வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களிடம் புத்தகம் போடுகிறேன் என்று வசூலித்து, ஏமாற்றிய கதைகளும் உண்டு. சுவிட்சர்லாந்தில் நளாயினி தாமரைச்செல்வன் என்ற எழுத்தாளர் இருக்கிறார். அவரின் கவிதைத் தொகுப்பை உயிர்மை சார்பில் புத்தகம் போடுகிறேன் என்று 1.25 லட்ச ரூபாயை வாங்கியிருக்கிறார் கவிஞர். அவர் அட்டையைக் கூட வடிவமைத்து அனுப்பி விட்டார். இன்று புத்தகம் போடுகிறேன்.. நாளை புத்தகம் போடுகிறேன் என்று எப்போது பார்த்தாலும் டபாய்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் புத்தகம் போட்டு ஒரு நகலை அனுப்பியிருக்கிறார். அந்தப் புத்தகத்தைப் பார்த்தால், ஏனோ தானோவென்று ஒழுங்கில்லாமல் போடப்பட்ட புத்தகம் அது. புத்தகம் முழுக்க அச்சுப் பிழைகள். ஒரே கவிதை 7 பக்கத்தில் தவறுதலாக மீண்டும் மீண்டும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நளாயினி நேராக வந்து கவிஞரிடம் கேட்டதும்…. உன் புக் இருக்கு வேணும்னா எடுத்துட்டுப் போ…. அவ்வளவுதான் என்னால பண்ண முடியும் என்று கூறியிருக்கிறார். புத்தகம் போட்ட உடன் நான் சென்னைக்கு வந்திருந்தால், நான் அவனைக் கொலையே செய்திருப்பேன்…. எனக்கு இந்தப் பணம் பெரிதல்ல.. அதை நான் இரண்டே மாதங்களில் சம்பாதித்து விடுவேன்… என்னுடைய முதல் புத்தகத்தை இப்படி அலங்கோலமாக அச்சடித்து என்னை அவமானப்படுத்தி விட்டான் என்று புலம்புகிறார் நளாயினி.
பெர்லின் நகரத்தில் மற்றொரு புலம் பெயர் தமிழர். புத்தகம் போடுவதற்காக அவர் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார். எப்போது புத்தகம் கேட்டாலும் ஒழுங்காக பதில் சொல்லாமலேயே இருந்த மனுஷ் ஒரு கட்டத்தில் புத்தகம் அச்சடித்து விட்டேன்.. நீங்கள் கொடுத்த பணத்தில் 30 ஆயிரம் புத்தகத்துக்கு செலவாகி விட்டது. மீதம் 10 ஆயிரம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். சில நாட்கள் கழித்து இந்தியா வந்த அவர், கவிஞரிடம் மீதம் உள்ள பணத்தைக் கேட்டதும், அனைத்தும் செலவாகி விட்டது… நீங்கள்தான் எனக்கு 10 ஆயிரம் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த தமிழர் பெர்லினில், டாக்சி ஓட்டி தன் வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
சிங்கப்பூரில் மதி கந்தசாமி என்பவரிடம் 5 புத்தகங்கள் போடுவதாகச் சொல்லி ஒரு கணிசமான தொகையை ஆட்டையைப் போட்டிருக்கிறார் இதே போல லண்டனிலும் ஒருவரை ஏமாற்றிருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பா போன்ற நாடுகளில் கோபால் பல்பொடி விற்பது போன்று மோசடி செய்திருக்கிறார் கவிஞர். கவிஞரல்லவா… கவிதைக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைகும் பொய்தான் அழகு என்று முடிவெடுத்து விட்டார் போலும்.
இவரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர், வெளியிலேயே சொல்லுவதில்லை. சொன்னால் நமக்குத்தான் அசிங்கம்… இந்த நபரிடம் எப்படி பணத்தை வசூல் செய்வது என்று மனம் வெறுத்து விட்டு விடுகிறார்கள். இதுவே கவிஞருக்கு வசதியாகப் போய் விட்டது. இப்படி பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழ்ந்து கொண்டிருக்கும் அளவுக்கு சிறப்பு வாய்ந்தவர்தான் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.