New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்லியல் அடிப்படையில் சங்க காலம்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
தொல்லியல் அடிப்படையில் சங்க காலம்
Permalink  
 


 தொல்லியல் அடிப்படையில் சங்க காலம் --    தேவப்ரியா (avgkrishnan@gmail.com)

தமிழகத்தில் பண்டைய இலக்கியங்கள் பற்றி தொன்மக் கதைகள் கொண்டு சங்க இலக்கியம் - திருக்குறள் இயற்றப்பட்ட காலங்கள் ஒரு சிறு குழுவினரால் பரப்பப் படுவது தொடர்கிறது. சங்க இலக்கியத்தில் 200க்கும் மேற்பட்ட அரசர்/தலைவர் பற்றிய பாடல்கள் உள்ளது.  அம்மன்னர்கள் வெளியிட்ட கல்வெட்டு, காசுகள் மட்டுமே  வரலாற்று ரீதியில் காலம் குறிப்பதை பன்னாட்டு ஆய்வுலகம் ஏற்கும்

_2559_20200916_1232138400%20(1).jpg
அமெரிக்கா கலிபோர்னியா பல்கலைக் கழக தமிழ் பேராசிரியர் தம் நூலில் புகழூர் கல்வெட்டு பற்றி 1968 2ம் உலகத் தமிழ் மாநாட்டில் கட்டுரை வாசிக்கப் பட்டதைக் சுட்டி உள்ளார். 
328915325_896906401451303_21663113180241
தஞ்சாவூர் பல்கலைக் கழக துணை வேந்தரும் புகழூர் வேலாயுதம் பாளையத்தில் உள்ள ஆறுநாட்டு மலை கல்வெட்டின் முக்கியத்துவத்தை "சங்க கால அரச வரலாறு" அணிந்துரையில் கூறி உள்ளார்
 
328769768_999442374350845_25589055461061 
அமெரிக்கா கலிபோர்னியா பல்கலைக் கழக தமிழ் பேராசிரியர் தம் நூலில் புகழூர் கல்வெட்டு பற்றி 1968 2ம் உலகத் தமிழ் மாநாட்டில் கட்டுரை வாசிக்கப் பட்டதைக் சுட்டி உள்ளார்.

 

Pugalur.jpg

1968 2ம் உலகத் தமிழ் மாநாட்டில் கல்வெட்டு எழுத்துரு பேரறிஞர். ஐராவதம் மகாதேவன் கட்டுரை காண்போம். அவர் புகழூர் கல்வெட்டை பொஆ. 200ஐ ஒட்டி குறித்து உள்ளார். அதில் 3 சேர மன்னர்கள் பெயர் உள்ளதையும் அவர்கள் குறிப்பிடும் மன்னர்களை அடையாளம் கண்டு உரைத்தார். 

மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்

கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்

கடுங்கோன் மகன் ளங்

கடுங்கோன் ளங்கோ ஆக அறுத்த கல்

செய்தி : யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்னும் துறவிக்குச் சேரமன்னர் செல்லிரும்பொறை மகனான பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ இளவரசர் ஆவதை முன்னிட்டு வழங்கப்பட்ட கொடை.

இதிலுள்ள அரசர்கள் பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்திற்கு உரிய தலைவர்களாக தமிழ் அறிஞர்களிடம் கருத்து ஒற்றுமை ஏற்பட்டு உள்ளது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

பழைய இலக்கியங்களும் மொழியியலும்

பண்டைய இலக்கியங்களை மொழியியல் ஆய்வின் அடிப்படையில் காலம் குறிப்பது  பன்னாட்டு பல்கலைக் கழக ஆராய்ச்சி மரபு. அந்த முடிபுகளை ஆதரங்களோடு பொறுத்தி பார்க்கும் போது தெளிவான வரலாற்று காலம் குறிப்பர்.

தஞ்சாவூர் பல்கலைக் கழக தமிழ் பேராசிரியர் ச.அகத்தியலிங்கம் தொகுத்த 5 நூல் அடங்கிய சங்கத் தமிழ்: 1 - 5 என்ற தொகுப்பு. இந்நூல்களை உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. தமிழின் மிகத் தொன்மையான இலக்கியங்கள் என  பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை என 21 நூல்களை ஆய்ய்விற்கு எடுத்தனர். இந்த 21 நூல்களில் உள்ள அனைத்து சொற்களையும் தொகுத்து, மாற்றம் அடிப்படையில் ஆராய்ச்சி செய்த முடிவுகள் தொகுப்பு ஆகும்

images%20(6).jpg

பழந்தமிழ் 21 நூல்களில் உள்ள அனைத்து சொற்களை எல்லாம் தொகுத்து  தமிழ் மொழியியல் ஆய்வு முடிவு கூறுவதே இந்த நூல் தொகுப்பு.  சொற்களில் இலக்கண மாற்றம், முன் ஒட்டு- பின் ஒட்டு மாற்றம்; பழைய கூறுகள் குறைதல், புதிய கூறுகள் நுழைவந்து அதிகரித்தல் என  இலக்கண கூறுகள், புது சொற்கள் வருதல் என அனைத்தையும் மிகவும் நுணுக்கமாகத் தந்து புள்ளியியல் அடிப்படையில்  உள்ள தொகுப்பு ஆகும்

 

பாட்டுத்தொகை நூல்களில் பரிபாடல், கலித்தொகை மற்றும்  திருமுருகாற்றுப்படை பிற்காலத்தவை என தெளிவாக உறுதி ஆகிறது.  கலித்தொகையில் காணும் மொழி நிலை மேலும் சில மாற்றம் கொண்டு பிறகு எழுந்த நூல் திருக்குறள்.  திருக்குறளில் உள்ளதைக் காட்டிலும் மேலும் பல மாற்றம் கொண்டு  சிலப்பதிகாரம் அதற்குப் பிறகு  மணிமேகலை என மொழியியல் ஆதாரம் அடிப்படை உறுதி செய்துள்ளது. 

327149096_1183472355890133_3652523211120

சங்க இலக்கியம் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை என்பதில் பத்துப் பாட்டு பாடல்களில்  பாடப்பட்ட அரசர்கள்  சேரன் செங்குட்டுவன்  காலத்திற்கு பிறகு வாழ்ந்த தலைவர்களைப் பாடியது என சங்கத் தமிழ் - 1 கூறுகிறது. சிறுபாணாற்றுப் படை மூவேந்தர் மறைவிற்குப் பின் வாழ்ந்த சிற்றரசன் நல்லியக் கோடன் மேல் பாடப்பட்டது.

சேரன் செங்குட்டுவன் காலம் குறித்தால் சங்க இலக்கியத்தின் காலத்தை வரலாற்று ஆய்வுநெறிப்படி குறிக்க இயலும் என்பது உறுதி ஆகும்.

327149096_1183472355890133_3652521112095

 உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட  "சங்க கால மன்னர்கள் காலநிலை வரலாறு" நூல் திரு. வி.பி.புருஷோத்தமன் & பத்மஜா ரமேஷ் நூல் - சங்க இலக்கியங்களை முழுமையாக ஆராய்ந்து மன்னர்களை கால வரிசைப் படுத்து உள்ளது. மூவேந்தர்கள் சம காலத்தில் வாழ்ந்தவர் வரிசை எனவும் தொக்குது உள்ளது. இந்த நூலின்படியாக சேரன்  செங்குட்டுவன் காலத்திற்கு பிறகு 11 தலைமுறை ஆட்சி செய்தனர் எனக் காட்டுகிறது. ஔவை.துரைசாமிப்பிள்ளை அவர்கள் "சேர மன்னர்கள் வரலாறு"  நூலும் இதை உறுதி செய்கிறது 

சங்க இலக்கியத்தில் பத்துப் பாட்டு பாடல்கள் எல்லாம் சேரன் செங்குட்டுவன் - பதிற்றுப் பத்து 5ம் பத்திற்குப் பின் வாழ்ந்த தலைவர்களைப் பாடியது என சங்கத் தமிழ் - 1 கூறுகிறதுசிறுபாணாற்றுப் படை மூவேந்தர் மறைவிற்குப் பின் வாழ்ந்த சிற்றரசன் நல்லியக் கோடன் மேல் பாடப்பட்டது.

நாம் சேரன் செங்குட்டுவன் காலம் குறித்தால் சங்க இலக்கியத்தின் காலத்தை ஆய்வு நெறிப்படி குறிக்க இயலும் என்பது தெளிவாகும். புகழூர்  ஆறுநாட்டார் மலை தமிழ் பிராமி கல்வெட்டு கூறும் சேர மன்னர் காலம் அடிப்படையில் செங்குட்டுவன் காலம் என்பது பா 188 - 243 என அறிஞர்கள் குறித்து உள்ளனர்.

images%20(6).jpg
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட  "சங்க கால மன்னர்கள் காலநிலை வரலாறு" நூல் திரு. வி.பி.புருஷோத்தமன் & பத்மஜா ரமேஷ் நூல் - சங்க இலக்கியங்களை முழுமையாக ஆராய்ந்து மன்னர்களை கால வரிசைப் படுத்து உள்ளது. மூவேந்தர்கள் சம காலத்தில் வாழ்ந்தவர் வரிசை எனவும் தொக்குது உள்ளது. இந்த நூலின்படியாக சேரன்  செங்குட்டுவன் காலத்திற்கு பிறகு 11 தலைமுறை ஆட்சி செய்தனர் எனக் காட்டுகிறது.images%20(6).jpg ஔவை.துரைசாமிப்பிள்ளை அவர்கள் "சேர மன்னர்கள் வரலாறு"  நூலும் இதை உறுதி செய்கிறது 
சங்க கால சேர மன்னர்கள் வெளியிட்ட காசுகள்
கரூர் (வஞ்சி) தலைநகராகக் கொண்ட சேர மன்னர்கள் வெளியிட்ட சேர மன்னர் பெயர் தமிழ் பிராமியில் கொண்ட காசுகள்
1. இருப்பொறை.    - புகழூர் கல்வெட்டு எழுத்து அமைதி
2. இரும்பொறை   -   அதே
3. மாக்கோதை  பொஆ 3ம் நூற்றாண்டு
4. குட்டுவன் கோதை   பொஆ 4ம் நூற்றாண்டு  
  
images%20(6).jpg
 சேரர் காசுகள் பற்றி திரு.கிருஷ்ணமூர்ந்த்தி கட்டுரையும், டாக்டர். நாகசாமியின் ரோமன்(Roman Karur) கரூர் நூலும் ஆய்வு முடிபுகளைத் தருகின்றன.
செங்குட்டுவன் பிறகு ஆட்சி செய்த சேர அரசர்கள் (11 தலைமுறை) வெளியிட்டவையே நமக்கு கிடைத்துள்ள சேரர் காசுகள்
 
வரலாற்று அடிப்படையில் ஒரு தலைமுறை என்பது சராசரியாக 25 ஆண்டுகள் என்ற அடிப்படையில் கொண்டால் செங்குட்டுவன் காலத்திற்குப் பிறகு 11 தலைமுறை எனில் பொஆ. 5 நூற்றாண்டு இறுதி வரை ஆண்டனர் என்பது உறுதி ஆகும். 
சங்க இலக்கியம் தொகுத்த காலம்
பேராசிரியர் அகத்தியலிங்கம் ஆய்வுகள்படி சங்க இலக்கியங்களில் முன் தமிழ் நூல்களில் பதிற்றுப் பத்து முதலில் தொகுக்கப் பட்டது எனவும், கடைசியாக புறநானூறு, புறம் பொஆ 6ம் நூற்றாண்டு இறுதி அல்லது சற்று பின்னர் இருக்கலாம் என்பது நல்லியக் கோடன் பற்றிய பாடல்க்ள் புறநானூறில் உள்ளது உறுதி செய்யும். பரிபாடல், கலித்தொகை இதற்குப் பிற்காலம். முன்பழந்தமிழ் நூல்களில் உள்ள கடவுள் வாழ்ந்த்துப் பாடல்கள் இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்- பொஆ 9ம் நூற்றாண்டு இறுதி அல்லது பிறகோ வாழ்ந்தவர். கடவுள் வாழ்த்து சேர்த்து இன்றைய வடிவை இதன் பின்னரே பெற்றது.  
327149096_1183472355890133_3652521112095
பேராசிரியர் கமில் சுவெலபில் (சிகாகோ மற்றும் நெதர்லாந்து யூட்ரிச் தமிழ் துறை)தன் நூலில் மிகத் தெளிவாக - பிற சங்க இலக்கியங்களில் இருந்து 2- 3 நூற்றாண்டு பிந்தைய நெகிழ்ச்சி கொண்டது எனக் கூறி உள்ளார்.
328775560_2997357503899430_6080812334564 
. பரிபாடல் 11ம் பாடலில் உள்ள வானியல் குறிப்புகள் பொஆ. 634 ஜூன் என பஞ்சாங்க பேரறிஞர். எல்.டி.சாமிக்கண்ணுபிள்ளை குறித்தார். 
images%20(6).jpg 
மொழியியல் அடிப்படையில் பரிபாடல் பற்றி தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக பேராசிரியர் வி.சி..குகநாதன் வலைக் கட்டுரை பகுதி
 images%20(6).jpg
கீழடி, கொடுமணல் அகழாய்வுகளும் சங்க கால மன்னர்களும் 
தமிழக அகழாய்வு தளங்களில் இன்றளவில் நமக்கு ஒரு முழுமையான வீடு, தெருவோ கிடைக்கவில்லை. மக்கள் பல காலம் முன்பு வாழ்ந்து வருவதை உறுதி செய்தாலும், பெரும் மக்கள் கூட்டமாக வாழ்ந்து அரசாட்சி அமைப்பு கொண்டமைக்கு ஆதாரம் ஏதும் கிடைக்கவ்ல்லை. 
 
FB Discussion
_2559_20200916_1232138400%20(1).jpg
 
எனவே கொடுமணல், கீழடி பகுதிகளிற்கும் சங்க இலக்கியத்திற்கும் தொடர்பு ஏதும் இல்லை.
 பரிபாடல் & கலித்தொகை இரண்டிலும் மிகையாக புராண மற்றும் அறம் பற்றிய தத்துவக் கருத்துகள் நிறைந்து உள்ளன. கலித்தொகை தமிழகத்தின் அரசர்கள் பயன்படுத்திய நீதிநூல்கள் பற்றிய குறிப்பு   இரு அந்தணர்கள் வியாழன் மற்றும் வெள்ளி ஆகியோர் இயற்றிய பிரஹஸ்பதி சூத்திரம் & சுக்ரநீதியின்படி தமிழ் அரசர் ஆண்டதாக கலித்தொகை-99 பாடல் கூறுகிறது.
கலித்தொகை 99 – மருதக் கலி திணை – மருதம்
மருதன் இளநாகனார், மருதம், மன்னனிடம் அவன் மனைவியின் தோழி சொன்னது
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும், அவை எடுத்து,
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,
குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்  5
O king with a sturdy chariot with flags
and many jingling bells, decorations and
elephants, who is righteous like the unfailing
rains that fall on earth nurturing its citizens
like a mother who feeds and cares for her child,
and like the two Brahmins who do not stray
from righteousness providing joy to both groups,
the celestials who do not drink liquor and the
Asurars who drink it!
பிரஹஸ்பதி சூத்திரம் - காலம் 8ம் நூற்றாண்டை ஒட்டியே வரும் என்கையில் கலித்தொகை காலம் நமக்கும் தெளிவாகும்
சங்க நூல்கள் கூறும் அரசர்கள் ஆண்ட காலம் என்பது பொமு.50 முதல் பொஆ 600 வரை வரும்; பரிபாடல், கலித்தொகை, திருமுருகாற்றுப்படை தவிர்த்த நூல்கள், பொஆ 600 முந்தயவை, இம்மூன்று நூல்கள் 7௮ம் நூற்றாண்டு என ஆதாரங்கள் உறுதி செய்கின்றன, திருக்குறள் கலித்தொகைக்குப் பிறகு என்பதும் தெளிவாகும்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard