New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எழுத்தாளர் பூமணி நேர்க்காணல் - 1

Guru

Status: Offline
Posts: 24601
Date:
எழுத்தாளர் பூமணி நேர்க்காணல் - 1
Permalink  
 
எழுத்தாளர் பூமணி நேர்க்காணல் - 1

4 மே 2018 ஆண்டு அவரது வீட்டில் இந்த நேர்க்காணல் எடுக்கப்பட்டது. மொத்தம் மூன்று பகுதிகள். இது முதல் பகுதி.
 
எழுத்தாளர் பூமணி நேர்க்காணல் - 1

-ரெங்கநாதன்

1 ‘பிறகு‘ நாவலில் இருமுறை மறுமணம் வருகிறது. அந்த கால உழைக்கும் வர்க்க மக்களிடத்தில் திருமணச் சடங்கு பற்றியும், மறுமணம் பற்றியும் எம்மாதிரியான மதிப்பீடுகள் இருந்தன?

சாதிய படிநிலையைப் பொறுத்து தான் மறுமணம் என்னும் விஷயம் தீர்மானிக்கப் படுகிறது. தான் உயர்ந்த சாதி, அறுத்துக் கட்டுற சமூகம் கிடையாது என்று சில சமூகங்கள் இருக்கும். அருந்ததியினர் மற்றும் சில தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு மறுமணம் என்பது பெரிய விசயமேயில்லை வாழ்கையை இப்படி தீர்மானித்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு நாட்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்க முடியும்?

 ஒரு பெண்ணுக்கு ஆண் துணை வேண்டும், ஆணுக்கு பெண் துணை வேண்டும். இது அங்கீகரிக்கப்பட்ட ஒன்று, இதில் பெரிய முரண்பாடெல்லாம் கிடையாது. கந்தையா கூட அழகிரியைப் பார்த்து, “உனக்கு என்னடா அறுபது அறுத்துக் கட்டுற சாதி. எங்க சாதியப் பாரு, விதவையா வந்துட்டு என்னனமோ நடக்குது. ஆனா கண்டுக்க முடியல.” என்றுச் சொல்வார்.

2 உங்கள் எழுத்துலகு பயணத்தின் முதல் இரண்டு கதைகளுமே மரணம் தொடர்பாக அமைந்தது எப்படி? பொதுவாக உங்கள் கதாபாத்திரங்கள் மரணிக்கும் போது உங்கள் உணர்வு என்னவாக இருக்கும்?

    ‘ஏலேய்’ கட்டுரைத் தொகுப்பில் வரும் முடிவும் முதலும் என்னும் கட்டுரையில் மரணம் எவ்வாறு என்னைப் பாதிக்கிறது என்று எழுதியிருப்பேன். டி எஸ் எலியட், அ மாதவன், ராஜநாராயணன் போன்றோரெல்லாம் மரணத்தைப் பற்றி எழுதியதைப் பார்த்தபோது மரணத்திற்கு உலகளாவிய வீச்சு இருப்பது எனக்குத் தெரிந்தது. என் அப்பா மரணப்படுக்கையில் இருந்து, எனக்கு மூன்று வயதாகும் போது மரணித்தார். அந்த காலத்தில் எனக்கு மரணத்தைப்பற்றி ஏதும் சொல்லியே ஆக வேண்டும் என்று தோன்றியது. அதனால் இப்படி ஆரம்பிப்போமே என்று எழுதினேன். 

3 சாதிய அடுக்குகளில் கீழிருக்கும் சில பாத்திரங்கள் அவர்கள் மீது கட்டவிழ்க்கப் படும் சாதிய வன்முறையை எதிர்க்கின்றனர், சில பாத்திரங்கள் அதை மறந்தும், கடந்தும் போகிறார்கள். இந்த மாறுபட்ட எதிர்வினையை எது தீர்மானிக்கிறது?

    கருப்பனுக்கு சாதியைப் பற்றி பேசினால் ஒருமாதிரி இருக்கும். ஆனால் அழகிரி “இப்ப அடிச்சுட்டாங்களா என்ன?” என்று சொல்வதன் வித்தியாசத்தைத் தானே கேட்குறீர்கள்.
    சாதிய கட்டமைப்பை அந்த காலத்திலும் சரி, இந்த காலத்திலும் சரி, ஒருத்தராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. அது இருக்கத்தான் செய்யும். ஆனால் சமூகத்தில் ஒருத்தருக்கொருத்தர் சார்ந்திருந்து, ஒரு கூட்டமைப்பாக நாம் எப்படி இருக்கிறோம் என்பது தான் முக்கியம். என்னை விட்டால் உனக்கு வேறு வழியில்லை, உன்னை விட்டால் எனக்கு வேறு வழியில்லை என்னும் பரஸ்பர சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். Peaceful co-existence வேண்டும்.

4 ‘பிறகு’ நாவல் ஒரு குறிப்பிட்ட காலத்தில், அப்பகுதி மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறது. தற்காலத்திய நாவல்கள் பெரும்பாலும் ஒரு மோதலை (conflict) மையமாக வைத்து தான் எழுதப்படுகிறது என எனக்கு தோன்றுகிறது. வாழ்வியல் நாவலில் கூடுதல் சுவாரசியத்துக்காக மோதல் சேர்க்கப்படுவது பற்றி நீங்கள் என்ன நினைக்குறீர்கள்?

    மோதல், எதிர்ப்புணர்வு எல்லாம் கருத்து ரீதியான அணுகுமுறை. வாழ்க்கை அப்படியில்லை. அது ரொம்ப உணர்வு பூர்வமான விஷயம். இரண்டு பாத்திரங்களுக்கு இடையில் உணர்வு பூர்வமா விசயங்களை அணுகும்போது, கருத்து வராது. மோதல் குறைந்து விடும். உணர்வு எந்தளவு இருக்கிறதோ, அந்தளவு தான் சொல்ல முடியும். ஆனால் மோத வேண்டும் என்று எழுதினால், அதற்கு வாசகன் மனதில் வேற விதமான பதிவை எற்படுத்துறதுக்கோ என்னமோ தெரியவில்லை.
    சமீப நாவல்களில் ஒருவேளை மோதல் அதிகம் இருந்தால், அதற்கு கருத்து ரீதியான அணுகுமுறைத் தான் காரணம். எழுத்து, உணர்வு பூர்வமானது. அதற்கு கருத்து, அறிவு, தத்துவம் எல்லாம் ரெண்டாம் பட்சம் தான். இதெல்லாம் உள்ளே இருந்தால் தான் எழுத முடியும். அதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியுமென்று எனக்குத் தோன்றுகிறது.

5 உங்கள் முதல் நாவலிலேயே உணர்ச்சிகரமான இடங்களை அடிக்கோடிட்டு காட்டாமல், வர்ணனைகளை அதிகம் சேர்க்காமல், கதையில் கூறப்பட்டிருக்கும் வாழ்க்கையையும், இயல்பான கதைமாந்தர்களையும் மட்டுமே நம்பி எப்படி களமிறங்குனீர்கள்?

    என்னைப் பொறுத்தவரையில் ஒரு பாத்திரத்தின் அகச் சூழல் எப்படி இருக்கிறதோ, அதை establish செய்வது மாதிரியான புறச்சூழல் வேண்டும். இப்போது இந்த புறச்சூழல் எந்தளவு உதவிகரமாக இருக்கிறதோ, அந்தளவு தான் நாம் எழுத முடியும். அதைத் தாண்டி நானாக விஸ்தரிக்க முடியாது. மற்றபடி களமிறங்கினேன் என்றெல்லாம் சொல்ல முடியாது.

6 ‘வெக்கை’ நாவலின் முதல் முப்பது பக்கங்களில் இருந்த விறுவிறுப்பு உங்கள் எழுத்துப் பாணியில் தனியாக இருப்பதாக எனக்கு தோன்றியது. அந்தப் பகுதியை விறுவிறுப்பாக கையாண்டது பற்றி…   

ராஜநாராயணன் எழுதிய ‘பிஞ்சுகள்’ போன்ற சில தமிழ் நாவல்களில் சிறு குழந்தைகளின் விளையாட்டையும் வேடிக்கை உலகத்தையும் காட்டியிருப்பார்கள். அதே நேரம் சிறுவர்களின் வெக்கையான இன்னொரு பகுதியை யாரும் சரியாக பதிவுச் செய்யவில்லை. அந்த வெக்கையைச் சொல்லியாக வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதற்கு ஒரு கொலைச் சம்பவத்தை எடுத்துக் கொண்டேன். நான் அறிந்த சம்பவம் தான் அது.
    அந்தப் பையனுக்கு உலகம் எல்லாம் சுற்றிவரும் ஒரு வாழ்க்கை. அவனது வாழ்க்கையை வீட்டுக்குள் உட்கார வைத்துச் சொல்ல முடியாது. எல்லா வகைகளிலும் அவன் சந்திக்கும் பிரச்சனைகள், தனக்கு தானே வரும் அனுபவங்களை அவன் எப்படி கடக்கிறான், எப்படி தன்னைத் தகவமைத்துக் கொள்கிறான் என்பது தான் கதை.
    ஒரு குளம் நிச்சலனமாக இருக்கிறது. ஒருக் கல்லைத் தூக்கிப் போட்டவுடன், தண்ணீர் அலைக்கலையுது. அன்பு, பாசம் எல்லாவற்றுக்கும் மத்தியில் இருக்கும் ஒரு பையனின் இன்ப உலகம் அலைக்கலைக்கப் படுகிறது. இதனால் வரும் லாபம், நஷ்டம், துரோகம் ஆகியவற்றை வைத்து எழுதினேன். கதையில் வரும் இடங்களெல்லாம் நான் பார்த்து, ஓடியாடி விளையாண்ட இடங்கள். ஒரு கட்டுரையில் “கொலைச் செய்தது சிதம்பரம். காடுகளைச் சுற்றித் திரிந்தது பூமணி” என்று எழுதியிருப்பேன்.

7 ‘வெக்கை’ நாவலில் சாதிய பாகுபாடும், வர்க்க வேறுபாடும் சேர்ந்தவாறு இருக்கும். தமிழ் நாவல்களில் வர்க்கச் சிந்தனை எந்தளவு இருக்கிறதென நினைக்குறீர்கள்?

    தமிழ் நாவலை விடுங்கள், முதலில் தமிழக அரசியலிலேயே வர்க்கச் சிந்தனையில்லை. அது வேறு மாதிரி போய்விட்டது. வர்க்கமென்பது தமிழ் நாட்டில் எந்தளவு கூர்மைப் பட்டிருக்கிறது என்றுத் தெரியவில்லை. இங்கு சாதி, அதன் ஏற்றத்தாழ்வு, அடக்குமுறை, அதற்கான எதிர்ப்பு நிலை இப்படித்தான் அங்கங்கு இருந்திருக்கிறது. எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தி சொல்ல முடியாது.
    கீழவென்மணியில் இருந்த உழைப்பாளர்களுக்கும் மற்ற உழைப்பாளர்களுக்கும் வித்தியாசம் இருக்கு. அப்படி பார்க்கும் போது ஒட்டுமொத்தமாக உழைப்பாளர் வர்க்கம், முதலாளி வர்க்கம் என்று சொல்ல முடியாது. நிலைமை அப்படியில்லை. தேசிய இனப் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு, அதைப்பற்றி சிந்தித்திருந்தால் தமிழில் நல்ல நாவல்கள் வந்திருக்கும்.
    நான்கு பேர் உரக்க கத்தி போராடும் போது, அவர்கள் உணர்வைத் தனித்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் எழுத்து இதைத் தாண்டியது. அதே நேரம், எழுதுபவனுக்கு முதலாளி தொழிலாளி, சமூக அமைப்பு எப்படி கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதெல்லாம் பற்றிய புரிதல் கிடையாது என்று அர்த்தமில்லை.

8 ‘வெக்கை’ நாவலில் வரும் பதின்ம பருவ சிதம்பரத்தின் மீது சுமத்தப்படும் வன்முறையையும், அவனே வன்முறையைக் கையிலெடுப்பதையும், இத்தனை வருடங்கள் கழித்து திரும்பி பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?

    வெக்கை நாவலில் கிட்டத்தட்ட பத்து, பதினைந்து வருட காலக்கட்டத்தை தான் நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வயதிற்கு, அவனுக்கு புலனான உலகத்தைத் தான் நாம் சொல்ல முடியும். அதற்கு மேல் நாம் சொன்னால் பெரிய மனுஷத்தன்மை வந்துவிடும். ‘சே! இப்படி ஆகிப்போச்சே. இந்நேரம் அத்தை, அம்மா, நாய் இருந்தா எப்படியிருக்கும்’ போன்ற இழப்புகளைத் தாண்டி தாண்டி தான் அவன் வருகிறான்.
    ஒரே வாரிசாக இருக்கும் தன் மகனின் உயிரைத் தக்க வைக்க வேண்டுமென்ற பயம் தகப்பனுக்கு. இந்த ஏக்கம், கோபதாபங்களோடு தான் சிதம்பரம் பார்வையில் கதை போகிறது. 
“நிஜத்தில் வன்முறை இருக்குல. இப்பவும் பாக்குறோம், நெறையாவே பாக்குறோம். காரணகாரியம் வேற மாதிரி இருக்கலாம். சாதியம், அரசியல், சொத்துசுகம் போன்ற காரணங்களுக்காக மோதல் முற்றும்போது வன்முறை வந்திருது.” 

9 போலந்து கதைகளை மொழிப்பெயத்ததற்கான முதல் காரணமாக எதைச் சொல்வீர்கள்? நீங்கள் எழுதியதில் மிரோஸெக் பாணியிலான உருவக கதைகள் இல்லையே…

    தமிழ் சிறுகதைகள் ஆரம்ப காலத்தில் ஒ ஹென்றி, ரசிய எழுத்தாளர்களின் கதைகளை மாதிரியே இருந்தன. நிலம் சார்ந்த, மண்ணும் மனமும் சார்ந்த கதைகளுக்கு சொந்த முகம் கொடுத்து எழுதப்பட்ட கதைகள் என்று நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அக்கதைகளில் இரவல் தன்மைக் குறைந்திருக்கும். 
அதற்கு ராஜநாராயணன், ஷண்முகசுந்தரம் போன்றோருக்கெல்லாம் நாம் கோடி நன்றிகள் சொல்ல வேண்டும். புதுமைப்பித்தன் வீரியமான எழுத்தாளர் தான், ஆனால் நிறைய இரவல் தன்மை இருக்கும். வரா, குபரா போன்றோரும் அம்மாதிரி தான். அவர்களிடம் இருந்து எப்படி வீரியமாக சொல்வது, சொற் சிக்கனத்தோடு எப்படி எழுதுவது, வடிவம் போன்றவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.
    போலந்து கதைகளைப் பொறுத்தவரையில் அவரது striptease போன்ற நாடகங்களைப் படித்திருக்கிறேன். பின் அவரது ஆறு கதைகள் இம்ப்ரிண்டில் கிடைத்தது. படித்தப்போது ‘political satire எப்படி வித்தியாசமாக பார்த்திருக்கிறாரே’ என்று தோன்றியது. முதலில் அந்த ஆறு கதைகளையும் மொழிப்பெயர்த்தேன். மொழிபெயர்ப்பு தமிழ் உலகத்துக்கே இன்னும் பிடிப்படாத விசயமாக தான் இருக்கிறது.
    அப்புறம் நான் சுத்த மொழியில் எழுத முடியாது. நான் மக்கள் மொழியில், எனக்கு கைவந்த நடையில் தான் என்னுடைய சொந்தக் கதைகளை எழுதியிருக்கிறேன். அதிலிருந்து வேறுபட்டு இதை மொழிப்பெயர்த்தால் அந்நியப் பட்டுவிடுவேன். அடுத்து அவர் சாதாரண விசயங்களை எடுத்துக்கொண்டு அதை பிரம்மாண்டமாக சொல்வதை நீங்கள் பார்க்கலாம். இவ்விசயங்களினால் மிரோஸெக் கதைகளை மொழிப்பெயர்க்க வேண்டும் என்று தோன்றியது. 
    தகழி சிவசங்கரன் பிள்ளையின் ஞான பீட விருது பேச்சு, டி எஸ் எலியட், கால்ரிட்ஜின் சில கவிதைகள் ஆகியவற்றை மொழிப் பெயர்த்திருக்கிறேன். இந்த குறைந்த அனுபவம் தான் உண்டு. அதனால் இக்கதைகளை ஒருவருடம் கஷ்ட்டப்பட்டு மொழிப்பெயர்த்தேன்.
நான் அவர் கதைகளை உருவக கதைகளாக பார்க்கவில்லை. அவை political satire தான். வருங்கால சமுதாயம் என்ன ஆகப் போகுதோ என்ற அக்கறையோடு, ஒற்றைக் கட்சி ஆட்சியின் அலங்கோலங்களை எழுதியிருப்பார். அதே மாதிரியான கதைகளை நான் எழுத வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் அவரது தாக்கம் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றி நான் எழுதிய ‘வெளியே’ சிறுகதையில் நீங்கள் பார்க்க முடியும். ஆனால் அதற்கான வடிவத்திற்காக கஷ்ட்டப்பட்டு தேர்ந்தெடுத்து நாம் எழுத வேண்டியதில்லை.

10 குறிப்பாக அத்தொகுப்பில் எழுத்தாளர்கள் பற்றிய ‘விசாரணை’ என்னும் கதை இயல்பு நிலையைச் சிறப்பாக பகடி செய்தது. ஆனால் சில கதைகள் எனக்கு தனிப்பட்ட முறையில் அந்நியமாக தோன்றியது. அதுப் பற்றி...

ஒரு வெளிநாட்டுக்காரன் எழுதியிருக்கும் போது அந்நியமாக தானே இருக்கும். நீங்கள் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமையைக் காண முடியாது. அதெல்லாம் தாண்டி போய்தான் சிங்கிஸ் ஜத்மாத்தவ் ஜமீலா நாவலில் புல் வெளியைப் பற்றி சொல்லும்போது எனக்கு பக்கத்தில் இருந்த புஞ்சை ஞாபகம் வந்தது, அப்படி இவர் கொண்டு வந்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. இளைய தலைமுறை இதனால் இவ்வளவு கஷ்டப் படுகிறது என்று சொல்ல முயற்சித்திருக்கிறார். அது ஒன்ற வேண்டுமென்ற அவசியமில்லை.

__________________

Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 
11 உங்களின் இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் பதிப்பாளர்கள் பற்றியும், பத்திரிகையாசிரியர்கள் பற்றியும் என்ன கருதுகிறீர்கள்? ஆரம்ப காலத்தில் சில சிறு பத்திரிகைகளில் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் அதிக வாசகர்களைக் கொண்ட பிரதான பத்திரிகைகளில் கடைசி வரை எழுதாததன் காரணம் என்ன?

என்னுடைய இலக்கிய வாழ்கையை நான் வாழ்ந்து முடித்துவிட்டேன். சிறு பத்திரிகைகளுக்கு எழுதுவது தான் நன்றாக இருந்தது. கதையின் உள்ளுணர்வை சிறுபத்திரிக்கை வாசகர்கள் சரியாக உள்வாங்குவார்கள். ஒரு சிறு பத்திரிகைக்கு சுமார் ஐந்நூறு பேர் இருப்பார்கள், ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரு கதையை போட்டு துவச்சு எடுத்தப் பிறகு தான் அடுத்த வேலையைப் பார்ப்பார்கள்.
    என்னுடைய ‘வயிறுகள்’ கதையில் வேலையில்லா திண்டாட்டத்துக்கு, அழித்தொழித்து விட்டுப் போவதும் கொலையும் தான் தீர்வு என்பது போல் எழுதியிருப்பேன். அக்கதையை சிறுபத்திரிக்கை வாசகர்கள் பிச்சு பீராய்ந்து பேசினார்கள். அது ஆரோக்கியமான சூழல்.
நான் பெரிய பத்திரிக்கைகள் ஆபீசுக்கு போக மாட்டேன். பத்திரிகையாசிரியர்கள் மரியாதையாக நடந்துக் கொள்வார்கள். அவர்களைப்பற்றி நான் குறைச் சொல்லவில்லை. ஆனால் பத்திரிக்கை என்று வரும்போது, அவர்களுக்கு பல நெருக்கடிகள் இருக்கிறது. அப்போது பத்திரிக்கையின் சூழலைப் பொருத்து தான் எதைப் போட வேண்டும், எதைப் போட வேண்டாம் என தீர்மானிக்கிறார்கள். அப்படியொரு விசயத்துக்கு நாம் ஏன் போகணும் என்றிருந்தேன்.
    இன்னைக்கு எனக்கு ஒரு சின்ன பெயர் வந்தவுடன் கதைக் கொடு, முத்திரைக் கதைக் கொடு, அந்த கதைக் கொடு என்று கேட்பார்கள். எனக்கு அது தேவையில்லாத விஷயம் என்று தவிர்த்து விடுகிறேன்.
அப்புறம் பதிப்பகங்கள் பற்றி மட்டும் குறைச் சொல்ல முடியாது. வாசகச் சூழல் அப்படித்தானே இருக்கிறது. வணிகப் பத்திரிக்கைகளில் இருந்து தான் எழுத்தை ஒரு ‘கமாட்டியை’ போன்று பார்க்கும் பழக்கம் வருகிறது. பதிப்பகங்களும் எந்த புத்தகம் அதிகம் விற்பனை ஆகிறதோ அதையே வெளியிடுகின்றனர்.
எடுத்துக்காட்டுக்கு ‘நாலு பசங்க வெளிக்கு இருக்குறத’ பத்தி ஒரு கத எழுதுனா, அதுல என்ன வித்தியாசமா சொல்லிருக்கார்? தத்துவார்தமா என்ன சொல்லிருக்கார்? என்றெல்லாம் சிறு பத்திரிக்கை வாசகர்கள் கிண்டி கிண்டி பார்பார்கள். அது ‘இன்டரஸ்டிங்கா’ இருக்கும், அதனால் சிறு பத்திரிக்கைகளில் எழுதுவது எனக்கு இணக்கமான விசயம்.

இரண்டாம் பகுதி இணைப்பு - http://karuppu.thamizhstudio.com/news/writer-poomani-interview-2

மூன்றாம் பகுதி இணைப்பு - http://karuppu.thamizhstudio.com/news/writer-poomani-interview-3

Newbie

Status: Offline
Posts: 4
Date:
Permalink  
 
பாசாங்குகள் அற்ற,
நேர்மையான,
யதார்த்தமான
பதில்கள்.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard