இறந்த இயேசுவை யூத புராண ராஜா தாவீது பரம்பரையில் உலக அழிவிற்கு முன்பான கடைசி சந்ததியில் வரவேண்டிய ராஜா என குறிக்கும் வகையில் பவுலும் அவர் இயேசு தாவீதின் விந்தணு பரம்பரையில் பிறந்தார் எனக் குறித்துள்ளார். மாற்கு சுவி கதையில் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற யூதேயா வந்த இயேசு உடனே கலிலேயா திரும்பி தன் இயக்கம் தொடங்கி நடத்தினார். அடுத்து வந்த பஸ்கா பண்டிகைக்காக ஜெருசலேம் நுழைவை ஒரு பெரிய தலைவனாக உள்ளே வந்தார் என மாற்கு கதை அமைந்து உள்ளது
 அரசனைப் போல ஜெருசலேமுக்குள் இயேசு நுழைதல் -                                                          

| மாற்கு 11:1 இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை அடைந்தனர். .. 2 இயேசு, “நீங்கள் பார்க்கிற எதிரேயுள்ள ஊருக்குள் செல்லுங்கள். உள்ளே நுழைந்ததும் ஓர் இளம் கழுதை கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவரை எவராலும் சவாரி செய்யப்படாத கழுதை அது. அதை அவிழ்த்து இங்கே கொண்டு வாருங்கள். .... 7 சீஷர்கள் கழுதையை இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவரது சீஷர்கள் தம் மேலாடைகளை கழுதையின் மேல் விரித்தனர். இயேசு அதன் மேல் உட்கார்ந்தார். | 
மத்தேயு சுவி இதே ஜெருசலேம் நுழைதல் கதை சொல்லும் பொழுது - சகரியாவின் தீர்க்கதரிசனத்தை தவறாக புரிந்து கொண்டு ஒரே நேரத்தில் தாய் கழுதையின் மேலும் குட்டி கோவேரி கழுதையில் மீதும் அமர்ந்து வந்தாராம். எபிரேய மொழி புரியாமல் மத்தேயு கதாசிரியர் தீர்க்கம் நிறைவேறியதாக கதை செய்தமை நடைமுறையில் உளறலாக அமைந்தது.
| மத்தேயு 21:1 இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். .. 2 சீஷர்களிடம் இயேசு,, “அங்கே தெரியும் நகருக்குள் செல்லுங்கள். நீங்கள் நகருக்குள் நுழையும்பொழுது கழுதை ஒன்றை கட்டிப் போடப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதனுடன் அதன் குட்டியையும் காண்பீர்கள். அவை இரண்டையும் அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். 3 யாரேனும் உங்களை ஏன் கழுதைகளை கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டால், அவர்களிடம், ‘இக்கழுதைகள் ஆண்டவருக்குத் தேவையாக இருக்கின்றன. விரைவில் இவைகளைத் திருப்பி அனுப்புவார்’ எனச் சொல்லுங்கள்” என்றார். 4 தீர்க்கதரிசி கீழ்க்கண்டவாறு சொன்னதின் முழுப்பொருளும் விளங்கும்படி இது நடந்தேறியது. 5.இப்பொழுது உங்கள் மன்னவன் உங்களிடம் வருகிறார். பணிவானவர் அவர் கழுதையின் மேல் வருகிறார். ஆம் அவர் கழுதைக் குட்டியின் மேல் வருகிறார்’” 6 இயேசு சொன்னபடியே அவரது சீஷர்கள் செய்தார்கள். 7 அவர்கள் கழுதையையும் அதன் குட்டியையும் இயேசுவிடம் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலாடைகளைப் போட்டார்கள். 8 இயேசு அவற்றின் மேல் அமர்ந்து எருசலேம் நகர் செல்லும் பாதையில் பயணமானார். | 
தாவீது குமாரனே -ஓசன்னா-ரோமன் ஆட்சியிலிருந்து காப்பாற்றுங்கள்
| மாற்கு 11:9முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், “ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! 10. வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தனர். | 
 
			








