New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியத்தின் காலம்


Guru

Status: Offline
Posts: 24614
Date:
சங்க இலக்கியத்தின் காலம்
Permalink  
 


சங்க காலம் தொல்லியல் அடிப்படையில்- மற்றும் சங்கப் பாடல்களின் கதைகளும்

 

 

 

சங்க கால சேரமன்னர் சமண முனிவருக்கு பாறைக் குகை வெட்டிக் கொடுத்த பொஆ. 2ம் நூற்றாண்டு புகலூர் கல்வெட்டுkizsdas.png

Senguttovan%2001.jpg   சங்க கால சேர மன்னர்கள் வெளியிட்ட காசுகள்  

Chera%20Coins.png 
sdasfssds.png
sdasfds.png

கல்வெட்டு காசுகளீல் உள்ள சங்க கால சேர மன்னர்கள் 

sdasfd.pngx%20KaL%20a1s0a.jpg

 ங்க கால சேர மன்னர்கள் பதிற்றுப்பத்து 5ம் பத்து மற்றும் சிலப்பதிகாரக் கதையில் கண்ணகிக்கு கோவில் எழுப்பிய சேரன் செங்குட்டுவன் காலம் பொஆ. 188 -244 என வரலாற்று அறிஞர்களிடம் கருத்து ஒற்றுமை வருகிறது

x%20KaL%201s0a.jpg

நாம் வரலாறு தேடுகையில் இரண்டு பழைய கல்வெட்டுகளை மற்றும் ராமாயண, & சங்கப் பாடல் கதைகளை பலர் சுட்டுவதைக் காணலாம்

1. அசோகர் குஜராத் கிர்னார் கல்வெட்டு, 

2. ஒடிஸ்ஸாவின் கலிங்க அரசன் காரவேலன் கல்வெட்டு

3. அகநானூறு மற்றும் பல பாடல் பாடிய மாமூலனார்- நந்தர், மௌரியர் பற்றிய குறிப்புகள்

4. வால்மிகி இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் வானர அரசன் சுக்ரீவன் ஹனுமாருக்கு தேடும் வழி கூறுகையில் பாண்டிய, சேர, சோழர்கள் பற்றி கூறினார்  gajavahtsu.png

அசோகர் தமிழகம் வரவே இல்லை, மைசூர் வரை வந்தவர் அங்கு சொன்னபடி பக்கத்தில் இருந்த அரசர் நாட்டிற்கு ஆரிய பௌத்தம் பரப்ப தூதர் அனுப்பியதைக் குறித்துள்ளார். இதில் உள்ள சோடா, பாடா சோழரையும் பாண்டியரையும் குறிக்கிறது என்றும், ஸதியபுதோ, கேதளபுதோ என்பது அதியமான், சேரர் என்பது அறிஞர் கருத்து

320617835_1547041772480358_2394522776643 

கலிங்க அரசன் காரவேலன் கல்வெட்டு அவன் பக்கத்து நாடு தாமிரலிப்தியைத் தான் குறிக்கும் என்பது தற்போது கருத்து ஒற்றுமை உள்ளது

320212242_565397355615389_34019042485753 321183916_1259661371297439_2484186563042IMG_20221230_194833.jpg IMG_20221230_194927.jpg
Hatigumfa.jpg320888631_676617963945407_21833277684001

கடந்த 50 ஆண்டுகளாய் வரலாறு என பெரிதும் பரப்பபட்ட செவி வழிச் செய்திகள் அடிப்படையில் கதை எழுதியவை சாலமோன் ராஜா தமிழகத் தொடர்பு மற்றும் தோமா இந்தியா கேரளா கொடுங்கல்லூர் வந்து இறங்கிய கதைகள் 
gjavahtsu.png
இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் கூறுவது, பைபிள்படியாக யூதேயா, இஸ்ரேல் என்பவை நாடுகளாகவே இல்லை, சிறு மக்கள் கூட்டம் மட்டுமே என்கிறார், சாலமன் ஜெருசலேமில் ஆலயம் கட்டவே இல்லை
இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் நூல் "The Bible Unearthed:   பக்கம் 2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
பைபிள் தொன்மத்திலுள்ள பெருங் கதைகள் பாபிலோனில் வாழ்ந்த ஆபிரகாமை இஸ்ரேலிற்க்கான தெய்வம் யகோவா தேர்ந்தெடுத்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்த கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அடிமைத் தளத்திலிருந்து் மீட்டு வந்த கதை, அதன் பின் பெரும் அரசு ஆட்சிகளாய் யூதேயா - இஸ்ரேல் எழுச்சி மற்றும் வீழ்ச்சி என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனிதக் கற்பனை கதை புனையலின் வளத்தின் அற்புதமான கற்பனை.
85200050_10221420670892441_7966617086527
 
IMG_20230103_082245.jpg
அடுத்தது புதிய ஏற்பாடுக் கதை நாயகன் ஏசு சீடர் தோமா இந்தியாவில் கொடுங்கல்லூர் வந்து பிரச்சாரம் செய்தார், மார்கபோலோ தமிழகம் வந்தார் எனக் கதை

Thomas%2016%20(1).jpg
தோமா நடபடிகள் நூல் கதையில் ஏசுவோடு ஒரே பிரசவத்தில் ஒட்டிப் பிறந்த தோமோ மரண தண்டனையில் வீரர்களால் கொல்லப்பட்டது பாலைவன நாட்டில், தமிழகம் என்றுமே பாலைவனம் இல்லை

Thomas%20-013.jpg
மார்கபோலோ தமிழகம் வஉரகை என்பது சீனாவோட் சேர்ந்த பயணம், அது வரலாறு அறிஞர்களால் மறுக்கப் படுகிறது
323694129_1753231821730312_6094214829226
கேரளத்தின் கொடுங்கல்லூர் பொஆ.800 வரை மக்கள் குடியேற்றம் இல்லாமல் கடலுக்கு அடியில் இருந்தது எனத் தொல்லியல் உறுதி செய்துள்ளது
vamkji%2006.jpg
வால்மீகி இராமாயணத்தில் சோழ, பாண்டிய என கிஷ்கிந்தா காண்டத்தில் உள்ளது ,  அதே இராமாயணத்தில் சீதையக் காணும் முன்பு ராவணன் அரண்மனை அருகே சைத்திரியம் கண்டார் என உள்ளதில் சைத்திரியம் என்பது பௌத்த விஹாரம் எனவே குறிக்கும், (குபேரன் தோட்டம் எனும் மொழிபெயர்ப்பு மழுப்பல்)
அசோகர் கல்வெட்டில் சோடா - பாட என்பதன் மாற்றமும், சைத்திரியம் என்பதும் இவை ராமாயண இன்றைய வடிவம் அசோகருக்கு பிற்காலம் என்பது தெளிவாகும்4e3d2295-23d6-4643-a1cc-44793fbdb39a.jpg
 
கல்வெட்டு - காசுகள் கிடைக்கும் முன்பே பல அறிஞர்களும் மொழியியல் அடிப்படையில் குறித்த காலங்களே தற்போது உறுதி ஆகி உள்ளது. 

6db279e5-413f-4ec4fda-5cebdecc82ee.jpg
பரிபாடல் - 11ம் பாடலில் உள்ள வானியல் குறிப்புகள்படி அது பொஆ. 634  ஜூன்.17ம் தேதி குறிக்கிறது என்றார் எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை, அவர் நூல்கள் தான் இன்றும் இந்தியாவின் அனைத்து கல்வெட்டு குறிப்புகளை காலம் குறிக்க பயன்படுவது
Ey85c9xUYAgh8Mm%20(1).jpg
298837149_5251756111612452_5384513494307
நம்மிடம் இன்று வரை கிடைத்துள்ள அனைத்து கல்வெட்டுகளின் ([பொமு200-பொஆ500) மொழிநிலை தொல்காப்பியத்திகு முன்பானது
Pazanthamil.jpg
All%20Brahmi.jpg
பரிபாடல் பிறகு மேலும் நெகிழ்ச்சி கொண்டது கலித்தொகை, இவ்விரு வகை இலக்கியத்திற்கு இலக்கணம் தந்த தொல்கப்பியம் கலித்தொகை காலம் பின்பு தான். திருக்குறள் அதன் பின்பு, திருக்குறளை கூறும் சிலப்பதிகாரம்- மணிமேகலை இவற்றின் மொழியியல் கூறுகள் மேலும் மாற்றம் உறுதி செய்துள்ளது.
download.%20(1).jpg

bca949b7-2a56-4fbc-bdb6-c694e2cd6844.jpg316537185_10229111135909260_377980157542
இத்தோடு ஆரியத் திராவிடர் இனவாதக் கோட்பாட்டைக் கூறுவோர் மறைப்பது, கால்டுவெல் ஆய்வுப்படி தமிழ் ஸ்கைத்திய மொழிக் குடும்பம் அதே போல ஹார்வர்டு பேராசிரியர் ஆய்வும் தமிழ் மொழி மற்றும் மொழி பேசுவோர் அன்னிய வந்தேறிகள், கைபர் போலன் கணவாய் வழி வந்தவர்கள் என்கின்றனர். 
Tamil%20outsides.jpg
சங்க இலக்கிய மன்னர்கள் காலம் என்பது பொமு 50 முதல் பொஆ 550 வரை என்பதை எதிர்ப்போர் தங்கள் புராண நம்பிக்கை அடிப்படையில் தான் என்பதை மார்க்சிஸ்டு அறிஞர் தெளிவாகக் கூறுவார்.
321458653_494527729448876_30324763711453
 
சங்க இலக்கிய மொழிநிலை பற்றிய பெறும் ஆய்வு 4 நூள் தொகுப்ப் ஆகும் அதன் முன்னுரைssdad.png
 
அதே போல சொல்லை உடைத்து வேர் சொல் என்ற ஊகன்க்களை மொழியியல் அறிஞர்கள் ஏற்பதே இல்லை, அவை வெற்று கற்பனையே

 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

கால காலமாக தமிழக வரலாற்றைக் கீழிறக்கித் தள்ளுவதே வேலையாக ஒரு சாரார் இருந்திருக்கிறார். அவருக்கு வேதத்தைத் தூக்கி வைக்கும் பணி உள்ள போது, ”எல்லாமே சங்கதம்” என முழக்கம் செய்ய வேண்டிய நிலை இருக்கும் போது, தெற்கே ஒரு பண்பாடு இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுப் பழமையானது என்று சொல்ல எப்படி மனம் வரும்? அதன் காரணமாய் வையாபுரியாரைத் துணைக் கொண்டு சங்க இலக்கியத்தின் காலத்தை தவறாகப் பொருத்துவது மாறவேயில்லை;

[வையாபுரியாரின் தற்சார்புக் கருத்துக்களை மறுத்து இவர் எவருமே கேள்வி எழுப்பியதில்லை. வையாபுரியார் முடிவுகளை கமில் சுவலபிலும் மறுத்தது இல்லை. இன்று கமில் சுவலபில்லின் முன்னெடுப்புகளை மற்ற மேலைத் தமிழறிஞர் மறுப்பதில்லை. ஹெர்மன் டீக்கன் மட்டும் சிலருக்கு இப்போது எதிராளியாகத் தெரிகிறார்.] சங்ககால வாழ்க்கை முறையை Burton Stein வரையறுத்த Segementary State ஆகவே பார்ப்பதும்  மாற வில்லை. [Burton stein கருத்தை நொபுரு கராசிமா மட்டும் வன்மையாக மறுத்தார்; ஆனால் அவர் தன் ஆய்வுக்குட்பட்ட பெருஞ்சோழர் காலத்தோடு இயல்பாய் நிறுத்திக் கொள்வார். நானறியச் சங்ககால மூவேந்தர் அரசுகள் எப்படிப்பட்டவை, அவற்றின் அரசியற் பொருளாதாரம் என்ன? - என ஆய்ந்து பார்க்க யாரும் முன்வந்ததில்லை.],

தமிழ்நாட்டு ஆய்வரோ, ஆழங்காண மறுத்து ”வைரமுத்துவின் திரையிசைப் பாடல்கள், சங்கரதாசு சுவாமிகளின் நாடகத்திறம், புதுக்கவிதையும் லிமெரிக்கும்” என விளிம்புநிலை ஆய்வுகளிலே கவனஞ் செலுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் ஆய்வுப்பட்டத் தலைப்புகளைக் கேட்டால் கண்ணீர் வடிக்கவே தோன்றும். ஏதோ 200 ஆய்வுநூற் பக்கங்களை நிறைத்து விட்டாற் போதும் என்றாற்போல் எத்தனை நாட்கள் சவலைப் பிள்ளையாய், மூளியாய், மூடமாய்த் தமிழாய்வுகள் தமிழ்நாட்டில் நடக்குமோ தெரியவில்லை. இத்தனைக்கும் புதிய தரவுகள் தொல்லியல் வழி வருகின்றன. கல்வெட்டியல் மூலம் எழுகின்றன. நாணயவியல் புது வரலாறு படைக்கிறது. ஆனாலும் தமிழக வரலாற்றைச் சங்க இலக்கியத்தை புத்தொளி கொண்டு மீள ஆய்வு செய்ய தமிழியலில் யாரும் அணியமாயில்லை. இல்லையெனில் அச்சு அடித்தாற் போல் ”சிலப்பதிகாரம் கி.பி.2 ஆம் நூற்றாண்டின் பின் எழுந்தது” என்று கீறல் விழுந்த இசைத்தட்டுப் போலத் தமிழறிஞரில் 99.9% பேர் இன்னியம் பாடிக் கொண்டு இருப்பாரா?

ஏன் சங்க இலக்கியத்தில் மீளாய்வே நடப்பதில்லை?- என எனக்குப் புரிவதில்லை. இத்தனைக்கும் சங்க இலக்கியத்தில் 50% க்கும் மேலான பாடல்கள் பாலைத்திணையில் உள்ளன. அதில் பெரும்பாலும் மொழிபெயர் தேயம் தாண்டி பாடல் தலைவர் வடக்கே போனதாய்ச் செய்திகள் வரும். அப்படி வடபுலத்தில் எங்கே தான் வணிகம் செய்யப் போனார்? வடுகர் யார்? தமிழரின் பொருளியல் எதன் அடிப்படையில் இயங்கியது? இது வெறும் கொள்ளையடிப்புப் பொருளாதாரமாய் இயங்கியதா? [அப்படியும் சிலர் எண்ணிக் கொள்கிறார்.] இவ்வளவு காசுகள் (உரோம நாட்டுக் காசுகளும் சேர்த்து) கிடைத்துள்ளனவே? மணிகள், முத்துகள் இங்கு கிடைத்துள்ளனவே? இவையெலாம் எங்கே செலாவணியாகின? வடக்கிருந்த மகதத்திற்கும் தமிழகத்திற்கும் இடையாட்டம் இல்லாது போனதா? மகதத்தோடு உறவு கொள்ளாத தமிழகம் இந்தியத் துணைக்கண்டத்தில் கி.மு.காலங்களில் இருந்துவிட முடியுமா? வம்ப மோரியர் எனில் மோரியருக்கும் முந்தியவராய் சங்க காலத் தமிழர் இருந்திருக்க வேண்டுமே? அப்படியெனில் சங்க இலக்கியக் காலம் குறைந்தது மோரியருக்கும் முன்னால் என்ற ஆய்வு கூட நம்மிடம் இல்லாது போனது எப்படி? ஏன் தீவுக்குள் முடங்கிப் போனவராய் நம்மை எண்ணிக் கொள்கிறோம்? வடபுலத்தாரும், மேல்நாட்டாரும் நம்மை ஒரு தொங்குசதையாகவே (appendage) பார்க்கிறாரே ஏன்? Are we so worthless? Every thing here was a derived one? Don't we see a conspiracy in it?

மகதப் பேரரசு அளவிற்கு இல்லாவிடினும் அதற்கு எதிராய்ச் சூளுரைத்து, தம் பொருளியலையும் அரசியலையும் தனித்து நிலைநாட்டி 3 பயிர்த்தொழில் அரசுகள் (feudatory states) இங்கிருந்தன என்பதையும், கூடவே வேடுவச் சேகர (hunter-gatherer) குமுகாயக் கூறுகளும் இருந்ததையும், அப் பின்புலத்திற் பார்த்தால் தான் சங்க இலக்கியமும் பழந்தமிழ் வரலாறும் புரிபடும் என்று  இந்த வறட்டுவாதிகளுக்குச் (dogmatists) யார் சொல்வது? சங்க இலக்கியத்தின் காலம் கி.மு.600-கி.பி.200 என்று விரித்துணர்வது எப்போது? ”மகத அரசுகள் எப்போதும் தமிழக அரசுகளுக்கு பகையாய், அதேபோது போட்டியரசுகளாய் இருந்தன” என்ற வரலாற்று உண்மையை யார் உணர்த்துவது?

இப்படிக் கேள்விமேற் கேள்விகள் நமக்குள் அடுத்தடுத்து எழுகின்றன. விடை காண்பதற்குத் தான் ஆட்களைக் காணோம். வையாபுரியார் சொன்னது இன்று வரை மேலைத்தமிழறிஞரிடம் அப்படியே அடிபிறழாமல் உள்ளது. நம் மாற்றுக் கருத்துக்கள் பொதுக்கையாகவே (fascist) புரிந்துகொள்ளப் படுகின்றன. நாம் என்ன சொல்ல முடியும்? Am I a fascist?

இதற்கிடையில் காவிரியில் எத்தனையோ ஆடிப்பெருக்கும், அமையுவாவும் (அமாவாசையும்) வந்தாயிற்று.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் காலம்

 hhttps://newindian.activeboard.com/t64626600/topic-64626600/

 

  சிறந்தவை மிக மிகச் சில. அந் நூல்களை “மேற்கணக்கு” எனவும், “கீழ்க்கணக்கு” எனவும் பகுத்துத் தொகுத்துள்ளார் நம் முன்னோர். மேற்கணக்கு நூல்கள் பதினெட்டு. அவை "பத்துப் பாட்"டிலுள்ள நூல்கள் பத்தும், "எட்டுத் தொகை"யிலுள்ள நூல்கள் எட்டு மாம். கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு. அவை “பதினெண் கீழ்க் கணக்” கிலுள்ள நூல்கள் பதினெட்டு மாம்.

 

அப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய திருக்குறள் என்று வழங்கும் முப்பால் திருவள்ளுவரால் இயற்றப் பெற்றது. அது மக்கள் அடைதற்குரிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும், அவற்றை அடையும் நெறிகளையும் ஞாயிறு போல விளக்குகின்ற ஓர் அருமையான நூல். அதன் ஒப்புயவர்வற்ற பெருமை, அதனை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமய நூலென்றும், அதன் ஆசிரியரைத் தத்தம் சமயத்தவரென்றும் கூறிவருகின்ற தொன்றாலேயே நன்கு விளங்கும். 

அஃது அறப்பால், பொருட்பால், இன்பப் பால் என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அம்மூன்று பகுதிகளையுடைய காரணத்தால், அது முப்பால் எனப் பெயர் பெற்றது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard