளுடைய குறிப்புகளின் வழியே அவளுடைய வேட்கையறிந்து
கொள்வதையே குறிப்பறிதல் அதிகாரத்தில் வரும் தலைமகனுடைய கூற்றுக்கள்
உணர்த்துகின்றன தகையணங்குறுத்தல் குறிப்பறிதல் என்னும் இரண்டு
அதிகாரங்களின் தலைமகனின் நாட்டங்கள் தெளிவாகவும் மறைமுகமாகவும்
வெளிப்படுத்தப்படுகின்றன. இத்தகைய நுட்பமான காட்சி தலைவன்
தலைவிக்குமிடையே உள்ள உறவு, தலைமகனின் ஐயம், தலைமகனின்
வேட்கையுணர்வு போன்றவை மற்ற இலக்கியங்களான சிருங்கார சதகம், அமர் சதகம்,
காதா சப்பதசதி போன்றவற்றில் இடம்பெறவில்லை.
மடலூர்தல்:;: மடல் என்பது அகத்திணையில் களவிற்குரிய துறைகளுள் ஒன்று,
பெண்ணொருத்தியை விரும்பிய ஒருவன் அவளை அடையக் கையில் அப்பெண்ணின்
உருவப்படம் வரைந்த துணியொன்றைப் பிடித்துக் கொண்டு பனங்கருக்கால் செய்து
ஒப்பனை செய்யப்பட்ட குதிரையொன்றில் ஏறித் தெரு வழியே சான்றோர் பலரறிய
வருதலை மடலேறுதல் அல்லது மடல் என்பர். தலைமகனும், தலைமகளும்
ஒருவரையொருவர் அன்பால் பிணைப்புண்ட நிலையில் அவன் அவளைக் கூட்டுவிக்கத்
தோழியைக் குறையிரந்து நிற்பான். தோழியோ உடனே இசையாமல் தலைமகளின்
அருமையைத் தலை மகன் உணர்ந்து விரைந்து வரைந்து கொள்ளவும் தலைமகன்
உறுதியைத் தெளிந்து அதனைத் தலைமகனுக்கு உணர்த்தவும் விரும்பிக் காலம்
நீட்டிப்பாள். தோழியைத் தன் சொல்வழிப்படுத்த விழையும் தலைமகன் அவளைச்
சொல்வழி அச்சுறுத்தியேனும் தலைமகளைப் பெறலாம் என்ற எண்ணத்தில்
‘மடலேறுவன்’; எனப் பொய்யாக உரைப்பான் இதுவே ‘ஐந்த்திணை மடல’; என்பர்.
திருக்குறளில் 6 குறள்களில் இவ்வகை மடல் செய்திகள் வருகின்றன.
குறள்கள் (1131 – 1136) காமம்மிக்க நிலையில் நாணும் நல்லாண்மையும் தலை
சாய்கின்றன. காமத்தில் உழன்று வருந்துவார்க்குப் பாதுகாவலாக அமைவது மடல்.
ஆகவே காமம் காழ் கொண்ட நிலையில் காமுற்றார் ஏறுதற்குரிய அம்மடலைத்
தலைமகன் உள்ளம் நாடுகிறது. யாமத்தும் அவனுக்கு மடலூர்தல் பற்றியே
சிந்தனையே நாணே தலை சாய்ந்தபின் உடம்பும் உயிரும் ஒரு பொருட்டன்று என
எண்ணுகிறான். ஒருவனுக்கு ஒருத்திதான் என்னும் கோட்பாட்டைச் சமுதாய அரங்கில்
எதிரொளிக்கச் செய்ய வேண்டும் என்னும் முனைப்போடு வள்ளுவர் செயல்
பட்டுள்ளார், ஆகவே தான் ஆடவனின் மனவுறுதியை வெளிப்படுத்தும் மடலை ஒரு
கருவியாகக் கொண்டு ஒருவனுக்கு ஒருத்தி – ஒருவன் ஒருத்தி என்னும் கோட்பாட்டை
வலியுறுத்துகிறார். இதில் வரும் தலைவனும் தலைவியும் நல்ல பண்பாடு வாய்ந்த
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒழுக்கத்தை உயிரெனப் போற்றுபவர்கள்.
வள்ளுவரின் தலைவி குடும்ப விளக்கு. இவ்வகையான மடலூர்தல் நிகழ்ச்சி
வடமொழி இலக்கியங்களான பர்த்ருஹரியின் சிருங்கார சதகத்திலோ அமருவின்
அமர்சதகத்திலோ காதா சப்தசதியிலோ இடம் பெறவில்லை. பர்த்ருஹரியின் சிருங்கார
சதகத்தில் இவ்வகை மடலுக்கு இடமேயில்லை பெண்களுக்கு மதிப்புக் கொடுக்கத்
தயங்கும். காதா சப்த சதியில் கணவனிருக்க மற்றொரு காதலனை நாடும்
காரிதையரைப் பற்றி பாடல்எண் 182-ம், பெண்ணின் பிறழ் மரபான கணவன்
ஊரில்லாத போது மறைமுகமாக எதிர்வீட்டுக்காரனுக்கு அழைப்பு விடுக்கும் ஒழுக்கக்
குறைவுடைய பெண்ணைத் கைவர்த்தன் என்னும் கவிஞன் காதா சப்த சதி 278-ஆம்
பாலிலும் சுட்டப்படுகின்றது. மோம் தலைவன் விரும்பும் பெண்ணைத் தானே தலைவி
அழைத்து வருதலை பாடல் எண்: 75 விளக்குகின்றது. இவ்வாறு தலைவனும்
தலைவியும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டிலிருந்து மாறபடுவதால் அங்கே
மடலூர்தலுக்கே இடம் இல்லை. பெண்களிடம் காமஇன்பம் துய்த்து, காமநுணுக்கம்
பெறுவதற்காகவே எழுந்த அமர் சதகத்திலும் மடலுக்கு வாய்ப்பில்லை.
பரத்i;தையர் பிரிவு: குறள் காட்டும் தலைமகள் தன் தலைவன் எவ்விதக் குற்றமும்
அற்றவன் என்பதை மிகத் தெளிவாக அறிந்தவள். அவன் தன்னிடம் செலுத்தும்
அன்பில் எவ்விதக் குறையும் இல்லாத நிறைவையே உணர்கின்றாள்.
இல்லை தவறவர்க்(கு) ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு (குறள் : 1321)
அவனுடைய குற்றமற்ற பண்புகளில் ஏதேனும் குற்றம் சேர்ந்து விடக்கூடாதே என்ற
உயர்ந்த நோக்கத்திற்காகவே ஊடுகிறாள். இவளுடைய ஊடலுக்கு காமக்கிழத்தியோ
பரத்தையோ காரணமாகவில்லை. குடிக்கு வந்த பழியை நீக்கத் துடிக்கும்
நிலையுமில்லை. தலைவன் கெடுவானோ என்ற அச்சமும் இல்லை ஊடலுக்குக்
காரணமில்லாமலே ஊடுகின்றாள், ஊடியபின் கூடுவதால் பெறும் இன்பத்தைக் குறிக்
கொண்டு ஊடுகின்றாள் தலைமகளின் அன்புப்பெருக்கமே அவ்வூடலுக்குக் காரணம்
என்பதைக் குறள் : 1321ம் புலத்தலால் பெறும் இன்பத்தைப் புத்தேள் நாட்டில் பெறும்
இன்பத்தினும் பெரிதாகக் கருதுவதாகக் குறள் 1323-ம் விளக்குகின்றது. எனவே
குறளில் பரத்தைக்கு இடமில்லை.
காதா சப்த சதி 219-ஆம் பாடல் பரத்தை கூற்றாக பரத்தையொருவள் ஒரு
இளைஞனை ஆசிர்வாதம் செய்து யார் யாரைப் புணர்ந்தால் புணர்ச்சியின்பம் சிறக்கும்
என்பதை
மதலை பெற்றொரு மாதம் கழிந்தோள்
அறுதிங்கள் அமைசினை யுற்றோள்
ஒருநாட் காய்ச்ச ஒற்றவள் பிரிந்தோள்
மன்னிற் களைந்த மடந்தை புதியவள்
அன்பிற் பொருந்து மின்பினர் ஆக (கா.ச.சதி:219)
விவரிக்கின்றாள். பரத்தையரின் சமூக அந்தஸ்தை இப்பாடலின் மூலம் அறியலாம்.
தன் தலைவனுக்கு காமக்கிழத்தியை அழைத்து வரும் தலைவியை காதா சப்தசதி
பாடல் எண்75
மடந்தை யுன்பால் மையல் கொண்டே
எத்துணை விரகத் தேங்குகின்றனோ?
பொறாமை மிக்கும் பொறுமையுடனே
அவனது மனைவி அழைத்திட வந்தாள் (கா.ச.சதி :75)
என்ற ஈசான் கவிஞனின் பாடல் விளக்குவதால் அங்கு காம கிழத்தியருளடன்
தலைவனுக்கு உறவுண்டு என்றும் அதன்மூலம் ஊடலும் பிரிவும் ஏற்படுமென்பது
தெளிவாகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 குடிக்கு வந்த பழியைத் துடைக்கும் தலைவியை காதா சப்த சரி 33, 53-ஆம்

பாடலில் கொழுநன் தன்னை ஒரு விதமாய்ப் பார்ப்பதைத் தன் தலைவனிடம் கூறாமல்
தன் மனதுக்குள்ளேயே அடைத்துக் கொண்டு கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் குடும்ப
ஒற்றுமை குலையக் கூடாதென்றும் தன் கற்புக்கும் பங்கும் விளையாமல் சுவற்றிலுள்ள
இராமன் இலக்குமணனின் சித்திரத்தைக் காட்டி இலக்குமணனைப் போல
அண்ணியாகிய என்னைத் தாயாகப் பாவித்துக் கொள் என்று குறிப்பால்
உணர்த்துவதை
கோதுறும் மனமுடைக் கொழுந்தனை நோக்கி
மாதவன் தினமும் போதனை செய்தாள்
இராமனுடன் செலும் இலக்குவன் சரிதம்
சுவரில் வரைந்த சுடரோ வியத்தே (கா.சி.ச. 33)
கோதுறும் உளமுடைக் கொழுந்தன் இயல்பைக்
குடும்ப வாழக்கை குறைபடக்கஞ்சி
கோல மேனி சால மெலியவும்
கொண்கனிடமும் கூறிட மாட்டாள் (கா.ச.ச. 53)
மேற்குறிப்பிட்ட பாடல்களின் மூலம் அறியலாம். மேலும் சிருங்கார சதக ஆசிரியர் தாம்
பெண்களால் பெற்ற இழிவை தன் சொந்த அனுபவமாக் கூறுகிறார்.
பெண்ண்ணின் பெருமை: பெண்களது மனத்திட்பத்தை வள்ளுவர்
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெண்ணும்
திண்மையுண்டாகப் பெறின் (குறள் 54)
என்று புகழ்கின்றார். சான்றோர் கற்பித்தவாறு மனவுறுதியுடன் வாழும் பெண்ணைக்
காட்டிலும் பெருமைக்குரிய மேலான பொருள் வேறு எவையுமில்லை என்று பெண்ணைப்
பெருமை படுத்தியும், அடிமை உணர்விலிருந்து மகளிரை ஓரளவேனும் விழிப்படையச்
செய்யும் உணர்வு குறளில் வெளிப்பட்டுள்ளது. ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும்
அதிகாரத்தில் பெண்ணை வாழ்க்கையின் முதலாகவே கருதுகிறார் வள்ளுவர் அதனை
மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டாள்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை (குறள்:51)
என்று கூறுகிறார். ஆனால் வடமொழி இலக்கியமான சிருங்கார சதகத்தில் ஆசிரியர்
பர்த்ருஹரி பெண்களுக்கு மதிப்புக் கொடுக்கத் தயங்குகிறார். மகளீரை மெல்லியலார்
(அபலை) என்றழைப்பது பொருந்துமா (சிருங்.ச:10) என்று வினவி மகளிர் செய்யும்
கொடுஞ்செயல்களை
நாணமென்னும் நாணுடைய புருவமென்னும் வில்லைக்
கொண்டு, நோக்கென்னும் நல்லம்பால் ஆடவர்தம்
இதயத்தின் உள்ளே பாய்ந்து சென்று காதலென்னும் வேதனையைக்
கிளர்ந்தெழச் செய்யும் காரிகையர் இறைவனுடைய ஏற்றமிகு படைப்பாவார்
(சிருங்.ச.2)
என்னும் பாடலில் விளக்குகின்றார். “பெண்களை நம்பாதே என்று எச்சரிக்கை செய்து,
மனித வாழக்கைக்கு இன்பத் தருவதைப் போன்று துன்பம் தருபவர்களாகவும் மகளிர்
உள்ளதாகக் கூறுகிறார். மேலும் காதா சப்த சதியில் களவு வாழ்க்கையில்
கற்புநிலை தவறிய பெண்ணைப் பாடல் எண் 182
நதியின் புதரிடை முதன்முதல் கற்பிழந்
தவர்தமைக் கண்டே அரற்றி ஆ!ஆ!
என்றே புட்கள் இறக்கையாற் சொல்லும்
பாங்கில் எங்கோ பறந்து செல்லும் (கா.ச.சதி:182)
விளக்குகிறது.
கணவன் ஊரில்லாத போது எதிர்வீட்டுக்காரனுக்கு அழைப்பு விடுக்கும் பெண்ணைப்
பாடல் எண். 278
ஊரில்லை உடையவன்! வெற்றில்!
காரிருட் சூழ்ந்த கடுப்பாழிரவே!
சீருடை எதிரிலச் செல்வ விழித்திரு!
சோரர் வரலாம் சோர்வடை யேலே! (கா. ச.சதி:278)
வழிப்போக்கனை விரும்பும் பெண்ணைப்பற்றியும் பேசியதிலிருந்து பெண்மை காதா
சப்த சதியில் எவ்வளவு தூரம் இழிவு படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.
கள்ளு;ளுண்ண்ணாமை: சங்க இலக்கியம் தீது என்று குறிப்பிடாத கள் அல்லது மது
அருந்துவதை வள்ளுவர் வன்மையாகக் கண்டித்து கள்ளுண்ணாமை (93) என்ற ஒரு
தனி அதிகாரமே வகுத்துள்ளார். ஆனால் காதா சப்த சதி 229-ஆம் பாடல் தலைவி
புலவி கொண்டுள்ள போது அவள் வாயருகில் ஏந்திய மதுக்கிண்ணத்தை மறுத்துப்பின்
தலைவனும் தலைவியும் மதுவுண்ணுவதாகக் கூறப்பட்டுள்ளது. கணவனைப் பிரிந்த
தலைவிக்கு களிப்பூட்டும் மதுவைப் பருக மனமில்லாமல் இருப்பதாகப் பின்வரும்
பாடல் உணர்த்துகிறது.
மாவின் செந்தளிர் மதுவின் நறுமணம்
புகுமிளந் தென்றல் பொறுத்துக் கொண்டேன்
இதனின் பெருஞ் செய லேதோ? எனினும்
இன்னும் வாரார் இனியர் தாமே (கா.ச.ச.: 87)
மது மருந்து போன்றே இயங்கித் தலைவன் தலைவியின் புலவி நீக்கிக் காமநோயை
ஆற்றுவித்து விடுகிறது. என்று காதா சப்த சதி கூறுகின்றது. ஆனால் வள்ளுவர்
மது என்னும் போதைக்கு அடிமையாகி மனிதன் நிலை கெட்டுப் போவதால், மது
உண்பதைக் கடிக்கின்றார்.
முடிவுரை: திருவள்ளுவரிடம் சாதி, குலம், பிறப்பென்னும் வேற்றுமை கருதும் தன்மை
இல்லை. மனிதனின் அகத்தூய்மை வாய்மையில் காணப்படும் என்பவர் வள்ளுவர்.
ஓர் உடலில் குருதி ஓட்டம் இருப்பினும் அன்பின் ஓட்டமும் இருந்தால்தான்
உயிரோட்டம் உடையதாகக் கருதப்படும் என்னும் உறுதியுடையவர் குறளில்
1.மடலூர்தலுக்குச் சிறப்பிடம் தந்து ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கோட்பாட்டைச்
சமுதாய அரங்கில் எதிரொலிக்கச் செய்துள்ளார்@ 2. அன்பொத்த காதலர்களின்
அன்புணர்ச்சிகளுக்கே குறளில் முதன்மையிடம் தரப்படுவதால் தோழிக்கோ
பாங்கனுக்கோ, மற்ற மனிதர்களுக்கோ முக்கியத்துவம் தரப்படவில்லை. அவர்களது
உள்ளத்துணைர்ச்சிகளுக்கும் தனிச்சிறப்பு வழங்கப்படவில்லை. 3. குறள் காட்டும்
தலைமகன் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கோட்பாட்டில் வாழ்வதால் இரண்டாம்
மனைவி காமக்கிழத்தியர், பரத்தையர் ஆகியோருடன் தொடர்பு கொள்வதற்கு
வாய்ப்பின்மையும் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக வரைவில் மகளிர், பொது மகளிர்
போன்றோர் இயல்புகளைத் தனி அதிகாரம் வகுத்து சொல்லியும் எச்சரிக்கின்றார்
வள்ளவர். 4.சமுதாயச் செம்மையை, மேம்பாட்டினை விரும்புகிறவராகத் திகழ்கிறார்
திருவள்ளவர், 5.திருக்குறள் காமத்துப்பாலில் காணும் காதல் தூய்மையே காதற்
பாடல்களை தெய்வங்களோடு தொடர்படுத்திக் காணும் நிலைக்கு
ஆற்றுப்படுத்தியிருக்கக் கூடும். 6.கள்ளுண்பதை வன்மையாகக் கண்டித்து
தலைமகனைச் செம்மையுறச் செய்கிறார். அறநூலான திருக்குறள் ஆன்மீகப்
பொதுமையுமையது, மனித வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டும் அறம்,
பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் ஒரே நூலில் ஒரு சேரப் பெற்றுள்ள பெருஞ்
சிறப்பு பெற்ற நூல் மண்ணுலக வாழ்வில் விண்ணுலக இன்பத்தை அடைவதற்குப்
பயிற்சி அளிக்கும் அருமையான நூல்.
துணை நூலக்க்கள ; :
1. வ.வே.சு. ஐயர் 1964 நதீதீதீ pநூற் கொத்து;
அறநெறிச் சாரம்
பாயிரம்
சென்னை
2. க.த. திருநாவுக்கரசு 1977 திருக்கு;குறள் நதீதீதீ p இலக்க்கியம்
அவ்வை அச்சுக் கூடம்
சென்னை – 13
3. சு. முருகன ; 2001 இலக்க்கிய வளம்
நளினா மங்கை வெளீயிட்டகம்
மதுரை
4. டாக்டர் கு. மோகனராசு 1986 தொல்க்காப்ப்பியமும் திருக்கு;குறளும்
அவ்வை அச்சுக்கூடம்
சென்னை
5. த. வசந்தாள் 1990 தமிழிலக்க்கியத்த்தில் அகப்n;பொருள்
மரபுகள் ஒரு வரலாற்று;றுபப்ப் hர்வை
நாளந்தா ஆர்ட் பிரிண்டர்ஸ்
சென்னை – 5
6. மு.கு. ஜகந்நாதராஜா 1981 காதா சப்த் சதி
வசந்தி பதிப்பகம்
இராஜபாளையம் 626 117
7. ளு.N. முயுNனுயுளுறுயுஆலு 2001 வுயஅடை ஊரடவரசந யனெ ஐனெயைn
Phடைழளழிhல
ருnவைநன டீiனெ புசயிhiஉள
ஊhநnயெi – 4
7. ளுரளாடை முரஅயச னுநு 1969 யுnஉநைவெ ஐனெயைn நுசழவiஉள யனெ நுசழவiஉ
டுவைநசயவரசந
மு.டு. ளுயஉhனநசய
ளுமலடழசம Pசiவெநசளஇ னுநடாi
கல்லாடம், திருவள்ளுவமாலை



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard