"முல்லை நில மாக்கள் யாவரும் மாதவனைக் கண்டு வணங்கி பாலைக் கொண்டு வந்து கொடுத்து அருந்தும்படி வேண்டிக் கொண்டார்கள்.
அப்பாலில் நெய்யுந் தயிருங் கலந்திருப்பதைக்கண்டு அதைப் பிரிக்கும் வகைத் தெரியாதவர்களாயிருக்கின்றார்கள் என்று அறிந்து அவர்களிடமுள்ளப் பால்கள் யாவையுங் கொண்டுவரச்செய்து ஒரேசாடியிலிட்டு மத்தினால் கடையும்படி செய்து அதன் மேல் மிதந்த வெண்ணெய்யை எடுத்து ஓர் பாத்திரத்தில் வைத்த போது, அஃதின்னவஸ்துவென்றும், இவ்வகை உபயோகத்திற்கு உதவுமென்றும் அறியாமல் திகைத்து நின்றார்கள்....
அதனை உணர்ந்த பகவான் வெண்ணெய்யை வாயிலிட்டுப் புசித்துக் காட்டியதுமன்றி பாலைக் காய்த்து தயிறாக்கி வெண்ணெயெடுத்து நெய்யுறுக்கும் வகைகளையும் விளக்கி...(னார்)."
- அயோத்திதாசர்.
புத்தரை ஒரு கடைந்தெடுத்த கோமாளியைப் போல் சித்தரிப்பதில் புளுகுணிதாசருக்கு இருக்கும் ஆர்வமே தனி. இப்படி தயிர் நெய்யை எல்லாம் புத்தர் கண்டுபிடித்ததாகச் சொன்னால் புத்தரைக் கடவுளைப்போல் நினைப்பார்கள் என்ற புளுகுணிதாசரின் நினைப்பு அவரது சிறுபிள்ளைத்தனமான அறிவை நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.
தயிர், வெண்ணெய், நெய்யைக் கண்டுபிடித்ததும் போதாதென்று அதைத் தின்றும் காண்பித்ததாகச் சொல்லும்போதுதான் புளுகுணிதாசரின் மேல் மதிப்பு கூடுகிறது. சொல்ல வார்த்தைகள் இருந்தும் அதைச் சொல்ல முடியாமல் நாம் தவிக்க நேரிடுகிறது.
இதற்கெல்லாம் மேலாக புத்தரின் பேரைச் சொல்லி எதைச் சொன்னாலும் நம்புவார்கள் என்கிற அவரது பௌத்தமோன நிலை நம்மை வியப்பில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது.
பூர்வபௌத்தாய நமஹ
நமோ புத்தாய
புத்தாய புளுகே நமஹ
கேள்வி:
1.முல்லை நிலத்து மக்களை மாக்கள் என அயோத்திதாசர் அழைப்பது ஏன்?