கீழடி தொடர்பாக இப்போது பரிபாடல் பேசப்படுகிறது. அதில் சுருங்கை என்ற சொல் வருகிறது. அதைக் குழாய் என்று பொருள் கொண்டு அதே குழாய்தான் கீழடிக் குழாய் என்று சொல்லத் துவங்கி விட்டார்கள். சுருங்கை என்பதற்கு லெக்சிகன் சொல்லும் பொருள் இது: சுருங்கை (p. 1529) curuṅkai சுருங்கை curuṅkai , n. < id. 1. Subterranean passage, underground channel, covered gutter, sewer; நீர்முதலியன செல்லுதற்கு நிலத்துள் கற்களாற் கரந்துபடுத்த வழி. பெருங்குள மருங்கிற் சுருங்கைச் சிறுவழி (மணி. 12, 79). 2. Secret passage in a fortress; கோட்டையிற் கள்ளவழி. (சூடா.) 3. Creep-hole, low entrance to creep through; நுழைவாயில். (பிங்.) 4. Window-like opening in walls of big buildings; மாளிகையின் சாளரம். மாடமேற் சுருங்கையிலிருந்து . . . மாநக ரணி பார்த்திடும் (சீகாளத். பு. நக்கீர. 30).
சரி குழாய் என்றே வைத்துக் கொள்வோம்.
பரிபாடல் சொல்லும் மற்றவற்றை விட்டு விட முடியுமா? பரிபாடலில் திருமாலும் முருகனும் வழிபடப்படுகிறார்கள்.