New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பத்ரி சேஷாத்திரி-அண்ணா சர்ச்சை


Guru

Status: Offline
Posts: 24762
Date:
பத்ரி சேஷாத்திரி-அண்ணா சர்ச்சை
Permalink  
 


Aravindan Kannaiyan  https://www.facebook.com/arvindkannaiyan/posts/pfbid02cEo3JvEcHegE5fwgnQAnVhxGCWZ51AZwbMKfZ2BgBnx6wDVEdRVUek5roEGWLtBol 

பத்ரி சேஷாத்திரி-அண்ணா சர்ச்சைப் பற்றிய பெருமாள் முருகன் கட்டுரை: ‘சிறு இடையீடு’
பத்ரி சேஷாத்திரி - அண்ணாதுரை சர்ச்சைப் பற்றி பெருமாள் முருகன் “இந்தி என்னும் கொலைக்கருவி” என்ற தலைப்பில் அவருடைய தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார். பத்ரியை பிராமணராக மட்டுமே முன் நிறுத்தி எழுதப்பட்ட வரலாற்று மழுப்பல்கள் கொண்ட கட்டுரை. ஓர் இலக்கியவாதி என்று மதிக்கப்படுகிற ஒருவர் இத்தகைய கட்டுரையை எழுதியிருக்கிறார் என்பதே தமிழ்ச் சமூகத்தின் பிரதிபலிப்பு.
“ஆதிக்கத்தை எதிர்த்த அண்ணாவை அறிஞர் என்கிறோம் நாம்; முட்டாள் என்கிறது இந்துத்துவம்” என்று எழுதுகிறார் பெருமாள் முருகன். ஐயா, உங்க அறச்சீற்றத்துக்கு சௌகரியமாக மறந்தீரோ ஜெயகாந்தனின் அந்தப் புகழ்பெற்ற இரங்கல் உரையை? மறந்திருந்தால் “ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்” புத்தகத்தை மறுபடி புரட்டிப் பாருங்கள். பத்ரி இந்துத்துவ அரசியல் தரப்பு தான். ஆனால் அண்ணாதுரையை வசைபாடிய ஜெயகாந்தனும், பாரதிதாசனும், கண்ணதாசனும் என்ன இந்துத்துவர்களா? அவர்களுக்கெல்லாம் உள்ள உரிமை பத்ரி பிராமணர் என்பதாலேயே இல்லாமல் போயிற்றா? அவ்ரகளெல்லாம் இலக்கியவாதிகள் என்று சப்பைக் கட்டு கட்ட வேண்டாம். அவர்கள் அரசியல் பேசுபவர்களாகத் தான் அந்த விமர்சனங்களை அண்ணா மீது வைத்தனர்.
அடுத்தது, பத்ரி எங்கே சமஸ்கிருததத்தைப் பற்றிப் பேசினார்? ஜெயகாந்தன் ‘ராஜராஜன்’ விருதுப் பெற்று தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேடையிலேயே நின்றுக் கொண்டு, “நான் இந்தியில் எழுதியிருந்தால் என்னை 40 கோடி பேருக்கு தெரிந்திருக்கும்” என்றார். பின்னர் ஞானபீட விருதுப் பெற்ற சமயம் “தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் தம்மை தாமே நக்கிக் கொள்ளும் நாயைப் போன்றவர்கள்” என்றார். பலரும் கோபித்துக் கொண்டவுடன், “சிங்கத்தைப் போல என்று வைத்துக் கொள்ளுங்கள், அது மிருக குணம் என்பதை தான் சுட்டிக் காட்டினேன்” என்றார். சமஸ்கிருதத்தை நாம் அதிகம் வளர்த்திருக்க வேண்டும் என்றும் ஜெயகாந்தன் பேசியதுண்டு. இதையெல்லாம் பெருமாள் முருகன் ஏனோ வசதியாக மறந்துவிட்டு பத்ரி எனும் பிராமணர் பேசினார் என்பதையே மையமாக வைத்து கட்டுரை எழுதியிருக்கிறார்.
“மூன்றே மாதத்தில் இந்தியை கற்கலாம் அதற்கு மேல் அதில் கற்பதற்கு ஒன்றுமில்லை” என்று அண்ணா சொன்னதாக வந்த ட்வீட் தான் ஆரம்பப் புள்ளி. அது தான் அண்ணா சொன்னதென்றால் பெருமாள் முருகன் கொடுக்கும் முட்டுகள் வலுவிழந்து சரிகின்றது. மூன்று மாதம் என்பது பேச்சுக்காகச் சொல்வதென்கிறார் முருகன். சரி. அப்படியே வைத்துக் கொள்வோம். அப்புறம், இந்தியில் கற்பதற்கு ஒன்றுமில்லை என்பதை என்ன செய்வது? (நான் மெக்காலே பிரபு சொன்ன இந்திய மொழிகளில் கற்பதற்கு ஒன்றுமில்லை என்ற கட்சியை ஓரளவேனும் ஆதரிப்பவன். )
இந்தி எதிர்ப்பு கிளர்ச்சிகளில் உயிர் இழந்தோர் பற்றி உருக்கமாக குறிப்பிடுகிறார் பெருமாள் முருகன். அந்த கிளர்ச்சிகளின் அரசியல் ஆதாயப் போக்கு, இறந்தவர்களில் தலித் அல்லாத தாளமுத்துவை முதன்மைப் படுத்தியதுப் போன்றவற்றை வசதியாக மறந்து விட்டார்.
ஒரு மொழியைக் கற்பதென்பது அம்மொழியின் இலக்கிய வளங்கள், வரலாறுகளையும் சேர்த்தே கற்பது. அதில்லாமல் எழுத்துகளையும் இலக்கணத்தையும் கற்பது மொழியை அன்றாட லௌகீக தேவைக்காக கற்பதே. கார், பைக், சைக்கிள் ஓட்டுவது போல். 2 வாரம் முன்பு நியூ ஜெர்சியில் ஒரு நண்பரை சந்திக்க தமிழ்ப் பள்ளி நடக்குமிடத்துக்குப் போனேன். 500-600 கார்கள் நின்றிருக்கும். அத்தனை தமிழ்க் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளைத் தமிழ் பயில நிர்பந்தித்திருக்கிறார்கள் (குழந்தைகளை விட்டால் 100 பேர் தேறினால் அதிகம்). ஆனால் இவர்கள் கற்கும் தமிழ் அதிகப் பட்சம் தமிழ்ச் சங்க விழாக்களில் திருக்குறள் ஒப்பிக்கவும், சிவ கார்த்திகேயன் சினிமாவுக்கு கைத்தட்டவுமே பயன் பெறுகிறது. இத்தகைய நிர்பந்தத்தை நான் என் குழந்தை மீது திணிக்கவில்லை. குழந்தைகளை விடுங்கள் இந்த பெற்றோரெல்லாம் தமிழில் வருடாவருடம் வெளிவரும் புத்தகங்களில் சிலவற்றையாவது வாங்கினால் தமிழ் எழுத்தாளர்கள் கௌரவமாக வாழ முடியும். ஒன்றிரண்டு சங்கத்தாரிடம் சீனி விசுவநாதனின் பாரதி தொகுப்பை வாங்கி நூலகங்களில் வைக்கலாமே என்றேன். அந்த ரூ 10,000 செலவழிக்க பலர் தயாரில்லை. நான் எனக்காக வாங்கி வைத்திருக்கிறேன்.
“தமிழர் அடையாளம் அனைத்திற்கும் எதிரானது இந்துத்துவம்.” இதை படித்ததும் சிரித்து விட்டேன். அப்பாவின் உற்ற நண்பர் சைவப் பிள்ளைமார். ஒரு நாள் சிலப்பதிகாரம் பற்றியெல்லாம் பேசிவிட்டு “ஏன் கண்ணப்பா, சைவமும் தமிழும் தானே சொல்கிறோம்” என்றார். அதையே ஜெயகாந்தனும் பேசியிருக்கிறார், “கடவுளிடமிருந்து நம்மை பிரிப்பதாவது” என்றும் கேட்டிருக்கிறார்.
தமிழின் மிக முக்கியமான இலக்கியம் கம்ப ராமாயணம். அதனை அண்ணா எப்படி இகழ்ந்தார் என்பதையும் பெருமாள் முருகன் மறந்து விட்டார். ஒரு மேடையில் தமிழின் முக்கியமான (ஜெயமோகனல்ல) எழுத்தாளர் ஒருவர் கம்ப ராமாயணம் தனக்குப் பிடித்த இலக்கியம் என்று சொல்லப் போக அங்கே பேசக் காத்திருந்த வீரமணிக்காக குழுமியிருந்த தி.க.வினர் ஆக்ரோஷமாக குரல் எழுப்பினர். பின்னர் வீரமணி அவர்களை சமாதானம் செய்தாராம். இதெல்லாமும் நடந்தது.
பத்ரி சேஷாத்திரி மிகச் சாதாரணர். அவருடைய ஒரு ட்வீட்டை வைத்து ஒரு சமூகமே ஒரு வாரமாக விவாதிப்பதைக் கண்டு அவருக்கே வியப்பாக இருக்கும். எத்த்னை டி.வி விவாதங்கள், கட்டுரைகள், இலக்கியவாதிகளின் பிளாக்குகள்….அப்பப்பா. அவரை ஒரு குழுவிலிருந்து நீக்கியதை என்னமோ கச்சத் தீவையே மீட்டு விட்டதைப் போல் பிரஸ்தாபிக்கிறார்கள். அதே குழுவில் இருக்கும் போலி முனைவர் ஒருவர் பற்றி மூச்சே இல்லை. அதை கேள்விக் கேட்டால் பெருமாள் முருகன், “நாம் சமூக நீதி என்போம்; அது (இந்துத்துவம்) ‘தகுதி’ என்கும்” என்பார்.

 

இப்பதிவை வைத்து எனக்கும் பட்டம் கட்ட சிலர் முண்டியடித்து வரக்கூடும். கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு இந்துத்துவம் பற்றி அருஞ்சொல்லில் 15 பக்கத்துக்கு நான் எழுதிய கட்டுரையைப் படித்து விட்டு வாருங்கள். அக்கட்டுரைக்கான சுட்டியும் மற்ற சுட்டிகளும் முதல் கமெண்டில் இருக்கும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

இந்தி என்னும் கொலைக்கருவி

  • Post published:October 22, 2022
  • Post category:கட்டுரை / பொது / மொழி / விவாதம்   https://perumalmurugan.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/   

 

இந்தி என்னும் கொலைக்கருவி

 

இந்தி மொழி பற்றி அறிஞர் அண்ணாவின் கூற்றைச் சொல்லிப் பத்ரி சேஷாத்ரி தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக நடந்து வரும் விவாதங்களைக் கவனித்து வருகிறேன். இத்தகைய கருத்துக்களின் அரசியல் வெளிப்படை. எல்லோரின் கவனத்தையும் தம்மை நோக்கி ஈர்ப்பதற்கு இந்துத்துவம் வெவ்வேறு தரப்பினரை மாற்றி மாற்றிப் பயன்படுத்திக் கொண்டேயிருக்கிறது. உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் கருத்துத் தெரிவிப்பதும் பிறர் தெரிவிக்கும் கருத்துக்களை அவ்விதம் மாற்றுவதும்  இந்துத்துவத்தின் தொடர் செயல்பாடு. அதன் வழியாகத் தம்மை நிலைநிறுத்திக் கொள்ளும் வெற்றித் தந்திரம்.

இந்தியைப் பற்றி இது மட்டுமல்ல, இன்னும் மோசமாகவும் அண்ணா சொல்லியிருப்பார். அண்ணா மட்டுமல்ல, பெரியாரும் சொல்லியிருப்பார். இன்னும் ஏராளம் பேர் பேசியிருப்பார்கள்; எழுதியிருப்பார்கள். இந்தியைப் பேய்பிசாசாக உருவகித்த காலம் உண்டு. இழிவுபடுத்திப் பேசியதும் வரலாறுதான். ‘கொடியில் காயப்போட்ட துணிகளைப் போலத் தொங்கும் எழுத்துக்களைக் கொண்ட மொழி’ என்று ஏளனம் செய்திருக்கிறோம். ஏன் அப்படிப் பேசினார்கள்? இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி மாண்டவர்கள் பலர். கைகால்களை இழந்தும் உடல்நலம் பாதிக்கப்பட்டும் வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளம். ‘இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை’ முழுமையாக எழுதினால் அதில் பங்கேற்ற உள்ளூர்ப் போராளிகள் பலரும் வெளிச்சத்திற்கு வருவார்கள். ஏன் அப்படிப் போராடினார்கள்?

தமிழகத்தைப் பொருத்தவரை, ஏன், இந்தியாவைப் பொருத்தவரையிலேயே இந்தி ஒரு மொழி மட்டுமல்ல. அது நம் அடையாளத்தை அழிக்க வந்த ஆதிக்கக் கருவி. கொலைக் கருவியை எடுத்து நெஞ்சில் சாய்த்துக் கொஞ்சவா முடியும்? பிரேம்சந்த், அசோக் வாஜ்பாயி போல ஆயிரமாயிரம் எழுத்தாளர்கள், கவிஞர்கள் அந்த மொழியில் இருக்கட்டும். அவர்கள் படைத்த நூல்கள் பேரிலக்கியமாக விளங்கட்டும். அதற்காக  ‘இந்தி படி, இந்தி படி’ என்று கூவி வரும் ஆதிக்கக் குரலுக்கு அடிபணிய இயலுமா? ஒரு மொழியைப் படிப்பது விருப்பம், தேவை சார்ந்தது. படித்தாக வேண்டும் என்னும் நிர்ப்பந்தத்தின் பின்னால் ‘ஒரே மொழி’ என்னும் கொள்கை இருக்கிறது. அதை எந்த அடிப்படையில் நாம் ஏற்க முடியும்? ‘இந்தி தெரியாது, போடா’ என்று உரக்கச் சொல்லியே எதிர்ப்போம்.

இந்தி என்னும் கொலைக்கருவி

அண்ணா அப்படி என்ன சொல்லிவிட்டார்? ‘மூன்று மாதத்தில் கற்றுக் கொள்ளலாம்’ என்கிறார்.  நடைமுறைத் தேவை சார்ந்து  ஒரு மொழியை மூன்று மாதத்தில் கற்றுக்கொள்ள முடியாதா என்ன? என் உறவினர்கள் பலர் இந்தியில் சரளமாகப் பேசுவார்கள். ஆழ்துளைக் கிணறு அமைக்கும் தொழிலில் இருப்பவர்கள் அவர்கள். இந்தி பேசும் மாநிலங்களுக்குச் சென்று சில மாதங்கள் அங்கேயே தங்கித் தொழில் நடத்துவார்கள். தமிழ்நாட்டுக்கு வந்து பிழைக்கும் இந்திக்காரர்களிடம் பேசுவதற்கு நம்மை இந்தி கற்றுக்கொள்ளச் சொல்லும் இந்துத்துவம், தமிழ்நாட்டிலிருந்து வட மாநிலங்களுக்குச் சென்று தொழில் செய்வோரிடம் பேசத் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்று இந்திக்காரர்களைச் சொல்வதில்லை. ஆனால் தமிழர்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.

அங்கே சென்று தங்கியிருக்கும்  ஓரிரு மாதத்தில் அன்றாடத் தேவைக்கான அளவு இந்தியில் பேசக் கற்றுக் கொள்கிறார்கள். அங்கே தொடர்ந்து  தொழில் நிமித்தம் செல்வதால் போகப்போக இயல்பாகப் பேசுகிறார்கள். இவ்வாறு இந்தி பேசத் தெரிந்த ஏராளமானவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிறார்கள். எந்த மொழியும் அப்படித்தான். ஒரு மொழியை ஆழக் கற்றுப் புலமை பெறுபவர்கள் மிகச் சிலரே. அது தாய்மொழியாக இருப்பினும் அப்படித்தான். புழக்கத்திற்கு ஏற்ற அளவு கற்க மூன்று மாதமே அதிகம். அதிகபட்சம் ஆயிரம் சொற்களைத் தெரிந்துகொண்டு வாழ்க்கையை அருமையாக நடத்திவிட முடியும். ஆயிரம் சொற்களைக்கூட அறியாமல் மொழிப்புலமை உடையவர் போலப் பாவனை செய்வோர் எத்தனையோ பேர்.

அண்ணா  ‘மூன்று மாதம்’ என்று சொல்லிவிட்டார். உடனே மூன்று மாதம் என்றால் சரியாகத் தொண்ணூறு நாட்கள் என்று துளி பிசகாமல் எடுத்துக்கொள்பவரின் மொழிப் புலமையை என்னவென்று சொல்வது? மூன்று மாதம் என்று பேச்சில் பயன்படுத்தும்போது ‘குறைந்த காலம்’ என்று பொருள் வரும். ‘மூனு மாசத்துல பாரு’ என்கிறோம். சரியாக மூன்று மாதம் என்றா பொருள்? சில மாதங்கள் என்று பொருள்.  ‘மூன்று நான்கு பேர்’ என்கிறோம். சிலர் என்று பொருள்.  ‘மூன்றாம் மனுசன்’ என்றால் சம்பந்தமில்லாதவர் என்று பொருள். பெருவரலாறு உடைய மொழியில் இப்படிப் பல நுட்பங்கள் பொதிந்திருக்கும்.

தமிழர்  அடையாளம் அனைத்திற்கும் எதிரானது இந்துத்துவம். நாம் சமூக நீதி என்போம்; அது ‘தகுதி’ என்கும்.  தமிழ் என்போம்; அது இந்தி என்கும். அப்படியே போய்ச் சமஸ்கிருதம் என்கும். இப்போது விவாதத்தைச் சமஸ்கிருதம் நோக்கி நகர்த்திவிட்டார்கள். சமஸ்கிருதத்திற்கு எதிரான போராட்டம் என்பது தமிழ் மொழி வரலாற்றின் முக்கியமான பகுதி. சமஸ்கிருதம் தமிழுக்கு எதைக் கொடுத்தது? தமிழுக்கு மூலம் சமஸ்கிருதம் என்று தவறான கருத்தைக் கொடுத்தது. தமிழ் இலக்கணம் எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என்றது. தமிழ் இலக்கியங்களுக்கு மூலம் சமஸ்கிருதம் என்றது. தெளிந்த தமிழில் அமைந்த வைணவ இலக்கியங்களுக்கு ‘மணிப்பிரவாள’ நடையில் உரை எழுதித் தனதாக்கிக் கொள்ள முயன்றது. தேவபாஷை சமஸ்கிருதம்; நீச பாஷை தமிழ் என்று மேல் கீழாக்கியது. இதுவா இருமொழி உறவு?

இருமொழிகளுக்கு இடையேயான உறவு எப்படி இருக்கும்? கொடுத்தலும் பெறுதலும்தான் மொழி உறவு. ஆனால் இங்கே எப்படி இருக்கிறது? எப்போதும் சமஸ்கிருதம்தான் கொடுக்குமாம். தமிழ் பெறுமாம். தமிழுக்குக் கொடுக்கும் திறன் இல்லையா? ஒருவழிப் பாதையாக மொழி உறவு இருக்கவே முடியாது. சரி, சமஸ்கிருதம் நமக்கு எதை வேண்டுமானாலும் கொடுத்திருக்கட்டும். அதில் எத்தனையோ அதிசயங்கள் இருக்கட்டும். நம்மை நோக்கி அது வரும்போது எல்லாவற்றிலும் அதன் ஆதிக்க குணமே முன்னிற்கும். ஆதிக்கத்தை எல்லா வழியிலும் எதிர்த்தாக வேண்டும்.

ஆதிக்கத்தை எதிர்த்த அண்ணாவை அறிஞர் என்கிறோம் நாம்; முட்டாள் என்கிறது இந்துத்துவம்.

—–   22-10-22



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

"தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்" என்ற நூல் குறித்த அறிமுகம் இந்து தமிழ்திசை செய்தித்தாளில் இன்று வந்துள்ளது. நூலை எழுதியவர் மறைமலை அடிகளின் பெயரன் தாயுமானவன் என்பவர். கீழ்க்கண்ட கட்டுரையில் மஞ்சளடித்த வரிகளைக் கவனியுங்கள். "மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு போன்ற திராவிட மொழிகள் தமிழில் வடமொழி நிகழ்த்திய தாக்கத்தால் விளைந்தவை என்பது திருத்தமாக விளக்கப்பட்டுள்ளது" என்று விமர்சகர் மண்குதிரை குறிப்பிடுகிறார்.
கால்டுவெல்லுக்கு முன்பே எல்லிஸ் திராவிட மொழிக்குடும்பம் குறித்த கருதுகோளை முன்வைக்கிறார். கால்டுவெல்லுமேகூட தமிழிலிருந்துதான் பிற திராவிட மொழிகள் வந்தன என்று சொல்லவில்லை. தமிழகத்தில்தான் இந்தக் கருத்தாக்கம் நிலவுகிறது. எடுத்துக்காட்டாக மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, "கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன் உதரத்தே உதித்தே ஒன்று பலவாகிடினும்" என்கிறார். இங்கே தாயுமானவன், அப்படி நாசூக்காகக்கூட கூறவில்லை. வடமொழியானது பலவந்தமாக தமிழை என்னவோ செய்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகளை உருவாக்கிவிட்டது என்கிறார்.
மொழியியல் நிபுணர்களின் கருத்து முற்றிலும் வேறானது. மொழிகள் சில முந்துமொழிகளிடமிருந்து பிரிந்து புதிது புதிதாக உருவாகிக்கொண்டே இருக்கின்றன. எந்த மொழியும் ஒரே நேரத்தில் இளமை மாறாமல் இருந்துகொண்டே பிள்ளை மொழிகளை உருவாக்கிக்கொண்டே இருக்கமுடியாது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்றுமே முந்து-திராவிடம் என்ற ஒரு யூக மொழியிலிருந்து கிளைத்தவையே. இதிலும் தெலுங்கு முன்பே பிரிந்துவிட்டது. தமிழும் கன்னடமும் காலத்தால் பின்பு பிரிந்தவை. அதன்பின் பல நூற்றாண்டுகள் கழித்து, தமிழிலிருந்து கிளைத்துப் பிரிந்தது மலையாளம்.
பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி எழுதி கேம்பிரிட்ஜ் வெளியிட்ட "The Dravidian Languages" (2003) நூல் முக்கியமானது. அதிலிருந்து ஒரு பக்கத்தைக் கீழே கொடுத்துள்ளேன். திராவிட மொழிகள் எவ்வாறு கிளைத்தன என்பதுகுறித்த ஆராய்ச்சிகள் வெகு காலமாக நடந்துவருபவை. அவைபற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல், 'பொழுதுபோக்கு மொழியியல்' பார்வையில் நம் தமிழ்நாட்டில் மட்டுமே தமிழையும் பிற திராவிட மொழிகளையும் குறித்த அபத்தமான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. மறைமலை தொடங்கி பாவாணர் வழியாக இந்த ஆராய்ச்சிகள் ஆழமாக நம் மாநிலத்தில் பரவி, தமிழ் மொழிவெறியை ஊக்குவிக்கவும் பிற திராவிட மொழிகளைச் சிறுமைப்படுத்தவுமே உதவுகின்றன.
தமிழைப்போலவே, தெலுங்கும் கன்னடமும் தம் அளவில் தாமாகவே உருவாகி, தனித்து நிற்கும் மொழிகள். தெலுங்குக்கும் கன்னடத்துக்கும் வெவ்வேறு சதவிகிதத்தில் தமிழோடு தொடர்பு உண்டு. அது மகள்-தாய் தொடர்பு அல்ல. சகோதரத் தொடர்பே அது.
ஒரு காலத்தில் அண்ணாமலைப் பல்கலையில் மிகச் சிறந்த மொழியியல் துறை விளங்கியது. தமிழ்ப் பல்கலையில் சில காலம் இந்த நிலை இருந்தது. இப்போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை. குப்பம் திராவிடப் பல்கலை இருக்கும் நிலையும் தெரியவில்லை. இதுபோன்ற ஒரு புத்தகம் வரும்போது தமிழகத்தின் மொழியியல் பேராசிரியர்கள் எந்த மறுப்பையும் சொல்வதில்லை. தீவிரமாக இந்தக் கட்டுரைகளை அலசுவதில்லை. அதன் காரணமாகவே என் போன்ற, துறைக்கு வெளியில் இருப்பவர்கள் இப்பதிவை எழுதவேண்டியிருக்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

https://www.facebook.com/badriseshadri/posts/pfbid0npZE98kB9wX3wKjoqBPXHtuxgcvowcEA9Qrmr4CqVTdyQTfLC8QrkUQqGcqNhqTjl

 Q/A from George Hart. I will give it below separated into three posts. A few highlights:
Tamil is one of the two independent classical traditions of India, the other being Sanskrit.
Tamil, in its most profound manifestation, is not a language; it is a literature.
Sanskrit syntax is highly influenced by Dravidian.
Sanskrit has been enormously influenced by Dravidian
Hindi and the other Indo-Aryan languages are largely Dravidian in their syntax.
Tamil culture was full of injustice of all sorts.
The future of Tamil is pretty dim, I fear ...
From soc.tamil.culture group, Circa July 1994
Questions by Meenarakshakan Vishnu and answers by Professor George Hart of U.C. Berkely, a renowned scholar of Sanskrit and Tamil.
QUESTION 1: At the present time, despite our proclamations in praise of Tamil, Tamil is relatively an unknown language. At least not as well-known as Chinese, Arabic, Sanskrit and Hindi. How did you come to know of Tamil and what made you to dedicate your life to the study of Tamil?
PROF. HART: Tamil is one of the two independent classical traditions of India, the other being Sanskrit. As such, it must be studied if one is to understand how Indian culture evolved.
QUESTION 2: There are many Tamils from the island of Sri Lanka living outside as refugees. It is estimated that about 100,000 Tamils live in Metro Toronto alone. Similar numbers live in Australia and Europe. It is a sad fact that the younger generation of Tamils are not learning the Tamil language. How can we motivate them to learn Tamil? What benefits will they have by learning Tamil outside the Tamil speaking regions?
PROF. HART: You can only get children to do things by example. I have scarcely seen a Tamil with Tirukkural in his/her house, much less Sangam literature and the Kamparamayanam. If every Tamil would have 50 major Tamil books at home and would read them occasionally, the children would be come to value the language. Is it any wonder children think Tamil is a useless language, with no literature and nothing to contribute? They learn this from their parents. I repeat: unless you have at least some of the major Tamil classics at home, you have no right to expect your children to learn Tamil. Children will not respect what their parents don't respect. Tamil, in its most profound manifestation, is not a language; it is a literature.
QUESTION 3: If a word is common between Tamil and Sanskrit, in the past, scholars would assume it to be a Sanskrit word and that the Tamil borrowed it from Sanskrit without any thought. I think this was partly caused by the myth that Sanskrit was the gods' language (Deva Basha) and it would not have possibly borrowed words from a language of a swathy race. But recent unbiased etymological studies have shown that Sankrit has borrowed even fundamental words such as 'kaala' (time), 'kaama' (love) from Tamil. What is your thought on this?
PROF. HART: Kaala and kaama are both Sanskrit (inpam and veeLai are Tamil -- veeLai = Skt. velaa). We know pretty well what is Dravidian and what isn't. There are many Dravidian words in Sanskrit (miin, niir, kuvalaya, kalai, perhaps mukham). This is a science, but unfortunately few nowadays take the trouble to learn it. It is quite as complex as nuclear physics, and cannot be learned unless one is willing to spend years. If you do that, you will find that we know what words are Indo-European (for the most part), and what words are not. Still, there are some words that are not clear -- e.g. mukha, nagara. Prof. Emeneau, the dean of Dravidian Linguistics, says "Etymologies are sometimes an act of faith." Such, however, is not true of kaala and kaama. An intriguing (and little-known) fact is that Sanskrit syntax is highly influenced by Dravidian.
Questions by Meenarakshakan Vishnu and answers by Professor George Hart of U.C. Berkely, a renowned scholar of Sanskrit and Tamil.
QUESTION 4: Sanskrit has been in contact with Tamil for a long time. However, it is claimed that Tamil has maintained its separate identity even with the heavy pressure by the priestly class. What in your opinion are the main differences between Sanskrit and Tamil literature and world-views in general?
PROF. HART: Come on. The purest Tamil was written by Brahmins -- viz. Parimeelazakar, Naccinaarkkiniyar, etc. This sort of idea is utter fantasy. Without the contributions of the Brahmins, Tamil would be impoverished. Like every language, Tamil is a creation of everyone who speaks it. Brahmins have contributed far more than their 3% (populationwise). Literatures don't have world views, authors do. Actually, Tamil and Sanskrit are part of the same cultural stream. If The contributions to tamil literature by brahmins is truly superlative. If the per capita contribution to tamil literature were to be calculated, no other single community would surpass much what brahmins have contributed, I would guess. But unlike some of the original contributors, people who contributed to commentaries, significantly distorted the original message. ParimElazhakar's commentary on ThirukkuRaL is considered to be the last of the 10 commentaries on it, then available, and acknowledged to be the best even by modern scholars based on 5 of the old commentaries that are now available. (may be more were discovered in recent times??) Devaneya pavanar also says ParimElazhakar's 'urai' is the best among the then available urais. Let me quote his words in the preface to his 'thamizh maraburai' "athu perumbaalum Enaiya uraikaL ellAvaRRinum ciRanthathu enbathum, cila kuRaLkaLukku Enaiya uraiyaaciriyar kaaNa mudiyaatha uNmaip poruLaip parimElazhagar n^uNmaiyaaga nOkkik kanduLLAr enpathum uNmaiyE". you study Russian or Latin or Greek (as I have), and then come and study Sanskrit and Tamil, this becomes clear. It IS true that Tamil possesses one of the greatest of all world literatures (so does Sanskrit). There is no doubt whatsoever in my mind that Sanskrit has been enormously influenced by Dravidian -- much more so than most scholars would admit. (I wrote my thesis on one aspect of this; Prof. Emeneau has worked on other aspects). Note that Hindi and the other Indo-Aryan languages are largely Dravidian in their syntax. (This, of course, is also true of Sinhala).
QUESTION 5: Prof. Benjamin Walker claims that Tamil was debased by its contact with the Sanskrit. In his words: "...And in most cases it [Sanskrit/Brahmanical contact] debased what it influenced. The noble early poetry of Tamil, characterized by simplicity and realism, never recovered its freshness after contact with Sanskrit, and Tamil literature was thereafter subjected to the artificialities of the northern tongue. Practically every vernacular literature has suffered in like manner as long as it lay under the influence of Sanskrit influence." You have studied these Sangha literature and have translated a selected set of these early Tamil poetries and are in the process of translating the entire collection of 'pura nanooru' poetry into English. Do you think Walker is right when he wrote the above?
PROF. HART: Of course not. How can one language be debased by another language? This is a fascist idea. English could not exist if its speakers thought like this -- nor, for that matter, could Tamil or any other language. No human race is pure, no language is pure. A good thing, too. This is not to say that veneration of Sanskrit was not often carried to ridiculous and destructive extremes. There is a famous Telugu poet who wrote an original work in Telugu, and then, to get it accepted, had to write a Sanskrit "original" and claim he translated that. (Prof. V. Narayanarao has told me this -- he's an eminent Telugu scholar). Fortunately, this was never true in Tamil. It's like everything else. Influence by another language in moderation is healthy. When it becomes fanatic, it becomes unhealthy. I can never forget what my Tamil teacher said once. I was reading Kalki's Sivakamiyin Sapatam, and I told him, "You say Tamil shouldn't use Sanskrit words -- what do you think of Kalki, then, who uses so many Sanskrit words?" "No," he said, "When Kalki uses Sanskrit words, they sound like Tamil words." That's the whole point: if writing is natural and effective, who cares where the words come from? If it's stiff and unnatural, and that's because it borrows words in an extreme way, of course that's bad.
QUESTION 6: What is your evaluation of the new Tamil literary works >associated with the struggle for self-determination in Tamil Eezam?
PROF. HART: I don't know enough about these works to evaluate >them. My main area of study is old Tamil. I wish I knew more.
QUESTION 7: In Tamil Nadu, during this century there emerged various rationalistic and atheistic organizations that are opposed the Manu's Law based Brahmanical world view that have become part and parcel of Tamils life and want to get rid of these influences. What is your thought on these organizations and their effort?
PROF. HART: It is incorrect to brand these ideas as Brahmanical. Like all old cultures, Tamil culture was full of injustice of all sorts. I believe that superstition (muuTa nampikkai) is one of the two basic flaws of Indian culture, the other one being gauravam (and, of course, caste). Yes, it would be wonderful if somehow Tamils could get past superstition. But I think one must be very careful not to throw out beautiful and worthwhile things in the name of getting rid of superstition. On the whole, the "rational" organizations were not very rational, as they preached hatred and intolerance. One must practice what one preaches, in my view.
QUESTION 8: Recently, LTTE's 'kalvip poRuppaaLar' said that "Tamils education has been going on a downhill ever since Manu's Laws were introduced into the region some 2000 years ago. By these laws, women and non-brahmins, were barred from education. It is only during the British rule that women and non-brahmins were able to have education. Even that education was largely tailored for the exploitation of India/Ceylon by the British and not for the benefit of the Tamil society. The leaders who took over the British did not make any major revisions to the educational policies and simply kept what the British left. This has done a serious damage to the originality and the applicability of modern day education in Tamil regions. The LTTE is committed to changing this situation". What is your comment on this statement?
PROF. HART: Why, O! why must everyone blame Manu for everything? Yes, his laws are often very much at odds with modern ideas -- but who actually ever followed them as a template? Tamil folk works often start out, "Such and such a king ruled according to Manu." It is quite clear that the people who sang these folk song don't have the remotest idea what Manu says (nor, for that matter, does anyone else except for a few obscure Brahmins.) (Note this is also true of the "Vedas.") In Sangam lit. itself we find a strong class society, with clear "Vedas.") In Sangam lit. itself we find a strong class society, with clear evidence of caste and untouchability -- not because of Manu, surely. Manu is just one of many manifestations of an extremely complex social framework. I don't approve of it, any more than I approve of the slavery the Romans practiced (or the Southerners in America). But the mindset that produced untouchability is not the result only of the Brahmins, who, after all, made up only 3 percent of the population of Tamil Nadu and were almost entirely absent in Tamil Lanka. It was Tamil Nadu and were almost entirely absent in Tamil Lanka. It was shared by all the upper castes. Let the group that is without guilt throw stones at other groups. Of course, I strongly condemn any group that . stones at other groups. Of course, I strongly condemn any group that considers itself naturally superior to all others. When Brahmins show this mentality, I would condemn them. But let's be frank -- all the castes sometimes show this sort of intolerance. The whole mentality (manappaanmai) must somehow be changed. I remember some politicians who would excoriate the Brahmins as responsible for the caste system etc. etc. -- yet they would turn around and marry their daughters to their uncles or first cousins.
QUESTION 9: What do you like about Tamil? What do you dislike about Tamil? What do you think is the future of Tamil?
PROF. HART: Tamil is a wonderfully expressive, powerful language, with one of the richest literatures in the world. Its literature contains things that no other literature has -- for example, it's amazing use of rhythm. Ramana Maharshi knew Sanskrit and Telugu as well as Tamil. He said the veNpaa was the most complex meter in any of those languages. The future of Tamil is pretty dim, I fear -- recently, someone went to India and couldn't even get a copy of the Sundara Kanda of the Kamparamayana. What's going on? One of the most cultured and literate peoples in the world seems to be self-destructing. They take the worst from the West, ignore their own, and blame the North or Brahmins or whoever is at hand for their problems. If people want Tamil to flourish, they have to cultivate it: to learn it, to read it, to value it. It would also help if they would learn another language and literature (especially another Indian language such as Telugu or Sanskrit). There is no substitute for being literate -- and that means knowing and loving literature.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

 என்ன சுப வீ, பத்ரி சேஷாத்திரி கருத்து சொன்னதுக்கு "பூணூல் தெரியுது, அறுத்துருவோம்"னு சொன்னீங்களாமே? என்ன இவ்வளவு கோழையா இருக்கீங்க? யாராவது கருத்து சொன்னாலோ கேள்வி கேட்டாலோ பூணூல், பிராமணன்ன்னு முத்திரை குத்தி திசை திருப்பி விட்டுர்றதா? பதில் சொல்றதுக்கு ஒரு தைரியம் வேணும் சுப வீ.

ஆயிரம் கேள்வி கேக்குறீங்க இந்தப் பக்கம் இருக்குறவங்களைப் பாத்து. எத்தனை தடவை பதில் சொன்னாலும் மண்டையில ஏறாம 60 வருஷமா கேள்வி மட்டுமே கேட்கத் தெரியுது, ஆனால் ஒரே ஒரு கருத்து, உங்களுக்கு எதிரா சொன்னாலோ கேள்வி கேட்டாலோ "என்ன ஐயரே..."ன்னு ஆரம்பிப்பீங்களா? என்னய்யா நியாயம் இது? ஒருதடவையாவது ஏதாவது உருப்படியா பதில் சொல்லுங்க திராவிட உரிமையாளரே?
திராவிடத்தோட உண்மையான முகத்தை கிழிச்சு பார்க்க ஆரம்பிச்சாச்சு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அண்ணாதுரை, ஈவேரா பத்தி இன்னும் நிறைய கேப்போம். பதில் சத்தியமா இருக்காது. "என்ன ஐயரே ...? தான் உங்க பதில்னு நல்லாவே தெரியும்.
சாயம் வெளுக்க ஆரம்பிக்கிறது சுபவீ.
கருத்துக்களில் நியாயம் பார்க்கலாம், சாதி பார்க்கலாமா? என்னைப்போன்ற பூணூல் அணியாதவர்கள் கேட்டால் அதிலும் சாதியை புகுத்தி "பார்ப்பன அடிமை" என்று முத்திரை குத்துவது அயோக்கியத்தனமாக இல்லையா?
"எங்களை உருவாக்கியவரை இப்படி ஒருவர் எப்படி சொல்லலாம்" என்று வஹாபியம் பேசுகிற திராவிட திமிர் உங்களுக்கு எங்கிருந்து வருகிறது. உங்களைத்தான் அண்ணாதுரை உருவாக்கினார், உலகை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அண்ணாதுரையை கேள்வி கேட்டது/கேலி செய்தது பாரதிதாசன் துவங்கி வைத்தது. பாரதிதாசனிடம் எந்த நூலைக் கண்டீர் சுபவீ?
1957 தேர்தலில் அண்ணாதுரைக்கு எதிராக பரப்புரை செய்தாராமே உங்கள் பெரியார். மிக மோசமான வார்த்தைகளில் திட்டினாராமே. அதற்கு அண்ணாதுரை "நாங்கள் அவரைத் தந்தை என்கிறோம்; அவர் எங்களை வேசி மகன் என்கிறார்' என்று அண்ணாதுரை கவுண்ட்டர் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறதே". உங்கள் பெரியாரிடம் என்ன பூணூல் கண்டீர் சுபவீ?
ஓருவர் கருத்து சொன்னால் "பூணூல் தெரிகிறது, கத்தரித்து விடுவேன்" என்று ரவுடித்தனம், காவாலித்தனம் தான் உங்கள் பண்பா? விஷப்பாம்புகள் அல்லவா நீங்கள்! இன்னும் அந்த 21ம் பக்கத்துக்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை, இந்த லட்சணத்தில் இன்னொரு ரவுடித்தனம்.
பூணூல் தெரிந்தால் என்ன? சங்கத்தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் உ.வே. சாமிநாதையர் என்பவரின் பூணூல் தெரியும். உங்களுக்கு வெட்கமாயில்லை? இப்பேர்ப்பட்ட இனத்தை வசை பாடி "பூணூலை அறுப்பேன்" என்று காவலித்தனம் செய்ய?
பூணூல் தெரிந்தால் என்ன? தமிழுணர்வைத் தூண்டும் எல்லா பேச்சுக்களிலும், கவிதைகளிலும் எங்கள் பாரதியின் பூணூல் தெரியுமே. உங்களுக்கு பிடிக்கவில்லையென்றாலும் அவன் மகாகவி. மானம் கெட்டுப்போனதா உங்களுக்கெல்லாம்?
பூணூல் தெரிந்தால் என்ன? தேர்தலில் வெல்வதற்கு 380 கோடி கொடுத்து ஆலோசனை வாங்கினீர்களே ஒரு பீஹாரியிடம்? அவன் சட்டைக்குள் பூணூல் இருந்தது தெரியுமா?
எங்கள் அன்னைத்தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவனின் நாவை அல்லவா நாங்கள் அறுத்திருக்க வேண்டும்? அசிங்கம், இன்று அவனுக்கு தெருவுக்கு தெரு சிலை.
ஒரு கருத்து, உங்களுக்கு பிடிக்காத கருத்து சொன்னால் அவரை குழுவில் இருந்து நீக்குவதுதான் உங்கள் பெரியவரின் பெருந்தன்மையா? ஆஹா! உன்னதம். நீங்களெல்லாம் கருத்து சுதந்திரம் பற்றி பேசும் பொழுது உங்களுக்கு நா கூசவில்லையா?
திராவிடத்தின் முடை நாற்றம் தாங்கவில்லை தமிழகத்தில். இருண்டு கிடந்த தமிழ்நாட்டில் திராவிடத்துக்கு எதிராக தமிழர்கள் முணுமுணுக்கத் துவங்கி விட்டார்கள். நூலின் துணை கொண்டு ஒரு அறிவுப்புரட்சி அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் உங்கள் காது சவ்வு பிய்ந்து போகும் அளவு பேரொலியுடன் உங்கள் கருஞ்சட்டையை கிழித்து தொங்கவிடும்.
கருஞ்சட்டை கிழிப்பு சீக்கிரம் நடந்தேறும்.
கருஞ்சட்டை கிழிக்கப்படும், எங்கள் கைகளால் அல்ல எங்கள் கருத்தால், நூல் அறிவால். அதுவரை உங்கள் விஷ நாக்குகள் சுழலட்டும். ஆனால் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் கருஞ்சட்டையின் கருத்து கிழிப்பு சீக்கிரம் நடந்தேறும் எங்கள் கருத்துக்களால்.
பல நூல் படித்த பூணூல் அணியாத
ச. சண்முகநாதன்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard