மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி அனைத்து திக்கிலும் சுற்றி வளைத்தது போல சர்ச்சுகள் வந்துவிட்டன என்று கூகிள் வரைபடத்தைப் பல நண்பர்கள் பகிர்ந்து ஆவேசப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது திடீரென்று நடந்து விட்ட ஒன்றா என்ன? உள்ளூர் மதுரைக்காரர்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயம் தானே இது? இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட இந்து புனித பூமியில் மதம், கல்வி, வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் படிப்படியாக கிறிஸ்தவத்தின் ஆதிக்கம் பேய்த்தனமாக வளர்ந்து வருவதை அப்படியே பார்த்துக் கொண்டிருந்து விட்டு இப்போது குய்யோ முறையோ என்று புலம்பினால்?
மதுரை மட்டும் தானா? திருச்சியில் என்ன வாழ்கிறது? தேவாரத்திலேயே உள்ள திருச்சிராப்பள்ளி என்ற அந்தப் பெயருக்கு இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய தலங்களின் சங்கமம் (திரு + சிரா + பள்ளியாம்..) என்று ஒரு கேனத்தனமான செக்யுலர் விளக்கத்தை அங்குள்ள டாக்சி ஓட்டுனர் உட்பட பொதுமக்கள் மனதிலெல்லாம் பதிய வைத்து விட்டார்கள். தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயில் ஊர்வலத்தை சர்ச் காரன் தடுத்து நிறுத்துகிறான். நாகர்கோவிலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம் – பாவியாகிய உங்களை ஏசு அழைத்து மனந்திரும்பச் சொல்லாத ஒரு குட்டிச்சுவரைக் கூட அங்கு பார்க்கமுடியாது. திருநெல்வேலி – திருச்செந்தூர் – தூத்துக்குடி வழித்தடமே ஒரு வெறிபிடித்த கிறிஸ்தவ corridor ஆகி விட்டது.. சென்னையைப் பொறுத்தவரையில் அங்குள்ள சாந்தோம் என்ற சர்ச் கட்டிடம் 300 ஆண்டுளே முன்பு அங்கு நின்ற கபாலீஸ்வரர் ஆலயத்தை இடித்து அதன்மீது கட்டப்பட்டது என்ற பிரக்ஞை கூட அதைக் கடந்து போகும் ஒருவருக்கும் இல்லை. திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் சுற்றுப்புறமெல்லாம் கிறிஸ்தவ கூடாரமாகிக் கொண்டிருக்கின்றன. சொல்லிக் கொண்டே போகலாம்.
தமிழகத்தின் ஒவ்வொரு சிறு/பெரு நகரத்திலும் ஊர்களிலும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு துல்லியமாக திட்டமிட்டு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்களே திமிர்பிடித்து ஆரம்பித்து வைத்த 1980களின் மண்டைக்காடு கலவரத்திற்கான இந்து எதிர்வினையைத் தாண்டி, இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து எங்காவது ஒரு போராட்டமோ எதிர்ப்போ அல்லது அதைத் தடுப்பதற்கான குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த முயற்சிகளோ நடந்துள்ளதா என்றால் பெரிதும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. மாறாக, இப்படி ஒவ்வொன்றிலும் நிகழும் கிறிஸ்தவ ஊடுருவலை இன்னும் மிச்சமிருக்கும் தமிழ் இந்துக்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும், மதிக்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற “செய்தி” தொடர்ந்து சினிமா, ஊடகங்கள், கல்வி நிலையங்கள் வாயிலாக தரப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இது இப்படியே போய்க்கொண்டிருக்க அனுமதிக்கப் பட்டால் இன்னும் சில பத்தாண்டுகளில் அந்த மதுரை சர்ச்சுகளுக்கு இடையில் பொருத்தமே இல்லாமல் நின்றுகொண்டிருக்கும் மீனாட்சி என்ற பழைய பாகனிய பெண் தெய்வத்தின் பழைய கோயில் அதே வடிவில் ஏன் அங்கு இருக்கவேண்டும் என்பதை விவாதிக்கும் கருத்தரங்குகள் அந்த சர்ச்களை சுற்றியுள்ள கிறிஸ்தவ பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் நடக்கும். அப்போது அங்கே மிச்சமிருக்கும் தமிழ் இந்துக்கள் திக்பிரமை பிடித்து முழித்துக் கொண்டிருப்பார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள இந்துக்கள் ஒன்றிணைந்து அங்கங்கு நிகழும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பைத் தம்மளவில் தடுத்து நிறுத்த இப்போதே முனைந்து செயல்படாவிட்டால் மேலே சொன்னது ஒவ்வொரு ஊரிலும் நிகழும். உங்களுடன் இப்போது இளித்தும் சிரித்தும் பேசிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களின் சந்ததிகள் வெறிபிடித்து வந்து உங்கள் கோயில்களை இடிப்பார்கள், சிதைப்பார்கள், இந்துவாக நீங்கள் வாழவே முடியாது என்ற அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள்.
அதற்கு முன்பு விழித்துக் கொள்ளுங்கள்.
*****
“இப்படி மதம் மாறும் அளவில் ஒருவரின் மன நிலை இருக்கிறது என்றால் நாம் என்ன செய்ய முடியும்? பீடைகள் நம்மை விட்டு ஒழிந்தது என்று இருக்கலாம்” என்று கோபப்படுகிறார் ஒரு நண்பர்.
அப்படியெல்லாம் நாம் விட்டுவிட முடியாது.. விஷயத்தை முழுதாக அறியாமல் ஒழிந்தது என்று கைகழுவுவது இந்து சமுதாய தற்கொலைக்கு ஒப்பானது, அது தர்மமும் அல்ல, ஆன்மநேயமும் அல்ல. தற்போதைய சூழலில் குடும்ப உறவுகளும் பாரம்பரிய இந்து சாதி/சமய அமைப்புகளும் வலுவிழந்து கொண்டு வரும் நிலையில், பல்வேறு குடும்ப/தொழில்/உடல்நல பிரசினைகளில் சிக்கியுள்ளவர்கள் பலவீனமான மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களைக் குறிவைத்து இழுப்பதற்கென்று ஒரு பெரிய படையையே கிறிஸ்தவ அமைப்புகள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.. நேரடியான மதமாற்றம் நிகழ்வதற்கு முன் பலவிதங்களில் சமூக, பொருளாதார, உளவியல் அழுத்தங்கள் தரப்படுகின்றன.. ஆசைகாட்டப் படுகிறது. அவற்றை அந்தக் குறிப்பிட்ட நபரை அல்லது குடும்பத்தை சுற்றியுள்ளவர்கள் தான் கண்டுபிடித்து கிறிஸ்தவம் என்ற பிணந்தின்னிக் கழுகின் வாய்க்குள் போகாமல் காப்பாற்ற வேன்டும். சிறிய ஊர்களில் ஒன்றிரண்டு குடும்பங்களை இப்படி ஆக்கி விட்டால், அது ஒரு சங்கிலி விளைவு போல ஆகி மற்றவர்களை எல்லாம் இழுத்துவிடும் நிலை ஏற்படுகிறது. இது குறித்த நேரடியான விழிப்புணர்வை நாம் உண்டாக்க வேன்டும். சும்மா ஆன்மீக ரீதியில் பக்திக் கதைகள் மட்டும் சொல்லிக் கொண்டு, பக்திப் பாடல்கள் மட்டும் பாடிக் கொண்டிருப்பதால் இதைத் தடுக்க முடியாது. கிறிஸ்தவ தாக்கம் உங்கள் குடும்பத்தில், வீட்டில், சுற்றுப்புறத்தில், ஊரில் வருகிறதா என்பதை கண்காணிப்பதற்கும், தடுப்பதற்குமான பயிற்சி தரப்படவேண்டும். ஒவ்வொரு கோயிலிலும், ஒவ்வொரு இந்துக் குடும்பங்களிலும், இந்து சமய ஆன்மீக மையங்களிலும், சாதி சமுதாய அமைப்புகளிலும் இந்தப் பயிற்சி தரப்பட வேண்டும். அதுதான் வழி.
******
ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு படம் சொல்லிவிடும் என்று ஆங்கிலத்தில் உள்ள சொலவடைக்கு இந்தப் படம் ஒரு நல்ல சான்று.
ஆதியிலிருந்தே பஜனைக் கோயில் தெருவில் அந்த வீதிக்குப் பேர்கொடுத்த பஜனைக் கோயில் இருந்தது. பின்னர் அத்தெருவில் அப்புராணியாக கிறிஸ்தவர்கள் குடியேறியதையோ நிலம்/மனை வாங்குவதையோ, பின்பு தடாலடியாக கிறிஸ்தவ “வழிபாட்டிடம்” முளைப்பதையோ அங்கு குடியிருந்த இந்துக்கள் ஒருவரும் கண்டுகொள்ளவே இல்லை, அதைப் பற்றிய சொரணை எதுவும் அவர்களுக்கு இல்லை. செக்யுலரிசக் களிமண் மண்டையில் ஏறிய சில இந்துக்கள் ஆகா சர்ச் வரட்டும் என்று அதை வரவேற்றுமிருக்கலாம்.
ஆனால், ஊடுருவும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளனுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. மாதாகோவில், பஜனை கோயில் தெரு என்று முகவரியில் இந்து அடையாளம் இருப்பது கூட அவனுக்குக் கடும் வெறுப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் சிலுவையை நாட்டிவிடுவோம் என்று துணிந்து தெருவின் பெயரையே மாற்றி விடுகிறான். இது பழகும் வரை இன்னும் கொஞ்சநாளைக்கு இருக்கட்டும் என்று பழைய பெயர் கீழே அடைப்புக் குறிக்குள் போகிறது. பஜனைக் கோயில் தெரு என்ற பெயர் பலகையிலிருந்து அழிய இன்னும் அதிக நாள் ஆகாது. அதற்கு முன்பே அங்குள்ள பஜனைக் கோயில் அழிந்திருக்கும்.
முதலில் தெருவில் ஒரு சர்ச் கட்டிவிட்டு, பிறகு தெருப்பெயரையே அதைவைத்து மாற்றவேண்டும் என்ற மனநிலைக்குப் பின்னால் உள்ள மதவெறி, ஆக்கிரமிப்பு மனப்பான்மை, இந்து வெறுப்பு எப்படிப் பட்டது என்பதையாவது புரிந்து கொள்கிறார்களா? கேவலம், ஓரு தெருப்பெயரை அராஜகமாக மாற்றுவதைக் கூட தட்டிக் கேட்கக் கூட துப்புக் கெட்டுப் போயிருக்கிறார்கள் தமிழ்நாட்டு இந்துக்கள். வெட்கம்!
இந்தத் தெருவில் நடந்ததை அப்படியே கிராமம், ஊர், நகரம், சமூகம் என்ற அளவில் கற்பனை செய்து பாருங்கள். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.