பூமியில் வாழும் மக்களுக்கு ஏதேனும் தனசம்பத்து,மனை சம்பத்து,மக்கட் சம்பத்து,உத்தியோக சம்பத்திருப்பினும் மழை ஒன்றில்லாமற் போமாயின் சகல சம்பத்தும் அழிந்து மக்களும் நசிந்து போவார்களென்பதே திண்ணம். அத்தகைய மழையகாலந் தவராது பெய்வதற்கு ஆதாரம் என்னவெனிலோ பஞ்ச சீலத்தில் நிலைத்து சருவ சீவர்களையுந் தன்னுயிர்போல் காத்து, அஷ்டசீல சாதனம் புரிந்து, தபோபலம் பெற்ற மகா ஞானிகளின் தோற்றத்திற்கு ஆதாரமோவென்னில் சாம,தான,பேத,தண்டமென்னும் சதுர்வித உபாயமும் சகல மக்களையும் ஒரு குடை நிழலில் காக்கும் வல்லபமும்,பொய்யர்களை அடக்கி மெய்யர்களை சீர்தூக்கலும் பொல்லார்களை தண்டித்து நல்லோர்களாக்குதலும்,அஞ்ஞான மகற்றி மெஞ்ஞானம் பெருகும் வழிவகைகளைத் தேடலும் நீதிநெறி ஒழுங்கங்களை நிலைநிருத்தச் செய்தல்கூடிய அரசரே என்னப்படும். அரசருக்காதாராமோவென்னில் வித்தையில் விருத்தியுள்ள குடிகளும் புத்தியில் விருத்தியுள்ளக் குடிகளும் சன்மார்க்கமுள்ளக் குடிகளும் இராஜவிசுவாசமும் உள்ளக் குடிகளே என்னப்படும்.
இத்தகைய சத்தியதன்மமானது இந்திய தேசமெங்கும் நிறைந்திருந்த காலத்தில் மாதம் மும்மாரி பெய்யவும் பயிறுகள் ஓங்கவும் குடிகள் சிறக்கவும் கோனுயரவுமாயிருந்தவற்றிற்கு பூர்வ பௌத்த சரித்திரங்களும் பௌத்த மடங்களுமே போதுஞ் சான்றாகும்.
தற்காலம் தோன்றியுள்ள பிரிட்டிஷ் ராஜாங்கமானது பௌத்ததன்ம அரசாட்சிக்கு மேலாகவே நின்று குடிகளை சீர்திருத்தும் வித்தை புத்திகளை யூட்டி தங்களைப் போல சகல குடிகளும் சுகம்பெற்று வாழவேண்டுமென்னுங் கருணையால் காத்து இரட்சித்தும் வருகின்றார்கள்……இவற்றிற்குக் காரணமோ வென்னில் குடிகளுக்கு கருணை என்பதும் அன்பு என்மதுமாயக் குணமே அற்றுள்ளபடியால் தவமிகுத்த ஞானிகளின் தோற்றமேயில்லாமல் போய் விட்டது. தபோபலமிகுந்த அரஹத்துக்களாம் அந்தணர்களில்லாமற் போய்விட்டபடியால் மழை குன்றி மாநிலந் தீய்ந்து வருகின்றதென்பது சத்தியம் சத்தியமேயாம்.
-அயோத்திதாசர்.
பௌத்ததன்ம ஆட்சியை விட பிரிட்டிஷ் ஆட்சி மேலானது என்று வியக்கும் அயோத்திதாசரின் பௌத்த அறிவை நாம் போற்றியே ஆகவேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியைப் போற்றிப் புகழ்ந்து பாடுவது பௌத்த அறிகுறியும் ஆகும். அயோத்திதாசரது அறிவு புளுகினால் விளைந்த புளுகறிவு.
பிரிட்டிஷ் ஆட்சி மீண்டு வந்தால் மாதம் மும்மாரிப்பொழியும் அயோத்திதாசரியர்கள் இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்வதோடு, இராஜவிசுவாசத்தோடு தபம் செய்து அந்தணர்களாகுங்கள். பூணூல் அணிந்து பௌத்தர்கள் கண்டுபிடித்த விபூதியை நெற்றிநிறையப் பூசி அயோத்திதாசருக்கு தாசரியம் செய்யுங்கோள். தாசரியமே பார்ப்பனியம்.