மதச் சார்பின்மை வியாதி
இவ்வுலகில் வாழும் மக்க்ளில் பெரும்பாலோனோர் உலகைப் படைத்த இறைவனை நம்புவோராகவே உள்ளனர். திருவள்ளுவர் அறிவு என்பதே இறைவனை நாடி அவர் திருவடி பற்றிக் கொள்ளவே மீண்டும் பிறபதை தடுக்கும் வழி என்பார்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். குறள் 140: ஒழுக்கமுடைமை
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். குறள் 850: புல்லறிவாண்மை
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. குறள் 356:மெய்யுணர்தல்
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358:மெய்யுணர்தல்
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351:மெய்யுணர்தல்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். குறள் 2: கடவுள் வாழ்த்து