மனித வாழ்க்கையின் அனைத்து நிலையிலும் அறத்தோடு வாழ வழிகாட்டும் தமிழ் நூல் திருக்குறள். தமிழ் மொழி நன்கு செழுமை பெற்று யாப்பு வளர்ச்சிக்குப் பின்னர் குறள் வெண்பா யாப்பில் இடைக்காலத்தில் இயற்றப்பட்டதே திருக்குறள். குறள் மொழிநடை, புதிய சொற்கள், இலக்கண மாற்றம் அடிப்படையில் திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் எழுந்ததே தமிழ் சமணர் மணக்குடவர் உரை, மேலும் பல மொத்தம் 10 பழைய உரை என்பதில் 5 மட்டுமே கிடைத்துள்லது.
திருவள்ளுவமாலை என்பது திருக்குறளை நன்கு படித்து ஆராய்ந்து விமர்சன திறனாய்வு பாடல்கள், தமிழ் மொழியியல் அடிப்படையில் இவற்றில் பெரும்பாலனவை திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டிலும் சில பரிமேலழகர் காலம் பின்பும் எழுந்தவை ஆகும் .
"ஆதி பகவன் முதற்றே உலகு" என இந்த உலகம் பரம்பொருள் எனும் இறைவனிடமிருந்து தொடங்குகிறது என்றவர்- அடுத்த குறளீலேயே கல்வி கற்பதன் பயன் இறைவன் திருவையைத் தொழுவதற்கே என வலியுறுத்தி கூறி உள்ளார்.
வள்ளுவர் எச்சமயத்தவர்?
வள்ளுவர் சமயம் பற்றிய விவாதம் தற்போது மீண்டும் எழுப்பப் பட்டு இருக்கிறது. வள்ளுவத்தை சமணம் பௌத்தம் என்றதோடு, அத்தோடு தமிழர்க்கு எவ்வித தொடர்பும் இல்லாத தீவிர துறவு ஆசிவகம் என்றும் பரப்பப் படுகிறது. இந்தியாவை அடிமைப் படுத்தி 20கோடி இந்திய மக்களைக் கொன்று ரூ.4000 லட்சம் கொள்ளை அடித்த கிறிஸ்துவ காலனி ஆதிக்க பாதிரிகள் திருக்குறளை மொழி பெயர்க்கையில் அதன் தெய்வீகத்தை சிதைக்கும் வழியில் மொழி பெயர்த்தும், குறளில் அறத்துப்பால் அதிகாரத் தலைப்பினை ஒட்டி கூறப்பட்ட கொல்லாமை, புலால் மறுத்தலை மிகை செய்து திருக்குறளை சமணம் என பரப்பினர்.
திருக்குறள் கிறிஸ்துவ நூல் எனக்காட்டிட பல கோடி செலவு செய்து மிகப் பெரும் ஒன்று கிறிஸ்துவச் சர்ச் செய்தது, கத்தோலிக்க ஆர்ச்பிஷப் அருளப்பா, சிஎஸ் ஐ தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி மற்றும் தேவநேயப் பாவாணர் மற்றும் பலக் கிறிஸ்துவர் சேர்ந்து திருக்குறளிற்கு கிறிஸ்துவ உரை எழுதியதோடு, பண்டைக் காலம் தொட்டே திருக்குறள் கிறிஸ்துவ நூல் என மோசடி ஓலை சுவைட்யும் தயாரித்தனர், இறுதியில் அது உயர்நீதிமன்ற வழக்கு என ஆகி முடிந்தது, ஆனால் திராவிடியார் புலவர்கள் துணையோடு ஒப்பியல் ஆய்வு என்ற பெயரில் திருக்குறள் கிறிஸ்துவம் என்ற மோசடி ஆய்வுகள் தொடர்கின்றன..
காலனி ஆதிக்க நச்சு சிந்தனையின் வழியில் எழுந்த பல நாவினாப் புலவர்கள் மற்றும் தமிழ் மரபை இழிவு செய்த ஈ.வெ.ராமசாமியார் வழி திராவிடியார் இயக்கப் புலவர்களும் மதமாற்ற சக்திகளோடு இணைந்து திருகுறளின் ஆணிவேர் கொள்கைகளை மறைத்து மதம் இல்லாத பொது நூல் எனப் பரப்புகிறது.
நாம் திராவிடியார் புலவர்கள் உரை படித்தாலே போதும் - திருக்குறள் அவர்களுக்கு ஏற்பு இல்லை, வள்ளுவர் கூறாத பொருளை குறளின் மேல் திணித்து மாற்றுவதில் இருந்தே திருக்குறள் தமிழ் மரபை ஏற்காத திராவிடியாருக்கு ஏற்பு இல்லை. திருக்குறள் கூறும் கொல்லாமை, புலால் மறுத்தல் பல அன்னிய மதங்களிற்கு சிறிதும் ஏற்பு இல்லை. கள் உண்ணாமை என்கையில் கிறிஸ்துவ பைபிள் கதை நாயகன் மதுவை எடுத்து என் ரத்தம் எனப் பகிர்ந்ததும் அது இன்றும் எல்லா சர்ச் நடைமுறையில் உள்ளதைக் காணலாம். தமிழக அரசே மது விற்பது வள்ளுவத்திற்கு மாறானதே திராவிடியார் என்பது உறுதி ஆகும்.
திருவள்ளுவர் உலகைப் படைத்த இறைவனை உருவ வழிபாட்டினை ஏற்றும், இறைவனோடு இயற்கை போற்றும் மரபும் அன்னிய மதங்களால் ஏற்க இயலாதவை, தமிழர் மரபிற்கு மாறான நாத்திகம், உலகாயுதமும் வள்ளுவத்தை ஏற்பதில்லை; எனவே பொது நூல் என்பது பொருந்தாது.
வள்ளுவரது சமயம் குறித்த ஆய்வில் குறள் இயற்றிய காலம் குறித்து ஆராய்ச்சியும் முக்கியம். அது பல விஷயங்களில் நமக்கு தெளிவு தரும்.
இன்றைக்கு மக்களிடையே சிலத் தொன்மக் கதைகளை கொண்டு வள்ளுவர் காலத்தை பரப்பி உள்ளதில் இருந்து தெளிவு பெற முதலில் நாம் வள்ளுவர் சொன்ன இரண்டு குறட்பாக்களை நினைவில் கொள்ளுவோம்.
ஒருவன் தான் செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் கெட்டுவிடுவான். செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாது இருப்பதாலும் கெட்டு விடுவான்.
நாம் இந்த ஆய்வில் கூறுவது பலருக்கு தங்கள் தொன்மக் கதை வழி நம்ப்க்கைகளுக்கு மாறானது என் ஏற்பு இல்லை என்றாலும் உண்மையைக் கூறாமல் விட்டால் அது தீமையே என்பதால் நாம் தொடர்கிறோம்
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. குறள் 391: கல்வி.
கல்வி கற்க நல்ல நூல்களைக் பிழை இல்லாமல் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நல்ல நெறியில் நிற்க வேண்டும்.
இந்தக் குறளில் கசடு அற என்பது முக்கியம், அன்னிய காலனி ஆதிக்க மதமாற்ற நச்சு சக்தி அடிமைகளாய் நவீன புலவர்கள் பரப்பிய கசடுகளை நீக்கி உண்மையைத் தேட வேண்டும்
திருக்குறள் சங்கப் பலகையில் பாடப் பட்டதாக உள்ள கதை அசரீரி இயற்றியதான திருவள்ளுவமாலைப் பாடலில் உள்ளத் தொன்மைக் கதை.
திருக்குறளில் உள்ள பல சொல் தொடர்கள் சங்க இலக்கியத்தை, தொல்காப்பியத்தைத் தழுவி உள்ளது, ஆனால் இதை எதிர்மறையாக வள்ளுவத்தின் வரிகளை சங்க இலக்கியப் புலவர் தழுவியதாகச் சில புலவர்கல் பொமுவிற்கு வள்ளுவத்தை கொண்டு செறதை இன்று ஆராய்ச்சியாளர் ஏற்பது இல்லை.
திருவள்ளுவர் காலம் குறிக்க மிக முக்கிய கருது கோள்கள் மொழியியல் - யாப்பு வளர்ச்சி மற்றும் திருக்குறளை எடுத்து பயன்படுத்திய பிற்கால இலக்கியங்களும்.
திருக்குறள் சங்க இலக்கியங்களில் பிற்காலம் சார்ந்த பரிபாடல் கலித்தொகைக்கு பின்னர் எழுந்தது, சிலப்பதிகாரம், மணிமேகலைக்கு முந்தையது என்பதில் கருத்து ஒற்றுமை உள்ளது.
சங்க இலக்கிய காலம் எது?
சங்க இலக்கியத்தின் காலம் குறிப்பதில் நமக்கு தொல்லியல் சான்றுகள் மிகவும் உதவிகரமானது.
கரூர் அருகே புகலூர் ஆறுநாட்டு மலைக் கல்வெட்டு மூன்று சேர மன்னர்கள் பெயர் கூறுகிறது. இக்கல்வெட்டின் காலத்தை பொஆ.200ஐ ஒட்டியது என 2ம் உலக தமிழ்மாநாட்டில் தரப்பட்ட ஆய்வுக் கட்டுரை தெளிவாக உரைக்கிறது. இந்த சேர அரசர்கள் காலத்திற்கு பின்பு வாழ்ந்தவர் தான் சேரன் செங்குட்டுவன் (பொஆ188 ௨43), பதிற்றுப் பத்து 5ம் பத்து பாட்டு நாயகர். இவருகுப் பின்பு 10 தலைமுறை சேர மன்னர் ஆட்சி செய்ததை பாட்டுத்தொகை நூல்கள் கூறுகின்றன. 2௪ம் நூற்றாண்டை சேர்ந்த சேர மன்னர்கள் பெயர் தமிழ் பிராமியில் தாங்கி வெளியிட்ட 4 காசுகள் இருப்பொறை, இரும்பொறை, மாக்கொதை மற்றும் குட்டுவன் கோதை காசுகள். சேர மன்னர்கள் பொஆ 5ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்ய, மூவேந்தர் காலம் தாண்டி சிற்றரசர்கள் கடையேழு வள்ளல்கள் ஆட்சியை பாட்டுத்தொகை கூறுவதால் சங்க காலம் என்பது பொமு. 50 முதல் பொஆ.550 வரை எனக் கொள்ளலாம். புறநானூறு கடைசியாகத் தொகுக்கப் பட்டது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக 5 நூல் தமிழ் மொழியியல் ஆய்வு - 21 நூலக்ள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை முழுவதையும் ஆராய்ந்து புள்ளியியல் அடிப்படையில் ஆதராங்களோடு கூறியதே-எட்டுத் தொகை நூல்களில் பரிபாடல், கலித்தொகை மற்றும் திருமுருகாற்றுப்படை மொழிநிலை, யாப்பு வளர்ச்சி, புதிய சொற்கள் அடிப்படையில் இதற்கு பின்பு எழுந்தவை.
பரிபாடல் 11ம் பாடலில் உள்ள வானியல் குறிப்புகள் ஆய்வு செய்த எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை (இன்றும் கல்வெட்டுகளீல் உள்ள காலம் குறிக்க இவர் நூலையே பயன்படுத்துகிறது) தன் Panchang And Horoscope நூலில் பொஆ.634ம் ஆண்டு ஜுன்௧7 நாளினைக் குறிக்கிறது என நிரூபித்தார்.
பரிபாடல் 7ம் நூற்றாண்டு, அதை ஒட்டியே கலித்தொகை. இதன் பின்னர் எழுந்ததே திருக்குறள்.
சிலப்பதிகாரத்தின் வஞ்சிக்காண்டம் முழுமையாக கொடுங்கல்லூர் அருகே உள்ள திருவஞ்சைக் களத்தையே சேரர் தலைநகராகக் காட்டுகிறது. இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மிகத்தெளிவாக கொடுங்கல்லூர் பகுதி முழுமையும் கடலுக்கு அடியில் பொஆ. 800 வரையில் இருந்ததையும் அதன் பின்னரே மக்கள் குடியேற்றம் என்பது தோண்டிய பல்வேறு ஊர்களில் கிடைத்த ஒரே சீரான பொருட்கள் உறுதி செய்தது. இது சிலப்பதிகாரம் மொழிநிலைப் படி பிற்காலம் என்பதனை உறுதி செய்யும் தொல்லியல் ஆதராம் ஆகும்.
திருக்குறள் 8ம் நூற்றாண்டு கடைசி காலாண்டு அல்லது 9ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரும் என்பதை பல பன்னாட்டு பல்கலைக் கழக தமிழ் பேராசிரியர்கள் குறிப்பிடுவதோடு பொருந்தி உறுதி ஆகும்.
திருவள்ளுவரின் சமயம்.
திருக்குறள் உலகை படைத்த இறைவனைக் குறிப்பிடுகிறது. அறவாழி அந்தணன் தாழ் பணிந்தார்க்கு அல்லால் பிற ஆழி கடக்க முடியாது என்பதை எந்த சமண தீர்தங்கரரையோ, புத்தரையோ குறிக்க இயலாது. ஆது உலகைப் படைத்த பரம்பொருள் பிரம்மம் என்பதை மட்டுமே குறிக்க இயலும்.
திணையும் துறையும் அவை.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை
நெட்டிமையார் பாடியது.
9 நெட்டிமையார்
ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணி உடையீரும் பேணி
தென் புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர் பெறாஅதீரும்
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என 5
அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல் களிற்று மீமிசை கொடி விசும்பு நிழற்றும்
எம் கோ வாழிய குடுமி தம் கோ
செம் நீர் பசும்_பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன் 10
நன் நீர் பஃறுளி மணலினும் பலவே
# 9 நெட்டிமையார்
பசுக்களும், பசுவைப் போன்ற இயல்புள்ள பார்ப்பன மக்களும்,
பெண்களும், நோயாளிகளும், வழிபாட்டுடன்
தென் திசையில் ஆவியாக இருக்கும் மூதாதையர்க்குப் பிதிர்க்கடன் செய்யும்
பொன் போன்ற புதல்வர்களைப் பெறாதவர்களும்,
எம் அம்புகளை விரைவாகச் செலுத்தப்போகிறோம், உம் அரண்களுக்குள் சேர்ந்துவிடுங்கள் என்று
அறநெறியைச் சொல்லும் கொள்கையைப் பூண்ட மறத்தினையுடைய
கொல்கின்ற யானையின் மேல் உயர்த்தப்பட்ட கொடிகள் விசும்பினுக்கு நிழலைச்செய்யும்
எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக, தம்முடைய முன்னோனான,
சிவந்த தன்மையுள்ள பசும்பொன்னை கூத்தர்க்கு வழங்கிய
முந்நீராகிய கடலின் தெய்வத்திற்கு எடுத்த விழாவினையுடைய நெடியோன் என்பவனின்
நல்ல நீரைக்கொண்ட பஃறுளி என்னும் ஆற்றின் மணலைக்காட்டிலும் பல ஆண்டுகள் -
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போர் அறம்
பசு, பசுப் போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், மரபுநோய் உள்ளவர், இறந்த முன்னோருக்குக் கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். இங்கே என் அம்பு பாயும் போர் நிகழவிருக்கிறது என்று அறவழி கூறியபின் போரிடும் பாங்குடையவன் இந்த அரசன்.கொல்களிற்றின் மேல் கொடி தோன்ற இருந்துகொண்டு போரிடுபவன்.இவன் என் அரசன்.இவன் பெயர் குடுமித் தங்கோ (குடுமியான் மலை அரசன்)இவன் பஃறுளி ஆற்று மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல்லாண்டுகள் வாழ்வானாக!
# 367 ஔவையார்
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய
பூவும் பொன்னும் புனல் பட சொரிந்து 5
பாசிழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய
நார் அறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து
இரவலர்க்கு அரும் கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
வாழ செய்த நல்வினை அல்லது 10
ஆழும்_காலை புணை பிறிது இல்லை
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீ புரைய காண்_தக இருந்த
கொற்ற வெண்குடை கொடி தேர் வேந்திர்
யான் அறி அளவையோ இதுவே வானத்து 15
வயங்கி தோன்றும் மீனினும் இம்மென
பரந்து இயங்கும் மா மழை உறையினும்
உயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளே
# 367 ஔவையார்
நாகலோகத்தைப் போன்ற வளமான பகுதிகளையுடைய நாடு
தம்முடையதாகவே இருந்தாலும், இறக்கும்பொழுது அது அவர்களுடனே செல்வதில்லை;
அது அவனுக்குப் பின்னர் வரும் வேற்று நாட்டவராயினும், வலிமையுடையோர்க்குப் போய்ச் சேரும்;
பொருளை வேண்டி இரந்த பார்ப்பனர்களுக்கு, அவர்களின் ஈரக்கை நிறைய
பூவும் பொன்னும் நீர்வார்த்துக் கொடுத்து,
நல்ல அணிகலன்களை அணிந்த மகளிர் பொற்கலங்களில் கொண்டுவந்து கொடுக்கும்,
நாரால் வடிகட்டப்பட்ட கள்ளின் தெளிவை அருந்திக் களித்து,
இரவலர்க்கு அரிய அணிகலன்களைக் குறையாது கொடுத்து,
இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்காக வரையறுக்கப்பட்ட நாட்கள் முழுதும் வாழவேண்டும்;
நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர,
நீங்கள் இறக்கும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை.
வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும்
முத்தீயைப் போல காண்பதற்கினிமையாய் வீற்றிருக்கும்
வெண்கொற்றக் குடையையும், கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே!
நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும்; வானத்தில்
ஒளிர்ந்து தோன்றும் விண்மீன்களையும் இம்மென்ற ஒலியுடன்
பெய்யும் பெரிய மழைத்துளிகளையும் விட
மூவேந்தரும் சேர்ந்திருந்த காட்சியைக் கண்டு ஔவையார் வாழ்த்துகிறார்.
பார்ப்பார் முத்தீ வளர்ப்பர். (சமையல் தீ, வேள்வித் தீ, விளக்குத் தீ) இந்த மூன்று தீயும் ஓரிடத்தில் இருப்பது போல மூன்று வேந்தர்களும் ஓரிடத்தில் இருக்கிறீர்கள்.
வெற்றி [கொற்றம்] நிழல் தரும் வெண்கொற்றக் குடை உடையவர்கள் நீங்கள்.
ஒருங்கிருக்கும் உங்களது வாழ்நாள் பெருகவேண்டும்.
வானத்து மீன்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பெருக வேண்டும்.
‘இம்’ என்று பொழியும் மழையில் உள்ள நீர்த்துளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் பெருகவேண்டும்.
நில உலகினைச் சூழ்ந்துள்ள மண்டிலம் தேவருலகம் போல இனிமையானது.
அது ஞாயிறு, திங்கள் இரண்டுக்கும் உரிமையானது.
என்றாலும் இந்த இரண்டு சுடர்களும் இணைந்து செல்வதில்லை.
நீங்களோ மூவரும் இணைந்து காட்சி தருகிறீர்கள்.
இது பெரும்பேறு.
இந்த உலகம் ஆட்சியால் உங்களுடையதுதான்.
என்றாலும் அது நோன்பு இயற்றியவர்களுக்கே உரியது.
நீங்கள் பார்ப்பார்க்கு வழங்க வேண்டும்.
ஏந்தி நிற்கும் அவர்களின் கையில் பூவும் பொன்னும் வழங்க வேண்டும்.
நீர் ஊற்றித் தாரை வார்த்து வழங்க வேண்டும்.
மகளிர் பொன்-கிண்ணத்தில் தரும் தேறலைப் பருகவேண்டும்.
இரவலர்களுக்கும் அரிய அணிகலன்களை வழங்கவேண்டும்.
தனக்கென வைத்துக்கொள்ளாமல் வழங்கவேண்டும்.
உங்களுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் எல்லாம் வழங்கவேண்டும்.
இவ்வாறு வாழ்ந்து உங்கள் வாழ்நாள் பெருகவேண்டும்.
பிறரை வாழச்செய்வதுதான் நல்வினை.
இந்த நல்வினை உங்களை ஏற்றிச் செல்லும் மிதவையாக உதவும்.
வாழ்க்கைத் துன்பத்தில் மூழ்கும்போது உதவும்.
இந்த நல்வினை போல வாழ்க்கைக்கு இன்பம் தந்து உதவக்கூடியது வேறு ஒன்றும் இல்லை.
கூடாமுன் ஊடல் கொடிய திறம் கூடினால் 55 ஊடாளோ ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து என ஆங்கு ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என பார்ப்பார் ஒழிந்தார் படிவு மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று 60 அந்தணர் தோயலர் ஆறு வையை தேம் மேவ வழுவழுப்பு-உற்று என ஐயர் வாய்பூசுறார் ஆறு விரைபு இரை விரை துறை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல் கரையொடு கடல் இடை வரையொடு கடல் இடை நிரை_நிரை நீர் தரு நுரை 65 நுரையுடன் மதகு-தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் மறி கடல் புகும் அளவு_அளவு இயல் இசை சிறை தணிவு இன்று வெள்ள மிகை வரை பல புரை உயர் கயிறு அணி பயில் தொழில் மணி அணி யானை மிசை மைந்தரும் மடவாரும்
தலைவன் தலைவியிடம் வந்து சேர்வதற்கு முன்னரே இந்தக் கொடுந்தன்மை தலைவியை வந்து சேர்ந்தால்,
ஊடமாட்டாளோ? ஊரிலுள்ள அலர் பேச்சு ஊர்ந்துவந்து அவளைச் சேர,
என்று கூறும்படி புனலாட்டு நிகழ,
ஈக்கள் மொய்க்கும் சமைக்கப்பட்ட கள்ளினைக் கொண்டது இந்த ஆறு என்று
பார்ப்பனர் தவிர்த்தார் நீராடுதலை;
ஆடவரும் பெண்டிரும் பூசியிருந்த நறுமணப் பொருட்களைத் தூவப்பெற்றதாயிற்று என்று
அந்தணர்கள் நீராடவில்லை ஆற்றில்;
வையையின் நீர் தேன் கலந்து மழுமழுவென்றானது என்று
ஐயர் வாய்கொப்பளிக்கவில்லை ஆற்றில்;
விரைவான இரைச்சலுடன் நறுமணமிக்க துறைகளின் கரைகள் அழியும்படியாக இழிந்து ஊர்ந்து ஊர்ந்து செல்லும் புனல்;
கரையோரத்திலும், கடலில் கலக்குமிடத்திலும் மலையிலிருந்து கடல்வரை வரிசை வரிசையாக நீரானது நுரையை எழுப்பும்;
மிக்க நுரையுடன் மதகுகள்தோறும் புகுந்து வெளிவரும் நீர் கரை புரண்டு ஓடும்; அலைகள் புரளும் கடலுக்குள்
சென்று புகும் வரை மிகுந்து மேலும் மேலும் வந்து ஓசையுடன் கரைகளாகிய சிறைக்குள் அடங்காதவாய் வெள்ளம் மிகும்;
பல மலைகளைப் போல உயர்ந்த, கழுத்தில் கயிறிட்ட, நன்கு தொழில் பயின்ற,
மணிகள் கட்டப்பட்ட யானைகளின் மேல் வந்த மைந்தரும் மகளிரும்,
30.8 எட்டாம் பாடல்
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின்
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண் தமிழ் குடிகள் 5
தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர்
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போல 10
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே
# 30.8 எட்டாம் பாடல்
திருமாலின் தொப்புளில் தோன்றி மலர்ந்த தாமரைப்
பூவோடு ஒத்தது அழகிய ஊர், அந்தப் பூவின்
அக இதழ்களை ஒத்தன தெருக்கள்; அந்த இதழ்களின் நடுவே உள்ள
அரிய பொகுட்டினை ஒத்ததே பாண்டியனின் அரண்மனை;
அந்தப் பூவின் பூந்தாதுக்களைப் போன்றவர் இனிய தமிழ்க்குடி மக்கள்;
அந்தத் தாதுக்களை உண்ணும் பறவைகளைப் போன்றவர் பரிசில் பெற்று வாழ்பவர்;
அந்தத் தாமரைப் பூவில் தோன்றிய பிரமதேவனுடைய நாவில் பிறந்த
நான்கு வேதங்களையும் கேள்வியால் கற்றவர்கள் ஓதுகின்ற குரலால் எழுப்ப,
மிக்க இன்பமான துயிலிலிருந்து எழுதலன்றி,
வாழ்த்துப்பெற்ற வஞ்சியும் உறைந்தையும் போல
கோழி கூவ எழாது எமது பெரிய ஊர்மக்களின் துயில்;