New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வள்ளுவர் காட்டும் நட்பு அருள்செல்வன் இராஐ


Guru

Status: Offline
Posts: 24603
Date:
வள்ளுவர் காட்டும் நட்பு அருள்செல்வன் இராஐ
Permalink  
 


வள்ளுவர் காட்டும் நட்பு அருள்செல்வன் இராஐ
1. முன்னு;னுரை: இலக்கியம் என்பது அஃது எழுந்த காலத்தை விடுத்து, பிற்காலத்தில் போற்றப்படும் பொழுது சிறப்புமிக்கதாக அமைகின்றது எனலாம்.
அவ்வகையில் தமிழில் எழுந்த இலக்கியங்களுள் காலத்தை வென்று ஞான்றும் போற்றப்படுவது திருக்குறளாகும். வள்ளுவப் பெருமான் யாத்த இந்நூல், உலகப் பேரிலக்கியங்கள் அனைத்திலும் ஒப்பற்றத் தனிப் பெரும் இலக்கியமாகத் திகழ்கின்றது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மக்களின் தினசரி வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் இந்நூலின் அறிவுரைகள் எழுதப்பட்ட அன்று போல் இன்றும் பேருண்மைகளாக இருப்பவை (மோகனராசு,கு, பக் ஏஐஐ).
திருக்குறளைப் பற்றி பலரும் பலவாறு புகழ்ந்து பாடியுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் இதைப் போல் வேறு எந்த இலக்கியமும் போற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருவள்ளுவமாலை என்ற நூலே இதற்குச் சான்றாகும். இதன் சிறப்பைப் பற்றிக் குறிப்பிடவருமிடத்து டாக்டர் பொற்கோ, 'பழைய இலக்கியத்தில் இருப்பதைச் சொல்லியிருக்கிறார்கள். வள்ளுவரோ இருக்க வேண்டியதைச் சொல்லியிருக்கிறார்" என்கிறார் (பொற்கோ, பக். 15). டாக்டர் மா.பொ. சிவஞானம் தம்முடைய 'திருவள்ளுவரும் கார்ல் மார்க்சும்" என்னும் நூலில், 'திருக்குறள் பொழுது போக்கு இலக்கியமன்று மனித சமுதாயத்தின் பொதுச்சட்டம்: ~இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்கிறோமே அதுபோல, மனித சமுதாயத்தின் அரசியலமைப்புச் சட்டம் திருக்குறள்.
மக்கள் சமுதாயம் எப்படியெல்லாம் வாழவதற்கு அவர் விதிமுறைகளை வகுத்துத் தந்தார். '(மா.பொ. சிவஞானம், பக்.68) என்று குறளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
உலகப் பொதுமறை எனப் புகழப்படும் இது, காலம், இடம், வாழ்வியல், நடைமுறை முதலியவற்றைக் கடந்து, நாடு, மொழி, இனம் ஆகிய வேறுபாடுகளுக்கு அப்பால் உலக மாந்தர் அனைவரும் சாலவும் ஓம்பி மேற்கொள்வதற்குரிய உயரிய அறங்களை உரைக்கும் ஒப்பற்ற நூல் என்பது துணிபு. இதன்பால் கூறப்படாத கருத்தே இல்லை எனலாம். பலவற்றையும் ஆராய்ந்து கூறியுள்ள வள்ளுவர் நட்பைப் பற்றியும் ஆழமாகக் கூறியுள்ளார். தமிழில் எழுந்த இலக்கியங்களுள் நட்பைப் பற்றி இந்தளவு வேறு எந்த நூலும் கூறவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
2. நட்பு; சமுதாய வாழ்வில் மட்டுமின்றித் தனிமனித வாழ்வுக்கும் இன்றிமையமையாத ஒன்றாய், என்றும் நின்று நிலவிடும் நீர்மையும் சீர்மையும் பெற்று ஒளிர்வது நட்பாகும். நட்புச் செய்யாத மானிடர்இப்பாரில் இல்லை. ஒவ்வொருவர் வாழ்விலும் அஃதொரு சிறப்பிடத்தைப் பெற்றுத் திகழ்கின்றது எனலாம். நட்பில் நல்துணையாய், துன்பக்கடல் கடக்க உதவும் புணையாய், விழியைக் காக்கும் இமையாய், வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளியாய் விளங்குபவரே நல்ல நண்பர்கள் ஆவர்.
நட்பு என்பது ~நள்| என்னும் பகுதியின் அடியாகப் பிறந்த தொழிற்பெயர். நள்ளுதல் என்பது ஒன்றுபடுதல் என்னும் பொருளைத் தரும். ஆக, நட்பு என்னும் சொல் உள்ளத்தால் ஒன்றுபடுவதையே குறிக்கிறது எனலாம்.
வாழ்வின் எல்லாத் துறைகளையும் ஆழமாகப் பார்த்துத் தம்முடைய அனுபவத்தின் வழி கண்ட உண்மைகளை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். காதல், போர், அறம், இல்லறம் எனப் பலவற்றைப் பற்றியும் கூறிப் போந்த அவர்கள், நட்பை பற்றியும் கூறிச் சென்றுள்ளனர்.
நண்பர்களுக்கு இலக்கணம் கூற வந்த பழந்தமிழ் நூலாகிய 'இறையனார் களவியல் உரை" சாவின் சாதல் நோவின் நோதல்@ பிரிவு நனி இரங்கல்@ நன்பொருள் கொடுத்தல்," என்றெல்லாம் நட்பைப் பற்றிக் கூறிச் செல்கின்றது.
உலகில் சிறந்து வாழ பல அறக் கருத்துகளைக் கூறிய வள்ளுவப் பெருந்தகை, ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு சிறப்பான உறுப்பாய்த் திகழும் நட்பைக் குறித்தும் நவில்ந்துள்ளார். அவர் நட்பைக் குறித்து ஐந்து அதிகாரங்களில் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளார். நட்பைக் குறித்து அவர் கூறுவது நாடாளும் வேந்தர்கே எனினும், பாரில் வாழும் அனைத்து மானிடர்க்கும் அது பொறுந்தும் வண்ணம் சிறந்து விளங்குகின்றது எனலாம். வார்த்தையை அளந்து பேசி, நாவடக்கத்தை வலியுறுத்தி, பயனில்லாச் சொல்லைப் பேசல் வேண்டாம் எனக் கட்டளையிட்டக் குறள் நட்பைக் குறித்து ஐந்து அதிகாரங்களில் கூறுவதே அதன் இன்றியமையாத சிறப்பைக் காட்டுகின்றது எனலாம்.
நட்பைத் திருமணத்துடன் ஒப்பிடலாம். ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் நண்பனும் மனைவியும் ஏறக்குறைய சமமான ஓரிடத்தையே பெறுகின்றனர் எனலாம் . இவ்விருவர் இடத்திலும் பால் உணர்வு மட்டுமே மாறுபடுகின்றது. மனத்தால் ஒன்றுபடுதல், இன்பத்தில் மகிழ்தல், துன்பத்தில துவல்தல், வாழ்விலும் தாழ்விலும் இணைபிரியாதிருத்த், புரிந்துணர்ந்து விட்டுக் கொடுத்தல் போன்றவற்றில் நண்பனும் மனைவியும் பலவகையில் ஒத்திருப்பதே மேற்கூறிய ஒப்புமை ஏற்புடையது என்பதற்குச் சான்றாகும். திருமணத்திற்கு முன் வாழ்க்கைத் துணையாகவரவிருக்கும் பெண்ணைப் பற்றி ஆராய்தல் போன்றே, வள்ளுவர் தம் குறளிலும் நட்பைப் பற்றி ஆராய்ந்துள்ளார்.
நட்புக்கு இலக்கணம் கூறி யார் சிறந்த நண்பர், நன் நண்பரை அறிவது எப்படி நட்பின் சிறப்புகள் யாவை போன்றவற்றைத் தெளிவாக ஆராய்ந்துள்ளாhர்.
3. வரையறை இலக்கியங்களில் நட்பு, கேண்மை, உறவு, தொடர்பு என்ற பல சொற்கள் நட்பைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வள்ளுவர் நட்புக்கு இலக்கணமே கூறியுள்ளார்.
ஒரு காரணத்தைப் பற்றிய ஒன்றிய கருத்தும் மனம் கலந்து பழகுதலும் ஒருவரோடு நட்பு கொள்வதற்குத் தேவையில்லை. மாறாக, நட்பில் இருவரிடையும் ஒத்த உணர்ச்சி இருத்தல் வேண்டும். அந்த ஒன்றே நட்புக்கு வேண்டிய உரிமையைத் தரும்.
“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்". (குறள் 785)
இதே கருத்i;தைக் கம்ப்பரும்
'தொல்லருங் கால மெல்லாம் பழகினும் தூய ரல்லார்
புல்லல ருள்ளம் தூயார் பொருந்துவ ரெதிர்ந்த ஞானறே
ஒல்லை வந்துணர்வு மொன்ற இருவரு மொருநிளுற்ற
எல்லியும் பகலும் போலத் தழுவின ரெழுவிற் றோளார்"
(கம்ப. விபீடணன்.123)
மனம் ஒன்றுபடாத நிலையில் நட்பு மலர்வதிலலை. அது மலர்ந்து மணம் பரப்பதற்கு ஒத்த உணாச்சி தேவை என்பதை வள்ளுவர் நன்குணர்ந்து கூறியுள்ளார். ஆக, ஒத்த உணர்ச்சியே நட்பு என வள்ளுவர் துணிந்து நட்புக்கு இலக்கணம் வகுத்துள்ளார். இங்குக் காதலுக்கு மட்டுமின்றி, நட்புக்கும் ஒத்த உணர்ச்சி தேவை என்பது தெளிவாகின்றது. பார்க்கும்போது மட்டும் மகிழ்ச்சியைத் தருவது நட்பல்ல. மாறாக, நினைக்கும்போதே மகிழ்ச்சியைத் தருகின்ற ஒன்றே நட்பாகும். அத்தகைய நட்பில்தான் அகமும் முகமும் ஒரு சேர மலரும். நட்பு என்பது இப்படித்தான் அமைய வேண்டும் என வரையறுத்துக் கூறுகிறார். இதையே,
'முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு" (குறள் 786) என்ற குறட்பா சுட்டுகின்றது.
தொடர்ந்து, அழிவு தரும் கெட்ட வழியிலிருந்து நீக்கி, நல்வழிகாட்டி, எதிர்பாராத் தீமை வந்தபோது உடனிருந்து துன்பத்தில் பங்கெடுத்து அனுபவிப்பதே நட்பு என்றும் இலக்கணம் இயம்புகிறார் ( குறள். 787)
நண்பனின் இன்பத் துன்பங்களில் பங்கெடுத்துத் தம் உரிமையை நிலைநாட்டுவது மட்டுமல்லாது, நண்பனின் மானத்தைக் காப்பதும் நட்பாகும் என்கிறார். ஒருவனது ஆடை குலைந்த பொழுது, அவன் கேளாமலேயே கை விரைந்து வந்து நழுவிய ஆடையை சரி செய்து மானம் காப்பது போல, நண்பனுக்கு இடைய+று ஏற்படும் பொழுது, அவன் கேளாமலேயே தானாகச் சென்று, அவனது இடரைப் போக்கி துன்பத்தை நீக்குவதே நட்பு எனக் கூறுகிறார் (குறள் 788) இத்தகைய இயல்பினை உடையதே நட்பு என்பது வள்ளுப் பெருமானின் துணிபாகும். இதே கருத்துப் பின் வரும் வரிகளிலும் சுட்டப்படுகின்றது.
'உடையழி காலை உதவிய கைபோல்
நட்பைத் தீர்த்தல் நண்பனதியல்பென" (பெருங். 5.3:39-40)
ஆக நட்புக்கு இலக்கணம் கூறும் வள்ளுவர், அன்பின் அடிப்படையில் அமைவதே நட்பு என்று மறைமுகமாகச் சுட்டுகின்றாh. ஒருவரின்பால் அன்பு இருந்தாலே ஒழிய, மேற்கூறிய இயல்புகளைக் காண முடியாது. ஏனெனில், காதலைப் போன்று நட்பும் அன்பினால் எழுப்பப்படும் மாளிகைதான் என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த நட்பின் அன்பைப் பற்றிக் குறிப்பிடும் விவிலியம், 'ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பினும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை" (யோவான் 5:13) என்று யோவான் புத்தகத்தில் குறிப்பிடுகிறது.
4. எப்ப்படி நட்பு;புக் கொள்வ்வது? நட்புககுத் தெளிவான வரையறை இயம்பிய வள்ளுவர், அந்நட்பை நன்கு ஆராய்ந்தப் பிறகே கொள்ளவேண்டும் என்கிறார். நமது தினசரி வாழ்வில் ஒன்றைப் பெற முயலும் போதோ வாங்கும்போதோ பலமுறை சிந்திக்கின்றோம்@ பலவகையில் ஆராய்கின்றோம். புறத்தோடு தொடர்புடைய ஒன்றைப் பெறவே இந்தளவு சிந்திக்கும் போது, அகத்தோடு தொடர்புடைய ஒன்றைப் பெற எவ்வளவு சிந்தனை தேவை என்பதை நன்குணரலாம். இதையறிந்தே வள்ளுவ் நட்பை நன்கு ஆராய்ந்த பிறகே பெற வேண்டும் என்கிறார்.
ஒருவருடன் நட்பு கொண்ட பிறகு, அதிலிருந்து விடுதலை கிடைப்பதென்பு அரிது. ஆகவே, ஒருவருடன் நட்பு கொள்வதற்கு முன் நன்கு ஆராய வேண்டும். ஒருவரின் குடிப்பிறப்பு, குணம், அவரின் சுற்றத்தாரின் இயல்பு ஆகியவற்றை ஆராய்ந்தே நட்பு கொள்ள வேண்டும் என்கிறார்.
'குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்தியாக்க நட்பு" (குறள் 793)
இதையே,
'குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வழிச் செல்க
அறைகடல் வையம் நக" (நாலடியார் - 230)
என்ற நாலடியார் வரிகளும் சுட்டுகின்றன. அவ்வாறு ஆராயும்போது, ஒருவன் பழிக்கு அஞ்சுபவனாக இருந்தால், அவன் சிறந்த குண இயல்புகளைக் கொண்டிருப்பான்.
அத்தகைய இயல்புடையவனின் நட்பை எப்படியாவது பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்கிறார் (குறள் 794). மேலும், நண்பன் என்பவன் உலக இயல்பை அறியவும் நன்மையற்ற செயல்களை ஒருவனில் கண்டபோது, அவனே அதை நினைத்து வருந்தும் படி இடித்துச் சொல்லி நல்வழி காட்ட வேண்டும். வாழ்க்கையில் சிறக்க உதவும் இப்படிப்பட்ட வல்லவர்களின் நட்பையே ஆராய்ந்து பெற வேண்டும் என்கிறார்.
'அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்" (குறள் 795)
'செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்@......." (நீதி. 19:4) என்ற விவிலிய வரிகளுக்கு ஏற்ப ஒரு சிலர் நன்மை உள்ளபோது மட்டும் நெருங்கிப் பழகுவர். ஏதேனும் துன்பம் வரும் போது நம்மைக் கைவிட்டு விடுவர். இத்தகைய குணமுடையோரை ஆராய்ந்து, அவர்களின் நட்பைப் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறார். இதே கருத்தைக் அல்லி நாவலில் கூறவரும் டாக்டர் மு.வ., 'இன்பத்தில் துணையாக வரவல்ல நண்பர்களைத் தேட வேண்டாம்@ துன்பத்தில் துணையாக வரகூடிய வல்லவரையே நண்பனாகக் கொள்ளவேண்டும்" (மு.வரதராசர். பக். 120) என்கிறார். துன்பத்தில் துணையாக வர இயலாத நட்பைக் கைவிட வேண்டும் எனக் கூறும் ஆசிரியர் அதனை ஓர் உவமையின் வழி சுட்டுகிறார்
'உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு" (குறள் 798)
எதிலும் சிறந்த முறையில் செயலாற்ற மனதில் ஊக்கம் தேவை. அத்தகைய ஊக்கம் குறைவதற்குக் காரணமாக அமையும் செயல்களை எண்ணாமல் இருக்கவேண்டும். அதே போன்று துன்பம் வரும்போது கைவிடுகின்றவரின் நட்பையும் கொள்ளாதிருக்கவேண்டும் என்கிறார். இவண் நல்ல நட்பை ஊக்கத்தி;ற்கு ஒப்பிட்டுக் கூறுகிறார். துன்பம் வரும் காலத்தில் கைவிட்டுவிடும் நட்பைப் பற்றி மரணப் படுக்கையில் நினைத்தாலும் வருத்தச் செய்யும் (குறள் 799). ஆகவே, குற்றமற்றவர்களின் நட்பையே ஆராய்ந்து பெற வேண்டும். ஒத்த பண்பில்லாதவருடன் கொண்ட நட்பை அவர்கள் விரும்பியதைக் கொடுத்தாவது விலக்கி விட வேண்டும் (குறள் 800).
நட்பை ஏன் ஆராய்ந்து பெற வேண்டும் என்பதைப் பற்றி வள்ளுவர் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார். ஏனெனில், நட்பைக் கொண்ட பிறகு அதிலிருந்து விடுதலை என்பதே ஒருவருக்கு
'நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின
வீடில்லை நட்பான் பவர்க்கு (குறள் 791).
ஆகவே, ஆராய்ந்தே நட்புக் கொளல் வேண்டும். நட்பிற்கு இலக்கணம் கூறி வழிகாட்டிய வள்ளுவர் அதை ஏன் ஆராய்ந்தே கொள்ளவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துக்கிறார். நட்பு என்பது ஆன்மாவுடன் தொடர்புடைய ஓன்று என்பதால், நன்கு ஆராயாமல் கொண்டால் அது தீமையைத் தரும் என உணர்ந்தே இவ்வாறு கூறுகிறார். இதிலிருந்தே நட்பில் எவ்வளவு முன் ஐhக்கிரதை வேண்டும் என்பது தெளிவாகின்றது.
அவ்வாறு ஆராய்ந்து அறியாமல் கொள்ளும் நட்பு இறுதியில் மரணத்திற்குக் காரணமான துயரத்தைத் தந்துவிடும் என்கிறார் (குறள் 792).
5. நட்ப் pன் பயன் நட்பு என்பது உள்ளத்தின் ஒத்த அன்பால் கட்டப்படும் கலைக்கூடமாகும். அதில் அன்பு, விட்டுக்கொடுத்தல், புரிந்துணர்வு முதலியவை முதலிடம் பெறுகின்றன. இது பொழுது போக்கிற்காகக் கூடும் கூட்டமோ உறவோ அல்ல. அஃது ஆன்மாவினால் இணைந்த இணைப்பு. ஆகவே, இவ்வுறவு உயர்வுக்கும் சீர்மைக்கும் துணை நிற்கும் தன்மை கொண்டதாக அமைதல் வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பொழுதுபோக்கிற்குத் துணையாக நின்று, வாழ்க்கையைக் கெடுக்கக் கூடாது. மாறாக நட்புக்கும் நண்பனின் சிறப்பிற்கும் காரணமாக அமைய வேண்டும். இத்தகைய உயரிய நிலையினை ஆராய்ந்து தேர்ந்தெடுத்த நட்பில்தான் காண முடியும். அதன் பயனும் நிலை நிற்கும். நட்பில் தவறு செய்யும் நண்பனைக் கடிந்து திருத்தி, நல்வழி காட்ட வேண்டும். இதுவே நட்பின் உயரிய பயன் என்பது வள்ளுவப் பெருமானின் வாக்காகும். ஒருவரோடு நட்பு கொள்வது சிரித்து மகிழ்வதற்கு மட்டுமல்ல. மாறாக, நண்பர் நெறிகடந்து செல்லும்போது, அதைத் தடுத்து நிறுத்தி, குறைகளைச் சுட்டி நல்வழி காட்ட வேண்டும். இவ்வாறு நற்றுணை புரிவதே நட்பின் பயன் என நவிலும் வகையில்,
'நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு" (குறள். 784)
என்று கூறுகிறார். இதன்வழி, அரிய செயல்களை முடித்து, அளவற்ற இன்பம் பயக்கும் நட்பில், அறமிலா வழியில் சென்றால் இடித்துரைக்கவும் வேண்டும் என வலியுறுத்துகிறார். நட்பில் இடித்துரைத்து நல்வழி காட்டவேண்டியது நண்பனின் கடமை என்பதைக் குறுந்தொகைப் பாடலொன்றும் சுட்டி நிற்கின்றது. காதல் வயப்பட்ட தலைவன் தன் காதலைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகிறான். அதனைக் கண்ணுற்ற நண்பன் நகைக்கிறான். அப்போது தலைவன்,
'இடிக்கும் கேளீர் நும்குறை ஆகம்....." (குறுந்தொகை 58)
என்று, என்னைப் பார்த்து நகைக்காமல், நண்பன் என்ற வகையில் என் பிரச்சனை தீர வழியைக் கூறும் என்கிறான். இதுவே நட்பின் பயன். எந்நிலையிலும் உதவி செய்து நல்வழி காட்டுவது நட்பின் தலையாய பயன் என்பது தௌ;ளத் தெளிவாக விளங்குகின்றது.
ஆற்றல் மிக்கது நட்பு. பணத்தாலும் பலத்தாலும் பெற முடியாததை நட்பின் பேற்றாலால் பெற முடியும். இந்நட்பானது அரிய பெரிய செயல்களை எல்லாம் உரிய காலத்தில் சாதிக்கும் தன்மையுடையது. அது எப்படிப்பட்டது என்பதைக் கூறுமிடத்தில், 'நவில்தொறும் நூல்நயம்போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு" (குறள்.783) என்கிறார்.
அறிவுசார்ந்த நல்ல நூல்களைப் படிக்குந்தோறும் புதுப்புதுக் கருத்துகளைத் தந்து மனத்தைச் செம்மைப்படுத்தி மகிழ்ச்சிய+ட்டும். அதே போன்று நட்பானது பழகப் பழக இன்பத்தைத் தந்து மனத்தில் நீங்கா மகிழ்ச்சியைத் தரவல்லது என்கிறார். இங்கு நல்ல நூல்களை நல்ல நட்புக்கு ஒப்பிட்டு, வாழ்க்கையில் நல்ல புத்தகங்கள் ஆற்றும் பங்கை நல்ல நட்பும் ஆற்றவல்லது என்று புலப்படுத்துகிறார். நல்ல நூல்கள் அறிவிலும் நெஞ்சத்திலும் தெளிவையும் அன்பையும் வளர்ப்பது போல், நல்லவர்களின் நட்பு ஒருவரைப் பண்படுத்தவல்லதாக இருத்தல் வேண்டும் என்பது வள்ளுவர் துணிபாகும். இதையே நாலடியார் நுனியிருந்து அடிக்குக் கரும்பைச் சாப்பிடுவதற்கு ஒப்பிடுகிறது. நுனியிருந்து அடிக்குக் கரும்யைச் சாப்பிடுவது, செல்ல செல்ல அதிகச் சுவையைத் தரும். அதுபோன்றே நல்லவர்களின் நட்பு நாள் செல்ல செல்ல அதிகப் பயனைத் தரவல்லது என்கிறது.
இதை மேலும் நிறைமதிக்கும் ஒப்பிட்டுச் சிறப்புச் சேர்க்கிறார். அறிவுடையோரின் நட்பை நிறைமதிக்கும், புல்லர் தம் நட்பைப் பிறைமதிக்கும் ஒப்பிடுகிறார். நாளுக்கு நாள் வளர்ந்து, தமக்கும் தம்மைச் சுற்றியுள்ளோர்க்கும் சிறப்பைச்சேர்க்கும் நட்பு நிறைமதியுடன் ஒப்பிடப்படுகிறது. மாறாக பிறைமதி புல்லர் நட்பை உணர்த்தி நிற்கிறது.
'நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு" ( குறள். 782)
'பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையாக நந்தும் - வரிசையால்
வானூர மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிரியார் தொடர்பு. '(நாலடி. 125)
தீயவழியில் செல்லும் அல்லது செல்ல முயலும் நண்பனை இடித்து அறிவுரை கூறி நல்வழிபடுத்தும் பண்பினையுடையது நட்பு என்று கூறிய வள்ளுவர், இயற்கையாகவே நண்பனுக்கு ஏற்படும் துன்பத்தில் உதவுவதும் நட்பே என்கிறார். நண்பனுக்குத் துன்பம் ஏற்படுகையில் மனம் சஞ்சலமுறும். எப்படியாவது அவனுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இது நண்பனின்பால் கொண்ட அன்பால் ஏற்பட்ட தாக்கம். 'உறவினர்களிடமும் உடன்பிறப்புகளிடமும் உடலிலுள்ள இரத்தம் மட்டுமே துடிக்கும். ஆனால், தூய்மையான நட்பில் ஆன்மாவே துடிக்கும்" என்ற வரிகளுக்கு ஏற்ப நண்பனின் துயரம் தாக்க, அவனுக்கு உதவிட வேண்டும் என்ற வேட்கை எழும். இதையே, ~அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு (குறள். 787) என்ற குறளடிகள் சுட்டி நிற்கின்றன. இதுவே நட்பின் பயனாகும்.
ஒத்த உணர்ச்சியும் ஆன்மாவின் பிணைப்பும் பெற்ற நட்பின் அன்பை அளவிட முடியாது. சில நேரங்களில் அதன் ஆழத்தை அளவிட முயலும்போது. அது தன் சிறப்பை இழக்கின்றது. 'என்னுடைய அன்பு இத்தயைது@ என் நண்பனின் அன்பு இத்தகையது" (குறள். 790) என்று கூறும் போது, அந்நட்பு தம் சிறப்பை இழந்துவிடும் என்பது வள்ளுவர் கருத்தாகும்.
6.நட்ப்பில் பழைமை
படைக்கப்பட்ட ஒன்று மேன்மேலும் வளர்ந்து சிரமை அடைவது இயற்கை நியதி. நட்பும் அதற்கு விதிவிலக்கு அல்ல. நட்பு என்ற உறவு மேன்மேலும் வளர்ந்து நிலைத்து நிற்கு, அதற்கு உரிமை என்ற கவசம் மிக அவசியம். நட்புக்கு முக்கிய உறுப்பாக இருந்து, நட்பைச் சிறப்பிப்பதே நண்பர் உரிமையோடு நடக்கும் தன்மையே ஆகும். ஆக, நட்பில் நண்பரின் எல்லாச் செயல்களயும் உரிமையோடு அணுகவேண்டும். இதுவே பழைமையும் சான்றோர் நட்பின் கடமையும் என்று வள்ளுவர் கூறுகிறார். இவ்வாறு உரிமை பாராட்டுதல் நட்பில் பழைமை எனப்படும் (குறள். 801).
நட்பின் முதன்மை அங்கமாக அமையும் உரிமையின் காரணமாக நண்பர் ஒன்றைச் செய்தால், அதனை நட்பின் சிறப்பாக ஏற்றுக் கொள்வது கடமையெனவும் சுட்டுகின்றார் (குறள். 802).
இந்நிலையில் நண்பர் வருந்ததக்கச் செயலைச் செய்தால், அதற்கு அறியாமையும் மிகுந்த உரிமையும்காரணம் என்பதை உணர வேண்டும் என்கிறார்.
~பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின் (குறள். 805)
இத்தகைய சிறப்புப் பெற்ற நட்பில், பலகாலம் தொட்டு நட்புறவு உடையவர், நண்பர் அழிவு தரும் செயல்களைச் செய்த போதிலும் அவரின் பால் வைத்த அன்பினின்று மாறாமல் இருப்பார் (குறள். 807). நாலடியாரும் இதே கருத்தைக் கீழ்காணுமாறு கூறுகிறது.
~........ இன்னாசெயினும்
கலந்து பழி காணாரர் சான்றோh|
தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமரன்மை தமறிந்தார் ஆயின் அவரைத்
தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல| (நாலடி. 227,229);
இத்தகைய இயல்புடைய நட்பில், தமக்கு அழிவு நேரிட்டாலும்கூட, நட்பின்பால் கொண்ட பழைமையான உறவை விட்டு விடாமல் அறிஞர் தொடரவர். இச்சிறப்பினை நட்பு எய்வதற்குக் காரணமானவர்களை உலகமே விரும்பிப் போற்றும் என்று வள்ளுவர் கூறுகிறார் ( குறள் . 806). அறிஞர்களின் இப்படிப்பட்ட நட்பை நற்றிணைப் பாடல் மலையிலுள்ள உயர்ந்த மரத்தின் உச்சியில் கட்டப்பட்ட தேன் கூட்டிற்கு ஒப்பிட்டுச் சிறப்பிக்கிறது. தொடர்ந்து நட்பிலும் நண்பரிடத்திலும் மாறாத அன்பு, உறவு, உரிமை முதலிய பண்புகளைக் கொண்டவர்களைப் பகைவர்களும் போற்றிப் பாராட்டுவர் என்பது வள்ளுவப் பெருமானின் வாக்காகும் (குறள். 810).
7. த P நட்பு;பும் கூடா நட்பு;பும்
நட்பின் சிறப்பு, மேன்னை, பயன், எத்தகையோரிடம் நட்பும் கொளல் வேண்டும் முதலியவற்றைக் குறித்துத் தௌ;ளத் தெளிவாக எடுத்துரைத்த வள்ளுவப் பெருமான், அதோடு நின்று விடவில்லை. ~எவர் குற்றம் யார் குற்றம் என்று மடடும் பாராமல், குறைகளையும் வழிகைகளையும் காணவேண்டும் என அல்லி நாவலில் மு.வ. குறிப்பிடுவதுபோல், எதைக் கொள்ளக்கூடாது என்றும் தௌ;ளத் தெளிவாகக் கூறுகிறார். இது நண்பனைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டியதின் அவசியத்தைத் தெளிவுபடுத்துகிறது.
இவ்விரண்டிற்கும் சு.ரு. சொக்கலிங்கம் பின்வருமாறு விளக்கம் தருகிறார்.
“தீய குணங்களை உடையாரது நட்பு; ~தீ நட்பு|. பகைமை எண்ணத்தால் உள்ளத்தால் ~கூடாது| இருந்து கொண்டே புறத்தில் உண்மை நண்பரைப் போல் நடிக்கின்ற ~கூடாதோர|; நட்பே ~கூடா நட்பு|ஆகும். '(சு.ரு. சொக்கலிங்கம், பக்.135)
தீ நட்பைப் பற்றி வள்ளுவர் பத்துக் குறள்களில் தெளிவாகக் கூறுகின்றார். அன்பு மிகுதியால் அப்படியே உருகுவதுபோல் பழகும் நல்ல பண்பு இல்லாதவர்களின் நட்பை விட்டு விலக வேண்டும் என்று முதலிலேயே கூறிவிடுகிறார். இத்தகையோரின் நட்பு நாளுக்கு நாள் குன்றுவதே நலம் என்கிறார் ( குறள் 811). இதன் வழி நல்ல பண்பே நட்புக்கு அடித்தளம் என மீண்டும் வலியுறுத்துகிறார். நல்ல பண்பற்றவர்களின் உறவைத் துண்டித்துவிட வேண்டும் என்கிறார். 'உன் நண்பர்கள் யார் யார் என்று கூறு. நீ எப்படிப்பட்டவன் என்பதை நான் கூறுகிறேன் 'என்ற கூற்று இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது. நண்பனைக் கொண்டே ஒருவனை எடை போட முடியும் என்பது பண்பின் அடிப்படையில் அமைந்தது என்பதைத் தெளிவுறுத்த வேண்டியதில்லை. இதனால்தான் அன்று வள்ளுவர் கூடா நட்பில் நற்பண்பைப் பற்றி கூறியுள்ளார் போலும்.
ஒரு சிலர் ஏதேனும் பயனைக் கருதி நட்பு கொள்வர் இவர்கள் தங்கள் காரியம் கைக்கூடியவுடன், உறவைத் தொடர்வதில் பயனில்லை என அறிந்தவுடன் விலகிவிடுவர். வள்ளுவர் இத்தகைய நட்பையும் தீ நட்பு எனக் கூறி விட்டுவிட வேண்டும் என்கிறார். இவர்களுடன் நட்பு கொள்வதால் நன்மையும் இல்லை@ நட்பை இழப்பதால் தீமையும் இல்லை என்பது வள்ளுவர் துணிபாகும் (குறள் 812). இவ்வாறு நட்பைப் பொருட்படுத்தாமல், அதனால் கிடைக்கும் பயனை மட்டும் அளந்து பார்க்கும் நண்பரை, அன்பைப் பற்றி நினையாமல் கிடைக்கும் பொருளையே நினைக்கும் விலைமகளிருக்கும், பிறர் நன்மையைச் சிந்தியாமல், அவர்களுடைய பொருளைக் கவரும் கள்வருக்கும் ஒப்பிட்டுக் கூறுகிறார். இத்தகைய பண்புடையோர் கள்வரையும் விலைமகளிரையும் ஒத்தவர் எனக் கூறி, இத்தீ நட்பை விட்டு விட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
'உறுவது சீர்தூக்கும் நட்புப் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர் '(குறள். 813)
இப்படிப்பட்ட நண்பனைப் பெற்றிருப்பதைவிட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருப்பது எவ்வளவோ மேல் (குறள். 814). தீ நட்பைப் பற்றி கூறிவரும் வள்ளுவர் தொடாந்து, அறிவில்லாதவரின் நட்பைவிட அறிவுடையவரின் பகைமை மேல் என்கிறார்.
அறிவுடையோர் பகைவராக இருந்தாலும் எத்தகைய தீங்கையும் செய்விலர். ஆனால், அறிவில்லாதவனின் நட்பு எல்லாத் தீங்குக்கும் காரணமாக அமையும் (குறள்.816)
'இழிந்த மாக்களொடின்பம் ஆரதலின்
உயர்ந்த மாக்க கொடுறுபகை இனிது" (பெருங். 4:4:21-22) என்ற பெருங்கதையின் வரிகளும் இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.
இப்படிப்பட்டவர்கள் செய்யக்கூடிய கடமையையும் செய்ய முடியாமல் கெடுக்கக் கூடியவர்கள். ஆகவே, அப்படிப்பட்டவர்களின் நட்பைச் சொல்லாமலேயே விட்டுவிட வேண்டும். இல்லையெனின், அதன் நோக்கத்தையே கெடுத்துவிடும் தன்மையுடையவர்கள் ஆவர். இதையே,
'ஒல்லும் கருமம் உடற் பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்" (குறள். 818)
இதை தவிர செயல் வேறாகவும் சொல் வேறாகவும் உள்ளவர்களின் நட்பையும் தீ நட்பே என்கிறார். இத்தகைய இயல்புடையவர்கள் நயவஞ்சகர்கள். அவர்களுடைய நட்பு நனவில் மட்டுமின்றி, கனவிலும் துன்பத்தைத் தரக்கூடியது. எனவே, அவர்களின் நட்பை விட்டு விலகிவிட வேண்டும். இதனையே, 'கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு" (குறள். 819) என்ற குறளின் வழி சுட்டுகின்றார்.
தொடர்ந்து வள்ளுவர் கூடா நட்பைப் பற்றிக் கூறுகிறார். நமது அன்றாட வாழ்க்கைச் சூழலில் பலரைச் சந்தித்துப் பழகுகிறோம். அவர்கள் அனைவரும் பல்வகைப்பட்டவர்கள். அவர்களுள் சிலரின் பண்பை அடையாளம் கண்டு கூறி, ~கூடா நட்பு| என விட்டுவிலக வேண்டும் என்கிறார்.
ஒரு சிலர் என்னதான் பழகினாலும், மனத்தால் ஒன்றுபடாமல் நண்பரைப் போல் நடிப்பர். அவர்கள் உறவு கொள்வதுபோல் இருந்து கொண்டே உறவு கொள்ளாதவர்களாய் வாழ்வார்கள். இப்படிப்பட்ட பண்புள்ளவர்களின் மனம் விலைமகளிரின் மனத்தைப் போல் மாறுபட்டது எனக் கூறி, இக்கூடா நட்பை விட்டு விலகிவிட வேண்டும் என்கிறார். இக்கருத்தினை விளக்கும் வகையில் பின்வரும் குறளடிகள் அமைகின்றன.
'இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறுபடும்" (குறள். 822)
நல்ல பண்பையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தருவது கல்வியின்தலையாய நோக்கமாகும். தனி மனிதனின் அறிவைச் செம்மைப்படுத்தி, நல்லொழுக்கத்தை விதைத்து வாழ வழிகோணுவது கல்வியாகும். இருந்த போதிலும் நல்ல பண்பு இல்லாதவர்கள் என்னதான் கற்றாலும் நல்ல மனம் உடையவர்களாக மாறுவதில்லை. ஆகவே, கல்வியில் மட்டும் சிறந்து விளங்கும் நற்பண்பற்றவர்களின் நட்பு கூடாது என்பது வள்ளுவர் கட்டளையாகும்.
'பலநல்ல கற்றக் கடைத்தும் மனம் நல்லர்
ஆகுதல் மாணாரக்கு அரிது" (குறள்.823)
இதைத் தவிர, வஞ்சகர்களின் நட்பையும் கூடாது என்கிறாh. ஒரு சிலர் முகத்தில் இனிய முறுவலைக் கொண்டு, அகத்தில் பொல்லாத வஞ்சக எண்ணத்தைக் கொண்டிருப்பர். அப்படிப்பட்ட பண்புள்ளவர்களை அடையாளம் கண்டு, நட்பு கொள்வதற்கு அஞ்சி விலக வேண்டும் (குறள். 824) 'அகநக நட்பது" நட்பு என மேலே கண்டோம். அஃது ஒத்த உணரச்சியும் மனத்தால் ஒன்றுபடுதலையும் அடிப்படையாகக் கொண்டது. மனத்தால் ஒன்றுபடாமல், மனத்தளவில் நட்பைக் கொள்ளாமல், ஒருவர் பேசுகின்ற பேச்சை நமடபி ஏமாந்து நட்புக் கொள்ளல் கூடாது. அதனால் நலிவே ஏற்படும் (குறள். 824) மனத்தளவில் ஒட்டாமல், நட்பை வளர்க்காமல் பேச்சளவில் செயல்படும் நண்பரைப் போன்ற பகைவர்களின் தன்மை அவர்களின் செயலிலேயே விரைவில் வெளிபட்டுவிடும். இப்படிப்பட்டவர்களின் நட்பும் கூடாது என்கிறார்.
'நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்"
என்னும் குறட்பா இக்கருத்தையே விளக்குகிறது. மேலும், இப்படிப்பட்ட பகைவனை நண்பன்போல் நடிப்பவனை நம்பக்கூடாது என்கிறார். அவர்களுடைய சொல்லில் இருக்கும் இனிமையைக் கண்டு ஏமாந்துவிடலாகாது. அவனுடைய சொல் வளைவதும் குழைவதும் தீமைக்கு அறிகுறி என்கிறார். இத்தன்மையை வளையும் வில்லுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார். வில் விளைவது பகைவரைக் கொல்வதற்குத்தான்.
அதுபோன்றே (பகைவரின்) நயவஞ்சகரின் குழைவதும் தீமைக்கு பேச்சும தீங்கு பயக்கும் என்பதால் அதனை விட்டு விட வேண்டும் என அறிவுத்துகிறார்(குறள். 827)
ஒரு சிலர் மனத்தளவில் ஒட்டிப் பழகமாட்டார்கள். வெளியில் அதிக அன்புள்ளவர்போல் இருப்பர். ஆனால், உள்ளத்தில் பகையும் வஞ்சகமும் நிறைந்திருக்கும். இவர்கள் உள்ளத்தால் கலக்காமல் உதட்டளவில் நண்பராய் இருப்பார். அவர்களின் இனிய பேச்சிலும் செயலிலும் ஏமாந்து மயங்கிடக்கூடாது என்கிறார். இவர்களின் செயலே ஆபத்து நிறைந்தது (குறள்.828). இப்பண்புள்ளவர்கள் நண்பர்களாக நெருங்கி வரும் காலத்தில், முகத்தளவில் நட்புச் செய்து, உள்ளத்தில் நட்புக் கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
'பகைநட்பாம் காலம் வருங்கால் முகம் நட்பு
அகநட்பு ஒரிஇ விடல்" (குறள். 830) என்ற குறட்பா இக்கருத்தையே வலியுறுத்துகின்றது.
8. முடிவுரை
வள்ளுவரின் நட்பைப் பற்றிய இக்கருத்துகள் மனித இனம் இருக்கம் வரை பயன்படக்கூடிய ஒன்றாகும். இயந்திரமயமாகிவிட்ட இன்றைய மனித வாழ்ப்பையில், வஞ்சகரிடமிருந்து விலகி, வாழ்வின் தொல்லைகளிலிருந்து விடுபட்டு, நல்லவரோடு பழகி நட்ப கொள்ள இக்கருத்துகள் பெரிதும் பயன்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எக்காலத்திற்கும் ஏற்புடைய இக்கருத்துகளை மனத்தில் கொண்டு, நட்பைச் சிறப்பித்து நட்போடு வாழ முற்படும் ஒவ்வொருவரின் வாழ்விலும் நட்பு சிறந்தோர் இடத்தைப் பெரும் என்று திண்ணமாகக் கூறலாம்.
துணைநூல்
பரிமேலழகர், திருக்குறள் தெளிவுரை.
வரதராசனார். மு. திருவள்ளுவர் அல்லது வாழக்கை விளக்கம், பாரி நிலையம், சென்னை, ஏழாம் பதிப்பு.
1971., திருக்குறள் தெளிவுரை, சை. சை. நூ. கழகம், சென்னை, மறுபதிப்பு. மாணிக்கம், சு.பு., வள்ளுவம்.
மோகனராசு,மு., திருவள்ளுவரின் குறிக்கோளியலும் உலகப் பொதுமையியலும், சென்னைப் பல்கலைக்கழகம்.
கந்தசாமி, சோ. நா., 1977, திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்கள், மாணிக்கவாசகர் நூலகம், சென்னை.
சொக்கலிங்கம், சு.ரு., 1973.குறள ; கூறும ; வாழ்கi; க நெறி, கழக வெளியடுP .
ஐகந்நாதன், கி.வா., 2004. திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு, இரண்டம் பதிப்பு.
பரந்தாமனார்,அ.கி., 1994. திருக்குறளும் புதுமைக் கருத்துகளும், சக்தி ப்ராசஸ், நான்காம் பதிப்பு.
சரளா இராசகோபாலன், 1992. வள்ளுவர் வழிச் சிந்தனைகள், ஒளிப் பதிப்பகம், சென்னை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard