ஈவிகேஎஸ் இளையராஜாவை பற்றி “பணமும் புகழும் வந்துவிட்டால் தன்னை உயர்ந்த சாதி என்று நினைத்துக் கொள்வதா?” என்று கேட்டதை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இதே ஈவிகேஎஸ்தான் பொதுமேடையில் கருணாநிதியை ஜாதி ரீதியாக குறியீடு வைத்துப் பேசிய முதல் தலைவர் லெவல் அரசியல்வாதி, அப்போது அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பையே ஏற்படுத்திய அந்த பேச்சு இன்று யாருக்குமே நினைவில்லை என்பதுதான். ![279167581_2348887908587549_3330190620598](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-y1Q7EBNDW0pkNQw85b1Sfa9ppV2Q5lBZKyMsUfD4TmNyBTaMwVCoNEOEj-fuBZBUVcmy-XGlpUW2I2i_1FtDNvpMV70uk8aYytd5LAlcBy4rpzjtVAYBTKupUHb0drRsMt0mKd2s-ltdJTT5kxFcltl4OpSpo-_5-PXwnDFb3FnwO6m-WvdsoUSmqw/w542-h461/279167581_2348887908587549_3330190620598245607_n.jpg)
![279167581_2348887908587549_3330190620598](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-y1Q7EBNDW0pkNQw85b1Sfa9ppV2Q5lBZKyMsUfD4TmNyBTaMwVCoNEOEj-fuBZBUVcmy-XGlpUW2I2i_1FtDNvpMV70uk8aYytd5LAlcBy4rpzjtVAYBTKupUHb0drRsMt0mKd2s-ltdJTT5kxFcltl4OpSpo-_5-PXwnDFb3FnwO6m-WvdsoUSmqw/w542-h461/279167581_2348887908587549_3330190620598245607_n.jpg)
எப்போதும் ஜாதியை சுமந்து அலையும் இந்த ஈவிகேஎஸ் (எ) ஈரோடு வெங்கட கிருஷ்ணசாமி சம்பத் இளங்கோவனின் பெயரில் உள்ள ஈரோடு வெங்கட என்பது எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இல்லை? கண்டிப்பாக இருக்கும். காரணம் தமிழகத்தில் ஜாதி ஒழிப்பு போராளி என்று அடையாளப் படுத்தப்படும் ஈரோடு வெங்கட ராமசாமி (எ) ஈவெரா (எ) பெரியாரின் பெயரில் வரும் அதே ஈரோடு வெங்கடதான்.
ஈவெராவின் சகோதரர் கிருஷ்ணசாமியின் மகன் சம்பத்தின் மகன்தான் இளங்கோவன்.
தேவையில்லா பின்குறிப்பு: இளையாராஜா தன் சாதியை மறந்து விடக்கூடாது என்ற பேச்சை அண்ணார் பேசியது திக மேடையில், இன்னொரு சாதியொழிப்பு போராளி மிக்சர் வீரமணி முன்பு.
![safe_image%20(3).jpg](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivEspVSFgdQeAKvz_TsifMOwRVYkgi4w1F6qCt0LcW0T8Zi5marJMD2VkWlW8MzPEe5zPe9kTrmvNmjoH-KDWbwnnI_WPiwypcJRG0jbZ5KqHsQUQ57Ir_iHxCFfSGKHQ93Aw-4Nz6dcDCokZQACnSdiwctVPLXLzff7WZQsJkhaZcKX2CCiP7_iKFdg/w273-h167/safe_image%20(3).jpg)