புதிய ஏற்பாட்டை இயற்றிய கதாசிரியர்களுள் முதலில் வரைந்த பவுல் கடிதங்களில்
ரோமர் 1: 3 இயேசு கிறிஸ்து மனிதனாக தாவீதின் குடும்பத்தில் பிறந்தார். |
கலாத்தியர் 4: 4 காலம் நிறைவேறியபோது ..5 தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். |
1 கொரிந்தியர் 1:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார் பற்றி போதிக்கிறோம். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். |
இயேசு ரோமன் மரண தண்டனையில் இறந்தது பொஆ 30ல் எனவும், இந்தக் கடிதங்கள் பவுலால் 55-62 இடையே வரையப்பட்டவை எனவும் கூறப்படுகிறது.
1தெசலோனிக்கர் 1:10- நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். ... |
பவுல் உலக முடிவு நாள் - கர்த்தரின் நாள் - கணக்கெடுப்பு நாளில் பவுலும் அவர் கடிதம் படிப்போரும் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் என்கிறார்
1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன். நாம் யாவரும் பூமியில் சாகமாட்டோம், ஆனால் நாம் அனைவரும் மாற்றுரு பெறுவோம். 52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம். |
ஆனால் இப்போது வாழ்வோரில் சிலர் இறந்தால் அவர்கள் தான் முதலில் எழுப்பப் படுவர்
1தெசலோனிக்கர் 4: 13 இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்: எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது.14 இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.15 ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம் |
பிலிப்பியர் 1: .5 ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.6 உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன் |
2 தெசலோனிக்கேயர் 2:2 கர்த்தர் வரும் நாள் ஏற்கெனவே வந்து போய்விட்டதென கேள்விப்பட்டால், மனக் கலக்கமோ, பயமோ அடைந்து விடாதீர்கள்.