மலைபடுகடாம் – Malaipadukadām
Translation by Vaidehi Herbert
Copyright © All Rights Reserved
பாடியவர் – இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
பாடப்பட்டவன் – நன்னன் வேண்மான்
திணை – பாடாண்திணை
துறை – ஆற்றுப்படை
பாவகை – ஆசிரியப்பா
மொத்த அடிகள் – 583
தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.
கூத்தர் பலவகை வாத்தியங்களைப் பையிலிட்டு
எடுத்துச் செல்லுதல்
திருமழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழிசை கடுப்ப பண் அமைத்துத்,
திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு, 5
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்,
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி, 10
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்,
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப,
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்; (1 – 13)
Musical Instruments are Packed
You who carry your musical instruments on balancing
poles have packed them in draw-string bags that look like
monsoon season’s ripe jackfruit clusters, a mulavu drum
with sturdy, tight straps that creates roaring sounds like
the sky-shattering noises from beautiful clouds in the dark
sky that give prosperity with rains, an ākuli drum, bright
cymbals with intricate designs made from melted and flattened
metal, a kōdu horn decorated with bright, dark hued
pea**** feathers, sweet-music creating splendid small
thoompu horn along with a long thoompu horn that sounds like
the hollow, breathing trunk that hangs between the eyes of an
elephant, sweet flute that sounds like the ili string of the yāl,
thattai with croaking sounds of frogs played in the middle,
strong-mouthed ellari drum played to beat, a pathalai drum
that gives perfect beat, and other musical instruments!
Notes: கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின் (6) – நச்சினார்க்கினியர் உரை – கண்களின் நடுவே வெளியாகத் திறந்த யானையின் கைபோலும் நெடிய வங்கியத்தோடு. உயிர் – ஆகுபெயர். இனி நெட்டுயிர்ப்பு கொண்டாற்போலும் ஓசையை உடையை என்றுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடையிடையே துளையிடப்பட்டிருந்ததால் கண் இடை விடுத்த தூம்பென்றார். இதன் ஒலி யானை நெட்டுயிர்ப்புக் கொள்ளும் ஒலியை ஒத்தலின் களிற்று உயிர்த் தூம்பென்றார். இளி (7) – யாழின் ஒரு நரம்பு. அரிக்குரல் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘யாழ் நரம்பு’ என்ற பொருளும் உடைத்தாகலின் கரடிகை எனினுமாம். கரடிகை – கரடி கத்தினாற்போலும் ஓசையுடைய பறை வகை, தவளையினது குரல் எனினுமாம். தட்டை (9) – உ. வே. சாமிநாத ஐயர் உரை – குறுந்தொகை 193 – மூங்கிலைக் கண்ணுக்கு கண் உள்ளதாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை உண்டாக ஒன்றிலே தட்டப்படுவது. எல்லரி (10) – C. ஜெகந்நாதாசார்யார் உரை – சல்லி, சல்லென்ற ஓசையுடையதால் பெற்ற பெயர், பிறவும் (11) – பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு,சந்திர வளையம், மொந்தை, முரசு, கண் விடு தூம்பு, நிசாளம், துடுகை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, துடி, பெரும்பறை, கிணைப் பறை. காய (13) – பொ. வே. சோமசுந்தரனாரின் உரை – காவின, காவுதல் – தோளில் சுமந்து செல்லல். புறநானூறு 206-10 ‘காவினெம் கலனே’. புறநானூறு 152-15 – கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின். காவுதல் – பொ. வே. சோமசுந்தரனாரின் உரை – தோளில் சுமந்து செல்லுதல். தோற்சுமை எடுப்போர் ஒரு தடியின் இரு நுனிகளிலும் பொருள்களைப் பை உறி முதலியவற்றில் சம எடை உடையனவாகச் சீர் செய்து தூங்கவிட்டு அத் தடியின் நடுவினைத் தோளில் ஏற்றிச் சுமப்பர். இத் தடி காவுத் தடி எனப்படும். இக்காலத்தே காவடி என வழங்குவர்.
Meanings: திரு மழை தலைஇய – poured rains that give prosperity (தலைஇய – சொல்லிசை அளபெடை), இருள் நிற விசும்பின் – in the dark colored sky, விண் அதிர் இமிழிசை கடுப்ப – like the sky shattering roars of clouds (கடுப்ப – உவம உருபு), பண் அமைத்து – creating tunes, திண் வார் – firm straps, விசித்த – tightly tied, pulled and tied, முழவொடு – with mulavu drums, ஆகுளி – ākuli drum, நுண் உருக்கு உற்ற – intricate and melted, விளங்கு – bright, அடர்ப் பாண்டில் – cymbals made from flattened metal (கஞ்ச தாளம், சால்ரா, அடர்- தகடு), மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு – with long kōdu horn decorated with pea**** feathers, கண் இடை விடுத்த – has intermittent holes, open between the eyes, களிற்று உயிர்த் தூம்பின் – along with long thoompu that is like the breathing trunk of male elephants, along with the long thoompu that sounds like the breathing of male elephants, இளிப்பயிர் இமிரும் – creates pleasant/sweet fine sounds that resemble that of the ili string of the yāl, குறும் பரம் தூம்பொடு – along with small splendid thoompu, விளிப்பது கவரும் – well tuned with attractive musical tones, தீம்குழல் – sweet flute, துதைஇ – closely (சொல்லிசை அளபெடை), நடுவு நின்று இசைக்கும் – playing in the middle, அரிக்குரல் தட்டை – a bamboo musical gadget called thattai with frog sounds, a bamboo musical gadget called thattai with sounds of bears, a bamboo musical gadget called thattai with sharp sounds, கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி – strong-mouthed ellari with clear rhythmic sounds (எல்லரி – சல்லிகை, சல்லென்ற ஓசையுடைத்ததால் பெற்ற பெயர்), நொடிதரு பாணிய பதலையும் – and with pathalai drum that gives perfect beats, பிறவும் – and other musical instruments, கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப – like the monsoon season’s ripe fruit clusters of jackfruit trees (கடுப்ப – உவம உருபு), நேர் சீர் சுருக்கிக் காய கலப்பையிர் – you with your instruments on balancing shoulder poles packed in perfect draw-string bags (காய – கா என்ற வினைப்பகுதியினடியால் பிறந்த குறிப்புப் பெயரெச்சம், கலப்பையிர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று)
அவர்கள் கடந்து வந்த மலை வழி
கடுக் கலித்து எழுந்த கண்அகன் சிலம்பில்,
படுத்து வைத்தன்ன பாறை மருங்கின், 15
எடுத்து நிறுத்தன்ன இட்டு அருஞ்சிறுநெறி,
தொடுத்த வாளியர் துணை புணர் கானவர்
இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும்,
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது,
இடிச்சுர நிவப்பின் இயவுக் கொண்டு ஒழுகித் (14 – 20)
Mountain path
Without worrying about protection,
you have passed through the huge mountain
range with kadukkāy trees, near lying boulders
that appear like they had been placed, on a difficult,
narrow path that looks like it was set there, on the
mountain where forest men who shoot arrows,
who unite with their wives, do not cause sorrow to
those who travel on the high mountain path created
with broken stones, but guide them on the path.
Meanings: கடுக் கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில் – on the huge mountain filled with kadu trees, gall nut tree, terminalia Chebula, படுத்து வைத்தன்ன பாறை மருங்கின் – near the spread boulders which appear like they had been placed, எடுத்து நிறுத்தன்ன – like lifted and placed, இட்டு – narrow, அருஞ்சிறு நெறி – difficult narrow path, தொடுத்த வாளியர் – those who shoot arrows, துணை புணர் கானவர் – forest men who unite with their wives, forest men who are with their wives, இடுக்கண் செய்யாது –without causing trouble, இயங்குநர் இயக்கும் – guide those on the path, அடுக்கல் மீமிசை – on the mountains (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), அருப்பம் பேணாது – without considering protection, without worrying about protection, இடிச்சுர நிவப்பின் – on the high path broken and created, இயவுக் கொண்டு ஒழுகி – passing through it
பேரியாழின் இயல்பு
தொடித் திரிவு அன்ன தொண்டுபடு திவவின்,
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகாக்,
குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின்,
அரலை தீர உரீஇ வரகின்
குரல் வார்ந்தன்ன நுண் துளை இரீஇ, 25
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி,
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கிப்,
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்துப்,
புதுவது போர்த்த பொன் போல் பச்சை
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் 30
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப,
அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது,
கவடு படக் கவைஇய சென்று வாங்கு உந்தி,
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை, 35
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர்ப் பேரியாழ்; (21 – 37)
Description of the Large Lute
The nine frets on the large lute are like varied bangles
worn by women; the polished tight strings are tuned to
perfection without a fault even the size of tiny, white
mustard; the leather top of gold color is attached to the
sound producing bowl with glue; nails driven into its tiny
holes that are in a row resembling long millet clusters;
the bridge is made of ivory; its curved sound hole on the
leather top resembles the beautiful stomachs of young
women with five-part braids with natural fragrances that
cause swarming bees to have wedding fragrances, that
drape down on their their lovely, curved chests; and its
pretty, curved, lifted stem filed with a fine rasp appears
shiny dark like kalam fruits.
Notes: கடிப்பகை (22) – கடி என்பது பேய். பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெண்கடுகு பேய்க்கு பகையாகியதால் கடிபகை என்றார். வதுவை நாறும் வண்டு ஐம்பால் மடந்தை (30) – நச்சினார்க்கினியர் உரை – தன்னிடமிருந்த வண்டு கலியாணம் செய்த மகளுடைய நாற்றத்தை நாறுதற்குக் காரணமான மயிரினை உடைய மடந்தை, பொ. வே. சோமசுந்தரனார் – வண்டுகள் புதுமணத்தைத் தோற்றுதற்குக் காரணமான நறுமணம் கமழ்கின்ற மயிரினையுடைய மடந்தை, வதுவை நாறும் என்றது வண்டுகள் புணர்ச்சியைத் தோற்றுவிக்கும் என்றவாறு, C. ஜெகந்நாதாசார்யார் உரை – வண்டானது கலியாணம் செய்த நாற்றத்தை நாறுதற்குக் காரணமான இயல்பான மணத்தையுடைய மயிரினையுடைய. புறநானூறு 109 – சுகிர் புரி நரம்பின். தொண்டு (21) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒன்பதென்னும் தொகை, C. ஜெகந்நாதாசார்யார் உரை – இந்த எண் உண்டான வார்க்கட்டு என்றது. வார்க்கட்டு இந்த எண்ணைப் போலே தோற்றமளித்தல் என்பது. ஒன்பது என்ற எண் தமிழ் முறையில் ‘௯’ என்று சுருள எழுதப்படுதல்போல் வார்க்கட்டும் சுருள அமைந்திருத்தலைக் குறிக்கும்.
Meanings: தொடித் திரிவு அன்ன – like the variations of bangles, தொண்டுபடு திவவின் – with the nine frets, கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா குரல் ஓர்த்துத் தொடுத்த – tied and tuned perfectly sounding without even a small white mustard size fault, சுகிர் புரி நரம்பின் – with polished tight strings, with tightly tied strings, அரலை தீர உரீஇ – are tuned without fault (உரீஇ – சொல்லிசை அளபெடை), வரகின் குரல் வார்ந்தன்ன நுண் துளை இரீஇ – tiny holes in a row that resemble long millet grain growing in clusters are placed (இரீஇ – சொல்லிசை அளபெடை), சிலம்பு அமை – causing sound, பத்தல் பசையொடு சேர்த்தி – the body/bowl of the lute is attached using glue, இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி – inserting nails tightly on the bright holes, புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து – attaching a new bridge made with elephant tusk (வெண்கை – யானையின் கோடு, யானையின் தந்தம்), புதுவது போர்த்த பொன் போல் பச்சை – newly covered with golden colored leather, வதுவை – wedding, நாறும் – causing, வண்டு – honey bees, கமழ் – with fragrance, ஐம்பால் மடந்தை – young woman with five-part braid, மாண்ட நுடங்கு எழில் ஆகத்து – on the esteemed curved beautiful chests, அடங்கு மயிர் ஒழுகிய – draping controlled hair, அவ்வாய் கடுப்ப – like the beautiful stomach (கடுப்ப – உவம உருபு), அகடு சேர்பு பொருந்தி – attached to the interior, அளவினில் திரியாது – not differing in size, கவடு பட – separated, கவைஇய சென்று – bent (கவைஇய – சொல்லிசை அளபெடை), வாங்கு உந்தி – curved part of the lute, curved sound hole, நுணங்கு அரம் நுவறிய – filed with a fine rasp, carved with a fine saw, நுண் நீர் மாமை – nature of dark beauty, களங்கனி அன்ன – like kalam fruits, களாக்காய், Corinda tree, Bengal Currant, Carissa spinarum, கதழ்ந்து – greatly, closely, கிளர் – shining, உருவின் – in the form, வணர்ந்து ஏந்து மருப்பின் – with a curved lifted stem, வள் உயிர் – loud sounds (உயிர் – ஆகுபெயர் ஒலிக்கு), பேரியாழ் – large lute