New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஈ.வே.ரா. முன்னிலையில் ஜெயகாந்தன்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
ஈ.வே.ரா. முன்னிலையில் ஜெயகாந்தன்
Permalink  
 


ஈ.வே.ரா. முன்னிலையில் ஜெயகாந்தன் பேசியது....
1959 ல்,திருச்சியில் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு தேவர் ஹாலில் நடைபெற்றது.அதன் திறப்பாளரான பெரியார் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பெரியார் தனது வழக்கமான தோரணையில் நமது இதிகாச புராணங்களையும், இந்து மதத்தையும், பிராமணர்களையும் கடுமையாகக் கண்டனம் செய்தும், நான் பார்ப்பனனின் எதிரியா? நான் பார்ப்பனீயத்தையே எதிர்க்கிறேன்!’ என்றெல்லாம் அவர் தனது வாழ்நாளில் கைக்கொண்டிருக்கிற கொள்கைகளை விளக்கி முக்கால் மணி நேரம் பேசி முடித்து அமர்ந்தார்.
அடுத்து பேச துவங்கிய இளம் எழுத்தாளர் திரு ஜெயகாந்தன் அவர்கள்;" மாநாட்டின் திறப்பாளராய் வீற்றிருக்கிற நாத்திகப் பெரியார் திரு. ஈ.வே.ரா.அவர்களே,
நமது காட்டுமிராண்டித்தனத்துக்கோ, நாம் மூடர்களாய் இருப்பதற்கோ, நமது வறுமைக்கோ பிராமணர்கள் காரணமல்ல; பிராமண தர்மங்களும் காரணமல்ல; நமது மதங்களும் காரணமல்ல; நமது கோயில்களும் புராணங்களும் காரணமல்ல. தெளிவாகச் சொன்னால் இந்தப் பொதுவான வீழ்ச்சிக்குப் பிராமணர்களும் பலியாகியே இருக்கிறார்கள். அதன் காரணமாகப் பலரின் வசைக்கு அவர்களும் ஆளாகியிருக்கிறார்கள்.
பிராமண தர்மங்களிலிருந்து அவர்கள் வழுவிப் போனதனாலேயே நமக்குக் கேடு சூழ்ந்தது என்று பாரதியார் பிராமணர்களைச் சாடுகிறார். எனக்கும் ‘பிராமண எதிர்ப்பு’ உண்டு. அது பாரதியார் வழி வந்தது. ‘பார்ப்பனக் குலம் கெட்டழிவெய்திய பாழ்பட்ட கலியுகம்’ என்று தனது சுய சரிதையில் பாரதி குறிப்பிடுகிறான். அந்நியருக்கு ஏவல் புரிந்த ஆங்கிலக் கல்விமான்களாய், ஆங்கில அரசாங்கத்தின் அதிகாரிகளாய், அறிவற்ற விதேசி மோகிகளாய் வாழ்ந்த பிராமணர்களை மிகக் கடுமையாக எதிர்த்தான் பாரதி.
ஆயினும் பிராம்மணீயத்தின் சார்பாகவே எதிர்த்தான். நான் பிராமணர்களை எதிர்க்க வேண்டுமெனில், அதற்குக் காரணம் அவர்கள் பிராமணர்களாக இருப்பதற்காக அல்ல; பிராமணத்துவத்தை அவர்கள் இழந்ததற்காகவே எதிர்ப்பேன்.
நமது சமூகம் புதுமையுற வேண்டும். அதற்குப் பொருள், ஆங்கில பாணியில் அதனை மாற்றுவது அல்ல. நமது பழமையை நாம் அறிந்து கொள்ளாமல், முன்னர் நாடு திகழ்ந்த பெருமையையும், மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியையும் பிரித்து அறிந்தாலன்றிப் ‘பின்னர் நாடுறு பெற்றி’யை நாம் உணர முடியாது.
வருணாச்ரம தர்மத்தால் இந்நாடு மேன்மையுற்று வாழ்ந்தது. அந்தத் தர்மங்கள் கெட்டதனாலேயே தேசம் கெட்டது. ஆன்மீகத்தால் இந்தியக் கலாசாரமும் இந்திய சமுதாயமும் நாகரிகச் செழிப்புற்று விளங்கியது. அந்நியர் வருகையாலும், அடிமை வாழ்க்கையாலுமே நமது அவலங்கள் உருவாயின.
இந்தியாவின் பெருமையையும், தமிழனின் சிறப்பையும் பேசுகிறபொழுது நமக்குள்ளே பகைமை வளர்த்துக் கொள்கிற வகுப்புவாதியைப் போலவும் பிரிவினைவாதியைப் போலவும் நான் பேசவில்லை. பெரியார் அவர்கள், பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என்கிறார். இதை ஏற்றுக் கொள்ள எனக்கு எந்த வித முகாந்திரமுமில்லை.
வடக்கே வாழ்கிறவர்கள் எல்லாரும் பிராமணர்கள் அல்ல; பிராமணர்கள் நமது சமூகத்தின் பிரிவினரேயல்லாமல் அவர்களே ஒரு சமுதாயம் அல்ல. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்கள் ஆந்திரர்களாக அங்கீகரிக்கப்படுகிற பொழுது, வங்காளப் பிராமணர்கள் வங்காளிகளாக அங்கீகரிக்கப்படுகிற பொழுது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்கள் மட்டும் தமிழர்கள் ஆகாதிருப்பது எங்ஙனம்?
அவர்கள் ஸ்ம்ஸ்கிருத மொழியோடு அதிகம் தொடர்பும் பற்றும் கொண்டிருக்கிறார்கள் என்பது தமிழர் நலனுக்கு விரோதமான பண்பு என்று நான் குற்றம் சொல்லத் தயாராயில்லை. ஏனெனில், ஸ்ம்ஸ்கிருதம் என்பது இந்தியாவின் பொதுச் செல்வமே தவிர, அது எந்தப் பிரிவினருக்கும் சொந்தமான ஏகபோக மொழியல்ல. ஸ்ம்ஸ்கிருத மொழிக்கென்று ஓர் இனமோ, ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்போ இந்தியாவில் தனியாக ஒன்றுமில்லை. அது ஓர் ஆதிக்க மொழி அன்று.
அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக ஸ்ம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை மிக்கவனாய் இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் ஸ்ம்ஸ்கிருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவுக்கே வழிகாட்டியிருக்கிறார்கள்.
மேலும் ஸம்ஸ்கிருதக் கலைச் செல்வங்கள் தமிழர்கள் அருளியது அனந்தம். தமிழர் நாகரிகத்தின் பொற்காலங்களில் ஸம்ஸ்கிருதம்
அருமையான
போஷாக்குப் பெற்றிருக்கிறது. நாளந்தாவுக்கு இணையான காஞ்சி சர்வகலாசாலையில் ஸம்ஸ்கிருதப் பேரறிஞர்களான தமிழர்கள் ஆசான்களாய் இருந்திருக்கிறார்கள்.
தர்க்க சாஸ்திரத்தின் பிதாமகனாகக் கருதப்படுகிற திங்கநாதன் ஒரு தமிழனே ஆவான். இந்தியாவின் எட்டுத் திக்குகளிலும் இந்து சனாதனத்தின் பெருமையைக் கொடி நாட்டி, பௌத்தர்களையும் நாத்திகர்களையும் தனது ஞான வன்மையால் வென்று உபநிஷத்துச் செல்வங்களை உலகுக்கு அளித்த ஆதிசங்கரன் ஒரு தமிழனே ஆவான்.
கயிலையங்கிரியிலுள்ள சிவாலயத்துக்கு அர்ச்சகராய் இன்றும் தென்னாட்டைச் சேர்ந்த ஒரு “போற்றி”யே போகிறார். நமது ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ராமாநுஜரின் பெயரால் வடபுலம் எங்கும் ராமாநுஜ கூடங்கள் நிறைந்து கிடக்கின்றன. இந்து சமயத்தின் இன்னுமொரு செல்வமான வைணவத்தை வடக்குக்கு அருளியது தெற்கே ஆகும். மற்றுமொரு மார்க்கமான மாத்வத்தை வட நாட்டினருக்கு அறிமுகம் செய்ததும் நமது கும்பகோணத்தில் பிறந்த ஒரு தமிழன் தான்.
அந்நியரின் படையெடுப்பிலிருந்து இந்தியாவைப் பாதுகாத்த வடபுலத்து ரஜபுத்திர வீரர்களுக்கு இணையாக இந்தியாவின் சமயத்தையும் ஆன்மீகப் பண்புகளையும் காப்பாற்றுவதற்கு ஞான வீரர்களைத் தமிழகமே தந்திருக்கிறது. ஸம்ஸ்கிருதப் பகைமை என்பதே பிரிட்டிஷ்காரர்கள் செய்த சூழ்ச்சியின் விளைவு. அந்த வீழ்ச்சியுற்ற காலத்தில் தோன்றிய மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையைப் போன்ற தமிழ்ப் புலவர் காலத்திலேதான் இந்த வடமொழிப் பகைமை என்கிற வியாதி நம்மைப் பிடித்தது.
நமது ‘மூடத்தன’த்துக்கு இணையாகவும் அதிகமாகவும் உள்ள மூடத்தனங்கள் கிரேக்கப் புராணங்களிலும் உண்டு.
மனிதர்கள் வாழ்ந்த, பேசிய மொழிகள் எல்லாவற்றிலும் ‘மூடத்தனம்’ உண்டு.
நாம் காட்டுமிராண்டிகளானது இந்த இரு நூற்றாண்டுக் கால அடிமை வாழ்க்கையில்தான். அதற்கு முன்னால் சுரண்டலற்ற, வர்க்க மோதல்கள் இல்லாத, ஊனமொன்றறியா ஞானமெய்ப் பூமியாய் இந்தியா திகழ்ந்தது. பிராமணர்கள் நமது அறிவுக்கும், ஞானத்துக்கும் தலைமை ஏற்று வழி நடத்திய சமூகத்தில் உயர்வு, தாழ்வு இருந்தது இல்லை.
மனு தர்ம சாஸ்திரத்தில் சமூக நியாயங்கள் பேதப்படுகின்றனவே என்று கேட்கலாம். மனு தர்மம் ஒரு சட்டம். காலத்தின் தேவையால், நிர்ப்பந்தத்தால் உருவான சட்டம் அது. அதனை இக்கால அறிவும் அனுபவமும் கொண்டு பார்த்தல் தகாது. ஹிந்து சமூகத்தில் ஏற்பட்ட குறைகளை நான் மறைக்க முயலவில்லை. ஆனால் அந்தக் குறைகளுக்கும் ஹிந்து தர்மத்துக்கும் சம்பந்தமில்லை என்றே சொல்லுகிறேன். எல்லாக் காலங்களிலும் தோன்றிய ஹிந்துமத மகான்கள் அனைவரும் தீண்டாமையை எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.
ஹிந்து சமூகத்தில் ஏற்பட்ட குறைகளை அதன் வளர்ச்சியின் மூலமாகவே தவிர்ப்பதற்கான வாய்ப்பு நமக்குத் தடுக்கப்பட்டது. அந்நிய ஆட்சி முறைகளும், இங்கு புகுத்தப்பட்ட ஐரோப்பிய பொருளாதார வாழ்க்கை முறைகளும் நம்மை மேலும் அலைக்கழித்துச் சீர்குலைத்தன.
நம்மை விடவும் பலவீனமான ஒரு கலாசாரம் நவீன விஞ்ஞான உதவிகளுடன் பலாத்கார முறைகளினால் நம்மை அடக்கி ஆண்டது. இந்தியாவின் உண்மையான, புராதன கலாசாரங்களைக் ‘காட்டுமிராண்டித் தனங்கள்’ என்று ஆங்கில நாட்டு மூடர்கள் நம்மைப் பற்றிச் சரித்திரம் எழுதினார்கள். அந்தச் சரித்திரத்தை நம் நாட்டு ‘அடிமை அறிவாளிகள்’ கற்றார்கள்.
அந்நியர் மாதிரி ஆடையணிந்து கொண்டு இந்த உஷ்ணப் பிரதேசத்தில் திரிவதற்கு வெட்கப்படாத தமிழர்கள், நமது கலாசாரப் பண்புகளில் ஒன்றாகிய திருநீறு அணிதல், திருமண் இட்டுக் கொள்ளுதல் ஆகியவற்றுக்கு வெட்கப் பட்டதுமல்லாமல் அவற்றைப் பரிகசித்து ஏளனமும் செய்தார்கள். இந்தச் செய்கை பகுத்தறிவின்பாற்பட்டது என்று அவர்கள் நம்பினார்கள். இது சமூக வாழ்க்கையில் இன்னொருவரின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுகிற அநாகரிகம் என்று கூட அவர்களுக்குப் புரியவில்லை.
கடவுளை எல்லா மதத்தினரும் நம்புகிறார்கள். கடவுள், மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று எல்லா மதங்களும் ஒப்புக் கொள்கின்றன. மதங்கள் மார்க்கங்களே. அல்லாஹ் என்ற வார்த்தைக்குக் கடவுள் என்றே பொருள். கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொல்லுவது ஏதோ பிராமணர்களை மட்டுமே பழிக்கிற சொல் என்று எல்லாருமே நினைக்கிறார்கள்.
ஏசு கிறிஸ்துவும், நபிகள் நாயகமும், காந்தியடிகளும் கடவுளை நம்பியவர்கள்தாம் என்கிற விஷயமே யாருக்கும் ஞாபகம் வருவதில்லை. அந்த விஷயத்தில் எல்லா மதத்தினரும் பெரியார் சொல்லுகிற கடவுளை, ஹிந்துக்களூக்கு மட்டுமே சொந்தமாக்கி விட்டார்கள். ஓர் உண்மையான ஹிந்து இந்த வசைகளுக்காகக் கோபங் கொள்ள மாட்டான். ஏனெனில், இந்த மதத்தைச் சேர்ந்த பல பெரியார்களும், நமது அன்றாட வாழ்க்கையில் பல பாமரர்களும் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். ஹிந்து மதத்தைச் சேர்ந்த பல நாத்திகப் பெரியார்களை நாம் சொல்ல முடியும்.
‘நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம்சாத்தியே சுற்றி வந்து மொணமொணென்றுசொல்லு மந்திரம் ஏதடா’
என்று சொல்லிய சிவவாக்கியரின் கொள்கையின் பாதியே பெரியார் அவர்களின் பகுத்தறிவு வாதம். சிவவாக்கியரின் பகுத்தறிவு அதை முழுமை ஆக்குகிறது:
‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்’ என்று.
ஹிந்து தர்மம் இந்த மண்ணில் வாழ்கிறவர்களின் நடைமுறைக்கு ஒத்தது. இதற்கு ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை. இதைப் படைத்தவனும் இல்லை; அழிப்பவனும் இல்லை. இந்த மதத்தில் எவரும் சேர்த்துக் கொள்ளப்படுவதுமில்லை; எவரும் விலக்கப்படுவதுமில்லை. ஒரு முஸ்லிமும் ஒரு கிறிஸ்துவனும் ஆக்கப்படுகிறான். ஒரு ஹிந்து மதம் அதற்கெல்லாம் தடையேதும் விதிக்கவில்லை. மற்ற மதங்களுக்கு அவன் மாறிப்போவது ஏதோ உத்தியோகம் பார்க்க உடை மாற்றிப் போவது மாதிரிதான்.
ஹிந்து மதம் அதற்கெல்லாம் தடையேதும் விதிக்கவில்லை. இந்த மதமாற்றங்கள் குறித்து விவேகானந்தருக்குக் கோபம் வந்திருக்கிறது. அது பிற மதங்களின் மேல் அவருக்கெழுந்த கோபமல்ல. அந்த மதங்களைச் சார்ந்த அரசுகள் இந்த நாட்டு மக்கள் விஷயத்தில் செய்த கொடுமைகள் குறித்தும், ஹிந்து மதத்தின் களங்கமான தீண்டாமைக் கொடுமையால், பொருளாதார சமூக நிர்ப்பந்தங்கள் காரணமாக ஏற்பட்ட மதமாற்றங்கள் குறித்தும் அவர் கொண்ட கோபமே அது. எனவேதான், ‘எல்லா மதங்களும் , உண்மை என்ற ஒரே சமுத்திரத்தை நாடிச் செல்லும் நதிகள்’ என்று அவர் கூறினார்.
இந்தியாவில் ஆத்திகம் போன்றதே நமது நாத்திகமும். இரண்டும் மிக மிகப் பழைமையானவை. இரண்டுமே அறிவில் விளைந்த இரண்டு கனிகள். நமது அடிமை வாழ்க்கையின் விளைவு தற்காலத்தில் அவை இரண்டுமே மூடத்தனத்தில் முளைக்க ஆரம்பித்து விட்டன. ஒருவன் மூடனாய் இருக்க, அவன் ஆத்திகனாய் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. அப்படியிருப்பின் அவன் பேசுகிற ஆத்திகத்துக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை.
அப்படிப்பட்ட மூடர்களுக்கு இணையான நாத்திக மூடர்களையும் நான் அறிவேன். அந்த மூடத்தனத்துக்கும் அவர்கள் பேச விரும்புகிற நாத்திகத்துக்கும் சம்பந்தம் ஏற்பட்டு விடக் கூடாதே என்று நான் கவலையுறுகிறேன்.
பிராமணீயம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளாதவர்கள், ஆன்மீகம் என்பது என்னவென்று அறிந்து கொள்ள அக்கறையில்லாதவர்கள், ஹிந்து சமயம் என்பது எப்படிப்பட்ட தன்மை வாய்ந்தது என்று தேர்ந்து கொள்ளாதவர்கள், அதனை எதிர்த்து அழிக்கக் கிளம்பி இருப்பது விபரீதம்.
பெரியார் அவர்கள் ‘பிராமணீயத்தை எதிர்க்கிறேன்’ என்கிறார். ஆனால், அதற்காக அந்தப் பிராமண தர்மங்களிலிருந்து வழுவிப்போன, வழுவி வருகிற தற்காலப் பிராமணர்களை ஆதரிக்காமல் அவர்களை இவர் பகைப்பானேன்?எனவே, ‘பிராமணன் என்பவன் யார்?’ என்பதை நாம் விளங்கிக் கொண்டாக வேண்டும் என்று அவரது உரையை முடித்தார்.
நன்றி: (மூலம்: ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன்)
(மீள்)


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பெரியார் (சற்றேத் தாமதாகவேனும்)
' பாப்பானையும் பாம்பையும் கண்டால், பாம்பை விடு,பாப்பானை அடி. அஞ்சும் மூணும் எட்டு அய்யர் குடுமியை வெட்டு பார்ப்பனர்களை நாடு கடத்து, பார்ப்பனத்திகளை நாட்டு உடைமையாக்கு '..
இவையெல்லாம் நான் பள்ளியில் படித்த காலத்தில், பஸ்ஸில் போகும்போது தினமும் படிக்கும் சுவரெழுத்துக்கள்.இவைகளை எழுதிப்போடுபவர்களின் தலைவர் பெரியார். இவையெல்லாம் அவரது பொன்மொழிகள் என்று என் நண்பர்கள் சொல்வார்கள்.அந்தச் சூழலில் அவரைப் பற்றி சற்றே பயத்துடன் எதிர்மறையாக அன்றி வேறெப்படி நினைக்கத் தோன்றும் ?..மேலும் நாங்கள் வாழ்ந்து வந்த இடத்தில், பார்ப்பனர்களை "அய்வரு" என்று இளிவரலாக அழைக்கும் பிற சாதியினர்,(MBC யினர்)தலித் மக்களையும், அவர்களின் சாதி சொல்லி,அதுவும் தாய் சம்பந்தப்பட்ட ஒரு கெட்ட வார்த்தையையும் தவறாமல் சொல்லியே குறிப்பிடுவார்கள். அவர்களுக்கெல்லாம் பெரியார் தான் தெய்வம், அந்தப் பகுதியின் மாரியம்மன் கோவிலில் தலித்துகள் உள்ளே நுழையவும் விடமாட்டார்கள்.ஆனால் பெரியார் இவர்களையெல்லாமும் திட்டாமல் ஏன் பார்ப்பானை மட்டுமே திட்டுகிறார் என்று வியப்பாகவே இருக்கும்.வேதனையாகவும் தான். ஏனென்றால் இடது சாரியான என் தந்தை ஒருபோதும் பிராமணல்லாதவர்களை சாதி காரணமாக மரியாதையின்றி பேசியதில்லை.தமிழாசிரியையாக இருந்த என் தாயாரும் அப்படியே.
ஆனால் ஒருவிதத்தில், மேலே சொன்ன அந்த வாசகங்களே என் படிக்கும் ஆர்வத்தை தூண்டின என்று சொல்லவேண்டும். அப்படி என்னவெல்லாம் இந்தப் பார்ப்பனர்கள் செய்திருந்தால் இப்படியெல்லாம் எழுதுவார்கள் என்று தோன்றியதாலேயே இந்திய வரலாற்றையும், பெரியார், அம்பேத்கர் இருவரையும் ஊன்றிப் படித்தேன்..
பெரியாரின் பல உரைகளையும், சாதி மதம், தீண்டாமை என்ற ஒன்பது நூல்கள் கொண்ட வரிசையும் படித்து அவற்றை, அம்பேத்கர், நேரு மற்றும் இந்திய சமூகத்தைக் குறித்துப் பல நூல்களையும் ஒப்பிட்டு படித்தபிறகு பெரியாரைப் பற்றி இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.
அவரது பொதுப்புத்தி சார்ந்த பகுத்தறிவு வாதம் ரொம்பவே appealing. உதாரணமாக, "ஈரேழு பதினாலு லோகங்களையும் கண்டுபிடிச்சவனுக்கு இமய மலை எவ்வளவு உயரம்னு வெள்ளைக்காரன்தான் வந்து சொல்ல வேண்டிருக்கு"(எம்.ஆர். ராதாவின் இளக்காரக் குரலில்) ஆனால் அவரது பெரிய குறை என்பது,தமிழகத்தின் ஏழ்மை, மூட நம்பிக்கை,சாதியப் படிநிலை, ஒடுக்குமுறை,போன்ற அனைத்துக்குமே பார்ப்பான் என்ற ஏக காரணியை முன் வைத்தார் என்பதே.இங்கே யூதர்களையே எல்லாத் தீமைகளுக்கும் காரணமாகிய ஹிட்லர்தான் நினைவுக்கு வருகிறார்.பெரியார் here and immediate ஐயே கண்டார். வரலாற்றுப் போக்குகளை பற்றி கவலையே படவில்லை. இந்தியாவின் தமிழகத்தின், பெரும்பான்மையான சாதிகளின் அன்றைய கொடும் வறுமைக்கு, ஆங்கிலேய காலனிய ஏகாதிபத்திய கொள்கைகளே காரணம் என்றும், இந்தியாவின் பெருந் தொழில்களான, உழவையும், நெசவையும் , ஆங்கில ஆட்சி சின்னாபின்னப் படுத்தியதுதான், உண்மையான பெரும் காரணம் என்பதையும் அவர் புரிந்து கொள்ள முற்படவேயில்லை என்று தோன்றும்.
மேலும், தங்கள் முன்னால்,(பிராமணரல்லாத உயர் மற்றும் இடைநிலைச் சாதியினர்) கையேந்தி நின்றிருந்த பார்ப்பான், தாசில்தாராகவும்,சிரேஷ்டதாராகவும்,, தங்களையே அதிகாரம் செய்ய வந்தது பற்றிய கடும் கோபத்தையே அவரது எழுத்துக்களில் காணலாம், அதனாலேயே, நாடாண்ட நம்மை இந்த அன்னக் காவடிப் பாப்பான், எச்சிற்கலை பாப்பான், இன்று அதிகாரம் செய்வதா என்பது போன்ற வாசகங்களை அவரது எழுத்துக்களில் நிறையப் பார்க்க முடியும்.
அவரது "நாம்"ல் நிச்சயமாக தலித்துக்களுக்கு இடம் இல்லையென்றும் சொல்ல முடியும்.அம்பேத்கரைப் பற்றிய ஒரு கூற்றில், அவர் அரசியல் சட்ட உருவாக்கத் தலைவராகத் தமது ஆட்களுக்கு மட்டும் ஒரு வழி வகை செயது கொண்டுவிட்டார் என்று நேரடியாகக் குற்றம் சாட்டுவதைப் படித்திருக்கிறேன்.தமிழகத்தில் இன்றும் கூட தீண்டாமைக் குற்தங்கள் நடைபெறுவதற்கும்,தமிழக அரசில்,இன்று வரை கூட தலித்துகளுக்கு,மத்திய அரசில் இருப்பது போல பதவிஉயர்வில்,இட ஒதுக்கீடு, கிடையாது (சில துறைகளைத் தவிர) என்பதையும் அதன் தொடர்ச்சியாகவேக் காணலாம்.
ஆனால் ஒன்று சொல்ல வேண்டும் அன்றும் இன்றும், ஒரு தலைமுறையினர் பார்ப்பனர்களை இளிவரலாக,அய்வரு என்று அழைத்தாலும்,அவர்களது,முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என் சாதியைச் சேர்ந்த சிறுவர்களைக் கூட சாமி என்றழைத்தனர்.இன்று அந்த நிலைமை மாறி இருப்பதற்கும் அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டதற்கும்,பெரியார் ஒரு முக்கிய காரணம். பிராமணர்களுக்கு எதிரான பிற ஜாதியினரின் தாழ்வுணர்ச்சி நீங்கியதுதான் அவரின் சாதனை.(இதைச் சொல்லும்போது இன்னொன்று நினைவுக்கு வருகிறது.பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே என்று பாடிய ஒருவனை, பெரியாரின் அணுக்கத்தோழர் ஒருவர் தம் வாழ்நாள் முழுதும் அய்யர் என்றே குறிப்பிட்டு வந்தார்.)
பெண் சுதந்திரம் பற்றிய அவரது கருத்துக்கள்,மூட நம்பிக்கைகளுக்கு எதிரான ( selective என்றாலும) கடும் பிரச்சாரம்,(அவருக்கு முன்னரே தமிழ்நாட்டில் பாரதி இவற்றைப் பேசியிருந்தாலும்)ஆகியவை முக்கியமானவை என்றே நான் நினைக்கிறேன் பிரிட்டிஷ் காலனியம் பற்றி கார்ல் மார்க்ஸ் அது அன்றைய தேங்கிப் போன இந்தியாவுக்குத் தேவையாக இருந்த ஒரு kick in the Ass என்று சொல்வார். அதைப்போலவே, பெரியார் அன்றைய தேங்கிப் போன தமிழ் சமூகத்துக்குத் தேவையாக இருந்த ஒரு Bloody Kick in the Ass என்று சொல்லலாம்.
ஆனால் அதற்காக அவர் முன்னின்று துவங்கி நடத்திய ஒரு இன வெறுப்பு மனநிலை,இன்னும் தமிழகத்தில் உயிர்ப்போடு இருப்பதும்,அதை அவரைக் கொண்டாடுபவர்கள் உணர்வதே இல்லை என்பதும் வருத்தத்துக்குரிய ஒன்று..


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பெரியார் பற்றி எழுதும்போது ஏனோ ஹிட்லரை இழுப்பது fashionable nonsense ஆகிவிட்டது. prussia மட்டுமல்ல bavaria மற்றும் rhineland போன்ற குட்டி குட்டி ஜெர்மனிய அரசுகளில் கூட எங்குமே யூதர்கள் அதிகாரத்தின் அருகில் இருந்ததில்லை. அந்நாடுகளின் மக்களின் மதமும் யூத மதமும் வேறு. பின்னர் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த ஒருங்கிணைந்த ஜெர்மனியில் கூட அதிகார மட்டத்தில் அவர்கள் இல்லை. யூதர்களுக்கு எதிரான கிளிர்ச்சிகள் அழித்தொழிப்புகள் எல்லாம் ஜெர்மனிய நிலத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான புனித யுத்தத்தின் போதே சைடில் செய்துகொண்டு இருந்த ஆயிரமாண்டு கால வரலாறு உண்டு. இங்கே இந்தியாவில் இருப்பதாக பெரியார் கட்டமைத்தது intra religious dispute. பிராமணர்களுக்கு எதிரான அழித்தொழிப்போ இனக்கலவரமோ 'பிற ஹிந்துக்களால்' நடத்தப்பட்டதாக இந்திய சரித்திரத்தில் எங்கும் இடம் கிடையாது.
பெரியார் தனக்கு பிடிக்காத குழுவை பற்றிய பல இடங்களில் overboard ஆக வெறுப்பு பேச்சை பேசினார். அதிகாரத்தில் இருக்கும் குழுவின் மீது பேசப்பட்டாலும் வெறுப்பு பேச்சு வெறுப்பு பேச்சு தான். ஆனால் அதை நாஜிகளோடும் யூத வரலாற்றோடு ஒப்பிடுவது எந்த வகையிலும் தர்க்கத்திற்கு ஒப்பில்லாதது. இன்றும் இந்தியாவின் நான்காவது ஐந்தாவது சக்தி வாய்ந்த நிதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தமிழ் பிராமணர்கள். எந்த தேர்தலிலும் நிற்காமல் வேறு எந்த சாதியினரும் இந்தியாவில் இப்படி தலைமை பொறுப்புகளுக்கு வந்ததே இல்லை. அப்படிப்பட்ட அதிகார மையத்தை பேசுவதெல்லாம் நாஜியம் அழித்தொழிப்பு என்பது யூதர்களை அவமதிப்பது போல.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

"தந்தை பெரியார் பகுத்த 4 வர்ணங்கள்"...
அண்ணாமலை தனது பேச்சில் பெரியாரின் இறுதிப் பேருரை என்ற அந்தப் புத்தகத்தின் 21 ஆம் பக்கத்தை மேற்கோள் காட்டினாலும் காட்டினார் - விஷயம் நெருப்பு மாதிரி பற்றிவிட்டது!
நமது தேசிய தெய்வீக நண்பர்கள் பலரும் 1967 க்கு முன்பு ஈ.வே.ராமசாமியும் திமுகவினரும் எப்படி ஒருவரை ஒருவர் விளாசினார்கள் என்பதை எடுத்துப் போடவேண்டும் என்று தங்களின் ஆவலை வெளிப்படுத்தினார்கள்.
நமக்கும் அந்த ஆவல் மேலிட்டது!
"தந்தை பெரியார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மலர்"- ஒன்றை "விடுதலை" வெளியிட்டது!
அதில் அவர்கள் எல்லாருக்கும் தந்தை ஆகிய ஈ.வே.ரா. - "எனது பிறந்தநாள் செய்தி"- என்ற கட்டுரையை எழுதி உள்ளார்.
அது 1963 - 64 காலகட்டம்! "பச்சைத் தமிழர்"- என்று கூறி காமராஜரையும் அதனால் காங்கிரசையும் ஆதரித்துக் கொண்டிருந்த காலம்!
திமுக - ராஜாஜியின் சுதந்திரா கட்சி - காயிதே மில்லத்தின் முஸ்லீம் லீக் எல்லாம் காங்கிரசுக்கு எதிராக ஒன்றாக அணிதிரண்டு கொண்டிருந்த காலம். பிரசார மேடைகளில் இணைந்தே காங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய்தனர்! (பிறகு 1967 தேர்தலில் முறையான கூட்டணி உருவாயிற்று!)
(அதற்கு முன்பே 1962 தேர்தலிலேயே கூட்டணி என்று ஏற்படாவிட்டாலும் ராஜாஜி காஞ்சிபுரத்தில் அண்ணாதுரையை ஆதரித்து பிரசாரம் செய்தார்!)
இந்தப் பின்னணியில் ஈவேராவின் ஆத்திரம் தலைக்கேறியது! பார்ப்பனர்களும் (ராஜாஜி), முஸ்லீம்களும்(காயிதே மில்லத்) கிறிஸ்தவர்களும் (ரத்னசாமி) - தான் ஆதரித்த 'பச்சைத் தமிழன்' காமராஜை எதிர்ப்பதைக் கண்டு ஈவேராவின் ஆத்திரம் பொங்கியது!
அப்போது அவர் எழுதுகிறார் பாருங்கள்!
"நமது சமுதாயத்தின் நான்கு எதிரிகள்!"
1) பார்ப்பனர்கள்
2) முஸ்லீம்கள்
3) கிறிஸ்தவர்கள்
4) நம்மில் கீழ்த்தர மக்கள் - இன்று நமக்கு சமுதாய எதிரிகளாக இருந்த நான்கு கூட்டங்கள் (குழுக்கள்) இருக்கின்றன.
இந்நால்வரும் ஏற்கனவே நம் சமுதாயத்தைப் பற்றிக் கவலை இல்லாதவர்கள்.
இந்நான்கில் மூவர் - தம் தம் சமுதாயத் துறையில் நம்மை விட மேலான நிலைமையில் அரசியல், பொருளாதார இயல் கல்வி இயல், பதவி இயல், மத இயல் முதலியவற்றில் சராசரித் தன்மைக்கு மிக மிக மேலான நிலையில் இருப்பவர்கள்"...
இதுவரை ஈவேரா சொன்னதை விட இப்போது சொல்வதுதான் ஹைலைட்!
மூவரைப் பற்றிச் சொன்ன - நான்காவது க்ரூப்பை பற்றி சொல்கிறார்!
"ஒரு கூட்டத்தினர் நம்முடைய இழிநிலை பற்றியும் - ஏன் தங்களுடைய இழிநிலை பற்றியும் கூட - கவலை இல்லாமல் 'சோறு - சீலை - காசு' ஆகிய மூன்றையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டவர்கள் ஆவார்கள்! ஆதலால் ஒரு சிறு நலத்திற்கும் தங்களுடைய எதையும் தியாகம் பண்ணவும் துணிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள்!"
'நம்மில் கீழ்த்தரமானவர்கள்'- என்று ஈவேரா நாசூக்காகக் குறிப்பிட்டாலும் - மூன்று சமுதாய உயர் பிரிவினரைக் கூறிவிட்டு - நான்காவதாக இப்படிக் கூறும்போது விளிம்பு நிலை சமூகத்தினரைக் கூறுகிறார் என்பது தெளிவாகிறது!
ஈவேரா மேலும் சொல்கிறார்!
ஈவேரா - மணியம்மையின் பொருந்தாத் திருமணத்தைக் காரணம் காட்டி அண்ணாதுரை விலகி - தனிக்கட்சி - திமுக - விலகியபோது "கண்ணீர்த் துளிகளோடு விடைபெறுகிறோம்!"- என்று கூறி இருந்தார்!
அதுமுதல் ஈவேரா திமுகவினரை எப்போது குறிப்பிட்டாலும் - "கண்ணீர்த் துளிகள்"- என்பார்!
ஈவேராவின் 'பகுத்தறிவு' பிரசாரத்தை இந்துக்கள் அப்போதே கேள்வி கேட்டனர்!
ஏன் நீர் ஹிந்துக் கடவுள்களை மட்டும்தான் பழிப்பீர்களா? இஸ்லாமியர் கிறிஸ்தவர்கள் மத்தியில் "பகுத்தறிவு" பிரசாரம் செய்யமாட்டீர்களா?- என்ற கேள்விகள் அப்போதே எழுந்தன!
இதோ அதே கட்டுரையில் ஈவேரா கூறுகிறார்:
"மற்றும் நமது பகுத்தறிவுக் கிளர்ச்சியும் நேருவின் சோஷ்யலிசக் கொள்கையும் இஸ்லாம் - கிறிஸ்தவ சமுதாயத்திற்கு அவர்கள் மதத்திற்குக் கேடு வரும் என்ற புரளியை பார்ப்பனர் கிளப்பிவிட்டு விட்டார்கள்!
இதனாலேயே முஸ்லீம், கிறிஸ்துவத் தலைவர்களான திரு.இஸ்மாயில் அவர்களும், திரு.ரத்னசாமி அவர்களும் இவ்விரு சமுதாயமும் ராஜாஜியை ஆதரிக்க வேண்டும் என்று கட்டளை இட்டு விட்டார்கள்!"
அதாவது ஈவேரா ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் - தனது "பகுத்தறிவு" பிரசாரம் முஸ்லீம் - கிறிஸ்தவர்களை நோக்கித் திரும்பவே திரும்பாது! அது "பார்ப்பனர்" கள் கிளப்பிய புரளி என்கிறார்!
அதாவது முஸ்லீம்களையும் கிறிஸ்தவர்களையும் அவர்களின் நம்பிக்கைகளையும் இதே போல் பகுத்தறிவுக் கேள்வி கேட்பீர்களா?- என்று கேட்டதற்கு - அதெல்லாம் வெறும் "புரளி" - என்று ஈவேராவே தனது 'பகுத்தறிவுப் பிரசாரத்தின்' யோக்யதையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார்!
மேலும் ஈவேரா தொடர்கிறார்:
"ஆகவே இனிவரும் தேர்தல்களில் இந்த மூன்று குழுவினரும், தங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்று தெரிந்தாலும், நம்மில் இருந்து கொண்டே தங்கள் சுயநலத்துக்கு நம் இனத்துக்கு கேடு செய்வது என்ற முடிவில் ஆச்சாரியாரை அண்டி இருக்கும் கண்ணீர்த் துளிகளைத்தான் ஆதரிக்க வேண்டும்!"
மேலும் "தமிழர்கள்" யார் என்பதைப் பற்றிய ஈவேராவின் புரிதலும் இங்கே அம்பலமாகிறது!
"அப்போட்டியில் காமராசர் கட்சி - (காங்கிரஸ்) - தமிழர்களின் வோட்டுகளை அதிகமாய் (மெஜாரிட்டி) பெற்றாலும் கூட இந்த பார்ப்பனர், முஸ்லீம், கிறிஸ்தவர்கள் ஆகிய முக்குழுவும் எந்தக் கட்சிக்கு ஓட்டு செய்வார்களோ அந்தக் கட்சிதான் ஜெயிக்க முடியும்!"
"திருவண்ணாமலை தேர்தல் முடிவு அப்படித்தான் ஏற்பட்டது"
"நம் தமிழ் மக்களின் ஓட்டு நமக்கு அதிகமாய் கிடைத்தது. இருந்தும் இந்த மூன்று குழுவினரின் ஓட்டுகளாலேயே காமராசர் (தமிழர் கட்சி) தோல்வி அடைய வேண்டியதாயிற்று!"
'நம் தமிழ் மக்களின்' வோட்டு 'தமிழர் கட்சி' யாகிய காமராசர் கட்சிக்கு கிடைத்தது - இந்த 3 குழுவினர் வோட்டுகளால்தான் காங்கிரஸ் திருவண்ணாமலையில் தோற்றது என்கிறார் ஈவேரா!
அதாவது அந்த மூன்று குழுவினரையும் "நம் தமிழ் மக்களாக" ஈவேரா கருதவில்லை என்பது அம்பலமாகிறது!
பார்ப்பனர்களை விடுங்கள் - அவர்கள் தமிழர்கள் அல்ல என்பதே ஈவேராவின் அடிப்படையான கொள்கை!
ஆனால் கிறிஸ்தவர்களையும், முஸ்லீம்களையும் அந்தப் பட்டியலில் சேர்த்துவிட்டார்!
"நாங்கள் மதத்தால், வழிபாட்டு முறையால் பிரிந்தாலும் இனத்தால் தமிழன்!"- என்ற பருப்பெல்லாம் ஈவேராவிடம் வேகாது - வேகவில்லை என்பதே இதன் அர்த்தம்!
போகிற போக்கில் ராஜாஜி காஷ்மீரை முஸ்லீம் மக்களுக்கு (பாகிஸ்தானுக்கு) கொடுத்துவிட வேண்டியது நியாயம் என்று சொல்லியதால், பாகிஸ்தான் தவலவர் அயூப்கான் அதற்கு நன்றி காட்டும் விதமாக இந்நாட்டு முஸ்லீம்கள் ஆச்சாரியாரை (ராஜாஜியை) ஆதரிக்கச் செய்துவிட்டார் என்றும் கூறுகிறார் ஈவேரா!
மேலும் நமது சமுதாய எதிரிகள் என்று பார்ப்பனர்களோடு - முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் 'நம்மில் கீழ்த்தரமானவர்கள்' என்று நான்கு பேரைக் கோர்த்துவிட்டு...
நவீன மனுதர்மப் பகுப்பாய்வை ஈவேரா செய்துள்ளார்!
(ஆதாரம்:- "விடுதலை"- தந்தை பெரியார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மலர் - "எனது பிறந்தநாள் செய்தி"- ஈவேரா கட்டுரை - பக்கம் 14 & 15)


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

“மலரும் நினைவுகள்”
ஈ.வெ.ராமசாமியை பார்த்து #கருணாநிதி கேட்ட சில அற்புத கேள்விகள் உங்களுக்காக இதோ👇.!😂🤣🤪
1. இவரின் (பெரியார்) உண்மையான தந்தை பெயர் என்ன?
2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?
3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?
4. இவர் 5-ஆம் வகுப்பு படிக்கும்போது இடுப்பை கிள்ளியதால் இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன?
5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிரூபணமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய பெண் குழந்தை, யாருக்குப் பிறந்தது?
6. எதனால் மனைவிமேல் கோபம் கொண்டு இவர், காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார்?
7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மணியிடம் எதற்காக செருப்படி வாங்கினார்?
8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?
9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார். (முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது தெரியுமா?
10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக?
11. தனது 72-ஆம் வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதட்காக?
இதுபோன்று இன்னும் கேவலமான அர்ச்சனைகள் பெரியாருக்கு தொடர்ந்தன. அவை தொடர்ந்து முரசொலியில் வெளியாகின.
எந்த வகையிலும் தகுதியே இல்லாதவர் என்று கருணாநிதியால் சான்றிதழ் வழங்கப்பட்டவர்தான் பெரியார்.
சரி இப்போ சொல்லு, ஈவேராவுக்கும் திமுகவுக்கும் என்னடா சம்பந்தம் உபிஸ்?


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard