New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒன்று 'தார் - உல் - இஸ்லாம்'(இஸ்லாத்தின் வாழிடம்) மற்றொன்று 'தார் - உல் - ஹர்ப்' (போரின் உறைவிடம்) - அம்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
ஒன்று 'தார் - உல் - இஸ்லாம்'(இஸ்லாத்தின் வாழிடம்) மற்றொன்று 'தார் - உல் - ஹர்ப்' (போரின் உறைவிடம்) - அம்
Permalink  
 


 உலகம் இரண்டாக உள்ளது இஸ்லாமிய சட்டத்தின்படி,ஒன்று 'தார் - உல் - இஸ்லாம்'(இஸ்லாத்தின் வாழிடம்) மற்றொன்று 'தார் - உல் - ஹர்ப்' (போரின் உறைவிடம்) என்றாக இருக்கிறது.

ஒரு நாடு இஸ்லாமியர்களால் ஆளப்படும் போது அது 'தார் - உல் - இஸ்லாம்'.பிரஜைகள் முஸ்லீமாக இருந்து ஆள்கிறவர் முஸ்லீம் அல்லாதவராக இருக்கிற போது அது 'தார் - உல் - ஹர்ப்' என்றாகிவிடுகிறது.

இந்த விதிப்படி,இந்தியாவில் இந்துக்களும்-முஸ்லீம்களும் சம அந்தஸ்துடன்,சம அதிகாரத்துடன் ஒரு போதும் இருக்க முடியாது என்றாகிறது.ஏனென்றால் அதை முஸ்லீம்கள் ஒருபோதும் ஏற்றுக்ககொள்ள மாட்டார்கள்.மேலும்,இந்தியா முஸ்லீம் அல்லாதவரால் ஆளப்படுகிறபோது 'தார் - உல் - ஹர்ப்' என்றாகிவிடும்.

இப்படி தான் அவர்கள் நினைப்பார்கள் என்பதற்கு தரவுகளும் உள்ளன.பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த போது இந்துக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை விட இஸ்லாமியர் மனநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது.அவர்களுக்குள் இப்போது இந்தியா தார் - உல் - இஸ்லாமா? அல்லது தார் - உல் - ஹர்ப்பா? என்ற விவாதம் பெரிதாக கிளம்பியது.தற்போது இஸ்லாமியரால் ஆளப்படாத இந்தியா 'தார் - உல் - ஹர்ப்' என்று ஆப்கானை நோக்கி குடியேறியவர்கள் ஏராளமாக இருந்தார்கள்.

1920 - 21 ல் கிலாபத் இயக்க முழக்கத்தில் இஸ்லாமிய தேச பக்தர்களால் இந்தியாவை 'தார் - உல் - இஸ்லாமாக' மாற்றும் பெரு முழக்கம் இருந்தது.ஏனென்றால் இந்த முழு உலகத்தையும் இஸ்லாமிய ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் உரிமை ஆட்சியாளர்களுக்கு உள்ளது.'தார் - உல் - ஹர்ப்' என்று இருக்கும் நிலப்பகுதியை 'தார் - உல் -இஸ்லாமாக மாற்ற வேண்டிய பொறுப்பு அதன் தலைமைக்கு உள்ளது.

1919 ல் ஆப்கான் இந்தியா மீது படையெடுக்க காரணம் இதை ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டு பின் 'தார்-உல்-இஸ்லாமாக' மாற்றுவதற்கே.அதற்காகத்தான் கிலாபத்காரர்கள் ஆப்கான் உதவியையும் நாடினார்கள்.ஒருவேளை அதில் ஆப்கான் வென்றிருந்தால் அந்த விடுதலை இந்தியாவை இன்னொரு அடிபணிவை நோக்கித் திருப்பியிருக்கும்.

ஏனென்றால் முஸ்லீம் ஆட்சியின் கீழ் இல்லாத 'தார்-உல்-ஹர்ப்' ஆக இருக்கும் இந்தியாவை,இஸ்லாத்தின் கொள்கைகளின்படி 'தார்-உல்-இஸ்லாமாக' மாற்றுவதற்கு ஜிகாத்தை அறிவிக்க எல்லா நியாயத்தையும் அவர்களுக்கு இஸ்லாமிய சட்டம் வழங்குகிறது.

- பாபாசாகேப் அம்பேத்கர் (Pakistan or partition of India)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard