New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவமாலை: 41 - 55


Guru

Status: Offline
Posts: 24625
Date:
திருவள்ளுவமாலை: 41 - 55
Permalink  
 


Seyirkkaaviriyaar Maganaar Saathanaar செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார் திருவள்ளுவமாலை - செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார் - 41

ஆவனவு மாகா தனவு மறிவுடையார்
யாவரும் வல்லா ரெடுத்தியம்பத் - தேவர்
திருவள் ளுவர்தாமுஞ் செப்பியவே செய்வார்
பொருவி லொழுக்கம் பூண்டார்.

Thiruvalluva Maalai - Seyirkkaaviriyaar Maganaar Saathanaar - 41
aavanavum aakaathanavum arivutaiyaar
yaavarum vallaar yeduththiyampath – thaevar
thiruvalluvar thaamum seppiyavae seivaar
poruvil olukkam poontaar

விளக்கம் (பொ-ரை.) மக்களுக்கு வேண்டியவற்றையும் வேண்டாத வற்றையும் அறிஞரும் எடுத்துச் சொல்லுமாறு, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட் கூற்றுக்களையே, ஒழுக்கத்தில் உயர்ந்தோர் கடைப்பிடிப்பர். Tamilvu

Freehand Translation*
Do’s and Do’nt’s, the learned
say and propogate - just as the Divine
Thiruvalluvar said so; follow
the best disciplined souls. * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Seyirkkaaviriyaar Maganaar Saathanaar, yet!

Seyaloor Kodum Senkannanaar செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார் திருவள்ளுவமாலை - செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார் - 42

வேதப் பொருளை விரகால் விரித்துலகோ
ரோதத் தமிழா லுரைசெய்தா - ராதலா
லுள்ளுந ருள்ளும் பொருளெல்லா முண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.

Thiruvalluva Maalai - Seyaloor Kodum Senkannanaar - 42
vaethapporulai virakaal viriththulakoar
oathath thamilaal uraiseithaar – aathalaal
ullunar ullum porulaellaam untaenpa
valluvar vaaimoli maatdu

விளக்கம்(பொ-ரை.) திருவள்ளுவர் ஆரிய வேதப்பொருளைத் தமிழுலகம் அறிதற்பொருட்டுத் தமிழில் விரித்துரைத்தார். ஆதலால், திருக்குறளில் மக்கள் கருதும்பொருள்களெல்லாம் உள்ளன. Tamilvu
Freehand Translation*
Vedic knowledge was detailed and made suitable for the masses’s
convenient uttering through the tamil work - and so
whatever one thinketh is said to be present
in Valluvan’s saying itself * note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Seyaloor Kodum Senkannanaar, yet!

Because vedas is knowledge all contained; so is the Valluvan’s Kural.

Vannakkan Saathanaar வண்ணக்கஞ் சாத்தனார் திருவள்ளுவமாலை - வண்ணக்கஞ் சாத்தனார் - 43

ஆரியமுஞ் செந்தமிழு மாராய்ந் திதனினிது
சீரிய தென்றொன்றைச் செப்பரிதா- லாரியம்
வேத முடைத்து தமிழ்திரு வள்ளுவனா
ரோது குறட்பா வுடைத்து.

Thiruvalluva Maalai - Vannakkan Saathanaar - 43
aariyamum sendhthamilum aaraaindhthu ithaninithu
seeriyathu yenronraich sepparithaal – aariyam
vaetham utaiththu thamilthiru valluvanaar
oathu kuratpaa utaiththu

விளக்கம் (பொ-ரை.) வடமொழியையும் தென்மொழியையும் ஒப்பு நோக்கி இது சிறந்தது என்று ஒன்றைச் சொல்ல முடியாது. வடமொழியில் வேதமுள்ளது; தென்மொழியில் திருக்குறள் உள்ளது. ஆதலால், இரண்டும் சமமே. Tamilvu

Freehand Translation*
Aaryam and senTamil remain uncomparable
on relative grounds - Aaryam
has the vedas; Tamil has Thiruvalluvar
uttered Kural Pa * note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Vannakkan Saathanaar, yet!
senTamil = senmai + Tamil => Prosperous tamil language

What is vedas is to sanskrit is thirukkural to tamil.
It is difficult to say whether the Sanskrit or the Tamil is the best: they are perhaps on a par, since the Sanskrit possesses the Vēda, and the Tamil the Cural, composed by the divine Valluvar. Edward Jewitt Robinson

Kalathoor Kilar களத்தூர்க் கிழார் திருவள்ளுவமாலை - களத்தூர்க் கிழார் - 44

ஒருவ ரிருகுறளே முப்பாலி னோதுந்
தரும முதனான்குஞ் சாலு - மருமறைக
ளைந்துஞ் சமயநூ லாறுநம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்.

Thiruvalluva Maalai - Kalathoor Kilar - 44
oruvar irukuralae muppaalin oathum
tharmam muthalnaankum saalum – arumaraikal
aindhthum chamayanool aarumnam valluvanaar
pundhthi molindhtha porul

விளக்கம் (பொ-ரை.) இருக்குமுதல் பாரதம் ஈறான வேதங்கள் ஐந்தும் வேதவழிப்பட்ட சாத்திரங்கள் ஆறும், திருவள்ளுவர் நூலிலடங்கும்; ஆதலால் ஒருவர் உய்வதற்கு, ஓரெதுகையும் ஈரெதுகையுமாகிய இருவகைக் குறளாலு மமைந்த முப்பாலிற் சொல்லப்பட்ட நாற்பொருளையும் அறிந்தாற் போதும்.Tamilvu
Freehand Translation*
Sufficient for One is the Couplets of Three chapters
spanning ‘the Four’ inclusive of virtue - the Vedas
Five and religious treaties Six, constituted by Valluvans
brilliantly conveyed essence. * note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Kalathoor Kilar, yet!

He who studies the two-lined verses in the three divisions of Valluvar’s Cural, will obtain the four things (virtue, wealth, pleasure, and eternal happiness); for they contain the substance of the five Vēdas (including the Mahābhārat), and the six systems of the six sects. Edward Jewitt Robinson

Nachumanaar நச்சுமனார் திருவள்ளுவமாலை - நச்சுமனார் - 45

எழுத்தசை சீரடி சொற்பொருள் யாப்பு
வழுக்கில் வனப்பணி வண்ண- மிழுக்கின்றி
யென்றெவர் செய்தன வெல்லா மியம்பின
வின்றிவ ரின்குறள்வெண் பா.

Thiruvalluva Maalai - Nachumanaar - 45
yeluththuasai seerati sotrporul yaappu
valukkil vanappu anivannam – ilukkinri
yenraevar seithana yellaam iyampina
inrivar inkuralvaen paa

விளக்கம்(பொ-ரை.) எழுத்து முதல் வண்ணம் ஈறாகச் சொல்லப்பட்ட எல்லாம் அழகாக எவ்வெக்காலத்தில் எவ்வெவராற் சொல்லப்பட்டனவோ, அவையெல்லாம் இக்காலத்து இத்திருவள்ளுவரால் இயற்றப்பட்ட இனிய குறள் வெண்பாக்களிற் சொல்லப்பட்டுள்ளன. Tamilvu

Freehand Translation*
Words, syllables, meters, meanings, grammer
and all at the best - devoid of errors
when and who has achieved? Featuring all,
right now, his sweet Kural couplets have.
* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Nachumanaar, yet!



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Akkaarakkani Nacchumanaar அக்காரக்கனி நச்சுமனார் திருவள்ளுவமாலை - அக்காரக்கனி நச்சுமனார் - 46

கலைநிரம்பிக் காண்டற் கினிதாகிக் கண்ணி
னிலைநிரம்பு நீர்மைத் தெனினுந்- தொலைவிலா
வானூர் மதியந் தனக்குண்டோ வள்ளுவர்முப்
பானூ னயத்தின் பயன்.
Thiruvalluva Maalai - Akkaarakkani Nacchumanaar - 46
kalainirampik kaandatrku inithaakik kannin
nilainirampum neermaiya thaenum – tholaivuilaa
vaanoor mathiyam thanakkuntoh valluvarmup
paalnool nayaththin payan

விளக்கம் (பொ-ரை.) மதியமும் முழுமதியும் முப்பால் நூலும் முறையே பதினாறுகலைகளாலும் அறுபத்துநான்கு கலைகளாலும் நிறைந்து காண்பதற்கும் ஆராய்தற்கும் இனிதாகி, புறக் கண்ணிற்குத் தண்மையும் அகக்கண்ணிற்குப் பண்பும் உடைத்தாயினும், முப்பால் நூலால் விளையும் பயன் மதியினிடத்துண்டோ? Tamilvu
Freehand Translation*
Art rich and enchanting the viewer
with glorious charms and attributes - has the
distant moon in the sky got Valluvan
Muppal’s desirable qualities?* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Akkaarakkani Nacchumanaar, yet!

One might think that the author was just describing the moon, but the ending lines suggest author was descibing the kural; so much so that he was comparing the moon with that of kural rather than other way round.

The moon full of Kalei (the whole of her face being illuminated) pleases the external eyes, in like manner as the Cural full of Kalei (knowledge) pleases the intellectual eyes; but nevertheless she cannot be compared to Valluvar’s production, for she is neither spotless, nor does she retain her form and splendour unchanged like it. Edward Jewitt Robinson

Nappaalatthanaar நப்பாலத்தனார் திருவள்ளுவமாலை - நப்பாலத்தனார் - 47

அறந்தகளியான்ற பொருடிரி யின்பு
சிறந்தநெய் செஞ்சொற்றீத் தண்டு-குறும்பாவா
வள்ளுவனா ரியற்றினார் வையத்து வாழ்வார்க
ளுள்ளிரு ணீக்கும் விளக்கு.
Thiruvalluva Maalai - Nappaalatthanaar - 47
aramthakali aanra porulthiri inpu
sirandhthanaei senjsol theethandu – kurumpaavaa
valluvanaar yaetrrinaar vaiyaththu vaalvaarkal
ullirul neekkum vilakku

விளக்கம்(பொ-ரை.) திருவள்ளுவர் அறத்தை அகலாகவும், பொருளைத் திரியாகவும் இன்பத்தை நெய்யாகவும், சொல்லை நெருப்பாகவும், குறட்பாவைத் தண்டாகவும் கொண்டு, உலகத்தோரின் அகவிருளை நீக்கும் விளக்கேற்றினார். Tamilvu

Freehand Translation*
lamp of Virtue, Wealth as wick, Love
bested oil, excellent words of fire, standing on compact poetry;
thus Valluvan lit, for the world’s masses, the
inner evil banishing Light.* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Nappaalatthanaar, yet!

Valluvar has lighted a lamp for dispelling the darkness from the hearts of those who live in the world; having virtue for its bowl, wealth for its wick, pleasure for its oil, the fire of expression for its flame, and the short stanza for its stand. Edward Jewitt Robinson

Kulapathi Naayanaar குலபதிநாயனார் திருவள்ளுவமாலை - குலபதிநாயனார் - 48

உள்ளக் கமல மலர்த்தி யுளத்துள்ள
தள்ளற் கரியவிரு டள்ளுதலால்-வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரு மொக்குமெனக்
கொள்ளத் தருங்குணத்தைக் கண்டு.
Thiruvalluva Maalai - Kulapathi Naayanaar - 48
ullak kamalam malarththi ulaththuulla
thallatrku ariya irul thalluthalaal – valluvanaar
vaellaik kuratpaavum vaengkathirum okkumyenak
kollath thakungkunaththaik kondu

விளக்கம்(பொ-ரை.) நெஞ்சத் தாமரையை விரியச் செய்து அகவிருளை நீக்குந் திருக்குறளும், நீர்த்தாமரையை விரியச் செய்து புறவிருளை நீக்கும் கதிரவனும், குணத்தால் ஒக்குமென்று கொள்ளத்தகும். Tamilvu

Freehand Translation*
Establishing the lotus heart, and vanquishing
the overwhelming darkness; thus - Valluvan’s
purest kural poems, and the sun are comparable
on attributes they share.* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Kulapathi Naayanaar, yet!

As the Cural of Valluvar causes the lotus-flower of the heart to expand, and dispels from it the darkness which cannot otherwise be dispelled, it may well be compared to the hot-rayed sun, which causes the lotus-flower of the tank to expand, and dispels the darkness from the face of the earth. Edward Jewitt Robinson

Thaenee Kudikkeeranaar தேனீக் குடிக்கீரனார் திருவள்ளுவமாலை - தேனீக் குடிக்கீரனார் - 49

பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே-முப்பாலில்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால் வையத்து வாழ்வார் மனத்து.

Thiruvalluva Maalai - Thaenee Kudikkeeranaar - 49
poippaala poiyaeyaaip poyina poiallaa
meyappaala meiyaai vilangkinavae – muppaalin
theivath thiruval luvarsep piyakuralaal
vaiyaththu vaalvaar manaththu

விளக்கம்(பொ-ரை.) தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரின் திருக்குறளைக் கற்று அல்லது கேட்டு அறிந்ததனால், மக்கள் மனத்தில் மெய்த் தன்மையான வெல்லாம் மெய்யாகவும் பொய்த்தன்மையான வெல்லாம் பொய்யாகவும் விளங்கிவிட்டன. Tamilvu

Freehand Translation*
False, turning out false, got banished; Unfalse
stayed back True - Because in Muppal
divine Thiruvalluvar gave the kurals;
where? in the hearts of the massses. * note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Thaenee Kudikkeeranaar, yet!

By the Cural, the production of the divine Tiruvalluvar, the world has been enabled to distinguish truth from falsehood, which were hitherto confounded together. Edward Jewitt Robinson

KodiNyaazlan Maaniboothanaar கொடிஞாழன் மாணிபூதனார் திருவள்ளுவமாலை - கொடிஞாழன் மாணிபூதனார் - 50

அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின்
திறனறிந்தேம் வீடு தெளிந்தேம்- மறனெறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற்
கேளா தனவெல்லாங் கேட்டு.

Thiruvalluva Maalai - KodiNyaazlan Maaniboothanaar - 50

aranarindhthaem aanra porularindhthaem inpin
thirantherindhthaem veedu thelindhthaem – maranyerindhtha
vaalaar naedumaara valluvanaar thamvaayaal
kaelaa thanavaellaam kaetdu

விளக்கம்(பொ-ரை.) பகைவென்ற பாண்டிய! திருவள்ளுவர் வாயினின்று, இதற்குமுன் கேட்டிராதவையெல்லாம் கேட்டு நாற்பொருளின் இயல்பையும் நன்றாய் அறிந்தேம். Tamilvu

Freehand Translation*
Virtue, splendid Wealth, Love’s disposition
all we understood and Abode we found; because - O
Pandya possessing powerful infantry; Valluvan’s words
gave us wisdom * note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from KodiNyaazlan Maaniboothanaar, yet!

Kavuniyanaar கவுணியனார் திருவள்ளுவமாலை - கவுணியனார் - 51

சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த விருவினைக்கு மாமருந்து-முந்திய
நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய வின்குறள்வெண் பா.

Thiruvalluva Maalai - Kavuniyanaar - 51
sindhthaikku iniya sevikkiniya vaaikkiniya
vandhtha iruvinaikku maamarundhthu – mundhthiya
nannaeri naamariya naappulamai valluvanaar
panniya inkuralvaen paa

விளக்கம்(பொ-ரை.) நாம் நல்லொழுக்க வழியை அறிதற்பொருட்டுப் புலமை மிக்க திருவள்ளுவர் இயற்றிய இனிய குறள்வெண்பாக்கள் ஆராய்ந்தால் மனத்திற்கும் கேட்டாற் செவிக்கும் ஓதினால் நாவிற்கும் இன்பந்தருவன; தொன்றுதொட்டு வரும் இருவினைகளாகிய நோய்கட்குச் சிறந்த மருந்தாவன. Tamilvu

Freehand Translation*
Sweet for the mind, ears and mouth;
an antidote for accumulated twin karmas - To give us
the prime way of life; came the brilliant Valluvanaar’s
work of sweet kural couplets.* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Kavuniyanaar, yet!

The short distichs which the learned poet Valluvar has composed in order that we may know the ancient right way, are sweet to the mind to meditate on; sweet to the ear to hear; and sweet to the mouth to repeat; and they moreover form a sovereign medicine to promote good and prevent evil actions. Edward Jewitt Robinson

Madurai Paalaasiriyanaar மதுரைப் பாலாசிரியனார் திருவள்ளுவமாலை - மதுரைப் பாலாசிரியனார் - 52

வெள்ளி வியாழம் விளங்கிரவி வெண்டிங்கள்
பொள்ளென நீக்கும் புறவிருளைத்-தென்னிய
வள்ளுவ ரின்குறள் வெண்பா வகிலத்தோர்
ருள்ளிரு ணீக்கு மொளி.

Thiruvalluva Maalai - Madurai Paalaasiriyanaar - 52
vaelli viyaalam vilangkuiravi venthingkal
polyena neekkum purairulai – thelliya
valluvar inkural vaenpaa akilaththor
ulirul neekkum oli

விளக்கம்(பொ-ரை.) வெள்ளி வியாழன் கதிரவன் திங்கள் என்பன புறவிருளை நீக்கும் ஒளிகளாம். அவைபோலத் திருவள்ளுவரின் இனிய குறள் வெண்பா அகவிருள் நீக்கும் ஒளியாம். Tamilvu

Freehand Translation*
Venus, Jupiter, the Sun, soothing Moon
pierce and banish the external dark - Valluvan’s
beautiful kural couplet’s effulgence banishes
the masses’s internal dark * note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Madurai Paalaasiriyanaar, yet!

Ulirul - internal dark = ignorance of the mind



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 Aalangudi Vanganaar ஆலங்குடி வங்கனார் திருவள்ளுவமாலை - ஆலங்குடி வங்கனார் - 53


வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்குந்
தெள்ளமுதின் றீஞ்சுவையு மொவ்வாதால்-தெள்ளமுதம்
உண்டறிவார் தேவ ருலகடைய வுண்ணுமால்
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து.

Thiruvalluva Maalai - Aalangudi Vanganaar - 53
valluvar paattin valamuraikkin vaaimadukkum
thellamuthin theenjsuvaiyum ovvaathaal – thellamutham
undarivaar thaevar ulakataiya unnumaal

vanthamilin muppaal makilndhthu
விளக்கம்(பொ-ரை.) திருவள்ளுவர் பாட்டின் தீஞ்சுவைக்குத் தெள்ளமுதமும் ஒவ்வாது. தெள்ளமுதைத் தேவர் மட்டும் உண்டு சுவைப்பர்; முப்பாலமுதையோ உலகத்தாரனைவரும் உண்டு சுவைப்பர். Tamilvu

Freehand Translation*
The richness of Valluvar’s song outmatches
the Amrutam’s taste - That Amrutham
was relished by the gods; whereas entire world
cherishes the rich tamil Muppal.
* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Aalangudi Vanganaar, yet!
The gods have known the taste of ambrosia by having partaken of it; but men will know it when they imbibe the milk issuing from the three teats (parts) of the Cural. Edward Jewitt Robinson

Idaikaadar இடைக்காடர் திருவள்ளுவமாலை - இடைக்காடர் - 54

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறுத்த குறள்.
Thiruvalluva Maalai - Idaikaadar - 54
kadukaith thulaiththael kadalaip pukattik
kurukath thariththa kural
விளக்கம்(பொ-ரை.) திருக்குறளின் சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகின் நடுவில் துளைசெய்து அதில் எழுகடல் நீரையும் பாய்ச்சி, மேலும் அது அளவிற் குறுகும் வண்ணம் சற்றுத் தறித்துவைத்தாற் போன்றதாம். Tamilvu

Freehand Translation*
Mustard pierced and seven seas loaded
compactly originated kural
* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Idaikaadar, yet!
The Cural contains much in a little compass. Such is the ingenuity of its author, that he has compressed within its narrow limits all the branches of knowledge, as if he had hollowed a mustard seed, and enclosed all the waters of the seven seas in it. Edward Jewitt Robinson

Avvaiyar ஒளவையார் திருவள்ளுவமாலை - ஒளவையார் - 55
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.

Thiruvalluva Maalai - Avvaiyar - 55
anuvaith thulaiththael kadalaip pukattik
kurukath thariththa kural

விளக்கம்(பொ-ரை.) திருக்குறளின் சொற்சுருக்கத்தையும் பொருட்பெருக்கத்தையும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகினும் மிக நுண்ணிய அணுவைத் துளையிட்டு அதில் எழுகடல் நீரையும். Tamilvu
Freehand Translation*
Atom pierced and seven seas loaded
compactly originated Kural
* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Avvaiyar, yet!
The Cural contains much in a little compass. Such is the ingenuity of its author, that he has compressed within its narrow limits all the branches of knowledge, as if he had hollowed a mustard seed, and enclosed all the waters of the seven seas in it. - Idaikaadar
On hearing this, Avvaiyar remarked to Idaikaadar that it would be more appropriate to liken the Kural text to an atom, which is even smaller than a mustard seed. Both Idaikaadar and Avvaiyar’s remarks appear as the last two verses of the Tiruvalluva Maalai. Avvayaar wiki

 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 

41. ஆவனவும் ஆகா தனவும் அறிவுடையார் யாவரும் வல்லார்எடுத்து இயம்பத் தேவர் திருவள் ளுவர்தாமும் செப்பியவே செய்வார்; பொருவில் ஒழுக்கம்பூண் டார்.

42. வேதப் பொருளை விரகால் விரித்து,

உலகோர் ஓதத் தமிழால் உரைசெய்தார்; ஆதலால்,

உள்ளுநர் உள்ளும் பொருள் எல்லாம்

உண்டுஎன்ப வள்ளுவர் வாய்மொழி மாட்டு. (செயலூர்க் கொடும் செங்கண்ணனார்)


(கு-உ) விரகால் விரித்து - அறிந்துகொள்ளும் உபாயத்தால் விரிவாக. உள்ளுநர் - நினைக்கின்றவர். “வள்ளுவர் வாய்மொழி மாட்டு உள்ளுநர் உள்ளும் பொருள் எல்லாம் உண்டு என்ப” என்று பொருள் கொள்க.



43. ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து, இதனின்இதுசீரியது என்றுஒன்றைச் செப்பரிதுஆல்; ஆரியம், வேதம் உடைத்துத் தமிழ், திரு வள்ளுவனார்

ஓது குறட்பா உடைத்து. (வண்ணக்கம் சாத்தனார்)



(கு-உ) இதனின் இது சீரியது- இதைவிட இது சிறந்தது. செப்ப அரிது- சொல்லமுடியாது. ஆரியம்- வடமொழி.



44. ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும் தருமம் முதல்நான்கும் சாலும்;- அருமறைகள் ஐந்தும், சமயநூல் ஆறும், நம் வள்ளுவனார்

புந்தி மொழிந்த பொருள். (களத்தூர்கிளார்)



45. எழுத்து, அசை, சீர், அடி, சொல், பொருள், யாப்பு, வழுக்குஇல் வனப்புஅணி, வண்ணம், இழுக்கின்றி என்றுஎவர் செய்தன எல்லாம் இயம்பின

இன்றுஇவர் இன்குறள்வெண் பா. (நச்சுமனார்)



(கு-உ) எழுத்துமுதல் வண்ணம்வரை உள்ளவை செய்யுளின் இயல்பு. இழுக்குஇன்றி - குற்றம் இல்லாமல் குறள் வெண்பாவில் எழுத்து முதல் வண்ணம் வரையுள்ள இயல்புகள் அமைந்துள்ளன.



46. கலைநிரம்பிக் காண்டற்கு இனிதுஆகிக் கண்ணின் நிலைநிரம்பு நீர்மைத்து எனினும் தொலைவுஇலா வான்ஊர் மதியம் தனக்கு உண்டோ, வள்ளுவர்முப் பால்நூல் நயத்தின் பயன் (அக்காரக்கனி நச்சுமனார்)

(கு-உ) கலைநிரம்பி- கதிர்நிறைந்து. கண்ணின் நிலை-கண்ணால் பார்க்கும் நிலையில். நிரம்பும் நீர்மைத்து- நிறைந்திருக்கும் தன்மையுடையது. தொலைவுஇலா- அழிவில்லாத. வான்- வானம். “வள்ளுவர் முப்பால் நூல் நயத்தினால் வரும் வயன் தொலைவுஇலா வான்ஊர் மதியம் தனக்கு உண்டோ” என்று மாற்றிப் பொருள் கொள்க.



47. அறம்தகளி, ஆன்ற பொருள்திரி, இன்பு சிறந்தநெய், செஞ்சொல்தீத் தண்டு குறும்பாவா வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள் உள்இருள் நீக்கும் விளக்கு. (நப்பாலத்தனார்)

(கு-உ) திருக்குறள் மக்கள் மன இருட்டை நீக்கும் விளக்காகும். அறம் அகல்; பொருள்திரி; இன்பம் நெய்; செஞ்சொல் தண்டு; குறள்வெண்பா தீ. இவ்வாறு அமைந்தது திருக்குறள் விளக்கு. ஆன்ற-சிறந்த. ‘செம்சொல் தண்டு; தீ குறும்பாவா’ என்று மாற்றிப் பொருள் கொள்ளுக.







(கு-உ) ஒருவர்- ஒருவர்க்கு. இருகுறளே- சிறந்த குறளிலே. முப்பாலின் ஓதும்- மூன்று பகுதியிலும் கூறப்படும். சாலும்-போதுமானதாகும். அருமறைகள் ஐந்து- இருக்கு, எசுர், சாமம், அதர்வணம், பாரதம் என்பன. சமயநூல் ஆறும்- அறுவகைச் சமயங்களுக்குரிய ஆறு நூல்கள். (சமயம் ஆறு 9-ஆம் வெண்பா பார்க்க.)



48. உள்ளக் கமலம் மலர்த்தி, உளத்துள்ள

தள்ளற்கு அரியஇருள் தள்ளுதலால், வள்ளுவனார் வெள்ளைக் குறட்பாவும் வெம்கதிரும் ஒக்கும்எனக் கொள்ளத் தகும் குணத்தைக் கொண்டு.

(குலபதி நாயனார்)

388 சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 4 திருக்குறள் பொருள் விளக்கம் 389





(கு-உ) குறளும் சூரியனும் ஒரு தன்மையுடையன என்று கூறுகிறது இச்செய்யுள். தள்ளற்கு அரிய இருள்- நீக்க முடியாத அறியாமை என்னும் இருட்டை. வெள்ளைக்குறட்பா- குறள் வெண்பா.



49. பொய்ப்பால பொய்யேயாய்ப் போயின; பொய்அல்லா மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே; முப்பாலில் தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்,

வையத்து வாழ்வார் மனத்து. (தேனீக்குடிக் கீரனார்)



(கு-உ) ‘முப்பாலில்....மனத்து, பொய்ப்பால ....விளங்கினவே’ என மாற்றுக. பொய்ப்பால- பொய்த் தன்மையுடையன. மெய்ப்பால- மெய்யாயின.



50. அறன் அறிந்தேம்; ஆன்ற பொருள் அறிந்தேம்; இன்பின் திறன் அறிந்தேம்; வீடு தெளிந்தேம்; மறன்எறிந்த வாள்ஆர் நெடுமாற! வள்ளுவனார் தம் வாயால் கேளா தனவெல்லாம் கேட்டு.

(கொடிஞாழன் மாணிபூதனார்)



(கு-உ) “மறன் எறிந்த.... கேட்டு, அறன் அறிந்தேம்... தெளிந்தேம்” என்று மாற்றிப் பொருள் கொள்க. ஆன்ற- சிறந்த. மறன் எறிந்த- பகைவரைக்கொன்ற. வாள்ஆர்- வாளாயும் ஏந்திய.



(கு-உ) இரவி- சூரியன். பொள்என- விரைவில். உள் இருள்-மன இருள். வெள்ளி முதலியன மனத்திருளை நீக்கமாட்டா. வெள்ளி, வியாழம் இரண்டும் பிரகாசம் உள்ள நட்சத்திரங்கள்.



53. வள்ளுவர் பாட்டின் வளம் உரைக்கின், வாய்மடுக்கும் தெள் அமுதின் தீம்சுவையும் ஒவ்வாதுஆல்;-

தெள்அமுதம் உண்டுஅறுவார் தேவர்; உலகு அடைய உண்ணும்ஆல் வண்தமிழின் முப்பால் மகிழ்ந்து. (ஆலங்குடி வங்கனார்)

(கு-உ) வாய்மடுக்கும்- உண்ணப்படுகின்ற. தீம் சுவையும்-இனிய சுவையும். “வண்தமிழின் முப்பால் மகிழ்ந்த உலகு அடைய உண்ணும் ஆல்”. முப்பால்- திருக்குறளாகிய அமுதத்தை. மகிழ்ந்து- மகிழ்ச்சியுடன். உலகுஅடைய- உலகம் முழுவதும்.



54. கடுகைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள். (இடைக்காடர்)



(கு-உ) கடுகின்உள் ஏழு கடலையும் புகுத்தி வைத்தது போன்றது திருக்குறள். இனிய; வாய்க்குஇனிய; வந்த இருவினைக்கு மாமருந்து; முந்திய

நன்னெறி நாம் அறிய நாப்புலமை வள்ளுவனார்

பன்னிய இன்குறள்வெண் பா. (கவுணியனார்)




55. அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள். (ஒளவையார்)
(கு-உ) அணுவுக்குள் ஏழு கடல்களையும் புகுத்தி வைத்தது போன்றது திருக்குறள்.







(கு-உ) முந்திய- பழமையான. வந்த- தொடர்ந்து வந்த. இருவினை- நல்வினை, தீவினை. நல்நெறி- நல்லொழுக்கங்களை. நாப்புலமை- நாவன்மையும் புலமையும் நிறைந்த.



52. வெள்ளி, வியாழம், விளங்கு இரவி, வெண்திங்கள் பொள்என நீக்கும் புறஇருளை; - தெள்ளிய வள்ளுவர் இன்குறள் வெண்பா, அகிலத்தோர்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard