New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா? மனிதனா?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா? மனிதனா?
Permalink  
 


பூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா? மனிதனா?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே: பகுதி 9
தாலமியின் உலகப்படம்தாலமியின் உலகப்படம்

குரான் அறிவியல் என்ற சொற்களை நாம் கேட்டவுடன் பூமி உருண்டையா? தட்டையா? எனும் வாதம் தான் நம்முள் எழும். அந்த அளவுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் இதற்கு விளக்கம் விளக்கமாக தந்துகொண்டிருக்கிறார்கள். பூமி உருண்டை என்பது அண்மைக்கண்டுபிடிப்பு அதற்கு முன்னர் பூமி தட்டையானது என எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் பூமி உருண்டை எனக்கூறியிருப்பது இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள ஒரு மனிதனால் இப்படி கூறியிருக்க முடியுமா? எனவே முகம்மது கூறியது இறைவனின் வாக்கைத்தான் என்பது நிரூபணமாகிறது என்பது இஸ்லாமியர்களின் வாதம். மெய்யாகவே பூமி உருண்டை வடிவம் என்பதை  மனிதன் கண்டுபிடிக்கும் முன்னரே கடவுள் சொல்லிவிட்டாரா?

பூமி உருண்டை என்பதை குறிக்கும் குரானின் வசனங்கள் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதை பார்ப்போம். வசனம் 3:27 நீதான் இரவை பகலில் புகுத்துகின்றாய், நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்…………… (22:61;31:29;35:13;57:6) இந்த வசனத்தில் பூமியின் வடிவம் குறித்து ஏதாவது சொல்லப்பட்டிருக்கின்றதா? ஒன்றுமில்லை. ஆனாலும் இதை பூமியை உருண்டை எனக்கூறுவதற்கு பயன் படுத்துகிறார்கள் எப்படி? இரவையும் பகலையும் ஒன்றின் மீது மற்றொன்றை புகுத்தும் செயல் எப்படி நிகழமுடியும்? புகுத்துதல் என்றால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடைபெற முடியும் முதலில் தலை பின் உடல் பிறகு கால் இப்படி ஒவ்வொரு பகுதியாகத்தான் புகுத்தமுடியும். இந்த புகுத்துதல் எனும் சொல்லை மிகச்சரியாக கையாண்டு தான் இறைவன் இரவை பகலிலும் பகலை இரவிலும் புகுத்துவதாக கூறுகிறான். இரவிலிருந்து பகலோ, பகலிலிருந்து இரவோ திடும் என நிகழ்ந்துவிடுவதில்லை. படிப்படியாக மெதுவாக நிகழ்கிறது. ஏன் அப்படி நிகழ்கிறது என்றால் பூமி கோள வடிவத்தில் உருண்டையாக இருப்பதால். பூமி சதுர வடிவில் இருந்தால் பகலும் இரவும் மாறுவது திடுமென்று ஒரு நொடிப்பொழுதுடையதாக இருக்கும், இதிலிருந்து பூமி உருண்டை என்பதை தான் குரான் புகுத்துதல் எனும் பதத்தின் மூலம் தெளிவு படுத்துகிறது என்று கூறுகிறார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள மனிதன் மட்டுமல்ல 2800 ஆண்டுகளுக்கு முன்னுள்ள மனிதனும் கூட இப்படி கூறியிருக்க முடியும். ஏனென்றால் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை இரவு பகல் மாற்றம் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிகழ்கிறது. அறிவியலின் வாசம் கூட இல்லாத இந்த ஒன்றுமற்ற வசனத்தை தான் மாபெரும் அறிவியல் கொண்டதாக புழுகுகிறார்கள். இரவையும் பகலையும் புகுத்துவதாக மட்டும் தான் குரான் கூறியிருக்கிறதா? வசனம் 7:54 பகலை இரவால் மூடுகிறான் என்றும் இரவு பகலை பிந்தொடர்கிறது என்றும் வருகிறது. வசனம் 24:44  இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன. வசனம் 25:62 இரவும் பகலும் அடுத்தடுத்து வருகின்றன.வசனம் 39:5 இரவின் மீது பகல் சுற்றுகிறது பகலின் மீது இரவு சுற்றுகிறது, என்றெல்லாம் இரவு பகல் மாறி மாறி வந்துகொண்டே இருப்பதை பல்வேறு வார்த்தைகளில் குரான் குறிப்பிடுகிறது. இந்த வசனங்களிலெல்லாம் அறிவியல் இருக்கிறதா? உலகில் வாழ்ந்து இரவு பகல் மாறுவதை கண்ட எவராலும் சொல்லிவிட முடிகிற இவைகளை மாபெரும் அறிவியல் உண்மை என எப்படி இவர்களால் கதைவிட முடிகிறது?

வசனம் 79:30 இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான். என்றொரு வசனம், இதில் விரித்தான் என்னும் சொல் இருக்கும் இடத்தில் அரபியில் தஹாஹா என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தஹாஹா எனும் சொல்லுக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்ற பொருளும் உண்டு. பூமியை குறிப்பதற்கு இந்தச்சொல்லை பயன்படுத்தியிருப்பதன் மூலம் பூமி உருண்டை வடிவமானது என்று குரான் தெளிவுபடுத்திவிட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் எந்த ஒரு குரான் மொழிபெயர்ப்பிலும் குறிப்பிட்ட இந்த வசனத்தை யாரும் நெருப்புக்கோழியின் முட்டை என மொழிபெயர்க்கவில்லை. விரித்தான் என்று சிலரும், பிரித்தான் என்று சிலரும் தான் மொழிபெயர்த்துள்ளனர். அப்படியிருக்க நெருப்புக்கோழியின் முட்டை என்னும் பொருள் எங்கிருந்து வந்தது? உலகில் பரவலாக உள்ள எந்த‌ மொழியிலும் ஒரு உயிரினத்தின் முட்டையை குறிப்பிடுவதற்கு தனிச்சொல் இருப்பதாக தெரியவில்லை (குட்டியை குறிப்பதற்கு தனிச்சொற்கள் உள்ளன) பெயரோடு சேர்த்துத்தான் குறிப்பார்கள், கோழி முட்டை, குயில் முட்டை என்று. அரபிலும் அதே போல் தான் முட்டை என்பதற்கு பேத் எனும் பொதுச்சொல்லும் நெருப்புக்கோழியை குறிப்பதற்கு நஆம் எனும் தனிச்சொல்லும் இருக்கின்றன. இவர்களுக்கு எங்கிருந்து தஹாஹா எனும் வார்த்தைக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்று பொருள் கிடைத்தது?

பூமி உருண்டை என்பதற்கு குரானில் இன்னொரு ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்கள். குரானில் 18 ஆவது அத்தியாயம் வசனங்கள் 84 லிருந்து 98 வரை துல்கர்னைன் என்ற ஒரு மன்னனின் பயணத்தைப்பற்றி விவரிக்கிறது. அதாவது  அந்த மன்னன் ஒரு வழியில் பயணிக்கிறான், வழியில் ஒரு சமுதாய மக்களை காண்கிறான் அங்கு சூரியன் சேறு நிறைந்த நீரில் மூழ்குகிறது, தொடர்ந்து செல்கிறார் மீண்டும் சூரியன் உதிப்பதை காண்கிறார். இது தான் அந்த பதினைந்து வசனங்களின் சாரம். பூமியில் நேர்கோட்டில் பயணம் செய்தால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண்கிறாரென்றால் பூமி உருண்டையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம் எனவே இந்த வசனங்கள் பூமி உருண்டை என்பதை உணர்த்தி நிற்கிறது என்கிறார்கள். பூமி உருண்டையாக இருந்தாலும் நேர் கோட்டில் பயணம் செய்யும் ஒருவரால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காணமுடியாது என்பது ஒருபுறமிருந்தாலும், அந்த மன்னர் நேர் கோட்டில் தொடர்ந்து சென்றதால் பூமி உருண்டையாயிருக்கும் பட்சத்தில் அவ்வாறு காணமுடிந்தது என்று சாதிக்கிறார்கள். ஆனால் குரானில் அவர் ஒரே திசையில் சென்றார் என கூறவில்லை என்பதே உண்மை. 18:85 ம் வசனம் அவர் ஒரு வழியில் சென்றார் என்றும் 18:89 ம் வசனம் பின்னர் ஒரு வழியில் சென்றார் எனவும் இருக்கிறது.

பூமி உருண்டை என்று குரான் கூறியிருக்கிறது என்று நிரூபிப்பதற்காக தோதுப்பட்ட வசனங்களிலெல்லாம் வலிந்து அறிவியலை ஏற்றியிருக்கிறார்கள். பூமியின் வடிவத்தைப்பற்றி நேரடியாக எதுவுமே கூறாத வசனங்களை, சாதாரண காட்சிகளை விவரிக்கும் வசனங்களை பூமி உருண்டை என ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டபின்னான் காலத்தில் நின்றுகொண்டு பூமி உருண்டையாக இருந்தால் தான் இப்படி இருக்கமுடியும் எனவே இவ்வசனங்கள் பூமி உருண்டை என கூறுவதாக டம்பமடிக்கும் இவர்கள்; பூமியின் வடிவம் பற்றி கூறும் குரான் வசனங்களுக்கு வேறு விதமாக விளக்கமளிக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல அனேக இடங்களில் பூமியின் வடிவத்தை ஒரே மாதிரியாக வர்ணிக்கிறது குரான். 2:22; 13:3; 15:19; 20:53; 43:10; 50:7; 51:48; 55:10; 71:19; 78:6; 79:30; 84:3; 88:20; 91:6 குரானில் வரும் இந்த வசனங்களெல்லாம் ஒரே மாதிரியாக பூமியை தட்டை என பொருள் கொள்ளும்படி பூமியை விரித்திருப்பதாக கூறுகிறது. இவைகளையும் பூமி உருண்டை எனக்கூறுவதாக திரிக்கிறார்கள்.  விரிப்பு என்பதன் பொருளை பூமிக்கு எப்படி பொருத்துகின்றனர்?  விரிப்பு என்றால் அவை சமதளத்தில் மட்டுமல்ல கோளத்தின் மீதும் பரப்பலாம் எனவே விரிப்பு என்ற உவமையின் மூலம் பூமி தட்டை என்பதை அல்ல உருண்டை என்பதையே மறைமுகமாக உணர்த்துகிறது என்று ஜல்லியடிக்கின்றனர்.  பூமி அதன் புவியியல் அமைப்பில் மூன்று அடுக்குகளை கொண்டிருக்கிறது அ) இன்னர் கோர் எனப்படும் உட்கரு ஆ) அவுட்டர் கோர் எனப்படும் வெளிக்கரு இ) மேண்டில் எனப்படும் மேலோடு. இதில் உட்கரு திடப்பொருளாகவும், வெளிக்கரு எரிமலைக்குளம்பாக திரவப்பொருளாகவும் இருக்கிறது. மேலோடு நாம் காணும் கடல், மலை, நிலம் என்று மேற்பரப்பாகவும் இருக்கிறது. இந்த மேலோட்டைதான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற விரிப்பாக ஆக்கியிருப்பதாக பொருள் சொல்கிறார்கள். பூமியின் மேலோட்டை குரான் விரிப்பாக குறிப்பிடுவதாகவே கொள்வோம். எந்த வடிவத்தில் அந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்கிறது? சமதளத்திலா? அல்லது உருண்டை வடிவத்திலா? என்ற கேள்விக்கு குரானில் விடை இருக்கிறதா? பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பூமி உருண்டையா தட்டையா என்று தெரியாது எனக்கொண்டால் குரானிய வசனங்களின் படி உருண்டை தான் என எப்படி உறுதிப்படுத்துவது?

மேற்கூறிய விவரங்களெல்லாம் குரான் இறங்கிய வேளையில் மக்களுக்கு பூமி உருண்டை எனும் அறிவியல் தெரியாமல் இருந்ததாகவே எடுத்துக்கொண்டு விளக்கப்பட்டவை. ஆனால்  பூமி உருண்டை எனும் அறிவு பன்னெடுங்காலத்திற்கு முன்பே மக்களிடம் இருந்தது என்பது தான் மெய். கிரேக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள், அராபியர்கள் கடலாடிய செய்திகள் பண்டைய இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. கடலில் செல்லும் கப்பலும், கரைக்கு திரும்பும் கப்பலும் கரையிலிருந்து பார்க்கையில் கடலுக்குள் கீழ் வளைந்து செல்வதுபோலவும், கீழ் வளைவாக மேலேறி வருவதையும் கண்டு பூமியின் வடிவம் உருண்டை என்பதை பட்டறிவாகவே விளங்கி வைத்திருந்தனர். மட்டுமன்றி அறிவியல் ரீதியாக பூமி உருண்டை என‌ முத‌லில் கூறிய‌வ‌ர் பைலோலாஸ் எனும் கிரேக்கர் ஆண்டு கிமு 450. கிமு இர‌ண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த‌ எரோட்ட‌ஸ்த‌னிஸ் எனும் கிரேக்கர் பூமியின் சுற்ற‌ள‌வை தோராய‌மாக‌ க‌ண‌க்கிட்டு 25000 மைல் என்று கூறினார். இன்றைய‌ துல்லிய‌மான‌ க‌ண‌க்கீடு 24902.4 மைல். அதே கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஹிப்பார்க்கஸ் என்பவர்  பூமியை அட்சரேகை கடகரேகை எனும் கற்பனைக்கோடுகளால் பூமியை பிரித்தார். கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தாலமி எனும் எகிப்திய மாலுமி பூமியை வரைபடமாக வரைந்தார். இதன் பிறகு கிபி ஆறாம் நூற்றாண்டில்தான் அரேபியாவில் முகம்மது பிறக்கிறார். ஆனால் இஸ்லாமிய அறிஞர்களோ முகம்மதுவின் காலத்தில் பூமி உருண்டை எனும் அறிவு மக்களுக்கு இல்லை என்று இன்றும் வெட்கமில்லாமல் கூறித்திரிகிறார்கள்.

அறிவியலை மதவாதிகள் பயன்படுத்துவது கேட்கும் பாமரர்களை வியப்படையச்செய்வதன் மூலம் மதம் மாற்றுவதற்காகவும் ஏற்கனவே இருப்பவர்களை இன்னும் இறுக்கப்படுத்துவதற்குத்தானேயன்றி தேடலுக்காகவல்ல. தொடர்ந்து அவர்களின் அறிவியல் வாதங்களூடே பயணிப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: பூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா? மனிதனா?
Permalink  
 


இப்னுபஷீர்(2)

அந்த கால இஸ்லாமிய அறிஞர்கள் என்று இல்லை, இந்த கால இஸ்லாமிய அறிஞர்களும் பூமி தட்டை என்றுதான் கூறுகிறார்கள்.

உலகம் தட்டை என்றுதான் குரானில் சொல்கிறது. ஆகவே உலகம் தட்டைதான் என்று அடித்து சொல்கிறார்.

என்ன பிரச்னை என்றால், இவருக்கு அரபி மட்டுமே தாய்மொழி. அரபி தாய்மொழியாக இருப்பவரை விட தமிழர்களுக்குத்தானே அரபி மொழி நன்றாக தெரியும். ஆகையால், நம் ஊர் தமிழறிஞர்கள் கூறுவதே சரியான குரான் மொழிபெயர்ப்பு.

ஆகையால், அரபி அறிஞர்களான தமிழர்கள் சொல்வதை வைத்து குரானில் உலகம் உருண்டை என்று கூறுகிறது என்று நம்புவோம்.

உலகத்தை தட்டை என்று குரான் சொல்லியிருப்பதை வைத்து முகம்மது இட்டுக்கட்டியதுதான் குரான் என்று சொல்லிவிடக்கூடாது.

எப்படியாவது தட்டை என்று சொல்லியிருப்பதிலிருந்து உருண்டையை கண்டிபிடிக்கத்தான் முயலவேண்டும்.

இதற்காகத்தானே தயவு செய்து நன்றாக சிந்தித்து தன்னை காப்பாற்றுமாறு அல்லாஹ் அல்குரானில் கெஞ்சி கேட்டுக்கொள்கிறான்.

சிந்திப்போம். அல்லாஹ்வை காப்பாற்றுவோம்!



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 கம்யூனிஸத்திற்கு இஸ்லாமியர்களை கண்டால் பிடிக்காதோ என்னவோ.சைனாவில் உய்குர் முஸ்லிம்கள் எத்தைனை பேரை கொன்றொழித்திருக்கிறது என்பதை இநத சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ள தவகல்களை பாருங்கள்.

—————————————————————-
ஆஃப்கானிஸ்தானில் எத்தனைபேரை கொன்றிருக்கின்றது என்பதை இந்த சுட்டியை பாருங்கள்.
http://thamizmani.blogspot.com/2008/01/blog-post_24.html
இப்ப குரானில் தவறு என்ற பெயரில் கட்டுரைகள் எழுதுவதின் நோக்கம் என்னவாக இருக்கும்?
எப்ப எப்ப என்னென்ன யுத்திகளை கையாளுவதில் கம்யூனிஸ்ட்டுகள் புத்திசாலிகள்தான்(!) இன்னும் எத்தனை உயிர்கள் கம்யூனிஸ்டுகளால் போக தயாராகி கொண்டிருக்கிறதோ தெரியவில்லை.
கம்யூனிஸத்தின் கொடி சிகப்பு நிற(இரத்த)மாகவும் ஆயுதமும் இருப்பது எதனால் என்பது புரிகிறதா? ஜாக்கிரதையா இருந்துகொள்ளுங்கள் மக்களே.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 SANKAR

நண்பரே,

இந்த வில்லியம் கேம்பேல் மற்றும் சாகிர் நாயக் விவாதம் பைபிள் ,குரானில் அறிவுயல் என்ற தலைபிலேயே விவாதிக்கிறார்கள்.இந்த கேம்பெல்ல் ஒரு கிறித்தவ மத பிரச்சாரகர் .நங்கள் எல்லா மத்ங்க்களையும் மறுக்கிறோம்.
___________________________________

குரானில் உள்ள அறிவியல் என்று பேசுவது எப்படி?

1.முதலில் அறிவியலைல் நன்றாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப் பட்ட ஒரு விஷ்யத்தை எடுத்துக் கொள்ளவாண்டும்.கருத்தாங்களை,மனிதனால் உருவாககப் பட்ட கருவிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நலம். எடுத்துக் காட்டாக பூமி உருண்டை என்று குரான் 1400+ வருடங்களுக்கு முன்பே சொல்லுகிறது என்று சொல்ல வேண்டும்.

2.குரானில் உள்ள வசனங்களில் பூமி சம்பந்தமாக வந்துள்ள வசன‌ங்கள் எல்லாவற்றையும் எடுத்து பல மொழி பெயர்ப்புகளில் ஏதாவது ஒன்று இரண்டு பஇந்த கருத்துக்கு அருகில் வருகிறதா என்று பாருங்கள்.

3.இல்லையென்றாலும் நீங்களே மொழி பெயர்த்து அடைப்புக் குறிக்குள் ஒன்றிரண்டு வார்த்தை ஒன்றிரண்டு வார்த்தை எல்லாம் சேர்த்து வருகிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள்.ஆனால் எச்சரிக்கையாக செய்யவும்.பேராசை பெரு நஷ்டம்.
சரி பூமி என்ற பதத்தில் வரும் வசனக்கள் எல்லாவற்றையும் எடுப்போம். பூமி என்றால்து ஏழு கண்டங்களை உள்ளடக்கிய ,மூன்றில் ஒரு பங்கு நிலமும், இரண்டு பங்கு நீரும் உள்ள ,தன் அச்சில் 23.5 பாகை சாய்ந்த தனனைத்தானே 24 மணி நேஎரத்தில் சுற்றி சூரியனை மூன்றாவது நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் ஒரு கோள் என்பது இப்போது எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
இதைப் பற்றி எல்லாம் பேசக்கூடாது.குழப்பம் வந்துஇடும்.

குரானில் உள்ள

2:22. அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.

15:19. பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்

13:3. மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

16:15. உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்)

இந்த வசன‌த்தை காட்டி இறைவன் பூமியை பல அடுக்குகளாக ஆக்கி அதை சுருட்டி ஒரு பந்து போல செய்தான் என்று அடித்துக் கூறவேண்டும். பூமி அசையாமல் இருக்க்க மலைகளை பேப்பர் வெயிட் மாதிரி வத்து உள்ளதாக கூற வேண்டும். அது எபடி என்று என்று கேட்டால்.நேருக்கு நேராக வநது எங்க அண்ணன கிட்ட விவாதிக்க முடியுமா என்று கேட்க வேண்டும்.

இதில் மதவாதிகளுக்கு என்ன சாதகமான விஷயம் என்றால் இந்த பூமி என்ற பதத்தை குரானில் இடம் என்ற பொருளிலேயே பயன் படுத்தி உள்ளார்கள். அரபியில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு ஆகவே பூமி என்பதை இன்று நாம் குறிப்பிடும் அர்த்தத்திலேயே பயன் படுத்தி இருப்பார்களா என்பது ச்ந்தேகம்தான். ஆனாலும் அடித்து கூறி விடுங்கள்.
_____________________________________

நாம் கீழ்க்கண்ட வசங்களை பார்த்தால். அது இடம் என்ற அர்த்தத்திலேயே பயன் படுத்டப் பட்டது தெளிவாகும்.

9:25. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான்; (நினைவு கூறுங்கள்:) ஆனால் ஹுனைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகிவிட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள்.

10:83. ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்.

12:55. (யூஸுஃப்) கூறினார்: “(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக; நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.”

__________________________________

இந்த குரானில் உள்ள பல மனிதர்கள் மற்றும் சம்பவங்கள் ஆகியவற்றிற்கு வரலாற்றில் ஆதாரம் கிடையாது.1400+ ஆண்டுகளாக யாருமே இது குறித்து ஆதாரபூர்வமாக நிரூபிக்கவில்லை என்பதை நாம் அறிவோம்.

இன்னும் இந்த மதவாதிகள் எங்கள் புத்தகத்தில் அறிவியல் இருக்கிறது என்று கூறுவதால் அதனை தறு என்று நிரூபிக்கும் கட்டத்திற்குள்ளாக்கப் படுகிறோம்.

இந்த வசன‌த்திற்கு யாராவது பொருள் கூறுங்கள்,

9:36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வானங்கள்(மொத்தம் ஏழு) என்பது பூமி தவிர அண்ட சராசரங்கள் என்ற அர்த்தம் இப்போது மதவாதிகளால் தரப் படுகிறது. சரி ஒரு வாதத்திற்காக ஏற்றறு கொள்வோம்.

இந்த வசனத்தில் இருந்து பின் வருமான கருத்துகளை கூறலாம்.

1. பூமியும் அண்ட சராசரங்களும் ஒரே சமயத்தில் படைக்கப் பட்டன .

2. பூமி உருவான கால‌த்தில் இருந்தே தனனைதான் சுற்றுவதற்கு 12 மாதங்கள்(365.25 நாட்கள்) ஆகிறது.

3.பூமி உருவான காலத்தில் இருந்தே பூமி ஒரெ வேகத்தில் சுற்றி வருகிறது என்று கூறுகிறது.

இதனை பற்றி யாராவது கருத்து எழுதினால் விவாதிக்க தயாராக இருக்கிறோம்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 SANKAR

//எந்த மதத்தினர் கேட்டால் என்ன?கேள்விக்கு விடை தான் முக்கியம்//

கிறித்தவர்கள், இஸ்லாமை விமர்சிக்கும் போது அவர்களுக்கு சிலா வாதக் கட்டுப்பாடுகள் உண்டு ஏனெனில்
இரண்டு மதங்களும்.

ஆதம்,ஹவ்வா கதை,இப்லீஸ் ,சொர்கத்தில் இருந்து விரட்டப் பட்டது,ஜல பிரளயம் மற்றும் நூஹின் கப்பல்,ஆபிரஹாம்,முதல் ஈசா வரையிலான தூதர்களை அவர்கள் விமர்சிக்க இயலாது. ஒரு கதைக்கும் ஆதாரம் கிடையாது.
கிறித்தவம் உலகம் தோன்றி 60000 வருடங்கள் ஆகிறது என்று கூறுகிறது. இஸ்லாம் குரானில் சொல்லப் படவில்லை என்கிறது.

கொஞ்சம் வித்தியாசங்களை தவிர எல்லாம் ஒன்றுதான். முகமது,குரான் பற்றி மட்டுமே விவாதிக்க இயலும்.

இரண்டு மக்கு மாணவர்கள் தேர்வு எழுதும் போது ஒரு மாணவன்(கிறித்தவம்)எல்லா கேள்விகளுக்கும் கண்டதையும் எழுதி 20 பக்கம் எழுதுகிறான்.
இன்னொரு மாணவன்(இஸ்லாம்) சில கேள்விகளுக்கு மட்டும் ஓரிறு வார்த்தை அல்லது வாக்கியங்களில் புரியாத மாதிரி எழுதிகிறான்.

இதில் யார் சிறந்தவர் என்றால் இருவரும் தேர்ச்ச்சி அடைய மாட்டார்கள் என்பதே உண்மை.இருவருமே சிறந்த மாணவர்கள் என்றால் மட்டுமே ஒப்பிடுதல் சரி..

//தெளிவான விடைக்கு எப்படி விடை அளிப்பது என்று சொல்லிதாருங்கள்//

நண்பரே எழுத்து விவாதம் என்றால் உழைக்க வேண்டும்.பல்வேறு புத்தகங்கள்,மொழிபெயர்ப்புகள்,விளக்கங்கள் பற்றி தெரிந்தே எழுத முடியும்.குரான் அதன் மொழி பெஅர்ப்புகளை படித்து யார் சொன்னாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று சரி பாருங்கள்.
சாகிர் நாயக் கூறுவதைமொழிபெயர்த்து அதன் சாராம்சத்தை இங்கே எழுதினால் உங்கள் மதத்திற்கும் தொண்டாற்றிய மாதிரி இருக்கும்.
சாகிர் நாயக் ஏதாவது எழுத்து பூர்வமான ஆய்வு கட்டுரைகள் எழுதி இருந்தார் என்றால் ,இந்த தளத்தில் எழுதப் பட்ட விஷயங்களாக இருந்தால் அதையும் சுட்டுங்கள் விவாதிப்போம்.

இந்த சாகிர் நாயக் ,பிற மதவாதிகளின் விளக்கம் எப்படி இருக்கும் என்றால்.

1. குரானை அரபியில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.அதாவது எந்த மொழி பெயர்ப்பும் தப்பும் தவ‌றாகவே இருக்கும்.குரான் சரியாக மொழி பெயர்க்கப் பட முடியாத ஒன்று.

2.அரபி வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் உண்டு எது அறிவியலுக்கு பொருந்துமோ அதை வைத்து குரான் அறிவியலை மெய்ப்பிக்கிறது என்று கூறி விடுவார்.

3. அவருக்கு அரபி புலமை இருந்தால் இதுவரை ஒருமுறை கூட ஏதாவது அரபி இஸ்லாமிய அறிஞர்களிடம் இதுவரை அரபியில் வாதம் செய்தார் என்று காட்டுங்கள் பார்க்கலாம்.

அதனால் சாகிர் பூமி பற்றி கூறுவதை நீங்கள் புரிந்து அதன் சாராம்சத்தை எழுதினால் அதன் விளக்கம் உங்களுக்கே புரிந்துவிடும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

  1. SANKAR

    //இல்லாத விளக்கம் கொடுத்தால் ஜாகிர் நாயிக் மாட்டியிருப்பார் அல்லவா?
    அவர் சிக்கிய ஒரு இடத்தை காட்டுங்கள்//
    நண்பரே
    ஜாகிர் நாயக்கின் விளக்கங்களுக்காக இப்போது இங்கு விவாதம் நடக்கவில்லை.

    இந்த தோழர் எழுதிய கருத்துகளுக்கு மறுப்பு இருந்தால்,அது பூமி சம்பந்தமான கட்டுரை விவாதத்தில் உங்களுக்கு சரி/தவறு என்று பட்டால் இங்கே எழுதுங்கள் நிச்சயம் பதில் அளிக்கிறேன்.

    எழுத்து பூர்வமான தமிழ் மற்றும் ஆங்கிலக் கட்டுரைகளுக்கு பதில் அளிக்க சித்தமாக இருக்கிறோம்.

    உங்களின் குரான் பாதுகாக்கப் பட்டதா என்ற நீங்கள் காட்டிய சுட்டியின் பகுதியை மொழி பெயர்த்து உள்ளேன்.அத்ன் மீது உங்கள் கருத்துகளை கூறீனீர்கள் என்றால்,மேலே செல்லலாம்.

    ஒரு கருத்தை நான் கூறும் முன்பு ஆங்கிலத்தில் 10+ குரான் மொழி பெயர்ப்புகள்,3 தமிழில் 3,அரபி அகராதி முதல்யவற்றை ஒப்பிட்டே கருத்து கூறுகிறோம். பணியின் கடினத்தை புரிந்து கொள்ளுங்கள்.ஆகவே தோழரின் கருத்துகளுக்கு உங்களுக்கு தோன்றிய கருத்துகளை அவசியம் கூறுங்கள்.என்னால் முடிந்தவரை பதில் அளிக்கிறேன்.

  2. பூமி உருண்டை என்று குரான் கூறியிருக்கிறது என்று நிரூபிப்பதற்காக தோதுப்பட்ட வசனங்களிலெல்லாம் வலிந்து அறிவியலை ஏற்றியிருக்கிறார்கள். பூமியின் வடிவத்தைப்பற்றி நேரடியாக எதுவுமே கூறாத வசனங்களை, சாதாரண காட்சிகளை விவரிக்கும் வசனங்களை பூமி உருண்டை என ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டபின்னான் காலத்தில் நின்றுகொண்டு பூமி உருண்டையாக இருந்தால் தான் இப்படி இருக்கமுடியும் எனவே இவ்வசனங்கள் பூமி உருண்டை என கூறுவதாக டம்பமடிக்கும் இவர்கள்; பூமியின் வடிவம் பற்றி கூறும் குரான் வசனங்களுக்கு வேறு விதமாக விளக்கமளிக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல அனேக இடங்களில் பூமியின் வடிவத்தை ஒரே மாதிரியாக வர்ணிக்கிறது குரான். 2:22; 13:3; 15:19; 20:53; 43:10; 50:7; 51:48; 55:10; 71:19; 78:6; 79:30; 84:3; 88:20; 91:6 குரானில் வரும் இந்த வசனங்களெல்லாம் ஒரே மாதிரியாக பூமியை தட்டை என பொருள் கொள்ளும்படி பூமியை விரித்திருப்பதாக கூறுகிறது. இவைகளையும் பூமி உருண்டை எனக்கூறுவதாக திரிக்கிறார்கள். விரிப்பு என்பதன் பொருளை பூமிக்கு எப்படி பொருத்துகின்றனர்? விரிப்பு என்றால் அவை சமதளத்தில் மட்டுமல்ல கோளத்தின் மீதும் பரப்பலாம் எனவே விரிப்பு என்ற உவமையின் மூலம் பூமி தட்டை என்பதை அல்ல உருண்டை என்பதையே மறைமுகமாக உணர்த்துகிறது என்று ஜல்லியடிக்கின்றனர். பூமி அதன் புவியியல் அமைப்பில் மூன்று அடுக்குகளை கொண்டிருக்கிறது அ) இன்னர் கோர் எனப்படும் உட்கரு ஆ) அவுட்டர் கோர் எனப்படும் வெளிக்கரு இ) மேண்டில் எனப்படும் மேலோடு. இதில் உட்கரு திடப்பொருளாகவும், வெளிக்கரு எரிமலைக்குளம்பாக திரவப்பொருளாகவும் இருக்கிறது. மேலோடு நாம் காணும் கடல், மலை, நிலம் என்று மேற்பரப்பாகவும் இருக்கிறது. இந்த மேலோட்டைதான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற விரிப்பாக ஆக்கியிருப்பதாக பொருள் சொல்கிறார்கள். பூமியின் மேலோட்டை குரான் விரிப்பாக குறிப்பிடுவதாகவே கொள்வோம். எந்த வடிவத்தில் அந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்கிறது? சமதளத்திலா? அல்லது உருண்டை வடிவத்திலா? என்ற கேள்விக்கு குரானில் விடை இருக்கிறதா? பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பூமி உருண்டையா தட்டையா என்று தெரியாது எனக்கொண்டால் குரானிய வசனங்களின் படி உருண்டை தான் என எப்படி உறுதிப்படுத்துவது?

    மேற்கூறிய விவரங்களெல்லாம் குரான் இறங்கிய வேளையில் மக்களுக்கு பூமி உருண்டை எனும் அறிவியல் தெரியாமல் இருந்ததாகவே எடுத்துக்கொண்டு விளக்கப்பட்டவை. ஆனால் பூமி உருண்டை எனும் அறிவு பன்னெடுங்காலத்திற்கு முன்பே மக்களிடம் இருந்தது என்பது தான் மெய். கிரேக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள், அராபியர்கள் கடலாடிய செய்திகள் பண்டைய இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. கடலில் செல்லும் கப்பலும், கரைக்கு திரும்பும் கப்பலும் கரையிலிருந்து பார்க்கையில் கடலுக்குள் கீழ் வளைந்து செல்வதுபோலவும், கீழ் வளைவாக மேலேறி வருவதையும் கண்டு பூமியின் வடிவம் உருண்டை என்பதை பட்டறிவாகவே விளங்கி வைத்திருந்தனர். மட்டுமன்றி அறிவியல் ரீதியாக பூமி உருண்டை என‌ முத‌லில் கூறிய‌வ‌ர் பைலோலாஸ் எனும் கிரேக்கர் ஆண்டு கிமு 450. கிமு இர‌ண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த‌ எரோட்ட‌ஸ்த‌னிஸ் எனும் கிரேக்கர் பூமியின் சுற்ற‌ள‌வை தோராய‌மாக‌ க‌ண‌க்கிட்டு 25000 மைல் என்று கூறினார். இன்றைய‌ துல்லிய‌மான‌ க‌ண‌க்கீடு 24902.4 மைல். அதே கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஹிப்பார்க்கஸ் என்பவர் பூமியை அட்சரேகை கடகரேகை எனும் கற்பனைக்கோடுகளால் பூமியை பிரித்தார். கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தாலமி எனும் எகிப்திய மாலுமி பூமியை வரைபடமாக வரைந்தார். இதன் பிறகு கிபி ஆறாம் நூற்றாண்டில்தான் அரேபியாவில் முகம்மது பிறக்கிறார். ஆனால் இஸ்லாமிய அறிஞர்களோ முகம்மதுவின் காலத்தில் பூமி உருண்டை எனும் அறிவு மக்களுக்கு இல்லை என்று இன்றும் வெட்கமில்லாமல் கூறித்திரிகிறார்கள்.

    அறிவியலை மதவாதிகள் பயன்படுத்துவது கேட்கும் பாமரர்களை வியப்படையச்செய்வதன் மூலம் மதம் மாற்றுவதற்காகவும் ஏற்கனவே இருப்பவர்களை இன்னும் இறுக்கப்படுத்துவதற்குத்தானேயன்றி தேடலுக்காகவல்ல. தொடர்ந்து அவர்களின் அறிவியல் வாதங்களூடே பயணிப்போம்
    http://naannaathigan.blogspot.com/



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard