"வெள்ளைக்காரனின் கால் சுத்தமான கால், சாக்ஸ் அணிந்த கால் - அதனால் பார்ப்பானின் காலை நக்குவதைவிட, அவனது காலை நக்குவது தவறில்லை" என்கிற சாக்ஸ் தகவல் உபயம் : கி.வீரமணி, மொழியால் தமிழர், இனத்தால் திராவிடர். தி.மு.க வெளியீடு.பக்கம் 65)
துக்ளக்கின்’ திருகு தாளம்!" என்கிற தலைப்பில் 10-07-21
நாள் விடுதலையில் ஒரு கட்டுரை. கட்டுரையின் சாரம்சம் என்னவென்றால், ஜாலியன் வாலாபாக் படுகொலையில் நீதிக்கட்சியின் யோக்கியதை குறித்து துக்ளக் எழுதியதற்கு பதில் தந்துள்ளது, “ஜாலியன் வாலாபாக் படுகொலையும் நீதிக்கட்சியும் - ஆசிரியர் அன்றே தந்த பதில்" என்கிற உபதலைப்பில். அதிலிருந்து,
“ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்த நீதிக்கட்சி” என்னும் தலைப்பில் ‘துக்ளக்‘ ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி எழுதிய ‘விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்‘ என்னும் நூலின் ஒரு பகுதியை வெளியிட்டுள்ளது. இந்நூல் வெளியான போதே ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார். “விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் - உண்மை வரலாறு” என்னும் நூலாக வெளி வந்துள்ளது.
ராமமூர்த்தி எழுதுகிறார்: “இந்தப் படுகொலையைக் கண்டிக்காத அரசியல்வாதிகளே அன்று இந்தியாவில் யாரும் இல்லை என்று கூறலாம். பிரிட்டிஷ் மக்களே கொதித்து எழுந்ததன் விளைவாகப் பார்லிமெண்ட் குழுவே அமைக்கப்பட்டது. இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு. இப்படிப்பட்ட ராட்சசத்தனமான நர வேட்டைக் கொலைக் காண்டத்தை ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக அதன் தலைவர்கள் சர். பி. தியாகராஜ செட்டியாரும், டாக்டர் டி.எம். நாயரும் ஆதரித்து அறிக்கை விட்டனர். அந்த அறிக்கையை இந்த நாட்டிலிருந்த இந்தியர்களால் நடத்தப்படும் சகல பத்திரிகைகளும் பிரசுரிக்க மறுத்துவிட்டன. அன்று இந்தியாவில் ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட ‘மதராஸ் மெயில்’, ‘ஸ்டேட்ஸ்மென்’, ‘டைம்ஸ்’ ஆப் இந்தியா ‘ஆகிய பத்திரிகைகள்தான் பிரசுரித்தன.
இங்கிலாந்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘லண்டன் டைம்ஸ்’ போன்ற பத்திரிகைகளும், அந்த அறிக்கையைப் பெரிதுபடுத்தி இந்தக் கட்சிக்கும் தலைவர்களுக்கும் நாட்டு மக்களிடையே பெரிய செல்வாக்கு இருப்பதாகப் பிரிட்டிஷ் மக்களிடையே சித்தரித்துப் பிரசுரித்தன. காரணம் கண்கூடு. சமத்துவம், நீதி ஆகியவற்றில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் அதற்காகப் பாடுபடுவதாகவும், பறை சாற்றிய ஜஸ்டிஸ் கட்சி ஏன் இந்த நீசத்தனமான அறிக்கையை வெளியிட்டது? பார்லிமென்ட் கமிட்டி முன்பு ஜெனரல் டயர் சாட்சியம் அளிக்கையில் கூறிய அதே காரணத்தைத்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் ஆதரிக்காது என்று ஜஸ்டிஸ் கட்சியின் ஆரம்ப அறிக்கையிலேயே பறை சாற்றியிருந்தார்கள்.
அது மட்டுமன்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிவதற்காக எத்தனை இந்திய மக்களின் ரத்தத்தையும் நாங்கள் கண்டு களிப்போம் என்று ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் அந்த அறிக்கையின் மூலம் பறை சாற்றினர்!” - என்று எழுதி இருக்கிறார் ராமமூர்த்தி என்கிற துக்ளக் கட்டுரையை தந்துள்ளது. துக்ளக், பி.ராமமூர்த்தி மற்றும் விடுதலையின் கட்டுரையை வாசிக்கிறபோது ஒரு உண்மையை அறிகிற முடிகிறது. நாம் பாடப்புத்தகத்தில் வாசித்த ஜாலியன் வாலாபாக் படுகொலை என்பது ஒரு பகுதி தான் என்பதோடு, அன்றைக்கு அந்த படுகொலையை ஆதரித்து ஆங்கிலேயே ஆட்சிக்கு வால் பிடித்த கேடு கெட்டவர்களும் நம் இந்திய நாட்டில் இருந்திருக்கிறார்கள், அவர்கள் யார் என்று பார்த்தால் தி.க.வினரின் கொள்ளுத்தாத்தாக்கள் என்பதும் விளங்குகிறது.
நீதிக்கட்சி குறித்து வரலாற்றில் உள்ளதை உள்ளப்படியே எவரும் பதிவு செய்யும்போது, அது தி.க.வினர் எழுதிய வரலாற்றுக்கு பாதகமாக இருப்பின் - அந்த உண்மையை, 'பொய்' என கூற வரிந்து கட்டி கொண்டு வருவார் கி.வீரமணி. ஒரு பாலியல் வன்கொடுமை செய்தியையும் 'மதம்' பார்த்து விமர்சிக்கிற அயோக்கியர்கள், 'நீதிக்கட்சி' விஷயத்தில் மட்டும் நேர்மையாக உள்ளது உள்ளப்படி கூறுவார்களா? தாங்கள் யோக்கியர்களா இல்லையா என்பதை பிறர் சொல்வதை, பிற ஊடகங்கள் சொல்வதை தான் ஆதாரமாக தர வேண்டுமே தவிர - தங்கள் ஊடகங்களில், தங்களை தாங்களே மெச்சி கொண்டதை ஆதாரமாக காட்டும் கி.வீரமணியின் ஆசிரியர் பணியை போல் பித்தலாட்ட பணி எதுவுமிருக்காது. ஒரு உதாரணம் சொல்கிறோம். 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டார் என்பதும், பல வாரங்கள் திகார் சிறையிலிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் கனிமொழி கைதான செய்தியை விடுதலை பிரசுரிக்கவே இல்லை. ஒரு 100 ஆண்டுகள் கழித்து கனிமொழி பற்றி ஒருவர் எழுதும்போது, அவர் ஊழல் வழக்கில் கைதானார் என்கிற செய்தியை பதிவு செய்தால், அப்போது விடுதலை பத்திரிகை நடத்தப்பட்டு கொண்டு இருந்தால், கி.வீரமணியை போல் ஒரு பித்தலாட்டவாதி ஆசிரியராக இருந்தால், "2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி கைது செய்யப்படவே இல்லை. கைது செய்யப்பட்டிருந்தால் விடுதலையில் அது செய்தியாகி இருக்குமே" என்று வரலாற்றை திரித்து எழுத முயல்வர். எப்போதும் தி.க.காரன் எழுதும் வரலாற்றை அப்படியே நம்பிவிடக்கூடாது. தங்கத்தோடு செம்பை கலந்து ஆபரணம் செய்வது போல், உண்மையோடு பொய்யை கலந்து வரலாற்றை எழுதிவிடுவர்.
உதாரணத்திற்கு - சமீபத்தில் அம்பலப்பட்ட தி.க.வினரின் பித்தலாட்டம் ஒன்றை பார்ப்போம். "இந்தியாவிலேயே பெண்களுக்கு வாக்குரிமை பெற்று தந்தது நீதிக்கட்சி. இதன் பிறகு தான் அமெரிக்காவிலேயே பெண்களுக்கு வாக்குரிமை வந்தது என்பார்கள். ஆனால் உண்மை என்ன. "ஆங்கிலேய ஆட்சிக்குட்பட்ட இந்தியாவிலேயே முதன் முதலில் 1920-ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. தொடர்ந்து, 1921-ல் சென்னை, பம்பாய் மாகாணங்களில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது." என்கிற தகவல், "பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது எப்போது?" என்கிற தலைப்பில், 28 Mar 2019 நாள் இந்து தமிழ்.காமில் வந்த செய்தி. இதை தி.க. திரித்தே இதுகாறும் வரலாற்றை புனைந்தது.
பொய் வரலாறு எழுதி, தி.க.காரன் தன்னை நிலை நிறுத்த முயல்வதற்கு, உண்மை வரலாற்றை எழுதி, அதை சாதியுங்கள். குட்டு ஒரு நாள் வெளிப்படும்போது - அசிங்கமும், அவமானமும் தான் வந்து சேரும்.
"வெள்ளைக்காரனின் கால் சுத்தமான கால், சாக்ஸ் அணிந்த கால் - அதனால் பார்ப்பானின் காலை நக்குவதைவிட, அவனது காலை நக்குவது தவறில்லை என்ற ஈவெராமசாமி, ஆங்கிலயே அரச பயங்கரவாதத்தை ஒரு போதும் நேர்மையாக கண்டித்ததில்லை. கண்டிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழும்போது என்ன சொல்வார், "இங்கே கோவிலுக்கு செல்ல ஒரு சாதி, மலம் அள்ள ஒரு சாதி" என வைத்து கொண்டு ஆங்கிலேயன் அடக்குமுறை செய்கிறான் என எப்படி சொல்ல முடியும் என கேட்பார். அது சரியான கருத்தே என்றாலும், சாதியை கட்டிக் கொண்டு அழுகிறவனுக்கு தான் ஆங்கிலேயே அரசு பயங்கரவாதத்தை பற்றி பேச அருகதை இருக்காது. ஆனால் ஈவெராமசாமி பேசலாம் இல்லையா?
ஏற்றத்தாழ்வை ஒழிப்பதே தம் கொள்கை என சொல்லும் ஈவெராமசாமி துணிந்து ஆங்கிலேயே அரச பயங்கரவாதத்தை பற்றி பேசலாமே. 100 சதவிதம் தகுதி படைத்த மாமனிதராயிற்றே. ஆனால் பேசியதே இல்லை. காந்தி தான் சத்தியாகிரகம் என்கிற பெயரில் வன்முறையை தூண்டுகிறார் என சொல்வாரே தவிர ஆங்கிலேய அரச பயங்கரவாதத்தை கண்டித்ததே இல்லை. வெள்ளைக்காரன் சாக்ஸ் அணிந்த கால், நக்குவதில் தப்பில்லை என்ற ஈவெராமசாமி எப்படி கண்டிப்பார். இத்தகைய வரலாற்று அறிவுடனும், உண்மையை உணர்கிற கண்ணாடியை அணிந்து கொண்டும் தான் தி.க.வினர் எழுதும் எதையும் வாசிக்க வேண்டும். இனி ‘துக்ளக்கின்’ திருகு தாளம்!" என்கிற தலைப்பில் வந்த கட்டுரையில், தி.க. தரப்பின் தன்னிலை விளக்கம் என்னவென்று பார்ப்போம் - சுருக்கமாக, நமக்கு தேவை இருக்கும் பகுதியை மட்டும் பார்ப்போம்.
"14-11-1919-இல் நியமிக்கப்பட்ட இந்தக் கமிட்டி 20-2-1920- இல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் சாரம் வருமாறு: “பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர்களான டாக்டர் சைபுதீன் கிச்சுலு, டாக்டர் சத்தியபால் இருவரையும் மாவட்ட நீதிபதி அழைத்தார் ஒருநாள். மாவட்ட நீதிபதியிடம் அழைத்துப் போகப்பட்ட அந்த இரண்டு தலைவர்களும் என்ன ஆனார்கள், எங்கே கொண்டு போகப்பட்டார்கள் என்று தெரியவில்லை. மாநிலம் முழுவதும் இந்த இருவரும் மாயமாய் மறைக்கப்பட்டுவிட்ட செய்தி காட்டுத்தீ எனப் பரவியது. மக்கள் கூட்டமாகக் கூடினார்கள். தங்கள் தலைவர்களை மறைத்து வைத்துள்ள இடத்தைச் சொல்லும்படி மாவட்ட நீதிபதியைக் கேட்பது என்று முடிவு செய்தார்கள்.
மாவட்ட நீதிபதி இருக்குமிடம் தேடிக் கூட்டம் கூட்டமாகப் போனார்கள். அவர்கள் முன்னே செல்ல முயல, ராணுவத் தலையீட்டால் அங்கே ஒரு கலகம் பிறந்தது. ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இரண்டொருவர் அந்த இடத்திலேயே விழுந்து செத்தனர். அவ்வளவுதான், கொதித்தெழுந்த கூட்டம், அமிர்தசரஸ் நகரில் நேஷனல் பாங்க் கட்டடத்தைக் கொளுத்தியது. பாங்கின் மேனேஜரான வெள்ளையர் கொல்லப்பட்டார்.
ஐந்து வெள்ளைக்காரர்கள் கொல்லப்பட்டார்கள். நிலைமை கட்டுக்கடங்காது போகவே, அதிகாரிகள் அமிர்தசரஸ் நிர்வாகத்தை ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.
குஜரன் வாலா, கஸுர் என்ற இடங்களில் பெருங்கலகம் வெடித்தது. ஏராளமான சொத்துகள் நாசமாயின.
குஜரன் வாலாவில் முசாபரி பங்களா, தந்தி அலுவலகம், ரயில்வே நிலையம் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டன. லாகூர் நகரிலும் கிளர்ச்சி வலுத்தது. அமிர்தசரஸ், லாகூர் ஆகிய இரு நகரங்களிலுமே நிலைமை கட்டுக் கடங்காத அளவுக்குக் கை மீறிப் போய்விட்டது. அமிர்தசரஸ், ஜாலியன் வாலாபாக் திடலில் அப்போதுதான் ஒரு கூட்டம் நடத்த ஏற்பாடாகியது. அந்தத் திடல் நாற்புறங்களிலும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. அந்தத் திடலுக்குள்ளே நுழைய ஒரே ஒரு குறுகிய வழிதான் உண்டு. திடலுக்குள்ளே ஆண்களும் பெண்களுமாய்ப் பல்லாயிரம் பேர் திரண்டிருந்தார்கள். நகரம் முழுவதும் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதை அந்த மக்கள் அறிந்திருக்கவில்லை. ஜெனரல் டயர் என்ற ராணுவ அதிகாரி - ஒரு பட்டாளத்தைத் திடலுக்கு அழைத்து வந்தான்!
எச்சரிக்கை எதுவும் தராமல் எடுத்த எடுப்பிலேயே “சுடு” என்று உத்தரவு போட்டான்! சுட்டார்கள். 400 பேருக்கு மேல் குருவி சுடப்பட்டது போல் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். 2 ஆயிரம் பேருக்கு மேல் படுகாயம் அடைந்தார்கள்" என்று காங்கிரஸ் மகாசபை அமைத்த குழு, நிலைமைகளை நேரில் கண்டறிந்து 20-2-1920இல் அறிக்கை வெளியிட்டது.
“இந்தச் சம்பவத்தை எல்லோரும் கண்டித்தார்கள். சர்.பி.தியாகராய செட்டியார் மட்டுமே வெள்ளைக் காரர்களுக்கு ஆதரவாக நீசத்தனமான அறிக்கை
வெளியிட்டார்.” - என்று தவறாகக் கூறி இருக்கிறார் பி. ராமமூர்த்தி.
தியாகராயச் செட்டியார் மட்டும்தான் அப்படி அறிக்கை வெளியிட்டார். அவரைத் தவிர வேறு எவருமே அந்தக் கருத்துப்பட அறிக்கை வெளியிடவில்லை என்று ராமமூர்த்தி எழுதியிருப்பது சரியானதல்ல! காங்கிரஸ் மிதவாதிகள் என்று அழைக்கப்பட்ட தலைவர்கள் எல்லாம் இந்தச் சம்பவத்துக்காகக் காந்தியடிகளைக்கண்டித்து அறிக்கை விட்டார்கள். காங்கிரஸ் மகாசபைக்குத் தலைமை வகித்த பெருமைக்குரிய சர். தின்ஷவாச்சா, டாக்டர் அன்னி பெசண்ட் ஆகியோர், “காந்தியின் தூண்டுதலால்தான் நாட்டில் வன்முறைகள் தலை தூக்கின. அதன் காரணமாகவே ராணுவம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி நேரிட்டது.” என்று கண்டன அறிக்கை வெளியிட்டார்கள்.
பி. ராமமூர்த்தியோ தியாகராயர் மட்டும்தான் அறிக்கை விட்டார் என்று வலிந்து எழுதினாலும், காங்கிரஸ் மகாசபைபற்றி வெளிவந்துள்ள சகல வரலாறுகளிலும் இந்த உண்மைகள் உரத்த குரலில் ஒலித்துக் கொண்டுதானிருக்கின்றன. தியாகராயர் வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதியை மறைத்து ஒரு பகுதியை வெளியிட்ட பி.ராமமூர்த்தி அவர்களின் புத்தகத்தை ஆதாரம் காட்டும் துக்ளக் அதனை வைத்து நீதிக்கட்சி தொண்டை மறைத்து விட முடியாது" என்கிறது விடுதலை.
இதன் மூலம் நாம் அறியக்கூடிய உண்மை என்னவெனில், மக்கள் வன்முறையில் ஈடுபட்டதாலேயே ஆங்கிலேய அரசு ஜாலியன் வாலாபாக் துப்பாக்கி சூட்டை நடத்தியது என்பதோடு, மக்கள் நடத்திய வன்முறையை பல்வேறு தலைவர்கள் கண்டித்ததாக உணர முடிகிறது.
சரி - இந்த விடுதலையில் பதிலில் எங்கேயாவது, நீதிக்கட்சி சர்.பி.தியாகராய செட்டியார், வெள்ளைக்காரனின் அரச பயங்கரவாதத்தை எதிர்த்தார் என்றில்லையே. "காந்தியின் தூண்டுதலால்தான் நாட்டில் வன்முறைகள் தலை தூக்கின. அதன் காரணமாகவே ராணுவம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி நேரிட்டது" என பலரும் கூறியதையே பி.தியாகராய செட்டியார் கூறினார். அப்படியிருக்க செட்டியார் கூறியது எப்படி தவறாகும், செட்டியார் மட்டும் கூறினார் என எப்படி சொல்லலாம் என விடுதலை கேட்கிறது. எல்லோரும் சொல்வதையே சொல்லும்
பயங்கரவாத தாக்குதல்களை, "இது கோயம்புத்தூரில் நடந்த குண்டு வெடிப்பு, இது மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு" என மதம் பார்த்து விமர்சிக்கிற கி.வீரமணி, தலைவர்களின் படுகொலையையே, "இது மகாத்மா காந்தி படுகொலை, இது ராஜீவ்காந்தி படுகொலை" என படுகொலையான நபர் பார்த்து கண்டனம் தெரிவிக்கிற கி.வீரமணி, பிறரின் யோக்கியதையை பற்றி பேச தகுதியான நபரா?
எப்படி உங்களுக்கு சாதகமான விஷயங்களை மட்டும் எடுத்து கொண்டு நீங்கள் பேசுகிறிர்களோ, அதையே பிறர் செய்யும்போது ஏன் எரிகிறது. ஈவெராமசாமியின் 1938ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பேசுபவன், 1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் செய்த நயவஞ்சகத்தை பேச மறுப்பது ஏன். பொதுவாக சாதாரண செய்திகளை கூட விடுதலை நேர்மையாக வெளியிடுவதில்லை. இந்த தராதரத்தை வைத்து கொண்டு பிறரை விமர்சிப்பதை எப்படி ஏற்பது. தி.க.வினரின் பத்திரிகை சமகாலத்தில் என்ன யோக்கியதையுடன் பத்திரிகை நடத்துகிறது என்பதை பார்த்து தான், அவன் எழுதும் நேற்றைய வரலாற்றை நம்புவதா, வேண்டாமா என்கிற முடிவுக்கு வர முடியும்.
அப்படி பார்க்கையில் - அவனது யோக்கியதையை இன்றைக்கு அருகிருந்து பார்க்கையில் - அவன் எழுதியதை அப்படியே நம்புவது 'அறிவு குருட்டு' தனமானது என தான் சொல்வோம். (பதிவில் ஈவெராமசாமி பேசியதாக குறிப்பிடபட்டுள்ள "வெள்ளைக்காரனின் கால் சுத்தமான கால், சாக்ஸ் அணிந்த கால் - அதனால் பார்ப்பானின் காலை நக்குவதைவிட, அவனது காலை நக்குவது தவறில்லை" என்கிற சாக்ஸ் தகவல் உபயம் : கி.வீரமணி, மொழியால் தமிழர், இனத்தால் திராவிடர். தி.மு.க வெளியீடு.பக்கம் 65)
13-07-21 நாள் விடுதலையில், ‘கெடுதலை' நீக்க வந்த ஏடு ‘விடுதலை!' ‘விடுதலை'யில் சிறைப்பட்டவர் நமது தமிழர் தலைவர்!" என்கிற தலைப்பில் ‘விடுதலை' 87 ஆம் ஆண்டு நிகழ்வில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி ஆசிரியர் ப.திருமாவேலன் கூறியதாவது, "பணத்தைப்பற்றி மிக அதிகமாகக் கவலைப்படுபவராக பெரியார் அவர்கள் இருந்திருந்தார் என்று சொன்னால், விடுதலை நாளிதழினுடைய பக்கங்களில் பல விளம்பரங்களை அவர் வெளியிட்டு இருக்க முடியும். ஆனால், கொள்கையில் சமரசம் செய்துகொண்டு, எந்த விளம்பரத்தையும் போட மாட்டேன் என்கிற உறுதியோடு இருந்தவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
இப்படி விளம்பரங்களைப் போடவேண்டும் என்கிற மாதிரியான சில ஆசைகளைச் சொல்லி, விளம் பரங்களின்மூலமாக, விடுதலை நாளிதழினுடைய இழப்பைக் குறைக்கலாம் என்று ஆலோசனைகள் சொல்லப்பட்டபொழுது, நமக்கு சுதந்திரமான விடுதலை வேண்டுமா? அடிமை விடுதலை வேண்டுமா?பெரியார் அவர்கள் சொன்னதாக நான் படித்தேன், நமக்கு சுதந்திரமான விடுதலை வேண்டுமா? அடிமை விடுதலை வேண்டுமா? என்று தந்தை பெரியார் அவர்கள் கேட்டிருக்கிறார்கள். சுதந்திரமான விடுதலை என்று சொன்னால், நான் என்னுடைய கருத்துகளை, கொள்கைகளைத் துணிச்சலாக சொல்வதற்கு பெயர்தான் சுதந்திரமான விடுதலை.
அடிமையான விடுதலை என்று சொன்னால், விளம்பரதாரர் என்ன சொல்கிறாராரோ, விளம்பரத்தின் மூலமாகக் கிடைக்கும் பணத்தை வைத்து, எப்படி ஒரு பத்திரிகையை நடத்தினால், அது விளம்பரதாரர்களுடைய அடிமைப் பத்திரிகையாக இருக்கும். அப்படிப்பட்ட அடிமைப் பத்திரிகை வேண்டாம். அதனால்தான், சுதந்திரமான விடுதலை வேண்டுமா? அடிமை விடுதலை வேண்டுமா? என்கின்ற கேள்வியை மிகப்பெரிய அளவில் தந்தை பெரியார் வைத்தார்கள்." என்றார். ப.திருமாவேலன் கூறுவது போல், உண்மையிலேயே விடுதலை யாருக்கும் அஞ்சிடாத சுதந்திரமான பத்திரிகையா இல்லை அடிமை பத்திரிகையா? அடிமை பத்திரிகைகளில் இரண்டு வகை உள்ளது. ஒன்று விளம்பரதாரர் மனம் கோணாமல் செய்தி வெளியிட்டு வாலாட்டி கொண்டு இருப்பது.
இரண்டாவதே அஞ்சி அஞ்சி நடக்கிற அடிமையான பத்திரிகையாக இருப்பது. நம்மை பொறுத்தவரை ஈவெராமசாமியின் யோக்கியதையை, விடுதலையின் யோக்கியதையை அறிந்தவர்கள் - நாம் சொல்லும் இரண்டு விதமான அடிமைத்தனத்தையும் கொண்டிருந்தது தான் என்போம். விடுதலை பத்திரிகை நடத்துகிற விழா மேடைகளில் பேசுபவர்கள் எல்லாம் உண்மையை பேசுகிறார்கள் என மட்டும் யாரும் நம்பிவிடக்கூடாது. பணத்தால் விடுதலை அடிமையானதை பார்ப்பதற்கு முன் பயத்தால், ஆங்கிலேய அரசு மீது இருந்த பயத்தால், ஆங்கிலேயே அரசு நடவடிக்கை எடுத்துவிடுமே என்கிற பயத்தால், ஆங்கிலேய அரசின் அடிவருடியாக, அவர்களுடனேயே ஈவெராமசாமி செய்த ஒப்பந்தத்தை பார்ப்போம்.
விடுதலை - அன்றைய குடிஅரசு அடிமையான கதையை ஈவெராமசாமி வாயாலேயே கேட்போம். ‘‘குடிஅரசு'' இதழ்கள் இல்லை என்றால், இன்றைக்கு வரலாறு ஏது?" என்கிற தலைப்பில் 09-07-21 அன்றும், "மனித சமூகத்திற்காக - சமத்துவத்திற்காக உருவானதுதான் சுயமரியாதை இயக்கம்!" என்கிற தலைப்பில் 10-07-21 அன்றும் கி.வீரமணி ஆற்றிய உரை ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறது. ஆங்கிலேய அரசு போட்ட போட்டில், அதாவது குடிஅரசு பத்திரிகைக்கு தடை போட்ட பிறகு, ஈவெராமசாமி தன் பகுத்தறிவை அடக்க ஒடுக்கமாக காட்ட துவங்கிவிட்டார். ஈவெராமசாமியின் குடிஅரசு பத்திரிகைக்கு அரசு தடை போட்ட பிறகு, அதற்கு ஈவெராமசாமி மன்னிப்பு கோரிய பிறகு, ஈவெராமசாமி அளித்த தன்னிலை விளக்கம் குறித்து கி.வீரமணி ஆற்றிய உரையிலிருந்து சிறு பகுதி.
"சுயமரியாதை இயக்கத்தின்மீது எப்படியோ அரசாங்கத்திற்கு ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டுவிட்டதாகவும், அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை நசுக்கிவிடுவது என்று முடிவு செய்திருக்கிறார்கள் என்று 31.3.1932 ‘‘குடிஅரசு'' இதழில் ‘‘மீண்டும் துவக்கப்பட்டு விட்டது'' என்ற தலைப்பில் தந்தை பெரியார் அவர்கள் கையொப்பமிட்டு, மன்னிப்பு விஷயத்தைப்பற்றி ஒரு தலையங்கம் எழுதினார்.
‘‘சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமை இயக்கத்தைப் பரப்பும் இயக்கமாக வருகின்றது என்று அரசாங்கம் நினைப்பதால் அவ்வாறு சோஷலிசத்தையும் கம்யூனிஸத்தையும் பரவச் செய்யும் நடவடிக்கைகளை ஈவெரா. ஆதரிக்காமல் இருப்பது நல்லது என்று ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள் யோசனை கூறினர்.
இந்தச் சமயத்தில் இத்தகைய ஆலோச னைகளின் விளைவாக ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களும் ஜீவானந்தமும் அரசாங்கத்துக்கு எதிராக, ராஜ விசுவாசத்தைக் குலைப்பதற்காக எதையும் செய்யும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று கூறி வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோர நேர்ந்தது. 31.3.1935 ‘‘குடிஅரசில்'' (குடி அரசு மீண்டும் துவக்கப்பட்டு விட்டது). ஈவெரா. கையொப்பமிட்டு, இந்த மன்னிப்பு விஷயத்தைப்பற்றி ஒரு தலையங்கம் எழுதினார். அந்தத் தலையங்கம் ஈ.வெரா. எழுதுவது என்ற தலைப்பில் வெளிவந்தது" என்கிற கி.வீரமணி உரையில் மேலும் கூறப்பட்டதாவது. "இந்தத் தலையங்கம் 'எனது அறிக்கையின் விளக்கம்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. அதில் ஈ.வெரா. கூறியதில் முக்கியமானது"
ஆங்கிலேயே அரசு குடிஅரசு பத்திரிகையை தடை செய்ததுமே, அது மீண்டும் வெளிவர அரசுடன் ராஜி ஏற்படுத்தி கொண்டது குறித்து ஈவெராமசாமி எழுதியதை கி.வீரமணி கூற கேட்போம். "ஒரு அளவுக்கு சர்க்காருடன் ராஜி ஏற்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற ஆசையின் மீதே பொருளாதார விஷயத்தில் சமாதானக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதில் சர்க்காருக்கு ஆட்சேபணை இல்லை என்றும், ஜாதி மத சம்பந்தமான விஷயங்களில் வேறு ஜாதி மதக்காரர்கள் மனம் புண்படும்படியோ அவமானம் ஏற்படும்படியோ என்று இல்லாமல் ஜாதி மத கண்டனங்கள் செய்து கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தோம்." என்று தன்னிலை விளக்கம் அளித்தார் ஈவெராமசாமி. அதாவது அடக்க ஒடுக்கமாக தன் பகுத்தறிவை காட்டுகிற முடிவுக்கு வருகிறார். இத்தகைய மனநிலை அடிமை மனநிலையா... சுதந்திரமான மனநிலையா...
ஈவெராமசாமி 1935க்கு முன்பு குடிஅரசு பத்திரிகை நடத்தியதற்கும், அதற்கு பின்பு குடிஅரசு பத்திரிகை நடத்தியதற்கும் வித்தியாசம் இருந்தது. அந்த வித்தியாசம் பயத்தின் அடிப்படையில் ஏற்பட்டது. "குடி அரசு 95" என்கிற தலைப்பில், குடிஅரசு பத்திரிகையின் வரலாற்றை வெளியிட்டிருந்தார்கள். அதில் குடிஅரசு மற்றும் இதர ஈவெராமசாமி நடத்திய பத்திரிகைகள் எல்லாம் தடை செய்யப்பட்டது சிறுபான்மை சமூகத்தை விமர்சித்து எழுதியதனாலேயே. 'குடிஅரசு 95' வரலாறு தரும் தகவலில் கூறப்பட்டதாவது, ’குடிஅரசு’ வார இதழ், 1934ஆம் ஆண்டு 'கிறிஸ்தவ’ மதத்தைப் பற்றி எழுதியதற்காக தடை செய்யப்பட்டது. இதனால் அதே ஆண்டு ’புரட்சி' என்ற வார இதழைப் பெரியார் தொடங்கினார். புரட்சி இதழில் ‘இஸ்லாம்' மதம் பற்றி எழுதியதற்காக ’புரட்சி' வார இதழ் ஒரே ஆண்டுக்குள் தடை செய்யப்பட்டது.
ஆக சிறுபான்மை சமூகத்தை விமர்சித்தால், தன் பத்திரிகை மூடுவிழா கண்டுவிடும் என்பதாலும், ஆங்கிலேய அரசை கண்டித்தால், தன் பத்திரிகை தடை செய்யப்பட்டுவிடும் என்று தெரிந்து கொள்கிற ஈவெராமசாமி, அதன் பிறகு அதற்கேற்ப்ப பத்திரிகை நடத்துகிற அறிவை பெற்றார். அதுவே கி.வீரமணி காலத்திலும் தொடர்கிறது. அதனால் பயங்கரவாத செயல்களை விமர்சிப்பதிலிருந்து பாலியல் வன்கொடுமைவரை - அதை விமர்சிக்க வேண்டிய சூழல் வரும் போதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களின் மதம் பார்த்தே பகுத்தறிவை காட்டுகிறான். மானங்கெட்ட விடுதலை ஆதரவாளர்களே இதுவா சுதந்திரமான பத்திரிகையின் யோக்கியதை.
இதுவரை நாம் கூறியது பயத்தால், விடுதலை அடிமையான கதை. இனி அவன் பணத்தால் அடிமையான கதையை பார்ப்போமா? விளம்பரம் மூலம் பணம் பெற்றால், எவனெவனுக்கு ஆதரவாக இருந்து செய்தி வெளியிடுகிறோம் என்கிற குட்டு வெளிப்பட்டுவிடும் என்பதால், நன்கொடையாக சிலவற்றை பெற்று, பெற்றதற்கு பலனாக, கைமாறு செய்வது போல் சிலரின் அயோக்கியதனங்களை கண்டும் காணாமல் இருப்பது. இந்த அயோக்கியதனங்களை செய்வதில் கி.வீரமணியை 'கில்லாடி பய' என சொல்லலாம். சில விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள். "ஒரே ஒரு முறை முதலீடு செய்து வாழ்நாளெல்லாம் பலனை பெறுங்கள்" என்று. இந்த விளம்பரம் நிச்சயம் திராவிடர் கழக கம்பெனிக்கு பொருந்தும்.
ஒரே ஒரு முறை விடுதலைக்கு சந்தா அல்லது திராவிடர் கழகத்திற்கு நன்கொடை கொடுங்கள். பிறகு பாருங்கள் - நீங்கள் வாழ்நாள் முழுக்க எவ்வளவு அயோக்கியதனங்களை செய்தாலும் விடுதலை எழுதாது, திராவிடர் கழகம் கண்டிக்காது. 04-03-2016 நாள் விடுதலையில் வந்த நன்கொடை செய்தி இது, ஒரே ஒரு முறை கிறிஸ்தவ பேராயர் எஸ்றா.சற்குணம், திருச்சி சிறுகனூரில், 2016ம் ஆண்டு மார்ச் 19,20 தேதிகளில் நடந்த திராவிடர் கழக மாநாட்டிற்காக கி.வீரமணிக்கு ரூ.50 ஆயிரத்தினை தந்தார். அதன் முழு பலனை கிறிஸ்தவர்கள் - முக்கியமாய் பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்கள் அனுபவிக்கிறார்கள். இதுவரை விடுதலையோ, கி.வீரமணியோ - பாலியல் வன்குற்றம் புரிந்த எந்த பாதிரியார்களையும் கண்டித்ததே இல்லை.
சமீபத்திய உதாரணம், "வீட்டில் சர்ச் (தேலாலயம்) நடத்தி விபச்சாரம்; மதபோதகர் உட்பட 5 பேர் கைது" என்கிற செய்தியை பதுக்கி வைத்ததில் இருந்தே எஸ்ரா.சற்குணம் தந்த பணம் எப்படி விளையாடுகிறது என்பது புரிந்து இருக்கும். "கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எஸ்டி மங்காட்டை சேர்ந்தவர் லால் ஷைன் சிங். 40 வயதான மத போதகரான இவர் வீட்டில் 'பெடரல் சர்ச் ஆப் இந்தியா'என்ற பெயரில் பிரார்த்தனை மையம் நடத்தி வருகிறார். இங்கு சந்தேகத்துக்குரிய வகையில் பெண்கள், ஆண்கள் வந்து செல்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு போலீசார் சோதனை நடத்தினர். தொடர்ந்து லால் ஷைன்சிங் மற்றும் பனங்காலையை சேர்ந்த ஷைன் 34, மேக்கோடு ஷிபின் 34, ஞாறான்விளை ராணி 55, சுகந்தி 40 என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
19 வயது இளம் பெண் உட்பட இரண்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 19 வயது பெண்ணை தாயே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிந்தது. நித்திரவிளை போலீசார் விசாரிக்கின்றனர்." என்கிறது செய்தி. இதுவே பெரும்பான்மை சமூகம் செய்திருந்தால், விடுதலை பகுத்தறிவை எப்படி காட்டி இருக்கும். அயோக்கியதனத்தையே சிறுபான்மை சமூகம் செய்தது, பெரும்பான்மை சமூகம் செய்தது என பிரித்து பார்த்து பேசுகிறவன், அடிமையாக இருப்பவனைவிட கேடு கெட்டவன். அயோக்கியனுக்கெல்லாம் அயோக்கியன். அடிமையாக இருப்பவன் தான் அடிமையாக வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்ததுமே, தன் விடுதலைக்கு போராட துவங்கிவிடுவான்.
"சொந்தப்புத்தி வேண்டாம், ஈவெராமசாமி புத்தி தான் வேண்டும்" என சொல்பவன் மனநிலை என்பது மூளைச்சலவை செய்யப்பட்டது. திருந்துவதற்கே வாய்ப்பில்லாத மூடர்கள் என தான் அவர்களை கூற முடியும். எப்படி கிறிஸ்தவ பேராயர் எஸ்றா.சற்குணம் ஒரே ஒரு முறை திராவிடர் கழகத்திற்கு நன்கொடை கொடுத்து முழுபலனை அனுபவித்தாரோ, அதே போல் கவிஞர் வைரமுத்து, விடுதலைக்கு ஆயுள் சந்தா கட்டி, அவரும் ஆயுள் சந்தா கட்டியதற்கான முழுபலனையும் அனுபவித்தார். பல பெண்கள், தங்கள் பாலியல் அத்துமீறலை சுட்டி காட்டும் விதமாக வந்த மீடு விவகாரத்தில் வைரமுத்துவை குற்றம் சாட்டியபோது, பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி கவலையேபடாமல், வைரமுத்து ஆயுள் சந்தா தந்த ஒரே காரணத்திற்காக - அவர் பக்கம் நின்றார்கள்.
கிறிஸ்தவ பேராயர் எஸ்றா.சற்குணம், வைரமுத்து வரிசையில் பல அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். இது தான் அன்றையிலிருந்து இன்றைக்கு வரை தி.க.வினரின் யோக்கியதை. இதில் ஈவெராமசாமி என்றோ, கி.வீரமணி என்றோ - எந்த பேதமும் இல்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. இவர்களின் யோக்கியதையை தெரிந்தும் கூட, ப.திருமாவேலன், "இது அடிமை விடுதலை அல்ல... சுதந்திர விடுதலை..." என்றெல்லாம் உளறி கொட்டினால் - திராவிடர் கழக மேடையேறும் எந்த நபரும், உண்மையை பேச மாட்டார்கள் என்பது விளங்கும்.