உடம்பிலி (அசரீரி) - விளக்கம் (பொழிப்புரை) உருத்திரசர்மன் கழகப் பலகையிடத்துத் திருவள்ளுவருடன் ஒக்கவிருக்க வென்று வானில் ஓர் உரையெழுந்த்து.
Freehand Translation* Auspicious divine thiruval luvar comparable to almighty himself - so said a voice thundering from the sky * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Asareeri, yet !
More from Wikisource பல இடர்ப்பாடுகள், எதிர்ப்புகளுக்கிடையே மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் தம் முப்பாலை(திருக்குறளுக்கு ஆசிரியர் இட்டபெயர்) அரங்கேற்றினார். அரங்கேற்றத்தின் முடிவில் வானத்திலிருந்து ஓர் அசரீரிச்சொல் பாராட்டி எழுந்தது. அதுகுறித்து எழுந்த பாடலே இது. பதப்பிரிப்பு திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு உருத்தகு நல்பலகை ஒக்க - இருக்க உருத்திரசன்மர் என உரைத்து வானில் ஒருக்க ஓ என்றது ஓர் சொல் கருத்துரை ‘அருள்திரு’ என்று அழைக்கப்படும் தகுதியுடைய (அதாவது தெய்வம் என்பதாம்) தெய்வத் திருவள்ளுவரோடு, சங்கப்பலகையில் உருத்திரசன்மர் ஒருவரே ஏறியிருந்திடுக என்று ஓர் சொல், வானத்திலிருந்து ‘ஓ’ என்று இரைத்து (ஆரவாரத்தோடு) எழுந்து ஒலித்தது.
தெய்வ அருள் பெற்ற திருவள்ளுவர் தன் குறளை சங்கப் பலகையில் அமர்ந்து அரங்கேற்றம் செய்ய அவருக்கு சமமாக உருத்திரசன்மர்( மதுரை உப்பூரிகுடி கிழார் மகன்பிறப்பாக் பேச்சுத் திறன் இல்லாமல் இருந்து பிறகு முருகன் அருளால் பெசத் தொடங்கியவர் - அகநானூறு தொகுத்தவர்) என்றபடியாக ஓர் வான் குரல் எழுந்து ஒலித்தது.
தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் 4-வது தலம் எருக்கத்தம்புலியூர் நீலகண்டேஸ்வரர் திருக்கோயில். சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலம் இது. தற்போது ராஜேந்திரப் பட்டினம் என அழைக்கப்படும் இவ்வூர், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது.
ஈசன் வேதாகமத்தை உபதேசித்தபோது, அதைக் கவனிக்கத் தவறியதால் ஈசன் சக்தியைச் சபித்தார். இதனால் கோபித்த முருகப்பெருமான், தன் அன்னை சபிக்கப்பட காரணமாக இருந்த வேதாகமங்களைக் கடலில் வீசினார். ஈசன் அவரையும் சபித்தார். அதன் விளைவாக வணிகர் ஒருவருக்கு ஊமைப் பிள்ளையாகப் பிறந்தார் கந்தன். ‘உருத்திரசன்மர்’ என்ற பெயரில் அவதரித்த முருகன் சாபம் நீங்க, பல்வேறு தலங்களுக்குச் சென்று வழிபட்டார்.
நிறைவில் எருக்கத்தம் புலியூருக்கு வந்து வழிபட்டு பேசும் திறன் பெற்றார். உருத்திரசன்மர் வழிபட்டதால் ஈசன் ‘குமார ஸ்வாமி’ ஆனார். இன்றும் உருத்திரசன்மரின் உருவம் மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. பேச்சுத் திறன் குறைந்தவர்கள், இங்கு வந்து வழிபட்டால் நலம் பெறுவர் என்பது நம்பிக்கை.
நாடா முதல் நான்மறை நான்முகன் நாவில் பாடா இடைப் பாரதம் பகர்ந்தேன் - கூடாரை எள்ளிய வென்றி இலங்கு இலை வேல் மாற பின் வள்ளுவன் வாயது என் வாக்கு
கருத்துரை மாறனே(பாண்டிய மன்னனே) படைப்புக்கால முதலிலே நான், நான்முகனுடைய நாவில் இருந்து நான்மறைகளை- நான்குவேதங்களை- பாடினேன். பின் இடைக்காலத்திலே பாரதம் எனும் ஐந்தாம் வேதத்தினை(வியாசர் மூலமாக) அருளினேன். அதன்பின் கடைசியாக இப்பொழுது தமிழ்வேதமாகிய திருக்குறளை வள்ளுவனின் வாய்மொழி மூலம் என்வாக்காக (வேதவாக்காக) உலகுக்கு நான் உரைத்தேன். இதுவே இறுதிவேதம் என்பதுகுறிப்பு; அதாவது இதுவே முழுமைபெற்ற வேதம் என்பதாம். முதல், இடை என்பதை நோக்குக.
கூடார எளிய வென்றி இலங்கு இலை வேல் மாற பகைவரை புறம் கொடுத்து செய்து இகழ்ந்த வெற்றியை உண்டாக்கி விளங்கா நின்ற இலை போலும் வேர் படையை உண்டைய பாண்டிய அரசனே நாடா உலகத்தார் விதிவிலக்குகளை அறிந்து உய்யும் வழியை நாடி முதல் நான்முகன் நாவில் நான் வரை படைப்பு காலத்தில் பிரம்மனது நாவிலிருந்து இருக்கு முதலிய நான்கு வேதங்களை பாடி இடைபாரதம் பகர்ந்தேன் நடுவான காலத்தில் பாரதமாகிய வேதத்தை கூறினேன். பின் என் வாக்கு வள்ளுவன் வயது அதற்கு பிற்பட்ட இக்காலத்திலே என் வாக்கு திருடு திருக்குறளாகிய வேதத்தை சொல்லி வள்ளுவன் வாயின் கண்டதாயிற்று தன் கணவனாகளின் நான்முகன் நாவில் என்றும் அவன் அவதாரமாகலின் வள்ளுவன் வாய் வாய் தென வாக்கு என்றும் கூறினாள் பாரதம் யாசரை கொண்டு சொல்லப்பட்டது இதனால் நான்மறை பூர்வ வேதமும் பாரதம் மதிய வேதமும் திருக்குறள் உத்தரவேதம் என்று ஆயிற்று வேதம் மூவகைத்து என்பதும் இவற்றது தோற்ற முறையால் இது வாக்கிய பிரமாணத்தில் சிறைப்படைத்து என்பதும் சொல்லியபடி
பாண்டிய அரசனிடம் கல்விக்கான இறைவி சரஸ்வதி (நாமகள்) கூறுவதாக அமைந்த பாடல்
உன்னை எதிர்த்து வரும் பகைவர்களை எல்லாம் வெற்றி கொண்டு புறம் காட்டி ஓட வைக்கும் வேல் படை கொண்ட அரசன் மாறனே - ஆரம்ப காலத்தில் நான், நான்முகனுடைய நாவில் இருந்து நான்குவேதங்களை பாடினேன். பின் இடைக்காலத்திலே மகா பாரதம் எனும் ஐந்தாம் வேதத்தினை(வியாசர் மூலமாக) அருளினேன். அதன்பின் கடைசியாக இப்பொழுது தமிழில் திருக்குறளை வள்ளுவனின் வாய்மொழி மூலம் என் வாக்காக உலகுக்கு நான் உரைத்தேன்.
நின்று அலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மையதாய்க் - குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
மன் புலவன் வள்ளுவன் வாய்ச் சொல்
கருத்துரை இறையனார் (சிவபெருமான்) கூறிய பாடல்.
இங்குத் தெய்வப்புலவரின் பாடலைக் கற்பகமரத்தின் தெய்வமலர் என்று அதனுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றார்.
கற்பகப்பூ என்றும் வாடாதது;அதுபோல் அவர் வாய்ச்சொல்லான திருக்குறளும் என்றும் வாடாதது,அதாவது புதியது, புத்தழகு உடையது.
நெடுங்காலம் சென்றாலும் கற்பகப்பூ தன் அழகு கெடாது நின்று மலர்ந்து தேன் சொரியும் தன்மையை உடையது. திருக்குறளும் காலத்தால் அழியாதது; தன்னழகு கெடாதது என்றும் பொருந்தும் கருத்துக்களை உடையது; இனிய சுவையான மருந்தனைய கருத்துக்களைத்தரும் தன்மைகொண்டது.
மண்புலவன் வள்ளுவன் வாய் சொல் புலவர்க்கு அரசனாகிய வள்ளுவன் வாயில் பிறந்த திருக்குறளானது என்றும் யானைப் புலராது நாள் செல்லுகினும் நின்று அலைந்து தேன் பிழிக்கும் நீர்மயதாய் எக்காலத்தும் தன் அழகு கெடாது நெடுங்காலம் கழியினும் நிலைபெற்று மலர்ந்த தேனை தெரிகின்ற குணம் உடையதாய் விளங்கும் ஆதலால் குன்றாத செந்தளிர் கற்பகத்தின் தெய்வத்திருமலர் போன்ற குறைவு படாத செய்யத் தளிர்களை உடைய கற்பகத்தினது தெய்வத்தன்மை பொருந்திய உயர்வாகிய மலர் போலும்
திருக்குறளுக்கு அழகு சொல் முடிவுப்பொருள் முடிவின் குணங்களும் அலர்தல் எங்கும் பரவுதலும் தேன் பிலித்தல் இருமை இன்பங்களும் விளைத்தலாம் சொல் ஆகுபெயர் இறையனார் கடவுள் ஆதலினால் இனி இதில் சிறப்பது ஒன்று உலதாவது இன்று என்னும் துணிவு தோன்ற என்றும் பின்னும் அதனை வலியுறுத்த நாள் செல்லுதினும் நின்று என்றும் வாழ்த்துப் பொருட்படை இவ்வாறு கூறினார் இது அழியாது நின்று பெருகிப் பயன்படுமாறு சொல்லியபடி
இறைவன் சிவபெருமான் கூறுவது- தேவர் உலக கற்பக மரம் என்றும் இளம் தளிர் இலைகள் கொண்டும் என்றுமே வாடாத அழகாக காட்சி தரும் கற்பகமலர் பூத்தும் தொடர்ந்து தேனை தரும் தன்மை உடையது போலவே வள்ளுவர் இயற்றிய குறள் என்றும் நிலைத்து மக்களுக்கு பலன் தரும் நூல்