New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?
Permalink  
 


பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?

பிப்ரவரி 20, 2010

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்?

வேதபிரகாஷ்

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது அல்லது தேய்ந்தது, இந்தியா பௌத்தத்தைத் துறந்தது அல்லது துரத்தியடித்ததைப் பற்றி பல கருத்துகள் உருவாகியுள்ளன. இதில் வேடிக்கையான பிரச்சினை என்னவென்றால், பௌத்தத்தைப் பற்றிய மூலங்கள் அதிகமாக இருந்தும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இருந்தும், அவற்றைப் படிக்காமல், ஆராயாமல், “மற்றவர்கள் சொன்னது” அல்லது “மற்றவர் மற்றவர்களைப் பற்றிச் சொன்னது”, தாங்கள் கேட்டது, கேள்வி பட்டது என்பனவற்றின் மீது கருத்துருவாக்கம் கொண்டு அதனையே சரித்திர ஆதாரமாக நிலைநிறுத்தப்பட்டது போன்று வாதிட்டி பேசி-எழுதி வருவது, தமிழர்களிடையே அதிகமாகவே உள்ளது.

ஒரு தடவையாவது அம்மூலங்களைப் படிப்பது அல்லது அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படித்து அவ்வாறு தாங்கள் கேட்டபடி, நினைத்தபடி உள்ளதா அல்லது வேறுவிதமாக உள்ளதா என்று பரிசோதனை செய்வது, சரிபார்ப்பது உண்டா என்பது தெரியவில்லை.

இனி, விஷயத்தை ஆராயும்போது, இவற்றை – பௌத்தம் இந்தியாவில் குறைந்தது பற்றி – பொதுவாக இரண்டு தலைப்புகளில் பிரித்துஆராயலாம்:

1. புத்தமத உள்விவகாரங்கள் மற்றும் 2. வெளிகாரணிகள்

புத்தமத உள்விவகாரங்கள்: பௌத்தம் திடீரென்று குறைந்து, தேய்ந்து, மாயமாக மறைந்து விடவில்லை. இந்திய சரித்திரத்தில் உள்ள, உருவாக்கப்பட்ட, பரப்பப் பட்டுவரும் பற்பல கட்டுக்கதைகளில், இதுவும் பிரபலமான ஒரு கட்டுக்கதை, மாயை, பொய்மையும் கூட.

6ம் நூற்றாண்டிலிருந்து BCEலிருந்து, வளர்ந்து, பரவி, உலக மதமாகி, பலம்-அதிகாரம் பெற்று, சர்ச்சைகள் பெருகி, உடைந்து, பிரிவுகள் ஏற்பட்டு பிறகு 12ம் நூற்றாண்டில்தான் CE குறைகிறது! ஆகவே 1600-1800 வருடங்கள் இந்தியாவில் கோலோச்சி வந்தது, அதிகாரத்துடன் பவனி வந்தது, தனது ஆதிக்கத்தைச் செல்லுத்தியது. [இப்பொழுது BCE = Before Current / Common Era CE = Current / Common Era என்றுதான் சரித்திரத்தில் குறிப்பிடப் படுகின்றன].

அத்தகைய பலமுள்ள, அதிகாரமுள்ள உலக மதம் சாதாரணமாக மறைந்து விட முடியாது. பௌத்தத்தின் வளர்ச்சி-வீழ்ச்சி என்பது, அதன் 1600-1800 வருட-செயல்பாடுகளை பாரபட்சமின்றி ஆராய்ந்து தெளியவேண்டும். அம்பேத்கரே அத்தகைய வழியைக் காட்டிடுள்ளார்.

  1. புத்தமதம் இரண்டாகப் பிரிந்தது: முதலில் பௌத்தர்கள் ஒற்றுமையாக இருந்தாலும், பிறகு பல விஷயங்களுக்கு சண்டை-சச்சரவுகள் வளர்ந்தன. அதனால், புத்த சங்கம் ஹீனயானம் மற்றும் மஹாயானம் என்று இரண்டு பிரிவுகளாகவும், மற்றும் 16 சிறு பிரிவுகளாகவும் பிரிந்தன.
  2. புத்தரைக் கடவுளாக்கியது: கடவுள் இல்லை என்று வளர்த்த மதம், புத்தரையே கடவுளாக்கி அவர்களது புத்தகங்களும் அவ்வாறே திரித்து எழுதப் பட்டன.
  3. விக்கிர-ஆராதனை பெருகியது: வேதகாலத்திலிருந்து, பாரதத்தில் / “இந்தியா”வில் உருவவழிபாடு இல்லை. ஆனால், திடீரென்று, பௌத்தர்கள் புத்தருக்கு பெரிய அளவில் சிலைகளை செதுக்க ஆரம்பித்தனர். அத்தகைய வேலைகளில் எத்தனை வேலையாட்கள் ஈடுபடுத்தியிருக்க பட வேண்டும் என்ற விஷயங்களை கவனிக்க வேண்டும்.
  4. வேதங்களை எதிர்த்து, வேதங்களை எடுத்தாண்டது: வேதங்களை பௌத்தர்கள் எதிர்த்தாலும், பெரும்பாலான, வேத-உபநிஸதக் கருத்துகளை அப்படியே தமது “தம்மத்தில்” தம்-மதத்தில் ஏற்றுக் கொண்டனர்[1].
  5. அதிகாரம், ஊழல் பெருகியது: முதலில் பிக்குகள் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து, தம்ம-சிரத்தையுடன் இருந்தனர். ஆனால், பின்பற்றுபவர்கள் பெருக-பெருக அவர்களது முக்கியத்துவம் வளர்ந்தது. வாழ்க்கை முறையும் மாறி வசதிகளுடன் வாழத்தொடங்கினர். விஹாரங்களில் பணப்புழக்கம் அதிகமாகியது. இதனால் உட்பூசல்கள் ஆரம்பித்து பிக்குகள் ஒருவரை ஒருவர் குற்றம் கூற ஆரம்பித்தனர்.
  6. பெண்கள் பிக்குனிகள் அனுமதிக்கப்பட்டது: பெண்கள் பிக்குனிகளாக / கன்யா ஸ்திரீகளாக அனுமதிக்கப் பட்டது, சங்கத்தின் அழிவிற்கு வித்திட்டது.
  7. ஹிம்சை காரியங்களில் ஈடுபட்டது: அஹிம்சை போதித்த பௌத்தர்களே ஹிம்சை காரியங்களில் ஈடுபட்டதால், மக்களுக்கு, புத்தருக்குப் பிறகு, பௌத்தத்தின் மீதான நம்பிக்கை குறைந்தது. மன்னர்களுடைய தொடர்பு போர்களில் ஈடுபடவும் செய்தது.
  8. மாமிச உணவு உண்டது: குறிப்பாக மாமிச உணவு உண்ணும் பிக்குகள், பௌத்தர்களைக் கண்டு, மக்கள் வியந்து திகைத்தனர். விலங்குகளைக் கொல்லாமல், அவற்றை தோலுறித்து, பதப்படுத்திக் கொடுக்காமல் மாமிசம் கிடைக்காது. குறிப்பாக, புத்தரே மாமிச உணவைத் தடை செய்யாதௌ மாட்டுமன்றி புசிக்கவும் செய்தார்.
  9. மதம்-அல்லாத விஷயங்களில் ஈடுபட்டது: மதத்தை விடுத்து, பௌத்தர்கள் மற்ற காரியங்களில் அதிகமாகத் தலையிட்டனர்.
  10. அரசியலில் தலையிட்டது: ஜைனர்களைப் போன்று அரசியலில் ஈடுபட்டது. அதாவது ஆளும் மன்னர்களின் துணையில் அல்லது அவர்களை மதம் மாற்றி தமது மதத்தின் அதிகாரத்தைச் செல்லும் முறையைக் கடை பிடித்தனர். பௌத்த ராஜ்யங்கள் (Buddhist Kingdoms) பரவியிருந்தது உண்மை.
  11. வியாபாரத்தில் ஈடுபட்டது: பல இடங்களுக்கு, பல நாடுகளுக்கு சென்றுவந்த பௌத்தர்கள் வியாபாரத்தில் பங்கு கொண்டனர். வியாபாரத்தில் அதிகமாக ஈடுபட்டு, அரசியல் அதிகாரமும் பெற்றதால், மத காரியங்களில் சிரத்தையாக ஈடுபடாமல் போனது.
  12. கடல் கடந்தது மற்ற செயல்கள்: பாரத்தில் சில காரியங்கள் செய்வது ஏற்றுக் கொள்ளப் படாததாக இருந்தன. அவை இக்கால சட்ட-திட்டங்களைப் போன்று “கலிவிரஜ்யா” = கலிகாலத்தில் விலக்கப் படவேண்டியவை, என்றிருந்து மக்களிடையே நம்பிக்கையாக மனங்களில் பதிந்திருந்தது. அந்நிலையில், பிராமணர்கள் கடல் கடக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து, பிக்குகள் கப்பல்களில் சென்றதும் மக்களுக்கு வியப்பாக இருந்தது.

வேதபிரகாஷ்

10-09-2009

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

இதற்கான ஆதாரமான நூல்கள்:

Louis Dela Valle Poussin, The Buddhist Councils, K. P. Bagchi & Company, Calcutta, 1976.

Sumangal Barua, Buddhist Councils and Development of Buddhism, Atisha Memorial Publishing Company, Calcutta, 1997.

I. B. Horner, Women under Primitive Buddhism: Laywomen and Almswomen, Motilal Banarasidas, New Delhi, 1999.

K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

Arthur Waley, Did Buddha die of eating pork?: with a note on Buddha’s image, Melanges Chinois et bouddhiques, Vol.1031-32, Juillet 1932, pp.343-354 (as accessed on August 21, 2006 at http://ccbs.ntu.edu.tw.FULTEXT/JR-MEL/waley.htm

Alexander Berzin, The Historical Interaction between the Buddhist and Islamic Cultures before the Mongol Empire1996 http://www.berzinarchives.com/web/en/archives/e-books/unpublished_manuscripts/historical_interaction/pt2/history_cultures_12.html

B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992, pp.439-447; 542-543

M. Monier Williams, Buddhism: In its connexion with Brahmanism and Hinduism and its contrast with Christianity, Munshiram Manoharlal Publishers Pvt. Ltd, New Delhi, 1995.

கடைசி புத்தகத்தில், மோனியர் வில்லியம்ஸ், பௌத்தம் தான் மேற்கொண்ட மாற்றங்களினால், இந்து மதத்தின் உயரிய கொள்கைகளான சகிப்புத்தன்மை, அஹிம்சை முதலிய குணாதிசயங்களினால், 12ம் நூற்றாண்டு காலத்தில் மறைய நேரிட்டது என்று விளக்குகிறார் (Lecture VIIl – Changes in Buddhism and its disappearance from India என்ற விளக்கத்தை “How Did Buddhism Die out in India?” pp.161-171, காணலாம்).

பி.வி.பாபட் தொகுத்த நூலில், “பௌத்தத்தில் பிற்பாடு செய்யப் பட்ட மாற்றங்கள்” என்ற தலைப்பில், பௌத்தம் எவ்வாறு தனது ஆரம்பகால நிலையினின்று பிரழ்ந்து என்பதனைக் காணலாம்.

P. V. Bapat, 2500 years of Buddhism, Publications Division, New Delhi, 1997, pp.297-332


[1] J. G. Jennings, The Vedantic Buddhism of the Buddha, Geoferry Cumerlege, Oxford University Press, London, 1947.

Ananda K. Coomaraswamy, Hinduism and Buddhism, The Wisdom Library, New York.

B. R. Ambedkar, The Buddha and his Dhamma, Dr Babasaheb Ambedkar Writings and Speeches, Vol.11, Government of Maharastra, 1992.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard