New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவமாலை: 21 - 30


Guru

Status: Offline
Posts: 24625
Date:
திருவள்ளுவமாலை: 21 - 30
Permalink  
 


 

Nalkoor Velviyaar நன்பலூர் சிறு மேதாவியார் திருவள்ளுவமாலை - நன்பலூர் சிறு மேதாவியார் - 21

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சென்ப – இப்பக்கம்
மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்கு அச்சு

Thiruvalluva Maalai - Nalkoor Velviyar - 21
uppakkam nokki upakaesi thol manandhthaan
uththara maamathuraikku achsenpa – ippakkam
maathaanupangki maruvuil pulachsendhnaap
pothaar punatrkoodatrku achsu
விளக்கம்(பொ–ரை.) வட மதுரைக்குக் கண்ணனை நிலைக்களமாகக் கூறுவர்; வைகை மதுரையான தென்மதுரைக்குத் திருவள்ளுவர் நிலைக்களமாவார்.

note - upakesi is attributed to Kannan(Vishu) in this translation.

Freehand Translation*
Seen there; youngest of the kaesi’s was wed by
the one who is the north madurai’s icon - here
MAATANUBANGHI pure and superflously poetic
is the streamy south Madurai’s icon. * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Nalkoor Velviyar, yet!

Maatanubanghi = ‘maa’ means mother, so maathanubangi meant ‘in liew with the status of mother’ Sennaap Pothaar = Semmai + Naaku vanmai -> Elegantly poetic

They say that Siva is the patron of North Madura, but this poet who pours out instruction in honeyed words with a parental solicitude, is the patron of South Madura abounding with water. Edward Jewitt Robinson

Thoditthalai Viluthandinar தொடித்தலை விழுத்தண்டினார் திருவள்ளுவமாலை - தொடித்தலை விழுத்தண்டினார் - 22

அறம்நான்கு அறிபொருள் ஏழொன்று காமத்
திறம்மூன்று எனப்பகுதி செய்து – பெறல்அறிய
நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலும் ஒழிந்த பொருள்

Thiruvalluva Maalai - Thoditthalai Viluthandinar - 22
aramnaanku ariporul yaelonru kaamath
thirammoonru yenappakuthi seithu – paeralariya
naalum molindhthapaeru naavalarae nankunarvaar
polum olindhtha porul

விளக்கம் (பொ–ரை.) அறத்தைப் பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் என நான்காகவும், பொருளை அரசு. அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி ஏழாகவும், இன்பத்தை ஆண்பாற் கூற்று, பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று என மூன்றாகவும் வகுத்து, நாற்பொருளையுங் கூறிய திருவள்ளுவரே வேருபொருளிருப்பினும் அதையறிவார் போலும்! நாடு அரணுள் அடக்கப்பட்டது.

Freehand Translation*
Virtue four, Wealth seven, Love
three; so was bisected - rare to obtain
‘Four’ he told, the Perunaavalar
who knows the absolute. * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Thoditthalai Viluthandinar, yet!

perunaavalar = great poetThe great poet’s work comprises everything; or, if there be anything which it does not comprise, he alone knows it. Edward Jewitt Robinson

Velliveedhiyar வெள்ளிவீதியார் திருவள்ளுவமாலை - வெள்ளிவீதியார் - 23

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே – செய்யா
அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல்

Thiruvalluva Maalai - Velliveedhiyar - 23
seiyaa molikkum thiruvalluvar molindhtha
poiyaa molikkum porulonrae – seiyaa
athatrkuriyar andhthanarae aaraayin yaenai
ithatrkuriyar allaathaar il
விளக்கம்(பொ–ரை.) ஒருவராலும் இயற்றப் படாத வேதமும் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் கூறும் பொருள் ஒன்றே. இவற்றுள் முன்னது பிராமணர்க்கே யுரியது; பின்னதோ எல்லார்க்கும் பொதுவாம்.
குறிப்பு.-ஆரிய வேதத்தைச் செய்யாமொழி யென்றது ஒரு துணிச்சல் மிக்க ஏமாற்று. அதற்கும் திருக்குறட்கும் பொருள்ஒன்றே யென்றது நெஞ்சழுத்தம் மிக்க பொய். இவற்றை நம்பிய புலவரோ தமிழகத்தைக் கெடுத்த தசைப்பிண்டங்கள். திருக்குறளைப் பொய்யாமொழி யென்றமையின், வேதம் பொய்மொழியென்பது எதிர் நிலை யளவையாற் பெறப்படும். tamilvu content

Freehand Translation*
Seyya mozli and thiruvalluvar’s work
poyya mozli convey the same - (except) the former
belonged to the upper castes whereas when investigated
there is no one whom the kural does not belong to
(i.e) the kural is common to all
seyya mozli is undone work which essentially means non authored work indicating the vedas perhaps, whereas poyya mozli means that which cannot go wrong and is the thirukkural. * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Velliveedhiyar, yet!

Mangudi Marudhanar மாங்குடி மருதனார் திருவள்ளுவமாலை - மாங்குடி மருதனார் - 24

ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோ
ருள்ளாதோ றுள்ளுதோ றுள்ள முருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

Thiruvalluva Maalai - Mangudi Marudhanar - 24
oathatrku yelithaai unarthatrku arithaaki
vaethap porulaai mikavilangkith – theethatrnor
ulluthoru ulluthoru ullam urukkumae
valluvar vaaimoli maanpu

விளக்கம்(பொ–ரை.) திருவள்ளுவரின் திருவாய்மொழி, படிப்பதற் கெளிதாயும் பொருளுணர்தற் கரிதாயுமுள்ள மந்திரநூலாக விளங்கி, தூயவறிஞர் நினைக்குந்தோறும் அவருள்ளத்தை யுருக்கும். Tamilvu

Freehand Translation*
Easy to chant, not so to realize
Veda alike’t remains - as the non evil
ones contemplate, their minds melt at
Valluvan word’s greatness * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Mangudi Marudhanar, yet!

The beauty of Valluvar’s Cural is, that it not only illustrates the abstruse doctrines of the Vēdas, but is itself a Vēda, easy to be studied, and having the effect of melting the hearts of the righteous who study it. Edward Jewitt Robinson

Ericchalur Malaadanar எறிச்சலூர் மலாடனார் திருவள்ளுவமாலை - எறிச்சலூர் மலாடனார் - 25

பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே
தூய துறவறம்ஒன் றுஊழாக – ஆய
அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து

Thiruvalluva Maalai - Ericchalur Malaadanar - 25
paayiram naankuil laramirupaan panmoonrae
thooya thuravaramon ruoolaaka – aaya
araththuppaal naalvakaiyaa aaindhthuraiththaar noolin
thiraththuppaal valluvanaar thaerndhthu

விளக்கம்(பொ–ரை.) திருவள்ளுவர் நன்றாக ஆய்ந்து பாயிரம் நான்கதி காரமும் இல்லறவியல் இருபததிகாரமும் துறவறவியல் பதின்மூன்றதிகாரமும் ஊழ் ஓரதிகாரமுமாக, அறத்துப்பாலை நால்வகையாக வகுத்துரைத்தார். Tamilvu

Freehand Translation*
Paayiram four; good Illaram twenty; thirteen
Pure Thuravaram; one Ool - So
Arathupaal comprising four divisions gave he
The Valluvan, after examining deep.
Paayiram = Introduction Illaram = Householder’s virtue Thuravaram = Ascetic’s virtue Arathupaal - On virtue The numbers correspond to the number of athigaarams or sets of ten couplets.
* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Ericchalur Malaadanar, yet!



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
RE: திருவள்ளுவமாலை: 21- 30
Permalink  
 


Pokkiyaar போக்கியார் திருவள்ளுவமாலை - போக்கியார் - 26
அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
துருவல் லரணிரண்டொன் றொண்கூ - ழிருவியல்
திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்
றெண்பொரு ளேழா மிவை.
Thiruvalluva Maalai - Pokkiyaar - 26
arasiyal aiyaindhthu amaichiyal eeraindhthu
uruval aranirandu onruonkool – iruviyal
thinpatai natpup pathinaelkuti pathinmoonru
yenporul yaelaam ivai
விளக்கம்(பொ–ரை.) திருக்குறளின் பொருட்பால், அரசியல் இருபத்தைந் ததிகாரமும், அமைச்சியல் பத்ததிகாரமும், அரணியல் ஈரதிகாரமும் பொருளியல் ஓரதிகாரமும், படையியல் ஈரதிகாரமும் நட்பியல் பதினேழதிகாரமும்; குடியியல் பதின்மூன்றதிகாரமுமாக ஏழுபகுதிகளையுடையதாம். Tamilvu
Freehand Translation*
Royalty five times five; Ministry two times five;
model Fort two; Possession One - two on
strong Army; Friendship seventeen; Nobility thirteen
So are the seven divisions of Wealth * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Pokkiyaar, yet!

Mosikeeranar மோசிகீரனார் திருவள்ளுவமாலை - மோசிகீரனார் - 27

ஆண்பாலே ழாறிரண்டு பெண்பா லடுத்தன்பு
பூண்பா லிருபாலோ ராறாக - மாண்பாய
காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு.
Thiruvalluva Maalai - Mosikeeranar - 27
aanpaal yaelaa rirandupaenpaal aduththanpu
poonpaal irupaaloar aaraaka – maanpaaya
kaamaththin pakkamoru moonraakak katduraiththaar
naamaththin valluvanaar nanku

விளக்கம் (பொ–ரை.) திருவள்ளுவர் ஆண்பாற்கூற்று ஏழதிகாரமும் பெண்பாற் கூற்றுப் பன்னீரதிகாரமும் இருபாற் கூற்று ஆறதிகாரமுமாக, இன்பத்துப்பாலை மூன்றாக வகுத்துரைத்தார். Tamilvu

Freehand Translation*
Aanpaal seven; two times six Penpaal; next Love
embracing both accounting six - greatness of
Kaama, so divided into three; gave
the venerable Valluvanaar best * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Mosikeeranar, yet!

Aanpaal - Featuring the masculine attributes Penpaal - Featuring the feminine attributes
Kaama - Roughly love and desire

Kaveripoompattinathu Kaarikkannanaar காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் திருவள்ளுவமாலை - காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் - 28

ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமாம்
மெய்யாய வேதப் பொருள்விளங்கப் – பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
அந்தாமரை மேல் அயன்

Thiruvalluva Maalai - Kaveri Poompattanatthu Kaari Kannanar - 28
aiyaarum noorum athikaaram moonrumaam
meiyaaya vaethap porulvilangkap – poiyaathu
thandhthaan ulakitrkuth thaanval luvanaaki
andhthaamarai mael ayan

விளக்கம் (பொ–ரை.) நான்முகன் திருவள்ளுவனாகி வடமொழி வேதப் பொருளைத் தமிழில் 133 அதிகாரமாக விளக்கிக் கூறினான். Tamilvu

Freehand Translation*
Five times six, a hundred and a three Athigaarams
of Truth encompassing the Vedic Wisdom - Never
unyielding, gave’t to the world as ‘Valluvan’;
he, the one seated on beautiful lotus * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Kaveri Poompattanatthu Kaari Kannanar, yet!

Brahma is being referrd here as the one seated on beautiful lotus. He gave in the guise of Thiruvalluvar
It is no other than Ayan (Brahma) himself, seated on the beautiful lotus-flower, who, assuming the form of Valluvar, has given to the world the truths of the Vēdas, that they may shine without being mixed up with falsehood. Edward Jewitt Robinson

Madurai Tamil Naganar மதுரைத் தமிழ் நாகனார் திருவள்ளுவமாலை - மதுரைத் தமிழ் நாகனார் - 29

எல்லாப் பொருளு மிதன்பா லுளவிதன்பா
லில்லாத வெப்பொருளு மில்லையாற் - சொல்லாற்
பரந்தபா வாலென் பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத் துணை.

Thiruvalluva Maalai - Madurai Tamil Naganar - 29
yellaap porulum ithanpaalula ithanpaal
illaatha yepporulum illaiyaal – sollaal
parandhtha paavaal yenpayan valluvanaar
surandhthapaa vaiyath thunai

விளக்கம்(பொ–ரை.) எல்லாப் பொருளும் இதன்கண் உள. இதில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை. ஆதலால், உலகத்தார்க்கு இவ்வொரு நூலே போதுமானதாம். Tamilvu

Freehand Translation*
All knowledge contained within;
Nothing remains excluded - Vast texts,
what good off them?; when Valluvan’s
work of ‘pa’ is the worlds guide. * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Madurai Tamil Naganar, yet!
பா = Verse, stanza, poem;பாட்டு.What is the use of works of great length, when the short work of Valluvar alone is enough to edify the world? It contains all things, and there is nothing which it does not contain. Edward Jewitt Robinson

Baratham Paadiya Perundevanar பாரதம் பாடிய பெருந்தேவனார் திருவள்ளுவமாலை - பாரதம் பாடிய பெருந்தேவனார் - 30

எப்பொருளும் யாரு மியல்பி னறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாஞ் செப்பவரு - முப்பாற்குப்
பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்.
Thiruvalluva Maalai - Baratham Paadiya Perundevanar - 30
yepporulum yaarum iyalpin arivurach
seppiya valluvarthaam seppavarum – muppaatrkup
paarathanj seeraama kathaimanup pantaimarai
naervanamatr rillai nikar

விளக்கம் (பொ–ரை.) எல்லாப்பொருளையும் எல்லாரும் உள்ளவாறறியுமாறு திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்குப், பாரதம், இராமாயணம் மனுதருமசாத்திரம், நால் வேதம் ஆகிய நான்கே ஒப்பாம். Tamilvu
Freehand Translation*
Anything anyone wishing to know comprehensively
is fulfilled by Valluvan’s work of words - The Muppal;
Bharatham, SriRam’s story, Manu’s work, Old Vedas
alike; remains unparalleled * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Baratham Paadiya Perundevanar, yet!

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard