New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவ மாலையில் புகழாரம்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
திருவள்ளுவ மாலையில் புகழாரம்
Permalink  
 


வள்ளுவர் கடவுள் எனல்[தொகு]

28 காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக்கண்ணனார் \ பிரமன் வள்ளுவனாக வந்து 133 அதிகாரம் தந்தான்.

4 உக்கிரப்பொருவழுதியார் \ நான்முகன் திருவள்ளுவனாக மாறித் தன் நான்மறையை முப்பொருளாய்ச் சொன்னான்.

21 நல்கூர்வேள்வியார் \ வடமதுரைக்கு அச்சு நப்பின்னையை மணந்த கண்ணன். தென்மதுரைக்கு அச்சு சிவபெருமான் போன்ற, ஆனால் தொண்டையில் மறு இல்லாத செந்நாப்போதார்.

வள்ளுவர் கடவுளின் மேலானவர் எனல்[தொகு]

6 பரணர் \ திருமால் தன் இரண்டு தப்படிகளால் மூவுலகப் பரப்பைதான் அளந்தான். திருவள்ளுவரோ தன் பாவடிகள் இரண்டால் உலகத்தார் உள்ளத்தையெல்லாம் அளந்தார். \ வேற்றுமை அணி \

14 பொன்முடியார் \ அன்று குறள் உருவம் (திர்ருமால்) காசிபன் (வாமணன்) என்னும் பெயரோடு உலகை அளந்ததாம். இன்று குறள் பாடல் உலகை அளக்கிறது.

39 உறையூர்முதுகூத்தனார் \ திருவள்ளுவர் தேவரினும் சிறந்தவர். நாவுக்கு நல்வாழ்வு திருக்குறள்.

8 மாமூலனார் \ வள்ளுவர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் சொன்ன தேவர். அவரை வள்ளுவன் குடியில் பிறந்தவன் என்பவன் ஒன்றும் அறியாத முட்டாள்.

53 ஆலங்குடிவங்கனார் \ அமுதம் சுவைத்தவர் தேவர் மட்டுமே. திருக்குறளை மக்களும் சுவைக்கின்றனர். எனவை திருக்குறள் அமிழ்தத்தினும் சிறந்தது.

திருக்குறள் வேதம் எனல்[தொகு]

32 பெருஞ்சித்திரனார் \ வேதம் தன்னைத் தானே திருக்குறளாகப் பிறப்பித்துக்கொண்டது.

43 வண்ணக்கஞ்சாத்தனார் \ ஆரியத்தில் வேதம் இருக்கிறது. தமிழில் திருக்குறள் இருக்கிறது. எனவே இரண்டும் சமம்.

15 கோதமனார் \ ஏட்டில் எழுதினால் நான்மறையின் ஆற்றல் போய்விடும் என்று எழுதாமல் விட்டுவிட்டனர். திருக்குறள் ஏட்டில் எழுதியபின் ஆற்றல் கூடுகிறது.

24 மாங்குடிமருதனார் \ வேதப்பொருளாக விளங்கும் திருக்குறள் ஓதுவதற்கு எளிது, உணர்வதற்கு அரிது, உள்ளுந்தோறும் உள்ளுந்தோறும் உள்ளம் உருக்கும்.

30 பாரதம்பாடியபெருந்தேவனார் \ பாரதமும், இராம கதையும் திருக்குறளுக்கு இணை ஆகா.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

இயற்கையோடு ஒப்பிட்டு மேன்மை கூறல்[தொகு]

52 மதுரைப்பாலாசிரியனார் \ வெள்ளி, வியாழம், ஞாயிறு, திங்கள் ஆகியவை புறவிருள் போக்கும். திருக்குறள் அகவிருள் போக்கும்.

46 அக்காரக்கனிநச்சுமனார் \ கலை நிரம்பல், இனிதாதல், நீர்மைத்து ஆதல் ஆகியவற்றால் திங்களும், திருக்குறளும் சமம் என்றாலும் திருக்குறளீன் நயம் திங்களுக்கு இல்லைவேற்றுமைஅணி

47 நப்பாலத்தனார் \ திருக்குறள் அக இருள் நீக்கும் விளக்கு. அறம் - அகல். பொருள் - திரி. இன்பம் - நெய். செஞ்சொல் - தீ. குறட்பா - விளக்குத் தண்டுஉருவகஅணி

48 குலபதிநாயனார் \ ஞாயிறு கமலம் மலர்த்தும். திருக்குறள் உள்ளக் கமலம் மலர்த்தும். ஞாயிறு புறத்திருள் போக்கும். திருக்குறள் அகத்திருள் போக்கும். இரண்டும் ஒப்பு எனினும் திருக்குறள் உயர்ந்ததுவேற்றுமைஅணி

7 நக்கீரர் \ திருக்குறள் மழைக்கு நம்மால் கைம்மாறு செய்யமுடியாது.

பொதுநூல் எனல்[தொகு]

9 கல்லாடனார் \ ஆறு சமயத்தவரும் ஏற்கும்படி வாழ உதவும் பொருளை வகுத்துத் தந்தவர் வள்ளிவர்.

23 வெள்ளிவீதியார் \ செய்யாமொழி எனப்படும் வேதத்துக்கு உரியவர் அந்தணர் மட்டுமே. பொய்யாமொழி எனப்படும் திருக்குறளைச் சொல்வதற்கு உரியவர் எல்லா மக்களும்.

திருக்குறள் மருந்து எனல்[தொகு]

11 மருத்துவன்தாமோதரனார் \ :சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவரு பெயரைச் சீ ஒழுகும் தலையை உடைய சாத்தனார் என்று கொண்டு, புண்ணால் உண்டாகிய தலைவலி திருவள்ளுவரின் திருக்குறளைக் கேட்டதும் தீர்ந்துவிட்டது என்கிறார் இந்தப் புலவர்.

35 மதுரைஅறுவைவாணிகன்இளவேட்டனார் \ இவர் திருக்குறளை 'வாயுறை வாழ்த்து' என்கிறார். இன்பம் எய்தவும், தின்பம் போக்கவும் உதவும் மருந்து இது

51 கவுணியனார் \ இருவினை தீர்க்கும் மாமருந்து.

திருக்குறள் இலக்கணச் செப்பம்[தொகு]

45 நச்சுமனார் \ எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, வனப்பு, அணி, வண்ணம் அமைய வழு இல்லாமல் திருக்குறள் அமைந்திள்ளது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 திருக்குறளில் எல்லாம் உண்டு எனல்[தொகு]

 

42 செயலூர்க்கொடுஞ்செங்கண்ணனார் \ உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் திருக்குறளில் உண்டு.

29 மதுரைத்தமிழ்நாகனார் \ எல்லாப் பொருளும் இதன்பால் உளஇதில் இல்லாத எப்பொருளும் இல்லையால்.

33 நரிவெரூஉத்தலையார் \ இன்பம்பொருள்அறம்வீடு வள்ளுவர் சொன்னார்.

40 இழிகட்பெருங்கண்ணனார் \ இம்மைமறுமைஎழுமை அனைத்தும் மும்மையில் (முப்பாலில்சொன்னார்.

தனிச் சிறப்புகள்[தொகு]

13 அரிசில்கிழார் \ வள்ளுவர் பொருள் விரியும் சுருங்கிய சொல்லை வைத்துப் பாடியுள்ளார்.

17 முகையலூர்ச்சிறுகருந்தும்பியார் \ உள்ளுதல்உள்ளி உரைத்தல்உரைத்தவற்றைத் தெள்ளி எடுத்தல் என்கிற முறையில் திருவள்ளுவர் தம் பாடல்களை உருவாக்கியுள்ளார்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 அணிநலத்துடன் பாராட்டு[தொகு]

கபிலர் \ பனித்துளி பனைமரத்தைக் காட்டுவது போல்த் திருக்குறளில் பொருள் செறிந்துள்ளது.

10 சீத்தலைச்சாத்தனார் \ 3 வேந்தர், 3 மலை, 3 நாடு, 3 ந்தி, 3 பது, 3 முரசு, 3 தமிழ், 3 கொடி, 3 மா, - போல 3 பால் கொண்ட நூல் முப்பால் மூவேந்தர்களும் தலையில் சூடிக்கொள்ளும் மணிமுடியாகும். | விரிவு காண்கமூவேந்தர்களின் தனியுடைமை

12 நாகன்தேவனார் \ நன்னீர்ப் பொய்கையில் நீராடுவோர் பருகும் நீருக்காக வேறு குறத்துக்குச் செல்லார்அதுபோல வள்ளுவரின் முப்பால் படிப்படிப்பவர் வேறு நூல் தேடி அலைய வேண்டுவதில்லை.

18 ஆசிரியர்நல்லந்துவனார் \ மக்களின் கலையையும்வேதப் பொருளையும் இணைத்துப் பாடியுள்ளார்.

19 கீரந்தையார் \ திருக்குறளின் முதல் பாடலிலேயே மூன்று பால்களில் சொல்லப்பட்ட செய்திகளும்நாற்பொருள் செய்திகளும் அடக்கம்.

31 உருத்திரசன்மகண்ணர் \ கடல் மணல் தோண்டத் தோண்ட நீர் ஊறும்குழந்தை சுவைக்கச் சுவைக்கத் தாய்க்குப் பால் ஊறும்திருக்குறள் ஆய ஆய அறிவு ஊறும்.

34 மதுரைத்தமிழாசிரியர்செங்கஃன்றார்கிழார் \ வள்ளுவர் புலவர்அவர் காலைப்பொழுதுமற்றவர்களும் புலவர்அவர்கள் மாலைப் பொழுது.

36 கவிசாகரப்பெருந்தேவனார் \ சிறந்தது எதுபூக்களில் தாமரைபொன்னில் சாம்புந்தம்ஆவில் காமதேனுயானைகளில் ஐராவதம்பாவில் வள்ளுவர் வெண்பா.

38 காவூர்கிழார் \ முன்னையோர் முதுமொழி திருக்குறளுக்கு ஈடாகாது.

41 செயிர்க்காவிரியார்மகனார்சாத்தனார் \ செய்கசெய்யற்க என்று வள்ளுவர் கூறுவனவே மேலானவை.

44 களத்தூர்கிழார் \ வள்ளுவர் ஒருவர்குறள் 2 அடிசொன்னது 3 பால்அளித்தது 4 பொருள்அடக்கம் 5 வேதம். 6 சமையம்.

49 தேனீக்குடிக்கீரனார் \ திருக்குறளால் மக்கள் மனத்தில் பொய் போயிற்றுமெய் நிலவிற்று.

50 கொடிஞாழல்மாணிபூதனார் \ அறம் பொருள் இன்பம் வீடு பற்றி இதுவரையில் கேளாதனவற்றை யெல்லாம் திருக்குறளில் கேட்டறிந்தோம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard